Friday, June 10, 2005

குமாரின் 'தோணி'யும் துளசியின் 'கேணி'யும்!!!

'ஐய்யோ' இப்படி புலம்ப வச்சுட்டாரே இந்த குமார்! நீங்க 'தோணி'ன்னா நான் கேணி!!!

அருமையான நூலகம் அதுவும் தமிழ்ப் புத்தகங்கள் எக்கச் சக்கமா இருக்குற ஊருலே
இருந்துக்கிட்டு இதுவும் செய்வாரு, இன்னமும் செய்வாரு!!!


போச்சு, என் நிம்மதி, தூக்கம்,இன்னும்.........( என்னெல்லாம் தோணுதோ அதையெல்லாம் போட்டு நிரப்பிக்குங்க!)

மெதுவா என் புத்தக அலமாரி(!)யை நோட்டம் விட்டா, மூணு மாசத்துக்கு முன்னே என்ன இருந்துச்சோ அதேதான்
இப்பவும் இருக்கு! எல்லாம் தமிழ்தான். இங்கிலீஷ் நாவல்கள் ஒண்ணும் காசு குடுத்து வாங்கறது இல்லை. அதான்
இந்த ஊரு லைப்ரரியிலே கொட்டிக்கிடக்கே!

கொஞ்சநாளாத் தோட்டக்கலைப் புத்தகமா அள்ளிக்கிட்டு வாரேன். ம்ம்ம்.. நில்லுங்க!!
தோட்டம் போடறதுக்கு இல்லை. ஏற்கெனவே வீட்டுக்குள்ளே இருக்கறதுங்களை எப்படி மெல்ல மெல்ல
வெளியேத்தறதுன்னு தெரிஞ்சிக்கறதுக்கு!!!!

கோபாலோட 'மேனேஜ்மெண்ட்' சம்பந்தப்பட்ட புத்தகங்களும், மகளோட ட்ராவல் & டூரிஸம் புத்தகங்களுமாத்தான்
இறைஞ்சு கிடக்கு!

அவுங்கவுங்க லிஸ்ட் போட்டு மத்தவங்க வயித்தெரிச்சலைக் கிளப்பிக்கிட்டு இருக்கும்போது நான் மட்டும் ச்சும்மா
இருக்கமுடியுமா?

இருக்கற புத்தகங்க லிஸ்ட்க்கு முடிஞ்சா இங்கெ போய்ப் பாருங்க. ஏற்கெனவே 'புக் ஷெல்ஃப்'ன்ற பதிவுலே போட்டதுதான்!

http://thulasidhalam.blogspot.com/2005/02/blog-post.html



இதுங்களோட கூட மதி & ஈழநாதன் தயவால் சிங்கையில் வாங்குன அஞ்சாறும், அங்கே இணைய நண்பர்களின்
மாநாட்டில் எல்லோருக்கும் கிடைச்ச(!) 'தமிழா'ன்றதும் அடங்கும்.

படிக்க விரும்பும் பட்டியல்:

இதுக்கு அளவே இல்லை. இங்கே காஞ்சுக்கிட்டு இருக்கறதாலே ஊருக்குப் போனால் இந்தமுறை அள்ளிக்கிட்டு
வரணும்.

தி.ஜானகிராமன், லா.ச.ரா, அசோகமித்திரன் இவுங்களோடது

எஸ்.ரா. வோட எழுத்துக்களில் சில.( இதுலே துணையெழுத்து மட்டும் வாங்க மாட்டேன். அதை நம்ம 'அன்பு' தரேன்னு
சொல்லியிருக்கார். கிட்டத்தட்டக் கைக்கு வந்ததை யாரோ சுட்டுட்டாங்கபா. எப்படியும் மீட்டு எடுத்துரணும்!

இரா.மு.வோட சில புத்தகங்களும் வாங்கணும். 'அரசூர் வம்சம்' வேணாம். 'திண்ணை'யிலே படிக்கக் கிடைச்சது!!
இதைப் பத்தி நாகூர் ரூமி சமீபத்திலே ஒரு விமரிசனம் எழுதியிருந்தார். நியாயமான விமரிசனமா எனக்குப் பட்டது!
அந்தப் 'பழுக்காத் தட்டை' மறக்க முடியலை.

இப்பப் படிக்கறதுக்காக நூலகத்திலிருந்து கொண்டுவந்தது:

சம்வேர் அ கேட் இஸ் வெயிட்டிங் -- Derek Tangye

கேட் அஃப்பேர் -- Derek Tangye

கேட்ஸ் இன் பெல்ஃப்ரை-- Doreen Tovey

த நேம் ஆஃப் த கேட் --Barbara Holland

த கேட் ஹூ கேம் ஃபார் கிறிஸ்மஸ் --Cleveland Amory

இந்த ரெண்டு நாளாப் படிச்சுக்கிட்டு இருக்கறது மிஸ்டர் கேட் -- George Freedley

எல்லாம் பூனைப் புத்தகங்கள். நம்ம எல்லேராம் ஒரு பின்னூட்டத்துலே கேட்டிருந்தார்,'உங்களுக்கு யானைன்னா
ரொம்பப் பிடிக்குமா'ன்னு!

எனக்கு யானையும் பிடிக்கும், பூனையும் பிடிக்கும்!!!!

வீட்டு வாசலிலே ரெண்டு யானைங்களைக் கட்டிப் போட்டா எவ்வளவு ஐஸ்வர்யமா இருக்கும்? அதுக்கு வழியில்லாமப்
போயிட்டதாலே ரெண்டு பூனைங்களை ( கட்டிப் போடாம) வச்சிருக்கேன்.

ச்சின்னப் புள்ளைங்க விளையாட்டுலே 'ஒருத்தரைச் சேர்த்துக்க விருப்பமில்லே, ஆனா கட்டாயம் சேர்த்துக்க வேண்டிய
நிலமை'ன்னா ச்சும்மா 'உப்புக்கு ( ஒப்புக்கு) சப்பாணி'யா சேர்த்துக்குவாங்க. அதுபோல குமார் என்னை இந்த ஆட்டத்துலே
சேர்த்துக்கிட்டாரோன்னு ஒரு 'சம்சயம்'!!!!!!!!!

நானே உப்புக்குச் சப்பாணி. நான் யாரைக் கூப்பிடமுடியும் இதுலே கலந்துக்கறதுக்கு? அதான் எல்லாரும்,
எல்லாரையும் கூப்பிட்டுட்டாங்களே!!!

ஆனாலும் கேட்டு வைக்கறேன்.

மரம்,
காஞ்சி ஃபிலிம்ஸ்,
தாரா
சயந்தன்
ஷ்ரேயா
சுரேஷ் கிவி

ஆச்சு என் பங்கு!!!!

மீண்டும் சந்திக்கும்வரை வணக்கம்.

14 comments:

said...

துளசி அக்கா., மொத, உங்களுக்கு மணநாள் வாழ்த்துக்கள்!., விட்டுப் போனத எப்படி சொல்றதுன்னு பார்த்துட்டு இருந்தேன். சொல்லிட்டேன். ஒரே 'கபடியாட்டமா' இருக்கு?., நம்ம பாணில எழுதிட்டா போச்சு., நம்ம கிட்ட என்னா தேறப் போவுது., காஞ்சி அண்ணாச்சி., உபயோகமா நிச்சயம் ஏதாவது வச்சிருப்பார். மத்த சகோதர, சகோதரிகளும் கலக்குங்க.

said...

மரமே,
மனமார்ந்த நன்றி!!!!
இருக்கறதை வச்சு எழுதுங்க.

500, 1000க்கு எல்லாம் எங்கே போறது? நான் சொன்னது புத்தக எண்ணிக்கையை:-)))))

said...

//எனக்கு யானையும் பிடிக்கும், பூனையும் பிடிக்கும்!!!!//

அப்போ, பூனை வேஷத்துல மட்டுந்தான் இங்க புத்தகம் வாசிக்கிறீங்க, சரியா?

said...

அதுவும் நான் தான், மற்ற மிருகங்களும் நாந்தான்!

பாருங்க உங்களுக்கே கண்டுபிடிக்க முடியலை:-))))

said...

எங்கள் ஊரில் அந்தக் காலத்தில் பெரும் செல்வந்தர் ஒருவர் தன் புது இல்லம் கட்டும்போது யானை மீது அமர்ந்து அப்படியே உள்ளே வரும் அளவு உயரமாக நுழைவுவாயில் (வாசக்கால் என்றும் சொல்லுவார்கள்) அமைத்தார்.

said...

லதா,

கொடுத்துவச்ச புண்ணியவான்!!!!

எனக்குப் பூனை மேலே உக்காந்து வரமுடியுமான்னு தெரியலே:-))))

said...

லேட்டா இருந்தாலும் திருமண நாள் வாழ்த்துக்கள். போட்டு உடைக்கிறதெயெல்லாம் அருமையா போட்டு உடைச்சுட்டீங்க... பார்த்து கல்யாணமாகதாவங்க உஷாராயிடப் போறாங்க..ஹி ஹி நாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்!!

said...

துளசியக்கா,

பெல்லி தின சுபாகான்க்ஷலு.. (ஏ ரோஜு அக்கா?)

இந்த வெளயாட்டுக்கு யார்னா கூப்ட்டாதான் வருவீங்களோ?

ஒப்புக்கு சப்பாணியா இருக்கறவுங்களுக்கு ஒரு வசதி என்னன்ன அவுங்க எப்பவுமே அவுட் இல்லை :-P

said...

அன்புள்ள டுபுக்கு,

உங்களுக்கு நூறு ஆயுசு! அடுத்த பதிவு உங்களைப் பத்திதான்:-))
( இப்பத்தான் எழுதிக்கிட்டு இருக்கேன்!)

வாழ்த்துக்கு நன்றி!

said...

கோபி,

தேங்ஸ்!!!!

அதி அயிந்தி ஜூன் ஐதோ தேதி.

மீரு அந்துரு பாக உன்னாரா?

ரோஜு கலல அம்மாயி வஸ்துந்தா?

said...

என் பெயர் இந்த பதிவில இருக்கு. ஏன்? எதாச்சும் வலைப்பதிவர் மாநாட்டுக்கு கூப்புடுறீங்களா? சுத்தமா ஒன்றுமே விளங்கவில்லை. :o(

அட!திருமணநாள் வாழ்த்துக்கள். உங்களுக்கு வரமுதல் 2 நாளைக்கு முதல் தான் எங்களுக்கு வந்திச்சு! :o)

said...

அன்புள்ள ஷ்ரேயா,

//என் பெயர் இந்த பதிவில இருக்கு. ஏன்? எதாச்சும் வலைப்பதிவர் மாநாட்டுக்கு
கூப்புடுறீங்களா? சுத்தமா ஒன்றுமே விளங்கவில்லை. :o(//

இந்த விளையாட்டுதானே வேணாங்கறது?

இது புத்தக விளையாட்டாம்!!! எல்லோரும் அவுங்கவுங்க கிட்டே என்னென்ன புத்தகம்
இருக்கு, என்னாத்தை இப்பப் படிக்கிறாங்கன்னு எல்லாம் 'டாம்டாம்' போட்டுக்கிட்டு
இருக்காங்க. என்னையும் இதுலே இழுத்து விட்டாங்க. நானும் உங்களை என் பங்குக்கு இழுத்துட்டேன்!

போதுமா விளக்கம்? எடுத்து விடுங்க உங்க பிரலாபத்தை:-))))

உங்களுக்கும் இனிய திருமண நாள் வாழ்த்துக்கள். என்னைபோல 31 வருசம்
இருக்காதுன்னு உறுதியா நம்பறேன்:-))))

said...

ஐயையோ! முந்திரிக்கொட்டை என்று அம்மா சொல்றதை உறுதிப்படும் படி ஆகிட்டுதே!

இப்பத்தான் சாவகாசமா மிச்ச மீதி வலைப்பதிவெல்லாம் வாசிச்சுட்டு வாறேன்...வாசிக்க வாசிக்கத் தான் ஏன் என் பெயர் போட்டிருக்கீங்க என்று விளங்குது! பதிவாய் போட்டாப் போச்சு.

31 வருசம் வர காலம் இருக்கு! வரும் என்கிற நம்பிக்கையில்...

said...

துளசியக்கா,

//மீரு அந்துரு பாக உன்னாரா? //

இங்கு யாவரும் நலம்.

//ரோஜு கலல அம்மாயி வஸ்துந்தா?//

நேனு: நான் தூங்கும் வேளை கனவுகள் தொல்லை.
அம்மாயி:நான் தூங்கவில்லை.. கனவுகள் இல்லை.

அலா ஜருகுதுந்தன்டி ...