Wednesday, August 02, 2006

பள்ளிக்கூடப் பசங்களுக்கு மாத்திரை

ரெண்டு நாளைக்கு முன்னாலெ டிவியிலே வந்த நியூஸ். அய்யய்யோ, எல்லாப் புள்ளைங்களும்ஒடம்பு சரியில்லையான்னு கேட்டுறாதீங்க.
இனிமேப்பட்டு பென்சில், பேனா, பேப்பருக்கு வேலை இல்லாம எல்லாப் பாடத்தையும் படிச்சுக்கவும் எழுதவும்(????) இந்த டேப்ளட் கொடுக்கப் போறாங்களாம். இப்ப பரீட்சார்த்தமா ஒரு பள்ளிக்கூடத்துக்குக் கொடுத்துருக்காங்க.


பசங்க எழுதறதும் அழிக்கறதும், பெயிண்ட் ப்ரஷ் வச்சுப் படங்களைத் தீட்டறதுமா குஷியா இருக்குங்க.


எல்லாம் நல்லாத்தான் இருக்கு. ஆனா கையெழுத்துன்னு ஒண்ணு இனிமே இருக்காதோ?அதுவும் ஒருவிதம் நல்லதுதான். நம்ம சிறில் அலெக்ஸ் சொன்னாப்புலே பசங்க,டாக்டராயி, மருத்துச்சீட்டுலே கிறுக்கித்தள்ளி, மக்கள்ஸ் தலையெழுத்தை மாத்திட்டாங்கன்னா...?


இங்கே பசங்க (பாதிக்கும் மேலே) பேனா,பென்ஸில் புடிச்சு எழுதறதைக் கவனிச்சா, எனெக்கென்னவோ திருவள்ளுவர், சாத்தனார்ன்னு சங்ககாலப் புலவர்கள் ஞாபகம் வந்துரும். அவுங்களையெல்லாம் எப்பப் பார்த்தேன்னு கேக்கறவங்களுக்கு, எனக்கு இதுக்கு முன்னாலெ எடுத்த ஆறு ஜென்மங்களின் நினைவு இப்பவும் தெளிவா மனசுலே இருக்கு. சரி, புள்ளைங்க விவகாரத்துக்கு வர்றேன். பொதுவா நம்ம ஊர்லேபிள்ளைங்களும், நாமும் பேனாப் புடிச்சு எழுதறது போல இல்லாம, எதோ எழுத்தாணி புடிச்சு எழுதறது மாதிரிஎழுதுதுங்க இங்கத்துப் புள்ளைங்க. எனக்கு மொதமொதப் பார்த்ததுலே ஏற்பட்ட ஆச்சரியம் இன்னும் இத்தனை வருசத்துக்குப் பிறகும் தீர்ந்தபாடில்லை.


ஆகக்கூடி அடுத்தவருசம் முதல் எல்லா ஆரம்ப பாடசாலைப் பிள்ளைகளுக்கும் ஆளுக்கு ஒரு டேப்ளெட் வருது.இதுக்காக 50 மில்லியன் டாலர் வருசத்துக்குச் செலவாகுமுன்னு கல்வி மந்திரி சொல்லியிருக்கார். அடுத்த தலைமுறை வாழ்க்கையிலே விஞ்ஞானத்தை ரொம்பச் சீக்கிரம் ஆரம்பிக்கறது சந்தோஷமாத்தான் இருக்கு.


டெலிவிஷன் கொடுக்கறதுக்கு இது தேவலையோன்னு ஒரு எண்ணம் வந்துச்சு. அப்படியே இங்கே மத்த நிலவரங்கள் என்னென்ன விவரம் தேடுனப்பக் கிடைச்சது இன்னும் சிலது.


இருக்கற ஜனங்களே 4.1 மில்லியன். இந்த அழகுக்கு இங்கே 3.4 மில்லியன்
டிவிங்க இருக்காம்.

அப்ப கம்ப்யூட்டரோ? 2.5 மில்லியன்.

செல்போன் 3.3 மில்லியன்

கார், மோட்டர்பைக் இத்யாதிகள் 3.2 மில்லியன்


இவ்வளோ இருந்து என்ன செய்ய..........

தமிழ் ப்ளொக்கர்ஸ் எத்தனை பேர்?

வெற்றிகரமா 2 .

35 comments:

said...

அக்கா ... நீங்க சொல்லுகிற கம்யூட்டர் சிலேட்டு சிங்கப்பூரிலும் புழங்க ஆரம்பிச்சுட்டு ... பசங்க பழக்க தோசத்துல தண்ணி ஊத்தி அழிக்க முயற்சி பண்ணுங்களோ ! :))

said...

இங்கே இதுவரை சிலேட்டு இல்லாததால், பசங்க 'தண்ணிபோட்டு' அழிக்கும்வரை
போகாது.:-)))))

அப்பாக்கள் செஞ்சாத்தான் உண்டு.

said...

அடி சக்கைனானாம்
அடுத்த எலெக்க்ஷன் வாக்குறுதி
என்னானு இப்பவே தெரிஞ்சுடிச்சு

said...

phew.. கணினிதானா!!!

ஏதோ புள்ளைங்களுக்கு மாத்திரை குடுக்கிறாங்களோன்னு பதறியடிச்சு ஓடியாந்தா... :O))

ஒருகாலத்துலே குறிப்பேடுகலெல்லாம் "இப்பிடியும் இருந்துது" என்று அருங்காட்சியகத்திலே வைக்கற பொருளாயிரும்!! ;O)

said...

சிஜி,

அப்ப நீங்க எலக்ஷன்லே நிக்கறது உறுதி ஆயிருச்சுன்னு சொல்லுங்க:-))))

said...

ஏதோ அஜீத் படத்துல வரும் இல்ல? பசங்க ஒரே ஒரு சி.டி எடுத்துகிட்டு ஸ்கூல் போறா மாதிரி..

said...

ஷ்ரேயா,

வாங்க வாங்க. நலமா? நாங்கெல்லாம் அங்கே வரலாமுன்னு இருக்கோம்.
இங்கே ஆர்த்தரைட்டீஸ்க்கு கொடுக்கற மாத்திரைக்கு ஃபண்டிங் இல்லையாம்.
அதனாலெ உங்க ஊருக்குப் போங்கன்னு
எங்க அரசாங்கம்
சொல்லுதுங்க.

said...

பொன்ஸ்,

அட...! எந்தப் படம்? ஞாபகம் வரலையே(-:

இங்கத்துப் பசங்க( ப்ரைமரி) வெறும் லஞ்ச் பாக்ஸ் மட்டும்தான் கொண்டு போவாங்க.
மத்தபடி டெக்ஸ் புக், நோட்புக் எல்லாம் பள்ளிக்கூடத்துலெயே இருக்கும்.

ஹைஸ்கூல் முடியும்வரை பள்ளிக்கூடமே டெக்ஸ்ட்புக் எல்லாம் இலவசமாக் கொடுக்கும்.

பொதி சுமக்கற வேலை இல்லை:-)))

said...

¾Á¢ú ŨÄâì¸û À¾¢ôÀ¡Ç÷¸¨Ç 3¬¸ «¾¢¸Ã¢ì¸ ±ÉìÌõ ¬¨º ¾¡ý.
þÉ¢§Áø ¾¡ý Ảġó¾¢ø §Å¨Ä þÕ측 ±ýÚ À¡÷츧ÅñÎõ.
ÍõÁ¡....:-))

said...

குமார், இங்கே நியூஸிக்கு வர்ற அவசரத்துலே பின்னூட்டத்தை 'திஸ்கி'யிலே எழுதிட்டார்.
அதை இங்கே யூனியிலே கொடுத்திருக்கேன்.


//தமிழ் வலைபூக்கள் பதிப்பாளர்களை 3ஆக அதிகரிக்க எனக்கும் ஆசைதான்.
இனிமேல்தான் நூசிலாந்தில் வேலை இருக்கா என்று பார்க்கவேண்டும்.
சும்மா........:-)//

இப்பக் குளிர்காலம் முடிய இன்னும் ஒரு மாசம் இருக்கு. மெள்ள நிதானமாவே வாங்க குமார்:-))))
மணல் லாரி கிடைக்காது. ஞாபகம் வச்சுக்குங்க:-))))

said...

அடடே! இந்த மாத்திரையா? நான் அந்த மாத்திரையோன்னு நெனைச்சேன்..ஹி ஹி

கையெழுத்து...ஓவியம்...எல்லாமே இயந்திரமாப் போயிரும். ஒன்னும் செய்ய முடியாது. கொஞ்சம் கொஞ்சமாப் பழகிப் பழகி...கையெழுத்து காணாமப் போயிரும்...

என்னது முந்திய ஆறு பிறவியும் ஞாபகம் இருக்கா? ம்ம்ம்..இத வெச்சே ஒரு தொடர் கத எழுதலாம் போல இருக்கே!

said...

tabletஇல் கையெழுத்தும் பழகலாமே! என்ன இந்த பலப்பத்தை சாப்பிடமுடியாது :)
மரங்கள் பாதுகாக்கப்பட்டால் நல்லதே!

உங்கள் ஊர் அரசியல்வாதிகள் மக்களின் அறிவு வளர்வதைப் பற்றி பயப்படுவதில்லை போலும்!

said...

ராகவன்,
நம்ம ஆறு பிறவியை விடுங்க. இப்ப ஏழு பிறவிக்கும் இனிமையா ரெட்டைக் குரல் கச்சேரிக்குப்
போய்வந்த தொடரை சீக்கிரம் போடுங்கப்பா.

said...

வாங்க மணியன்.

இங்கே அரசியல்வாதிகளுக்கு அவ்வளவாப் பத்தாது:-))))

மக்களும் அரசியல்வாதியை எதோ ஆஃபீஸ் போய்வர்ற ஆளாத்தான் பார்க்கறாங்க. 'தலைவன், கடவுள்'
இந்த ரேஞ்சுக்கெல்லாம் கொண்டு போறதே இல்லை.

said...

//உங்கள் ஊர் அரசியல்வாதிகள் மக்களின் அறிவு வளர்வதைப் பற்றி பயப்படுவதில்லை போலும்! //

இந்த மாதிரி டைமிங் வசனம் எல்லாம் சூப்பர் மணியன் சார்.

:-)

said...

//ஆறு ஜென்மங்களின் நினைவு இப்பவும் தெளிவா மனசுலே இருக்கு.//

துளசி அக்கா !!மூன்றாவது பிறவில என்கிட்ட வாங்கின கடன் நினைவில் இருக்கா...?(எதாவது சொல்லி டபாய்ச்சிடுவீங்காளே...)


//டெலிவிஷன் கொடுக்கறதுக்கு இது தேவலையோன்னு ஒரு எண்ணம் வந்துச்சு.//

நியுஸிலாந்துல இருந்தா ஆட்டோ வராதுனு நினைப்பா,
"கலக"கண்மனிகள்கிட்ட சொன்னாப் போதும் பிளைட்ல ஆட்டோ வரும் , ஜாக்கிரதை!!!



அன்புடன்...
சரவணன்.

said...

நன்மனம்,
மணியன் சொன்னதை நானும் ரசித்தேன்.


ஓவர் டு மணியன்.

said...

சரவணன்,

எனக்கு டிவி இல்லைன்னுட்டாங்கப்பா. அதுக்கு ரேஷன் கார்டு வேணுமாமே.
ஹூம்.......ஒரு ரேஷன் கார்டு...? கிடைக்கச் சான்ஸ் இருக்கா?
அந்த வயித்தெரிச்சல்தான்............. இப்படி..?
அப்ப ப்ளைட்டுலே ஆட்டோ வந்துருங்கறீங்க?

அப்புறம் அந்தக் கடன் விஷயம்?
அதைத்தான் அஞ்சாவதுலே திருப்பியாச்சே.
இப்ப ஆறாவதுலே நீங்க வாங்குன கடன் தான் நிலுவையிலே இருக்கு.
அதை ப்ளாக் எழுதித் தீர்த்துடலாமுன்னு நினைக்காதீங்க ஆமா.:-)))))

said...

ரேஷன் கார்டு வேணுமின்னா நம்ம கையில சொல்லுங்கம்மா எல்லாகலர்லயும் கிடைக்கும்னு எங்காளு ஒருத்தர் சொல்றாரு. ஆனா 2 கிலோ அரிசி மட்டும் அவருக்கு குடுத்துடனும் :0)

said...

//ரேஷன் கார்டு வேணுமின்னா நம்ம கையில சொல்லுங்கம்மா எல்லாகலர்லயும் கிடைக்கும்னு எங்காளு ஒருத்தர் சொல்றாரு//

அய்யய்யோ.. தமிழ்நாடு திருந்திடுச்சா?

//ஆனா 2 கிலோ அரிசி மட்டும் அவருக்கு குடுத்துடனும் :0) //

அப்பாடி இப்பத் தான் நிம்மதி..


அன்புடன்...
சரவணன்.

said...

அப்புறம் இன்னொரு விஷயம் தோணுச்சு. ஒருத்தர் வீட்டுப் பாடம் செஞ்சாப் போதும். அத அடுத்தவங்க ப்ளூ டூத் இல்லைன்னா USB வழியா காப்பி பண்ணிக்கலாம். :-)

said...

மகேந்திரன்,

நல்ல நியூஸ் கொடுத்தீங்க. இருங்க நம்ம வலைஞர்களிலே இன்னும் யார்யாருக்கு வேணுமுன்னு கேட்டு
மொத்தமா ஆர்டர் கொடுத்துறலாம்.

என் இலவச அரிசி 10 கிலோவையும் அவரே எடுத்துக்கட்டும். பிரச்சனை இல்லை :-))))

said...

சரவணன்,

உங்களுக்குக் கார்டு வேணுமுன்னா இங்கே நம்ம பதிவுலே என்ரோல் பண்ணுங்க:-)))

said...

ராகவன்,

அதுக்கு வேளை வராது. இங்கே ப்ரைமரி பள்ளிக்கூடத்துலே 'ஹோம் வொர்க்' அநேகமா இல்லைன்னுதான்
சொல்லணும். அதான் மகள் இங்கே அஞ்சு வயசுலெ இருந்து பள்ளியில் படிச்சதை(??????) பார்த்திருக்கேனே!

said...

டீச்சர்,

என்னமோ உங்க நாட்டில்தான் இது ஆரம்பிச்சா மாதிரி படங்காட்டறீங்க.

கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே..... தமிழ்நாட்டில்தான் இந்தப் பணி தொடங்கியது என்பது நீங்கள் அறியாததா? தொல்காப்பியன் காலத்திலேயே இந்த திட்டம் இங்கு இருந்தது என்பதற்கு சான்றுகள் உள்ளனவே.

"கண்இமை நொடிஎன அவ்வே மாத்திரை
நுண்ணிதின் உணர்ந்தோர் கண்ட ஆறே"
என தொல்காப்பியர் சொல்கிறார்.

மாத்திரை பற்றிய குறிப்புகள் இக்காப்பியத்தில் பல இடங்களில் உள்ளன.

கண் இமை பற்றியும், கை நொடி பற்றியும் ஏன் சொல்ல வருகிறார்? இந்த மாத்திரைகள் பையோமெட்ரிகஸ் என தற்போது அழைக்கப்படும் பாதுகாப்பு திட்டங்களைத் தன்னுள்ளே கொண்டவைகளாக இருந்ததாக சொல்கிறார்.

அது மட்டுமல்ல, மாணவர்களின் தேவைக்கேற்ப பலவகை மாத்திரைகள் வழங்கப்பட்டதற்கும் சான்றுகள் இருக்கின்றன.

ஆகவே, கணினி வழிக் கல்வியில் தலை சிறந்தி விளங்கி முன்னோடியாக திகழ்ந்த நாடு தமிழ்நாடே.

இம்முறையை மீண்டும் தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் கொண்டு வர வேண்டும். வீட்டுக்கு ஒரு மாத்திரை இலவசமாக தர வேண்டும். இத்திட்டத்துக்கு தொல்காப்பியன் பெயரைச் சூட்ட வேண்டுமென நன்றி கூறி விடைபெறுகிறேன்.

நன்றி வணக்கம்.

said...

/இங்கே பசங்க (பாதிக்கும் மேலே) பேனா,பென்ஸில் புடிச்சு எழுதறதைக் கவனிச்சா, எனெக்கென்னவோ திருவள்ளுவர், சாத்தனார்ன்னு சங்ககாலப் புலவர்கள் ஞாபகம் வந்துரும்/

புலத்தில் பிள்ளைகளின் எழுத்து லாவகத்தைப் பார்த்து எனக்கும் இந்த எண்ணம் வந்ததுண்டு.

ஆனா சத்தியமா இந்த ஜென்மத்து ஞாபகம் மட்டுந்தாங்க

said...

வாங்க கொத்ஸ்,

உங்க பங்குக்குரிய பட்டாஸைக் கொளுத்திப் போட்டதுக்கு நன்றி.
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.... நடக்கட்டும்:-)))))

said...

மலைநாடான்,

எனக்கும் இந்த ஜென்மம் மட்டும்தான் நினைவு இருந்துச்சு, ஆனா அது வலை பதிய
'ஆரம்பிக்கும் முன்':-)))))

said...

புதிர் விடுவிக்கும் புலி நாகை சிவா இப்பல்லாம் வரதில்லையாக்கா?
நானே கஷ்டப் பட்டுக் கண்டுபிடிச்சிட்டேன்.. முகவரி.. படம் பேரு..

said...

//பொதுவா நம்ம ஊர்லேபிள்ளைங்களும், நாமும் பேனாப் புடிச்சு எழுதறது போல இல்லாம, எதோ எழுத்தாணி புடிச்சு எழுதறது மாதிரிஎழுதுதுங்க இங்கத்துப் புள்ளைங்க. எனக்கு மொதமொதப் பார்த்ததுலே ஏற்பட்ட ஆச்சரியம் இன்னும் இத்தனை வருசத்துக்குப் பிறகும் தீர்ந்தபாடில்லை.//

அது எப்பிடீங்க நான் கவனிச்சதேயே நீங்களும் கவனிச்சிருக்கீங்க. என் பையனுக்கு எத்தனை முறை டேய் "நிப்" தெரிச்சிரப்போகுதுட, சும்ம கட்டைவிரல், ஆட்காட்டி விரல் அப்புறம் நடுவிரல் கொண்டு நளினமான, ஈசியா எழுதுடான்னு சொல்லிப்பார்த்தாச்சு. ம்ஹூம் ஒண்ணும் நடக்கல. அது ஒரு ஆச்சர்யமான பழக்கம் தான், பார்த்து பழகிக்கிறது போல.

சரி மாடர்ன் ட்ரெண்ட் அது இதுன்னு சொல்லி, ஆகா ஒகோ, பேஸ் பேஸ்ன்னு சொல்லி வரவேற்கிறீங்க... அதுநாள நீங்க இப்ப என் பதிவுக்கு வந்து இது போல கொஞ்சம் சம்பந்தப்பட்டதுதான்... என்ன கொஞ்சம் மீன் வாசனை அடிக்கும் மூக்க பிடிச்சுட்டு சமாளிச்சு படிச்சுப்புட்டு உங்களுகுன்னு ஒரு கடமை இருக்கு அதையும் செஞ்சுப்புட்டு வாங்க...

http://thekkikattan.blogspot.com/2006/08/blog-post.html

said...

பொன்ஸ்,

அது நல்ல படம்தானே. சினிமாலே பாட்டுப்போட முயற்சி செஞ்சுக்கிட்டு மழையிலே ஒரு பாட்டு வருமே.
அதுலே இந்த சி.டி ஸீன் எப்ப வருது? நினைவுக்கு வரலை(-:

நாகை சிவா ஊருலெ இல்லை போல இருக்கு.

said...

தெ.கா,

மூக்கைப் பிடிச்சுக்கிட்டே கடமையைச் செஞ்சாச்சு. நாளைக்கு நோம்பு. இன்னிக்கு இப்படி
மீனைக் கொண்டுவந்து வீட்டு (கிணத்து)லே போட்டுட்டீரே.

said...

//இந்த மாதிரி டைமிங் வசனம் எல்லாம் சூப்பர் மணியன் சார்.//

நன்றிங்க. நகைச்சுவைக் காட்சியில் எல்லாம் டைமிங் முக்கியம் என்று பேட்டிகளில் கேள்விப் பட்டிருக்கிறேன். ஆனால் அதன் அர்த்தத்தை இதுவரை புரிந்து கொள்ளவில்லை. :-)

said...

இனிமேப்பட்டு பென்சில், பேனா, பேப்பருக்கு வேலை இல்லாம எல்லாப் பாடத்தையும் படிச்சுக்கவும் எழுதவும்(????) இந்த டேப்ளட் கொடுக்கப் போறாங்களாம். இப்ப பரீட்சார்த்தமா ஒரு பள்ளிக்கூடத்துக்குக் கொடுத்துருக்காங்க.//

எங்க? ஒங்க ஊர்லதானே.. நா இங்கயோன்னு பயந்துபோய்ட்டேன்..

டேப்ளட்ல படம் வருமாடான்னு கேக்கற ஊருங்க இது..

said...

டிபிஆர்ஜோ,
என்னங்க நீங்க... இங்கே மட்டும் எல்லாரும் மெத்த அறிவாளிகளா என்ன?
இங்கேயும் இப்படிக் கேட்டுருக்க மாட்டாங்களா? யாரு கண்டா?