Thursday, April 14, 2005

ஊட்டமது கைவிடேல்!!!!

ஊட்டம் இல்லேன்னா புள்ளீங்க என்னாவும்? அப்படியே இளைச்சு, மெலிஞ்சு போயிராது?
அதே கதைதான், இந்த பதிவுகளுக்கும்! அதுலெயும் ஏதோ கொஞ்சநஞ்சம் வர்ற பின்னூட்டத்துக்கு
ஒரு மதிப்பும் மரியாதையும் கொடுத்து, 'இந்த மாதிரி.. பின்னூட்டம் கொடுத்தவங்களுக்கு
ரொம்ப நன்றி'ன்னு சொல்லிட்டாப் போகுதுன்னு பார்த்தா, சிலப்ப இந்த பின்னூட்டத்துக்கு நாம
போடப்போற பதிலே ஒரு பதிவு கணக்கா அமைஞ்சிருதுல்லையா?


இப்படி மாறிமாறிப் பின்னூட்டத்துக்கு
பதில் எழுதினா அதுவே ஒரு தொடராப் போயிடுமேன்னுதான் பலசமயம் வலைப்பதியறவுங்க ச்சும்மா
இருந்துறது. இல்லையா? ஆனா, பாருங்க, சில பின்னூட்டம் மட்டும் மனசுக்குள்ளே வட்டம் போட்டுக்
கிட்டே இருக்கும். அதுக்கு இன்னோரு பதிலை எழுதணுமுன்னு கை பரபரக்கும். நாலு நாளு போகட்டும்.
அப்புறமும் மனசுலெ அதே இருந்துச்சுன்னா, அதுக்குன்னு ஒரு பதிலைப் போடறதுதான் நல்லது!
இல்லேன்னா, மருந்தைக் குடிக்கறப்ப குரங்கை நினைக்காதே கதையாப் போயிரும்!

எதுவுமே அவுங்கவுங்க சொந்தக் கருத்துன்னு ஆமோதிச்சுக்கிட்டுச் சும்மா இருந்துறலாம்தான்.ஆனா..
இன்னும் வாங்கிக் கட்டிக்கணுமுன்னு 'விதி' இருந்தா அதை யாராலெ தடுக்கமுடியும்?

நம்ம விஜய் (அல்வாசிட்டி) அப்பப்ப ஊட்டம் கொடுத்து ஊக்குவிச்சுக்கிட்டே இருந்தார். நம்ம அன்பு
இருக்காரே அவர், அன்பளிப்பாக் கொடுத்த துணையெழுத்தை 'தொலைச்சிட்டேன்'!!!! அதுவே எனக்கு
இணையச் சந்திப்பு நிகழ்ந்த இடத்தை விட்டு வெளியே வந்தபிறகுதான் தெரிஞ்சது! அது எனக்குக் கிடைக்காத
விவரத்தை இந்தத்தொடர் படிச்சுத்தான் அன்புவும் தெரிஞ்சுக்கிட்டாராம்.

பாலு மணிமாறன், பாலாஜி பாரி, தைவான் கிறிஸ், நம்ம செல்வநாயகி, மதி, அருணா, மீனா, முருகன்,
ஈழநாதன், குமார், மூர்த்தி இவுங்கெல்லாம் நல்ல முறையிலே ஊட்டம் அளிச்சு உற்சாகப் படுத்தினாங்க.
அதிலும், நம்ம மூர்த்தி இருக்காரே, என் கூட 'டூ' விட்டுட்டாரு. 'மலேசியாவுக்கு வர்றதாச்
சொல்லி இருந்தா, நான் வந்து அழைச்சுக்கிட்டுப் போயிருப்பேனே'ன்னு எழுதுனார். இதுலே என்ன
ஒரு சங்கடமுன்னா, நாம அங்கெ போறதை முன்கூட்டியே முடிவு செய்யலைதானே! அப்படியும் ஜெயந்தி
கிட்டே பேசினப்ப, அவுங்களும் மூர்த்தியைக் கேக்கலாமுன்னுதான் சொன்னாங்கதான். என்னைக்கு, எப்பன்னு
தெரியாததாலேதான் மூர்த்தியைத் தொடர்பு கொள்ள முடியாமப்போச்சு! இவ்வளவு வருத்தம் என்னத்துக்கு?
அடுத்தமுறை, இந்த அக்கா அங்கே மாமாவோட வர்றப்ப, நம்ம மூர்த்திதான் எல்லா ஏற்பாடும் செய்யணும்!

ஆலாபனையெல்லாம் முடிச்சுட்டேன், இப்ப விஷயத்துக்கு வர்றேன்.

சென்னையிலே, தி.நகர் ரங்கநாதன் தெருவிலே இருக்கற, 'சரவணா ஸ்டோர்ஸ்'கடைக்கு யாராவது
போயிருக்கீங்களா? அப்படி யாராவது போயிருந்தா, அவுங்களொட அனுபவம் எப்படின்னு தெரிஞ்சுக்க
ஆசையா இருக்கு! நானும் ஒருதடவை 2002 நவம்பர்லே போயிருந்தேன்.

என்னோட அனுபவத்தை ஒரு நாளு இங்கே போடறேன். இன்னைக்கு வேணாம். வருசப்பிறப்பு!

எல்லோருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்

6 comments:

said...

"ஊட்டமது கைவிடேன்"

எப்பவுமே படிச்ச பதிவுக்கு அட்லீஸ்ட் "அருமை"-ன்னு பின்னூட்டம் விடுறது பழக்கம்.90.35% நான் பின்னூட்டம் விட்டுவிடுவேன். சில சமயம் சோம்பேறித்தனம் பட்டு ஸ்டாரை குத்திவிட்டு வந்து விடுவேன். "ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்த தன் பிள்ளை தானா வளரும்" இதுவும் பின்னூட்ட விசயத்தில் 100% உண்மை.

said...

// "ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்த தன் பிள்ளை தானா வளரும்" //

இத இப்படியும் சொல்லலாம்

"ஊரான் பதிவை (பின்)ஊட்டி வளர்த்த தன் பதிவு தானா வளரும்"

said...

ஊரான் பிள்ளையை ஊட்டி வளத்தா, தன் பிள்ளையைக் கொடைக்கானல் வளக்கும்.
அன்புடன்,
டோண்டூ ராகவன்

said...

வருஷப்பிறப்பும் அதுவுமா இதுக்குப் போய் feel ஆவலாமா? தோ... நான் ஒரு பின்னுட்டம் குடுத்துட்டேன் பாருங்க...

said...

பின்னூட்டம் அளித்த அனைவருக்கும் நன்றி!!!

என்றும் அன்புடன்,
துளசி.

said...

என்ன பிரச்சனையோ தெரியலை.. என்னோட பின்னூட்டங்கள் உங்கள் பதிவில் ஏறவே மாட்டேங்குது...அப்புறம் எப்படி ஊக்கு, ஊசி,பாசியெல்லாம் விக்கிறது ? :))))