Saturday, July 09, 2005

என் செல்ல( செல்வ)ங்கள்!!! பகுதி 15

ஆஃப்ரிக்கன் சஃபாரி!!!! டிஸ்கவரி சானல்!!! வரிக்குதிரை ஓடிக்கிட்டு இருக்கு! பின்னாலே இருந்து
நாம பாக்கறப்ப அதோட வாலும் பிருஷ்டபாகமும் கறுப்பு வெள்ளைக்கோடுங்களா அழகா இருக்கு!!!நடுவிலே வாலு இங்கும் அங்குமா ஆடுது!! ஹை!!!!!


இப்பக் கொஞ்சநாளா நம்ம 'ட் ரைவ் வே'லே கார் நுழையறப்ப, அதிலும் ராத்திரியிலே காரோட
ஹெட்லைட் வெளிச்சத்துலே ஆஃப்ரிக்கா போகாமலேயே சீன் காட்டிக்கிட்டு இருக்கு ஒண்ணு!
மிடில் ஏஜ்!!! பேரு 'ஷிவா'!!! இதுவரைக்கும் நம்ம பூனைங்களிலே ரொம்ப உயர்வான அறிவும்,நாகரீகமும்
நிறைஞ்சது இது மட்டும்தான்!!!!

பின்கதவு வழியா வீட்டுக்குள்ளெ வர ஆரம்பிச்ச முதல் நாள்!பூனைங்களுக்கே உரிய 'மூக்கை நீட்டும்
சுபாவத்தோடக் கதவு திறந்திருந்த 'ஹால்வே'யை எட்டிப் பார்த்தப்ப நான் சொன்னது,' ஷிவா, அங்கே போகக்கூடாது!
அது வேற யாரோடயோ(!) வீடு'!!! உடனே தலையை உள்ளெ இழுத்துக்கிட்டது, ஒரு நாளும் அங்கே
போகவேயில்லை!!!! கதவு திறந்திருந்தாலும் அந்தப் பக்கம் ஒரு பார்வையை வீசிட்டு எங்க 'லிவிங் ஏரியா'
விலே இருக்கற சோஃபாவுலே ஏறி, பெரிய மனுஷத்தோரணையிலே உக்காந்துக்கும்!!!! நாங்க எல்லோரும்
அந்த யாரோடயோ வீட்டுக்கு( அங்கேதானே நம்ம படுக்கை அறைங்கெல்லாம் இருக்கு)போறதும் வாரதுமாக
இருப்போம்.கப்பு, எப்பவுமே ரைட் ராயலா எல்லா இடத்துக்கும் போகும்!!! இதுங்களை
யெல்லாம் அவ்வளவாப் பொருட்படுத்தாது. ஷிவா வந்து ஏறக்குறைய ஒரு வருஷம் ஆச்சு! திடீர்னு
ஒரு நாள் தள்ளாடி வந்து தரையிலேயே சுருண்டு படுத்துக்கிச்சு. தொட்டுப் பாத்தா நல்ல காய்ச்சல்!

'வெட்'கிட்டே தூக்கிட்டு ஓடுனேன். நம்ம வெட்னரி டாக்டரைப் பத்தி இதுவரை ஒண்ணும் சொல்லலேல்லெ?
அசப்புலே, இல்லையில்லை,அச்சுஅசலா 'ஷான் கானரி'!!! ( இங்கே நியூஸி வந்தப்பின்னேதான் இப்படிச் சொல்றது. இந்தியாவுலே
இருந்தவரைக்கும் 'சீன் கானரி'ன்னுதான் சொல்லிக்கிட்டு இருந்தோம்.அப்ப எல்லா 'ஜேம்ஸ் பாண்ட்' படங்களையும்
விடாமப் பாத்திடுவோம்) 'ஜேம்ஸ் பாண்ட்'லே வந்த மாதிரி இல்லே. இப்ப இருக்கற முதுமையான'ஷான்'!
அவர்கிட்டே இதையும் ஒருநாள் பேச்சுவாக்குலே சொன்னேன். அப்பத்தான் சொல்றாரு, இவரும்
'ஸ்காட்டிஷ்'ஆளுதானாம்!!! நமக்கும் இந்த க்ளினிக்குக்கும் நல்ல 'அண்டட்ஸ்டாண்டிங்' இருக்குது!
விஷயம் என்னன்னா, வருசத்துக்கு ரெண்டுமுறை கப்புவுக்கு 'கடுதாசி' போடுவாங்க,வழக்கமான
'செக்கப்'தேதி எப்பன்னு! நாம ஒரு ' அப்பாயிண்ட்மெண்ட்' எடுத்துக்கணும். இவனுக்கு எப்படித்தான்
தெரியுமோ, கரெக்ட்டா அன்னிக்கு மட்டும் ஆளே கண்ணுலே அகப்படாது!!!நானோ ஒரு அப்பாயிண்ட்மெண்ட்
வாங்கி வச்சுக்கிட்டு ஆளைக்காணாமத் தவிச்சுக்கிட்டு இருப்பேன். எட்டரை மணிவரை பார்த்துட்டு,
ஃபோன் போட்டு வேற ஒரு நாளுக்கு, 'நேரம்' வாங்குவேன். அப்பவும் இதே கதைதான். சாதாரணமாப்
பேசுறப்பகூட 'வெட்'னு சொன்னாப் புரியுதுன்னுட்டு, சாயந்திரம்'அங்கே' போகணுமுன்னு வீட்டிலே
சொல்லிக்கிட்டு இருப்பேன். ராத்திரி ஒம்போது மணிக்கு க்ளினிக் மூடிருவாங்க. கப்பு 'டாண்'னு
வீட்டுக்குள்ளே கம்பீரமா நடந்து வரும்!!!

இந்தத்தகராறு வேணாமுன்னு, ஒரு நாள் 'வெட்'கிட்டே இதைப் பத்திப் பேசுனேன். அவரும் சொல்லிட்டார்,
'இனிமே நீங்க 'அப்பாயிண்ட்மெண்ட்' எடுக்கவேணாம். லெட்டர் வந்த பிறகு பிடிக்கமுடியறன்னைக்கு
பிடிச்சுக்கிட்டு நேரே கொண்டு வந்துருங்க. கொஞ்சம் வெயிட் செஞ்சீங்கன்னா செக்கப் முடிச்சுரலாம்'!!!
இதுவரைக்கும் இப்படித்தான் நடந்துக்கிட்டு இருக்கு!!!!

நம்ம 'ஷான்,ஷிவா'வுக்கு ஊசி போட்டு மருந்தும் கொடுத்தார். ரெண்டு நாளுலே குணம் தெரிஞ்சது. அடுத்த
வாரம் மறுபடிக் காய்ச்சல். இதேபோல நாலைஞ்சு வாரம் குணமாகறதும், காய்ச்சலுமா மாறிமாறி வந்துக்கிட்டு
இருந்துச்சு! 'ஷிவா'வைப் பொறுத்தவரை 'க்ளினிக்' கொண்டுபோறது ஒரு பிரச்சனையே இல்லை! எட்டுமணிக்கு
'அப்பாயிண்ட்மெண்ட்'ன்னா 7.55க்குத் தூக்கிக் கூடையிலே வச்சுக்கிட்டு ரோடைக் க்ராஸ் செஞ்சு
போயிரலாம்!!!! பட்டு!!!! தங்கம்!!!!

'ஷானு'க்கே ஒரு சந்தேகம் வந்துருச்சு போல. ரத்தப் பரிசோதனை செய்யணுமுன்னு சொல்லி ரெண்டு
வெவ்வேற'லேப்'புக்கு ரத்தத்தை அனுப்பினார்! ஒரு வாரத்துலே ரிஸல்ட் வந்துருச்சு!! ஹெச் ஐவி பாஸிட்டிவ்!!!!

இன்னும் வரும்!!!!!



6 comments:

said...

பூனைக்குமா?

said...

ஆமாம் ஷ்ரேயா!!!

வீகெண்ட் சமையல் எப்படி இருந்தது?

துளசி.

said...

//வீகெண்ட் சமையல் எப்படி இருந்தது?//

நல்லா இருந்துது!...உங்க ரெசிப்பி ட்ரை பண்ணக் கிடைக்கல. வெஜி-வீக்கெண்டாப் போச்சு! அஞ்சல் போட்டிருக்கேன்..

said...

சமையல் வாசனை தூக்குது..சிவ பூஜையில் கரடி மாதிரி...எனினும், தடங்கலுக்கு வருந்தவில்லை!!

அது என்னங்க, 'மரத்தடி' பக்கம் போயிருந்தேன். உங்க செல்லங்களைப் பார்த்தேன். இவ்வ்வ்வ்வளவு செல்லங்களா?

said...

வாங்க தருமி,

வணக்கம். மொதமுறையா வீட்டுக்கு வந்திருக்கீங்க.
'மரத்தடி' எப்படி இருக்கு? நல்லா காத்து வீசுமே!!

செல்லங்களுக்கு என்னங்க பஞ்சம். அது பாட்டுக்கு வருதுங்க. அதுங்களுக்குக்கூடத் தெரிஞ்சிருக்கு
'யாரு ஏமாந்தவ'ன்னு!!!( போன ஜென்ம சுற்றம்?)
என்றும் அன்புடன்,
துளசி.

said...

'க்ளிண்டன்' அவனோட 'முதல் கதவு' போட்டுட்டானாம். சந்தோஷமா இருந்தான். அந்தக் கதவுகூட அவனை ஒரு ·போட்டோ எடுத்தேன். சின்னப் பையந்தானே! 17 வயசுதான்//

Thulasi, puthu veettuk kathaiyila pinnoottam poda mudiyalai.
adhaan inga potten.
ithai padicchaattu iththanai naaL ithukkum pinnuttam podaamap ponemee nu irukku.