Thursday, July 28, 2005

ரம்யாவின் மகளே!!!!

இன்று உங்களுக்கு ஆறாவது பிறந்த நாள் என்று ஒரு 'பட்சி' சொன்னது!!!!
தேடித் தேடிப் பார்த்தும் உங்கள் தாயின் மின்னஞ்சல் கிடைக்கவில்லை.
அதனால் உங்களுக்காகவே ஒரு தனிப் பதிவு!!!



நூறாண்டு காலம் வாழ்க!
நோய் நொடியில்லாமல் வளர்க!

சிங்கையில் நடந்த வலைப்பதிவாளர் 'மகாநாட்டில்'
உங்களைச் சந்தித்த நினைவு!

இதனுடன் வருவது
எங்கள் அனைவரின் அன்பும் ஆசியும்!

நல்லா இருங்க.

என்றும் அன்புடன்,
துளசி.


15 comments:

said...

நானும் அவுஸ்திரேலிய வலைப்பதிவர்கள் சார்பில் ரம்யா அக்காவின் குட்டி மகளுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை அள்ளி, துளசியின் வலைப்பதிவிலும், இன்றைக்குக் கொஞ்சம் பலமாக வீசிக்கொண்டிருக்கும் காற்றிலும் தெளித்து விடுகிறேன். வந்து சேரட்டும். மகிழ்வுடன் வளர வாழ்த்துக்கள். :o)

said...

அன்புள்ள துளசிக்கா, உங்களின் அளவில்லாத அன்புக்கு நன்றி. இதைப் பார்த்தவுடன் டக்கென்று கண்ணில் நீர் துளிர்த்து விட்டது. தன்யா பள்ளியிலிருந்து வந்தவுடன் அவளிடம் காண்பிக்கிறேன்.

ஷ்ரேயா, உங்கள் அன்புக்கும் மனமார்ந்த நன்றி. பல நாடுகளில் உள்ள பல நல்ல உள்ளங்களை தெரிந்து கொள்ள வழிவகுத்த ப்ளாகுக்கு ஒரு பெரிய 'ஓ'!!!

said...

துளசி, சூப்பர் அன்பளிப்பு... :-) ரம்யா, காற்றில் குழந்தைக்கு என் ஆசீர்வாதங்களும் வந்து கொண்டிருக்கின்றன:-)

said...

அன்புக்குரிய தன்யா...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

என்றென்றும் அன்புடன்,
அன்பு அங்கிள்.

said...

தான்யாவிற்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

said...

அன்பு துளசிம்மா
வாழ்த்தளிக்கும் வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி
தன்யாவிற்கு மனம் நிறைந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

said...

அன்பு, முகமூடி, அருணா, மதுமிதா,அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.

தன்யாவின் அப்பா மும்பாயில் மாட்டிக் கொண்டிருக்கிறார். நேற்று காலை கிளம்பியிருக்க வேண்டும். இன்னும் flights சரியாக பறக்க ஆரம்பிக்கவில்லையாம். அது அவளுக்கு கொஞ்சம் ஏமாற்றம் தான். ஆனால் இணையத்தில் உள்ள அன்புள்ளங்களால் இந்த பிறந்த நாள் அவளுக்கு (எனக்கும் தான்) ஒரு மறக்கமுடியாத நாளாகி விட்டது.

said...

தான்யாவிற்கு,
என் உளம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

துளசியக்கா,
ஜல்ப்பு சரியாப் பூட்ச்சா????
சுதர்சன்.கோபால்.

said...

தன்யாவுக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்கள்..
மும்பையில் மழை நின்று விமானங்கள் சேவை தொடங்கட்டும்.

said...

//துளசியக்கா,ஜல்ப்பு சரியாப் பூட்ச்சா?//

ஜல்ப்புவா? அது என்ன?

said...

ஜல்ப்பு இன்னும் இருக்கேப்பா! ஆனா அது பாட்டுக்கு அது இது பாட்டுக்கு இது. இதுதானே நம்ம கொள்கை:-)

போனவாரம் இதே நேரம் கோபால் மும்பையிலெ இருந்தார். இப்ப இங்கே. எனக்கு சுசுருஷை பண்ண வேணாமா:-)

தன்யாவோட அப்பா சீக்கிரமே நல்லபடியாத் திரும்பிவந்து பொறந்தநாள் கேக்கை தன்யாக்குட்டிக்கு ஊட்டிவிடுவாரம். தன்யாக்குட்டி சிரிக்குமாம்! ஓக்கேயா?

said...

//ஜல்ப்புவா?அது என்ன?//
ஜல்ப்பு = ஜலதோஷம் = சளி...
ஷ்ரேயா அக்கா, இப்போ பிரிஞ்சதா??

said...
This comment has been removed by a blog administrator.
said...

தன்யாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்,
இந்த இனிய செய்தியை வலைப்பூ மூலம் ஒளிபரப்பிய துளசியக்காவிற்கு பாராட்டுக்கள்!
வீ எம்

said...

தன்யாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்லும் அன்பு உள்ளங்கள் கோபி மற்றும் கோபியின் அம்மா, அப்பா, அம்மம்மா,அப்பம்மா, தம்பி மற்றும் உறவினர்கள்.