Monday, July 03, 2006

நியூஸிலாந்து பகுதி 49


'வந்து குடியேறிய நாடுதான் இது'ன்ற எண்ணம் மறைஞ்சு, 'இதுதான் நம்ம நாடு'ன்ற தேசப்பற்று பரவ ஆரம்பிச்சது.இவ்வளவு அழகுள்ள நாடுன்ற பெருமிதமும் மக்கள் மனசுலே வந்துச்சு. 1890லே அண்டைநாடான ஆஸ்தராலியா( அப்ப ஆறு காலனிகளா இருந்துச்சு), இதையும் சேர்த்து ஏழு காலனிகள் இருக்கற புது நாடா பிரகடனம் செய்யலாமுன்னு கேட்டப்ப, நியூஸிலாந்து நாட்டைச் சேர்ந்தவங்க நிறையப்பேர் இதுக்குச் சம்மதம் தெரிவிக்கலை. தனி நாடாத்தான் இருக்கணுமுன்னு விருப்பம் தெரிவிச்சாங்களாம். 1901லே ஆஸ்தராலியன் காமன்வெல்த் உருவானப்ப அதுலே நியூஸி இல்லை. ( ஒருவேளை இந்த ஆஸிகளுக்கும், நியூஸிகளுக்கும் தனித்தனி ஜோக் உண்டாக்கி ஒருத்தருக்கொருத்தர் பரிகசிச்சிக்கிறது அப்ப இருந்துதான் உண்டாச்சோ என்னவோ?)


1901 லே இங்கே இருந்து சரக்கு ஏத்திக்கிட்டு போன கப்பல்களிலே பறக்க விட்டுருந்த கொடியோட டிஸைனையே நாட்டுக் கொடியாக ஏத்துக்கிட்டாங்க. எல்லாப் பள்ளிக்கூடங்களுக்கும் இந்தக் கொடியை அனுப்பி வச்சது அரசாங்கம்.ஆழ்ந்த நீலக்கலர்லே ஒரு மூலையில் பிரிட்டிஷ் கொடியின் படமும், சதர்ன் க்ராஸ் என்ற நாலு நட்சத்திரமும் அச்சடிச்ச கொடி.


தாமஸ் ப்ரேக்கன் என்றவர் 1875லே எழுதுன 'காட் ஆஃப் நேஷன்ஸ் அட் தை ஃபீட்' என்ற பாட்டை பல பள்ளிக்கூடங்களிலும் பாடிக்கிட்டு இருந்தாங்களாம். அதையே தேசீய கீதமா ஆக்குனாங்க 1940 வருசம்.


தென்னாப்பிரிக்காலே அந்தக் காலக்கட்டத்துலே நடந்த Boer War லே பிரிட்டிஷ் படைகளுக்கு ஒத்தாசையா ஆஸ்தராலியா,நியூஸிலாந்து, கானடா இங்கிருந்து படைவீரர்கள் போனாங்க. ஆனாலும் இங்கே இருந்து போன குதிரைப்படைதான் முதல் காலனிப் படையாம். 70 வீரர்கள் போயிருக்காங்க. அதுலே ரெண்டுபேர் கொல்லப்பட்டாங்க. அவுங்க சண்டைசெய்த இடத்துக்கு 'நியூஸிலாண்ட் ஹில்'னு பேர் ஏற்பட்டது.


நியூஸியிலே இருந்து போன படைவீரர்கள், தைரியத்துலே பிரிட்டிஷ் வீரர்களுக்குச் சளைத்தவங்க இல்லையாம். அதனாலே இவுங்களையெல்லாம் 'மவொரிலேண்டர்ஸ், ரப் ரைடர்ஸ்'ன்னு கூப்புட்டாங்காளாம்.
அதுக்கப்புறம் நடந்த முதலாம் உலக மகா யுத்தத்திலே கலந்துக்கவும் இங்கிருந்து படைகள் போச்சு. கல்லிப்போலி என்ற இடத்துலே நடந்த சண்டையிலே ஆஸ்தராலியா, நியூஸி வீரர்கள் கொல்லப்பட்டார்கள். இறந்துபோன வீரர்கள் நினைவுநாளா ஆன்ஸாக் டே Anzac Day ஒவ்வொரு வருஷமும் ஏப்ரல் 25 அனுஷ்டிக்கறாங்க.


போர் முடிஞ்சு திரும்ப வந்த ராணுவ வீரர்களுக்கு மறுபடி வாழ்க்கையிலே செட்டில் ஆகறதுக்கு அரசாங்கம் உதவிசெஞ்சது. பலர் பண்ணைகள் வாங்கிக்கிட்டுப் போனாங்க. ஏற்றுமதியாகுற பண்ணைப் பொருட்கள் விலை திடீர்னு உலக மார்கெட்லே குறைஞ்சதாலெ பலருக்குப் பண்ணை வேலைகளிலே தாக்குப் பிடிக்க முடியலை.


சினிமாவும் நுழைஞ்சது. எல்லாம் ஊமைப் படங்கள்.


1922லே முதல் ரேடியோ ஒலிபரப்பு. வீடுகளிலெ ரேடியோ வச்சிருந்தா அவுங்க மதிப்பே உயர்ந்துருமாம்.


இதே காலக் கட்டத்துலேதான் மோட்டார்கார்கள் இங்கே வந்துச்சு. லைட், பெட்ரோல் எஞ்சினுக்குள்ளே போறதுக்கு பம்ப் இப்படி இருந்தாலும், டயர் ஒண்ணும் சரி இல்லையாம். அதனலே எப்பவும் ரெண்டு டயர்கள் கூடுதலாவச்சுக்கிட்டே இருக்கும்படி ஆச்சாம். ரோடுங்களும் கார் போற நிலையிலே இல்லையே. புதுசா ரோடுங்க போட்டே ஆகணும்.


வண்டிகளுக்குப் பெட்ரோல் அடிக்க பெட்ரோல் பங்க் எல்லாம் கிடையாதாம். பலசரக்குக் கடைகளிலே நாலு கேலன் டின்னுகளிலே பெட்ரோல் விப்பாங்களாம். அதை வாங்கி வண்டிகளுக்கு ஊத்திக்கணும். பனிகாலத்துலே டயர் வழுக்காம இருக்க சங்கிலி மாட்டிக்கணும். ஒரு 50 கிலோ மீட்டர் போக நாலு மணி நேரம் ஆகுமாம்.


அப்பவே பெட்ரோல் வரின்னு ஒண்ணு ஏற்பாடு செஞ்சு, அதுலே வந்த வருமானத்தை வச்சு நல்ல ரோடு போட்டு இருக்காங்க.


1926 லே போதுமான வருமானம் இல்லாத ஏழைக் குடும்பங்களுக்கு அரசாங்கம் 'இன்கம் சப்போர்ட்'ன்னு வாரம் இவ்வளவுன்னு காசு கொடுத்து உதவுச்சு. அதுவும் இங்கத்துக் குடிமக்களுக்கு மட்டும். விதேசிகள், கெட்டவங்க,கல்யாணம் கட்டிக்காம குழந்தை பெத்து வச்சுருக்கறவங்கன்னு ஒரு லிஸ்ட் போட்டு வச்சு, அவுங்களுக்குக் கையைவிரிச்சது. அப்ப திருமண பந்தத்துக்கு ரொம்ப முக்கியத்துவம் இருந்துருக்கு.


1929லே இன்னொரு இறக்கம் வந்துச்சு. 6000 பேருக்கு வேலை இல்லாமப் போச்சு. எல்லாரும் கஷ்டப்பட்டுக்கிட்டு எப்படியாவது சமாளிக்கலாமுன்னு பார்த்தா, ஏற்றுமதிக்குச் சரியான விலை கிடைக்காம நிலமை இன்னும் மோசமாப் போச்சு. ஒரே வருசத்துலே வேலை இல்லாத ஆட்களொட எண்ணிக்கை இன்னும் உயர்ந்து 11000 ஆயிருச்சு.


அரசாங்கத்துக்குக் கவலையாப் போச்சு. உள்ளூர் ஆட்சி நடத்தற கவுன்சில், இன்னும் பெரிய வியாபார நிறுவனங்கள் எல்லாரையும் கலந்து ஆலோசிச்சு புது வேலைவாய்ப்புகள் பெருக ஒரு திட்டம் போட்டுச்சு.


இதுதான் ஸ்க்கீம் 5. அஞ்சாம் திட்டம். அந்தந்த நகரசபைகள் உள்ளூர் ஆம்புளைகளையும், பசங்களையும் வச்சு ஊரையும், தெருக்களையும் சுத்தம் செய்யறது. புது ரோடுகள், தெருவுகளிலே ரெண்டு பக்கமும் மரம் நடறது, கழிவுநீர் கால்வாய் வெட்டுறது, நகர சபைக்குச் சொந்தமான பார்க், பூந்தோட்டம் இங்கெல்லாம் களைகளைப் பிடுங்கி,ஒழுங்குபடுத்திப் பராமரிக்கிறதுன்னு வேலைகளைக் கொடுத்துச்சு.


சுற்றுலாப்போற இடங்களுக்கும் வசதிகள், அருமையான ரோடுகள் எல்லாம் உருவாச்சு. இது இல்லாம ஆயிரக்கணக்கான பைன் மரங்களை குன்றுச் சரிவுகள், சமவெளிகள்னு எல்லா இடத்திலும் நட்டு வச்சாங்க.

பள்ளிக்கூடங்களுக்கும்விளையாட்டு மைதானமெல்லாம் சீர் செய்யறதுக்கும் இந்த திட்டம் 5 உதவி செஞ்சது. வேலை கொடுக்கணுமுன்றதுமுக்கிய நோக்கமா இருந்ததாலே, மெஷின்களை உபயோகிக்கலை. 'மண்வெட்டியிலே கொத்திக் கிளறி'ன்னு மெதுவா வேலைகள் நடந்துச்சு. எவ்வளோ நாள் இழுக்குதோ அவ்வளோ நாள் வேலை இருக்குமே! சம்பளம் என்னவோ கம்மிதான்.ஆனா, பசி பட்டினியிலே இருந்துக் காப்பாத்திக்க முடிஞ்சது.


இந்தக் கஷ்ட நிலமை 1935வரை நீடிச்சது. சரியான துணிமணிகள், வீடுகள், காலணிகள் இல்லாம ரொம்பக் கஷ்டம் தானாம்.வாடகை கொடுக்கமுடியாத நிலை வந்தப்ப ஒரு வீட்டை மொத்தவாடகை பேசிக்கிட்டு, ஒவ்வொரு அறையிலும் ஒவ்வொரு குடும்பம் வசிச்சது.( இந்த நிலமை பூனா, பாம்பேயிலே இருந்தது ஞாபகம் வருது) வெளியே ஷெட் போட்டுக்கிட்டு ஜனங்க இருந்தாங்க. இதாலே சுகாதாரம் வேற பாதிக்கப்பட்டுச்சு. மாவு வர்ற சாக்கையெல்லாம் பிரிச்சு, அதையே துணிகளாத் தச்சுப் போட்டுக்கிட்டாங்களாம். ஷூ தேஞ்சுபோனா, உள்ளே கார்ட்போர்டு அட்டைகளை வெட்டி வச்சுக்கறதாம்.இந்தக் குளுருக்கு எப்படித்தான் தாக்குப் பிடிச்சதோ?

18 comments:

said...

துளசி, டூரிஸ்ட் ஸ்பொட் வரும்போது மரமும் நட்டாங்களா? நல்ல் ஆட்சிதான்.காலம் காலமாக இயற்கையோடு போராட வேண்டி என்னவெல்லாம் துன்பப் பட்டார்களோ.அப்படியாவது அமைதி கண்டார்களா?பார்க்கலாம்.

said...

வாங்க வல்லி.

டூரிஸ்ட் போற இடமெல்லாம் நல்ல பாதைகள் போட்டு வச்சுருக்காங்க.
வழியைச் சீர்ப்படுத்தி மரமெல்லாம் நட்டுருக்காங்க.

எல்லா டூரிஸ்ட் இடத்துக்கும் ஈஸி ஆக்ஸெஸ் இருக்கு. அதை நிச்சயமாப் பாராட்டியே ஆகணும். இல்லையா?

said...

கல்யாணம் கட்டிக்காம குழந்தை பெத்து வச்சுருக்கறவங்கன்னு ஒரு லிஸ்ட் போட்டு வச்சு, அவுங்களுக்குக் கையைவிரிச்சது. //

அப்போவும் இதெல்லாம் இருக்கத்தான் செஞ்சிருக்கு பாருங்க..

அப்ப திருமண பந்தத்துக்கு ரொம்ப முக்கியத்துவம் இருந்துருக்கு.//

இப்போ இல்லேங்கறீங்க:)

ஏன், நம்ம நாட்டுலயே கொஞ்சம், கொஞ்சமா குறைஞ்சிக்கிட்டேதானே வருது..

said...

//1922லே முதல் ரேடியோ ஒலிபரப்பு. வீடுகளிலெ ரேடியோ வச்சிருந்தா அவுங்க மதிப்பே உயர்ந்துருமாம்//

இப்ப 2006ல் எலக்ட்ரானிக் உலக contextல் நகைச்சுவையான விஷயம்.

நியூஸிக்கு eco-டூரிஸம் முக்கியமான எகானமி விஷயமாச்சே!

said...

ஆமாங்க டிபிஆர்ஜோ.

இப்பவும் பழைய ஆளுங்களுக்கு இதெல்லாம் பிடிக்கலைதான். ஆனா நாம் சொல்றதுனாலே
மாறிடாதுன்ற மனக்கசப்புலே இருக்காங்க.

இப்ப என்னன்னா ரெண்டு வருஷம் சேர்ந்து இருந்தாலே கணவன் மனைவிக்கு உள்ள எல்லா உரிமையும்
இருக்குன்னு அரசாங்கம் சொல்லிருச்சு. அப்புறம் பிரிஞ்சாங்கன்னா சொத்துலே பாதி பிரிச்சுக் கொடுத்தரணும்.

said...

வாங்க ஹரிஹரன்,

டூரிஸம்தான் இப்ப நிறையக் காசு கொண்டு வருது. இங்கே இப்ப விண்ட்டர். ஸ்கீ ஆளுங்கல்லாம்
வந்துகிட்டு இருக்காங்க.

said...

ஆகா...........எத்தனை தகவல்கள்.

கல்யாணம் செய்யாம குழந்த பெத்துக்கிட்டா அரசாங்கத்துக்கு என்னவாம்?

ரேடியோ........எங்க வீட்டுல சின்னப்பிள்ளைல மர்ஃபி ரேடியோ இருந்தது. ஒரு அழகான கொழந்த வாயில வெரல வெச்சுக்கிட்டு இருக்குற விளம்பரமும் உண்டு. ரொம்பப் பேரு அந்தக் கொழந்த கண்பட்டு கடவுள் கிட்ட போயிருச்சுன்னு சொல்வாங்க. அது எவ்வளவு உண்மையோ தெரியாது. ரேடியோ அப்பல்லாம் சாதாரண விஷயமாயிருச்சு. ஆனா டீவி. தூத்துக்குடியில புதுக்கிராமத்துல அஞ்சாறு வீட்டுலதான் இருந்தது. தமயந்தியம்மா பங்களா, அக்சார் பெயிண்ட்ஸ், ஸ்டீபன் டாக்டரு, பிரின்ஸ் டாக்டரு, இன்னும் ரெண்டு மூனு வீடு. ஸ்டீபன் டாக்டர் வீடு எங்க வீட்டுக்கு நேர் எதுக்க. அதுனால சிலோன் டீவியில நல்ல படம் போட்டா அவங்க வீட்டுல பாத்திருக்கேன்.

அந்த வேளைலதான் புரபசர் மார்க்கசகாயம் சாருக்கு ஹார்லிக்சுல டெலிரமா டீவி பரிசு விழுந்தது. கருப்பு வெள்ளைதான். ஆனா எங்களுக்குச் சந்தோசம். ஏன்னா...அவங்க எங்களுக்கு ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப வேண்டப்பட்டவங்க. எப்ப வேணும்னாலும் போகலாம் வரலாம். அப்புறந்தான் டீவியெல்லாம் நெறையாப் பாக்கக் கிடைச்சது. இப்ப வீட்டுல ரெண்டு டீவி இருக்குறது வேற கதை.

said...

ராகவன்,

வலைப்பதிவாளர் சந்திப்புக்குப் பிறகுக் கைவலி கொறைஞ்சுருக்கு. அதானே
நீண்ட பின்னூட்டம்.

நம்ம வீட்டுலேயும் ஒரு மர்பிதான் இருந்துச்சு. அதுலே மேஜிக் ஐ கூட இருக்கும்.

பாட்டி வேற மர்ஃபின்னு சொல்லாம மர்பின்னே சொல்வாங்க. அதுக்கே கிண்டலடிக்கிறதுதான்.

ஆனா, இங்கே இப்பவும் ரேடியோ நல்ல புழக்கம்தான். கார்லே போறப்ப தொணதொணன்னு ரேடியோ கேட்டுக்கிட்டுத்தான் போகுது சனம்.

நம்ம வண்டியிலே மட்டும் தமிழ் சினிமாப் பாட்டு:-)

said...

//ஷூ தேஞ்சுபோனா, உள்ளே கார்ட்போர்டு அட்டைகளை வெட்டி வச்சுக்கறதாம்.இந்தக் குளுருக்கு எப்படித்தான் தாக்குப் பிடிச்சதோ?//
இன்னும் நம் வட இந்திய நகரங்களில் ஏழைகளின் நிலை இதுதானே. நியூசி போல் அரசு இங்கு எப்போது இதற்கு வழி காட்டுமோ ?

said...

மணியன்,

இந்த நிலமை மாறணுமுன்னா நம்ம அரசியல்வாதிங்க சுருட்டறதைக் கொஞ்சம் நிறுத்துனாப் போதும்.
ஒன்னு ரெண்டு ரூபாய் இல்லீங்களே, எப்படித்தான் கோடி கோடியா அதுவும் 1000 கோடி, ரெண்டாயிரம்
கோடின்னு சுருட்ட மனசு வருதுன்னு புரியலைங்க.

said...

சினிமா வந்துச்சி
சினிமாக் காரங்க அர்சியலுக்கு வந்தாங்களா?
அதான்..........

said...

சிஜி,

சினிமா வந்துச்சுன்னா, வெளிநாட்டுலே எடுத்த சினிமா.

உள்நாட்டுலே சினிமா அவ்வளவா இல்லே. அத்திபூத்தது போலத்தான் எப்பவாவது ஒண்ணு.

நம்ம பீட்டர் ஜாக்ஸந்தான் இந்த 'லார்டு ஆஃப் த ரிங்' இங்கே எடுத்து, நம்ம நாட்டை
உலகத்துக்குக் காட்டிக்கிட்டு இருக்கார்.

சினிமாக்காரங்க 'இன்னும்' அரசியலில் வரலை.

said...

துளசி ,
நீயூசி பதிவுகள் ...சுவாரசியமாகவும் ..
தகவல்பூர்வமாவும் இருக்கு.

சீக்கிரமே வந்து பார்க்கவேண்டிய ஊர்.

கோர்வையா படிக்க முடியாவிட்டாலும்
அவ்வப்போது படிக்கிறேன் :-)

said...

கைவலி கொறஞ்சிருக்கு டீச்சர். ஆனா முழுசா குணமாகலை. ரெண்டு வாரமாவது ஆகுமுன்னு சொல்லீருக்காங்க. ம்ம்ம்ம்...

ஏதாவது பொருள் விழுந்தா அதப் பிடிக்கனும்னு மூளையில புரோகிராம் செஞ்சி வச்சிருக்கிறது கூட இப்பப் பிரச்சனையா இருக்கு. இடது கையால பெழங்குறப்போ...அடிக்கடி தவறி விழுது. அதப் பிடிக்க வலது கை தானா முந்திரிக் கொட்ட மாதிரி முந்துது. அப்பாடியோவ்...அப்ப ஒரு வலி வரும் பாருங்க......இப்பல்லாம் முடிஞ்ச வரைக்கும் கீழ விழுந்தா விழட்டும்னு விட்டுர்ரது. போற போக்குல கொஞ்ச நாள் கழிச்சு எது விழுந்தாலும் கண்டுக்க மாட்டேன்னு நெனைக்கிறேன்.

said...

வாங்க கார்திக்வேலு.

அருமையான ஊர்தாங்க. கட்டாயம் ஒரு ட்ரிப் அடிங்க.

முடிஞ்சவரைக்கும் கிடைக்கிற தகவல்களை வச்சுக் கொஞ்சம்
எளிதா எழுதுறதுதான். சரித்திரமுன்னதும் கொட்டாவி வ்ந்துருதே:-)))

said...

ராகவன்,

கவனமா இருங்க. இன்னும் ரெண்டுமூணு வாரம்தானே.
எல்லாம் பழக்க தோஷம்தான், வலதுகை முன்னாலே வர்றது:-)

said...

//1901 லே இங்கே இருந்து சரக்கு ஏத்திக்கிட்டு போன கப்பல்களிலே //

அப்பவே கப்பல் நிறையா சரக்கா? பெரிய ஆளா இருப்பாங்க போல இருக்கே.

ஒரு வாரம் லீவு முடிஞ்சு வந்தாச்சு டீச்சர்.

said...

கொத்ஸ்,

வந்தாச்சா.... என்னடா க்ளாஸ் இப்படிக் கொயட்டா இருக்கேன்னு பார்த்தேன்.
( என்ன டீச்சரோ? க்ளாஸ் லீடரைக் காணோங்கறதைக்கூடக் கவனிக்கலை?)

வர்றப்பயே 'சரக்கு'தான் கண்ணுலே பட்டுச்சா? :-))))