Friday, October 28, 2005

ஆன்மீகம் VS சோஷியல்.

தீபாவளி ஸ்பெஷல் 2

அடக்கடவுளே!

ஒரே நாளுலே எதுக்கு ரெண்டு இடத்துலே விழா? எங்கேன்னு போறது? ரெண்டுமே முக்கியமானது.

ஆன்மீகம் இலவசம்.( ஆச்சரியமா இருக்குமே!)

சோஷியல் காசு.

இதுலே பாருங்க, வயசான காலத்துலே ஆன்மீகமா இருக்கறது ரொம்பவே முக்கியமுன்னாலும், இந்தசோஷியல் விழா இன்னொரு வகையிலே முக்கியமாப் போச்சு.

'இந்தியன் சோஷியல் அண்ட் கல்சுரல் கிளப்'போட 'தந்தை'( ஃபவுண்டர்) கோபால்தான். ஆரம்பிச்சது 1997லே.நல்லாத்தான் நடந்துக்கிட்டு வருது. போகாட்டா முடியுமோ? அதுவுமில்லாம, இன்னைக்கு வசூலாகற காசெல்லாம்காஷ்மீர் பூகம்ப நிவாரண நிதிக்குப் போகுது. நாலு டிக்கெட்டுன்னா நாலு டிக்கெட். நஷ்டப்படுத்தலாமோ?


முதல்லே சோஷியலுக்குப் போயிட்டு அங்கே இருந்து ஆன்மீகம்னு முடிவாச்சு.


ஏழுமணிக்கு விழா ஆரம்பம். உதவறதுக்காக கொஞ்சம் சீக்கிரமாப் போனோம். மேடை அலங்காரத்தையெல்லாம்சரிபார்த்துட்டு, தீபாவளி ஜோதிக்காக 200 மெழுகுவத்தி( டீ லைட் கேண்டில்)களை ஏத்திவச்சோம். ஜனங்க வரஆரம்பிச்சாங்க. ரெண்டு எம்.பி.ங்க வேற வந்தாங்க. அதுலே ஒருத்தர் மந்திரி. இவுங்கதான் போன கவர்மெண்ட்டுலேஇம்மிக்ரேஷன் மந்திரியா இருந்தாங்க. அவுங்க ஆஃபீஸ்லே ஒருத்தர் செஞ்ச குழப்படியாலே இவுங்க பதவியைபறிச்சுட்டாங்க. இந்தமுறை இவுங்க காமர்ஸ் மினிஸ்ட்டர். இவுங்க ரெண்டுபேரும் நமக்கு முந்தியே நல்லாத் தெரிஞ்சவுங்கன்றதாலே கொஞ்ச நேரம் 'கப்பா' மாறிக்கிட்டு இருந்தோம். மற்ற எம்.பி. மதுரைக்குப் போய்வந்தவர். மீனாக்ஷிடெம்பிள் பத்திச் சொல்லிச்சொல்லிச் சந்தோஷப்பட்டார். மீனாக்ஷியைப் பத்தியும் இன்னைக்கு ஒரு டான்ஸ் இருக்குன்னு சொல்லிபதிலுக்கு நானும் அவரைக் குஷிப்படுத்தினேன்.முதல் நிகழ்ச்சியே சாப்பாடு. இந்தமுறை வழக்கமா இல்லாம வேற மெனு.இதையும் சொல்லவா, இல்லே சிலர் கண் வைக்கறாங்கன்னு சொல்லாம விடவா? மறுபடியும் ஒருத்தர்(!) கேட்டுக்கிட்டதுக்கு இணங்கமெனுவைப் போடறேன்.


புது மெனு. சிம்பிள். பேல்பூரி, பாவ் பாஜி, தஹி வடா. ஒருவழியா எட்டுமணிக்குக் கலை நிகழ்ச்சிகள் ஆரம்பம் ஆச்சு.ஆரம்பமே ஒருபரதநாட்டியம். குருவாயூர் கிருஷ்ணனைப் பத்திப் பாட்டு. ரெண்டு குட்டிகள் வளரே நன்னாயிட்டுச் செய்து.அப்புறம் மந்திரியம்மா பேசுனாங்க. எப்படி? அடுத்த எலக்ஷன்லே ஓட்டுக்கு இப்பவே அஸ்திவாரம் போட்டமாதிரி.இங்கே நம்ம பார்லிமெண்ட்லே தீபாவளி கொண்டாடப் போறதைச் சொன்னாங்க. போகப்போக ஒருவேளை தீபாவளிக்குலீவு கிடைச்சாலும் கிடைக்கலாம்! ஸ்தானம் உரப்பிச்சு:-)))


ஒரு பண்டிட் வந்து 'பூகம்பத்துலே உயிர் இழந்தவுங்களுக்காக' ஸ்பெஷலா பிரார்த்தனைகள் செஞ்சார்.'காயத்ரி'யோடுமுடிச்சார்.


பாட்டுங்க ஆரம்பிச்சது. இந்த 'கரியோக்கி' வந்தப்புறம் எவ்வளவு வசதியாப் போச்சு பார்த்தீங்களா? ஒரு BGMமும்இல்லாமப் பாடுனா வெறிச்சுன்னு இருக்குல்லே? நம்ம நண்பர் ஒருத்தர்( அய்யோ, இங்கே எல்லாரும் நண்பர்கள்தான்.தெரியாதவுங்க அபூர்வம். அப்படி ஒண்ணுரெண்டுபேர் இருந்தாலும் தெரிஞ்சுக்கவேண்டியதுதான்!) ஒரு பெங்காலிப் பாட்டுபாடுனார். அப்புறம் லண்டனிலே இருந்து வந்த ஒருத்தர் ரெண்டு பாட்டுப் பாடிட்டு, இன்னும் வந்து பாடுவேன்னு 'தம்கி'கொடுத்துட்டுப்போனார்.அதுக்கப்புறம் ஒரு இளைஞர்( பையன்னு சொன்னா நல்லா இருக்காதுல்லே?) 'குச் ந கஹோ,குச் பீனா கஹோ' ரொம்ப அருமையா அட்டகாசமாப் பாடுனார். அவர்பேர் ஜிகர். ஜிகர்தண்டாதான்!


கோபால் சில கரியோக்கி டிஸ்க் தமிழ்ப்பாட்டுங்க வாங்கிவந்துருக்கார். விடப்போறதுல்லே. நானும் ஒரு தமிழ்ப்பாட்டுப்பாடிரணும். எதுக்கு அந்தக் குறையை வைக்கிறது? 'பூப்பூக்கும் ஓசை, அதை கேட்கத்தான் ஆசை' நல்லா வருது.(டச் வுட்)


சலாம் நமஸ்தே படப்பாடல் ஒண்ணுக்கு இங்கே இருக்கற டான்ஸ் ட்ரூப் ஆடுச்சு. இவுங்கதான் நேத்து சங்கம்விழாலே 'ரசிகா' ஆடுனவுங்க. அப்புறம் மதுரை மீனாக்ஷியைப்பத்தி ஒரு அசல் பரதநாட்டியம். இவுங்களும் இங்கேஇருக்கற பரதநாட்டியப் பள்ளி மாணவிகள்தான். நம்ம தோழியோட மகள்தான் இங்கே ஸ்கூல் நடத்தறாங்க. வாரம் ஒருநாள் வகுப்பு.டீச்சர் இங்கே மருத்துவர். ரொம்ப பிஸி.அதனாலே நேரம் கிடைக்கிறது கஷ்டம். இவுங்களுது கொஞ்சம் பெரிய மாணவிகளுக்கு. இவுங்க இல்லாம இன்னொருத்தரும்( அவுங்களும் இன்னொரு தோழியின் மகள்தான்)ச்சின்னப்புள்ளைங்களுக்குச் சொல்லித்தராங்க.இவுங்களோட மாணவிகள் 'என்ன தவம் செய்தனை'க்கு ஆடுனாங்க. சவுத் இந்தியன் டான்ஸ், பரதநாட்டியத்தைப் புகழ்ந்து மேடையிலே பேச்சு போனப்ப, 'என்னவோ நாங்கதான் இதுக்கு அத்தாரிட்டி'மாதிரி பெருமையா உக்காந்துக்கிட்டு ஆமோதிச்சுக்கிட்டு இருந்தோம்:-)


நண்பர் இங்கே 'க்ரோசரி பிஸினெஸ்' செய்றார். சாப்பாடு முழுசும் அவரே ஸ்பான்சார் செஞ்சதுமட்டுமில்லாம,பூகம்ப நிதிக்கு ஒரு பாக்ஸ் வச்சு, அதுலே எவ்வளவு டொனேஷன் சேருதோ அதுக்கு மேட்ச் பண்ணி தானும் தரேன்னுஅறிவிச்சதாலெ பலரும் அதுக்கு நிதிஉதவி செஞ்சோம். நாமாவது இங்கே பத்திரமா குடும்பத்தோட இருக்கோம், பண்டிகைகொண்டாடிக்கிட்டு. பூகம்பத்துலே மாட்டிக்கிட்டவங்க பாவம்தானே?


ஆடறபுள்ளைங்களுக்குத்தான் அலைச்சலாப் போயிருச்சு. ரெண்டு விழாவுலேயும் கலந்துக்கிட்டு ஆடறதாலே இங்கே முடிச்சுட்டுஅங்கே ஓடறதும், அங்கே முடிச்சுட்டு இங்கே ஓடியாறதுமா இருந்தாங்க. அஞ்சுநிமிஷ ட்ரைவ் தூரம்தான்றதாலேசரியாப்போச்சு.


இடைவேளை. டிஸ்ஸர்ட் டைம். ஃப்ரூட் ஸாலட், ஐஸ்க்ரீம், லட்டு, பர்பின்னு சிம்பிளா முடிச்சுக்கிட்டோம். அதுக்கப்புறம்'தாண்டியா'வுக்காக சேர்களையெல்லாம் எடுத்திட்டு ஹாலை ஒழுங்கு செஞ்சாங்க. நாங்க என்ன ஆடவா போறோம்?பக்தி வந்துருச்சு...ஓடு ஆன்மீகத்துக்கு....... ஓடினோம்.


அங்கே ஹவன், பூஜையெல்லாம் முடிஞ்சு, கலை நிகழ்ச்சிகளும் அநேகமா முடியுற சமயம். கடைசி டான்ஸ் மேடையிலே!நம்ம'ஹரே கிருஷ்ணா'வைச் சேர்த்த ரெண்டு குட்டிப்பொண்ணுங்க ஆடறாங்க. முடிஞ்சதுன்னு பார்த்தா அதுக்கப்புறமும்இன்னும் ஒரு நடனம் இருந்துச்சு. மணியும் பத்தரை ஆயிருச்சு.அப்புறம் பரிசளிப்பு. சாப்பாடு ஆரம்பிச்சது.வழக்கமான ஃபிஜி இந்தியன் மெனு. 'ஃபிர்ஸே ஆலூ பைங்கன் பாபா, ஃபிர்ஸே ஆலூ பைங்கன்'!!!
கடவுள் என்ன ரெண்டு வயிறா கொடுத்திருக்காரு? அதனாலே அவுங்க வேண்டுகோளை 'நாசுக்கா' மறுத்துட்டு தெரிஞ்சவங்களோடே(!) கொஞ்சமா கப்பா மாறிட்டு வீடுவர்றப்ப கிட்டத்தட்ட 12 மணி.


த்ரீ டவுன். சிக்ஸ் டு கோ...... ஆச்சு இந்த சனிக்கிழமை மறுபடி மூணு இடத்துலே. போதாக்குறைக்குப் பொன்னமான்னுஒரு பர்த்டே பார்ட்டிவேற. நடக்கற காரியமா? 'ப்ரைவேட் கெட் டு கெதெர்'களை தள்ளிவச்சுட்டு, CFCESSAக்குப்போகணும். இது என்னவா?


Christchurch Fiji Cultural Education Social Sports Association.


ஆம்! அநேகமா அதே பாட்டு, அதே நடனம், அதே ஜனங்கள்......( கங்கைக்கரைத் தோட்டம்....)

9 comments:

said...

//ஒருவேளை தீபாவளிக்குலீவு கிடைச்சாலும் கிடைக்கலாம்!//

தீபாவளி! வரும் முதலாம் திகதிதானே..! அப்பிடியெண்டா எங்களுக்கு லீவு... ஏதோ Melbourne cup புண்ணியத்தில..

said...

சயந்தன்,

அடிச்சீங்களே ப்ரைஸ்!

அப்ப ஜமாய்ங்க இந்தத் தீபாவளித் திருநாளை.

எங்கள் அன்பான தீபாவளி வாழ்த்துக்கள்.

said...

ஒரு மாசத்திற்கு உங்களோட டிராவலிங் பட்ஜெட் என்ன?

எப்பொழுதுமே சுறாவளி சுற்றுப்பயணம் தான் செய்வீங்க போல

said...

கணேஷ்,

ட்ராவலிங்?
பட்ஜெட்?

எங்கே? எல்லாம் குண்டு சட்டிக்குள்ளே குதிரைதான்:-)

உள்ளூர் சுற்றல் ஒரு ட்ராவலா?

said...

உள்ளூருக்குள்ளேயே இவ்வளவு குதிரை ஓட்டுறீங்களே.......ம்ம்ம்ம்ம்..........குதிரையேறிய கலையக்கான்னு அடுத்த பட்டம் குடுத்துர வேண்டியதுதான். அப்புறம் நீங்க எனக்கு பட்டம் கொடுத்த படுவா என்ற பட்டம் கொடுப்பீங்க. ஹா ஹா ஹா

அப்புறம்...கண்டிப்பா அடுத்த வாட்டியாவது பாட்டு படிங்க.

said...

டான்ஸ் பார்ட்டி ஒருதரம் ஓடினா, பார்த்துகிட்டிருக்கிற கோஷ்டி எதிராக்க ஓடறீங்க. நல்ல பி.டி.உஷா ஊரு! ஓடறீங்க இல்லாட்டி சாப்பிடறீங்க. கொஞ்சம் செரிமானமாக ரெண்டு தாண்டியா ஆட்டம் போட்டிருக்கலாமில்லே?

மயில் வந்தது. சூப்பர். கமெண்ட்&போட்டோ நாளை.

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

said...

ராகவன்,
எல்லாப் 'பட்டத்தையும்' சேர்த்துவையுங்க. இந்தியா வந்தவுடனே பறக்க வுட்டுரலாம்:-)

said...

தாணு,
சாப்ட்டுசாப்ட்டு ஓடுனா இல்லே ஓடிஓடி சாப்ட்டா செரிமானம் ஆகாதா?:-)

said...

தீபாவளி வாழ்த்துக்கள்.
அக்கா., மடிந்த மடிக் கணணியில் உங்கள் மெயில் ஐ.டி. மாட்டிக் கொண்டது. எனக்கு மெயில் ஐ.டியை கொஞ்சம் தெரியப் படுத்துங்கள். உங்கள் தளத்திலும் இல்லை?.