Tuesday, August 15, 2006

பாரதம் என்றால்....

பாரதமென்னால் பாரின் நடுவில்
கேவலம் ஒருபிடி மண்ணல்ல
ஜனக்கோடிகள் நம்மே நாமாய் மாற்றிய
ஜென்ம க்ரஹமல்லோ ( பாரதம்)


விருந்நு வந்நவர் பரணம் பற்றிவீடே ஆக முடிச்சு
வீடு புதுக்கிப் பணியும் வரையில் விஸ்ரமம் அல்லனிமேல்
துடங்கிவச்சு நாமொரு கர்மம் துஷ்டிதுளும்பும் ஜீவித தர்மம்
ஸ்வந்த்ர பாரத விஸாலஹர்ம்யம் சுந்தரமாக்கும் நவதர்மம் ( பாரதம்)


கிராமம்தோறும் நம்முடெ பாதம்
க்ஷேமம் விதரி நடக்கெட்டே
கூரகள் தோறும் நம்முடெ கைத்திரி
கூரிருள் கீறி முறிக்கெட்டே

அடிபதறாதே ஜனக்கோடிகள் புதுப்
புலரியிலேய்க்குக் குதிக்கெட்டே
அலஸதயருதே நம்முடெ லக்ஷ்யம்
அரிகே அரிகே அரிகே ( பாரதம்)



மக்கள்ஸ், மேலே இருக்கற தேசபக்தி பாடல் மலையாள பாஷையில் இருக்கு. இந்தப் பாட்டு அநேகமா அமீரகத்துலே இருக்கற நம்மக்கள் கேட்டிருப்பாங்க. கலாபவன் நடத்துற உற்சவங்களில் ஆரம்பப்பாட்டு இதுவாத்தான் இருக்கும்.


இந்த 59வது சுதந்திர தினத்தில் உங்களுக்காக இந்தப் பாடலைத் தமிழில் அப்படியே எழுதி இருக்கேன்.எனக்குப் பிடிச்சப் பாடல்களில் இதுவும் ஒன்று.


அனைவருக்கும் எங்கள் அன்பான சுதந்திரதின நல்வாழ்த்து(க்)கள்.

35 comments:

said...

I wish a happy independence day to you and all the fans of your blog,thulasi akka.

Vanthe matharam.Jai hind.

said...

Thanks Selvan & wish you the same

said...

இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்!

said...

சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்

"நிண்டே ஸ்வரமும் எண்ட ஸ்வரமும்
சேர்ந்தே நம்மட ஸ்வரமாயி"

எங்களுக்கும் மலையாளம் தெரியுமுல்ல..

:)

said...

அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

said...

இப்பாடலின் வார்த்தைகளுக்கு அர்த்தம்
தெரியவில்லை;
ஆனால் பாடல் வெளிப்படுத்தும்
உணர்வுகள் புரிகின்றது.
நன்றி;வாழ்த்துகள்!
**********************************************************************

$ பாடலின் தமிழ் வடிவத்தைக் கொடுத்திருந்தால் இன்னும் ரசிச்சிருப்போம்லே
$ என்ன பன்றது...அதுக்கு
ரெண்டு மொழியும் முழுசா
தெரிஞ்சிருக்கோணும்லே
(பூரிக்கட்டை பறந்து வருது.
ஓட்றா...ஓடு..ஓடு)

said...

"மகர நிலாக் குளிர்" என்றொரு ஜேஸுதாஸின் ஐயப்ப பாடல் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று1
என்னமோ தெரியவில்லை, இந்தப் பாடலை அந்த மெட்டில் பாடிப் பார்த்தேன்!
சரியாக வந்தது1

வாழ்க சுதந்திரம்!

said...

பாடல் எனக்கு விளங்க வில்லையே
சரி
வாழத்துக்கு நன்றி தங்களுக்கும் எனது சு..த..ந்..தி ர தின வாழ்த்துகள்

said...

துளசிம்மா நான் இங்கதான் இருக்கேன் இதுவரைக்கும் கேட்டதில்லை பரவாயில்ல இப்ப கே..படிச்சாச்சே
சுதந்திர தின வாழ்த்துக்கள் நியூசிலாந்தில ஏதும் கொண்டாட்டமா?

said...

சுதந்திர தின வாழ்த்துக்கள் துளசியக்கா!

said...

துளசி மேடம்

பாடலுக்கு நன்றி.

சுதந்திர நல்வாழ்த்துக்கள்..

said...

ஜோ, குறும்பன், சிபி

வாங்க.வாங்க. நல்லா இருக்கீங்களா?
வருகைக்கும் வாழ்த்து(க்)க்கும் நன்றி.

said...

சிறில்,

எண்டே குட்டா( முட்டா), ஆளு கொள்ளாமல்லோ?:-))))

( முட்டம்தானே உங்க ஊரு?)

said...

வாங்க SK,

நீங்க சொன்ன பாட்டுக்கு எதாவது ச்சுட்டி இருக்குங்களா?
நானும் ச்சும்மாப் பாடிப் பாக்கறேனே.

said...

சிஜி & என்னார்,

இதுக்கு அர்த்தம் பொதுப்படையாச் சொல்றேன். ரொம்ப
விளக்கினா அதுவே ஒரு பதிவின் நீளத்துக்கு வந்துரும்.


" பாரதம் என்று சொன்னால் அது வெறும் மண்ணை மட்டும் சொல்லலை. இங்கே இருக்கும் கோடானுகோடி
மக்களின் ஜென்மபூமி.

விருந்து சாப்பிடவந்தவங்க வீட்டையே அழிச்சமாதிரி, வெள்ளைக்காரர்கள் வந்து நாட்டையே பிடிச்சு எடுத்துக்கிட்டாங்க.
அழிச்ச வீட்டைப் புதுசா நிர்மாணிக்கிறவரை நமக்கு இனி ஓய்வே கிடையாது. இந்தக் காரியத்தை நாம் தொடங்கி
வச்சு, நம்முடைய தர்ம நியாயங்களை நிலை நாட்டுவோம்.

நாட்டின் ஒவ்வொரு கிராமத்துக்கும் நலன்வேண்டி நல்லது செய்யணும். ஒவ்வொரு வீட்டிலும் விளக்கேத்தி வச்சு
அங்கிருக்கும் அறியாமை என்னும் இருளை ஓட்டணும். கொஞ்சமும் பதறாமக் கொள்ளாம புது விடியலை நோக்கிப்
போகணும், மனசைத் தளரவிடாதீங்க. நம்முடைய இந்த லட்சியம் ரொம்ப தூரத்தில் இல்லை. இதோ பக்கத்திலேதான் இருக்கு. அதை நோக்கிப்
போவோம்."

said...

மகேந்திரன்,

கலைநிகழ்ச்சிகள் நடத்த வரும் கலாபவன் குழுவின் ஓப்பனிங் ஸாங் இதுவா இருந்தது.
இங்கே வெலிங்டனில் இந்திய ஹைகமிஷன் இன்னிக்குக் கொடி ஏத்திக் கொண்டாடுவாங்க.

நாங்க சனிக்கிழமை நடந்த க்ளப் ஃபங்ஷனில் கொண்டாடினோம்.

said...

வெள்ளையன் வந்தான் தொல்லை தந்தான் என்று சொல்கிறோம் அனால் ஏற்பட்ட நன்மைகள் தெரியுமா?
ஒரு பதிவு போடுகிறேன்

said...

நன்றி ட்டீச்சர்
காலை 71/2 க்கு எழுந்து பாடலைப்படித்து மகிழ்ந்து தமிழில்
புரியலீயே எனும் ஆயாசத்துடன் பின்னூட்டம் போட்டுவிட்டு மீண்டும் தூங்கி விட்டேன்.
101/2 மணிக்கு துயில் நீங்கி துளசிதளம் வந்தால்.......
அட! ட்டீச்சர் எமாற்றிவிடவில்லை!
ட்டீச்சர்னா ட்டீச்சர்தான்
வாழ்த்து மட்டும்தானே கூறினேன்?
இப்ப இந்தாங்க சாக்லெட் பிடிங்க...

said...

உங்களுக்கும் சுதந்திர வாழ்த்துக்கள்.

said...

இதோ பக்கத்திலேதான் இருக்கு. அதை நோக்கிப் போவோம்.//

இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்!

said...

இங்கே சுதந்திர தினம் டிவியிலே கொண்டாடறோம்.
உங்க பதிவைப் பார்த்ததும் ஓஹொ இப்படியும் இருந்தோமோ என்று தோன்றுகிறது.
நன்றி.
வந்தே மாதரம்.
வாழிய பாரத மணித்திரு நாடு.

said...

துளசி அக்காவுக்கும், மற்றைய அனைத்து வலைப்பூ நண்பர்களுக்கும் இனிய சுதந்திரதின நல்வாழ்த்துக்கள்.

அன்புடன்...
சரவணன்.

said...

வாங்க என்னார்.

உங்க பதிவை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.. நம்ம நாட்டுலே எவ்வளோ பெரிய ரயில் நெட் வொர்க்
இருக்கு. அதெல்லாம்கூட அப்ப வந்ததுதான். பல நல்லதும் சில தீயதுமாவும் இருந்திருக்கும்.
எழுதுங்க எழுதுங்க.

said...

சிஜி, சாக்லேட்டுக்கு நன்றி. மாணவருடைய சந்தேகத்தை டீச்சர் தீர்க்கணும் இல்லையா. அது.

said...

டிபிஆர்ஜோ & தருமி

வாங்க வாங்க. அபூர்வமா ரெண்டுபேரும் சேர்ந்தே வருகை.
ஆஹா ........ரொம்ப சந்தோஷமா இருக்கு.

வாழ்த்துகளுக்கு நன்றி. உங்களுக்கும் அதே.அதே

said...

வல்லி& சரவணன்

எப்படி இருக்கீங்க?

வாழ்த்துகளுக்கு நன்றி. உங்களுக்கும் அதே.அதே

said...

சுதந்திரதின வாழ்த்துகள் டீச்சர்.

நல்ல பாடல். தொடங்குகையில் தமிழோ என நினைத்தேன். பிறகுதான் தெரிந்தது அது கொடுந்தமிழ் என்று. கொடுமையான தமிழல்ல. சேரத்தார்க்கு இன்பம் கொடுந் தமிழென்று.

said...

சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்

said...

மனம் நிறைந்த சோகமிருந்தபோதும், மறக்காது உங்களுக்கும், உங்கள் பதிவின் மூலம் அனைத்துப் பாரத சகோதரர்களுக்கும் இனிய சுதந்திரதின வாழ்த்துக்கள்.!

said...

ராகவன் & சிவமுருகன்,

நன்றி.

மறுபடியும் வார்த்தை விளையாட்டுலே
நம்ம சொல் சித்தர் ராகவன்!

said...

மலைநாடான்,

விஷயம் கேள்விப்பட்டதும் எங்க மனசும் கனத்துப் போச்சு.
மனுஷனே மனுஷனைக் கொல்லத்துடிக்கிறது ஏன்?
பாவம் அந்தப் புள்ளைங்க. ஏற்கெனவே அனாதைகளா இருக்கறவங்களுக்கு
இப்படி இன்னும் கொடுமை செய்யத் துடிச்ச மனசை என்னன்னு சொல்றது?

said...

//விருந்து சாப்பிடவந்தவங்க வீட்டையே அழிச்சமாதிரி, வெள்ளைக்காரர்கள் வந்து நாட்டையே பிடிச்சு எடுத்துக்கிட்டாங்க.
அழிச்ச வீட்டைப் புதுசா நிர்மாணிக்கிறவரை நமக்கு இனி ஓய்வே கிடையாது. இந்தக் காரியத்தை நாம் தொடங்கி
வச்சு, //
துளசியக்கா ஆரம்பிக்க வேண்டியது வெள்ளைகாரர்கள் அழிச்ச இடத்திலிருந்து அல்ல, அதற்கும் வெகு காலத்திற்கு முன்னிருந்து.... நான் சொன்னது புரியலைனா பெரியார் சொன்னதை படிச்சி பாருங்க, நாம சுத்தகரிப்பு வேலையை எங்கிருந்து ஆரம்பிக்கனும்னு புரியும், அது வரை சுதந்திர தினம் எம்மக்களுக்கு அல்ல.

நாம் திருமணம் செய்யலை என்றாலும் மற்றவர்கள் திருமண தினத்திற்கு வாழ்த்து சொல்வோமல்லவா அது மாதிரி வேண்டுமானால் உங்களுக்கு சுதந்திர தினத்திற்கு வாழ்த்து சொல்ல முடியுமே தவிர உண்மையான சுதந்திரம் இன்னமும் வரவில்லை, மற்றபடி உங்களுக்கு சுதந்திர தின வாழ்த்துகள்.

//நம்முடைய தர்ம நியாயங்களை நிலை நாட்டுவோம்.
//
அய்யய்யோ வேண்டாங்க, இந்திய சமூகத்தின் தர்ம நியாயம், வெள்ளையர்களுக்கு முன்பும், பின்பும் மனு(வர்ணாசிரம)தர்மமாகத்தான் இருந்தது, வெள்ளையன் காலத்தில் மட்டும் தான் நெற்றியிலிருந்து பிறந்தவனும் காலிலிருந்து பிறந்தவனும் எல்லாம் சமம், எல்லாம் அடிமை என்ற சமதர்மம் இருந்தது.

said...

வாங்க குழலி.

நலமா?

எல்லோரும் சமம் என்ற ஒரு தர்மத்தை நிலைநாட்ட புது யுகத்துக்கு மக்களை அழைக்கிற
பாட்டுன்னு நான் நினைச்சுக்கிட்டு இருக்கேன்.

இனி ஒரு புது சமுதாயமாற்றத்தை எல்லோரும் சேர்ந்து கொண்டு வரணும் என்பதுதான்
நம்முடைய ஆசை, நோக்கம் எல்லாம்.

மனம் கசந்து இருக்கீங்க. நல்ல காலம் வரணும். கட்டாயம் வரும்.

said...

§¾ºÀì¾¢ôÀ¡¼¨Ä þ¨½Â¾Çò¾¢ø º¢Ãò¨¾Ô¼ý ¦ÅǢ¢ðÎûÇ£÷¸û; þ¾üÌ ´Õ º¸ þó¾¢Âý ±ýÈ Å¨¸Â¢ø '¿ýÈ¢' ¦º¡øÄìܼ¡Ð. ±É¢Ûõ ±ý Á¸¢ú¨Â þ¨½Â ¯Ä¸¢Öû§Ç¡§Ã¡Î À¸¢÷óÐ ¦¸¡û¸¢§Èý; Å¡ú¸ À¡Ã¾õ!

said...

வாங்க பாரதத்தின் நவீன இளவரசே.

திஸ்கியிலே இருக்கும் உங்கள் பின்னூட்டத்தை இங்கே யூனிகோடுலே
மாத்தி இருக்கேன்.

//தேசபக்திப்பாடலை இணையதளத்தில் சிரத்தையுடன்
வெளியிட்டுள்ளீர்கள்; இதற்கு ஒரு சக இந்தியன் என்ற வகையில்
'நன்றி' சொல்லக்கூடாது. எனினும் என் மகிழ்ச்சியை இணைய
உலகிலுள்ளோரோடு பகிர்ந்து கொள்கிறேன்; வாழ்க பாரதம்! //

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

வாழ்க பாரத மணித் திருநாடு