Tuesday, April 04, 2006

சென்னை வலைஞர்கள்



பயண விவரம் பகுதி 15


இங்கே இதுவரைக்கும் வந்ததே இல்லை. மெட்ராஸ் (அப்பெல்லாம் இப்படித்தான் சொல்றது)லேதான் இருந்தோம்.ஆனா 'ட்ரைவ் இன்' அப்படின்னா கார்லெதானே வரணும். நம்மகிட்டேதான் 'அப்படின்னு ஒண்ணும்' கிடையாதே.அதனாலே இது நமக்கில்லைன்னு 'கெளரவமா' இருந்துட்டோம்.வர்றவழியிலேயே நம்ம டோண்டுவுக்குப் போன் போட்டு வழியெல்லாம் பக்காவாக் கேட்டுக்கிட்டே வந்தோம். என்னை மத்தவங்க கண்டுபிடிக்கறதுக்குஉதவியா இருக்குமுன்னு யானைப் படம் போட்ட உடுப்போட போனேன்.


'இதோ , நம்ம அருணா இங்கெ இருக்காங்களே'ன்னு தோட்டத்து முகப்புலேயே இறங்கிட்டோம். இப்பக் கார் வந்துருச்சான்னுகேக்காதீங்க. அதான் ஆட்டோ இருக்கே. அருணாவும், 'இங்கே இருந்தா நம்ம ஆளுங்க வர்றதைக் கவனிக்கறதுசுலபமு'ன்னு சொன்னாங்க. அதுலெ என்னன்னா, ஒன்னரை வருஷமா பதிவுகளிலே மட்டும்தானே இவுங்களைப் பார்த்துருக்கோம். மொதலாவது, யார்யார் வரப்போறாங்கன்னே சரியாத் தெரியலை.


அஞ்சு மணிக்குன்னுதான் சொல்லியிருந்தாங்க. நம்ம ரஜினி ராம்கியும், கிருபாஷங்கரும் ஏற்பாடு செஞ்சு, எல்லாருக்கும்(!)மயில் அனுப்பி வச்சிருந்தாங்க. கொஞ்ச நேரத்துலே ஒருத்தர் வந்து எங்களொடு சேர்ந்துக்கிட்டார். அவர் நம்ம எஸ்.கேன்னுதெரிஞ்சுக்கிட்டோம். நாங்க பேசிக்கிட்டு அங்கேயே நின்னப்ப ஒரு ஸ்கூட்டர்/பைக்( ஏதோ ஒரு ரெண்டு சக்கர வாகனம்) வந்துநின்னது. அதோ நம்ம கிருபா( அதான் அவரோட நிச்சயதார்த்தத்துக்குப் போயிருந்தோமே)கூடவர்றவர் ஹை, ஐகாரஸ் பிரகாஷ்.அவரோட பதிவுலே பார்த்த மாதிரியே இருந்தார். ஆனா ரொம்ப ஒல்லியா இருந்தார். நாணயம் விகடனிலேகூட கொஞ்சம் பூசுன மாதிரி இருந்தாரே.


அப்பத்தான் நம்ம டோண்டு, செல்லுலே கூப்புட்டு, எங்கே இருக்கீங்க? உள்ளே காத்துக்கிட்டு இருக்கோம், வாங்க'ன்னுசொன்னார். நாங்க இங்கே வாசலிலேயே நிக்கறோம், இவர் எப்படி உள்ளெ போயிருக்கார்?
உள்ளெ நுழைஞ்சு இவுங்களைத் தேடறப்ப, வலதுபக்கம் இருந்த தலைப்பாகைக் கட்டுனவரை, அருணா காமிச்சு,'யார்னுதெரியுதா?ன்னாங்க. பி.பி.ஸ்ரீனிவாஸ்! நான் இப்பத்தானே 10 நாள் முந்தி இசைக்கல்லூரியிலே பார்த்தேன். இடதுபக்கம் இருக்குற பகுதியிலே நம்ம டோண்டுவும், இன்னொரு இளைஞரும் இருந்தாங்க. அவர்தான் சங்கர்( சுவடுகள்)அப்புறம் வெளிர்நீலப் புடவையில்( இதை ருக்மணி கலர்னு சொல்வோம்) கம்பீரமா நடந்து வந்தவுங்கதான் நம்ம மதுமிதா( கவிஞர்)


இங்கே எல்லாரும் சேர்ந்து உக்கார இடம் சரியில்லையே, வெளியே போய் தோட்டத்துலே உக்காரலாமேன்னு வெளியே போனோம். அங்கே மூணு மேஜைகளைச் சேர்த்துபோட்டு மகாநாட்டுக்கான செட்டப்பைச் செஞ்சாச்சு.நம்ம நாராயணன்( உருப்படாதது) வந்துட்டார். அவரைப் பார்த்து நான் ரஜினிராம்கி ன்னு தப்பா(!) நினைச்சுட்டேன்.வந்தாருப்பா நம்ம டிபிஆர் ஜோஸஃப், நெடுநெடுன்னு உயரமா. ராம்கியும்( ஸ்டேஷன் பெஞ்சு) மரவண்டு கணேஷும்வந்து உக்கார்ந்தாங்க.


நான், 'எல்லோரும் அவுங்கவுங்களை அறிமுகப்படுத்திக்குவாங்க. அப்புறம் வந்தவங்களுக்கு ஒரு வரவேற்பு உரைகொடுக்கணும். அதுக்கப்புறம், இன்னும் தமிழ்மணம் மூலமும், நம்ம எழுதுற பதிவுகள் மூலமும் என்னெவெல்லாம் சாதிக்கலாம்(!)னு மத்தவங்க கருத்துக்களைக் கேக்கணும்'னு திட்டம் போட்டு வச்சுருந்தேன். வரவேற்புரைக்குத் தொண்டையைக்கூட சத்தமில்லாம கனைச்சு ரெடி பண்ணிட்டேன். ஆனா பாருங்க, அப்படி எதுவும் நடக்கலை.அவுங்கவுங்க பக்கத்துலே இருந்தவங்ககிட்டே மும்முரமாப் பேசிக்கிட்டு ரொம்ப கேஷுவலா இருந்தாங்க. ஓ....இங்கெ இப்படித்தானாக்கும்னு நானும் ஜோதியிலே கலந்துகிட்டேன். நான் இருந்த இடத்துலே எஸ்.கே, அருணா,மதுமிதா. எதிர்லே கிருபா, பிரகாஷ், சங்கர்.


கோபால் இருந்த பக்கம் ராம்கி, நாராயணன், டிபிஆர்ஜோ, டோண்டு, கணேஷ். அங்கேயும் ரெண்டு க்ரூப்பாயிருச்சு.அப்புறம் நாராயணன் எங்கபக்கம் வந்து கொஞ்சநேரம் உக்கார்ந்தார்.


முக்கியமான கேள்வி ஒண்ணை நம்ம பிரகாஷ்கிட்டே மறக்காமக் கேட்டேன், 'அது என்னங்க ஐகாரஸ்?'ன்னு.


அவரும் சொன்னார் பதிவு எழுத ஆரம்பிச்சப்ப ஐகாரஸ் பத்திப் படிச்சுக்கிட்டு இருந்தாராம். அதனாலெ அதைஅப்படியே பேரோடு சேர்த்துக்கிட்டாராம். ( இது சரியா பிரகாஷ்? இல்லே, நீங்க ஒண்ணு சொல்லி, நான் வேற 'ரீல்' விட்டுட்டேனா?)


மொத்தம் முன்னூத்திப் பதிமூணா இருந்தோம்.இதுலே பாருங்க, நாங்க வந்து உக்கார்ந்தவுடனே எங்க மேஜையிலே ஒரு முன்னூறு வந்து உக்காந்துருச்சுங்க.கிருபாதண்ணி ஊத்திவச்சு விரட்டப் பார்த்தாரு, ஊஹூம், ஒண்ணும் ஆகலை. நல்லா இருட்டத் தொடங்குனதும் ஒருவழியாஇடத்தைக்காலி செஞ்சாங்க அந்த 'ஈ'ங்க.


அப்படி இப்படின்னு நேரம் போயிருச்சு. டோண்டுவும் உடல்நிலை சரியில்லாதபோதும் வந்து கலந்துக்கிட்டார்.வீட்டம்மா மிரட்டுனவுடனே( செல்லமா) கிளம்பிட்டார். முன்னுரை ஏதும் இல்லாததாலே முடிவுரையும் இல்லை.


ஒவ்வொருத்தராக் கிளம்ப ஆரம்பிச்சாங்க. கணேஷ், எஸ்.கே, சங்கர், கிருபா, பிரகாஷ்,ராம்கி, மது,நாங்க எல்லாம் கடைசியா இடத்தைக் காலி செஞ்சோம்.
கணேஷ், பெங்களூருலே இருக்க வேண்டியவர், இங்கே என்ன செய்யறாருன்னு கேட்டா, இப்பச் சென்னையிலேயே வேலையாம். ரொம்ப மெதுவா அதிராமப் பேசறார். ஜெயச்சந்திரன் பாட்டுப் பிடிக்குமான்னு கேட்டார். பின்னே,பிடிக்காம? ஒரு சிடி கொடுத்தார்.


சுரேஷ் கண்ணன் வரேன்னு சொல்லியிருந்தார். ஆனா வரமுடியலையாம். ரஜினிராம்கியும் ஊருக்குப் போகவேண்டியதாஆயிருச்சாம். தாணு, வரலாமுன்னு இருந்தாலும், அன்னைக்கு ஒரு அவசர அறுவை சிகிச்சை செய்ய வேண்டியதாப்போச்சாம்.

நாங்க இருக்குற தெருவோட அடுத்த பகுதியிலேதான் மது இருக்காங்களாம். அதனாலெ நாங்க மூணுபேரும் ஒண்ணாவேபுறப்பட்டோம். மதுவை அவுங்க வீட்டுலே விட்டுட்டுப் போறதா ஏற்பாடு. அப்படியே அவுங்க வீட்டைப் பார்த்ததாவும்ஆச்சு. ஏண்டா இவளுக்கு வீட்டைக் காமிச்சோமுன்னு நொந்து போற அளவுக்கு அவுங்களை படுத்துனது வேற விஷயம்!


நம்ம டோண்டு அவரோட பதிவுலே படங்கள் சில போட்டுருக்கார். அதனாலே நான் வேற சிலதைப் போடறேன்.ப்ளொக்கர் தயவு வேணும். வந்தா உங்க அதிர்ஷ்டம்.


சென்னை வலைப்பதிவாளர்கள் மாநாடு இனிதே நிறைவுற்றது. நாளைக்கு பெங்களூரு கோயிங்க்.


38 comments:

said...

போட்டோ எல்லாம் நல்லா இருக்கு துளசி அக்கா. நான் தான் மிஸ் பண்ணிட்டேன் போலிருக்கு :) ஆரம்பத்தில் நீங்க எழுதிகிட்டு வந்தத பாத்துட்டு நீங்க இனிமே தான் சென்னை வரப் போறீங்கன்னு நெனைச்சேன்.. அப்புறம் இது போன மாச பயணம்னு சொன்னபோதே தோணிச்சு.. இந்த போட்டோ எல்லாம் பார்க்கும் போது சொல்லிட்டேன்...

said...

பொன்ஸ்,

நீங்க சென்னையிலே இருக்கறது எனக்கு அப்பத் தெரியாமப் போச்சு(-:

ஆமாம்,
//நான் தான் மிஸ் பண்ணிட்டேன் போலிருக்கு :) //

இது என்ன மிஸ் செஞ்சதுக்கு சந்தோஷமா?

said...

இப்பத்தான் செந்தமிழ்ச் செல்வன் டோண்டு பேருலே வந்துட்டுப் போனார்.

வழக்கமா இல்லாம கொஞ்சம் நல்ல மொழியிலேதான் சொல்லிட்டுப் போனார்.
மாற்றம் வந்திருக்கு.

அது போகட்டும்.

யார் யாருன்னு சொல்லலேல்ல?
ப்ளொக்கர்லே எந்த ஆர்டர்லே படம் வருதுன்னு தெரியாததாலே அப்படியே விட்டுட்டேன்.

1. அருணா( அலைகள்)வுடன்

2. இடமிருந்து வலம். எஸ்.கே, துளசி, மதுமிதா, சுவடு சங்கர், ஸ்டேஷன் பெஞ்சு ராம்கி, மரவண்டு கணேஷ்
3. கிருபாஷங்கர், சுவடு சங்கர், ஐகரஸ் பிரகாஷ், எஸ்.கே, மதுமிதா & துளசி

4. மேசையின் கடைசியில் டிபிஆர் ஜோஸஃப்( வலதுபக்கம்) இடதுபக்கம் டோண்டு,
மத்தவங்களைத்தான் இப்ப உங்களுக்குத் தெரியுமே.

said...

ஆகா சென்னை சந்திப்பா...சூப்பரப்பு....

பி.பி.ஸ்ரீநிவாஸ் உட்லண்ட் ஓட்டலுக்கு ரெகுலர் விசிட்டர். அவர் மாலைல அங்க வந்து உக்காந்து பாட்டுப் பாடீட்டு இருப்பாராம். எங்கேயோ படிச்சிருக்கேன். நீங்க இருந்தப்ப என்ன பாட்டு பாடுனாரு?

ஜெயச்சந்திரன் சீடி..கெடைச்சதா? கெடச்சதா? கெடைச்சதா? சந்தோஷமா? சந்தோஷமா? சந்தோஷமா?

சென்னை சந்திப்புல கலந்துகிட்ட அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.

said...

ராகவன்,

அவர் எங்கே பாடறது? அதான் சாப்புட்டுக்கிட்டு இருந்தாரே!

கூட ஒரு நண்பரும் இருந்தார். பார்த்ததோட சரி.

பாடினாலும் என்ன பாட்டுப் பாடியிருப்பார்? 'கண்படுமே பிறர் கண்படுமே, நீ வெளியே வரலாமா'வா?:-)

said...

அடடா உங்க பதிவ படிச்சதும் அப்படியே ஃப்ளாஷ்பேக் மாதிரி அன்றைய கூட்டம் கண்முன்னால வருதுங்க..

அப்படியே சுடச்சுட போண்டா..காப்பி சாப்டதையும் சொல்லியிருந்தா நேச்சுரலா இருந்திருக்கும்..

அன்றைக்கு டோண்டுவுக்கு உடல்நலமில்லையா?

பிபிஸ்ரீநிவாஸ் மட்டுமில்லே நிறைய டிவி நடிகர்களையும் அங்கே அடிக்கடி பார்க்கலாம்.

said...

டிபிஆர் ஜோ,

அதான் டோண்டு அவர் பதிவுலே எழுதிட்டாரேங்க. அதுக்கும் லிங்க் கொடுத்தாச்சே.
அதான் எழுதாம விட்டுட்டேன்.

டோண்டுவுக்கு ஆப்பரேஷன் ஆகி இன்னும் தையல் பிரிக்காத நிலையிலேயே
மாநாட்டுக்கு வந்திருந்தார்.

said...

//இது என்ன மிஸ் செஞ்சதுக்கு சந்தோஷமா? //

இல்ல துளசி அக்கா.. சிரிச்சு சிரிச்சே பழகி போச்சு.. நீங்க அடுத்த முறை வரும்போது இன்னும் நிறைய பேர் இருப்பாங்க... :)

நமக்கு ரொம்ப 'சிரிச்ச' முகம்னு நண்பர்கள் கூட சொல்லுவாங்க..

இருந்தாலும் மிஸ் பண்ணது வருத்தம் தான் :) ... மறுபடியும் சிரிக்கிற ஸ்மைலி தான் வருது.. :(

said...

////என்னை மத்தவங்க கண்டுபிடிக்கறதுக்குஉதவியா இருக்குமுன்னு யானைப் படம் போட்ட உடுப்போட போனேன்.////

துளசியக்கா,
பூனைப்படம் போட்ட ஏதாவது உடுத்தியிருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும். :-)).

said...

சரிங்க பொன்ஸ். நீங்களும் நம்மகூட சேர்ந்துட்டீங்க. சிரிப்போ சிரிப்புத்தான் இனி:-)

said...

முத்துத்தம்பி,

துணி எடுக்கப்போனப்ப இந்த யானை போட்டது எனக்காகவே அங்கே காத்துக்கிட்டு இருந்துச்சு.
அப்படியே பூனை ஒண்ணும் இருக்கான்னு பார்த்தேன். ஊஹூம்.... (-:

said...

Hi

Naan photovula azaga vizunthirukkEn :-)

Thanks
Ganesh

said...

அடடா! சென்னை மாநாட்டுல பெங்களூரு மாநாட்டை விட கூட்டம் அதிகம் போல! விசயம் முன்னாடியே தெரிஞ்சிருந்தா நம்ப ஊருல 'மாஸ்' காட்டறதுக்கு ஏற்பாடு செய்திருக்கலாம்! கோட்டை விட்டுட்டமே!!

துளசியக்கா!

//என்னை மத்தவங்க கண்டுபிடிக்கறதுக்குஉதவியா இருக்குமுன்னு யானைப் படம் போட்ட உடுப்போட போனேன்// இங்க நிக்கறீங்க நீங்க! :)))

said...

அடடா.... மரவண்டு,
எதுக்கு இவ்வளோ உணர்ச்சி வசப்படுறீங்க?....:-))))

நீங்க அழகாத்தானே இருக்கீங்க? அப்புறம் அழகா 'விழாம' எப்படி?:-)

said...

என்னங்க இளவஞ்சி,
எத்தனை நாள் முன்னாடி வருகை விவரம் தந்தேன். அப்படியிருந்தும்
'கோட்டை' வுட்டீங்களே?

குறைஞ்சபட்சம் ஒரு 'தவுசண்ட் வாலா' வெடிச்சிருக்கலாமுல்லே? :-)

சரி, அடுத்த முறை, குறைவில்லாம நடத்திருங்க. ஒரு நாலு லாரி ஆளுங்க போதும்.

யானை உடுப்பைப்போட இதைவிட நல்ல சந்தர்ப்பம் அமையுமா?

said...

இவ்வளவு பேர் சேந்து பேசியிருக்கீங்க. கொஞ்சம் சுவாரசியமா பேசாமலேயா இருந்திருப்பீங்க? அந்த கிசுகிசுங்களில கொஞ்சம் எடுத்துவிடறது......

said...

மக்களே இப்பத் தெரிஞ்சதா?

பத்திரிக்கைகளில் 'கிசுகிசு'வுக்கு எப்படி வரவேற்பு இருக்குன்னு?

said...

அந்த யானைபடம் போட்ட உடுப்பு போட்டவங்க தானே துளசி! ஹையா எப்பிடி கண்டு பிடிச்சேன்! டீச்சரோட ஸ்டூடெண்டாச்சே!

said...

நான் என் பதிவில் இட்டப் படங்கள் நீங்கள் எனக்கு அனுப்பியவையே என்பதை இந்த இடத்தில் மீண்டும் நன்றியுடன் கூறுவேன்.

நீங்கள் என் பதிவுக்குக் கொடுத்த சுட்டி ஆர்கைவ்ஸுடையது. இந்த ஸ்பெசிஃபிக் சுட்டியைத் தந்தால் நேரடியாகக் கிடைக்கும். பார்க்க:http://dondu.blogspot.com/2006/02/12022006.html

"இப்பத்தான் செந்தமிழ்ச் செல்வன் டோண்டு பேருலே வந்துட்டுப் போனார். வழக்கமா இல்லாம கொஞ்சம் நல்ல மொழியிலேதான் சொல்லிட்டுப் போனார். மாற்றம் வந்திருக்கு."
போட்டோ வந்ததா? இருக்காது என்றுதான் நினைக்கிறேன்.

"இவ்வளவு பேர் சேர்ந்து பேசியிருக்கீங்க. கொஞ்சம் சுவாரசியமா பேசாமலேயா இருந்திருப்பீங்க? அந்த கிசுகிசுங்களில கொஞ்சம் எடுத்துவிடறது......"
அது இல்லாமலா இலவசக் கொத்தனார் அவர்களே. எல்லோரையும் பீடிக்கும் செந்தமிழ் பின்னூட்ட வித்தகனைப் பற்றியும் பேசப்பட்டது. அது யார் என்பதில் பலருக்கு சந்தேகம் இல்லை.

இந்தப்பதிவை உண்மையான டோண்டுதான் இட்டான் என்பதைக் காண்பிக்க அதன் நகலை இதே ப்ளாக்கர் சந்திப்பைப் பற்றி நான் இட்டப் பதிவில் பின்னூட்டமாக இடுகிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/02/12022006.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

சிங். செயகுமார்,

இந்த உடுப்பை வேற எங்கெயாவது 'பார்த்த ஞாபகம் இல்லையோ?'

இதையே வலைப்பதிவர் சந்திப்புக்குன்னு 'ட்ரேட்மார்க்' ஆக்கிறப்போறேன்:-)

said...

//பாடினாலும் என்ன பாட்டுப் பாடியிருப்பார்? 'கண்படுமே பிறர் கண்படுமே, நீ வெளியே வரலாமா'வா?:-)//

"உன்கண் உன்னை ஏமாற்றினால் என் மேல் கோபம் உண்டாவதேன்" - இந்தப் பாட்டு இவர் பாடினது இல்லையா??? 3 ஸ்மைலி போட்டுக்குங்க

ட்ரைவ்-இன்ல கவுண்டபெல்லைப் பார்க்கலியா நீங்க???

said...

ரெண்டு பிளேட் வடை சாப்பிட்டது யாரும் கிடையாதா? What a shame?! :-)

said...

சுதர்சன்,

கவுண்டபெல்லைப் பார்க்கலைங்க. எங்கே பாக்க விட்டாங்க அருணா? அதான் நேரா
நம்ம வலைஞர்களைத் தேடிக்கிட்டுப் போயிட்டோமே.

said...

வாங்க பாரதி. அடுத்தமுறை கட்டாயம் நீங்களும் வந்துருங்க.

said...

ராம்கி,

எங்கே உங்களை ஆளையே காணொம்( அன்னிக்கும்)

நீங்க வந்திருந்தா ரெண்டு ப்ளேட் வடை வந்திருக்குமே!

ஆனா, அன்னைக்கு போண்டாவும் காஃபியும்தாங்க.

யாரும் ஸ்வீட் வேற கேக்கலைங்க(-:

said...

சந்திப்பு பற்றிய உங்களின் நேர்முக வர்ணனை நன்றாக இருந்தது.

said...

//என்னை மத்தவங்க கண்டுபிடிக்கறதுக்குஉதவியா இருக்குமுன்னு யானைப் படம் போட்ட உடுப்போட போனேன்.//


அதுக்கு பேசாம ஒரு யானையை அழைத்துச் சென்றிருந்தால் எல்லோருக்கும் உடனே அடையாளம் தெரிஞ்சிருக்கும்தானே..

said...

வாங்க, விடாது கறுப்பு. மொதமொதலா வந்துருக்கீங்க போல. நன்றிங்க.

said...

நிலவு நண்பன்,

நல்ல ஐடியாதான். ஆனா அப்ப யானைங்க எல்லாம் 'கேம்ப்' போயிருச்சுல்லே (-:

said...

துளசி பதிவு ரொம்பவும் சுவாரஸ்யமா போய்கிட்டு இருக்கு, நம்ம வலைஞர்களையெல்லாம் பாக்குறோம்ல! ஜாலியா இருந்திருக்கும் போல சந்திப்பு!அது அத்தனை பேர் முகத்திலேயும் தெரியுது!

said...

துளசி
உங்களோட பேசறதவிட ஸ்வீட்டா இன்னொன்னு உண்டா? ஆர்டர் பண்ணி இருந்தா திகட்டி இருக்கும்னு பேசாம இருந்திருப்பாங்க

said...

மீனா,

இருக்காதா பின்னே? நிஜமாவே சந்தோஷமா இருந்துச்சுங்க.

said...

yakkaa, naan late entry to Chennainnaalum, Chennai vaasidhaan. Ivvazavu pakkaththula irundum sandikkaama vittuteyney! Chey!
Maraboor Jaya.Chandrasekaran

said...

பத்மா,
இப்படி சமயம் பார்த்து வாரிட்டீங்களே:-))))

ச்சும்மா. எல்லாருக்கும் இந்த 'கொலஸ்ட்ரால்' பயம் இருக்கே பத்மா.

said...

அதுக்கென்ன மரபூராரே,
அடுத்தமுறை எங்கே ஓடிறப்போறோம்? இத்தனைக்கும் மயிலாப்பூராண்டை
ரெண்டு மூணுநாள் சுத்திக்கினு இருந்தேன்.

said...

ஏங்க அருவி,

நான் ஒரு கதை சொல்லிங்க. 'ஸ்டோரி டெல்லர்'

சொல்றதுக்குப் பதிலா அதை அப்படியே எழுதிடறதுதான்.

ஆமாம், உங்க பேரே (பூனை(!)ப்பெயரா இருந்தாலுமே) நல்லா இருக்குங்க.

அடிக்கடி வீட்டுப் பக்கம் வாங்க.

said...

துளசிம்மா
போட்டோ போட்டு கவுத்துட்டீங்களே:-(((

மீதி சொல்லி கால்வாரி விட்டுடாதீங்கம்மா

நொந்து ஒண்ணும் போகலைம்மா
அடுத்து எப்ப வரப்போறீங்கம்மா
துளசி

காத்திருக்கிறேன்

உங்களுக்கு வரவேற்பு வளைவு
வைக்க கோ.கணேஷ் இங்க இல்லையேன்னு சொன்னதை எழுதலியா

said...

மது,

இனிமேத்தான் இருக்கு சென்னை விஷயங்கள் எல்லாம்:-)