Thursday, March 31, 2005

இணைய மகாநாடு!!!!!!!!

( ஆடி கழிஞ்ச அஞ்சாம் நாளின் தொடர்ச்சி. பாகம் 2)

'சட்'ன்னு சொல்லி முடிக்காம, வந்துட்டா நீட்டி முழக்கி விஸ்தரிக்க'ன்னு நீங்க முணுமுணுக்கறது கேக்குது!
'டக்'குன்னு சொல்லிட்டா துளசியா இருக்க முடியுமோ?

மூணரைக்கு கூட்டம் ஆரம்பிக்குதுன்னு சொல்லியிருந்தாங்க. சரியா பத்து நிமிஷத்துக்கு முன்னாடி போய்ச்
சேர்ந்தோம் நானும், மகளும்.


இடம் லக்கி டவர். அட்டகாசமான அடுக்குமாடிக் கட்டிடம்.அருமையான நீச்சல் குளம். அதை ஒட்டி இருந்த
ஒரு ரெண்டுமாடிக் கட்டிடத்துலே கூட்டம்.ஃபங்ஷன் ஹால்ன்னு பேராம்!

இந்த அடுக்கு மாடிங்கறது எங்க ஊரிலே அநேகமா இல்லை.அதான் ஏராளமான இடம் பரவிக்கிடக்கே! கூட்டமும்
ரொம்ப இல்லை. இப்ப எங்க ஊரோட ஜனத்தொகை ஏறக்குறைய 4 லட்சம்! இதுவே இப்ப 'ஹாங்காங்'ச்சீனாவிடம் போயிடுதுன்னு ஆனபிறகு அங்கிருந்து வந்து குடியேறுன ச்சீனர்களாலேதான்.அதுக்கு முன்னே,
நாங்க இங்கே வந்தப்ப( 18 வருசம் முந்தி!) 3 லட்சம்தான் இருந்துச்சு!

இங்கே எல்லாமே தனித்தனி வீடுங்கதான். சில இடங்களிலே ஒரே மனையிலே 4 ஃப்ளாட் வரை இருக்கும்.
அதுவும் பக்கத்துலே ஒட்டி ஒட்டி இருக்குமே தவிர கட்டிடம் எல்லாம் உயர வளராது!

ஆக்லாந்து, வெல்லிங்டன் என்ற ஊர்களிலே அடுக்குமாடி வந்திருக்கு. அதுவும் நாலோ அஞ்சோ மாடிகள்தான்!
ஆனா, சிங்கப்பூரிலே எங்கே பார்த்தாலும் ஒரே அடுக்கு மாடிகள்தான். ஏறக்குறைய ஒரே டிஸைன் வேற!!!!

மாடிப்படியேறிப் போனப்ப, அங்கே வெளியே 'லேண்டிங்'லே ஒருத்தர் ரொம்ப பிஸியா ஃபோன்லே அளந்துக்
கிட்டு இருந்தாரு. எங்களைப் பார்த்து மிரண்ட மாதிரி ஒரு பார்வை-))))

உள்ளெ போனா, அளவான சிறிய ஹால்!!!! நடுவிலே மேஜை போட்டு, அதைச் சுத்தி நாற்காலிகள் போட்டு
வச்சிருக்காங்க! அங்கே எனக்கு ஏற்கெனவே அறிமுகமான ஜெயந்தியும், இன்னொரு 'லேடி'யும் இருந்தாங்க.




அப்புறம் நடுநாயகமா, ஒரு நாற்காலியிலே ஒருத்தர் உக்காந்திருந்தாரு. முகம் எனக்குப் பழக்கமானதுதான். அடிக்கடி
அவரோட இணையப் பக்கத்துலே பார்த்த அதே முகம்!!! அதே கண்கள்!!!

" நீங்க அருள் குமரன்?"

" ஆமா. கரெக்டாக் கண்டுபிடிச்சிட்டீங்க!!!"

அதுக்குள்ளே அங்கே இருந்த மற்றொரு சிரித்த முகம் உள்ளவரை நம்ம ஜெயந்தி அறிமுகம் செஞ்சாங்க.'செந்தில் நாதன்'
நாதன் என்ற பகுதி மட்டும் காதுலே விழுது, ஏன்னா கண்ணு தானா, அவர் கழுத்துலே போட்டுக்கிட்டு இருக்கற
கனமான தேர்வடச் சங்கிலிக்குப் போயிருச்சு! கிரிக்கெட் விளையாடறவர் போல!!!

'ஈழநாதனா?'ன்னு கேக்கறேன். அவரு வேற மாதிரி இருந்தாரே, ஃபோட்டோலே( முதல் இணைய நண்பர்கள்
சந்திப்பு) பார்த்தப்பன்னு மனசு சொல்லுது!

அப்புறம் குழப்பம் தீர்ந்தது. அதுக்குள்ளே மாடிப்படிக்குப் பக்கம் ஃபோன்லே பேசிக்கிட்டு இருந்தவர் உள்ளெ
வந்தார்.அவர்தான் 'அல்வா' விஜய்!!!

ஜெயந்திகூட இருந்த இன்னொரு லேடிதான் 'ரம்யா நாகேஸ்வரன்' இந்த ஹாலை ஏற்பாடு செய்து தந்தவுங்க!
அவுங்க தனியா'ப்ளாக்' வச்சுக்கலைன்னாலும், வெகுஜனப் பத்திரிக்கையிலே கதைகள் எழுதற எழுத்தாளர்! கதை,
கட்டுரைன்னு கலக்கறது மட்டுமில்லாம, 'ஸோஷியல் சர்வீஸ்'ம் செய்யறாங்க!!!! ரியலி க்ரேட்!!!

அதுக்குள்ளே நண்பர்கள் ஒவ்வொருத்தரா வர ஆரம்பிச்சுட்டாங்க.'பளீர்'ன்னு சிரிப்போட வந்தவர்தான் நம்ம
ஃபில்டர் காஃபி எம்.கே. குமார்! அப்புறம் நம்ம பாலு மணிமாறன் அடக்கமான சிரிப்போடு. மனஸாஜென் என்ற
ரமேஷ் சுப்பிரமணியம் புன்முறுவலோடு!

அன்பு, மூர்த்தி ரெண்டுபேரும் 'பளிச்'சுன்னு சிரிச்சுக்கிட்டே வந்து சேர்ந்தாங்க. நெடு நெடுன்னு உயரமா, அறிவுக்களை
முகத்திலே தீவிரமா ஜொலிக்க வந்தவர்தான் நம்ம 'ஈழநாதன்'( ஃபோட்டோவிலே பார்த்திருந்த முகமேதான்!)
ச்சின்ன வயசு! என் மகளைவிடவும் ஒண்ணு ரெண்டு வயசு கூட இருக்கலாம்னு நினைச்சேன். அது சரியாவும்
இருந்துச்சு!

எல்லோரும் அன்போடு 'மா.கோ' என்று சொன்ன மா. கோவிந்தசாமி என்றவர் தன்னுடைய நண்பரான சிவசாமி
என்கிற ஓய்வுபெற்ற தமிழாசிரியரோடு வந்தார். வந்தவுடனே அறிமுகம் ஆச்சு! கூடவே கொண்டு வந்திருந்த ஒரு
பொதியைப் பிரிச்சு, உள்ளேயிருந்த 'தமிழா' என்ற புத்தகத்தை ஆளுக்கொண்ணா கொடுத்தாங்க. இந்தப் புத்தகத்தை
எழுதுனவர்தான் கூட வந்திருந்த தமிழாசிரியர் 'சிவசாமி ஐயா'

அப்புறம் என்னென்ன விவாதம் எல்லாம் நடந்ததுன்னு மூர்த்தி, பாலு, விஜய், குமார் இவுங்க பதிவுகளிலே பர்த்திருப்பீங்க!

நம்ம சிங்கை நாதன் என்கிற செந்தில் நாதன்( விவரம் உதவி: மதியின் நேர்காணல்!) ச்சும்மான்னு ஒரு பதிவு
ஆரம்பிச்சு, ச்சும்மாவே வச்சிருக்கார்!எழுதறதுக்கு இன்னும் வேளை வரலையாம்!!!! எல்லாம் ச்சும்மா!!!!

மனஸாஜென் எழுத்தாளர் மட்டுமில்லை. அருமையான ஓவியரும் கூட!! அவர் வரைஞ்ச சில ஓவியங்கள் அதிர்ஷ்ட
வசமா, அங்கே ரம்யாவின் வீட்டிலேயே இருந்ததால் அவைகளையும் எடுத்துவந்து எங்கள் பார்வைக்கு வைத்தார்கள்.
எதுக்கு 'அதிர்ஷ்டம்'ன்னு சொன்னேன்னா, அங்கே இல்லாமப் போயிருந்தால் எனக்கு ஒரு அருமையான ஓவியம்
பரிசாக் கிடைச்சிருக்குமா?

'மீரா' எனக்குக் கிடைத்தாள்! 'சிம்பிள் அண்ட் ஸ்வீட்'

நம்ம 'அன்பு' ஒரு பை நிறைய புத்தகங்களோடு வந்திருந்தார். எல்லாருக்கும் இரவல் தரவாம்! எனக்கும் ஒரு
புத்தகம் எஸ்.ரா. வோட 'துணையெழுத்து' கிடைக்கறமாதிரி(!) இருந்தது. ஆனா கடைசியிலே அதிர்ஷ்டம்
கை நழுவிப் போயிருச்சு! ஆனா அவரோட 'குப்பை'யிலே சேர்த்துவச்சதையெல்லாம் சி.டி.யிலே பதிவு செஞ்சு
கொண்டுவந்திருந்தது கிடைச்சது.

இதுக்கு நடுவிலே கேசரி, கேக்குன்னு தின்பண்டங்கள் வேற!!!! கேசரி 'ரொம்ப நல்லா இருந்துச்சு'ப்பிச்சுக்கு'ன்னு
ஒட்டாம நல்லா மணல்மணலா ( மண்ணு இல்லீங்க, அப்படிச் சொல்றது!)அருமையான சுவையோடு இருந்தது!
யாரு கொண்டுவந்தாங்கன்னு கேட்கலை, ஆனா ஜெயந்தியோடதுன்னு மத்தவங்க பதிவுலே இருந்து தெரிஞ்சுக்கிட்டேன்!
ரெண்டு மூணு ஃப்ளாஸ்க்குலே காஃபி வேற!! நம்ம குமார் கொண்டுவந்ததோ ?

அப்புறம் மா.கோவும், சிவசாமி ஐயாவும் கிளம்பிப் போயிட்டாங்க. அவுங்க எங்ககிட்டத் தந்த 'தமிழா'வுக்கு பத்து
வெள்ளின்னு எல்லோரும் கொடுத்தாங்க. நானும் கொடுத்தப்ப , அன்பு அதை வாங்க மறுத்துட்டாரு.

அவுங்கெல்லாம் போனபிறகு, அதுவரை நாகரிகம் கருதி 'அதை'ப் பற்றிப் பேசாமலிருந்த நாங்க அதைப் பத்திக்
கொஞ்சம் எங்களுக்குள் எங்க கருத்தைப் பகிர்ந்துக்கிட்டோம்.( இதைப் பத்தி மூக்கன் ஒரு பின்னூட்டம் போட்டிருந்தார்
அப்பவே பிடிக்கலைன்னு சொல்லி யிருக்கணும். பின்னாலெ சொல்றது சரியில்லேன்னு. அவரோ இணைய எழுத்தாளர்
கிடையாது. இன்னொருத்தர்கூட 'கெஸ்ட்'டா வந்திருக்கார். அவர் மனசு நோகவேணாமுன்னுதான் சும்மா இருந்தோம்)

நம்ம அருள் சொன்னார், 'இது சரியில்லை. இனிமே நம்ம கூட்டத்துலே இந்த மாதிரி நடக்காமப் பார்த்துக்கணும்'ன்னு.
கரெக்ட்!! நானும் ஆமோதிக்கறேன். பத்து வெள்ளின்றது ஒரு பெரிய காசு இல்லை. ஆனா நாம வாங்கற புத்தகத்தைத்
தேர்ந்தெடுக்கற உரிமை நமக்கு இருக்கணும். இல்லையா?

இதே புத்தகங்களை, அங்கே மேஜையிலே வச்சுட்டு, அதைப் பத்தின விவரம் சொல்லி, 'இது விற்பனைக்கு இருக்கு. விருப்பப்
பட்டவுங்க வாங்கிக்கலாம்'ன்னு சொல்லியிருந்தா சந்தோஷமா இருந்திருக்கும்!

தம்பி ஈழநாதன், அங்கே தமிழ்ப் புத்தகங்கள் ( நியாய விலையில்!) கிடைக்கற இடத்தைச் சொல்லி, என்னை அங்கே கூட்டிட்டுப்
போய்க் காமிக்கறேன்னும் சொன்னார். அவர் சொன்ன இன்னொரு விஷயம்தான் ஒரு 'இன்ப அதிர்ச்சி'யா இருந்துச்சு!
நம்ம மதி அவருக்கு ஃபோன் போட்டுச் சொன்னாங்களாம், துளசி அங்கே வர்றப்ப தமிழ்ப் புத்தகங்கள் கிடைக்கிற இடத்தைக்
காமிச்சுக் கொடுக்கணுமுன்னு! மதி, மதி, எப்படி உங்களுக்கு நன்றி சொல்றது?

அவர் சொன்ன இடம் ( அந்தத் தெரு) ஏற்கெனவே எனக்குப் பழக்கமான இடம்( பஃபெல்லோத் தெரு!!!)
என்றதாலே நானே போய் பார்த்துக்கறேன். சிரமப்பட வேணாமுன்னு சொன்னேன்.

எல்லோரும் கொஞ்சநேரம் ஓய்வா பேசிக்கிட்டு இருந்தப்ப 'பனசை நடராஜன்' வந்தார். சிங்கை இணைய
எழுத்தாளர்கள் உள்ளூர் பேப்பர் 'தமிழ் முரசு'க்கு, அவுங்க படைப்புகளை அனுப்பணுமுன்னு சொல்லி அதோட
சாதக, பாதகங்களைப் பற்றி ஒரு சின்ன விவாதம் நடந்தது.

எட்டு மணிவரைக்கும் நாங்கெல்லாம் இருந்து பேசிக்கிட்டு இருந்தோம். மூர்த்தி மட்டும் கொஞ்சம் சீக்கிரமாக் கிளம்பிட்டார்.
அநேகமா எல்லோருடைய பதிவுகள் மூலமாகவும் ஒரு பரிச்சயமான உணர்வு இருந்ததாலே, யாருமே புது மனுஷங்களா
எனக்குத் தோணலை! நீண்டநாள் நண்பர்களோடு பேசற உணர்வுதான்.

அருமையான சந்திப்பு! ஏற்பாடு செஞ்சிருந்த சிங்கை நண்பர்களுக்கு நன்றி!! எல்லோரும் அக்கா, அக்கான்னு அன்பாப்
பழகுனாங்க. எனக்கு 'ரொம்ப நல்லா இருந்தது'( குமார். கவனிக்க! எல்லாப் பின்னூட்டத்திலும் 'ரொம்ப நல்லா
இருக்கு'ன்னு நான் எப்பவும் எழுதறேன்னு சொல்லிக் கலாய்ச்சுக்கிட்டு இருந்தார்) அது சரி, நல்லா இருக்குன்றதை
வேற எப்படிச் சொல்றதாம்?

இருப்பிடத்துக்கு வந்து சேர்ந்தபிறகு, கொஞ்ச நேரம் வெளியே போய்ப் பார்த்தா, 'சிராங்கூன் ரோடு' முழுக்க
பலாப்பழத்துலே ஈ மொய்ச்ச மாதிரி மனுஷர்கள்!!!!!! ஏன்னா,அன்னைக்கு ஞாயித்துக் கிழமையாம்!!!!!

இன்னும் கொஞ்சம்தான் இருக்கு!




9 comments:

said...

எனக்கும் ஒரு
புத்தகம் எஸ்.ரா. வோட 'துணையெழுத்து' கிடைக்கறமாதிரி(!) இருந்தது. ஆனா கடைசியிலே அதிர்ஷ்டம்
கை நழுவிப் போயிருச்சு!


அச்சச்சோ அதை நீங்க எடுத்துக்கலியா!?
உங்க கையிலேயே கொடுத்தேனே, இப்படி கைநழுவி அன்பளிப்பை - இரவலாக்கி விட்டீங்களே.

ஜெயந்தி கேட்டபோதுகூட, நீங்கள் வெளியூர் செல்வதால் (நான் படித்த, எனக்குப்பிடித்த, அவர்களுக்கும் பிடிக்கும் என்று தெரிந்த) அது துளசியக்காவுக்கு என்று சொன்னேன்.

அப்போதான், அவங்களுக்குப்பிடித்த மீராவும் கைநழுவியபோது, என்னப்ப்பா... நியுஜீலாந்திலேருந்து வந்தாதான் கொடுப்பீங்களான்னு கேட்டாங்க:)

said...

அன்புத்தம்பி அன்பு,

நானும் மறுநாள் ஜெயந்திகூட பேசுனப்ப அவுங்களும் இதையேதான் சொன்னாங்க. அப்ப
உங்களுக்குக் கிடைக்கலையான்னு?

சரி. யாருக்கு அதை 'இப்ப'ப் படிக்கணுமுன்னு விதி இருக்கோ அவுங்ககிட்டேதான் போயிருக்கும்!

திரும்பி, அது உங்க கிட்ட வர்றப்ப(!) வச்சிருங்க. நான் அடுத்தமுறை நேரிலே வந்து வாங்கிக்கறேன்!

என்றும் அன்புடன்,
துளசியக்கா

said...

//மாடிப்படியேறிப் போனப்ப, அங்கே வெளியே 'லேண்டிங்'லே ஒருத்தர் ரொம்ப பிஸியா ஃபோன்லே அளந்துக்
கிட்டு இருந்தாரு. எங்களைப் பார்த்து மிரண்ட மாதிரி ஒரு பார்வை-))))
//

அட! புதுசா எதையாச்சி பார்த்த கொழந்தை எப்படி மிரளுமோ அந்த மாதிரி தான்க்கா நானும். நானும் கொழந்தை மாதிரி.

said...

ரொம்ப சந்தோஷமா இருக்கு துளசி. விலாவாரியா சிங்கப்பூர்ல செஞ்ச ஷாப்பிங், ஊர் சுற்றல், சாப்பாடு(இது ரொம்ப முக்கியம் எனக்கு :D) எப்ப ஜெயந்தி வீட்டுக்குப் போறதுன்னு கனவு காண ஆரம்பிச்சுட்டேன். ;)

-மதி

said...

சோதனை மேல் சோதனை பின்னூட்டம்.

Anonymous said...

வணக்கம் துளசி அக்கா அது அறிவுக்களை அல்ல ரம்யா அக்கா வீட்டை தேடித் தேடி நடந்த உண்மைக் களை.நன்றாகப் பதிவு செய்திருக்கிறீர்கள் நன்றி

said...

அது நான் தான்

said...

/
நம்ம சிங்கை நாதன் என்கிற செந்தில் நாதன்( விவரம் உதவி: மதியின் நேர்காணல்!) ச்சும்மான்னு ஒரு பதிவு
ஆரம்பிச்சு, ச்சும்மாவே வச்சிருக்கார்!எழுதறதுக்கு இன்னும் வேளை வரலையாம்!!!! எல்லாம் ச்சும்மா!!!!/


ஆஹா...அவரு அப்ப இருந்தே இப்படித்தானா??? எப்பத்தான் எழுதுவாரோ????

said...

வாங்க நிஜமா நல்லவன்..
'அவர்' எப்ப எழுதுவார் என்பது உங்கள் அதிர்ஷ்டத்தைப் பொறுத்தது:-))))