Tuesday, May 09, 2006

சிவராத்திரி




பயண விவரம் பகுதி 24


இப்படி அண்ணனோட நம்பிக்கைப் பொய்த்துப் போகுமுன்னு நான் கனவுலேகூட நினைக்கலை. 'அன்புடன்' ன்னு ஒருகுழு, 'சித்தம்' னு ஒரு குழு, 'நம்பிக்கை' னு ஒரு குழு இப்படிச் சில கூகுள் குழுவுங்க இருக்குல்லே. இதுலேயும் பாருங்க சிலர் இங்கே அங்கேன்னு எல்லாக் குழுவிலேயும் அங்கத்தினராக இருக்கறாங்க. இந்தக் கணக்குலே நம்மமது 'அன்புடன்' லேயும் நான் 'சித்தம்'லேயும் வர்றோம்.


அங்கே போனபிறகுதான் தெரிஞ்சது இந்த விவரமெல்லாம்னு வச்சுகுங்க. வேந்தன் அரசுன்னு ஒருத்தர் அமெரிக்காவிலே இருந்து வந்திருந்தார். அவர் தங்கி இருந்த கெஸ்ட் ஹவுஸில்தான் இந்த சந்திப்பு நடந்துச்சுங்க. இதைப் பத்திநம்ம +ராமா அப்பவே ஒரு பதிவு போட்டுருந்தார்.


அது அவரோட கருத்து. இனி நம்ம வெர்ஷனையும் பாக்கணுமா இல்லையா? நம்ம இரவா, வேந்தன் அரசு, மது அப்புறம் சுரேஷ்னு ஒருத்தர் இருந்தார். கவிஞர் சுரேஷ். கவிதைக்கும் எனக்கும் காத தூரம்தான், ஆனா இவர் எனக்கு அடுத்தஇருக்கையிலே இருந்தார். தூரம் குறைஞ்சு போச்சு! நல்ல இனிமையான புன்னகையோடு இருக்கார். இதுவரை மூணு கவிதைப் புத்தகம் வெளிவந்திருக்காம். அருமையாகப் பேசுனார். தாய்மொழி மலையாளமாம். போச்சுரா..... அங்கே கூடிஇருந்த பலருக்கும் தாய்மொழி தமிழ் இல்லைன்றதும், ஆனா தமிழிலேதான் 'எழுதராங்க'ன்னதும் சுவாரசியமா இருந்துச்சுங்க.


ஜனங்களுக்கு,அவுங்க எதிர்காலம் எப்படி இருக்கும்? என்றதைத் தெரிஞ்சுக்க தீராத ஆவல் இருக்குங்க. நீங்கயாருகிட்டேயாவது 'கை ரேகை' பார்க்கத் தெரியுமுன்னு சொல்லிப் பாருங்களேன். உடனே உங்ககிட்டே கையைக் காமிக்க ஒரு கூட்டம்( அதிகப்படியோ? ) சரி, குறைஞ்சது ஒருத்தராவது கை நீட்டலைன்னா .... பாருங்க.


நம்ம கவிஞர் சுரேஷ், பேசிக்கிட்டு இருக்கப்பவே, உங்க நட்சத்திரம் என்னன்னு கேட்டார். அட! நாம் தமிழ்மண நட்சத்திரமா ஜொலிச்சது(!) இவருக்கும் தெரிஞ்சிருச்சோன்னு கிளம்புன பூரிப்பை அனுபவிக்க விடாம மனுஷர், பிறந்த நட்சத்திரம் னு சொல்லிட்டார். ....... ன்னு சொன்னதும் அந்த நட்சத்திரத்துக்குரிய குணாதிசயங்களைச் சொன்னார். ஏறக்குறையசரியா இருக்கு. நமக்கு மட்டும் சொன்னாப் போதுங்களா? குடும்பத்தோடதையும் தெரிஞ்சுக்கணும் இல்லையா? கோபாலோட நட்சத்திரத்தையும் , மகளோடதையும் சொன்னேன். பாருங்க 32 வருசம் ஒருத்தர்கூடவே இருந்தும்அவர் குணத்தைத் தெரிஞ்சுக்க மனசு பறக்குது. எல்லாம் மனுஷ சுபாவம்தான். அவர் சொன்ன பலன்கள், விவரங்கள்எல்லாம் அஞ்சுக்கு மூணு பழுதில்லாமல் இருந்துச்சுங்க.


இதுக்கு நடுவிலே சித்தார்த் என்ற இளைஞர் வந்து நம்ம கூட்டத்துலே கலந்துகிட்டார். அவர்தான் இன்னும் ரெண்டுவாரத்துலே தமிழ்மணம் நட்சத்திரமாகப் போறாருன்னு அப்பத் தெரியலை. தங்கையோட கல்யாண அழைப்பிதழைக் கொடுத்தார். அட்டகாசமான பத்திரிக்கை. அருமையான டிஸைன். என்ன... நான்தான் கலந்துக்க முடியாது. இன்னும்3 நாளுலே நான் கிளம்பறேனே(-: ஒரு கல்யாண விருந்து மிஸ்ஸாகிப்போச்சு. ஹூம்.....


சித்தம் பிரார்த்தனைக் கிளப்லே 'மயில்' மூலமே இதுவரைப் பரிச்சயப்பட்ட காந்தி ஜெகன்னாதன் வந்து சேர்ந்தாங்க.மூணு லேடீஸ்! பேச்சுக்குக் கம்மியான்னு கேட்டுறாதீங்க? எங்கே பேச விட்டாரு இந்த வேந்தன் அரசு? வகைவகையானதீனிகளைக் கொண்டுவந்து கல்யாணத்துக்கு வரிசை வைக்கிறமாதிரித் தட்டுத்தட்டா நிரப்பிட்டார். கல்யாணம்னு சொன்னவுடனே ஞாபகம் வருது. அவரும் ( 'உம்'மைக் கவனிச்சீங்களா?) இங்கே ஒரு கல்யாண வைபவத்துலேக் கலந்துக்கத்தான்இந்தியா வந்திருந்தார். அதனாலே வரிசைவச்ச தட்டுகளிலே கல்யாணப் பலகாரங்கள் வேற இருந்துச்சு. அப்புறமாச் சாப்புட்டுக்கலாமுன்னு கொஞ்சம் போட்டோக்கள் எடுத்து வச்சுக்கிட்டேன். காஃபி வந்தது. அதைக் குடிச்சுட்டேன்.


டாக்டர் இர.வா கிட்டே ரொம்பப் பேசலை. அவர்கிட்டே என் 'தமிழறிவை'க் காமிச்சுக்கக் கொஞ்சம் தயக்கம் இருந்துச்சு.அதெல்லாம் இடம் பொருள் ஏவல்னு இருந்துருவமில்லெ! வெளிநாடுகளிலே திருமணங்கள் எங்கே,எப்படி நிச்சயிக்கப்படுதுன்னு ஒரு விவாதம் போய்க்கிட்டு இருந்தது.


அதுக்குள்ளே நேரம் ஆறுமணி ஆயிருச்சேன்னு அண்ணனுக்குப் போன் போட்டதும் அவரும் அண்ணியும் வந்துட்டாங்க. காந்தியுடையகுடும்பம் ஒரு அஞ்சு நிமிஷத்துலே அங்கே வர இருக்காங்கன்னு சொன்னதாலே இருந்து அவுங்களையும் பார்த்துட்டுப் போகலாமுன்னு இருந்தோம். குழந்தைப் பையன் சிபு, அப்பாவோடும்,பாட்டியோடும் வந்தார். காந்தியோட மாமியார்ரொம்ப சிநேகமான சுபாவமுன்னு பார்த்ததும் புரிஞ்சு போச்சு.


அருமையான சந்திப்பா அமைஞ்சது.


அங்கே பக்கத்துலேயே இருக்கும் உறவினர் வீட்டுக்குப் போயிட்டுப் போயிரலாமுன்னு அங்கே போனோம்.அன்னிக்குசிவராத்திரி. பெரிய சைஸ் டிவியிலே ஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீ ( எத்தனைஸ்ரீ ன்னு தெரியலைங்க. அதான் ஒண்ணுரெண்டு கூடப்போட்டுட்டேன்) ரவிசங்கர் பெரிய திண்டு சிம்மாசனத்துலே உக்கார்ந்து சிவராத்திரி விழாவை நடத்திக்கிட்டு இருக்கார். வெள்ளைக்கார அம்மணிகள் 'ஓம் நமஷிவாயா'ன்னு பாட்டுக் கட்டிப் படிக்கிட்டு இருக்காங்க. உறவினர் பக்திசிரத்தையா அதைப் பார்த்துக்கிட்டு இருக்காங்க. 'சிவ பூஜைக் கரடி'ன்றது இதுதான் போல. கரடியா நாங்க போனோம்.


அவுங்க பசங்களுக்குப் பரீட்சை சமயம். ஆனாலும் அவுங்க பொண்ணு 'கிடார்'லே 'ரண்டக்க ரண்டக்க' வாசிச்சு என்னைக் குஷிப் படுத்துச்சு. 'சுட்டும் விழிச் சுடரே'வும் வாசிச்சதுதான். ஆனா முன்னதுதான் சூப்பர்.அதுலே பாருங்க இங்கத்துப் பசங்கள் பள்ளிக்கூடத்துலே ஆரம்பிச்சு அருமையா ம்யூஸிக் கான்செர்ட்டெல்லாம் நடத்துவாங்க. என் மகளும் ஃப்ளூட், பியானோ, கீ போர்டு, கிடார் வாசிப்பாதான். ஆனா கண்ணு முன்னாலே 'ம்யூஸிக் நோட்' வேணும்.அது இல்லேன்னா யாருக்கும் வேலை நடக்காது.சமையல் புத்தகம் பார்த்து அப்படியே வரிக்குவரி பிறளாமச் சமைக்கிறதுதான் இங்கெ.


நம்ம இசைக்கலைஞர்கள்லே பார்த்தீங்கன்னா, நோட்டா பாழா? எல்லாம் நினைவுலே இருந்து அப்படியே தடதடன்னுமழை மாதிரி கொட்டுது. எல்லாம் அப்படியே கறபனையிலே உருவாகி வர்றதுதான்,இல்லே?அதுதாங்க இங்கத்துக்கும் அங்கத்துக்கும் வித்தியாசம்.


இலக்கியக் கூட்டத்துலே என்னை விட்டுட்டு அண்ணனும் அண்ணியும் அண்ணாநகர் கிராண்ட் ஸ்வீட்ஸ்க்குப் போய் என் ஃபேவரைட் சமாச்சாரங்கள் எல்லாம் வாரிப் போட்டுக்கிட்டு வந்திருந்தாங்க. இதுபோல சந்தர்ப்பம் இனி வருமா?பூந்து வெள்ளாடவேண்டியதுதான்:-))))


உள்மனசு எச்சரிக்குது, 'அளவுக்கு மேலே போறே நீ'ன்னு. செரிக்கணுமுன்னா அஞ்சு நிமிசம் நடந்துட்டு வந்தாப் போச்சு.எல்லாரும் கிளம்புங்க.


கற்பக விநாயகர் கோவில் ச்சின்னதுன்னாலும் நல்லா அம்சமா இருக்கு. சிவராத்திரியை முன்னிட்டு விசேஷ பூஜை.வெவ்வேற பஜனை கோஷ்டிகள் வந்து ஒரொரு டைம் ஸ்லாட்லே பாடிக்கிட்டு இருக்காங்க. பயபக்தியாப் போய் சாமியைக்கும்பிட்டுக்கிட்டு பாட்டையும் கேட்டுட்டு வந்தோம்.


அன்னிக்கு ராத்திரி கொசுக்களுக்குக் கொண்டாட்டம். இனிப்பா இருக்கேன்லே:-)

35 comments:

said...

துளசிக்கா

அடிக்கடி நொறுக்ஸ் படம் எல்லாம் போடறீங்க
ஆனா எல்லாமே கொலஸ்ட்ரால் சமாச்சாரங்களா இருக்குங்களே.

said...

பெரு(சு)

படம் பார்த்தே 'கொலஸ்ட்ரால்' எகுருதுன்னாக் கொஞ்சம் கவனிக்க வேணும்தான்.

வேற எதுக்கு இருக்கு ட்ரெட்மில்?

நமக்கு அத்தனை 'கொழுப்பு' இல்லாததாலே வண்டி இன்னும் ஓடிக்கிட்டு இருக்கு.

said...

its time latter amread it k

said...

சிங்.செயகுமார்,

அவசரம் இல்லை. நிதானமாப் படிக்கலாம், எங்கே ஓடிறப்போகுது?

படிச்சுட்டு நாலுவரி எழுதுனாச் சரி:-)

said...

துளசியக்கா,
இப்படி அடிக்கடி சாப்பாடு, பலகார படம்போட்டு எங்க மாதிரி ஆளுங்களோட மனசை அல்லாட விட்டுடுறீங்க. :-).

said...

முத்துத்தம்பி,

இங்கெமட்டும் என்ன வாழுது? படங்களைப் பார்த்துப் பெருமூச்சு விட்டுக்கறதுதான்.
இப்பெல்லாம் சமைக்கவே ஒரு சோம்பல் வந்துருச்சுப்பா. எப்படி வேலை செய்யாமத்
தப்பிக்கலாமுன்னே மனசு ஓடுது. இந்த அழகுலே பலகாரமெல்லாம் யார் செய்யறது?
அப்படிச் செஞ்சாலும் திங்க ஆள் வேணாமா?

ஹல்திராம் தயவுலே பொழுது போகுது. இப்ப அதுகூட போரடிச்சுப் போச்சு.

said...

//படங்களைப் பார்த்துப் பெருமூச்சு விட்டுக்கறதுதான்.//

எங்க ஊருக்கு வாங்க. எல்லாமே கிடைக்குது.

said...

கொத்ஸ்,

வரலாம்தான். ஒண்ணும் கிடைக்கலேன்னாலும் கொத்ஸ் பரோட்டாவாவ்து கிடைக்குமே:-)))

வேலை இல்லாம உங்க ஊருலே வந்து என்ன செய்யறது?

said...

நாங்களெல்லாம் இருக்கோமே. வந்து பாக்கறது. அப்புறம்தான் அதை வச்சு ஒரு 50 பதிவு போட்டு ஓட்டுவீங்களே. :)

said...

வேலை இல்லையா?என்னப்பா துளசி
இப்படி விட்டுட்டீஙக. எமக்கு தொழில் எழுதுவது! அதையும் மனசு நோகாமல் எழுதுவது பெரிய பண்பு இல்லியா.? எங்களுக்கு கொழுப்பும் உண்டு மற்ற எல்லாம் உண்டு. அதனால் தான் உங்கள் பட வைத்யம் நன்றாகவே இருக்கிறது.சித்தம்,அன்புடன் எல்லாம் ப்லொக்ச்பாட் ஆக வந்து இருக்கிறதா?மனு.

said...

//சிவராத்திரியை முன்னிட்டு விசேஷ பூஜை.வெவ்வேற பஜனை கோஷ்டிகள் வந்து ஒரொரு டைம் ஸ்லாட்லே பாடிக்கிட்டு இருக்காங்க. பயபக்தியாப் போய் சாமியைக்கும்பிட்டுக்கிட்டு பாட்டையும் கேட்டுட்டு வந்தோம்.//
சிவராத்திரி, வைகாதேசின்னா நமக்கு பூஜை புணஸ்காரம்ன்னு பண்றதில்லை எனக்கு தெரிஞ்சு எங்க ஒன்னுவிட்ட சித்தப்பாரு வீட்ல, பரமபதம் ஆடிகிட்டு இருப்பாங்க ராத்திரி முழுக்க தூங்கமா, தெய்வம்சம் வந்துடுமா முழிச்சு பரமபதம் ஆடுனா, இதென்ன கதை! நாங்க ஹாஸ்டல்ல இந்த மாதிரி சீட்டு கச்சேரி போட்டு சிவராத்திரி, வைகாதேசி பொழுதென்னைக்கும் கொண்டாடினா, தெய்வம்சம் ஏன் வர்றதில்லைன்னு தெரியலயே:)

said...

கொத்ஸ்,

இவ்வளொ சொல்றப்ப வராம இருந்தா நல்லா இருக்காது. கட்டாயம் வரேன். டிக்கெட்டைச் சீக்கிரமா
அனுப்பி 'வையுங்க':-))))

50 என்ன? 500 போட்டுறலாம்!

said...

மானு,

வேலைன்னு சொன்னது கோபாலுக்கு. பின்னே 'பூவாவுக்கு' வழி எப்படி?:-))))

சித்தம், அன்புடன் எல்லாம் இப்ப 'நம்பிக்கை'ன்னு ஒரு குழுவா ஆகிருச்சு. அதுலே சேரணுமுன்னா
சொல்லுங்க.

said...

உதயகுமார்,
தூங்காம இருக்கறதுக்காக விடிய விடிய சினிமாப் பாக்கறதை விட்டுட்டீங்களே!

சும்மா சீட்டு ஆடுனா தெய்வாம்சம் வருமா? அதெல்லாம் பயபக்தியா பகவான் பேரை சொல்லி
பஜனை, பூஜைன்னு இருக்கணும்.

said...

// நமக்கு அத்தனை 'கொழுப்பு' இல்லாததாலே வண்டி இன்னும் ஓடிக்கிட்டு இருக்கு. //

அப்ப யாருக்குக் கொழுப்புன்னு சொல்றீங்க டீச்சர் ;-)

said...

ஓ அந்த நிகழ்ச்சியா...பெங்களூர்ல புது ஏர்ப்போர்ட் வரப்போற எடத்துல அந்தக் கூட்டம் நடந்துச்சு. ரவிசங்கர் நடத்துனதுதான். நூறு வீணை. நூறு புல்லாங்குழல்னு பிரம்மாண்டமா மெரட்டுனாங்க.

நாலு வருசத்துக்கு முன்னாடி பெல்ஜியத்துல இருந்து திரும்பி வரும் போது, பக்கத்துல ஒரு வெள்ளக்காரப் பொண்ணு. பெங்களூர்ல யாரோ பண்டிட் ரவிசங்கப்பரப் பாக்கப் போறதாச் சொல்லிச்சி. நாங்கூட கேணத்தனமா சித்தார் வாசிக்கிறவரான்னு கேட்டேன். அந்தப் பொண்ணு என்ன அற்பப்புழுப் போல பாத்தது ஏன்னு புரியவே ரொம்ப நாள் ஆச்சு.

said...

//ஓ அந்த நிகழ்ச்சியா//

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் துளசி, நா ஒண்ணும் சொல்லப்பா :-)

அட பகவானே, யூ டூ ஜீரா .................

said...

நம்ம இசைக்கலைஞர்கள்லே பார்த்தீங்கன்னா, நோட்டா பாழா? எல்லாம் நினைவுலே இருந்து அப்படியே தடதடன்னுமழை மாதிரி கொட்டுது. எல்லாம் அப்படியே கறபனையிலே உருவாகி வர்றதுதான்,இல்லே?அதுதாங்க இங்கத்துக்கும் அங்கத்துக்கும் வித்தியாசம்.//

ஆனாலும் நம்ம நாட்டு சங்கீதத்துக்கு நோட்ஸ் எழுதி பழக்கமில்லையில்லயே.. பெரும்பாலும் கேட்டுத்தானே படிச்சிக்கிறாங்க. நோட்ஸுன்னு இருந்தா அத பார்த்து வாசிச்சா போச்சுன்னு நினைச்சிக்கிறாங்க.

said...

ராகவன்,

//அப்ப யாருக்குக் கொழுப்புன்னு சொல்றீங்க டீச்சர் ;-)//

அதெல்லாம் சொன்னா குடும்பத்துலே குழப்பம் வருமோ?

பாவம். இத்தனைக்கும் ஸ்வீட்ஸ் எல்லாம் சாப்புடமாட்டார். ஆனாலும் கொலஸ்ட்ரால் கொஞ்சம்
கூடித்தான் இருக்கு(-:

அந்த நிகழ்ச்சி இல்லை. இது டெல்லியில் நடந்ததாம். அதை லைவாக் காமிச்சுக்கிட்டு இருந்தாங்க.

பெங்களுருது நாங்க அங்கே வந்திருந்தமே அந்த வீக் எண்ட் ஆச்சே.

said...

உஷா,

//துளசி, நா ஒண்ணும் சொல்லப்பா ...//

வந்துட்டு இப்படிச் சொன்னா எப்படி? இதுதான் அந்த நிகழ்ச்சி இல்லையே:-)))

எதாவது சொல்லுங்க உஷா. தமிழ்மணம் வலைஞர்கள் கருத்து வேற்றுமையிலும்
ஒற்றுமையா இருக்கோமுன்னு உலகுக்குக் காமிக்கலாம்:-)))))

said...

வாங்க டிபிஆர் ஜோ,

அதாங்க இங்கே நியூஸிக்களுக்கும் அதிசயம்.எப்பவாவது ( இதுவரை 2 முறை)எல். சுப்ரமணியம்
வயலின் நடக்கும் சமயம் நோட் இல்லாம வாசிக்கிறதைப் பார்த்து அம்பரந்நு போயிருவாங்க.

said...

ஒரு கர்நாடக கச்சேரியில் பாடகருக்கு, பக்க வாத்யக் காரர்களுக்கு என்று தனி தனியே நோட்ஸ்டாண்டுகளுடன் கற்பனை செய்து பார்த்தேன், இன்னும் சிரிப்பை அடக்க முடியவில்லை. LoL:)))))

said...

//அண்ணாநகர் கிராண்ட் ஸ்வீட்ஸ்க்குப் போய் என் ஃபேவரைட் சமாச்சாரங்கள் எல்லாம் வாரிப் போட்டுக்கிட்டு வந்திருந்தாங்க.//
நான் சுடான் வந்த போது என் சித்தி சில அயிட்டங்களை கிராண்ட் ஸ்விட்ஸில் இருந்து வாங்கி கொடுத்தார்க்கள். அனைத்து முடியும் தருவாயில் உள்ளது. :(

//அன்னிக்கு ராத்திரி கொசுக்களுக்குக் கொண்டாட்டம். இனிப்பா இருக்கேன்லே:-) //
துளசியக்கா, சுகர் இருந்தா ஈ தான மொய்க்கனும், கொசுவுக்குன் இனிப்புக்கும் என்ன சம்பந்தம்????
அன்புடன்
நாகை சிவா

said...

nalla irukke! vetradhu neenga;
nadakka mattum nangalum varanuma

said...

மணியன்,
நீங்க சொன்னதை நினைச்சுப் பார்த்தா சிரிப்புதான் வருது:-)
வெளிநாட்டு ஆர்கெஸ்ட்ரா பார்க்கறப்ப கவனிங்க. எல்லாருக்கும் ஒரு ஸ்டேண்டு & நோட்.
இதுக்கே இடம் ஏராளமா வேணும்.
நம்ம மேடையிலெ இடம் போதுமா?

said...

சிவா,

சுகர் வெளியே இருந்தாத்தான் ஈ மொய்க்கும். இது நம்ம ரத்தத்தின் ரத்தமாச்சேப்பா.
ராத்திரி அங்கே கொசுங்க புடுங்கிருதுலே. எந்த கொசுவர்த்திக்கும் அஞ்சறதில்லை அதுங்க.

said...

சிவஞானம்ஜி,

நடக்க வந்தா உங்களுக்கு நல்லது. அப்படியே நம்ம கோயிலையும் ச்சுத்திக்
காமிச்சிருப்பேன்லெ?

சிவராத்ரிக்குக் கோயிலுக்குப் போன புண்ணியமும் கணக்குலே சேர்ந்திருக்கும். ஹூம்..

said...

துள்சிங்க, அங்கெங்கே நீங்கள் நிஜ உண்மைகளை வாழ்வில் உணர்ந்தவைகளை ரொம்ப எதார்த்தமா கொடுக்கிற உங்க ஸ்டைல் பிடிச்சுருக்கு...உதாரணத்துக்கு சில உங்களிடமிருந்து உங்களுக்கே...

//பாருங்க 32 வருசம் ஒருத்தர்கூடவே இருந்தும்அவர் குணத்தைத் தெரிஞ்சுக்க மனசு பறக்குது. எல்லாம் மனுஷ சுபாவம்தான்.//

//நம்ம இசைக்கலைஞர்கள்லே பார்த்தீங்கன்னா, நோட்டா பாழா? எல்லாம் நினைவுலே இருந்து அப்படியே தடதடன்னுமழை மாதிரி கொட்டுது. எல்லாம் அப்படியே கறபனையிலே உருவாகி வர்றதுதான்,இல்லே?அதுதாங்க இங்கத்துக்கும் அங்கத்துக்கும் வித்தியாசம். //

ரெண்டுமே மனசிலப் பட்டது (தைத்த விசயங்கள்)...

தெகா.

said...

வாங்க தெ.கா,

வெல்லத்துலே புள்ளையார் பிடிச்சுவச்சுக் கும்பிட்டுட்டு அவரையே கிள்ளி பிரசாதமாக் குடுக்கற கதையா?:-))))

எண்ணப்போக்குலேயே போயி எழுதறதுதான் இப்படி ஆயிடுது.

said...

எப்படி எப்படி உங்களுக்கு மட்டும் இவ்வளவு அழகான தீனி அய்ட்டங்கள் (படம் எடுக்கக்) கிடைக்குது? சிவராத்திரியும் அதுவுமா, இப்படி வெட்டு வெட்டுனு...:-)

said...

ஜெய சந்திரசேகரன்,

பட்டினி கிடக்க வேணாமுன்னு 'பகவானே' இவ்வளவு
தீனியையும் அனுப்பி இருக்கார்.

வயிறு 'கவ்வாங் கவ்வாங்'ன்னா சாமி மேலே கவனம்
போகுமோ?

said...

இப்போதுதான் திரும்ப உங்கள் இடுகையை மீள்வாசிப்பு செய்தேன். போரூர் பக்கத்தில் விமானநிலயத்தின் விரிவாக்கம் வருவதாக கேள்விப் பட்டேன். நன்றாக விசாரித்துக் கொள்ளச் சொல்லுங்கள்.

said...

ஆமாங்க மணியன்.
பக்கத்துலே விமானதளம் வருதுன்னு சொல்லிக்கிட்டு இருக்காங்கதான். ஆனா, இது அண்ணன் வாங்கி இருக்கற புதுவீடு
வரை வராதாம். அங்கேயும் ஒரு காம்பவுண்டுலே 12 வீடு கட்டியாச்சு. எல்லாரும் குடி வந்துட்டாங்களாம்.

said...

இன்றுதான் இப்பதிவை படித்தேன். மகிழ்ந்தேன். நன்றி!

said...

வாங்க + ராமரே,

இதுதான் 'லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா' வர்றதா?:-))))