Saturday, December 24, 2005

புருஷன் வீட்டில் வாழப்போகும் பொண்ணே....

47 நாட்கள்னு சிவசங்கரியோட கதை ஒண்ணு வந்தது யாருக்காவது ஞாபகம் இருக்கா? அதுலே சொன்னதெல்லாம்'கதையல்ல நிஜம்'னு ஆகிப்போச்சுன்னு இப்ப சமீபகாலமா வர்ற செய்திகள் சொல்லுது. இந்தமாதிரி வீட்டு வீட்டுக்குநடக்குதுன்னு நான் சொல்லலை. எங்கியோ ஒண்ணுதான் இப்படின்னாலும், அந்த ஒண்ணும் ஏன் அப்படி நடக்கணும்?


அந்தக் காலத்துலே, நம்ம கொள்ளு/எள்ளுத் தாத்தா & பாட்டிங்க கல்யாணம் எல்லாம் நடந்தப்ப, 'அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதுக்கு'ன்னு இருந்துச்சு. 'பொண்ணுக்குப் படிப்பெல்லாம் எதுக்குங்க. வீட்டுவேலை செஞ்சுக்கிட்டுஅடக்க ஒடுக்கமா இருந்தாப் போதும்'. இந்த நிலமை அதுக்கு அடுத்த தலைமுறைகளிலே கொஞ்சம் மாறுச்சு, பொண்குழந்தை வயசுக்கு வர்றதுவரை பள்ளிக்கூடம் போகலாமுன்னு. மிஞ்சி மிஞ்சிப்போனா ஒரு எட்டாம் வகுப்பு. அப்பவும்சொன்னது என்னன்னா, 'படிச்சுட்டு என்னா வேலை வெட்டிக்காப் போகப்போகுது. வூட்டைப் பார்த்துக்கிட்டு புள்ளைகுட்டிங்களை
வளர்த்தாப் போதும்'.


பொண்ணு எஸ்எஸ்எல்சி வரை படிச்சிருக்கு. 'ஆமாமாம். பொண்ணு படிச்சிருக்கறது முக்கியம். புள்ளைங்களுக்குவீட்டுப்பாடமெல்லாம் சொல்லித்தரணுமுல்லே?' எல்லாம் நம்ம ஊர்ங்களிலே புதுசா முளைச்சு வந்த 'நர்சரிப் பள்ளிக்கூடங்கள்' செஞ்சுவச்ச உபயம். இங்கிலீஷ் கான்வெண்ட்டுலே புள்ளைங்களைச் சேர்க்கலாமுன்னு போனா, படிச்சஅப்பா அம்மாவோட புள்ளைங்களுக்குத்தான் இடம் தருவாங்களாம். வீட்டுப் பாடமெல்லாம் சொல்லித்தர ஆளு வேணுமுல்லே? இது என்னா கதையா இருக்கே? அப்ப ஸ்கோல்லே டீச்சருங்க சொல்லித்தர மாட்டாங்களாமா? அதெல்லாம் சொல்லித் தந்தாலும்வூட்டுலே அம்மாவோட பார்ட் டைமு ஜாப் இதுதான்.


இந்தப் படிப்புலேயே கொஞ்சம் பேர் வேலைக்குன்னு போக ஆரம்பிச்சதும், டீச்சர் வேலை, நர்சு வேலைன்னு மேலேபடிக்கப்போனதும்னு ஆச்சு. நம்ம மக்களுக்கும் , பொம்பிளைப்புள்ளைங்களும் ஆம்புளைப் பசங்களைப் போலவே படிக்கணுமுன்னுஒரு விழிப்புணர்வு வந்து காலேஜு படிப்பெல்லாம் படிக்க வச்சாங்க. மெதுவா பெண்கள் வீட்டைவிட்டு வெளிஉலகத்துக்கு வந்து அதிக அளவில் வேலைக்குப் போக ஆரம்பிச்சு எல்லாம் நல்லபடியாத்தான் நடந்துக்கிட்டு இருந்துச்சு.ஆனா ஒண்ணு, படிப்பு, வேலை, வாங்கற சம்பளம் எல்லாம் ஏறக்குறைய ஒண்ணா இருந்தாலும், பொம்பளைங்களுக்கு ஒரு தனி கவுரதை கொடுத்தாங்கப்பா இந்த ஆம்புளைங்க.


'வீட்டுத்தலைவி. எங்க வீட்டு மகாலட்சுமி.' வீட்டுலெ அடுக்களைப் பொறுப்புமுழுசும் தலைவிக்கே! அடுக்களை மட்டுமல்ல எல்லாமே 'அம்மா'தான். 'அப்பா, இந்தக் கணக்கு வரமாட்டேங்குது.சொல்லித்தாங்கப்பா' 'அப்பா பேப்பர் படிச்சுக்கிட்டு இருக்கென்லே, போய் அம்மாகிட்டே கேளு' ஆமாமாம். படிச்ச மருமகல்லே. நல்லாச் சொல்லித்தரும்( இது வீட்டுலே மத்த பெருசுங்களோட நினைப்பு) குழம்பைக் கலக்கிக்கிட்டேஅம்மாதான் சொல்லித்தரணும். டீச்சர் கூப்புட்டு அனுப்புனாலும் அம்மாதான் ஆபீஸ்லே பர்மிஷன் வாங்கிக்கிட்டுப்போகணும். அப்பாவுக்கு வேலை இருக்குல்லே! ( இதுவும் வீட்டுக்கு வீடு இல்லே. சில வீட்டு நடைமுறைகள் வேற மாதிரியும்இருக்கும். எல்லாத்துக்கும் ஒரு டிஸ்க்ளெய்மர் போட வேண்டி இருக்குங்க. காலம்...)ஆனால் பலர் வீடுகளிலே அம்மாவோட சம்பளப்பணம் மட்டும் முழுசா அப்பா கைக்குப் போயிரணும்ன்றது ஒரு எழுதப்படாத விதி. இப்படியே போய்க்கிட்டு இருந்துச்சா.....


அப்புறம் கம்ப்யூட்டர் காலம் வந்துருச்சு. நிறையப் பேர் படிச்சுட்டு வெளிநாடுகளுக்கு இந்த பொட்டி தட்டற வேலை( இப்படித்தான் பரவலாச் சொல்லிக்கிட்டு இருக்காங்க) பார்க்கப் போயிட்டாங்க. கை நிறைய சம்பளம். பொம்பளைங்களும் இந்தப் படிப்புப் படிச்சுட்டு உள்ளூர்லேயும் வெளியூர்லேயும், வெளிநாட்டுலேயும் போக ஆரம்பிச்சு எல்லாம் நல்லபடியாநடந்துக்கிட்டு வருது.


மொதல்லே தனியாப் போற ஆம்புளைங்க, அந்த வாழ்க்கை முறைக்குப் பழகிபோய், நண்பர்கள் கூட வீடு எடுத்துக்கிட்டுசமைச்சு சாப்புட்டு வீட்டுவேலைகளைப் பகிர்ந்துக்கிட்டு ஒரு வழிக்கு வந்துடறாங்க. அவுங்களுக்குப் பொண்ணு பாக்கறப்ப,வெளிநாட்டு மாப்பிள்ளைன்ற அந்தஸ்து கூடிப்போனதாலேயும், பொண்ணும் நல்லாப் படிச்ச பொண்ணா இருந்தால் அங்கேஅவளும் போய் வேலை செஞ்சு நல்லா சம்பாரிக்கலாமேன்னும் அதுக்கேத்தமாதிரி பொண்ணுங்களைப் பார்த்துக் கல்யாணம்முடிச்சு அவுங்களும் வெளிநாடு வந்து நல்லபடியா செட்டில் ஆகிடறாங்க. இனி எல்லாம் சுகமேன்னு பலரோட வாழ்க்கைஅமைஞ்சுருது. இதுலே கூட ஒரு சிலர்,'அய்யய்யோ, நாம ஆம்பளையாச்சே. வீட்டு வேலையிலே எல்லாம் உதவியா இருக்கப்படாது'ன்ற'ஞானோதயம்' ஏற்பட்டு எல்லா வேலையையும் மனைவி தலையிலேயெ கட்டிருவாங்க. (இதைப் பத்தி ஒரு தனிப்பதிவே போடலாம். அது அப்புறம்.)



ஆனா, ஒரு சிலர் மட்டும் தவறான நபர்கிட்டே மாட்டிக்கிறாங்க. ஆணாதிக்கம், வக்கிரபுத்தி, தவறான தொடர்பு வச்சுக்கிட்டுஇருக்கற புருஷன்னு லிஸ்ட் நீண்டுக்கிட்டே போகுது. இந்த மாதிரி ஆளுங்ககிட்டே மாட்டிக்கிட்ட பெண்கள் எப்படிஇதுலே இருந்து தப்பிக்கறது?


படிச்ச பெண்களே 'இது நம்ம தலையெழுத்து'ன்னு நினைச்சுக்கிட்டு இந்தக் கொடுமையைத் தாங்கிக்கிட்டு வாழறாங்க. அப்புறம்எல்லை மீறி போனபிறகு 'அய்யோ அம்மா'ன்னு ஆகிப்போகுது. பெத்தவங்க பார்த்து வச்ச மாப்பிள்ளை நல்லவராத்தான் இருக்கணும்என்ற நம்பிக்கை. கல்யாணங்கறது ஆயிரம் காலத்துப் பயிர். ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணம் பண்ணி வை. நம்ம ஆளுங்களுக்கு ஆயிரத்துக்குக் கொறைஞ்சு சொல்லத்தெரியாது. இதைப் பயன்படுத்திக்கிட்டு, கூட இன்னும் ஒரு ஆயிரம் பொய் சொல்லிக் கல்யாணம் நடந்துருது. மகனோட 'குணாதிசயங்கள்' எல்லாத்தையும் தெரிஞ்சுக்கிட்டும், மருமக வந்து அவனைத்திருத்திடுவா/திருத்தணும்னு நினைக்கிறவங்களும் இருக்காங்க. மருமகள் என்ன டீச்சரா, அவனைத் திருத்தறதுக்கு?முப்பது வருசம் வளர்த்தவங்களாலே அவனைத் திருத்தமுடியலை, இவ வந்து ஒரே வாரத்துலே/மாசத்துலே திருத்த முடியுமா? இந்தமாதிரி நடந்துக்கறவங்க, அடுத்தவங்க சொல்லித் திருந்தமாட்டாங்க. தானே திருந்தினாத்தான் உண்டு.


பத்திரிக்கைகளும், மகளிர்க்கான வாரப் பத்திரிக்கைகளும் அசம்பாவிதமா நடக்கற சம்பவங்களைப் போட்டு மக்களைக் கவனமா இருக்கஎச்சரிக்குதுதான். ஆனா வெளிநாட்டு மோகம் கண்ணை மறைச்சுருதேங்க. இதுலே பொண்ணு கஷ்டப்படுறாளே என்றஎண்ணம் இல்லாம ,பொண்ணு திரும்பிவந்துட்டா, அக்கம்பக்கத்துலே நம்ம கவுரவம் போயிருமோன்னு பொண்ணுக்குத்தான் உபதேசம்நடக்குதே தவிர, அந்தப் பொண்ணோட புருசனைத் தட்டிக்கேக்க மாட்டேங்குறாங்க.இதுனாலெயே தப்பு செய்யறவனுக்குத் துளுத்துப் போகுது.


இதுக்கு என்ன பரிகாரம் செய்யலாமுன்னு யோசிச்சால் அது நீண்டுக்கிட்டே போகுது. இப்போதைக்கு சில முன்னேற்பாடு செஞ்சுக்கலாம்.பொண்ணுங்க அவுங்களோட படிப்புச் சான்றிதழ் அது இதுன்னு இருக்கற முக்கியமான பத்திரங்களை , பத்திரமா வச்சுக்கணும். கொறைஞ்சபட்சம் அதையெல்லாம் ஃபோட்டோகாப்பி எடுத்து( அதான் தெருவுக்கு பத்து ஜெராக்ஸ் கடைங்க இருக்கேப்பா) அதுக்கெல்லாம்அட்டெஸ்டேஷன் வாங்கி ஊருலே அம்மா வீட்டுலேயோ, பேங்க் லாக்கர்லேயோ வச்சுக்கறது. கணவனை நம்பாம இல்லை. ஒரு 'பேக் அப்'னு நினைச்சுக்கணும். ( கட்டுன புருஷனை சந்தேகிக்கறதா? அய்யோ, நம்பிக்கைதானே வாழ்க்கை?)திடீர்னு தொலைஞ்சு போச்சுன்னா என்னா செய்யறது?திருப்பி அங்கங்கே அப்ளை செய்து வாங்கறதுக்குள்ளெ விடிஞ்சுடாது? அப்படின்னு நினைச்சுக்கிட்டு இதைச் செஞ்சுரணும்.


வெளிநாடோ, வெளியூரோ வந்தாச்சு. 'அவரே எல்லாம் பாத்துக்குவார்'னு சரணாகதித் தத்துவத்தைக் கடைப்பிடிக்காம,நம்மைச் சுத்தி என்ன நடக்குது, அங்கே பேசற மொழியைக் கத்துக்கறது, வேலை வாய்ப்பு எப்படி இருக்கு, இன்னும்எதாவது கோர்ஸ் செஞ்சு முன்னேற வாய்ப்பு இருக்கான்னு பார்க்கணும். அதை விட்டுட்டு, 'அப்பாடா இங்கே சன் டிவி வருது. மெகா சீரியலை மிஸ் பண்ண வேணாம்'னு மனத்திருப்திப் பட்டுக்கிட்டு அதுலெயே மூழ்கிடக்கூடாது. வேலைக்குப்போகத் தேவை இல்லாத நிலைன்னாலும், சமூக சேவைன்னு நினைச்சுக்கிட்டு கம்யூனிட்டிக்காக எதாவது வாலண்டரிசர்வீஸ் செய்யலாம். இந்த முறையிலே உங்களுக்கு வெளி உலகத்தோட ஒரு தொடர்பு இருந்துக்கிட்டே இருக்கும்.


வாக்கப்பட்டு வந்த கொஞ்ச நாளுலெயே எப்பேர்ப்பட்ட புருஷன்கூட இருக்குறோம்ன்றது புரிஞ்சுருமுல்லே. அதுக்குத்தகுந்த மாதிரி நடந்துக்கணும். கொஞ்சம் கவனமா இருந்தா பின்னாலெ துக்கப்படவேணாம் இல்லையா?
என்னடா இவ ஒரேதா பெண்கள் பக்கமே பேசிக்கிட்டுப் போறாளேன்னு நினைக்காதீங்க. தவறான மனைவிகிட்டே மாட்டிக்கிட்டு முழிக்கிற ஆண்களும் இருக்காங்கதான். ஆனா அதுலே இருந்து தப்பிக்கறது ஓரளவு, கொஞ்சமே கொஞ்சம் சுலபமாஇருக்குமுன்னு நினைச்சுக்கிட்டு இருக்கேன்.( யாரு கண்டா, ஒருவேளை அதுக்கும் படாதபாடு படணுமோ என்னவோ?) நம்ம பத்மாவோட பதிவுகளிலே இருந்தும், நம்ம குழலியோட பதிவுகளிலே இருந்தும்தான் இந்தப் பதிவு எழுதலாமுன்னு எனக்குத் தோணுச்சு.


கஷ்டப்படுற பெண்கள் சார்பா இப்படிப் புலம்பிக்கிட்டு இருக்கேன். ஆண்கள் சார்பா புலம்ப வேற யாராவது வருவாங்க, பார்க்கலாம்.

12 comments:

said...

வேற வழிவகைகள் என்ன இருக்குன்னு பார்க்க இது ஒரு ஆரம்பம்தான்.

இனியும் இந்தப் பிரச்சினை சம்பந்தமுள்ள பதிவுகள் வரும்.

said...

nalla sonneenga.

said...

//மகனோட 'குணாதிசயங்கள்' எல்லாத்தையும் தெரிஞ்சுக்கிட்டும், மருமக வந்து அவனைத்திருத்திடுவா/திருத்தணும்னு நினைக்கிறவங்களும் இருக்காங்க. மருமகள் என்ன டீச்சரா, அவனைத் திருத்தறதுக்கு?முப்பது வருசம் வளர்த்தவங்களாலே அவனைத் திருத்தமுடியலை, இவ வந்து ஒரே வாரத்துலே/மாசத்துலே திருத்த முடியுமா? // சத்தியமான வார்த்தைகள் துளசி. சீரியசான விஷயத்தைக்கூட இயல்பா சொல்லணும்னா அது துளசிக்குத்தான் சாத்தியம்!

said...

துளசி: தோழியா இருந்து துணைவியா இருந்து திருத்தனும் இல்லன்னா தலை எழுத்துன்னு இருக்க வேண்டியதுதான். இன்னொன்னு சொல்ல மறந்துட்டீங்களே. பொண்ணு வருத்தமா சொன்னா பெற்றோர்களும் கொஞ்சம் கேட்டுக்கணும் அத விட்டு ஆம்பிளங்க அப்படித்தான் இருப்பாங்க, நீ பொறுமையா சொல்லு திருப்பி சொல்லி ஆதரவௌ தரத நிறுத்த கூடாது.

said...

பத்மா,

நன்றி.

இதைப் பத்தி விரிவாஇன்னும் எழுதணும்தான். இது ச்சும்மா ஒரு கோடி காமிச்சதுதான்.

said...

இது ஒரு மகளிர் மட்டும் பதிவு போல இருக்கிறது :) ஆனாலும் பெண்ணைப் பெற்றவன் என்ற முறையில் நானும் உங்களின் ஆதங்கங்களில் பங்கு கொள்கிறேன். வேறு நாடு,சூழ்நிலை என்னும்போது ஒருமுறைக்கு பலமுறை பின்னணிகளை ஆராய்ந்து திருமணம் செய்துவைப்பதும் தேன்துளி சொல்வதுபோல் கல்யாணத்திற்கு பிறகும் பக்கபலமாக இருப்பதும் பெற்றோரின் கடமையாகும்.
முதலைக்கு நீரில் நூறு யானைபலம்; நிலத்தில் ஒன்றுமில்லை என்பதுபோல வெளிதேசத்தில் அதிக தன்னம்பிக்கையும் உலகியலும் தேவை. வெறும் படிப்பறிவு கவைக்கு உதவாது.

said...

ரதி,

வருகைக்கும் 'கட்டிப்புடி வைத்தியத்துக்கும்' நன்றி:-)

மணியன்,
இது மக ளால்/ளிரால் எழுதப்பட்ட பதிவே தவிர

முழு சமூகத்துக்கு இதுலே பொறுப்பு வேணூம்.

சேர்ந்து வாழமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்ட பெண்களை இந்த சமூகம் பாக்குற பார்வை இருக்கே...அப்பப்பா....

எங்க ஆதங்கத்துலே பங்குபெறணுமுன்னு நினைச்சீங்க பாருங்க, அதுக்கு நன்றீங்க.

said...

Teacher, I hv read ur post and itz very good and important for all the girls. Good posting. Girls should know their capablities and independence.

said...

Raghavan,

Thanks for the comment.

said...

இந்தப் பதிவு எனக்குப் பிடிச்சிருக்கு...


வாழ்க்கையில் திருமணம் செய்துகொள்ளலாமா? வேண்டாமா? என குழம்பியிருக்கும் எனக்கு, உங்கள் பதிவுகளிலிருந்து ஏதேனும் விளக்கம் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன்...

பூங்குழலி

said...

//வெளிநாட்டு மாப்பிள்ளைன்ற அந்தஸ்து கூடிப்போனதாலேயும்//
கிழிஞ்சிது கிருஷ்ணகிரி, யக்கோவ் அதெல்லாம் அந்த காலம், வெளிநாட்டில் வேலை செய்து கொண்டு பெண் தேடுகிற வரன்களை கேட்டு பாருங்க சொல்வாங்க வெளிநாட்டு மோகம் இருக்கா இல்லையானு...ம் நம்ம அண்ணாத்தங்க பலருக்கு வெளிநாட்டு வாழ்க்கையை விட்டு ஊருக்கு போக மனசு வரலை, அங்க பெண் வீட்டிலயோ வெளிநாட்டுக்கு கொடுக்க மனசு வரல... இதனாலயே பலருக்கும் திருமணம் தள்ளி தள்ளி போய் கொண்டிருக்கு யக்கா...

//இதுலே கூட ஒரு சிலர்,'அய்யய்யோ, நாம ஆம்பளையாச்சே. வீட்டு வேலையிலே எல்லாம் உதவியா இருக்கப்படாது'ன்ற'ஞானோதயம்' ஏற்பட்டு எல்லா வேலையையும் மனைவி தலையிலேயெ கட்டிருவாங்க. (இதைப் பத்தி ஒரு தனிப்பதிவே போடலாம். அது அப்புறம்.)
//
ம்... எல்லா இடத்திலயும் விதி விலக்கு உண்டு அது மாதிரி இதுவும் ஒரு விதிவிலக்குனு தான் நினைக்கின்றேன்... நண்பர்களோடு சேர்ந்து சமைத்து சாப்பிடும் போது பாத்திரம் கழுவாதவனெல்லாம்(யார் கழுவறதுன்ற போட்டியில பூஞ்சை பிடித்து பல பாத்திரங்கள் குப்பைக்கு போயிருக்கு) இப்போ மோப் போடுறது என்ன.... பாத்திரம் தேய்க்கிறது என்ன....(அய்யய்யோ ஆணாதிக்க பின்னூட்டம்னு அடிக்க வராங்க போல இருக்கு அப்பீட் ஆக வேண்டியது தான்...)

அதற்காக நீங்க பதிவில் சொன்னதெல்லாம் நடக்கலைனு சொல்லலை.... எல்லாம் கலந்து தான் இருக்கு....

said...

குழலி,

எல்லாம் கலந்துகட்டி இருக்கறதுதானே நிஜ வாழ்க்கை.

வருகைக்கு நன்றி.

கல்யாணமாகாத அன்பர்களுக்கு இப்படி ஒரு பிரச்சனை இருக்கோ!