Tuesday, August 29, 2006

ரெடிமேட் பகுதி 13

ஒருவிதம் தனியாவே வெட்டித் தைக்கற தைரியம் வந்துருச்சு. அருமையான கத்தரிக்கோல் ஒண்ணும் வாங்கியாச்சு. ஜமாய்ச்சுக்கிட்டு இருக்கேன். வீட்டு வேலைக்கு ஆள் வராங்க. நிறைய நேரம் இருக்கு.எங்க இவரோ, புதுசாப் போடற ஃபேக்டரி வேலையிலேயே 'மூழ்கி' இருக்கார்.


ஆரம்ப வெற்றிகளுக்குப் பிறகு தலையை நிமிர்த்திப் பார்த்தாத்தான் தெரியுது இவருக்கு ரொம்ப நாளாத் துணிகள் ஒண்ணும் எடுக்கலையேன்னு. ஆம்புளைங்க துணிகள் பக்கம் கண்ணை ஓட்டுனேன். அட! இந்த ஊர்லே டெயிலர்களே இல்லீங்களே! அப்ப எப்படி?


எல்லாம் ரெடிமேடுதான். ஷர்ட், டீ ஷர்ட்டு, பேண்ட்ஸ்ன்னு. மொதமொதலா டீ ஷர்ட் போட ஆரம்பிச்சார். வீக் எண்டுலே ரிலாக்ஸா இருக்கட்டுமேன்னு. அளவுங்கதான் பேஜாரா இருந்துச்சு. ஸ்மால், மீடியம், லார்ஜ். ஷர்ட்டுங்களும் இப்படியே. டீ ஷர்ட்டாவது பரவாயில்லை, கொஞ்சம் லூஸாப் போட்டுக்கலாம். ஆனா ஷர்ட்டுங்க? மீடியமே கொஞ்சம் லூஸ்தான்.


நாடே இப்படி இருக்கும்போது நமக்கென்ன புது ஸ்டையிலு? நம்ம தையற்கலை அனுபவம் இந்த இடத்துலே கைகொடுத்துச்சு. ஷர்ட்டுங்களுக்கு முதுகுப் பக்கத்துலே லேசா ரெண்டு இடத்துலே பிடிசுட்டா ஓக்கே!

ட்ரவுஸர்ங்கதான் தகராறு. இங்கே இருக்கற இந்தியர்களும், நம்மூர்லே இருக்கற ஆளுங்களைவிடக் கொஞ்சம் உயரமாவே இருக்காங்க.அவுங்களுக்கு வர்றது, நமக்குக் கால் நீளம். காலைக் கொஞ்சம் வெட்டித் தைக்கணும். அதையும் செய்ய ஆரம்பிச்சேன்.


டெனிம்தான் பிரச்சனை. ரெண்டு மூணு ஊசியை ஒடைச்சாத்தான் வேலை நடக்கும். இதுக்கிடையிலே நானும் ஊர் ஜனங்களைப் போலவே 'லாங் ட்ரெஸ்' போட ஆரம்பிச்சேன். நல்ல ஐலண்டு பிரிண்டுகளிலேயும், ஜெர்ஸி மெட்டீரியல்களும் கிடைக்குது. இங்கே மக்கள் பொதுவா இதைத்தான் போடறாங்க. நேட்டிவ் ஃபிஜி ஆளுங்களும் இப்படித்தான். ஆனா அவுங்க சர்ச்சுக்குப் போறப்ப ரொம்ப பாரம்பரிய உடையாப் போடறது 'சுலு சாம்பா.' சுலுன்றது நம்ம ஊர் லுங்கி மாதிரி.'ச்சாம்பா'ன்னா மேல் ப்ளவுஸ். ரெண்டும் ஒரே துணியில் தைக்கறதுதான். ப்ளவுஸ் நல்லா இறக்கமா இடுப்புக்குக் கீழே, ஷர்ட் நீளம் இருக்கும். அழகழகான பிரிண்டுகளும், கலர்களும் ரொம்பவே நேர்த்தியா இருக்கும்.


நம்ம வீட்டுலே இப்பப் புதுவரவு. பெண்குழந்தை. பொறந்த குழந்தைக்குப் பட்டுபோல மிருதுவாவும் இருக்கணும். இங்கே இருக்கற சூட்டுக்கு இதமாவும் இருக்கணுமுன்னு மெல்லிசா இருக்கற வெள்ளை நிற(?)க்காட்டன் துணிகளிலேச் சின்னச் சின்ன சட்டைகள், அதுக்குக் கலர்ஃபுல்லான பைண்டர்கள்ன்னு வச்சுத் தாளிச்சுக்கிட்டு இருக்கேன். தேவை இருக்கோ இல்லையோ இப்பெல்லாம் துணி தைக்கறதே வேலையாப் போச்சு. இங்கே ஒரு புதுக்கடை வந்தது அப்ப. இந்தியர்கள் மட்டுமே நடத்திவந்தத் துணிக்கடைகள் இல்லாம இது ஒரு ஆஸ்தராலியன் கம்பெனி நடத்தற கடையாம்.வெறும் துணிகள் மெட்டீரியல்ஸ் மட்டும். ஒரு மீட்டர் 50 செண்ட்டுக்குக் கூட இருக்கு. சனிக்கிழமைதோறும்,(அதான் இங்கே மார்க்கெட் டே) காய்கறி மார்கெட்டுக்குப் போய் வரும்போது இங்கேயும் போய் ஏழெட்டு துணிகள் அரை மீட்டர் அளவில் மட்டும் வாங்கிருவேன். என்னதான் நல்ல துணிகள்ன்னு வச்சாலும் வாரம் அஞ்சு டாலர்தான் ஆகும்.


தினமும், பகல் சாப்பாட்டுக்குப் பிறகு தைக்கிற வேலைதான். நாள் முழுக்க,என்ன பேட்டர்ன்னு யோசிச்சுக்கிட்டே இருப்பேன். சாயந்திரம் இவர் அஞ்சு அஞ்சரைக்கு வர்றதுக்குள்ளே மகளுக்கு புது உடுப்பு ரெடியாகி, அதைப் போட்டுக்கிட்டு இருப்பாள். உடனே நம்ம 'மாடலை' ஒரு போட்டோவும் எடுத்துருவேன்.


இப்படி ஒரு நாளுக்கு ஒரு உடுப்புன்னு இருக்கறது மட்டுமில்லாம, எனக்குத் தைக்கிற துணிகள்லெ கொஞ்சம் மிச்சமானா( அதுதான் அரைமீட்டர் கூடுதல் வாங்குனா தீர்ந்துச்சு) அதுலேயும் ஒண்ணு தைக்கறதுதான். ட்வின்ஸ் மாதிரி போட்டுக்கிட்டுப் போவோம்.

இந்த ஊர் நிலவரத்தைப் பத்திச் சொல்றதுக்கு ஒண்ணும் பிரமாதமா இல்லை. ச்சின்ன டவுன். ஜனத்தொகை 5000. அக்கம்பக்கத்துலே பதினெட்டுப் பட்டிகள் இருக்கு. பொம்பளைங்க மாஞ்சுமாஞ்சு வீட்டுவேலையெல்லாம் பதினொருமணிக்குள்ளே முடிச்சுருவாங்க. அப்புறம் டவுனுக்குள்ளே நடமாட்டம். எல்லா வியாபாரமும் இந்தியர்கள்தான்.அதுலே 95 சதமானம் குஜராத்திகள். பாக்கி அங்கேயே நாலைஞ்சு தலைமுறைகளா இருந்துட்ட ஃபிஜி இந்தியர்கள்.எல்லாம் கரும்புக்காட்டுலே வேலை செய்யப் போனவங்களோட வம்சாவளி.


எட்டு எட்டரைக்கு கடைகள் திறந்துரும். சாயந்திரம் 6 மணிக்கு எல்லாம் மூடிருவாங்க. ஊரே 'ஜிலோ'ன்னு இருக்கும்.தெருவுலே நாய்கூட ஓடாது. சைலண்ட். அப்போ அங்கே இன்னும் டிவி ஸ்டேஷன் வரலை.ஆனா வீடியோ வரத்தொடங்கி இருந்துச்சு. அநேகமா எல்லா ஹிந்திப் படங்களும் வந்துரும். தியேட்டர்லே ஹிந்தி, இங்கிலீஷ் படங்கள் காமிப்பாங்க.


இந்தச் சின்ன டவுனுக்கே 3 தியேட்டர்! படங்கள் எல்லாம் வீடியோ கேஸட்டாக் கிடைக்கும். வாடகைக்கு எடுப்போம்.மூணு கடைகள் அவுங்க வழக்கமா வச்சிருக்கற மத்த சாமான்களோட( துணிமணி, நகை நட்டு, பாத்திரபண்டம், எலெக்ட்ரிக் சாமான்கள் ரைஸ் குக்கர் டோஸ்ட்டர், மிக்ஸி இத்தியாதிகள்) சினிமாவையும் சைடு பிஸினஸ்ஸா வச்சிருந்தாங்க.
இந்தியாவில் வெளியிடற அதே நாளில், சிலசமயம் அதுக்கும் முன்னாடியே படங்கள் வந்துரும். நிறைய காப்பிகள் எடுத்துருவாங்க. அது ஸ்டார் வேல்யூவைப் பொறுத்து. அப்புறம் வாடகைக்கு விடறதுதான். ஒரு நாளைக்கு ஒரு படத்துக்கு வாடகை ஒரு டாலர்.

எங்க இவர் சாயந்திரம் வீட்டுக்கு வந்ததும், ஒரு காஃபி குடிச்சுட்டு எல்லாருமாக் கிளம்பிப்போய் ஒரு படம் வாங்கிட்டு வருவோம்.அப்படியே கடையில் புதுசா என்ன ரெடிமேடு டிசைன் குழந்தைகளுக்கு வந்துருக்கு பார்க்கறதுதான். பார்த்துட்டு, மனசுலெஅப்படியே அதை உள்வாங்கிக்கிடறது. அடுத்து வர்ற நாட்களிலெ தைச்சுப் போட்டுடறது. கடைக்காரரே கூட,ஆச்சரியமாக் கேப்பார், இதை நான் வேற எங்கே வாங்கினேன்னு.


புதுவித பட்டன்கள், லேஸ்கள், பைண்டர்கள்ன்னு கண்ணுலே பட்டவுடனே வாங்கிருவேன். சதா சர்வகாலமும் கண்ணும், மனசும் அப்படியே அலையும், எங்கே என்ன டிசைன் இருக்குன்னு? சினிமாப் பாக்கறப்பவும் அதுலே வர்ற உடுப்புகள்தான் முக்கியமாப் போச்சு. வீடியோதானே? மறுநாள் அதைத் திருப்பிப் போட்டு முக்கியமானதை இன்னொருக்காப் பார்த்து ஒரு பேப்பருலே வரைஞ்சு வச்சுக்குவேன்.


இந்தப் பைத்தியம் எதுவரை போச்சுன்னு சொல்லணுமுன்னா.......


வெக்கக்கெடு.

12 comments:

said...

வேண்டாமுன்னா விடவா போறீங்க? சீக்கிரம் சொல்லுங்க.

said...

/இந்த பைத்தியம் எதுவரை போச்சுன்னு சொல்லணுமின்னா..//

அப்ப இப்ப தீர்ந்துடுச்சினு நம்பனுங்களா?

said...

கொத்ஸ்,

'உன்னைவிட மாட்டேன் உண்மையில் நானே'

பானுமதியம்மாவின் பாட்டு. எதுக்குப்பா ஞாபகப்'படுத்துறீங்க'?

said...

சிஜி,

தலைவலி போனா திருகுவலின்ற மாதிரி இப்ப 'ப்ளொக்' பைத்தியம் பிடிச்சு,
முத்திக்கிட்டுப் போகுது(-:

said...

துளசி,
பய இண்டரஸ்டிங்கா போறதே.
என்ன ஆச்சு அப்புறம்.
பாவம் கோபாலுக்கு சட்டை தைச்சுட்டிங்களா?
பாவமே.
ப்ளாக் பைத்தியம் பிடிச்சதாலே எங்களூக்குத்தானே லாபம்.
தப்பு இல்லை.

said...

வல்லி,

நீங்க இப்படிச் சொல்றீங்க. அங்கெ பாருங்க
நம்ம கொத்ஸ், 'விட்டுறச் சொல்லி கதறறாரு"

said...

//அவுங்களுக்கு வர்றது, நமக்குக் கால் நீளம். காலைக் கொஞ்சம் வெட்டித் தைக்கணும்.//

அய்யோ டீச்சர்...
"காலை ஒடிச்சி அடுப்புல வைக்கறேன்" ந்னு சொல்லி கேள்விப் பட்டு இருக்கேன்....
நீங்க ஒரு படி மேலே போய், "காலைக் கொஞ்சம் வெட்டித் தைக்கணும்" ந்னு எல்லாம் சொல்றீங்களே...அப்பா பேவாட்ச் அப்பனே, காப்பாதுப்பா!

ஆமா டீச்சர்
கோவிச்சுகாதீங்க...இதுவரை சுமார் எத்தனை கர்ச்சீப் தைச்சு இருப்பீங்க? :-)

said...

KRS,

அதுதானே அடுத்த பகுதியில் வரப்போகுது.
கொஞ்சம் பொறுக்கலாமே:-))))

இல்லேன்னா காலை ஒரே வெட்டு ...............:-))))

said...

துளசி,

அங்கி தைக்கிறது ஈசி தானே. அது கத்துக்கலியா?:-))

said...

வல்லி,

அங்கியெல்லாம் விட்டு வைப்பேனா என்ன? :-))))

said...

எனக்கு சொல்லி குடுங்களேன் எப்படி கைக்குட்டை தைக்கறதுனு :(

said...

வாங்க பொற்கொடி.

கைகுட்டை என்ன? 'கொடி'தைக்கவே சொல்லிக்குடுத்துருவொமுல்லெ:-)

ஆமாம். ..............டு(யூ)ஷன் எப்ப இருந்து ஆரம்பிக்கலாம்?