Sunday, August 27, 2006

Baywatch பிள்ளையார்.


பிள்ளையாரைப் பார்க்கக் கடற்கரைக்குக் கிளம்பிக் கொண்டிருந்தோம்.எங்களுக்குக் கடற்கரையும் கடலும் மிகவும் விருப்பமான இடம். நேரமும் கிடைத்து,குளிரும் அதிகம் இல்லையெனில் போய்வருவது வழக்கம். அதிலும் இங்கே உள்ள 'சம்னர்' கடற்கரையில் ஒரு விசேஷமும் உண்டு.


ஒருநாள் அப்படிப் போனபோதுதான்'அவரை'ப் பார்த்தேன். அங்கே 'கேவ் ராக்' என்னுமொரு சிறுகுன்றின் அடிவாரத்தில் இருக்கும் கல்லில் பிள்ளையார் போல தெரிந்தது. சற்று நேரம் உற்றுக் கவனித்ததில்'அட! நெற்றியில் பட்டை!!' என் நினைப்பு உறுதியானது. என் கணவருக்கு அதைக் காட்டி 'விளக்கம்' அளித்துக்கொண்டிருந்தேன். முதலில் அதை ஏற்க மறுத்தாலும் என் தொணதொணப்பைத் தாங்கமுடியாமல்," ஆமாம்.பிள்ளையார் போல்தான் தெரிகிறது ' என்றார். அது போதாதா எனக்கு? 'ஆஹா, சுயம்புவாக எழுந்தருளியுள்ளார்' எனமகிழ்ந்து மனதில் வழிபாடு செய்துகொண்டே....... பழக்க தோஷம் காரணமாக,

"அப்பா, பிள்ளையாரப்பா, கண்ணிலே கொஞ்சம் காசைக் கட்டப்பா"

என்று சொல்லி முடிக்குமுன்னே கண்முன்னே பளபளவென மின்னும் ஒரு $2 நாணயம் என் காலடியில்!கேட்டவரம் உடனே கிடைத்துவிட்டது. என் அல்ப புத்தி! கொஞ்சம் காசு என்றதும்,'இந்தா பிடி 2 டாலர்' என வழங்கிவிட்டார் நம் 'வரசித்தி விநாயகர்'


நம் நாட்டில் இவர் ஆற்றங்கரையில் படித்துறை அருகே அமர்ந்து தாயைப்போல தமக்கொரு பெண்ணைத் தேடிக்கொண்டிருப்பதாக ஐதீகம் உண்டல்லவா? இங்கே ஆற்றங்கரையில் பெண்கள் குளிக்கப் போவதில்லையென்பதால் கடற்கரைக்கு வந்துவிட்டார். இவருக்குப் BAY WATCH பிள்ளையார் என்கிற பெயரும் பொருத்தம்தானே?


அடடா,,,, இங்கே வேறொரு இடத்தில் பிள்ளையார் சிலை இல்லாத ஒரு பிள்ளையார் கோயிலும் இருக்கிறது. அதைப்பற்றி பிறகு சொல்வேன். இப்போது பிள்ளையாரைப் பார்க்க நேரமாகிவிட்டது.


"இதுவே நம்மூராக இருந்தால் உடனே ஒரு கோயில் முளைத்திருக்கும்" இல்லீங்க?


"கூடவே ஒரு உண்டியலும், ஒரு சாமியாரும் . இதை விட்டுட்டியா?".


சம்னர் வாழ் வரசித்தி விநாயகர் வாழ்க, வாழ்க!


நன்றி: தமிழருவி 2001


நண்பர்கள் அனைவருக்கும் பிள்ளையார் சதுர்த்திக்கான இனிய வாழ்த்து(க்)கள்.


பி.கு: படம் மகாராஷ்ட்ராவில் இருந்தபோது கிடைத்த அஷ்டகணபதி.

55 comments:

said...

இல்லீங்க!
நல்லாப் பாருங்க!
நவகணபதி!

அது நீங்க எழுதின பழைய பதிவா?

பே வாட்ச்["Baywatch"] பிள்ளையார் படம் கிடைக்குமா?

இங்க வெச்சு ஒரு கோயில் கட்டணும்!

said...

வேர் இஸ் த படம்?

பிள்ளையார் படம் இல்லைன்னாலும் பே வாட்ச் படமாவது போடலாமில்ல...

ஹிஹி

said...

வாங்க SK.
இந்தப் படத்துலே 9 கணபதி இருந்தாலும் மெயின் பிள்ளையாரைச் சுத்தி இருக்கற எட்டுப்பேருக்குத்தான்
புகழ். மேகட், மோர்காவ், தேவூர், ஓஸார், ராஜன்காவ், பாலி, ஸித்தடேக், லேண்யாத்ரி ( தமிழிலிலே
இந்திப்பேரை எழுதும்போது ஸ்பெல்லிங் மிஸ்டேக் வர வாய்ப்பிருக்கு.மன்னிக்கணும் தெரிந்தவர்கள்
திருத்தினால் நல்லது)இப்படி எட்டு ஊர்களிலே இருப்பவர்.

பண்டிகை கொண்டாடியாச்சா? நான் டேட்லைனில் இருப்பதால் ஊருக்கு முந்தி எல்லா பண்டிகையும்
மொதல்லே வந்துரும்!)

அஞ்சு வருசத்துக்கு முன்னாலே நம்ம தமிழ்ச்சங்க மலருக்கு எழுதுனது.

said...

கொத்ஸ்,

வாங்க. நலமா? படம் எடுக்கலையேப்பா. எடுத்துறலாம் புள்ளையாரை:-)

said...

நீங்க கேட்டவுடனே காசு குடுத்த புள்ளையார் பே கேஷ் (pay cash)புள்ளையாரா இருக்குமோ? :))

said...

அந்த "ATM பிள்ளையார்" படம் போட்டிருக்கலாமே!

said...

துளசி, நினாயக சதுர்த்தி வாழ்த்துகள். உங்க யானைக்கும் வாழ்த்துக்கள்.
இங்கு நேற்றூ மாலை நல்ல மழை. எனக்கு ரொம்பக் கவலையாப் போச்சு.தண்ணீர்த்துறை
பிள்ளயார்கள் நனைந்து கரைந்துவிடுவார்களே என்று.
ஒண்ணும் ஆகலையாம். நல்ல வேளை.
பே வாட்ச் பிள்ளையாரும் உங்களுக்காகத்தான் வந்துட்டார்.
சுத்தி வர இடம் இருக்கா?:-00

said...

நம்மூரா இருந்தா பே வாட்ச் பிள்ளையாரப் பார்க்க கூட்டமா கூட்டமா பக்திசிரத்தையா காலேஜ் பசங்க வருவோம். பாருங்க அங்க அவர் தனியா வாட்ச் பண்ண வேண்டிய நிலைமை.

//$2 நாணயம்//
இது நல்லா இருக்கே..

கேட்டுப்பாருங்க. உங்க தொல்லைய சமாளிக்க மாமாவே போட்டுருக்க போறாரு. :))

said...

கேந்திரன்,

pay cash பிள்ளையார்?

இதுவும் நல்லாத்தான் இருக்கு:-))

said...

வாங்க தருமி.

இந்த ATMலே 2 $ காசு ஒண்ணே ஒண்ணுதான் இருந்துச்சுபோல :-))))

'படம் போட்டுக்க' இன்னும் அவருக்குக் கொடுத்து வைக்கலை:-)

said...

மகேந்திரன்,

உங்க 'ம'வைக் காணோம்:-)

said...

வல்லி,

உங்களுக்கும் வாழ்த்து(க்)கள்.

சுத்திவர்றதுக்கு இடம் இல்லைப்பா. முழுக் குன்றையும் சுத்தணும். பாதிக்குமேலே
கடல்தண்ணீர்லெ இருக்கு குன்று.

said...

ராம்ஸ்,

கொழுக்கட்டையெல்லாம் தின்னாச்சா? மிச்சம்மீதி இருக்கா?

//கேட்டுப்பாருங்க. உங்க தொல்லைய சமாளிக்க மாமாவே
போட்டுருக்க போறாரு. :)) //

இருக்குங்கறீங்க? இருக்குமோ? ச்சீச்சீ ..... இருக்காது. இல்லே?

said...

பே வாட்ச் பிள்ளையார் படத்தப் போடக் கூடாதா! அந்தூரு அரசாங்கத்துக்கு எழுதிப் போட்டு ஒரு கோயில் கட்டுங்க. டிரஸ்டியா நீங்க இருந்துக்குங்க. பாராமரிக்கிற பொருளாளரா என்னையக் கூப்பிட்டுக்கிருங்க. அவ்வளவுதாங்க விசயம்.

பிள்ளையார் பண்டிகை வாழ்த்துகள்.

said...

//இருக்கும்றிங்க? ...இருக்குமோ?....
இருக்காது...சேச்சே...இருக்காது..
இல்லே?//

இருக்கவே சான்ஸ் இல்லே.அதான் அப்பப்ப ரெய்டு விட்றுவீங்களே!

பண்டிகைதின வாழ்த்துகள்.

said...

ராகவன்,

வாங்க. ஐடியா ஒர்கவுட் ஆகுமான்னு பார்த்துறலாமா?

பண்டிகைக்கு வாழ்த்து(க்)கள்.

said...

சிஜி,

பண்டிகைக்கு வாழ்த்து(க்)கள்.

அந்தவரைக்கும் நீங்களாவது நம்புனீங்களே, அதுக்கு நன்றி:-)

said...

எல்லாரும் கேட்டதே தான் நானும், நேரம் கிடைக்கும் போது இந்த பிள்ளையார போட்டோ எடுத்தாந்து போடுங்க. ப்ளீஸ்

said...

WA,

ஏது, நம்ம பிள்ளையாருக்கு பயங்கர டிமாண்ட் இருக்குதே:-)))

கட்டாயம் அடுத்தமுறை மறக்காம கேமெரா எடுத்துக்கிட்டு போறேன்.

ஆனா 'அவரை மட்டுமே' படம் எடுத்துப்போடுவேன். சரியா? :-)))))

said...

யக்கோவ் அவரை மட்டுமே எடுத்து போடுங்க, மத்த குப்பை படமெல்லாம் நான் ஏன் கேக்க போறேன். எங்க ஊர் பிள்ளையாரும் இன்னிக்கு சந்தன காப்புல சூப்பரா இருந்தாரு, நல்ல தரிசனம் அப்புறம் சாப்பாடு :)

said...

பே வாட்ச் பிள்ளையாரை ஒரு படம் புடுச்சி போட்டு இருந்தீங்கண்ணா இன்னும் சிறப்பாக இருந்து இருக்கும்.

said...

துளசி விநாயகரை நினாஇயகராப் போட்டுட்டென்.
மாப்பு மாப்பு.
நாமெ பிள்ளையார் சைசில் இருக்கும்போது தோப்புக்கரணம் போடறது சிரமம்.
இங்ஙனம்,
(பே வாட்ச்) பக்தை

said...

பிள்ளையார் சதுர்த்தி நல்லா முடிஞ்சுதா? என்ன இந்த தடவை கொழுக்கட்டை செய்யாம கேசரி மட்டும் செஞ்சு ஏமாத்தியாச்சா? வாழ்த்துக்கள் துளசி

said...

WA,

சந்தனக்காப்பா? பேஷ் பேஷ் அருமையாத்தான் இருந்திருப்பார்.
சாப்பாடுவேற அமர்க்களம்? ஆட்டும் ஆட்டும்.
நல்லாக் கொண்டாடுனாச் சரி.

said...

கலை அரசன்,

வாங்க. படம் விரைவில் போட்டுறலாம். இப்பத்தான்
வெய்யில் வந்துக்கிட்டு இருக்கு. செப்டம்பர் முதல் தேதி
ஸ்ப்ரிங் வந்துரும்:-) வசந்தமே வசந்தம்தான்.

said...

வல்லி,

பிள்ளையார் அதெல்லாம் கோச்சுக்க மாட்டார். அவரோட பிரதிநிதிகள்தான்
நாமெல்லாம்னு அவருக்குத் தெரியாதா என்ன? :-))))

said...

பத்மா,

உங்களுக்கும் பண்டிகைகால வாழ்த்து(க்)கள்.
எப்பவும் செய்யறதுக்குச் சரியா வரலைன்னாலும் ஒரு மோதகம் பண்ணி அவரைப்
பனீஷ் செய்வேன். இந்த வருஷம், விடுதலை. பிள்ளையாரும் தப்பிச்சுண்ட்டார்.
பிபி, கொலஸ்ட்ரால் இதுக்கெல்லாம் பயம் வந்துருச்சு. அதனாலெ சக்கரை, நெய் எல்லாம்
பேருக்குக் கொஞ்சமாவிட்டு 'பிசுக்'ன்னு ஒரு கேஸரி.( அரைக்கப் ரவைதான்)
பாவம் புள்ளையார், தின்னுட்டு வாயைத் திறக்கமுடியாமக் கிடக்கார்:-)))

அடுத்தவருசம் இதுவும் கிடைக்காமப் போக ச்சான்ஸ் இருக்கு.

இப்பெல்லாம் பதிவுகளை நைவேத்திய லிஸ்ட்டில் சேர்த்துட்டேன்.:-)))

said...

//பாராமரிக்கிற பொருளாளரா என்னையக் கூப்பிட்டுக்கிருங்க.//

ராகவன் அங்கு வரவு 8 அணா செலவு 10 சம்மதமா?

said...

என்னார்,

என்னங்க இப்படி ராகவனைப் பயமுறுத்திட்டீங்க?

உங்களுக்குப் போட்ட தனிமடல்கள் திரும்பி வந்துச்சே. கொஞ்சம் பாருங்க.

said...

முதலில் அதை ஏற்க மறுத்தாலும் என் தொணதொணப்பைத் தாங்கமுடியாமல்," ஆமாம்.பிள்ளையார் போல்தான் தெரிகிறது ' என்றார்.//

அதுக்குள்ள எத்தன பேர் படம் இருக்கான்னு கேக்காங்க பாருங்க.

அப்ப புடிக்கலைன்னாலும் ஒரு நடை போய் புடிச்சிக்கிட்டு வந்துருங்க.

said...

வாங்க டிபிஆர்ஜோ.


உடம்பைப் பார்த்துக்குங்க.

இந்த ஞாயிறு மழை இல்லென்னா போய் படம் புடிச்சுடலாம்.

said...

Belated விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள். முழுமுதற் கடவுளுக்கே 'belated'??...ஹ்ம்ம்ம்.

கொழுக்கட்டை எல்லாம் சாப்புடாம பிள்ளையார் சதுர்த்தின்னு நம்பறதுக்கே கஷ்டமா இருக்கு.

said...

இப்போ அந்த பே-வாட்ச் பிள்ளையாரை பற்றி எல்லோரும் கற்பனை உலகில் வட்டமிடுகின்றனர்.ஆகையினால் போட்டோவை போடுவடைத்தவிற வேறு வழியே இல்லை.சீக்கிரமே செய்யுங்கள்.இரண்டு டாலர் என்ன ஆச்சு கணக்கு உதைக்குதே.

said...

கைப்புள்ளெ,

வாங்க வாங்க. வட இந்தியாவுலேயும் மோதகம் செய்யற வழக்கம் இருக்கே.
நாங்க பூனாலே இருந்தப்ப அக்கம்பக்கத்து வீட்டுக்காரங்க ஆன்னா ஊன்னா
மோதகம் செஞ்சுருவாங்க.( வாரம் ரெண்டுதடவை பிரசாதம் வீட்டுக்கு வந்துரும்!)
நம்ம பக்கம் மாதிரி உள்ளே பூரணம் இருக்காதே தவிர வேற ஒருமாதிரி
நல்லாத்தான் இருக்கும்.

கவலையை விடுங்க. அடுத்த வருசத்துக்குக் கொழுக்கட்டை உங்களுக்கு கேரண்ட்டீ:-)))

said...

வாங்க தி.ரா.ச.

2$ கணக்கு உதைக்குதா? எப்படிங்க? அதான் அன்னிக்குக் கிடைச்சவுடனே ஒரு
லாட்டரி டிக்கெட் வாங்குனேன். ஜெயிச்சுட்டா அந்தக் காசை எதெதுக்குக் கொடுக்கலாமுன்னு
மனக்கணக்கும் போட்டாச்சு.

ஆனா........... புள்ளையார் மனம் வைக்கலை(-:

சம்பவம் நடந்தே 6 வருசமாச்சு.

said...

துளசி
எல்லாம் சரியா போயிடு. அடுத்த வருஷம் பிள்ளையாரே மோதகம் சேர்த்து வாங்கிப்பார். நெய், சர்க்கரைக்கு பதிலா நீங்க சுண்டல் செஞ்சு தந்தாலும் பிள்ளையாருக்கும் நல்லது, உங்களுக்கும்.

said...

துளசி டீச்சர் கண்டுபுடிச்ச பேவாட்ச் புள்ளையார், actually புள்ளையார் Number II.
இதற்கு முன்னரே, Baywatch இல், ஒரு புள்ளையாரை baywatch கடல் அலைகளால் உண்டாக்கி, கடற்கரையில் பூஜையும் செய்து, தற்போது உள்ள சுவாமிமலைக்கு அருகில் கொண்டு வந்து ப்ரதிஷ்டையும் செய்தாகி விட்டது!

கண்டுபுடிங்க பார்ப்போம்!
கரெக்டா பதில் சொல்றவங்களுக்கு, டீச்சர் அந்த $2.00 யோ, இல்லை லாட்டிரியில் விழுந்த $2000.00 யோ, பரிசா கொடுத்துருவாங்க!

இல்லீங்க டீச்சர்??? :-)

//கைப்புள்ள said...
Belated விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள். முழுமுதற் கடவுளுக்கே 'belated'??...ஹ்ம்ம்ம்//

கைப்புள்ள ஜி,
கணபதியான், பிறந்த நாள் 9 நாட்கள் விழா! அதற்குள் சொல்லி விட்டீர்கள். so, no belated! கும்பலாகச் சொல்லாமல் தனியாக சொன்ன உமக்கு, எக்ஸ்ட்ரா கொழுக்கட்டை!

said...

பத்மா,

சுண்டல் நல்லதுதான். ஆனா தினமும் பயறு பருப்புன்னே சாப்புட்டு நாக்குத் துளியூண்டு
ச்க்கரைக்கு அலையுதே. செய்யற காரியத்தை ஜஸ்டிஃபை செஞ்சுக்கத்தான் இப்படிப் பண்டிகையைப்
பயன்படுத்திக்கிறது.

இப்பெல்லாம் வீட்டுலெ ஸ்வீட்ஸ் செய்யறதே இல்லை. செஞ்சு பார்த்த ஸ்வீட்ஸ்களுக்கே
ஒரு தனிப்பதிவு போடணும்.

இவ்வளோ என்னத்துக்கு? பேசாம 'சுண்டலுக்கு ஊறப்போட மறந்துட்டேன்'னு
சொல்லிச் சமாளிச்சுறவா? :-))))

said...

கண்ணபிரான் ரவிஷங்கர்,

நான் $2 வே கொடுத்துடறேன். கண்டுபிடிக்க முடியலைப்பா அந்த ஸ்வாமிமலைப் பிள்ளையாரை.
நிஜமாவே Baywatch 1 இருக்காரா? தேவலையே!

said...

பாஸ் வேர்டும் வலை பதிவும்
நல் டெம்ளேட்டும் விஷயமில்லா
வல்ல நல்பதிவும் கலந்துனக்கு
நான்தருவேன், கோடி பின்னூட்டம் வர
துங்கக கரி முகத்து தூமணியே..
நீ எனக்கு அந்த வரம் வேண்டித்தா.

ஒண்ணுமில்ல என்னவோ கோளாறு நம்ம வலையில் அதனால பின்னூட்டம்கூட போடமுடியல அதனால பிள்ளையார ஒருவேள வேண்டிக்கிட்டா வருமான்னு பாக்கலாம்னுதான்...

said...

பாஸ் வேர்டும் வலை பதிவும்
திரட்டியும் நல் டெம்ளேட்டும் கலந்துனக்கு நான்தருவேன்,
கோடி பின்னூட்டம் வர
துங்கக கரி முகத்து தூமணியே..
விஷயமில்லா நல்பதிவெனக்கு தா.

ஒண்ணுமில்ல என்னவோ கோளாறு நம்ம வலையில் அதனால பின்னூட்டம்கூட போடமுடியல அதனால பிள்ளையார ஒருவேள வேண்டிக்கிட்டா வருமான்னு பாக்கலாம்னுதான்...

said...

பாஸ் வேர்டும் வலை பதிவும்
திரட்டியும் நல் டெம்ளேட்டும் கலந்துனக்கு நான்தருவேன்,
கோடி பின்னூட்டம் வர
துங்கக கரி முகத்து தூமணியே..
விஷயமில்லா நல்பதிவெனக்கு தா.

ஒண்ணுமில்ல என்னவோ கோளாறு நம்ம வலையில் அதனால பின்னூட்டம்கூட போடமுடியல அதனால பிள்ளையார ஒருவேள வேண்டிக்கிட்டா வருமான்னு பாக்கலாம்னுதான்...

said...

ஆகா, சாரிங்க டீச்சர்...உங்களையே கேள்வி கேட்டதுக்கு...
குமரன், ஜிரா எல்லாம் வந்து போய்விட்டதால,வடையை...ஹிஹி..விடையை நானே சொல்லிடறேன்.

ஊர் பேர் திருவலஞ்சுழி. சுவாமிமலை செல்லும் வழியில் உள்ள தலம்.

அமுதம் திரண்டு வராமல் போகவே ஏதோ தவறு நடந்திருக்கிறது எனப்புரிந்து கொண்ட தேவேந்திரன். என்ன காரணம் என மும்மூர்த்திகளைக் கேட்க அவர்கள் "விநாயகரை முறைப்படிவழிபட்டுப் பின் ஆரம்பிக்கும்படிச் சொல்கிறார்கள்.

அந்த வேளையில் விநாயகரை ஆவாஹனம் செய்ய வேறு ஏதும்
இல்லா நிலையில் நடுக்கடலில், Baywatchஇல், கடல்நுரையாலேயே விநாயகரை ஆவாஹனம் செய்து வழிபடுகிறான்.
விநாயகர் அருளால் எடுத்த காரியம் பூர்த்தி அடைகிறது.

அந்த விநாயகர் மூர்த்தியைப் பின்னர் திருவலஞ்சுழியில் பிரதிஷ்டை செய்து,
இன்றும் ஒவ்வொரு விநாயக சதுர்த்தி
அன்றும் தேவேந்திரன் வந்து விநாயகரை வழிபட்டுச் செல்வதாக ஐதீகம். கடல் நுரையால் செய்யப்பட்ட இந்தப் பிள்ளையார் "ஸ்வேத
விநாயகர்" என்றும் "வெள்ளைப் பிள்ளையார்" என்றும் அன்புடன் அழைக்கப் படுகிறார்.

ஒகே-வா டீச்சர்? $2 தட்சிணையப் போட்டுருங்கோ ! ஹிஹி!!
கண்பதி பப்பா மோர்யா!!!

said...

சுரேஷூ,

ரொம்ப ஆர்வமா 'மும்முறை' கணபதிக்கு வாழ்த்துப்பா
பாடுனதுக்குக் கைமேல் பலன் கிடைச்சிருக்குமே:-))

said...

KRS,

அட! இந்தப் புராணக்கதை நல்லா இருக்கே. நன்றி.
( இப்பெல்லாம் டீச்சருங்களை விட ஸ்டூடண்ட்ஸ்க்கு பாய்ச்சல் அதிகமாம்)

ஸ்வேத விநாயகரை ( வெள்ளை)வெல்லப் பிள்ளையார் ஆக்கலையாமா?

தட்டுலே போட்ட தட்சணை பிள்ளையார் எடுத்துக்கிட்டாரா?


//கண்பதி பப்பா மோர்யா!!! //

அகலே வர்ச்சே லெளகரியா.

said...

ப்ராட்பேண்டும் வலைப்பதிவும் மென்பொருளும் நல்டெம்ளேட்டும்
இவை நான்கும் கலந்திருந்தாலும்
கோடிப் பின்னூட்டம் வர
துங்கக் கரிமுகத்து தூமணியே
விஷயமில்லா நல்பதிவை நீ எனக்கு தா.

இரண்டு வாரமா நம்ம பதிவுல ஒண்ணும் பண்ணமுடியல beta blogger மகிமை.
அதான் பிள்ளயார வேண்டிக்கிட்டு இந்த பி.ஊ.

said...

ப்ராட்பேண்டும் வலைப்பதிவும் மென்பொருளும் நல்டெம்ளேட்டும்
இவை நான்கும் கலந்திருந்தாலும்
கோடிப் பின்னூட்டம் வர
துங்கக் கரிமுகத்து தூமணியே
விஷயமில்லா நல்பதிவை நீ எனக்கு தா.

இரண்டு வாரமா நம்ம பதிவுல ஒண்ணும் பண்ணமுடியல beta blogger மகிமை.
அதான் பிள்ளயார வேண்டிக்கிட்டு இந்த பி.ஊ.

said...

சுரேஷூ,

முப்பாவுக்குப் பதிலா இப்ப இருப்பாவா?
அப்பாலென்ன சொல்லப்போறிங்க?

இதுக்குத்தான் நான் இந்த 'பேட்டா' வெல்லாம் வாங்கறதில்லை:-))))

said...

இங்கே கோலாகலமாக இருக்கிறது. கண்பதிஜிதான் கவலைகளை களைய வேண்டும்.

said...

வாங்க மணியன்.

உங்களைத்தான் நினைச்சுக்கிட்டு இருந்தேன், மும்பையிலே கோலாகலமா இருக்குமுன்னு.

கண்பதி பாக்கறதுக்குன்னு ராத்திரி 11 மணிக்குக் கிளம்பி விடிகாலை 5 வரை பூனாவில்
ஊர் சுத்திக்கிட்டு இருந்த காலமெல்லாம் 'ஞாபகம் வருதே ஞாபகம் வருதே'

தங்கப் பிள்ளையார் செஞ்சு வச்சுருக்காங்க அங்கென்னு ஒரு செய்தி பார்த்தேன்.
எப்படி இருக்கார்? ஜொலிக்கிறாரோ?

said...

//வாங்க. படம் விரைவில் போட்டுறலாம். இப்பத்தான்
வெய்யில் வந்துக்கிட்டு இருக்கு. செப்டம்பர் முதல் தேதி
ஸ்ப்ரிங் வந்துரும்:-) வசந்தமே வசந்தம்தான்.//


செப்டம்பர் முதல் தேதியும் வ‌ந்தாச்சு, வசந்த‌மும் வ‌ந்தாச்சு, பிள்ளையாரை இன்னும் காணலியே டீச்ச‌ர்? சீக்கிறமா படத்தப் போடுங்க, முத‌ல் ஆளா நின்னு கன்னத்துல போட்டுகிட்டு அப்படியே டால‌ரையும் கேட்டுக்கிறேன். இல்லன்னா கியூ சேர்ந்திடப் போவுது

said...

வாங்க மதி.

நாளைக்குக் கட்டாயமாப் புள்ளையாரைப் படம் புடிச்சுறணும்.

வீக் எண்ட் வந்தா நேரமே கிடைக்கமாட்டேங்குதே(-:

அப்படியெல்லாம் கியூ சேந்துராது. உங்களுக்கு துண்டு போட்டு இடம் புடிச்சு வச்சுறவா? :-)

said...

டீச்ச‌ர்! நீங்க பிள்ளையார் படம் போட லேட்டாகறதால நான் இங்க http://perunthottam.blogspot.com/2006/09/or.html
சுயம்பு baywatch பிள்ளையார் படம் போட்டு இருக்கேன் பாருங்க. (யானையும் பிள்ளையார்தானே)

said...

எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு டீச்ச‌ர், உங்க தள‌த்தில என் பதிவுக்கு link கொடுத்தத நினைச்சா. உண்மையில குழந்தைக்கு LKGல admission கிடைச்ச சந்தோஷங்க. சொல்லப்போனா பின்னோட்டத்தில பதிவுக்கான link கொடுக்க கஜகுட்டிக்க‌ரணம் போட்டுப் பார்த்துட்டு சீ..சீ இந்த html புளிக்கும்னு link addresaஐ cut & pate பண்ணிட்டேன். இப்ப நீங்க link சேர்த்ததுக்கு ரொம்ப ந‌ன்றிங்க.

said...

மதி,

இந்த லிங்க் விஷயமே நீங்க சொன்ன பிறகுதான் கவனிச்சேன்.

நம்ம பே வாட்ச் பிள்ளையாரே இப்படி வந்து லிங்க் செட்டப் பண்ணிட்டாரோ!!!!!

நேத்துப்போய் படம் எடுத்தாந்தாச்சு. விரைவில் "காட்சி அளிப்பார்'