Thursday, June 30, 2005

நேர்கா(கோ)ணல்!!!!!

மொதல்லே நம்ம ஷ்ரேயாகிட்டே இருந்து 'தப்பிச்சுரணும்'னு திட்டம் போட்டேன். ஏற்கெனவே வீட்டுலே இருந்த
பாய்ங்கெல்லாம் பிராண்டியே கிழிஞ்சு போச்சுல்லெ! எப்படியா? அவுங்க ஒரு 'க்விஸ்' உலக அதிசயங்களை வச்சுப்
போட்டு என்னை இந்த 'கதி'க்கு ஆளாக்கிட்டாங்கல்லெ!!!



அப்புறமும் மெதுவா அவுங்க பதிவைப் படிச்சபிறகுதான், இந்த முறை அவ்வளவு 'ஆபத்து' இல்லேன்னு புரிஞ்சது!
நம்மளை ஒரு 'ஆளா' மதிச்சுக் கேட்டிருக்காங்க. இப்பப் பாத்து ரொம்ப 'பிகி' பண்ணிக்க வேணாமுன்னுதான்
ஒழுங்கா மருவாதையா ஒரு இடத்துலே உக்காந்து நல்லா 'யோசிச்சு' இந்த பதிலுங்களை எழுதுனேன்!!!!

போடற மார்க்கைக் கொஞ்சம் பாத்துப் போடுங்கோவ்......


1. யாருடைய கண்ணிலும் தெரிய மாட்டீர்கள் (invisible) என்றால் என்னென்ன செய்வீர்கள்?

ஜாலி ஜாலி..... ஓடிப்போய் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்லே சத்தமில்லாம குந்திக்கிட்டு 'ஊரை'ப்பாக்கப்
போயிரமாட்டேனா?

2. புதிதாய் எதோ ஒன்றைக் கண்டு பிடிக்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். என்னவாக இருக்கும்?

அது அது அதேதான், இந்த invisible மேட்டர் "-)))))

3. உங்களுடைய முதல் ஞாபகம் என்ன?

ஏங்க 'ஞாபகம்' னா எதுலே? மனுஷனுக்கு எத்தனை விஷயம் இருக்கு!!! எதுலேன்னு சொல்லுங்க அதுக்குள்ள தொடர்பான
ஞாபகத்தை வரவழைக்கப்பாக்கறேன்!!!!!


4. உலக வரலாற்றிலே எந்தக் காலகட்டத்திற்குமோ, அல்லது குறித்த ஒரு சம்பவத்திற்கோ 'செல்ல' முடிந்தால்,
எந்தக் காலம்/சம்பவத்தைத் தேர்ந்தெடுப்பீர்கள்?

நாட்டிலே பஞ்சம் பட்டினியெல்லாம் இல்லாத, தேனும் பாலுமா ஓடிக்கிட்டு இருந்த காலம்னு ஒண்ணு இருந்திருந்தா
அந்தக் 'காலத்துக்கு'தான்!!!!

5.கரப்பான் பூச்சிகளைப் பற்றி உங்கள் கருத்து?

அய்யய்யோ, அது 'சம்பத்து புருகு'ன்னு எங்க பாட்டி சொல்வாங்க!!! அதை அடிச்சா வீட்டிலுள்ள செல்வம்
போயிருமாம்!!!! அது அப்படியே இருக்கட்டும்னுதானே அது இல்லாத 'நியூஸிக்கு' வந்து வாழ்ந்துக்கிட்டு இருக்கேன்:-)


பி.கு: இப்படி யாரு சொன்னாலும் 'கேட்டுக்குற புத்தி'யை மொதல்லே மாத்தப் பாக்கணும்!
அது என்ன 'நேர் முகமோ'?




Tuesday, June 28, 2005

உதயபானு!!!!

சினிமாவுலே ஜெயிச்சுக் காட்டணும்'ன்ற வெறியோட கோடம்பாக்கத்துலே அலைஞ்சுக்கிட்டு இருக்கற
எத்தனையோ ஆட்களில் ஒருவன்! உதவி இயக்குனர்ன்ற பேருலே அங்கெ இங்கென்னு சில படங்களிலே
வேலை செஞ்சிருந்தாலும், தன்னுடைய திறமையை முழுசா இந்த சினிமா உலகத்துக்குக் காட்டிரணும்,
எப்படியாவது ஒரு இயக்குனரா ஆகிரணும், அதுக்கு தான் எழுதுன கதையையே மூலதனமாக்கணும்
இப்படி எண்ணற்ற கனவோடு முழுமூச்சா திரைக்கதை எழுதிக்கிட்டு இருக்கான்!


ஒரு நண்பனுக்கு உதவப்போய் இவன் வாழ்க்கையே நாசமாகிடுது! தங்க இடமில்லாம அலையற
ராசப்பா என்ற ஒரு உதவி நடிகனைத் தன்கூட தங்க வைக்கிறான். அவனோ, இவனுடைய
கதையைத் திருடிக்கிட்டுப் போய் ஒரு தயாரிப்பாளர்கிட்டே கொடுத்துத் தானே எழுதுனதாச் சொல்றான்.
கூடவே ஒரு கண்டிஷனும் போடறான், அந்தக் கதையை சினிமா எடுத்தால் தானே ( ராசப்பா)தான்
கதாநாயகனாக நடிப்பான்Û!!!.முதலில் அந்த இயக்குனரும் தயாரிப்பாளரும் மறுத்தாலும், 'நல்ல கதை'யை
விட மனசில்லாம இவனையே நாயகனாப் போட்டுடறாங்க. முன்னணி நடிகை மதுமதிதான் நாயகி!!

இந்த விஷயமெல்லாம் தெரியாம ஒரு நல்ல தயாரிப்பாளரைப் பார்த்துத் தன் திரைக்கதையைச் சொல்றான்
உதயன். அவருக்கும் இது ரொம்பப் பிடிச்சுப் போய் இதைப் படமா எடுக்க ஏற்பாடு செய்றார். அப்பத்தான் தெரியுது
ராசப்பா செஞ்ச சதி!!! இதுக்குள்ளெ ராசப்பாவும் தன்பேரை சரோஜ் குமார்னு வச்சுக்கிட்டுஅந்தப் படத்துலே
நடிச்சுச் சூப்பர் ஸ்டாரா ஆயிடறான்.

கவனம் சிதறக்கூடாதுன்றதுக்காக 'கல்யாணம், காதல்' எல்லாத்தையும் கனவுலேகூட நினைக்காதவன்
திடீர்னு 250 ரூபா செலவழிச்சுக் கல்யாணம் கட்டவேண்டியதாப் போச்சு! அதுவும் யாரை? நடிகை மதுமதியை!!!

நடிகையின், அப்பாவும் அண்ணனும் பணம் பண்ணறதுலேயே குறியா இருக்கறாங்க. இதனாலே மன உளைச்சலுக்கு ஆளாகுற
நடிகைக்கு ஒரு நல்ல நண்பனா இருக்குற உதயபானு ஆறுதல் சொல்லி அமைதிப் படுத்தறான். இப்ப இந்தக் கதைத்
திருட்டால கனவெல்லாம் நொறுங்கிப்போன உதயபானுவைப் பார்த்துப் போகவந்த மதுமதியைத் தொடந்துவந்த
அப்பாவும் அண்ணனும் இவுங்க நட்பைக் கொச்சைப் படுத்தி, அவளை அங்கே இருந்து இழுத்துக்கிட்டுப்
போறாங்க. அசிங்கமாப் போயிருது!!! அதனாலே மதுமதியும் வீட்டைவிட்டுக் கிளம்பி உதயபானு வீட்டுக்கே வந்துடறதாலே
வேற வழியில்லாம நடிகையைக் கல்யாணம் பண்ணிக்கறான்.

குடும்பத்தைக் காப்பாத்தறதுக்காக ஒரு ரெஸ்டாரன்ட்டுலே வேலையும் செய்யவேண்டியாதாப்போச்சு! பணக்கஷ்டத்தைப்
பார்த்துட்டு நடிகை மறுபடி சினிமாவுலே நடிக்கப்போறென்னு சொன்னவுடனே குடும்பத்துலே சண்டை வந்துடுது!
மனைவியை அடிச்சுட்டு, கணவன் குடிக்கப்போயாச்சு! மறுநாள் குடிமயக்கம் தெளிஞ்சு பார்த்தா, மனைவி வீட்டை
விட்டுப் போனது தெரியுது! மறுபடி ஒரு கதை எழுதறான்.

இந்தக் கதை முந்தின கதையைப் போல பிரமாதமானது இல்லேன்னாலும் நல்ல கதைதான். அதை தயாரிக்க
உதவி செய்யறதாச் சொன்ன தயாரிப்பாளர், கதாநாயகனா அப்ப சூப்பர்ஸ்டாரா இருக்கற ராசப்பனை( சரோஜ் குமார்)
போட்டாத்தான் லாபம் பார்க்க முடியுமுன்னு சொல்லிடறார். உதயனுக்கு இஷ்டமில்லைன்னாலும் வேற வழியில்லாம
சம்மதிக்கிறான்.இந்தப் படத்துக்கு உதயந்தான் டைரக்ஷன்னு தெரிஞ்சதும் ராசப்பன் பலவிதமா'டார்ச்சர்' கொடுக்கறான்.
இப்படிப் போகுது கதை....

உதயன் டைரக்டரா ஜெயித்தானா? அவனுடைய மனைவிக்கு என்ன ஆச்சு? திரும்ப மனைவியோடு சேர்ந்தானா?
ராசப்பனுடைய நிலை என்ன ? இதற்கெல்லாம் விடை வெள்ளித்திரையில் காண்க! ( அல்லது வி.சி.டி.யிலும்
காணலாம்!!!)

ஒரு தயாரிப்பாளரோட அவஸ்தை, கதாநாயகனுங்க பாதிப் படம் முடிஞ்சபிறகு கொடுக்கற டார்ச்சர்ங்க, இயக்குனர்
படற கஷ்டம், அதுவும் முதல் முதல்லே ஒரு படத்தை இயக்குற ஆரம்பநிலை இயக்குனரோட எதிர்பார்ப்பு
இப்படி, பலவிஷயத்தைச் சொல்லுது இந்தப் படம்!!!! கூடவே 'கிசுகிசு' எழுதறவங்களையும் சாடுது!!!!

திரைக்குப் பின்னாலே இருக்கற இவ்வளவு கஷ்ட நஷ்டத்தையும் கணக்குலே எடுத்துக்காம, படம் வெளிவந்தவுடனே
அதைப் பார்த்துட்டு ஒரே வார்த்தையிலே, 'படுமோசம் சுமார், பார்க்கலாம்'னு கமெண்ட் அடிச்சுடறதையெல்லாம் இனிமே
நாம நிறுத்தணுமோன்னு என்னை யோசிக்க வைக்குது இந்தப் படம்!

படத்தோட பேர் 'உதயனாணு தாரம்' மலையாளப் படம்!!!!( உதயன்தான் நட்சத்திரம்)

உதயனா வர்றது மோஹன்லால், ராசப்பன் நம்ம சீனிவாசன், மதுமதி வந்து மீனா, தயாரிப்பாளரா முகேஷ் இப்படி
எல்லோருமே நல்லாப் பண்ணியிருக்காங்க.

ஆனா, பலகாட்சிகள்லே இப்ப சினிமாவுலே இருக்கறவங்களைப் பத்தின நினைவு வர்றதை தவிர்க்கமுடியலை!!!!



Monday, June 27, 2005

இலையிடம் தோற்ற சிங்கம்!!!!

'முயலிடம் தோத்த சிங்கம்'னு ஒண்ணைப் பஞ்சதந்திரக் கதைகளில் படிச்சிருப்பீங்கதானே? இங்கே இலையிடம்
அதாவது பரணி இலை ( ஃபெர்ன் லீஃப்)யிடம் சிங்கம் ஒண்ணு, பந்தயத்துக்கு வந்து தோத்துப் போச்சு!


இங்கிலாந்திலிருந்து 'லையன்ஸ்' குரூப் இங்கே எங்க 'ஆல் ப்ளாக்' டீமோட ரக்பி விளையாட வந்திருந்தாங்க.
இதுதான் இங்கே முதல் போட்டி! கிறைஸ்ட்சர்ச் என்ற ஊருலே நடந்தது!!!! மூணுவாரமா ஒரே அல்லோலகலப்
பட்டுக்கிட்டு இருந்துச்சு ஊரே!

டிக்கெட்டு விலையைக் கூட ரொம்பவே ஏத்திட்டாங்க. சாதாரணமா 30 இருந்தது, இந்த ஸ்பெஷல் கேமுக்கு
60 டாலராகிப் போச்சு. அப்படியும்கூட டிக்கெட்டுங்கெல்லாம் வித்தும் போச்சு!!!!

இங்கிலாந்து எந்த கேமிலே பங்கெடுத்தாலும், 'பாமி ஆமி'( Barmy Army) என்ற கூட்டம் ஒண்ணு அவுங்களைப்
பிந்தொடர்ந்து போய் ஊக்குவிக்கறது ஒரு ட்ரெண்ட் ஆகிப் போச்சு! அதாலே ஒரு பெரிய கூட்டமே எங்க ஊருலே
டேரா அடிச்சிடுச்சு!!! ( பாத்திங்கெல்லே, அங்கங்கே எப்படியெல்லாம் பின் ஊக்கம் கொடுக்கறாங்கன்னு!!!)

ஊருலே எங்கே பார்த்தாலும் தெருமுழுக்கப் புது முகங்கள்!!!! குளிர்காலத்து 'கிரிஸ்ப்'பான காத்துலே முகம்
பளபளக்க கூட்டமாப் போய்க்கிட்டு இருந்தாங்க. 'லையன் சப்போர்ட்டர்ஸ்'னு காமிக்க சிகப்புக் கலர் துணிங்கதான்
பெரும்பாலோர் போட்டிருந்தாங்க! முழுசும் இல்லேன்னாலும் சிலருக்குத் தலையிலேயாவது ஒரு சிகப்புக் குல்லா!!!

இவுங்க ஒரு 'பப்'லே போய் அதை dry out செய்யப்போறோம்னு சொல்லி, வெல்லுவிளிச்சு, அந்தப் பப்லே
இருந்த எல்லா மதுவகைகளையும் குடிச்சுத் தீர்த்துட்டாங்க!!!! அப்புறம் ஒரு சூப்பர் மார்கெட்டுலே நுழைஞ்சு
அங்கே இருக்கற 'சூப்' டின்களையெல்லாம் ஒண்ணுவிடாம வாங்கிகிட்டுப் போயிட்டாங்க!!!!!

இவுங்களுக்காகவே நடைபாதையெல்லாம் வளைச்சுப் போட்டு அங்கங்கே சாப்பாடு, குடின்னு ஹோட்டல்காருங்க
ஏற்பாடுகள் செஞ்சு நல்லா வியாபாரம் ஆச்சு. எல்லா மோட்டல்களும் ஹவுஸ் ஃபுல்!!!!

இத்தனை கலாட்டாக்களுக்கு நடுவிலே கேமும் நடந்து முடிஞ்சது. 21க்கு 3 ன்ற கணக்குலே ஸ்கோர். முந்தாநாள்
ஜெயிக்கப்போறொமுன்ற மிதப்புலே குடிச்சவுங்க எல்லாம் தோத்துப் போயிட்டொம் ன்ற மனவருத்தத்துலே
இன்னைக்குக் குடிச்சிக்கிட்டு இருந்தாங்க!!!!!

'வாழ்க்கைக்கு விளையாட்டு'ன்ற நிலையிலே இருந்து 'வாழ்க்கையே ஸ்போர்ட்ஸ்'னு ஆகிப் போன எங்க ஆட்களும்,
ஜெயிச்சுட்டோமுன்ற சந்தோஷத்துலே தண்ணியிலே மூழ்கினாங்க!!!!

எனக்கே இப்ப பிரிட்டிஷ் ஆளுங்களுக்கும், இங்கெத்த கிவி ஆட்களுக்கும் வித்தியாசம் தெரிஞ்சது!!!! எப்படின்னா,
தலையை ஒழுங்காப் பின்னி ரெட்டைச் சடை போட்டுக்கிட்டு திரிஞ்ச பொண்ணுங்கெல்லாம் பிரிட்டிஷ்! தலைவிரி
கோலமா ( கையிலே சிலம்பு ஒண்ணுதான் பாக்கி!)இருந்தவுங்க எங்க சனம்!!!!!





Sunday, June 26, 2005

ஊருக்குப் போறவங்களே!!!!

இன்னைக்குத்தான் ஒரு விஷயம் தெரியவந்துச்சு! ஊருக்குப்போறவங்க யாரா இருந்தாலும்
கவனமா இருக்கணும்!!



அது என்னன்னா, ஏர்போர்ட்லே, இம்மிகிரேஷன் லே நம்ம பாஸ்போட்டைக் கொடுக்கறோம்
இல்லையா, ஸ்டாம்ப் செய்யறதுக்கு, அப்ப 'நைஸா' அதுலே இருந்து ஒரு தாளைக்
கிழிச்சுடறாங்களாம்!!!அப்படி ஆயிடுச்சுன்னா அந்த பாஸ்போர்ட் காலாவதியானதுக்கு
சமானமாம்! அது செல்லாததாலே நம்மை நாட்டுக்குள்ளே விடமாட்டாங்களாம்!!!

'இது என்னடாப் புதுக்கதை' ன்னு பார்த்தா......

எல்லாம் என்.ஆர்.ஐ.ங்க கிட்டே இருந்து காசு புடுங்கறதுக்காம்!!!!!!

http://www.hindustantimes.com/news/7598_1411209,000500020002.htm?headline='Indians~using~passports~to~harass~NRIs'

இதுதான் ஆட்டைக் கடிச்சு, மாட்டைக் கடிச்சு.........ன்னு ஒரு பழஞ்சொல்லு இருக்கே அதுதான்போலெ!!!!

என்னா அக்கிரமம் பாருங்க!!!!

எல்லோரும் கொஞ்சம் கவனமா இருங்க!!! பாஸ்போர்ட்டைக் கொடுத்துட்டு, நம்ம ஊராச்சேன்னு அங்கே இங்கே
பராக்குப் பார்த்துக்கிட்டு நிக்காதீங்க!!!

Saturday, June 25, 2005

என் செல்ல( செல்வ)ங்கள்!!! பகுதி 12

'பட்டிக்காட்டான் முட்டாய்க் கடையை மொறைச்சுப் பார்த்தா மாதிரி' ன்ற பழஞ்சொல்லு
கேட்டிருப்பீங்களே! அதேதான்!!!! இந்த ஊருக்கு வந்தபிறகு, மொதமுறையா ஒரு
'சூப்பர் மார்கெட்'க்கு வீட்டுச் சாமான் வாங்கப் போயிட்டு, ஒரு ஐலில்( இதுக்குத் தமிழ்
என்னவா இருக்கும்? முத்து உதவி செய்யுங்க) ரெண்டு பக்கம் நெடூக இந்தப் பசங்கள்
சாப்பாடா இருக்கறதைப் பார்த்துட்டுத்தான் அப்படியே பிரமிச்சு நின்னுட்டேன்!!!!


நம்ம வீட்டுலே 'செல்லப் பிராணிகளை பசங்கன்னு சொல்றது வழக்கம்!!!

மனுஷங்களுக்குக் கூட இத்தனை வகைவகையான சாப்பாடு இல்லே! ஹைய்யோடா....
என்னன்ன மாதிரி காம்பினேஷன்!!!! இதுமட்டுமா, அதுங்க கழுத்துக்குபோடற பட்டைங்க,
உடம்புலே இருக்கற பூச்சிங்களைக் கொல்ல மருந்து, அப்புறம் விளையாட்டுச் சாமான்கள்,
சாப்பாடு வைக்கவும், குடிக்கத் தண்ணி வைக்கவும் அழகழகான பாத்திரம், தட்டு, கிண்ணம்,
போரடிச்சா ச்சும்மாக் கடிச்சுக்கிட்டு இருக்கறதுன்னு சிலது, இப்படி ஏகப்பட்ட சமாச்சாரங்க!!!

கடைக்கு வர்றவங்களொட தள்ளுவண்டியிலே, அநேகமா எல்லாத்துலேயும் ரெண்டு டின் பூனை
நாய் சாப்பாடு இல்லாமலில்லே!!! சிலபேரு, பூனை 'அப்பியிட' ஒரு பெரிய சாக்குப்பைலே
'கேட் லிட்டர்' வாங்கிக்கிட்டும் போவாங்க. லிட்டர் ட்ரே, அதுக்குன்னு ஒரு ஸ்பெஷல் ஸ்கூப்பு
இப்படி உபச்சார சாதனங்கள் வேற!!!!

மூலைக்கு மூலை நம்ம ஊருலே முக்குக்கடை இருக்கறாப்போலெ, இங்கே ஊரெல்லாம் அங்கங்கே
'வெட்னரி க்ளினிக்'!!!! அங்கே பூனையைத் தூக்கிக்கிட்டுப் போறதுக்குன்னு வலைக்கம்பி போட்ட
கூண்டு வேற கிடைக்குது!!! இங்கெல்லாம் 'பெட் ஷாப்'ன்றது ஒரு பெரிய பில்லியன் டாலர் கச்சோடம்!!

இப்ப நாங்க வேற வீடு மாத்தி வந்துட்டோம். இங்கெல்லாம் புள்ளைங்களுக்கு 5 வயசானதும்
பள்ளிக்கோடத்துலே போட்டுறணும். சரியா அஞ்சாவது பொறந்த நாளுக்குக் கொண்டுபோய்
சேர்த்துடணும். சட்டமே இருக்கு! அதனாலே 'ஸ்கூலு'க்குப் பக்கமா வீடு பாத்துக்கிட்டு வந்துட்டோம்!
மகளுக்கு அடுத்த மாசம் அஞ்சாவது பொறந்தநாள் வருதே!!!!

இந்த வீட்டுலேயும், நாங்க வந்த சில நாளுலேயே, கறுப்பும், வெள்ளையுமா ஒரு பூனை வர ஆரம்பிச்சது.
எங்கிருந்துதான் வருதுங்களோ? எப்படித்தான் தெரியுதோ நம்மைப் பத்தி? ச்சும்மா வாசல்லே வச்சு
விளையாடறதுதான்!!! உள்ளெகிள்ளெ கிடையாது!!! அதுக்கு 'ஸ்பாட்'ன்னு பேரு வச்சாச்சு.

இப்படி இருக்கச் சொல்ல, நம்ம பக்கத்து வீட்டுக்கு புதுசா ஒரு குடித்தனம் வந்துச்சு. குடித்தனம்ன்னா
குழந்தை குட்டியெல்லாம் இருக்குமுல்லெ! இங்கெயும் இருந்துச்சு! 13 பசங்க!!!!! பெரீய்ய குடும்பம்!
அம்மா பேரு ஃபியோனா. அவுங்க ரெண்டு மகளுங்க, குரங்கணா, கறுப்பு மொட்டை. ஒவ்வொண்ணுக்கும்
நாலு நாலு குட்டிங்க! இதில்லாம ஹாஃப் க்ரோன் அளவுலே, ஜிஞ்சர், டைகர், ப்ளாக்னு மூணு! எல்லாம் நாங்க
வச்ச பேருங்கதான்!!!!

ஃபியோனா ஒரு 'கேட் லவ்வர்'!!!! காலையிலே ஏழரைக்கு வேலைக்குப் போனா, ராத்திரி பத்தரைக்கு
வருவாங்க போலெ. ஏன்னா அந்த நேரத்துக்குத்தான், பூனைங்களுக்குச் சாப்பாடு கொடுக்கறதுக்காக
'பூஸ் பூஸ், கிட்டி கிட்டி'ன்னு கூப்புடற சத்தம் கேக்கும். ஒரு அரைமணி நேரத்துக்கு இப்படிக் கூப்புட்டுக்
கிட்டே இருப்பாங்க. இதுங்கெல்லாம்தான், நம்ம வீட்டுலே சாப்புட்டுட்டு 'மிதப்புலே' கிடக்குதுங்களே!
லேசுலே போகாதுங்க.

நம்ம வீட்டுக்கு முன்னாலே இருக்கற 'சன் டெக்'லே ஒரு அம்மாவும் நாலு புள்ளைங்களும், பின்னாலே
தோட்டத்துலே இன்னொரு அம்மாவும் அதோட நாலு புள்ளைங்களுமா அப்படியே கூட்டமாக் கிடப்பாங்க.
பால் கொடுக்கற தாய் இல்லையா? பசிக்காதா? நாம அந்தப் பக்கம் போறப்ப வர்றப்பெல்லாம் பாவமா
மூஞ்சியை வச்சுக்கிட்டு, ஆஆஆஆன்னு வாயைத் தொறந்துகிட்டுச் சின்னதாக் குரல் ரொம்ப எழும்பாமக்
கத்திக்கிட்டு ஒரு பார்வை பாக்கறப்ப ,எப்பேர்ப்பட்டக் கல்மனசுன்னாலும் அப்படியே கரைஞ்சுடும்!

அந்த ஹாஃப் க்ரோன் மூணும் அதும் பாட்டுலே விளையாடிக்கிட்டு இருக்கும். கதவு திறந்து இருந்தா
அப்படியே நைஸா வீட்டுக்குள்ளேயும் வந்துரும்! முதல்லே பாவமா இருக்கேன்னு பிஸ்கெட் மட்டும்
போட ஆரம்பிச்சேன். சொல்ல மறந்துட்டேனே, இந்த பூனை நாய்ங்களுக்குன்னே விதவிதமான
பிஸ்கெட்டுங்க வேற கடைகளிலெ குவிஞ்சு கிடக்கும்!! வேற வேற ஷேப், சைசுன்னு ஒரேஅட்டகாசம்!!!!

எவ்வளவு போட்டாலும் நொடியிலே தின்னுடுங்க! எங்க இவர் முதல்லே கத்திக்கிட்டு இருந்தார், 'துரத்து
அதுங்களை'ன்னு!! அந்தப் பரிதாபக்கேஸ் மூஞ்சுங்களைப் பார்த்ததும், 'ஏதாவது இருந்தாக் கொண்டாந்து
போடும்மா'ன்னு சொல்ற லெவலுக்கு வந்துட்டார்!!! ஆனாலும் செலவு ஏறிக்கிட்டேப் போறதைப் பார்த்துட்டு,
அந்த ஃபியோனாகிட்டே சொல்லலாமுன்னு பார்த்தா, ஆளைப் புடிக்கறதே கஷ்டமால்லெ இருக்கு!

குரங்கணாவோட பசங்க அழகுன்னா அப்படி ஒரு அழகு. பச்சை, நீலம்னு கண்ணூங்க வச்சுக்கிட்டு
அருமையான அழகோட இருந்துச்சுங்க. மகளுக்கு ஸ்கூல் நேரம் போக இதுங்களோட விளையாடறதே
முக்கிய வேலையாப் போச்சு!

இப்படியே கொஞ்ச நாள் போய்க்கிட்டு இருந்துச்சு! ஒரு நாள் நான் வீட்டு வேலை செஞ்சுக்கிட்டே
தளர்ந்து போய் தற்செயலா தலை நிமிந்து ஜன்னல்லே பாக்கறென், ஃபியோனா அவுங்க வீட்டுக்குள்ளே
போறாங்க.

'தளர்ந்துபோயி'ன்னு ஏன் சொல்றேன் தெரியுதா? இங்கே வந்ததிலிருந்து, வீட்டுவேலைக்கு உதவியாளர்
யாரும் கிடையாது! 'தன் கையே தனக்குதவி'தான். ஒரு மணி நேரத்துக்கு குறைஞ்சது 10 டாலர் கூலி
கொடுத்தா, ஆளு கிடைக்கும். நமக்குக் கட்டுப்படி ஆக வேண்டாமா? வெள்ளைக்காரங்க பாத்திரம்
தேய்க்கிறதே, ( எங்கெ தேய்க்கிறாங்க?) ஒரு மாதிரி இருக்கும். சிங்குலே தண்ணீ நிறைச்சு அதுலே
சோப் திரவத்தை ஊத்தி, பாத்திரங்கைெள அதுலே முக்கி முக்கி எடுத்து வச்சிருவாங்க. அப்புறம்
ஒரு 'டீ டவல்'லே துடைச்சு காய வச்சுருவாங்க. எனக்கு அதைப் பார்த்தாலே பத்திக்கிட்டு வரும்!!!!
அதனாலெ எல்லாம் 'நாமே'தான்!!!

கதவைத் திறந்துக்கிட்டு ஓடுறேன், ஃபியோனாவைப் பாக்க!!! சொன்னேன், 'இந்த மாதிரி நிறைய
பூனைங்களை வச்சுக்கிட்டு இருக்கே! அதுவும் அதுங்க பசியிலே நம்ம வீட்டையே சுத்திச்சுத்தி
வருதுங்க. அதுங்களுக்கு நேரத்துக்குச் சாப்பாடு போட ஏதாவது ஏற்பாடு செய்'யுன்னு!!!!
அதுக்கு அவுங்க சொன்ன பதில் என் நெஞ்சுலே பால் வார்த்துச்சு!

இங்கே இடம் பத்தலைன்னு 'கன்ட்ரி'க்குப் போறாங்களாம். இத்தனை பூனைங்களுக்கும் சாப்பாடு
கொடுக்கணுமேன்னுதான் ரெண்டு இடத்துலே வேலை செய்யறாங்களாம். அதாலேதான் ராத்திரி
வீடு வர லேட்டாகுதாம்! அங்கே போயிட்டா, அவுங்க சிநேகிதி பக்கத்து வீட்டுலே இருக்காங்களாம்.
அவுங்களும் நிறையபூனை வச்சிருக்காங்களாம். அவுங்க பாத்துப்பாங்களாம்!!!

'எப்பப் போறீங்க'ன்னு கேட்டதுக்கு, 'நாளைக்குக் காலி செய்யறேன். அதுதான் சாமான்கள் எல்லாம்
'பேக்' செய்ய இப்ப வந்தேன்'னு சொன்னாங்க!!!!! இந்த நல்ல விவரத்தை எங்க வீட்டுலே மகளுக்கும்,
இவருக்கும் சொல்லி, 'நாளையிலே இருந்து இந்தப் பூனைங்க வராது. கிராமத்துக்குப் போகுதுங்க'ன்னு
இருந்தேன்.

மறுநாள் பொழுது விடிஞ்சது. வாசல்லே யாரும் இல்லே! அமைதியா இருந்துச்சு! மகளைக் கொண்டுபோய்
பள்ளிக்கூடத்துலே விட்டுட்டுத் திரும்பிவந்தேன். பின்பக்கம் இருக்கற கொல்லைப்புற வாசற்படியிலே
மூணுலே ஒண்ணான 'ப்ளாக்' சுருண்டு படுத்துக்கிட்டு இருக்கு!!!!!

பக்கத்து வீட்டு ஜன்னல்கள் எல்லாம் திறந்து கிடக்கு. யாரோ நடமாடறாங்க. அங்கே ஓடுனேன். அந்த வீட்டு
ஓனர் வீட்டைச் செக் பண்ணிக்கிட்டு இருக்கார். விவரம் சொல்லி, ஃபியோனா வோட ஃபோன் நம்பர்
தெரியுமான்னு கேட்டா, அவருக்குத் தெரியாதாம். இத்தனை பூனைங்க இருக்கற விவரம் கூட அவருக்குத்
மொதல்லே தெரியாதாம். அப்புறம் தெரியவந்ததும்தான், வீட்டைக் காலி செய்யச் சொல்லிட்டாராம்!!
'சிட்டிக் கவுன்சிலு'க்குத்தெரிஞ்சா வம்பாயிருமாம்!!!!

இப்படியாக இந்த 'ப்ளாக்' நம்ம வீட்டுப் பூனையாயிருச்சு. அதுக்கு வேற பேரு வச்சு 'சுவீகாரம்'
எடுத்துக்கலாமுன்னு தீர்மானிச்சோம். இதுவும் நாங்க வச்ச பெருதான். ஆனாலும் வெள்ளைக்காரப்
பேரா இருக்குலே?

'கற்பகம்'னு நாமகரணம் ஆச்சு! கற்பு, கற்புன்னு கூப்பிட்டா வேடிக்கையா இருக்கேன்னு அதுக்கு
கப்புன்னு ச்செல்லப்பேரும் வச்சோம்!!!


இன்னும் வரும்!!!!






Thursday, June 23, 2005

என் செல்ல( செல்வ)ங்கள்!!! பகுதி 11

வலைப்பதிவு படிக்கற ஜனங்கள் கூடிக்கிட்டேப் போறாங்கன்னு ஒரு செய்தி கிடைச்சது!
இதுலே புதுசா நம்ம 'வீட்டுக்கு வாரவங்களுக்கு' நம்ம பழைய பிரதாபத்தைப்பத்தித்
தெரிஞ்சுக்கணுமாம். இதைத்தான் 'பொதுமக்கள் வேண்டுகோளை முன்னிட்டு'ன்னு
சொல்றது போலெ!!!!



அதனாலே இப்ப அங்கே எழுதிக்கிட்டு இருக்கற தொடரை,இனிமெ இங்கெயும் போட்டுறலாமுன்னு
நினைச்சேன். இது வரைக்கும் என்ன நடந்ததுன்னு தெரிஞ்சுக்க விரும்பற(!) மக்கள் இதுலே
http://www.maraththadi.com/AuthorArticle.asp?lngAuthorId=166
படிக்கலாம்!

இந்த 10 பகுதியை ஒவ்வொண்ணா இங்கெயும் போட்டு ஒரு 10 நாளை ஓட்டியிருக்கலாம்.
ஆனா, இந்த பொல்லாத மனசாட்சி ஒத்துக்க மாட்டேங்குதே!!!!

திடீர்னு பாதியிலே இருந்து தொடங்கறதை மன்னிச்சுடுங்க!!!


********************************************************************


என் செல்ல( செல்வ)ங்கள்!!! பகுதி 11


மறுநாள் பொழுது நல்லபடியா விடியலை(((-:

நம்ம ராக்கியும் சோஃபியும் போயிட்டாங்க! புள்ளைங்க மட்டும் புதருக்குள்ளெயே இருக்குதுங்க. ச்சின்னதாக்
குலைக்கற சத்தம் மட்டும் அப்பப்பக் கேக்குது.

சாப்பாடெல்லாம் அங்கெ கொண்டு போய் வச்சிட்டு வரேன். தயங்கித் தயங்கி வந்து சாப்பிடுதுங்க.
பாக்கவே பாவமா இருக்கு! ஒரு வாரம் இப்படியே போச்சு. அதுக்கப்புறம் நம்ம வீட்டு ஒனரோட
சொந்தக்காரங்க வந்திருந்தப்ப, இதுங்களைப் பார்த்துட்டு அவுங்களுக்கு 'நாய்க்குட்டிங்க
வேணும்' சொன்னாங்க. 'சட்'னு பிடிக்கறது கஷ்டம்ன்றதாலே, நாங்களே கொண்டுவந்து தர்றதாச்
சொன்னோம்.

அங்கே பல இந்தியக்குடும்பங்கள் வசிக்கறதே கரும்புக்காட்டுக்கு மத்தியிலேதான். 99 வருசம்
ஒப்பந்தம் போட்டுக்கிட்டு, நேடிவ் ஃபிஜியன்களிடமிருந்து இடத்தை வாங்கி அங்கெல்லாம்
கரும்பு பயிர் போட்டு வளர்ப்பாங்க. பிரிட்டிஷ்காரர்கள் ஆண்ட காலத்திலே இங்கே கரும்புத்
தோட்டத்தில் வேலை செய்யறதுக்காக கொண்டுவரப்பட்டவங்களோட வம்சாவளியினர்தான்
இவுங்கெல்லாம்! காட்டுக்குள்ளேயும் காவல் வேணுமே! அதனாலே எல்லார் வீட்டிலேயும்
அநேகமா ரெண்டு மூணு நாய்ங்க இருக்கும்!

ரொம்பவே கஷ்டப்பட்டு இதுங்களைப் பிடிச்சோம். கொண்டுபோய் கொடுத்துட்டும் வந்தோம்.
அப்பத்தான் இதுங்களை நான் ரொம்பப் பக்கத்துலே பார்த்தேன். சோஃபியோட வகையில்தான்
இருக்குதுங்க. அழகான பட்டுப்போல ரோமம்!!! கண்ணுலே மட்டும் பயம் இருந்துச்சு!!!

இப்பல்லாம் நம்ம ச்செல்லமியாவ் கூடவே இன்னொரு ஜிஞ்சர் பூனை வர ஆரம்பிச்சது! பார்த்தவுடனே
அது 'பையன்'ன்னு என் மனசுக்குப் பட்டது. நல்ல உயரம். ஊளைச்சதையெல்லாம் இல்லாம நல்லா
'ட்ரிம்'மா இருந்தது. கண்ணுலே கறுப்பு முழி மட்டும் பெருசு! அதுக்கு 'வட்டக் கண்ணு'ன்னு பேரு வச்சேன்.

நம்ம பூனைங்க எல்லாம் சுலபமா 'தமிழ்' கத்துக்கிச்சுங்க! 'தமிழ்'லே சொன்னா எல்லாம் புரியுது!!
நம்ம ச்செல்லமியாவ் மட்டும் நித்திய கர்ப்பிணியா இருக்கு. நாலுநாலு குட்டிங்களா போட்டுக்கிட்டு
இருக்கு. அதுங்க யாரும் நம்ம வீட்டுலே வர்றதில்லை. பக்கத்து வீட்டுப் பூணைங்களாச்சே!

இதுக்கு நடுவிலே என் மகள் பிறந்தாச்சு. குழந்தைக்கு ஆறுமாசமானப்ப, நடக்க ஆரம்பிக்கறப்ப
மாடிப்படியிலே விழுந்துட்டா என்ன செய்யறதுன்ற பயத்துலே வேற வீடு மாறிப் போனோம். அதுவும்
மாடி வீடுதான், ஆனா நாம போனது கீழ்த்தளம்!!!! அந்த வீட்டுலே முன்னாலே ஒரு பரந்த புல்வெளி.
அதையொட்டி வேலி. வேலின்னா கம்பியெல்லாம் இல்லை, ஜஸ்ட் ச்சின்னச்சின்ன செடிங்க/மரங்கள்
வரிசை இருந்துச்சு. நம்ம வீட்டுலே இருந்து பார்த்தால் தூரக்க மெயின் ரோடும், அங்கே இருக்கற
நம்ம ஃபேக்டரியும் தெரியும்.ரோடுக்கும் நம்ம வீட்டுக்கும் இடையிலே ஒரே கரும்புக்காடுதான்.

இந்த வீடு இருக்குறது நாங்க முதல்லே இருந்த வீட்டுக்கு நேரே இருக்குற தெருவுலெதான். அதனாலே
நம்ம ச்செல்லமியாவ் தினமும் ரெண்டு மூணு முறை வந்து போய்க்கிட்டுத்தான் இருந்துச்சு!
அதுக்கப்புறம் நம்ம பக்கத்து வீட்டு( ரெண்டு பக்கமும்) நாய்ங்களொட எதாவது தகராறான்னு தெரியலை,
வரவு நின்னு போச்சு!

ஒருநாள் வாசலிலே ஒரு புது நாய் வந்து உக்காந்திருந்துச்சு. விரட்டலாமுன்னு பார்த்தா, நொண்டிக்கிட்டே
ஓடுது! ஐய்யய்யோ, பாவம்! இருந்துட்டுப் போட்டுமுன்னு விட்டேன். எங்க இவர் அதை பார்த்துட்டு
வீராவேசமா விரட்டப் போனார். அப்பத்தான் தெரியுது அது 'புள்ளைத்தாய்ச்சி'ன்னு. அப்படியே அதுவும்
இடம் புடிச்சிருச்சு. ஆனா இப்ப நாய்ங்கெல்லாம் வீட்டுக்கு வெளியிலேதான் !!!!

பிரிட்டிஷ் பெயிண்ட்ஸ் விளம்பரம் வருமே, அதுலே இருக்கறதைப் போல ஒண்ணும் வீட்டுக்கு வர ஆரம்பிச்சது.
இவ்வளவு அழகான ஃபாரீன் நாயை யாரு , வேணாமுன்னு விட்டான்னு பார்த்தா, அதுக்கும் 'வீடு' இருக்கு!!!
ஆனாலும் ச்சும்மா நம்ம வீட்டை வட்டம்போடுதுங்க!!!

இதுக்குள்ளெ மகளுக்கும் பேச்சு வரத்தொடங்குச்சு. மழலையிலே இந்த நாய்ங்களையெல்லாம்
கூப்புடறது கேக்க சுகமா இருந்துச்சு.மகளை ஸ்ட்ரோலர்லே உக்கார வச்சவுடனே இதுங்க
எல்லாம் வந்து அவளைச் சுற்றி உக்காந்துக்கும்!!!!

சடைச்சு, நொண்டி, ப்ரவுணு,ஸ்கேம்பின்னு கூட்டம் கூடிக்கிட்டே போகுது!!!!

நொண்டிக்கு நாலு புள்ளைங்க! அதுலே ஒண்ணு, எங்க இவரோட கார்லே அடிபட்டுச் செத்துருச்சு.
கெட்ட நொண்டி! புள்ளைங்களை ஒழுங்காப் பாத்துக்கத் துப்பில்லேன்னு அதுக்குத்தான் சரியான திட்டு!

இவருக்கு மனசுக்கு ரொம்ப 'பேஜாரா'ப்போச்சு!!! மறுநாளே அதையும் அதோட குடும்பத்தையும்
ஃபேக்டரியிலே வேலை செய்யற ஒருத்தர் வந்து கொண்டு போயிட்டாரு.

ஃபிஜியிலேயும், மிருகங்களோட பாடு இந்தியா மாதிரிதான்! தனி கவனிப்பு, மிருக வைத்தியம் எல்லாம்
கிடையாது!!!! ஜனங்க இந்தியாவிலிருந்து வந்தவங்கதானே!!! ச்செல்லமா வளர்க்கறதுன்ற பேருக்கே
இடமில்லே!!! அப்பப்ப அங்கங்கே சாப்பிட்டுக்கிட்டுத் தெருவிலே சுத்திக்கிட்டு இருக்கறதுகள்தான்
அதிகம்!!!!

நாமும், நமக்குன்னு நாய் வச்சுக்கலை. வீட்டுக்கு வர்றதுங்களுக்கு மட்டும் சாப்பாடு போட்டுக்கிட்டு
இருந்தோம்! ஆறு வருசத்துலே எத்தனை எத்தனை நாய்கள்ன்றதுக்குக் கணக்கே இல்லாமப் போச்சு!


ஃபிஜி ஒரு 'ட்ராப்பிகல் ஐலேண்ட்' என்றபடியாலே அடிக்கடி புயல் வந்துரும்!!!! அப்ப மட்டும் எல்லா
நாய்களையும் வீட்டுக்குள்ளே வச்சிருவோம். புயல் அடங்கறவரை, மிரண்ட பார்வையோட, முக்கிக்கிட்டு
முணங்கிக்கிட்டு இருக்கும் இதுங்கெல்லாம்!!!! வெளியே விட்டதும், எங்கே பாத்தாலும் தண்ணி ரொம்பி
ஓடிக்கிட்டு இருக்கறதைப் பாத்தும் பயந்துடுங்க. புயலும் மழையும் சேர்ந்து ஊரையே வெள்ளக்காடா
ஆக்கிரும். தெருவிலே எல்லாம் படகுலே ஆளுங்க போய், சேதத்தைப் பார்வையிடுவாங்கன்னா பாருங்க,
எவ்வளவு வெள்ளப் பெருக்குன்னு! நல்ல வேளை, நம்ம வீடு இருந்தது ஒரு மேட்டுப் பகுதி!!!!



இப்படி இருக்கறப்பதான் நாங்க ஃபிஜியை விட்டுட்டு, இங்கே நியூஸிக்கு வந்து சேர்ந்தோம்.

முதல் பகுதியை மறுபடிப் படியுங்க. இங்கிருந்துதான் இது ஆரம்பிக்குது!

வந்த ரெண்டாம் நாளே குடியிருக்க இடம் கிடைச்சிட்டது! கூடவே ஒரு பூனையும் வீட்டுக்குள்ளே
வந்துருச்சு! கொழுகொழுன்னு அழகா இருக்கு! ரொம்பப் பதுசாவந்து ஜன்னல்மேலே ஏறி, கண்ணாடிக்குப்
பக்கத்தில் உக்காந்து குளிருக்குச் சுகமா வெய்யில் காயுது!!!!

அதோட பூர்வீகம் என்னன்னு கொஞ்ச நேரத்துலேயே தெரிஞ்சுடுச்சு. பின்பக்கத்துலே இருக்கற
மோட்டல் பூனை! அதுக்கு 'மோட்டல் மியாவ்'னு பேரு வச்சுட்டேன்.

எல்லா நாய்களையும் விட்டுப் பிரிஞ்சுட்ட மகளுக்கும்( எனக்குமே!) ஒரு கூட்டாயிருக்கட்டுமேன்னு
ச்சும்மா இருந்துட்டேன். அதுவும் சமத்தா சாப்பாட்டு நேரத்துக்கு 'மோட்டலுக்கு' வேலியைத் தாண்டிக்
குதிச்சுப் போயிரும். பகல் முழுக்க எங்களொட இருக்கும்!!!! அதுகூடவே மோட்டல் ஓனரோட பொண்ணும்
அநேகமா என் மகளொட வயசுதான் இருக்கும், வர ஆரம்பிச்சது!!!!

மத்தியானம் வந்துக்கிட்டிருந்த அந்தப் பொண்ணு, கொஞ்ச நாளுலேயே காலையிலும் வரஆரம்பிச்சது.
அப்புறம் அப்புறம் பொழுது விடிஞ்சவுடனே வந்துரும். குளிருக்குப் பயந்துக்கிட்டு, நாங்க எல்லாம்
காலையில் ஏழரைக்கு மேலேதான் எந்திரிப்போம். இந்தப் புள்ளைக்குமட்டும் குளிரு இல்லை போல.
உள்ளூர் ஆளுங்களாச்சே! குளிரு பழகியிருக்கும்தான், அதுக்காக ஆறு, ஆறரைக்கு வந்து வாசக்
கதவை 'தடதட'ன்னு தட்டுறது கொஞ்சம் ஓவராயில்லை!

'மக தூங்கிக்கிட்டு இருக்கா. அதனாலே அப்புறமா விளையாட வா'ன்னு சொன்னாலும் கேக்காது.
'நான் உக்காந்து டி.வி. பாக்கறேன். உங்க மக எழுந்திரிக்கும்போது எழுந்திரிக்கட்டும்'னு பதில்
சொல்லுது. இது என்னடா 'சல்லியமா'ப்போச்சே!!!!

தினமும் விளையாட வருதேன்னு 'சாக்லேட்' வாங்கி வச்சுக்கிட்டு ஒண்ணு கொடுக்கறதும் வழக்கமா
இருந்தது. ஒரு நாள் வீட்டுலே 'சாக்லேட்'ஏதும் இல்லெ. என்னடா செய்யறது? ச்சின்னப்பொண்ணாச்சேன்னு
யோசிக்கறேன். அப்பப் பாத்து மகளும் எழுந்திரிச்சு 'பிரேக்ஃபாஸ்ட்'க்கு ரெடியாயிட்டா. அன்னைக்குக்
காலையிலே நம்ம வீட்டுலே டிஃபன் பூரி. அதையே அந்தப் பொண்ணுக்கும் குடுத்தேன்.

தட்டைக் கையில் வாங்கிக்கிட்டுக் கொஞ்சநேரம், அந்தப் பூரியை முறைச்சுப்பார்த்துக்கிட்டு
உக்காந்திருந்த பொண்ணு, 'நான் வீட்டுக்குப் போறேன்'ன்னு சொல்லிட்டு தட்டை மேஜைமேலே
வச்சுட்டு ஓடுச்சு. அதுதான் நம்ம வீட்டுக்கு அதோட கடைசி விஜயம்!!!!!!

அப்புறம்தான் நினைச்சேன், இந்தப் பூரியாலே அந்தப் பொண்ணை ஓட்டமுடியுமுன்னு முன்னேயே
தெரிஞ்சிருந்தா , எப்பவோ இந்தப் பூரியைச் செஞ்சிருக்கலாமேன்னு!!!!!!


இன்னும் வரும்!!!!!

Tuesday, June 21, 2005

ச்சின்ன நாள் !!!!

அதென்ன ச்சின்ன நாள்? அப்பப் பெரிய நாள்னு ஒண்ணு இருக்கா? இருக்கே!!!!

அது ஒண்ணுமில்லைங்க. 'ச்சின்னப் பகல்'னு எழுத நினைச்சேன். அதை யாராவது
அவசரத்துலே 'ச்சின்னப் பயல்'னு படிச்சிட்டாங்கன்னா 'சண்டை'வந்துருமுல்லெ?

இன்னைக்கு என்னா தேதின்னு பாருங்க! ஜூன் மாசம் 21. உலகத்தோட தெற்குப்
பகுதிக்கு இன்னைக்குப் பகல் வெளிச்சம் ரொம்பவே குறைவான நாள்!!!


Shortest Day !!!! அப்படின்னு சொல்றாங்க. பூமி உருண்டை தன்னைத்தானே சுத்திக்கிட்டு
அப்படியே சூரியனையும் சுத்துதுன்னு சொல்றாங்கல்லே! அதுலே மேல்பக்கம் சூரியனை நோக்கிச்
சாஞ்சிருந்தா அங்கே வெய்யில் காலம் னு இருக்கறப்ப, கீழ்ப்பாகம் சூரியனில் இருந்து தள்ளிப்
போயிருதுல்லே, அது குளுர் காலமுன்னு ஆகிப் போச்சு!

ஐய்யோ, உங்களையெல்லாம் என்னான்னு நினைச்சுக்கிட்டு இப்படிப் பச்சப் புள்ளைங்களுக்குச்
சொல்றமாதிரி சொல்லிக்கிட்டு இருக்கேன்? சரி, 'பெரியவ சொன்னா பெருமாள்சொன்ன மாதிரி'ன்னு
நினைச்சுக்குங்க.

குளுர் காலத்துலே சூரியனைப் பாக்கறதே அரிதாயிருது. அதுலே, ஐய்யா காலையிலே ரொம்ப லேட்டாத்தான்
வருவாரு. சாயந்திரமும் சீக்கிரம் போயிருவாரு! பல சமயத்துலே வானத்துலே 'நிலா' மாதிரி ச்சும்மா கிடப்பாரு!
அதே சமயம், நிஜமான நிலாவும் கொஞ்சம் தள்ளி நின்னு வேடிக்கைப் பார்த்துக்கிட்டு இருக்கும்! எது யாருன்னு
நாங்க குழம்பறதும் உண்டு!!!!

சாயந்திரம் 5 மணிக்கு முன்னாலெயே இருட்ட ஆரம்பிச்சுடறதாலே இங்கெ நாங்கெல்லாம் குளிர் காலம்
வந்தவுடனேயே சமூக விரோதிங்களாட்டம் ( ஆமாம், anti social தமிழ்லே என்ன?) யாரும் யாரையும்
கண்டுக்காம, யார் வீட்டுக்கும் போகாம வேலை முடிஞ்சு வந்தவுடனே கூட்டுக்குள்ளே முடங்கிடுவோம்!!!

அப்புறம் வசந்தகாலம் வந்து( என்னாத்தை வசந்த காலம்? அதுவும் நமக்குக் குளுர் காலத்துலெ சேர்த்திதான்!!!)
கோடை ஆரம்பிச்சாவுட்டுத்தான் 'என்ன நல்லா இருக்கீங்களா?'ன்னு கேட்டுக்கிட்டு போக்குவரவு எல்லாம்
ஆரம்பிக்கும்.

இங்கே கோடையிலே வெய்யில், வெய்யில்ன்னா வெளிச்சம் ராத்திரி ஒம்போது, பத்துவரையும் இருக்கும்.
அதுதான் கொஞ்சம் கொஞ்சமாச் சுருங்கிக்கிட்டே வந்து, ஒருநாள் ஒரேடியாச் சுருங்கி, மறுநாளிலிருந்து
மறுபடிக் கொஞ்சம் கொஞ்சமா வளர ஆரம்பிக்கும். இந்த சுழற்சியிலே இன்னைக்கு பகல் பொழுது
மிகவும் குறைஞ்ச நாள்!

இந்த நாளை நாங்க எப்பவும் கொண்டாடிடுவோம். ஏன்னா, நாளையிலே இருந்து இருட்ட நேரமாகுமில்லெ!!!!

எந்த மாதிரிக் கொண்டாட்டமா? அட, ஒரு பாயாசம் செஞ்சா அது கொண்டாட்டத்துலே சேர்த்தி இல்லையா?

உலகத்தோட தலைமேலே இருக்கற வடக்கத்தி ஆளுங்களுக்கு இதே நாள் நீண்ட பகல் நாளா இருக்கும்.

நீங்க வேற நாங்க வேறெல்லெ!!!!! எதிரும் புதிருமால்லெ இருக்க வச்சிருச்சு காலம்!!!!

எங்களுக்கு நீண்ட பகல் வர்றது டிசம்பர் 21க்கு. வோ தின் படா தின் ஹை!!!!!


கொண்டாட்டமுன்னு சொன்னதும் இன்னொண்ணும் நினைவுக்கு வருது. வர்ற சனிக்கிழமை ஜூன் 25
எங்களுக்கு 'மிட் வின்டர் கிறிஸ்மஸ் டே'!!!!

அது என்னன்னா, கிறிஸ்மஸ் பண்டிகையின்னாவே பனியில் முழுகிய வீடுகள், குளிர்காலக் கொண்டாட்டமுன்னு
ஒரு எண்ணம் உருவாயிடுச்சுல்லே. அப்படித்தானே வாழ்த்து அட்டைகளில் இருக்கற படங்கள் சொல்லுது!
ஆனா எங்களுக்கு டிசம்பர் மாசம் கோடையாச்சே!


குளிரும், பனியும் இல்லாத ஒரு கிறிஸ்மஸை , கிறிஸ்மஸ்ஸாவே நினைச்சுக்க முடியாதாம்.

அதனாலே?

என்ன அதனாலே? அப்படி விட்டுருவுமா? இல்லே, விட்டுறத்தான் முடியுமா?


அதுக்காக எங்க குளிருலே அதே 25 தேதியை வச்சுக்கிட்டு, சரியா கிறிஸ்மஸ் முடிஞ்ச ஆறாவது மாசம்
இந்த 'மிட் வின்டர் கிறிஸ்மஸ் டே' யை சம்பிரதாயமா 'மிஸ்ஸில் டோ, கிறிஸ்மஸ் புட்டிங், டர்க்கி'ன்னு
வச்சுக் கொண்டாடிருவம்லெ!!!

என்ன, கிறிஸ்மஸ் மரம் மட்டும் இல்லை(-:

அனைவருக்கும் 'ச்சின்ன தின நல்வாழ்த்துக்கள்!!!!!!!!!!

Sunday, June 19, 2005

குள்ளமா வளர்றது எப்படி?

அடடே, வாங்க, வாங்க!!!

எப்படி இருக்கீங்க? போனமுறை பார்த்ததைவிட ரொம்ப இளைச்சுட்டீங்களே!

இப்படி யாராவது நம்மைப் பாத்துச் சொன்னா எவ்வளவு 'திருப்தி'யா இருக்கும்!!!!

இப்ப அடுத்த சீன்!



முதல் வரிதான் இப்பவும். ரெண்டாவதுதான் வேற!

எப்படி இருக்கீங்க? போனமுறை பார்த்ததுக்கு இப்ப ரொம்பக் குள்ளமா இருக்கீங்களே!

இப்பிடிச் சொன்னா எப்படி இருக்கும்?

மனுஷன்/மனுஷி ஒரு வயதுக்கு அப்புறம் உயரமா வளரமுடியாதுன்றது எவ்வளவு நிஜமோ
அவ்வளவு நிஜம் உயரம் குறைஞ்சுக்கிட்டு வர்றதும்!!!!!!

நம்ம ஈஸ்வரி( கற்பனைப் பேருதாங்க!!! இல்லாட்டா பெயர் மாற்றப்பட்டுள்ளதுன்னு கவுரவமாப் போடலாமா?)

அவுங்களுக்கும் அவுங்க கணவருக்கும் கல்யாணமான புதுசுலே வெறும் ரெண்டே ரெண்டு அங்குல
வித்தியாசம் மட்டுமே அவுங்க உயரத்துலே!

புடவையெல்லாம் சல்வாரா மாறிப்போன காலக்கட்டத்திலேதான் இந்த உயரம் குறையறதுன்றது கொஞ்சம்
கொஞ்சமா நிகழ்ந்திருக்கு! அதாலே இதை யாருமே 'சட்'ன்னு கவனிக்கலை!

அப்புறம் எப்பத்தான் கவனிச்சாங்க? கணவரோட பக்கத்துலே நின்னப்பயா?

சொல்றேன், சொல்றேன்!!! ஆமாம். நீங்க எந்தக் காலத்துலே இருக்கீங்க? கல்யாணத்தன்னிக்கு எடுக்கற
ஃபோட்டோவைத்தவிர, சாதாரணமா எப்ப கணவன் பக்கத்துலே 'நின்னு' போட்டோ புடிச்சுக்கறாங்க?

ஃபோட்டோன்னாவே ஒரு 'ஸ்டுடியோ'வுக்குப் போறதுன்ற காலம் மாறிக் கைக் கேமெரா வந்தப்பவே
சம்பிரதாயமான படம் எடுக்கறதுன்றது போயிருச்சுல்லே?

ஃபோட்டோன்னதும் ஞாபகம் வருது, இந்த வாரத் 'திண்ணை'யிலே நம்ம ஷங்கரநாராயணன் 'குடும்பப்
புகைப்படம்'னு ஒரு கதை எழுதியிருக்காரு. போய்ப் படிச்சுட்டு நல்லா சிரிச்சிட்டு வாங்க:-)

இன்னொண்ணுக்கூட ஞாபகம் வருது. நேத்து நண்பர் குழந்தைக்குப் பொறந்தநாள் விழா. ஜஸ்ட் ஒரு வயசே
ஆன பிஞ்சு!!!! எங்களையெல்லாம் கூட்டமாப் பாத்ததும் பயந்திருச்சு போல:-)))

ஒரே அழுகை. அவுங்க அம்மாவுக்குச் சங்கடமாப் போச்சு! அப்புறம் அழுகையை ஒரு மாதிரி நிப்பாட்டிட்டாலும்
அழுத வேகம் தாங்காம ரொம்ப நேரத்துக்கு 'விக்கி'க்கிட்டே இருந்துச்சு புள்ளை!!!!

அப்ப நிகழ்ச்சிக்கு வந்த இன்னொரு நண்பரை, (இவர் இன்னும் கண்ணாலம் கட்டாதவர், பொண்ணு பாத்துக்கிட்டு
இருக்காங்களாம் ஊருலே! ) மற்ற ஒரு நண்பர் கைத்தொலைபேசியிலே படம் புடிச்சு பொண்ணு வீட்டுக்கு
அனுப்பலாமுன்னு நினைச்சு, அவரைப் படம் எடுக்க நிக்க வச்சாச்சு!

முகத்துலே சிரிப்பே இல்லாம கன கம்பீரமா(!) நிக்கறார் நண்பர். நாங்கெல்லாம் சேர்ந்துக்கிட்டு, 'இப்படி ஃபோட்டோ
எடுத்து அனுப்பினா பொண்ணு ஓடிப்போயிரும். நல்லா சிரிச்ச முகத்தோட நில்லுங்க'ன்னு சொல்லிக்கிட்டு
இருந்தோம். நாங்க சொல்லச் சொல்ல ,அவருக்கு முகத்துலே இருந்த கொஞ்சம்நஞ்சம் சிரிப்பும் போயிடுச்சு!
கைகளைக் குறுக்காக் கட்டிக்கிட்டு அட்டென்ஷன்லே நிக்கறார். நாங்கெல்லாம் கலாய்ச்சுக்கிட்டே இருக்கோம்.
வாயை எப்படி வச்சுக்கறதுன்னு யோசிச்சு, சிரிக்கறதுக்கு பிரம்மபிரயத்தனம் செய்றார்.ஆனா சிரிப்புமட்டும் வரலே
அவருக்கு. எங்களுக்கெல்லாம் சிரியோ சிரி!!!! 'நெர்வஸ் ஆக வேணாம். இயல்பா நில்லுங்கோ,'ச்சீஸ்'ன்னு
சொல்லுங்கோ'ன்னு ஆளாளுக்குக் சவுண்டு விடறோம். அசையாம நின்னபடி, குரலுங்க வர்ற பக்கமெல்லாம்
கண்ணைமட்டும் அனுப்பி எங்க 'அன்புக் கட்டளைகளுக்கு' ஆடிக்கிட்டு இருந்தார்!
எப்படியோ ஒருவிதமா அவரைப் படம் புடிச்சாச்சு!

வழக்கம் போல என்னவோ சொல்ல வந்து இப்ப ட்ராக் மாறி எங்கெயோ போய்க்கிட்டு இருக்கேன் பாருங்க!

வெளிநாட்டுக்கு வந்தப்புறம் சேலை கட்டுற பழக்கமே அநேகமா இல்லாமப் போயிருச்சு. ஆனாலும் இருக்கற நல்ல
சேலைங்களை அப்பப்ப ஏதாவது விசேஷங்களுக்காவது கட்டிக்கிட்டுப் போனாத்தானே நம்ம கிட்ட இருக்கற சேலைகளின்
எண்ணிக்கை, கலர், வெரைய்ட்டி எல்லாம் நம்மஆளுங்களுக்குத் தெரியவரும்? அந்த சம்பிரதாயத்தை அனுசரிச்சு
ஒரு நாள் சேலை கட்டிக்கிட்டு ஆளுயரக் கண்ணாடியிலே பார்க்கறாங்க நம்ம ஈஸ்வரி. எல்லாம் சரிதான், ஆனா என்னமோ
சரியில்லாத மாதிரி இருக்கேன்னு பார்த்தா, அட, இந்த உள் பாவாடை என்னாத்துக்கு இவ்வளவு வெளியிலே தெரியுது?

படிக்கிற காலத்துலே, எப்பவாவது இப்படி புடவைக்கு வெளியிலே கொஞ்சம் பெட்டிக்கோட் தெரிஞ்சா, சிநேகிதிகள்
எல்லாம், 'சன் டே இஸ் லாங்கர் தேன் மண் டே'ன்னு கலாட்டா செய்வாங்க!! சரி. இப்பக் கொஞ்சமாத்தானே
தெரியுதுன்னு விடமுடியாம அது ஒரு முழ நீளம், (ச்சும்மா ஒரு பேச்சுக்கு) தெரியுதே!

என்ன காரணமா இருக்குமுன்னு யோசிச்சிட்டு, ரொம்பவே இறக்கிக் கட்டிட்டோம் போலென்னு பார்த்தாச் சரியாத்தான்
இடுப்பிலே நிக்குது! பாவாடை எப்படி வளர்ந்திருக்கும்? என்னவா இருக்குமுன்னு ஒரே குழப்பம்.

வேற ஒண்ணை எடுத்துக் கட்டிக்கிட்டுக் கிளம்பலாமுன்னு பாத்தா அதுவும் அப்படித்தான் இருக்கு. இன்னொண்ணு? அதுவும்
அதே கதை. ஐய்யய்யோ, நாம குள்ளமா ஆகிட்டோம்!!!!! வீட்டுக்காரர்கிட்டே இதைச் சொன்னப்ப அவர் சிரிக்கறார்.
புள்ளைங்களும் சிரிக்குதுங்க. அதெப்படி ஒருத்தர் 'குள்ளமா' ஆவாங்கன்றது அவுங்களுக்குப் புரியலை? ஏன், பாவம்
ஈஸ்வரிக்கே புரியலை!

'கண்ணாலம் கட்டுன புதுசுலே நான், உங்க அப்பாவோட காது உசரத்துக்கு இருந்தேன். ஏங்க, நான் சொல்றது நிசம்
தானே?' புருஷனை சப்போர்ட்டுக்குக் கூப்புட்டாங்க.

அப்பத்தான் அவருக்கும் இது ஞாபகம் வருது! 'ஆமா, இப்ப என் பக்கத்துலே வந்து நில்லு'ன்னார். நின்னு பாத்தா...
என்னன்னு சொல்ல? கழுத்துக்குக் கொஞ்சம் மேலே இருக்கு உசரம்!!!!!

எதுன்னாலும், டாக்டரைப் பாத்துக் கேட்டுக்கலாமுன்னு டாக்டரைப் போய்ப் பார்த்தாங்க. இந்த மருத்துவர் கிட்டே
மொதமொதல்லே போய் (அது ஆச்சு பல வருசங்கள்) இவுங்க பதிஞ்சுகிட்டப்ப, அப்ப இருந்த உயரம், எடை எல்லாம்
சோதிச்சு எழுதியிருந்தாங்கல்லே அது நினைவுக்கு வந்துச்சு. இவுங்க பிரச்சனையைக் கேட்ட டாக்டரம்மா இப்ப
என்ன உயரம் இருக்காங்கன்னு அளந்து பார்த்தாங்க. அவுங்க ஃபைலில் இருந்த உயரத்துக்கும், இப்ப இருக்கறதுக்கும்
சரியா நாலு இஞ்சு கம்மி!!!!!!

அப்புறம் பலவிதமான பரிசோதனைகள் செஞ்சாங்க. இந்த சம்பவம் நடக்கறதுக்கு சில வருசங்களுக்கு முன்னே
நம்ம ஈஸ்வரிக்கு வேற ஏதோ கோளாறாலே கருப்பை நீக்கம் அறுவை சிகிச்சைவேற நடந்திருந்துச்சு.
எல்லாத்தையும் கூட்டிக் கழிச்சுப் பார்த்துட்டு, ஒரு விசேஷ மருத்துவரைப் பார்க்கணுமுன்னு பரிந்துரை
செஞ்சு, இவுங்களும் போய்ப் பார்த்து அங்கேயும் பலவிதப் பரிசோதனை செஞ்சுக்கும்படி ஆச்சு. கடைசியிலே
இப்படி ஆகறதுக்குப் பலவித காரணங்கள் இருக்கு. இவுங்க உடம்புலே 'கால்சியம் சத்து' குறைஞ்சு போச்சுன்னு
சொல்லி அதுக்கு சில மருந்துகளும் எழுதிக்குடுத்து இப்ப சாப்பிட்டுக்கிட்டு வராங்க.


இந்த விவரம் எனக்குத் தெரிஞ்சப்ப, 'இது மற்ற பெண்களுக்குத் தெரியவேண்டியது ரொம்ப அவசியம். இது போல
ஏதாவது பிரச்சனை வந்தா, அதைத் தள்ளிராம, உடனுக்குடன் சிகிச்சை எடுத்துக்கறதுக்கு முக்கியம்'. இதைப் பத்தின
ஒரு விழிப்புணர்வு பெண்களுக்குத் தேவைன்னு தோணிப் போச்சு!!! பொதுவா இப்படி நடக்குமுன்னு நாம
நினைச்சுக்கூடப் பாத்திருக்க மாட்டோம் இல்லையா?

இப்ப எல்லாம் ஈஸ்வரி புடவை கட்டுனா, பெட்டிக்கோட் வெளியே தெரியறதில்லை!!!!! நாலு இஞ்சு மறுபடி
சரியாயிடுச்சான்னுதானே கேக்கறீங்க?

எல்லா உள்பாவாடையையும் நாலு இஞ்சு மடிச்சுத் தைச்சுட்டாங்க!!!!!!! ஆனது ஆச்சு. இனிமேலும் உசரம்
குறைஞ்சுடக்கூடாதுன்றதுதான் இப்பத்துக் கவலை.






Friday, June 17, 2005

பக்கத்தூட்டுக்காரு !!!!

நம்ம பக்கத்து வூட்டுக்காரர் இங்கே ( நியூஸி) விருந்தாளியா வந்திருக்காரு.

'விருந்தும் மருந்தும் மூணுநாளு'ன்னு அவருக்கும் தெரிஞ்சிருக்கும் போல.


எங்க நாட்டு 'அம்மா'கூட பயங்கரவாதம், ஆஃப்கானிஸ்தான் விஷயத்துலே பாக்கிஸ்தானோட
சம்பந்தம் பத்தியெல்லாம் 'விலாவரியா' பேசப்போறாங்களாம்!!!!!

கூடவே, இப்ப வருசத்துக்கு 92 மில்லியன் டாலர்னு இருக்கற வியாபாரத்தை எப்படி
அதிகபடுத்தறதுன்னும் பேசிக்குவாங்களாம்!

கொஞ்சம் பொறுத்து இருந்தால் எல்லாம் விவரமா ரெண்டு நாளைக்குள்ளே
தெரியவரும்!!!!

அதனாலே இப்பத்தித் தேவை, கொஞ்சம் பொறுமை!அடாடா, யாருன்னு சொல்லலேல்ல? எல்லாம் நம்ம 'முஷாரஃப்' தான்!!!!


Wednesday, June 15, 2005

மேயராவே பொறந்தவர்!!!!!

மேயர் பதவின்றது மத்தவங்களுக்கு எப்படியோ, இங்கே நியூஸிலாந்துலே ஒருத்தர்
'மேயர் வேலைதான் செய்வேன், மத்த வேலை செய்ய முடியாது'ன்னு அடம் பிடிச்சுக்கிட்டு
இருக்கார். அதுலே ஜெயிச்சும் காட்டிட்டார்.


வடக்கே சில இடங்களிலே மேயரா இருந்த பிறகு, இன்னும் அங்கே ச்சான்ஸ் இல்லேன்னு தெரிஞ்சதும்
தெற்கே வந்துட்டார். இப்ப நாட்டின் தென்கோடியிலே இருக்கற ச்சின்ன ஊருக்கு மேயரா இருக்கார்!!!!

அவருக்கு 58 வயசாச்சு இப்ப. ஆனாலும் எல்லாத்தையும் ரொம்ப ஸ்போர்டிவ்வா எடுத்துக்கிட்டு
வாழ்க்கை நடத்தறார்.

இவர் ஒரு எழுத்தாளரும் கூட! ஒரு தினப்பத்திரிக்கையிலே 'பத்தி' எழுதியிருக்கார் ஒரு 15 வருஷகால்ம்!!!!
பல புத்தகங்களும் எழுதியிருக்கார். அதுலே பெத்தபேரு வாங்கினது அவருடைய சுயசரிதைதான்.
'புல்ஷிட்& ஜெல்லிபீன்ஸ்'ன்ற தலைப்புலே அந்தப் புத்தகம் வெளிவந்து இங்கே ச்சக்கைப் போடு போட்டுச்சு!!!!

விளம்பரப்படங்கள் சிலதிலும் நடிச்சிருக்கார். தொலைகாட்சி நிகழ்ச்சியான 'Intrepid Journey' வரிசையில்
பங்கெடுத்து, 'போர்னியோ' போய்வந்தது நல்லாத்தான் இருந்தது!

இப்ப என்னன்னா, 'டான்ஸிங் வித் ஸ்டார்ஸ்'ன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக நடனப் போட்டியிலே
ஆடு ஆடுன்னு ஆடிட்டார். இது வாராவாரம் நடந்துக்கிட்டு இருந்தது. நேத்துதான் செமி ஃபைனல்ஸ்
முடிஞ்சது. இதுலேதான் அவர் ஜெயிக்கலை. வேற ரெண்டு பேர் ஃபைனல்ஸ் போறாங்க!!!

இவருக்கு இந்த நிகழ்ச்சியிலே கலந்துகிட்டதுக்காக ஏராளமான பாராட்டுக்களும், அதே அளவு கண்டனங்களுமா
வந்து குவிஞ்சிடுச்சு!
'நீ ஆடறதை விட சாவறது மேல்'னுகூட ஒரு மின்னஞ்சல் வந்துச்சாம்:-))))

மனுஷன் அதுக்கெல்லாம் சளைக்கறவரில்லை!!!!

நல்லதோ கெட்டதோ ஜனங்க வாயிலே (மனசுலே)விழுந்துக்கிட்டே இருக்கணும் இவருக்கு! அந்த ஒளிவட்டத்தை
விடாம புடிச்சுக்கிட்டு இருக்கார்.

இப்ப 'இன்வர்கார்கில்' என்ற ஊருக்கு மூணாவது முறையா மேயராகப் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கார்.

பந்தா எதுவும் இல்லாம சராசரி சாதாரணனா இருக்கறதுதான் இவரோட தனித்தன்மை!!!

இவரோட பேரைச் சொல்லலேல்லெ? இவர்தான் 'டிம் ஷட்போல்ட்'!!!!!

ஆமாம், நம்ம சிங்காரச் சென்னைக்கு 'ஸ்டாலின்'தானே இப்ப மேயர்?






Monday, June 13, 2005

சமீபத்துலே பார்த்த(!) படங்கள்.

குளுர் தொடங்கிட்டது. ரொம்ப அத்தியாவசியமான காரியத்துக்கு மட்டும் வெளியே போறது, வாரது எல்லாம்.
போதாக்குறைக்கு பொன்னம்மான்னு மழை வேற சேந்துக்கிச்சு. வீக்கெண்டு வேற.
வந்துருக்கற படத்தையெல்லாம் எடுத்து வச்சுக்கிட்டு எத்தைப் பாக்கலாமுன்னு நோட்டம் விட்டதுலே
தேறினது இதுங்கதான்!



விமரிசனம் எல்லாம் இல்லை. ச்சும்மா மேலாக ஒரு அலசல். அவ்வளவுதான்!

6'2'' ( கதாநாயகனின் உயரம் மட்டுமல்லன்னு அட்டையிலே இருக்கு! அப்புறம்?)

சத்யராஜ் நடிச்ச படம். நம்ம வலைப் பதிவுகளிலே ரெண்டு வாரத்துக்கு முன்னாலே, 'கால் செண்டர்'லே
வேலை செய்யறவங்க எப்படிப் பேர் மாத்திவச்சுக்கிட்டு, 'அமெரிக்கன் ஆக்ஸெண்ட்'லே பேசறாங்கன்னு
வந்துச்சுலெ! அதேதான்! சத்யராஜ் 'ஜேம்ஸ்' அப்புறம் வடிவேலு 'மிஸ்டர் ஒயிட்'!!!!

ஆரம்பமே நல்ல கலாட்டாதான்! அப்புறமும் விறுவிறுப்பாத்தான் போகுது! ஒரு கொலைக்கு
'ஐ விட்ன்ஸ்' ஆகறார் சத்யராஜ். கடைசியிலேதான் தங்கச்சி சென்டிமெண்ட், பழிக்குப் பழின்னு
நம்மைப் பழிதீத்துடறாங்க:-)

முக்கியமா சொல்லவேண்டியது, சத்யராஜின் உடம்பு! தப்பா நினைக்காதீங்க. இந்த 'வயசிலும்'
தொப்பை போடாமல் 'ட்ரிம்'மா இருக்கார்.

அப்புறம் சொல்லவேண்டியது கதாநாயகி . களையான முகம். நடிப்பும் பரவாயில்லை.
வட இந்திய நடிகைகளுக்குக் கொட்டிக் கொடுத்து, இங்கெ கூட்டிக்கிட்டு வந்து கூத்தாட
வைக்கறதுக்கு இவுங்க எவ்வளவோ தேவலை!!!!

அடுத்த படம் திரு திரு.

பாண்டியராஜனோடது. வழக்கமான 'அசட்டுக் காமெடி' அச்சுபிச்சுன்னு இருக்கு.
அதுசரி, இன்னுமா இந்த மாதிரி படங்கள் எடுக்கத் துணிவு வருது? ஒருவேளை
தயாரிப்பாளர் 'தமிழ்வாணனின்' ரசிகரோ?


அடுத்து ஒரு மலையாளப் படம்.

பேரு, 'சன்மனசுள்ளவர்க்கு சமாதானம்'

ரொம்பப் பழைய படம்தான். ஆனா இப்பத்தான் பார்க்கக் கிடைச்சது.

மோஹன்லால், கார்த்திகா, கெ.பி.ஏ.சி. லலிதா, சுகுமாரி மற்றும் பலர்...

லாலின் ஆரம்ப காலப் படம்! ஒல்லியான லால். அருமையான நடிப்பு.

வீட்டுச் சொந்தக்காரனான 'லால்' எப்படி குடித்தனக்காரரான கார்த்திகாவைக் காலி ( வீட்டைத்தான்) செய்ய
'படிச்ச உபாயம் பதினெட்டும் பிரயோகிக்கின்றார்'ன்றதுதான் கதை.

மொத்தத்தில் நல்ல படம்!!!! 'நல்ல ச்சிரி'யாணு!!!

இன்னும் 'அறிந்தும் அறியாமலும்' வந்திருக்கு, ஆனால் பார்க்கலை. தெம்பு இல்லை தற்சமயம்!
ரெண்டு நாளாகட்டும்!!!!

பொழுதன்னிக்கும் என்ன சினிமா, சினிமான்னு? மத்தவிசயத்தையும் கொஞ்சம் பாக்கலாம்!



Saturday, June 11, 2005

சினிமாலெ நம்ம டுபுக்கு!!!!

ஹைய்யா, நம்ம 'டுபுக்கு' சினிமாவுலே வந்துட்டாரே!!!!!

நேத்திக்கு ஒரு படம் பார்த்தேன். படத்தோட பேரு 'ஜித்தன்'!!!

எல்லாராலும் வெறுக்கப்படற, கேலிக்குள்ளாகற 19 வயசுப் பையன்
எதிர்பாராமக் கிடைச்ச ஒரு ' அபூர்வசக்தி'யாலே யார் கண்ணுக்கும் புலப்படாத
மாயாவியா ஆயிடறதும், அதை வச்சு எப்படி 'அவன்' விரும்பற பொண்ணோட
அன்பை அடையறான்னும் கதை போகுது!


இதுலே டுபுக்கு என்னவா வராரு?

ஐய்யோ ஐய்யோ! அவரு, அவரா வரலே. அவரோட 'பேரு' வருது!!!!

ஒரு காட்சியிலே 'டாக்டரை'ப் பார்க்க அந்தப் பொண்ணும், அவளோட காதலனும்
( காதலன்னா இந்த மாயாவி இல்லை! வேற ஆள்) போகும்படியாகுது.
அப்ப இந்த மாயாவி 'டுபுக்கு டுபுக்கு'ன்னு அசரீரியாச் சொல்லிக்கிட்டு இருக்காரு!
அப்பெல்லாம் எனக்கு நம்ம 'சக வலைப் பதிவாளர் டுபுக்கு' வோட ஞாபகம்தான்
வந்துக்கிட்டே இருந்தது:-)))))

படம் பரவாயில்லை. ஒருக்கா பார்க்கலாம். எல்லாப் பாட்டுகளும் பழைய பாட்டோட
ரீமிக்ஸ்தான்.

அதுலே நளினி கொடுமைக்கார, கோபக்கார அம்மாவா வராங்க. அதைப் பார்த்துட்டு
எங்க இவர் சொல்றார், 'இந்த ரோல் எல்லாம் நீ நல்லா பண்ணுவேல்லெ'

ஆஆஆஆ........சண்டைக்கு அச்சாரம் போட்டாச்சு:-)

Friday, June 10, 2005

குமாரின் 'தோணி'யும் துளசியின் 'கேணி'யும்!!!

'ஐய்யோ' இப்படி புலம்ப வச்சுட்டாரே இந்த குமார்! நீங்க 'தோணி'ன்னா நான் கேணி!!!

அருமையான நூலகம் அதுவும் தமிழ்ப் புத்தகங்கள் எக்கச் சக்கமா இருக்குற ஊருலே
இருந்துக்கிட்டு இதுவும் செய்வாரு, இன்னமும் செய்வாரு!!!


போச்சு, என் நிம்மதி, தூக்கம்,இன்னும்.........( என்னெல்லாம் தோணுதோ அதையெல்லாம் போட்டு நிரப்பிக்குங்க!)

மெதுவா என் புத்தக அலமாரி(!)யை நோட்டம் விட்டா, மூணு மாசத்துக்கு முன்னே என்ன இருந்துச்சோ அதேதான்
இப்பவும் இருக்கு! எல்லாம் தமிழ்தான். இங்கிலீஷ் நாவல்கள் ஒண்ணும் காசு குடுத்து வாங்கறது இல்லை. அதான்
இந்த ஊரு லைப்ரரியிலே கொட்டிக்கிடக்கே!

கொஞ்சநாளாத் தோட்டக்கலைப் புத்தகமா அள்ளிக்கிட்டு வாரேன். ம்ம்ம்.. நில்லுங்க!!
தோட்டம் போடறதுக்கு இல்லை. ஏற்கெனவே வீட்டுக்குள்ளே இருக்கறதுங்களை எப்படி மெல்ல மெல்ல
வெளியேத்தறதுன்னு தெரிஞ்சிக்கறதுக்கு!!!!

கோபாலோட 'மேனேஜ்மெண்ட்' சம்பந்தப்பட்ட புத்தகங்களும், மகளோட ட்ராவல் & டூரிஸம் புத்தகங்களுமாத்தான்
இறைஞ்சு கிடக்கு!

அவுங்கவுங்க லிஸ்ட் போட்டு மத்தவங்க வயித்தெரிச்சலைக் கிளப்பிக்கிட்டு இருக்கும்போது நான் மட்டும் ச்சும்மா
இருக்கமுடியுமா?

இருக்கற புத்தகங்க லிஸ்ட்க்கு முடிஞ்சா இங்கெ போய்ப் பாருங்க. ஏற்கெனவே 'புக் ஷெல்ஃப்'ன்ற பதிவுலே போட்டதுதான்!

http://thulasidhalam.blogspot.com/2005/02/blog-post.html



இதுங்களோட கூட மதி & ஈழநாதன் தயவால் சிங்கையில் வாங்குன அஞ்சாறும், அங்கே இணைய நண்பர்களின்
மாநாட்டில் எல்லோருக்கும் கிடைச்ச(!) 'தமிழா'ன்றதும் அடங்கும்.

படிக்க விரும்பும் பட்டியல்:

இதுக்கு அளவே இல்லை. இங்கே காஞ்சுக்கிட்டு இருக்கறதாலே ஊருக்குப் போனால் இந்தமுறை அள்ளிக்கிட்டு
வரணும்.

தி.ஜானகிராமன், லா.ச.ரா, அசோகமித்திரன் இவுங்களோடது

எஸ்.ரா. வோட எழுத்துக்களில் சில.( இதுலே துணையெழுத்து மட்டும் வாங்க மாட்டேன். அதை நம்ம 'அன்பு' தரேன்னு
சொல்லியிருக்கார். கிட்டத்தட்டக் கைக்கு வந்ததை யாரோ சுட்டுட்டாங்கபா. எப்படியும் மீட்டு எடுத்துரணும்!

இரா.மு.வோட சில புத்தகங்களும் வாங்கணும். 'அரசூர் வம்சம்' வேணாம். 'திண்ணை'யிலே படிக்கக் கிடைச்சது!!
இதைப் பத்தி நாகூர் ரூமி சமீபத்திலே ஒரு விமரிசனம் எழுதியிருந்தார். நியாயமான விமரிசனமா எனக்குப் பட்டது!
அந்தப் 'பழுக்காத் தட்டை' மறக்க முடியலை.

இப்பப் படிக்கறதுக்காக நூலகத்திலிருந்து கொண்டுவந்தது:

சம்வேர் அ கேட் இஸ் வெயிட்டிங் -- Derek Tangye

கேட் அஃப்பேர் -- Derek Tangye

கேட்ஸ் இன் பெல்ஃப்ரை-- Doreen Tovey

த நேம் ஆஃப் த கேட் --Barbara Holland

த கேட் ஹூ கேம் ஃபார் கிறிஸ்மஸ் --Cleveland Amory

இந்த ரெண்டு நாளாப் படிச்சுக்கிட்டு இருக்கறது மிஸ்டர் கேட் -- George Freedley

எல்லாம் பூனைப் புத்தகங்கள். நம்ம எல்லேராம் ஒரு பின்னூட்டத்துலே கேட்டிருந்தார்,'உங்களுக்கு யானைன்னா
ரொம்பப் பிடிக்குமா'ன்னு!

எனக்கு யானையும் பிடிக்கும், பூனையும் பிடிக்கும்!!!!

வீட்டு வாசலிலே ரெண்டு யானைங்களைக் கட்டிப் போட்டா எவ்வளவு ஐஸ்வர்யமா இருக்கும்? அதுக்கு வழியில்லாமப்
போயிட்டதாலே ரெண்டு பூனைங்களை ( கட்டிப் போடாம) வச்சிருக்கேன்.

ச்சின்னப் புள்ளைங்க விளையாட்டுலே 'ஒருத்தரைச் சேர்த்துக்க விருப்பமில்லே, ஆனா கட்டாயம் சேர்த்துக்க வேண்டிய
நிலமை'ன்னா ச்சும்மா 'உப்புக்கு ( ஒப்புக்கு) சப்பாணி'யா சேர்த்துக்குவாங்க. அதுபோல குமார் என்னை இந்த ஆட்டத்துலே
சேர்த்துக்கிட்டாரோன்னு ஒரு 'சம்சயம்'!!!!!!!!!

நானே உப்புக்குச் சப்பாணி. நான் யாரைக் கூப்பிடமுடியும் இதுலே கலந்துக்கறதுக்கு? அதான் எல்லாரும்,
எல்லாரையும் கூப்பிட்டுட்டாங்களே!!!

ஆனாலும் கேட்டு வைக்கறேன்.

மரம்,
காஞ்சி ஃபிலிம்ஸ்,
தாரா
சயந்தன்
ஷ்ரேயா
சுரேஷ் கிவி

ஆச்சு என் பங்கு!!!!

மீண்டும் சந்திக்கும்வரை வணக்கம்.

Wednesday, June 08, 2005

நாளுக்கு மூணு சண்டை!!!!!!

ஸாஃப்ரான் ரைஸ், பனீர் & மட்டர் சப்ஜி, ஆலூ கறி, தால், பஜ்ஜியா மாதிரி ஒரு
கைண்ட் ஆப்ஃ போண்டா, பப்படம், ஸாலட், இம்லி சட்னி, ரைத்தா, ஃப்ரூட்ஸ் கேஸரி & க்ரீம்,
பால் பாயாசம் இதுதான் மெனு!!!


போன வீக்கெண்ட் லாங்கா இருந்துச்சு, நம்ம எலிஸபெத் மஹாராணியோட பொறந்த நாள் விழாவால!!
இன்னும் ஒரு நாள் லீவு போட்டு அதை ஒரு லாங்கஸ்ட் வீக்கெண்டா மாத்திக்கிட்டோம்!!!!

மேலே சொன்ன சாப்பாட்டு ஐட்டங்கள் நம்ம ஊர் கோயில்லெ, தயாரிச்சதுதான்! என்னா 'ஸ்பெஷல்'னு
கேட்டீங்கன்னா அதுக்கும் பதில் ரெடியா இருக்கு! எங்க திருமணநாள் கொண்டாட்டத்தைக் கோவில்லெ
வச்சுக் கொண்டாடினதுக்குத்தான் இந்த மெனு!

'தானே தானே பர் லிகா ஹை, கானே வாலாகா நாம்'னு ஒரு பழஞ்சொல் இருக்கு! ஒவ்வொரு அரிசியிலும்
அதை சாப்புடப்போறவங்க பேரு இருக்குமாம்! அதனாலே கொண்டாட்டம்ன்னு யாரையும் தனியா அழைக்கலை.
யாருக்கு எழுதியிருக்கோ அவுங்க சாப்பிடட்டுமுன்னு விட்டுட்டோம். அறிமுகம் இல்லாதவங்களுக்கு இப்படிச்
செய்யறதிலும் ஒரு சந்தோஷம் இருக்கத்தான் இருக்கு!

அன்னைக்குச் சமையல் செஞ்சவங்களிலே ஒருத்தர் என்னிடம் கேட்டது இது.

" எத்தனையாவது கல்யாண நாள்?"

"முப்பத்தியொண்ணு"

" இதுவரைக்கும் எத்தனை முறை சண்டை போட்டிருப்பீங்க?"( கேக்கறதைப் பாருன்னானாம்!!!)

" முப்பத்தியொண்ணை ஆயிரத்தாலே பெருக்கிக்குங்க!!!"

கொஞ்சம் கணக்குப் போடத்தெரிஞ்சா புரிஞ்சிருக்கும், சராசரியா நாளுக்கு மூணு சண்டைன்றது:-)

இப்பப் பாருங்க தமிழ்மணத்துலே சண்டை போடறாங்கன்னு முகமூடி பதிவு போட்டிருக்காருல்லே,
அதேதான்!!!

குடும்பத்துலே இதெல்லாம் ரொம்ப சகஜமப்பா!!!!

இன்னைக்கு சண்டை போட்டுக்குவொம், நாளைக்கு கூடிக்குவோம்.

சண்டைன்னதும் ஞாபகத்து வருது ஒரு விஷயம்.

அந்தக் காலத்துலே ஏதாவது வாக்குவாதத்துலே( இதைத்தான் சண்டைன்னு தப்பா சொல்லிக்கிட்டு இருக்காங்க!)
காரசாரமா ஈடுபட்டுக்கிட்டு இருக்கறப்ப திடீர்னு யாராவது வீட்டுக்கு வந்துருவாங்க. அவுங்க முன்னாலெ இதை
வச்சுக்க வேணாம்னுட்டு, ரொம்பச் 'சமாதனப்புறா'வா 'சட்'னு மாறிடுவோம்.

அவுங்க இருந்து பேசி, காஃபியெல்லாம் குடிச்சுட்டுப் புறப்பட்டு போற ஒரு ரெண்டு மணி நேரத்துலே, உண்மைக்குமே
அந்த சண்டை நீத்துப் போயிருக்கும். ஆனாலும், அதை மனசுலெ வச்சு வளர்த்துக்கிட்டுக் 'கரம்கரம்'னு இருப்பேன்.
அவுங்க போனபிறகு, இவர் இயல்பா எதாவது பேச வருவார். இன்னும் சண்டை முடியலேன்னு குரல் கொடுப்பேன்!

சண்டையா, அது எப்பவோ முடிஞ்சிருச்சே! அவுங்க வந்ததும் நான் 'மூண்டுக்கிட்டிருந்ததை அணைச்சிட்டேனே'ன்னு
அப்பாவியா இவர் சொல்வார்.

எனக்கு 'ச்சே'ன்னு ஆயிரும். மனசு நிறைவா ஒரு சண்டையை, முழுசாப் போட விடாத ஜனங்களை சபிச்சுக்கிட்டே
அடுத்த சண்டை சமயத்துலேயாவது யாரும் வந்துராம இருக்கணுமேன்னு வேண்டிக்குவேன்!!!!

எப்படியும் வெற்றி எனக்குத்தான்!!! அத்தை அனுபவிக்க முடியலை பாருங்க:-)))))


பின்குறிப்பு: இது இந்தப் பதிவுக்கு சம்பந்தமில்லாதது. ஆனா போன பதிவுக்கு சம்பந்தம் இருக்கறது.

நம்ம வீ.எம், வசந்தன், தேன் துளி, மீனாக்ஸ், பாண்டி, டுபுக்கு, எல்லேராம் இவுங்களுக்கெல்லாம்
பின்னூட்டம் போட்டதுக்கு நன்றி சொல்லிக்கறேன்.

'பின்னூட்டத்துக்கு எப்படி பின்னூட்டம் கொடுக்கறது, நாம அதே பதிவுலே போட்டாக்கா, பெரியமனசு பண்ணிப்
பின்னூட்டம் போட்ட நம் மக்கள் திரும்ப வந்து பாப்பாங்களா, இல்லே எல்லாம் ஒருக்கப் போட்டதோட சரின்னு
இருந்துடுவாங்களா? '

( இதுக்கே தனியா ஒரு பதிவு போடணுமேப்பா!)

இப்படிப் பலகுழப்பங்கள் மனசுக்குள்ளெ வந்துட்டதாலே, இந்தப் பதிவுலே பின்குறிப்பாப் போட்டுக்கலாமுன்னு
ஒரு எண்ணம்!











Friday, June 03, 2005

மும்பைமுகி!!!!

எல்லாரும் பார்த்து, மறந்துகூட இருப்பீங்கதான். ஆனா, நான் நேத்துதானே மும்பை எக்ஸ்பிரஸ் பாக்க முடிஞ்சது!
என்னாத்தைச் சொல்ல? பொதுவா 'கமல்'படமுன்னா விருப்பம் கூடுதல்தான்.ஆனா.... இதுலே கடி( குதிரையும்
கடிச்சுடுச்சேபா) கொஞ்சம் கூடிப் போச்சு!!!


ரசிச்ச ஒரே இடம்,'குரங்கு க்ரேன்லே ஏறிக்கிட்டு அதை ஏத்தி இறக்குறது'தான்! பள்ளிக்கூடப் பசங்களும்
குரங்கும், கம்பிலே தொங்கற கமலும் ஜோர்!!!!

கடைசியிலே ஒரு பத்து நிமிஷம் தூங்கிட்டேன் போல! திடீர்னு பார்த்தா சர்க்கஸ் கொட்டாய் வெளிச்சமா வருது!

நானு ரஜனி ரசிகை இல்லேதான், ஆனாலும் ரயிலுக்கு 'மு(கி)ழி' தேவலைன்னு இருக்கு! அதைப் பாத்தப்பவும்
இது மோஹன்லால் ரோலு, இது ஷோபனான்னு கொஞ்சம் புலம்பத்தான் செஞ்சேன்னாலும் இதுக்கு அது மேல்!!!!

சச்சின் வந்திருக்காஹ! கட்டாயம் பாக்கணுமான்னு ஒரே யோசனை! இதுமட்டுமில்லாம 6'2", ஜாலிமேன், செவ்வேல்
கிடைச்சது! இந்தவாரம் எங்களுக்கு 'லாங் வீகெண்ட்' !!! மஹாராணி சாஹிபாவோட பொறந்தநாளுன்னு!!!!

முகி அம்பதுநாளா வெற்றிகரமா ஓடுதுன்னு சொல்றதுல்லே தப்பேயில்லை!

எக்ஸ்பிரெஸ்தான் இப்படி டீரெயிலாகிக் கிடக்கே!!!! பி, சி, டி, இ, எஃப், ஜி ஏரியாவுலே எல்லாம் நோ ச்சான்ஸ்(-:

மரணத்தைக் கொண்டாடினர்!!!

நேத்து ஒரு சாவு நிகழ்ச்சியிலே கலந்துக்கிட்டேன். கூட வேலை செய்யும் நண்பரின் மனைவி தான்
இறந்துட்டாங்க! வயசும் அதிகம் கிடையாது. வெறும் 68தான். நம்ம ஊர்லேதான் 40 வயசானாலே முதியவர்னு
பட்டம் கட்டிடுவாங்க. இங்கே 50 வயசுலேதான் வாழ்க்கையே ஆரம்பிக்குதுன்னு சொல்லிக்கிட்டு இருக்காங்க!!!



நம்ம ஏரியாவுலேதான் இருக்காங்கன்றதாலே அடிக்கடி இவுங்களைச் சந்திக்கற சந்தர்ப்பம் வாய்க்கும். அவுங்க
'நேரா' இருப்பாங்க. நல்லா நிமிர்ந்து நடப்பாங்க. எங்களைப் போல'கூன்' போடறதில்லை:-)

நண்பர் இங்கே ராணுவத்திலே வேலை செஞ்சு ஓய்வு பெற்றவர். சிங்கப்பூர், ஃபிஜின்னு பல இடங்களிலே வேலை
செஞ்சிருக்கார்.அருமையாப் பாடுவார். எப்போதும் சிரிக்கச் சிரிக்கப் பேசுவார். இப்பத்தான் போனமாசம் 70-வது
பிறந்தநாள் கொண்டாடினார்!!!

வெள்ளைக்கார ஊருங்களிலே ஜனங்க 'சோறு இல்லேன்னாலும் காரு வச்சிருப்பாங்க'ன்னு நான் சொல்றதை
மறுக்கறமாதிரி, இவர் காரு வச்சுக்கலை!!! இவுங்க ரெண்டுபேரும், அக்கம் பக்கம் எங்கெபோனாலும் ஒண்ணா
நடந்துதான் போவாங்க. ஒருவேளை இந்த வயசிலும் ஆரோக்கியமா இருக்கறதுக்கு இந்த 'நடை'யும் ஒரு
காரணமுன்னு எப்பவும் நினைச்சுக்குவேன்.

இங்கே குளிர்காலம் ஆரம்பிச்சுருச்சுல்லே, அதனாலே வழக்கமா எல்லா வருசமும் போட்டுக்கறமாதிரி
ஃப்ளூ ஊசி ரெண்டு வாரத்துக்கு முன்னாலே நண்பரின் மனைவி போட்டுக்கிட்டாங்களாம். அதுக்கப்புறம்
அவுங்களுக்கு காய்ச்சல் வந்து அஞ்சுநாளாக் கஷ்டப்பட்டாங்களாம். ஆஸ்பத்திரியிலே சேர்த்திருக்காங்க.

அங்கே ரத்தப் பரிசோதனை செஞ்சப்ப, இவுங்களுக்கு,'லுகேமியா'ன்னு சொன்னாங்களாம். திங்கள் முதல்
சிகிச்சை ஆரம்பிக்கலாமுன்னு முடிவு செஞ்சாங்களாம். இது நடந்தது சனிக்கிழமை. அன்னிக்கு ராத்திரி
தூங்குனவங்க, மறுநாள் எழுந்திரிக்கலையாம்!!!! 'ஹார்ட் அட்டாக்!!!!!!

என்ன அமைதியான சாவு பாருங்க!!! கொடுத்துவச்ச புண்ணியவதி!!!!!

காலையிலே பத்தரைக்கு 'ஃப்யூனரல்' வச்சிருந்தாங்க. அங்கே போய்ச் சேர்ந்தா, நல்ல கூட்டம். எல்லோரும்
அநேகமாக் கறுப்பு உடையிலே வந்திருந்தாலும், ஏதோ 'பார்ட்டி'க்கு வந்தமாதிரி சளசளன்னு பேசிக்கிட்டு
இருந்தாங்க. சின்ன அடக்கமான ஹால். ரொம்ப சிம்பிளா அலங்கரிச்சு இருந்துச்சு! நடுவிலே இருந்த மேடைமேலே
அழகான சவப்பெட்டி! அதும்மேலே ரொம்ப அழகான வெள்ளைப் பூங்கொத்து மலர் அலங்காரம்!!!

'டாண்'னு பத்தரைக்குப் பாதிரியார் உள்ளே நுழைஞ்சாரோ இல்லையோ, எல்லாப் பேச்சும் 'டக்'னு நின்னுபோச்சு!
ஒரே நிசப்தம்!!!!

ச்சின்னதா ஒரு பிரார்த்தனை முடிஞ்சது. மகனும், மகள்களும் நாலு நாலு வார்த்தை பேசினாங்க. நண்பர் தன்னுடைய
45 வருட மணவாழ்வைச் சுருக்கமாகவும், நகைச்சுவையோடும் பேசி எல்லோரையும் உரக்கவே சிரிக்கவச்சார்!
அதன்பின் அவரே ஒரு பாட்டையும் பாடினார். நல்ல பாடகர் என்பதால் அருமையாக இருந்தது!!!! ஏதோ ஒரு கலை
நிகழ்ச்சியிலே கலந்துக்கறமாதிரி இருந்ததே தவிர துக்கம் கொள்ற சம்பவமா இல்லே!!!

ஆச்சு, எல்லோருக்கும் நன்றி உரை சொல்லி, சவப்பெட்டியை வெளியே கொண்டுபோய் அதுக்கான வண்டியில்
ஏத்தியாச்சு! சரியா 50 நிமிஷம்தான்!!!!

எல்லோரும் வெளியே வந்தோம்!! நண்பர் எல்லோரையும் தனித்தனியாகப் பார்த்துக் குசலம் விசாரிச்சு, நன்றி சொல்லி
சந்தோஷமான முகத்துடன், சிரிக்கச் சிரிக்கப் பேசிக்கிட்டிருந்தார்! பெட்டி அதுபாட்டுக்கு வண்டியிலே 'தேமே'ன்னு
இருந்துச்சு! அங்கேயே பக்கத்து ஹாலிலே 'ரெஃப்ரெஷ்மெண்ட்'க்கு ஏற்பாடு செஞ்சுருக்காருன்னும், அதுலே நாங்க
எல்லாம் கலந்துக்கணுமுன்னும் அன்போட வேண்டிக்கிட்டு இருந்தார்!!!!!

சாவுக்குப் போய் சாப்டுட்டு வர்றது நம்ம கலாச்சாரத்துலே கிடையாதில்லையா? அதனாலே நன்றி சொல்லிட்டுத்
திரும்பினேன்.

கவலையான முகத்தோட இதுலே கலந்துக்கப் போனவங்க எல்லாம் சிரிச்சுக்கிட்டே கலைஞ்சு போனோம்!
அப்ப நினைச்சுகிட்டேன், 'என்ன அருமையான பிரிவு உபசாரம்'னு!!! பாதிரியார் சொன்னதுமட்டும் மனசுலே
திரும்பத்திரும்ப வந்துக்கிட்டு இருந்துச்சு! 'இவுங்க இந்த வாழ்க்கையிலே இருந்து வேற ஒரு 'பெட்டர் லைஃப்'க்கு
போயிருக்காங்க!!!!!'

மரணத்தை வெல்ல யாராலுமே முடியாதப்ப அதையும் மகிழ்வோட ஏத்துக்கிட்டு கொண்டாடுறது எவ்வளவு
சிரேஷ்டம்!!!!!







Wednesday, June 01, 2005

பயணம் பயங்கரம்!!!!!

ரொம்ப நாளா எங்கேயும் போகாம வேலை, வேலைன்னே இருக்கறமே, ச்சும்மா ஒரு வாரம், பத்துநாளுன்னு
எங்கெயாவது ஓய்வாப் போயிட்டு வரலாமுன்னு போறோம். இதுக்கு வேணுங்கற காசு, லீவு, போற இடத்தைப்
பத்தி தகவல் சேகரிக்கறதுன்னு அந்தத் தலைவலி வேற விஷயம்!!!!! அது கிடக்கட்டும்,போற இடத்துலே நாம
செய்யாத ஒரு தப்புக்காக பத்து, இருபது வருசம் ஜெயில் தண்டனைன்னா நமக்கு எப்படி இருக்கும்?


நம்ம பக்கத்து நாடான ஆஸ்தராலியாவுலே இப்படி ஒரு சம்பவம் நடந்து போச்சு! உங்களுக்கு அநேகமாத்
தெரிஞ்சிருக்கும். தெரியாதவங்களுக்கு இது.....

ஆஸ்தராலியா பிரிஸ்பேன்லே இருந்து இவுங்க ( பேரு ஷெப்பல் கோர்பி) இந்தோனேஷியாவுக்கு ஹாலிடே
போயிருக்காங்க. அவுங்களுக்கு கடல்லே சர்ஃபிங் செய்யறது பிடிக்குமாம். அதனாலே ஒரு பாடி போர்டு
( இது சர்ஃப் போர்டுமாதிரிதான், ஆனா அவ்வளவு நீளம் இருக்காது. சின்னதா இருக்கும்.) கொண்டு
போயிருக்காங்க.அவுங்க ஊர்லே இருந்து 'சிட்னி' வந்து அங்கெருந்து ப்ளேன் மாத்திப் போறாங்க!!!
அதனாலே ப்ரிஸ்பேன் லேயே பேக்கேஜ் செக் இன் செஞ்சாச்சு. இதுவரை எல்லாம் சரி!

இப்ப இந்தோனேஷியாப் போய்ச் சேர்ந்தபிறகு, அவுங்க கொண்டு வந்த 'பாடி போர்டு' இருந்த பையிலே
நாலரைக் கிலோ போதைப் பொருள் இருந்ததாக் கண்டுபிடிச்சு அவுங்களைக் கைது செஞ்சுட்டாங்க!!!

இந்தோனேஷியாவிலே மத்த எல்லாம் கொஞ்சம் முன்னே பின்னே இருந்தாலும் இந்த போதை மருந்து
விஷயத்துலே மட்டும் சட்டம் ரொம்ப உறுதியா இருக்குன்றதும், பிடிபட்டால் தண்டனை மிகவும்
கடுமையா இருக்கும் என்றதும் உலகறிஞ்சது!!! இதை, அங்கே போன/ போக இருக்கும் சுற்றுலாப் பயணிகள்
கட்டாயம் தெரிஞ்சுவச்சிருப்பாங்க. இப்படி இருக்கும்போது ஒருத்தி/ ஒருவர் கொஞ்சநஞ்சமில்லை, நாலரைக்கிலோ
மரியுவானாவை அசால்ட்டா ஒரு பையிலே வச்சுக் கொண்டு போயிருப்பாங்களா?

கஸ்டம்ஸ் அதிகாரிங்ககிட்டே அந்தப் பொருள் அவுங்களோடது இல்லைன்னு( பிடிபட்ட எல்லாக் குற்றவாளிகளையும் போல)
சொல்லியிருக்காங்க கோர்பி. அதிகாரிங்க நம்பலை!

இது இப்படி இருக்க, இந்த விஷயம் இந்த மீடியாக்கள் தயவாலே ரொம்ப பெருசாப் போயிருச்சு! யாரோ இந்த
போதைப்பொருள் கடத்தற நெட்நொர்க்லே இருக்கறவங்க, பிரிஸ்பேன்லே இருந்து சிட்னிக்கு அனுப்பியிருக்காங்க. சிட்னியிலே
இதை வெளியே எடுத்து இருக்கவேண்டிய ஆள், தன்னோட 'ட்யூட்டி'யைச் செய்யத் தவறியதாலே இந்தப் பை, அப்படியே
சம்பந்தப்பட்டப் பொருளோடவே இந்தோனேஷியாப் போய்ச் சேர்ந்துடுச்சு! பேக்கேஜ் ஹேண்டில் செய்யற ஆளுங்கள்தான்
காரணமா இருக்கும்ன்ற ஊகத்துலே 'ஏர்ப்போர்ட்லே' ரகசியக் கேமரா வச்சுப் பார்த்திருக்காங்க. இவுங்க சந்தேகம்
உண்மை ஆயிருச்சு!!!!

இந்த சம்பவம் நடந்து 'கோர்பி' பிடிபட்டதெல்லாம் போன வருசக் கடைசியிலே. இப்ப இந்தக் கேஸ் விசாரணைக்கு
வந்து முடிஞ்சிருக்கு. அவுங்களுக்கு 20 வருச ஜெயில் தண்டனை கொடுத்திருக்காங்க!!!!

கேஸோட தீர்ப்புக்கு முதல்நாள், மீடியாக்காரங்க தீர்ப்பு சொல்லப்போற நீதிபதியைப் பேட்டி கண்டு அதை டி.வி.யிலேயும்
காமிச்சாங்க. அப்ப அந்த, 'நீதிபதி' சொன்னார், 'இவுங்க கண்ணீரைக் கண்டெல்லாம் நாங்க அனுதாபப்படமுடியாது!
பிடிபட்ட குற்றவாளிங்க இப்படித்தான் அழுவாங்க. நான் இதுவரைக்கும் 500க்கு மேற்பட்ட இந்தமாதிரிக் குற்றங்களை
விசாரிச்சிருக்கேன். இதுவரை யாருக்கும் தண்டனை தராமல் விட்டதில்லை'!!!!

போனவாரம் பத்திரிக்கை செய்தி ஒண்ணு இது சம்பந்தமா வந்தது. ஒரு ஆஸ்தராலியர், கொஞ்ச நாளைக்கு முன்னே
இப்படித்தான் இந்தோனேஷியாப் போயிருக்கார். அவரு ஏர்போர்டைவிட்டு வெளியே வந்து ஹோட்டலுக்குப் போய்ச்
சேர்ந்து, அவரோட பெட்டியைத் திறந்தப்ப அதுக்குள்ளே புதுசா ஒரு பொட்டலம் இருந்ததைப் பார்த்திருக்கார். அது
போதைப் பொருள்னு தெரிஞ்சிருக்கு. உடனே அங்கே இருக்கற ஆஸ்தராலியன் ஹை கமிஷனோட தொடர்பு கொண்டு
விஷயத்தைச் சொல்லி இருக்கார். அவுங்க சொன்னாங்களாம்,'யாருக்கும் சொல்லாம உடனே அதை டிஸ்போஸ்
செஞ்சிருங்க'ன்னு!!! இந்த விஷயம் இதுவரை வெளிவராம இருந்து இப்போ வெளிவந்திருக்கு.

அப்ப இதுலேயிருந்து தெரியுது, யாரோ இப்படி அடுத்தவுங்க பெட்டியிலே இதையெல்லாம் வச்சுக் கடத்தறாங்கன்னு!!!
இல்லையா?

பூட்டுப் போட்டிருக்கலாம்னு சொல்லாதீங்க. இந்தப் பூட்டெல்லாம் இந்த ஆளுங்களுக்கு 'ஜுஜுபி!!!'

இந்தோனேஷியா ஜட்ஜ் சொல்றது என்னன்னா, 'உண்மையான குற்றவாளியைப் பிடிச்சுத்தாங்க. அப்ப கோர்பியை
விட்டுடறோம்'னு!!!!

இதனாலே இந்த ரெண்டு நாடுகளுக்குள்ளெ ஒரு பகைமை உருவாகிக்கிட்டு இருக்கு!!!!

இப்ப,பயணம் போற நமக்கு என்ன பாதுகாப்பு இருக்குன்றதுதான் என்னோட கேள்வி!!! இந்தோனேஷியான்னு இல்லே, எந்த
நாடானாலும் சரி! விமான விபத்து, போற ஊருலே நடக்கற சாலை விபத்து இப்படி நடக்கற விபத்துக்களிலே
மாட்டிக்காம பத்திரமாத் திரும்பி வரணுமுன்னுதானே நாம எல்லோரும் நினைப்போம். இதுலே இந்த போதைமருந்து
கடத்தல் விவகாரம்வேற பயணிகள் அடிமடியிலே கைவச்சா எப்படித் தப்பறது?

ஏற்கெனவே, நம்ம பெட்டிங்களைத் திறந்து சாமான்களைத் திருடிக்கறாங்க, சிலசமயம் பெட்டியே காணாமப் போயிடுதுன்னு
நடந்துக்கிட்டு இருக்கு. இதுலே இது வேற!!!!

நான் இது விஷயமா யோசனை செஞ்சப்ப, பயணிகள் பாதுகாப்புப் பத்தி எனக்குத் தோணியது என்னனா,

நாம ஏர்ப்போர்ட்லே செக் இன் செய்யறப்பவே, அங்கு இதுக்காக நியமிக்கப்பட்ட ஆட்கள்கிட்டே நம்ம பெட்டியைத்
திறந்து காமிச்சு,'அதுலே சந்தேகமான பொருட்கள் ஒண்ணும் இல்லே'ன்னு அதிகாரபூர்வமான ஒரு கடுதாசு வாங்கி
நம்ம பாஸ்போர்ட்டோட வச்சுக்கறது!

(செக்யூரிட்டி செக் முடிச்சு ஒரு டேப் போட்டுவுடறாங்களேன்னு சொன்னாலும், இந்த கடத்தல் ஆளுங்கதான்
ஏர்போர்ட்லேயே வேலை செய்யறவங்களாச்சே! அவுங்களுக்கு இந்த டேப் ஈஸியா கிடைச்சுறாதா? போதைப்
பொருளை வச்சுட்டுத் திரும்ப டேப் போட்டுடலாம் இல்லையா?)

அப்படி நம்ம பெட்டியிலே ஏதாவது பிடிபட்டால், நாம செக் இன் செஞ்சப்ப அது இல்லேன்னும், அதுக்கப்புறம்
பேக்கேஜ் ஹேண்ட்லர் யாரோ வச்சிருக்காங்கன்னும் நிரூபணமாயிடும், இல்லையா?

என்ன ஒண்ணு, இப்ப இங்கெல்லாம் ஜஸ்ட் ஒரு மணி நேரத்துக்கு முன்னாலே போய் செக் இன் செஞ்சுக்கறமே
அது முடியாது. நேரஞ்செல்லும். அதுக்குப் பார்த்தா முடியுமா? ஒரு ரெண்டு மணி நேரத்துக்குப் பால்மாறிட்டு,
20 வருசம் ஜெயிலுக்குள்ளே இருக்கமுடியுமா?

அப்புறம், 'இதுக்கெல்லாம் தனி அதிகாரிங்களைப் போடறதாலே செலவு அதிகமாகும் அரசாங்கத்துக்கு'ன்னு கூவுவாங்க.
வேணாம்! நாங்களே ஒரு பெட்டிக்கு 5 ரூபா/டாலர்னு வேணுமுன்னா தாரோம். ஏர்போர்ட் டாக்ஸ் கட்டறோம் இல்லையா,
அதுகூடவே சேர்த்துக் கட்டிரலாம். பாதுகாப்புக்கு முன்னாலே இந்தக் காசு ஒண்ணும் பெரிய விஷயமே இல்லை!

இந்த சாக்குலே ஜனங்களுக்கு வேலை வாய்ப்புக் கிடைக்குமே!!!!

எப்படியோ வம்பு தும்பு இல்லாம ஊர்ப் போய்ச் சேர்ந்து நல்லபடியாத் திரும்பி வரணும்!!!!

இந்தப் பயணிகள் பாதுகாப்பு விஷயமா உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்க. ஒரே குழப்பமா இருக்கு!!!