Wednesday, May 25, 2005

டென்ஷன் ஒரே டென்ஷன்!!!

படிப்பும் பழக்கமும்!!! பகுதி 5

இந்த வார்த்தையைச் சொல்லாத ஜனமே உலகத்தில் இருக்காது போல!!! ஒட்டுமொத்தமா எல்லோருமே
ஏதாவது ஒரு வகையான டென்ஷனில் மாட்டிக்கிட்டு முழிக்கிறோமோ? பொழுது விடிஞ்சதும், ஏன் சில சமயம்
கனவுலேகூட ஓயாம ஓடிக்கிட்டு இருக்கமே, அது எல்லாம் எங்கெ கொண்டு விடுது?



இப்பத்தான் எதுக்கெடுத்தாலும் ஒரு 'தெரபி'ன்னு வைத்தியமுறை வந்துருச்சுல்லே! அந்தப் பாதையிலே போய்
நான் ஒரு வழி கண்டு வச்சிருக்கறேன் மனசை கொஞ்சம் ரிலாக்ஸ் செஞ்சுக்கறதுக்கு.( வந்துட்டாடா...வந்துட்டா...)

புத்தகம் பாக்கறது!!!!

(ஐய்யே, இது தெரியாதாங்காட்டியும்? இன்னாத்தான் சொல்ல வர்றே?)

சரி சரி கோவிச்சுக்காதீங்க! நான் சொல்றது புத்தகம் படிக்க இல்லை! ச்சும்மாப் பாக்கறதுக்கு!!!!

நம்ம வீட்டுலே இருக்கற ச்சின்னப்புள்ளிங்களுக்கு எவ்வளவு புத்தகம், வாங்கியோ இல்லை லைப்ரரிலே இருந்து
எடுத்தோக் கொடுத்திருக்கறோம். ஒரு நாளு, அதைப் படிச்சோ இல்லே ஜஸ்ட் புரட்டியோப் பார்த்திருக்கோமா?

அதுலே படங்களுக்கு எவ்வளோ முக்கியத்வம் கொடுத்திருக்காங்கோன்னு பாருங்க! 'இல்லஸ்ட்ரேஷன்'ன்றது
ரொம்பவே பெரிய விஷயம். நல்லா கூர்ந்து கவனிச்சாத்தான் ச்சின்ன சின்ன விஷயத்துக்குக்கூட எவ்வளோ
மெனக்கெட்டுருக்காங்கன்னு புரியும்!

சம்மர் ஸ்டோரி, வின்டர் ஸ்டோரின்னு நாலு காலத்துக்கும் நாலு புத்தகம் 'ஜில் பார்க்ளெம்' எழுதுனது கிடைச்சாப்
பாருங்க. ரொம்பவே பழைய புத்தகம்தான், இல்லேங்கலே. ச்சும்மா ஒரு நாலுவரிதான் கதை! ஆனா அந்தப் படங்க!!!!
ரொம்ப 'டீ டைல்'லா இருக்கும். நாயகன் நாயகிங்க சுண்டெலிங்கதான். ஆனா அதுங்க போட்டிருக்கற உடுப்பும், வீட்டை
வச்சிருக்கற நேர்த்தியும் அப்பப்பா...... ஒரே ஜோர் தான், போங்க!!!!

இப்பக் கொஞ்ச நாளைக்கு முன்னாலே 'வேர் ஈஸ் த வாலி நெள' பார்த்திருப்பீங்கதானே? அது ஒண்ணு கிடைச்சா, எடுத்து
வச்சிக்கிட்டு, உங்க வீட்டுலே இருக்கற பொடிசுங்க கூட உக்காந்து படங்களைப் பாருங்க. கடைசிப் பக்கத்துலே
கேட்டுருக்கற கேள்விங்களுக்கு விடையை கண்டு பிடிங்க. இப்பப் பாருங்க எப்படி நம்ம மனசு லேசாகிப் போகுதுன்னு!!!!

ச்சீச்சீ, இதெல்லாம் சிறுபிள்ளைத்தனம்! நாங்க ரொம்பப் பெரிய விஷயங்கள் இருக்கறதைத்தான் படிப்போம்னு சொல்றிங்களா?
அது பாட்டுக்கு அது, இது பாட்டுக்கு இதுன்னு ஒரே ஒருதடவை செஞ்சுதான் பாருங்களேன்!

இப்படித்தான் சில வருஷங்களுக்கு முன்னாலே 3D படங்கள் போட்ட புத்தகம், போஸ்ட் கார்டு, க்ரீட்டிங் கார்டுன்னு
வந்துக்கிட்டு இருந்துச்சுல்லே, அதையும் மூக்குக்கு முன்னாலே வச்சுக்கிட்டுக் கொஞ்சம் கொஞ்சமா தூரக் கொண்டுக்கிட்டுப்
போய் பார்த்திருக்கீங்களா? என்ன படமுன்னு கண்டுபிடிச்சிட்டீங்கன்னா ஒரு சந்தோஷம் வரும்!!!
எல்லாமே ஒரு ரிலாக்ஸேஷந்தான்! இதுலேகூடப் பாருங்க, பொம்பளைங்களுக்குத்தான் 'சட்'ன்னு படம் புரிபட்டுடுது!
ஆண்பிள்ளைங்களுக்குக் கொஞ்சம் கஷ்டம்தானாம்! நம்ம வீட்டுலே எல்லா ஆம்புளைங்களும் சொன்னது இது!

மனசுக்கு கொஞ்சம் புத்துணர்ச்சி கிடைக்க புத்தகம் எவ்வளவு உதவுது பாருங்க!

மறுபடியும் எங்கியோ போயிட்டேன்! முறுக்கு 'தின்னணுமு'ன்னு சொல்லிக்கிட்டிருந்தேன்,இல்லே?

'எழுத்தாளர்கள்' ன்னு சொன்னாலே மனசுக்குள்ளே ரொம்ப மரியாதை! எப்படி இப்படியெல்லாம் எழுதறாங்கன்னு
நினைச்சு மாஞ்சு போவேன். இப்பவும் அப்படித்தான்னு வச்சுக்குங்க! ஒவ்வொருத்தர் எழுதனதைப் படிக்கறப்ப
பிரமிப்புத்தான் கூடிக்கிட்டே போகும்! மாமாவோட நண்பர் ஒரு எழுத்தாளர்ன்னு சொல்லியிருந்தேனே,
அவரோட வீட்டுக்கு அடிக்கடி போய்வருவேன்.அப்ப அவர் அந்த வாரப்பத்திரிக்கையிலே வேலை செஞ்சுக்கிட்டு இருந்தார்.
மாமா மெட்ராஸ் வரும்போது அவர்கூடவே ஒட்டிக்கிட்டுப் போயிருவேன். ஒவ்வொருமுறையும் மாமாவும் நண்பனைப்
பார்க்காமத் திரும்பிப்போகமாட்டார்! கொஞ்ச நாளைக்கு முன்னாலே அவருடைய மரணச் செய்தியை 'நெட்'லேதான்
படிச்சேன்.வருத்தமா இருந்துச்சு! அவர்தான் சண்முக சுந்தரம். 'புனிதன்'ன்ற புனைப்பெயரில் எழுதுனவர்!!!!

பிரபு ராஜதுரையும் அவருடைய தூத்துக்குடி வாழ்க்கையைப் பத்தியெல்லாம் நினைவலைகள் எழுதியிருந்தார்!
படிக்கப் படிக்க ஒரே ஆனந்தமா இருந்தது! அப்புறம் சட்ட நுணுக்கங்கள் பத்தியெல்லாம் அவரோட பதிவுலே
போட்டுக்கிட்டு இருந்தார். ஏனோ, இப்பெல்லாம் அவர் எழுதறதே இல்லை!!!

'டாண்'னு அவருகிட்டே இருந்து பதில் வந்துடுச்சு! முறுக்கைத் தேடிக்கிட்டு இருக்கறதாயும், கிடைச்சவுடனே
அனுப்பறதாயும்!!!! அதே போல தேடிக்கண்டுபிடிச்சு அனுப்பவும் செஞ்சார்! அப்புறம் மெதுவா மரத்தடிக் குழுமத்துலே
சேர்ந்துக்கிட்டேன். கொஞ்சம் கலாய்ச்சாலும் வரவேற்பு இதமா இருந்தது! பெரும்பாலும் நல்ல நட்பான ஆட்களா
இருந்தாங்க. எல்லோரும் எழுதறதைப் படிக்கவும், அது தொடர்பா நம்ம எண்ணத்தைச் சொல்லவும் வாய்ப்பு கிடைச்சது!
வலையிலேயே, தமிழிலே படிக்க இவ்வளோ இருக்குன்றதும் அப்பத்தான் தெரிஞ்சது! 'பொன்னியின் செல்வன்'கூட
இருக்குன்னு தெரிஞ்சதும் பிரமிச்சுப் போயிட்டேன்!

நானும் சிறுபிள்ளைத்தனமா ஏதோ எழுதப் போக, அதை 'மரத்தடி.காம்'லேயும் போட்டு படைப்பாளிகள் லிஸ்ட்லே
பேரும் போட்டுட்டாங்க! சரி, மக்களுக்கெல்லாம் நேரம் சரியில்லேன்னு நினைச்சுக்கிட்டு அப்பப்ப ஏதாவது எழுதிக்கிட்டு
இருந்தேன். ஆனாலும் ரொம்பப் பிடிச்சது 'படிக்கறது'தான்!!! அப்ப மட்டுறுத்தினரா இருந்த நம்ம 'மதி' எழுத ஊக்கம்
கொடுத்ததோட, இந்த ப்ளாக் விஷயத்திலும் தொழில்நுட்ப உதவியெல்லாம் செஞ்சாங்க( செஞ்சுக்கிட்டும் இருக்காங்க!)

வலைப்பூ வந்துக்கிட்டு இருந்த காலம்!! அப்புறம் அதுவே நம்ம காசியின் முயற்சியால் தமிழ்மணமா ஆனதும், வாசிப்பு
அனுபவம்ன்றது தாராளமாக் கிடைக்க ஆரம்பிச்சது!!!!! வலைப்பதிவர்கள், அவுங்க பதிவைப் போட்டவுடனே, தமிழ்மணத்துலே
வந்துர்றதாலே, தேடித்தேடி அலையாம ஒரே இடத்துலே 'ஹாயா' இருந்துக்கிட்டே கஷ்டமில்லாம(!)படிக்க ஏதுவாயிடுச்சு!

அப்படியே 'திண்ணை'யிலே போய் உக்காந்தா, ஏராளமான கதைகள் கொட்டிக்கிடக்குது!!!!! அநேகமா எல்லாத்தையும்
படிச்சுட்டேன்.

ஆனாலும், அச்சுலே இருக்கற புத்தகத்தைப் படிக்க முடியலையேன்ற ஏக்கமும் இருந்துக்கிட்டேதான் இருக்கு. அப்புறம்
'புத்தகவாசம்' ஆரம்பிச்சாங்க! அதுலேயெல்லாம் கலந்துக்க ஆசை இருந்தாலும், புத்தகத்துக்கு எங்கே போறது?
படிச்சுப்பாத்து, அதை விரிவா ஆராய்ஞ்சு எழுதறதைப் படிக்கறதோட திருப்திப் பட்டுக்கலாமுன்னு மனசைத் தேத்திக்கிட்டேன்.

இதுக்கிடையில்தான் சிங்கப்பூர் போறதுக்கும், அங்கே இருக்கற வலைப்பதிவு நண்பர்களைச் சந்திக்கறதுக்கும் ஒரு வாய்ப்பு
கிடைச்சது. அந்த சந்திப்புலேதான், தம்பி ஈழநாதன் ஒரு விவரம் சொன்னார்,அங்கே தமிழ்ப்புத்தகங்கள் (நியாயவிலையில்)
கிடைக்கற இடத்தையும், புத்தகம் வாங்கிக்க எனக்கு உதவி செய்யும்படி நம்ம மதி அவருகிட்டே சொன்னாங்கன்னும்!!!!
சந்தியா பதிப்பகம் நல்ல முறையிலே புத்தகங்களை அச்சிட்டு வெளியிடறாங்கன்னும் தெரிஞ்சுக்கிட்டேன்.

மனசுக்கு ரொம்பவே இதமாபோச்சு! (மதி, உங்களுக்கு நன்றியை எப்படிச் சொல்றது?) அவர் சொன்ன ஏரியா எனக்குப்
பழக்கம்ன்றதாலே நானே போனேன். அங்கே பார்த்தா நிறைய இருக்கு! ஆனா கவிதை புத்தகங்கள்தான் கூடுதல்.
அநேகமா அங்கெ இருக்கறதெல்லாம் சந்தியாப் பதிப்பகம் போட்டதுதான்! நான் இதுவரைக்கும் பார்க்காத அளவில்
இருக்கு. இதுவரை எனக்குப் பழக்கமான புத்தகங்கள் 'வானதிப் பதிப்பகம்' போடறதுதான். ச்சென்னைக்குப் போகும்
சமயங்களிலே 'வானதி'க்குப் போய் பெரியவரையும் பார்த்துட்டு அப்படியே கொஞ்சம் புத்தகங்களையும் வாங்கிக்கிட்டு
வர்றதுன்னு ஒரு பழக்கம் 20 வருசமா இருக்கு! போறகாலத்துக்குப் புண்ணியம் கிடைக்கட்டுமுன்னு கொஞ்சம் ஆன்மீக
சம்பந்தமானதுதான் வாங்கறது( வயசானதுக்கு அறிகுறியோ?)

எனக்கும், தமிழ்நாட்டுக்கும் இடைவெளி அதிகமாகிப் போன இந்தக் காலக் கட்டத்திலே வளர்ச்சி அடைஞ்ச ஏராளமான
விஷயங்களிலே இந்தப் புத்தகப் பதிப்பகங்களும் ஒண்ணு! நாந்தான் கவனிக்கத் தவறி இருக்கேன். கைக்கு இதமா,
வழுவழுப்போட, தரமான காகிதங்களில், நேர்த்தியா அச்சாகி இருக்கு இந்தப் புத்தகங்கள் எல்லாம்!!!!

கொஞ்சநேரம் அந்தக் குவியலிலே தேடுனப்பக் கிடைச்சது 'ரதிப் பெண்கள் திரியும் அங்காடித் தெரு'!!!! இந்தப் பேரே.
பிடுங்கித் தின்றமாதிரி என்னைச் 'சட்'டுன்னு இழுத்துருச்சு! எழுதுனவர் எழில்வரதன்!!!மெதுவாப் பின் அட்டையிலே
பார்த்தா, 'ஆதவன் தீட்சண்யா'ன்றவர் ஒரு மதிப்புரை எழுதியிருக்கார். இவரையுமே நான் படிச்சதில்லை, ஆனா
இந்தப் பேருங்க எல்லாமே கொஞ்சம் புதுமையா இருந்துச்சு! ( இதுவரை புதுமையைக் கண்டுக்காத பழம்பெருச்சாளியா
இருந்திருக்கேன் பாருங்க!!)

இதையும் இன்னும் சில புத்தகங்களையும் வாங்கிக்கிட்டு வந்தவுடனே,'எழில்வரதனை'ப்படிக்க ஆரம்பிச்சேன். இந்தச்
சிறுகதைத் தொகுதியிலே 15 கதைகள் இருக்கு! திறந்தவுடனே வந்தது,'தொலைந்து போன பையனின் புத்த்கப்பை'!!!
இவரோட 'ஸ்டைல்' எனக்குச் சட்டுன்னு பிடிச்சுப் போச்சு! ஒவ்வொண்ணா எல்லாக் கதைகளையும் படிச்சேன்.
நிறைவா இருந்தது!

இப்பக் கொஞ்சநாளா இவரோட கதைகள் ஆ.வி.யிலே வந்துக்கிட்டு இருக்கு. இந்த வாரம்கூட ஒண்ணு வந்துருக்கு. ஆனா
'ரதிப்பெண்கள்.......'லே இருந்த நடையைக் காணொம். வணிகப் பத்திரிக்கையிலே இருக்கணுமுன்னா ஏதாவது சில
விஷயங்களிலே ஒத்துப் போகணுமுன்ற எழுதப்படாத விதி( கண்ணுக்குப் புலப்படாத கைவிலங்கு?) காரணமோ?

இருக்கலாம் ஒருவேளை! ஆனா இந்த வாரம் ஆ.வி.யிலே உமா கல்யாணி எழுதியிருக்கற ஒரு கதை...... கடைசியிலே
மனசைப் பிழிஞ்சுடுச்சு!!!!!

இப்படியாக இன்னும் கிடைக்கறதையெல்லாம் படிச்சுக்கிட்டே இருக்கேன், பலவகையிலும்!!!!!! நீங்களும்
இப்படித்தான்'னு 'பட்சி' சொல்லுது:-)))))


நிறைவு பெற்றது இந்தத் தொடர்!!!!

பொறுமையாகப் படித்து அவ்வப்போது பின்னூட்டங்களாலும், தனிமடல்களாலும் நண்பர்கள் கொடுத்த ஊக்கத்துக்கு
மனமார்ந்த நன்றி!!!!!








8 comments:

said...

என்னவோ போங்க.. என்ன இருந்தாலும் தமிழ் குடிதாங்கிகள் ஆளுங்க தமிழ் எழுத்திலெல்லாம் தார் பூசின மாதிரி உங்களுக்கு பூசத் தெரியலை போங்க!!

said...

நானும் தார் பூசலாமுன்னு பார்த்தா, இந்த ஊருலே தமிழ் எழுத்தோட பேர்ப்பலகை ஒண்ணுமே இல்லையே!

பின்னூட்டியதற்கு நன்றி

said...

யக்கா! இது என்ன வம்பா போச்சி, உங்க ஊருல இங்கிலீஷ் பலகையை தான் தார்பூசனும். தமிழ் பலகை வேண்டாம். உலகமெங்கும் தமிழ் :-))

said...

அக்கா,
பிரபு ராஜதுரை மண்ற்கேணி என வலைப்பூ வைத்திருந்தார், இப்போது அந்த வலைப்பதிவையே காணவில்லை.

///நானும் தார் பூசலாமுன்னு பார்த்தா, இந்த ஊருலே தமிழ் எழுத்தோட பேர்ப்பலகை ஒண்ணுமே இல்லையே!///

:-) :-) :-)

said...

விஜய்,

இங்கே இருக்கறதே ஒரே பாஷை. அதையும் தார் பூசிட்டா எப்படி?

முத்து,

ஆமாம். நானும் அதைப் பார்த்திருக்கேன். சட்ட நுணுக்கமெல்லாம்
சுலபமாப் புரியறமாதிரி எழுதிக்கிட்டு இருந்தார்.

அப்புறம் காணவே காணோம்

said...

மன்னிக்கவும்ம். ஒரேயொரு சிறிய தவறு இங்கே நிகழ்ந்து விட்டது. இதற்கு முன் க்னானபீடம் பதிவுக்கு பின்னோடமிட்டுவிட்டு இங்கே வந்து உங்களுக்கு

"உங்க பதிவை படிச்சதிலிருந்தே ஒரே டெண்சனாப் போய்டிச்சி அக்கா" அப்படீன்னு டைப் பன்னினேன். ஆனா சுரதா-விலே காப்பி பண்ண விட்டுட்டு மறந்து போய் அப்படியே (பழசை) பேஸ்ட் பண்ணிட்டு போயிட்டேன். இப்போ திரும்பி வந்து பார்த்தா அதுக்கும் ஈடுகொடுத்து பின்னோட்டங்கள். :)

said...

//போறகாலத்துக்குப் புண்ணியம் கிடைக்கட்டுமுன்னு கொஞ்சம் ஆன்மீக
சம்பந்தமானதுதான் வாங்கறது( வயசானதுக்கு அறிகுறியோ?)
//

என்னங்கோ யக்கா... இப்பிடி சொல்லிட்டீக.... கஸ்டமா பூடுச்சி.... நம்ம தொளசி யக்காவுக்கு வயசாகுமா???

பின்குறிப்பு:
பதிவு அருமை. எங்கோ ஆரம்பித்து எங்கோ முடிக்க உங்களுக்கு கற்றுக் கொடுத்தது யாரோ?

said...

வாங்க காட்டாறு.

வயசு நில்லுன்னு நிக்குதா கழுதை:-))))