Friday, August 12, 2005

ஆடி வெள்ளிக்கிழமை!!!

என்னடா இது திடீர்னு, 'பக்தியோட பாவக்காய் சட்டியோட வேகுதே'ன்னு பாக்கறீங்களா?
ஆடிமாசம்ன்னதும் உங்களுக்கெல்லாம் 'பளிச்'னு நினைவுக்கு வர்றது என்ன? ஆடித் தள்ளுபடிதானே?



இந்தத் தள்ளுபடி விவகாரமெல்லாம் இப்ப சமீபத்துலே, என்ன ஒரு பத்து,இருவது வருசமா வந்ததுதானே?
அந்தக் காலத்துலே, பொங்கல் சமயத்துலே மட்டும் கோஆப்டெக்ஸ்லே ரிபேட்ன்னு சொல்லிக்கிட்டு
ஒண்ணு இருந்துச்சு. எங்கெ பார்த்தாலும் நைலான், நைலெக்ஸ்னு இருந்த காலத்துலே இந்தக் கைத்தறிப்
புடவையை யாரு வாங்குவான்னுட்டு, டவல், பெட்ஷீட்ன்னு அங்கெபோய் அந்த தள்ளுபடியையும் விடாம
இருந்தோம்.

அதுக்கப்புறம் நாட்டைவிட்டுவந்துட்டோம்லெ. வந்த இடத்துலே 'சேல்'ன்னு மொதமொதலாப் பாத்தோம். அதுவும்
பலசரக்கு சாமானுங்க மட்டும்தான். ஆனா, அங்கே வருசாவருசம் வர்ற 'புயல் திருவிழா' சமயத்துலே மட்டும்
கடைங்களுக்குள்ளெ வெள்ளம் வந்து பாழாகி(?)ப்போன சாமான்களுக்கு 'சைக்கிளோன்/ஹரிக்கேன் சேல்'ன்னு ஒண்ணு
அமர்க்களப்பட்டுக்கிட்டு இருந்துச்சு. இன்ஷூரன்ஸ் காசு வந்துர்றதாலே எல்லா சாமான்களையும் இப்படி வித்துருவாங்க.
அப்ப 'எவர்சிவர்'சாமான்கள் அதுவும் 'எக்ஸ்போர்ட் குவாலிட்டி' எல்லாம் அடிவிலைக்கு வந்துரும். ஊருக்குள்ளெ ஒரு
விசேஷமுன்னா நாம ச்சும்மாக்கையைக் கட்டிக்கிட்டு உக்காந்திருக்க முடியுமா? ஏதோ நம்மாலான உதவின்னுட்டுப்
போய் பாத்திரங்களை வாரிக்கிட்டு வர்றதுதான். இது இப்ப மாறிப் போச்சாம். 'வெள்ளத்துக்குக் கொடுத்துக்
கட்டுப்படியாவறதில்லேப்பா'ன்னு இன்ஷூரன்ஸ் கம்பெனிங்கள்ளாம் சொல்லிருச்சாம். எங்கேன்னு கேட்டா,
ஃபிஜித் தீவுகளிலே!

இங்கே நியூஸிக்கு வந்தபிறகு பார்த்தா, சேலே சேல்தான் எப்பவும். வருசம் பூராவும் எதாவது இருக்கு. புதுவருசம்
பொறந்ததும் 'நியூ இயர் சேல்'. அந்த மாசமே மொத ரெண்டு வாரம் போச்சுன்னா, ஸ்கூல் ரி ஓப்பனிங் சேல். மாசக்
கடைசியிலே கோடைவிடுமுறை முடிஞ்சு, கல்வி ஆண்டு ஆரம்பிக்குதே, அதுக்காக.

ஃபிப்ரவரி 6 ஆந்தேதி இங்கே வைடாங்கி ஒப்பந்தநாள். அதுக்காக ஒரு வாரம் முன்னாடியே 'வைடாங்கி சேல்' ஆரம்பிச்சுரும்.
அந்தமாசம்தான் இங்கே கோடைகாலம் முடியுற காலம். எண்ட் ஆஃப் த சீஸன் சேல் இதோ ஆரம்பிச்சாச்சு.

மார்ச் வந்துருச்சா? நியூ சீஸன் ஆட்டம் சேல். கொஞ்ச நாள்லே ஸ்கூல் ஆரம்பிச்சு மொத 'டெர்ம்' முடிஞ்சுரும். இங்கே
மொத்தம் 40 வாரம்தான் பள்ளி வேலைநாள். பப்பத்து வாரத்துக்கு ரெண்டுரெண்டு வாரம் லீவு. கோடைக்கு மட்டும்
6 வாரம் லீவு. இதோ 'ஸ்கூல் ஹாலிடே சேல்' ரெண்டே வாரத்துலே 'பேக் டு ஸ்கூல் சேல்' இது ஏப்ரல்லே. இதேபோல
மூணு டெர்ம்க்கும் மூட, திறக்கன்னு ஆறு சேல் உண்டு. அடுத்தாப்புலேயே குட் ஃப்ரைடே, ஈஸ்டர் சேல்!

மே மாசம் குறிப்பா ஒண்ணும் இல்லாததாலே, பல இடங்களிலே 'ஸ்டாக் டேக்கிங் சேல்', சில கடைங்க மூடுவிழா
நடத்திக்கிட்டு 'க்ளோஸிங் டெளன் சேல்'ன்னு போகும். அடுத்தமாசம் குளுர் ஆரம்பிக்குமுன்னு 'வின்டர் சேல், எண்ட்
ஆஃப் த ஆட்டம் சீஸன் சேல்'னு வேற போய்க்கிட்டு இருக்கும்.

ஜூன் தொடங்கிருச்சுன்னா, 'குவீன்ஸ் பர்த்டே சேல்'அப்புறம் ஜூலையிலே வருமானவரிக் கணக்குக் கொடுக்கற
நாள் வந்துரும். அதுக்கும் ஒரு சேல். ஆகஸ்ட்லே வரப்போற வசந்தகாலத்தை வரவேற்கற சேலும், எண்ட் ஆஃப் தெ
வின்டர் சேலும். இங்கே குளுர்கால விளையாட்டு 'ரக்பி'ன்றதாலே அந்தக் கப், இந்தக் கப், ஆஸி கப், நியூஸி கப்ன்னு
அதுங்களை முன்னிட்டு சிறப்பு சேல்.

செப்டம்பர் தொடங்கிடுச்சுன்னா ஸ்ப்ரிங் சேல். அக்டோபர்லே 'லேபர் டே சேல்' நவம்பர்லே கேன்டர்பரி ஷோ டே.
இது கிராமப் புற விவசாயிங்க, நகரங்களுக்கு அவங்களொட பெஸ்ட் ஆடு, மாடு,பன்னி, குதிரைன்னு மிருகங்களைக்
கொண்டுவந்து காட்டறது. இது மூணுநாள் திருவிழா. உண்மையைச் சொன்னா நம்மூர் கோவில் திருவிழாவேதான்.
ரங்கராட்டினம், பஞ்சு முட்டாய், ஜயண்ட் வீல்னு எல்லா சமாச்சாரமும் இருக்கும். இதுக்காக ஒரு சேல்!

இது முடிஞ்சவுடனே கிறிஸ்மஸ் சேல் ஆரம்பிச்சுரும். சில கடைகளிலே இப்பல்லாம் அக்டோபர்லே லேபர் சேல் முடிஞ்சவுடனே
கிறிஸ்மஸ் சேல் ஆரம்பிச்சுடறாங்க. கிறிஸ்மஸ் முடிஞ்ச மறுநாளே 'பாக்ஸிங் டே சேல்' ஒரு வாரம். அது முடிஞ்சவுடனே
நியூ இயர் சேல் மறுபடி! சக்கரம் சுழல ஆரம்பிச்சுரும்.

அடடா, சேல்லை விட்டுட்டமேன்னு கவலையே வேணாம். அதான் எதாவது ஒண்ணு வந்துக்கிட்டே இருக்குதுல்லெ.

நடுநடுவிலே எக்ஸ்ட்ராவா, ரீ லொகேஷன் சேல் வேற வரும். இந்த சேலுங்களிலே தங்கநகைக் கடைகள் கூட சேர்த்திதான்!
இந்தக் கடைங்களிலெ அநியாயத்துக்கு 'ஹாஃப் ப்ரைஸ் சேல்' அடிக்கடி வரும். நம்புங்க,அரைவிலைக்குத் தங்கங்க!
அது 'ஒம்போது கேரட்' ன்றபடியால நமக்கு வேண்டாததா ஆயிருச்சு. இதெல்லாம் பத்தாதுன்னு வீக் எண்ட் சேல், ஸ்பெஷல்னு
வருசத்துலே அம்பத்திரெண்டு வாரமும் சூப்பர் மார்க்கெட் சேலுங்க வேற மனுஷனைப் பாடாப் படுத்திரும்!

மனசு பாருங்க, ஆடி மாசமுன்னதும் தள்ளுபடி ஞாபகத்துலே எல்லா சேல்லையும் ஒரு ரவுண்டு வந்துருச்சு. போட்டும்,
இன்னிக்கு நம்ம தோழி வீட்டுலே வரலட்சுமி நோம்பு கொண்டாடுறாங்களாம். ஆவணி மாசம் வரப்போறதை என்னாத்துக்கு
இப்பவே செய்யறீங்கன்னு கேட்டா, அடுத்தவாரம் பண்டிகையன்னிக்குத்தான் ஆவணி அவிட்டமும் வர்றதாலே,'ரெண்டையும்
சேர்த்துச் செய்யக்கூடாது(!)ன்னு ஊர்லே இருந்து ஃபோன்லே சொன்னாங்களாம்'.

ஆடி வெள்ளிக் கிழமையாவும் இருக்கறதாலே, சாயந்திரமாப் போய், அவுங்க தர்ற வெத்திலை பாக்கு வாங்கிக்கணும்.
அட, இந்த ஊர்லே வெத்தலைகூட கிடைக்குதான்னு 'குண்டக்க மண்டக்க'ன்னு கேள்வி கேக்கக் கூடாது.

கையைக் காலா நினைச்சுக்க முடியுமுன்னா, ஆப்பிளை வெத்தலையாவும், ஆரஞ்சைப் பாக்காவும் நினைக்கக்கூடாதா?


26 comments:

said...

// கையைக் காலா நினைச்சுக்க முடியுமுன்னா, ஆப்பிளை வெத்தலையாவும், ஆரஞ்சைப் பாக்காவும் நினைக்கக்கூடாதா?
//

;-))

said...

ஆஹா ஏன்டா இந்த ஊர்ல இவ்வோளோ சேல் போடுறானேன்னு பார்த்தேன், எல்லா தெற்குத்தீவுல நிங்க
ஆரம்பிச்சுவிட்டதுதானா?

//'ரெண்டையும்
சேர்த்துச் செய்யக்கூடாது(!)ன்னு//

இரண்டயும் சேர்த்து செஞ்சா
(ஒரே நாள்ள போளியையும்
கொழிக்கட்டையையும் உள்ள தள்ளினா) வயித்துக்கு ஒத்துக்காதுன்னுதா
இதமாதிரி ஒரு ஏற்பாடுன்னு காஞ்சிபுறத்திலர்ந்து வந்த ஒரு சஞ்சிகைல படிச்சேன்.

said...

நன்றி முகமூடி.


ஆமாம் சுரேஷ். ரெண்டு நாளைக்கு விருந்துன்னா நல்லாத்தானே இருக்கும் 'சாப்புடறவங்களுக்கு'!

துளசி.

said...

அதென்ன அப்பிளும் தோடம்பழமும்? ஏன்..கிவிப் பழத்துக்கு என்ன குறை? அதானே பாக்குக்கு ஒன்று விட்ட அண்ணா நிறத்திலே இருக்கே..உருவமும் கிட்டத்தட்ட அதேமாதிரி..அண்ணா என்பதினாலே கொஞ்ஞ்ச்ச்ச்சம் பெரிசு! :O)

உங்க ஊர்ல வெத்திலை பாக்கு இல்லையா? ஸ்பைஸ் கடையில் கிடைக்குமே? (ஃபிஜியிலேருந்து வாறது தான்!)

said...

வெத்தலை எப்பவாவது கிடைக்கும்தான். ஆனா யாரு வெத்தலை போட்டுக்கறா?
கிடைச்சதை அப்படியே ஃபிரீஸரில் கொண்டுவைக்கறதுதான்(-:

ஏற்கெனவே பல்லு இருக்கற அழகுக்கு வெத்தலைக்கறைவேற வந்தா அவ்வளவுதான்.

said...

நாளும் கிழமையும்-னா இதுமாதிரி பதிவுகள்தான், நம் பண்பாட்டை, கலாச்சாரத்தை நாகரீகத்தை ஞாபகப்படுத்துகின்றன.!.

//ஆடி வெள்ளிக் கிழமையாவும்
இருக்கறதாலே, //

அப்ப இது ஆடி மாசம்-னு சொன்னா, 'மழை' பதிவு தேதி ஏங்க ஆவணி-ன்னு சொல்லுது!

நாராயண... நாராயண... நாராயண...

said...

அதுவா...க்ருபாவோட & கொசப்பேட்டை குப்சாமியோட நிரலிய கடன் வாங்கி..நமக்குத் தெரிஞ்ச மாற்றங்கள் செய்தேனா..அது இங்கிலிபீசுல என்ன மாசமோ அதை தமிழ்ல சொல்லுது!! சரியா யாராவது தமிழ்த்திகதி காட்டுற மாதிரி நிரலி கண்டு பிடிக்கிற வரை..கொஞ்சம் (அதாவது 14 - 17 திகதிகள் வரை) அப்புடி இப்புடித்தான் இருக்கும்! கண்டுக்காதீங்க பாஸ்! ;O)

சும்மா ஆனந்தமா தூங்குறவரை எதுக்கு "நாராயண..நாராயண" என்று கூப்பிட்டு தொந்தரவு பண்றீங்க! பாவம்..அபிஷேகம் என்கிற பெயரில் ஐஸ்தண்ணியில நனைக்க முன்னால கொஞ்ச நேரமாவது படுக்கட்டும்!!விடுங்க..

said...

ஆங்கிலம் வேண்டாம் என்பதற்காக தமிழ் என்ற பெயரில் தப்பாக தேதி காட்டுவது....

said...

சோதனை.

said...

எத்தனை சேல் இருந்தா என்ன? இந்த லேடீஸ்க்கு பத்துமா என்ன? ஒவ்வொரு சேல்போதும் கூட்டிட்டுப்போய் சும்மாவாச்சும் கடையை சுத்தவைக்கற சகதர்மிணி ஞாபகத்துக்கு வர்றா! நியூஸிலயா இருக்கீங்க, கொடுத்து வச்சவங்க. இயற்கை அழகு ரொம்ப நல்லா இருக்கும்னு கேள்விப்பட்டிருக்கேன்.

said...

சிலந்தி,
//இயற்கை அழகு ரொம்ப நல்லா இருக்கும்னு கேள்விப்பட்டிருக்கேன். //

ஆமாங்க. கட்டாயம் இந்தப் பக்கம் ஒரு விசிட் அடிங்களேன். ஒரு வலைப்பதிவர் மகாநாடு நடத்திப்புடலாம்:-))))

என்றும் அன்புடன்,
துளசி.

said...

அக்கா எங்க வூட்டுகாரரு கிட்டே "வாங்க அந்த sale க்கு போனா 30% மிச்சப்படுத்தலாம்" அப்படின்னு சொன்னா, "வீட்லே இருந்தா 100% மிச்சப்படுத்தலாம்"ன்னு பதில் சொல்வாரு!! என்னத்தே செய்யறது???

said...

ரம்யா,

நானும் சிலசமயம் இங்கே 'அப் டு 90% ஆஃப்'னு போட்டுருக்கற கடைகளிலே அப்பப்பக்
கேக்கறது 'எப்ப 100% ஆஃப் வருது?'ன்னு!

ஆனா இங்கெ பலகடைகளிலே 'சேல்'ன்னு சொன்னா அது நிஜமான சேல்தான் .
விலையை ஏத்திட்டு அப்புறம் இறக்குறதெல்லாம் இல்லை.

சில சமயம் நாம் எதாவது பொருள் வாங்கின மறுநாள் அது சேலில் வந்துரும்.
அந்தப் பொருளை உடனே திருப்பிக் கொடுத்துட்டு ( அதான் 7 நாளைக்குள்ளெ
திருப்பிறலாமுன்னு கன்ஸ்யூமர் ரைட் சொல்லுதே) அதையே 'பை பேக்' கா
திரும்பவாங்கிரலாம்!

எப்படியோ குறைஞ்ச விலையிலே கிடைச்சா சரிதானே. ஏற்கெனவே எல்லா சாமானுக்கும்
300% லாபம் வச்சுடறதாலே சேல் ப்ரைஸிலும் கொஞ்சம் லாபம் இருக்கத்தான் செய்யும்.

என்றும் அன்புடன்,
அக்கா

said...

துளசி
எங்க அக்காவுடைய வூட்டுக்காரரு கூப்பான், மேல கூப்பான் கொடுத்து ஏற்கெனவே சேல்ல இருந்த சூட் வாங்கினப்ப கடைக்காரங்க நாங்க ஏதாவது பணம் குடுக்கணுமா அப்படின்னாங்க!!
வெத்தலை காய வச்சு பொடி பண்ணி வெந்நீரில் போட்டு சாப்ப்ட்டா சளி பிடிக்காது(வராது).

said...

அன்புள்ள பத்மா,

//வெத்தலை காய வச்சு பொடி பண்ணி வெந்நீரில் போட்டு சாப்ப்ட்டா சளி பிடிக்காது(வராது).//

ஆஹா, இது தெரியாமப் போச்சே. இனி வெத்தலை ஜூஸ்தான்:-))))

said...

அன்புள்ள அவதாரம்,

வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றி.

said...

// ஆமாங்க. கட்டாயம் இந்தப் பக்கம் ஒரு விசிட் அடிங்களேன். ஒரு வலைப்பதிவர் மகாநாடு நடத்திப்புடலாம் // யக்கோவ்.. நானு ரெம்ப பிஸி... ஆனா இவ்வளவு கட்டாயப்படுத்தி கூப்பிடுறதுனால உங்க அன்புக்காக வேண்டி வரேன் அக்காங்... டிக்கட்டு எப்ப அனுப்பறீங்கன்னு சொன்னா லீவு போட வசதியா இருக்கும்...

// வீட்லே இருந்தா 100% மிச்சப்படுத்தலாம் // சூப்பர் யோசனை

// அனைத்து இந்திய நண்பர்களுக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள். // நானு கூட ஒரு சொதந்திர தின கவிதை (?!) எளுதியிருக்கேன் இங்க

said...

முகமூடி,

இப்பத்தான் டிக்கெட் ப்ரிண்ட் செய்யக் கொடுத்திருக்கேன்.

வரட்டும் அனுப்பினா போச்சு:-)))

இன்னும் யார் யாருக்கு வேணும்? சீக்கிரம் சொல்லுங்க.

என்றும் அன்புடன்,
அக்கா

said...

//இன்னும் யார் யாருக்கு வேணும்? சீக்கிரம் சொல்லுங்க//

எனக்கும்! :O)

said...

1.முகமூடி
2. ஷ்ரேயா
3.?????

said...

அன்புள்ள மஞ்சுளா,

எப்படி இருக்கீங்க? நீங்க சொன்ன Mail in Rebate நான் இதுவரை கேள்விப்படலையே.

அடடா நான் எதாவது மிஸ் பண்ணிட்டேனோ?

கொஞ்சம் விளக்கமா இதுபத்திச் சொல்லுங்க. சீக்கிரம், சேல் முடிஞ்சிடப்போகுது.

என்றும், அன்புடன்,
துளசி.

said...

///கையைக் காலா நினைச்சுக்க முடியுமுன்னா, ஆப்பிளை வெத்தலையாவும், ஆரஞ்சைப் பாக்காவும் நினைக்கக்கூடாதா?
//

HA HA HA CORRECT !! nenaichukalamey...

indha story padicheengla....
padichupaarunga
http:\\arataiarangam.blogspot.com

said...

நன்றி மஞ்சுளா.

இதுதானா சமாச்சாரம். இங்கே அதுக்கு 'மணி பேக் காரண்டி'ன்னு சொல்றாங்க. டூத் ப்ரஷ்
வாங்குனாக்கூட சிலசமயம் இது கிடைக்குது. அஞ்சு டாலருக்குக் கீழே( இங்கே 5$ நோட்டுத்தான் கடைசி)
இருந்தா ஒரு அட்டையிலே காசை செல்லோடேப் ஒட்டி அப்படியே 'என்வலப்'புலே வச்சு அனுப்புறாங்க.

போனவாரம் ஒரு 'அவன் க்ளீனர்' வாங்குனதுக்கு நாலுவகை கிஃப்ட் காமிச்சு செலக்ட் பண்ணச் சொன்னாங்க.
நான் ஒரு மைக்ரோ டஸ்டர் வேணுமுன்னேன். இன்னும் மூணுவாரத்துலே போஸ்ட்லே வரும்.

கொஞ்ச நாளுக்கு முன்னாலே மூணு 'கேட் பிஸ்கெட்ஸ் பாக்'( நல்லவேளை .நாம எப்பவும் வாங்குற ப்ராண்ட்தான்.)
வாங்குனா ஒரு கேட் gym free.கையோட கொடுத்துட்டாங்க. நம்ம பூனை விளையாடுது!

buy one get one free இருக்குதானே?

என்றும் அன்புடன்,
துளசி.

said...

வீ.எம் நன்றி.

உங்க பதிவுலே கதைக்கு பின்னூட்டம் போட்டுருக்கேன்.

said...

//ஒரு கேட் gym free.கையோட கொடுத்துட்டாங்க. நம்ம பூனை விளையாடுது!//

கப்புவா ஜி.கே.யா? இதுலே என்னுது உன்னுது என்று போட்டி இல்லையா? ;O)

said...

ஷ்ரேயா,

நம்ம வீட்டுலே 'நல்லது'எல்லாம் கப்புவுக்குத்தான். அது சீனியர் மட்டுமில்லே,
ரொம்ப நாசுக்கு. அளவா சாப்புடும். நல்ல பொருளாக் கொஞ்சமா கொடுக்கணும்.
பலசமயங்களிலே ரொம்பவே ச்சூஸி! க்ரீடி இல்லை.

நம்ம ஜி.கே இதுக்கு நேர்மாறா இருக்கும். ரெளடி. ச்சும்மாப் போய் கப்புவைத் தொந்திரவு செய்யும்.

கப்புவோட இடத்தைப் புடிச்சுக்கரதுலே கில்லாடி. ரொம்ப ஜெலஸி! இப்ப ஒரு வாரமாத்தான் ரெண்டும்
ஒரே அறையிலே( எங்கே? கிச்சன்லேதான்!) இருக்குதுங்க. நான் கீஷே பார்த்து தாண்டி தாண்டித்தான்
வேலை செய்யணும். என்னைக் கீழே தள்ள ப்ளான் இருக்கு போலெ.

துளசி.