Thursday, September 07, 2006

யுகா

ஆமாம். வெளி உலக ஆட்கள்(??) அதாங்க ஏலியனுங்க எப்படி இருப்பாங்க? பெரிய மண்டையும், கண்ணும், குச்சிபோல கையும் காலும் வச்சுக்கிட்டு இருப்பாங்களா?யார் இந்த உருவத்தை மொதல்லே நமக்கு அடையாளம் காமிச்சாங்க? எப்படி நாம் எல்லோரும் இப்படித்தான் இருக்குமுன்னு ஒத்துக்கிட்டோம்?


செத்துப்போனவுங்க எல்லாம் என்ன ஆவாங்க? பேய் பிசாசுங்க எப்படி இருக்கும்? வெள்ளைச்சீலை, வெள்ளைவேட்டி மட்டும்தான் கட்டுமா? இப்படி ஏகப்பட்ட கேள்விஎன் மனசுலே அப்பப்ப வந்து போகும்.


இதுக்கெல்லாம் விடை கொடுக்கறமாதிரி ஒரு படம் வந்துருக்குன்னு சொன்னா, நீங்க நம்புவீங்களா?


உலகத்துலெ அநியாயம் நடக்குதேன்னு பதறிக்கிட்டு, அங்கங்கே மக்களைக் கூட்டம்கூட்டமா அழிச்சுடலாமுன்னு ப்ளான் போடுதுங்க அகோரர்கள்னு சொல்லிக்கிற ஆவிகள்.


இந்தப் படத்துலெ நம்ம நாஸர் பெரிய விஞ்ஞானி. அவருக்கு ஒரு இளமையான(?) அசிஸ்டெண்ட்இருக்கணுமே? யெஸ். யூ அர் ரைட். இருக்காங்க, ஸ்வர்ணமால்யா.


ஆகாயத்துலே இருந்து நட்சத்திர ரூபத்துலே பூமிக்கு அழிவு வந்துக்கிட்டு இருக்கு. இன்னொரு எழுத்தாளர்( வலைப்பதிவாளர் ? ) அகோரர்களைப் பத்தி விரிவா எழுதி வச்சிருக்காங்க. (இப்பத்தான் தமிழ்ப்புத்தகப் பதிப்புலகம் நல்லா இருக்கே. )



இதைப் பத்தி ஆராயப் போகுறதுக்கு முந்தி அப்பாகிட்டே டாடா சொல்லிட்டுப் போகலாமுன்னு, நாயகிவீட்டுக்கு வந்தா.................. அப்பாவே ஒரு அகோரர்னு தெரிய வந்துச்சு. சீனியர்கிட்டே இதைச் சொல்லலாமுன்னு போனா அவர் எழுத்தாளரைப் பத்திச் சொல்றார். ரெண்டு பேரும் எழுத்தாளர் அம்மா வீட்டுக்குப் போனா...........


அம்மாவை ஏற்கெனவே அகோரர்கள் தூக்கிட்டுப் போயாச்சு. அங்கே ஒரு கெமரா கிடைக்குது. அதுவழியாப் பார்த்தால் அருவமா இருக்கும் அகோரர்களைப் பார்க்க முடியுது. விஞ்ஞானிகள் ரெண்டு பேரும் அகோரர்களைத் தேடிக்கிட்டுக் காட்டு பங்களாவுக்குப் போயிடறாங்க.


கல்லூரி மாணவர் & மாணவிகள் கொஞ்சம்பேர் விஞ்ஞானியைத் தேடி ஆராய்ச்சி (????) செய்யறதுக்காக காட்டுபங்களாவுக்கு வராங்க. நீங்க யூகிச்சது போலவே அங்கெ இருக்கும் சமையல்காரர் அச்சுபிச்சுன்னு மர்மமாப் பேசுறார்.


ஒரு மாணவன் காணாமப் போறது, மாணவிகள் கதிகலங்கி நடுங்கறது எல்லாம் இருக்கு. நமக்கும் ஆயாசமா இருக்கு.அப்புறம் என்ன ஆச்சு? 'கொட்டாவி வந்துச்சு'ன்னு யாருங்க அங்கெ காமெண்ட் விடறது?
அகோரர்களொட ப்ளான் என்னன்னு கண்டு பிடித்தல், அதிலிருந்து உலக மக்களைக் காப்பாற்றுதல்னு 'விறுவிறுப்பா'சொல்றாங்க.


ஆனா ஒண்ணுங்க......... 'இப்படியும்கூட இருக்கலாமே, ஏன் இருக்கக்கூடாது?'ன்னு ஒரு நிமிஷம் நினைக்க வைக்கறாங்க பாருங்க அதுதான் டைரக்டருக்குக் கிடைச்ச வெற்றி.


ஆமாம் டைரக்டர் பேரைச் சொல்லலியே..... 'யார் கண்ணன்'


ம்யூ'சிக்' தீனா

34 comments:

said...

வான்வெளி ஒரு புரியாத புதிர்.எப்பவுமே புரியாதோ என்னமோ?
அதனாலேயே இந்த ஏலியன் மேலே ஒரு இனம் புரியாத பற்று.
தேடத்தேட புதுப்புது அர்த்தங்கள் கிடைக்கும் இடம் வான்வெளி அதனாலேயே அவர்களுக்கு நாம் கொடுக்கும் தனிச்சிறப்பு இந்த பதிப்பு?
படம் பேரை சொல்லலியே?

said...

ம்யூ'சிக்' தீனா

சிக் - ம்ம்ம்ம் கலக்குறீங்க

said...

குமார், வாங்க வாங்க.

நீங்கதான் போணி.

படத்துக்குப் பேரே 'யுகா' தாங்க.

said...

வாங்க சிறில்.

எல்லாம் உங்க நல்ல காலம். தானா வருது:-)))

தேங்க்ஸ்.

said...

கதை கதையாம் காரணமாம்.
யுகா. அழகான பெயர்தான்.
துளசி மாதிரி யாரு பொறுமையா பாக்கிறது.?

said...

//பேய் பிசாசுங்க எப்படி இருக்கும்? வெள்ளைவேட்டி மட்டும்தான் கட்டுமா?//

டீச்சர்...ஆனாலும் நீங்க நம்ம வெள்ளை மனம் படைத்த அரசியல்வாதிகளை இப்படி எல்லாம் வாரக் கூடாது!

"யுகா" என்று உங்கள் பதிவுத் தலைப்பைப் பார்த்தவுடன், ஏதோ சம்பவாமி யுகே யுகே ன்னு சொல்லப் போறீங்களோ ன்னு ஓடியாந்தேன். ஆனா கடைசியிலே 'யார் கண்ணன்' தான் அனைத்தையும் இயக்கியவர் ன்னு சொல்லி, கதையை மங்களமா முடிச்சிட்டீங்க!

ஆமா, கடைசியிலே அந்த இளமையான(?) அசிஸ்டெண்ட் என்னா ஆனாங்கன்னு சொல்லவேயில்லையே? :-)

said...

வல்லி,

என் பொறுமையை நீங்கதான் மெச்சிக்கணும்.
படம் பார்த்து 10 நாளாச்சு.

said...

KRS,

அதெப்படிங்க வெள்ளைவேட்டி விஷயத்தைப் போட்டு வாங்கறிங்க?:-)


// கடைசியிலே அந்த இளமையான(?) அசிஸ்டெண்ட் என்னா
ஆனாங்கன்னு சொல்லவேயில்லையே? :-)//

சொல்லிக்கிறமாதிரி அவுங்க ஒண்ணும் செய்யலை. திரும்பவும்
விஞ்ஞான ஆராய்ச்சிக்கு உதவப் போயிட்டாங்க (-:

said...

ம்யூ"சிக்"தீனா-
ரசித்தேன்

said...

சிஜி,

தேங்க்ஸ்

said...

டீச்சர், இந்தக் கண்ணன் மொதல்ல "கண்ணே கனியமுதே"ன்னு ஒரு அருமையான படம் எடுத்தாரு. அதுல ரகுமான், அமலா நடிச்சிருந்தாங்க. "நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி" மாதிரி அற்புதமான பாட்டுகள் மெல்லிசை மன்னர் இசையில இருந்தது. படமும் நல்லாத்தான் போச்சு. ஆனா அதுக்கப்புறம் எடுத்த யார் திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆச்சு. அதுக்கப்புறம் அவர் யார் கண்ணன் ஆயிட்டாரு.

யுகா படம் பத்திக் கேள்விப்பட்டேன். ஆனா பாக்குற ஆசை வரலை. டீ.வியில பாத்த காட்சிகள் அப்படி.

said...

ராகவன்,

யார்ரா இந்த கண்ணன்னு இருந்தேன். நல்லவேளை சொன்னீங்க.
நான் யார் பாக்கவேயில்லையார்( இந்த 'யார்' ஹிந்தி 'யார்' )

அதுலே யார் யார் நடிச்சாங்க? என்ன மாதிரி கதை?

டிவிக்கே சீக்கிரம் வந்துரும் இந்தப்படம். அப்பப் பார்த்துறலாம்.

said...

டீச்சர், யார் படம் ரொம்ப முன்னாடி வந்தது. சின்ன வயசுல. அந்தப் படம் வந்து ரொம்ப நாளா வீட்டுல விடல. கூட்டீட்டும் போகல. ரொம்ப நல்லா ஓடி முடிஞ்ச சமயத்துல தேட்டருல பாத்தேன். கூட்டம் குறைவா இருந்தது. பயந்து பயந்து பாத்தேன்.

அதுல அர்ஜுன், நளினி நடிச்சிருப்பாங்க. அதுல ஜெய்சங்கருக்கும் ஜெயச்சித்ராவுக்கும் ஒரு குழந்தை பிறக்கும். அதாவது எல்லா கிரகங்களும் ஒரே நேர் கோட்டில் இருக்கும் பொழுது பிறந்த குழந்தை வளர்ந்து குறிப்பிட்ட நட்சத்திரத்தில் ஒரு பெண்ணைக் கூடுவானாகில் சிவனும் அவன் முன் மண்டியிடுவான். அந்தச் சாத்தான் குழந்தை வளர்ந்த பெறகு அழிக்கிறதுதான் கதை.

அதுல "அபிராமியே உமா மகேஷ்வரி...சிவகாமியே ஜடாதரி"ன்னு ஒரு நல்ல பாட்டு இருக்கு. சோமைய்யாஜுலு பாடுவாரு. நளினி அம்மனா வந்து ஆடுவாங்க.

said...

ராகவன்,

பயங்கரமா இருக்கு. அதான் நல்லா ஓடுச்சு போல.

மிஸ் ஆகிப்போச்சு. ஒரு காலத்துலெ தமிழ்ப்படம் கிடைக்காம இருந்துச்சு. அப்ப வந்துச்சுபோல இருக்கு.

said...

துளசியக்கா,

யார்? படம் 1987-88 சமயத்தில் வந்த அமானுஷ்யம்/ பேய்க் கதைப்படம்.
உட்கார்ந்து பார்ப்பது காலவிரயம் (அ)பொறுமைக்குச் சோதனை டிவியில சும்மாவே வந்தாலும்.


அன்புடன்,

ஹரிஹரன்

said...

ஆமா வேற தமிழ்ப் படம் ஒண்ணும் கிடைக்கலயா? எத்தனையோ ந‌ல்ல படங்கள் தமிழ்ல வந்துகிட்டு இருக்கு. அது எப்படி யுகா மட்டும் உங்களை பாதிச்சு பதிவு போட வச்சுதுன்னு தொரியல.
"//அதுதான் டைரக்டருக்குக் கிடைச்ச வெற்றி.//,
//'கொட்டாவி வந்துச்சு'ன்னு யாருங்க அங்கெ காமெண்ட் விடறது?//
சாலமன் பாப்பையா மாதிரி ரெண்டுப் பக்கமும் சொன்னா எப்படி? மார்க்குப் போடுங்க (சுமாரா? சூப்ப‌ரா?ன்னு தெரிஞ்சிக்கிறோம்)

said...

மதி,

நீங்க நம்ம 'கொளுகை'யைப் புரிஞ்சுக்கலையா? (-:

எல்லாரும் பார்க்கிற, பிரபலங்கள் நடிச்ச, படத்துக்கெல்லாம் விமரிசனம் எழுதறது இல்லைப்பா.

எனக்காகவே படம் எடுத்து இங்கே நம்மூட்டுலே ரிலீஸ் செய்யறதுக்கு மட்டும்தான் இந்தக் கொடுப்பினை.

நானும் பார்த்துச் சொல்லலேன்னா, இப்படி ஒண்ணு எடுத்தது இந்தப் பாழும் உலகத்துக்குத் தெரியவருமா?
எல்லாம் ஒரு சேவைதான்.
'நடுநிலை' தவறமாட்டேன்லெ:-)

said...

ஹரிஹரன்,

//.....படம் 1987-88 சமயத்தில் .............//



ஓஓஓஒ அப்பச் சரி. இந்த Coup நடந்து அதாலே பாதிக்கப்பட்டு முடங்கிக் கிடந்த காலகட்டம் அது.

said...

துளசி, யார் படம் பாத்தீங்கன்னா
2 நாள் தூக்கம் போயிடும் .அப்படியொரு விகாரம்.
ஆனால் பாடல்கள் ராகவன் சொல்வதுபோல் நன்றாக இருக்கும்.
விருவிருப்பாகப் போகும்.
நல்ல பதில் போடறீங்க.
யார்!யார்? யா..ர்.
ம்ம். விளையாடுங்க வார்த்தை விளையாட்டு.

said...

நன்றாக உள்ளது

said...

வல்லி,

வாங்கப்பா. யார் யார்ன்னு தெரிஞ்சுக்காட்டா தலை வெடிச்சுறதா? அதான்..:-))))
அந்தப் படத்தை யார் யார் பாக்கணுமுன்னு விதி இருக்கோ அவுங்க பார்த்திருப்பாங்கதானே?
சொல்லுங்க 'யார்'

said...

என்னார்.

//நன்றாக உள்ளது//

ஹா....... எது? படமா?

said...

துளசி மாதிரி யாரு பொறுமையா பாக்கிறது.? //

உண்மையிலேயே ஒங்களுக்கு ரொம்ப பொறுமைதாங்க.. நேரமும் இஷ்டத்துக்கு இருக்கே..

என்ன ஏதாச்சும் தப்பா சொல்லிட்டேனா:)

said...

வாங்க டிபிஆர்ஜோ.


// நேரமும் இஷ்டத்துக்கு இருக்கே.. //

அதெப்படிங்க எனக்கு மட்டும் 48 மணி நேரமா ஒரு நாளைக்கு?

நீங்க எல்லாம் டிவி பாக்குற நேரம் நான் படம் பார்த்துடறேன்:-)))))

ஆமா.......... இது தப்புங்களா? (-:

said...

டீச்சர் இன்னொரு விஷயம்....யார் படத்துல ரொம்பச் சிறப்பான விஷயமே செந்தில் காமெடிதான். அதுல பிடி மாஸ்டரா வருவாரு. அவங்க குடும்பத்துல அப்பா, தாத்தான்னு கரண்டுல கண்டமாயிருக்கும். இவருக்கும் அப்படித்தான் ஆகும்னு பயப்படுற கேரக்டர். கடைசில அப்படித்தான் ஆகும். பேய் கரண்டுக் கம்பிய வெட்டி விட்டுரும். அதுல தாத்தாவ வர்ர செந்திலோட நடிப்பு பிரமாதமா இருக்கும். புதுசா ஊருக்குள்ள இழுத்திருக்குற கரண்டு வயருல மண்ணெண்ணெய் வருதுன்னு வெட்டப் போயி ஷாக்கடிச்சிரும்.

said...

ராகவன்,

நீங்க சொல்றதைப் பார்த்தா நான் கட்டாயம் இந்தப்
படத்தைத் தேடிப் பாக்கணும்போல இருக்கேப்பா!
படம் அப்ப நிஜமாவே 'ஹிட்'டா?

said...

ராகவன்,

//இந்தக் கண்ணன் மொதல்ல "கண்ணே கனியமுதே"ன்னு ஒரு அருமையான படம் எடுத்தாரு. அதுல ரகுமான், அமலா நடிச்சிருந்தாங்க. //

ஆமாங்க. ஆமாங்க. கண்ணே கனியமுதே! நான் படத்தோட பேரைத்தான் சொல்லிப் பாத்தேனுங்க! நன்றி.

யக்கா! குறுக்கால தலைய நீட்டுனதுக்கு ஸாரி!

said...

சுந்தர்,

அதெல்லாம் கண்டுக்கமாட்டோம்.
ஊடாலேயும் சால் ஓட்டலாம்:-))))

எல்லாம் அக்காவூடு தானேப்பா.

said...

தெரியாத்தனமா இந்த படத்த நாங்க மட்டும்தான் பாத்துட்டோம்னு நெனச்சேன்... பரவாயில்லை இந்த படத்தை பார்த்து அதற்கு விமர்சனப் பதிவும் போட்டிருக்கும் உங்கள் நெஞ்சுரத்துக்கு ஒரு ஓ! ஓகோ!

said...

ராசுக்குட்டி,

வாங்க.

யுகாவுக்கே 'நெஞ்சுரத்தை'ப் பத்திச் சொல்லிட்டா எப்படி?

இன்னும்கூட வேற சினிமாக்கள் இருக்கே:-))))

முண்டாசு ஏற்கெனவே நெஞ்சுரத்தைப் பத்திப் பாடிட்டுப் போயிட்டார்.
இன்னிக்கு அவரோட நினைவு நாள்.

said...

வழமையாக வெளிவரும் தமிழ்த்திரைப்படங்களை விட இப்படம் கொஞ்சம் மாறுபட்டது என்று சொல்கிறீர்கள் போல் இருக்குது. படம் வெளிவந்து விட்டதா?

said...

வாங்க வெற்றி.

// படம் வெளிவந்து விட்டதா?//

சரியாப்போச்சு. எதோ நான் இன்னும் இந்தப் படத்தை ரிலீஸ் செய்யாம வச்சுருக்கேன்னு
தோணுதா? :-)))))

ஒரு வேளை எனக்கு மட்டும் தயாரிச்சதா? இருக்கச் சான்ஸ் இல்லியே(-:

ராசுக்குட்டிவேற பார்த்துருக்கார்!

said...

well done.keep going.(i dont know how to type in tamil.sorry.)

said...

சுதன்,

வாங்க வாங்க.

தமிழ் டைப் செய்ய சுலபமாப் படிச்சுக்கலாம். இப்போதைக்குத் தமிழ் படிக்க வருது இல்லையா?
அது போதும்.

அடிக்கடி வந்து போங்க.:-))))