Sunday, September 24, 2006

ஆண்டு நிறைவு(கள்)




இங்கே நம்ம ஊர்லே இருக்கற கடைகள், சூப்பர் மார்கெட் உள்பட எப்பப் பார்த்தாலும்' Birthday Sale'ன்னு போட்டுக்கிட்டு இருப்பாங்க. ஆன்னா ஊன்னா இவுங்களுக்கு 'பர்த் டே' வந்துருமே. 'உண்மையான சேல் தானா?'ன்னு பார்க்கணும்னு சொல்வேன்.


தராளப் பிரபுங்களைப்போல 99 செண்ட்ன்னு விலை போட்டு வச்சுருப்பாங்க. ஒரு செண்டு காசையெல்லாம் தூக்கியே பலவருஷமாச்சு. அஞ்சு செண்ட் தான் ஆரம்பம். இப்ப அதையும் தூக்கியாச்சு. தொலையட்டுமுன்னு பார்த்தா....... 'இங்கத்துக் காசெல்லாம் கனம் கூடி இருக்கு.பர்ஸ்லே வச்சாத் தூக்கிக்கிட்டுப் போகமுடியலை'ன்னு சமீபத்துலேதான் கண்டு பிடிச்சாங்க(ளாம்)


தூக்கு அதையும்னு சொல்லியாச்சு. அம்பது, இருவது, பத்து காசுகள் இதையெல்லாம் வேற ரூபத்துலே கனம் குறைச்சுப் பண்ணியாச்சு. பழைய காசுகள் அடுத்த மாசத்தோட அம்பேல். சீக்கிரம் அதையெல்லாம்செலவு பண்ணி (தொலைச்சு)ருங்கன்னு டிவியிலே வந்து தினம் சொல்லிக்கிட்டு இருக்காங்க.


என்ன சொல்லிக்கிட்டு இருந்தேன்?........ஆங்..... 99 செண்ட். மக்களுக்கும் தெரியும், கடைக்காரர்களுக்கும் தெரியும் எல்லாத்தையும் ஸ்விஸ் ரவுண்டப் செஞ்சுருவாங்கன்னு. இன்னும் எதுக்காக 1.94, 3.36 , 7.98ன்னு பிலிம் காட்டுறாங்க?


போதாக்குறைக்குப் பொன்னம்மான்னு இப்ப போஸ்ட் ஆபீஸுலே ஒரு தகராறு. உள்ளூர் மெயிலுக்கு 45 காசுஸ்டாம்ப். பத்து ஸ்டாம்ப் இருக்கற புக் வாங்கிட்டோமுன்னா வேலை முடிஞ்சது. வேணுங்கும்போது ஒண்ணொண்ணா எடுத்துக்கலாம். சரிப்பா, இப்ப ஒரே ஒரு லெட்டர் அனுப்பணுமுன்னா 45 காசு ஸ்டாம்பை எப்படி வாங்குறது? அதான் அஞ்சு காசு இப்ப புழக்கத்தில் இல்லையே? குறைஞ்சது ரெண்டு ஸ்டாம்பு வாங்கிக்கணும்.ஆனா எனக்கு ஒண்ணு போதும். அப்ப எப்படி?
50 காசு நான் கொடுக்கணுமா? அஞ்சு காசு நான் ஏன் கூடுதலாக் கொடுக்கணும்? நேர்த்திக்கடனா? இல்லே 45 காசு ஸ்டாம்புக்கு 40 காசு வாங்கிக்குவாங்களா? அஞ்சு காசு கம்மியா ஏன் வாங்கிக்கணும்? கணக்குலே உதைக்காதா?


தலையைப் பிச்சுக்கிட்டு இருக்கு அரசாங்கமும் தபால்துறையும்:-)


அவுங்க ஒரு முடிவுக்கு வரட்டும். அதுவரை 'பர்த் டே'யைப் பார்க்கலாம்.
வருசத்துக்கொரு தடவை எத்தனையோ விஷயம் வருது போகுது. வாலாயமா வர்றதுன்றதாலே அதை அப்படியேவிட்டுற முடியுதா? இந்தப் பதிவுலே போட்டுருக்கற படம்கூட இப்படி வருசாவருசம் வந்து போறதுதான். ஆனா ஒவ்வொரு வருசமும் ஒரு அழகு, ஒரு அனுபவம்,ஒரு வளர்ச்சி. இல்லீங்களா?


கடைகண்ணிகளுக்கு மட்டும்தான் பொறந்தநாள் வருமா? மனுஷாளுக்கு வராதா? மத்த ஜீவராசிகளுக்கு வராதா? இல்லே பதிவுகளுக்குத்தான் வராதா?
வருமுல்லே? அப்படி இன்னிக்கு (எனக்குத் தெரிஞ்சவரை)ஒரு பதிவுக்கு பிறந்தநாள் வந்துருக்கு. ரெண்டு வயசு முடிஞ்சுருக்கு. தட்டுத்தடுமாறி நடைபழகிக்கிட்டு இருக்கும் இதுக்கு உங்கள் வழக்கமான ஆதரவு எப்பவும் வேணும்.நிறைய நண்பர்களையும், தம்பி தங்கைகளையும், ஒரு அண்ணனையும் கூட இதுமூலமா சம்பாரிச்சு இருக்கேன்னா பாருங்களேன்.


அதெப்படி 'டாண்'னு இதெல்லாம் நினைவு இருக்கு?


ஏன் இல்லாம? இன்னிக்குத்தானே என் மாமியார் 50+ வருசங்களுக்கு முன்னே வெளியிட்ட ஒரு பதிவின் பிறந்தநாளும் வருது.

இந்தப் பதிவை என் இனிய மறுபாதிக்கு சமர்ப்பிகின்றேன்.


அனைவருக்கும் நன்றி கலந்த வணக்கங்கள்.

54 comments:

said...

பதிவு வாழ்த்துக்கள் உங்களுக்கு. பிறந்த நாள் வாழ்த்துக்கள் அவருக்கு. வடை பாயாசம் எங்களுக்கு. (ஆமா, இன்னும் சுண்டலே வந்த பாடைக் காணும்.) அவரு ஊரில் இருக்காரா இல்லை அஸ் யூஷுவல் தானா?

நல்ல சந்தோஷமா இருங்க!

said...

கொத்ஸ்,

நான் நினைச்ச மாதிரியே மொதல் வாழ்த்து உங்களோடது.

நன்றி.

//அவரு ஊரில் இருக்காரா இல்லை அஸ் யூஷுவல் தானா?//


ஆஸ் யூஷுவல்தான்.

//நல்ல சந்தோஷமா இருங்க! //

அதான் சந்தோஷத்துக்கு குறைச்சல் இல்லை:-)))))

said...

வாழ்த்துக்கள் அம்மணி (சகோதரி)
உங்கள் மாமியார் பதிந்த பதிவிற்கும், உஙளுடைய் இந்தப்பதிவிற்கும் சேர்த்துத்தான்!

said...

வணக்கம்


வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி வாத்தியார் ஐயா.

said...

வாழ்த்துக்கள்!

said...

நன்றி வெற்றி.

said...

கீழேந்து 3வது வரியை படிச்சு புரிந்துகொள்ள சில நிமிடங்கள் ஆனது.நான் கொஞ்சம் "டூப் லைட்"தான்.
வாழ்த எனக்கு வயது போறாது.
இருந்தாலும் ஆண்டவன் அருளால் நன்றாக இருக்க வேண்டுகிறேன்.

said...

வாங்க குமார்.

வருகைக்கு நன்றி.

//வாழ்த்த வயசு போறாது//

மேற்படி மக்களுக்காகவே "இங்கே ஆசிகள் வழங்கப்படும்"னு
ஒரு அறிவிப்பு வச்சுருக்கணும் இல்லெ? :-))))

said...

வாழ்த்துக்கள் உங்கள் மறுபகுதிக்கும் உங்களுக்கும்.

said...

நன்றி சிரில்.

said...

வணக்கங்கள். நீங்களும் உங்கள் மறுபாதியும் உட்லேண்ட்ஸ் வலைப்பதிவர் சந்திப்புக்கு வந்திருந்ததைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்தார்கள். இன்னும் பல்லாண்டுகள் பல் வளமும் பெற்று வாழ இறைவனை வேண்டுகிறேன்.

அன்புடன்,

மா சிவகுமார்

said...

எல்லா வளமும்பெற வாழ்த்துக்கள்
லியோ சுரேஷ்
துபாய்

said...

அக்காவை விட்டுட்டீங்க பத்தியா:-(((((((
அண்ணாத்தைக்கு வாழ்த்துக்கள்.
நுஸில கேக் வெட்டிக் கொண்டாடினாங்களாமே.
படமெலாம் வந்து இருக்கு.:-00))
உங்க மாமியாருக்கும் வாழ்த்துக்கள்.

said...

வாங்க சிவகுமார் & லியோ ( சிங்க) சுரேஷ்

வாழ்த்துக்களுக்கும் வருகைக்கும் நன்றிங்க.

வல்லி,

'அண்ணாத்தை'தான் ச்சீனாவுக்கு வுட்டுட்டாரே சவாரி.
அப்புறம் என்னத்தை கேக்கு? எல்லாம் நூடில்ஸ் வெட்டிக்
கொண்டாடட்டுமுன்னு வுட்டாச்சுப்பா:-)

said...

துளசியக்கா,

போடியின் பெருமையை உலகெங்கும் பரப்பும் திரு. கோபால்ஜிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் இந்த போடிக்காரனிடமிருந்து.

தங்கள் வலைப்பூ மேலும் நல்ல பதிவுப் பூக்களைத் தர வாழுத்துக்கள்.

வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் ஆசிர்வதிக்கவும்.

அன்புடன்,

ஹரிஹரன்

said...

இந்த 5, 10 பைசா பிரச்சனை எல்லா இடத்திலும் உண்டுக்கா.
95.60 வந்தால் 96.00 எடுத்துப்பாங்க, ஒரு எக்ஸ்க்யூஸ் கூட கேக்கமாட்டாங்க எதோ அதான் பில் போல.

அப்புறம் வாழ்த்துக்கள் அக்கா.

said...

பதிவுலகப் பதிவுக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

நிறையப் புதுப் பதிவுகளை எதிர்பார்க்கும்
...
மற்றவர்கள்:-))

said...

ஹரிஹரன்,

//போடியின் பெருமையை உலகெங்கும்.......//

ரொம்ப உணர்ச்சி வசப்பட்டுட்டீங்களா?:-))))))

வாழ்த்துகளுக்கு நன்றி. நல்லவேளை இன்னும் ஆசிகள் ஸ்டாக் இருக்கு.
அதுலே இருந்து உங்களுக்குக் கொஞ்சம் அனுப்பிவைத்துள்ளேன்:-)))

said...

மனசு,

அதான் நானும் நினைக்கிறேன். அஞ்சு, பத்தை ஒழிக்கட்டும் வேணாங்கலை.
ஆனா கடைகளில் 5, 10, 9 ன்னு விலைகள் போட்டு இருக்கறதையும் ஒழிக்கணுமா இல்லையா?

வாழ்த்துகளுக்கு நன்றிங்க.

said...

வல்லி,

இந்த 'மற்றவர்கள்' யாரோ? :-))))

பூடகமாப் பேசினா எப்படிப்பா?

said...

//நிறைய நண்பர்களையும், தம்பி தங்கைகளையும், ஒரு அண்ணனையும் கூட இதுமூலமா சம்பாரிச்சு இருக்கேன்னா பாருங்களேன்.//

இதை படிக்கவே சந்தோஷமா இருக்குங்க!

தம்பியின் வாழ்த்துக்கள்!

said...

வாங்க தம்பி.

வாழ்த்துக்கு நன்றி.

நான் சொன்னது நிஜமான உண்மைங்க. எனக்கே இப்ப எவ்வளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா?

said...

துளசி, உங்கள் எழுத்தின் வடிவம் மிக நன்றாக மெருகேறி வருகிறது. "மாமியாரின் பதிவு" என்ன குறும்பு :-)
இரண்டு பேரூக்கும் வாழ்த்துக்கள்

said...

அக்காவின் ஆணைப்படி மனைவிக்கு பயப்படாதோர் சங்கத்தின் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டிருக்கும் மாண்புமிகு.கோபால் அவர்கள் இன்றுபோல் என்றும் வாழ 24 ஆவது வட்ட ம ப ச வின் சார்பில் வாழ்த்த வயதின்றி வணங்கும்..

புரட்சிப் பினாத்தல்.

said...

வாங்க உஷா.

நிஜமாவெ மெருகு ஏறுதா? நீங்க சொன்னாச் சரியாத்தான் இருக்கும்.

நன்றி உஷா, கண்டுக்கிட்டதுக்கு.

said...

என்ன பினாத்தலாரே,

பயங்கர புரட்சி வெடிக்கப்போதோ?

அங்கெ நிலமை எப்படி இருக்கு?

வீட்டுலெ சொல்லிக்கிட்டீங்களா? :-))))

said...

HAPPY BIRTHDAY TO GOPAAL!
WISHING YOU MANY MANY HAPPY RETURNS
OF THE DAY

என்னங்க துளசி வழக்கப்படி foreign க்கு ஜ்ஜூட் ஆயிட்டாரா?

said...

"நண்பர்கள்,தம்பி,தங்கை அண்ணாச்சி,......"

அக்காக்களை வுட்டுட்டீங்களெ...ஏன்?
யாருமே இல்லையா?
அல்லது சொன்னா சப்பாத்திக்கட்டை
பறந்து வரும்னு பயமா

said...

Wishing a great day!

said...

வாழ்த்த வ‌யது தேவையில்லை, ம‌னது ம‌ட்டும் போதும் என்று நினைக்கிற‌வன் நான். எனவே இர‌ண்டு ப‌திப்புக‌ளுக்கும் ம‌ன‌மார்ந்த வாழ்த்துக்கள்.

இருந்தாலும் இப்படி ஏமாத்தி இருக்கக் கூடாது.மாமாவின் பிற‌ந்த நாளுக்காவது அவ‌ரோட ப‌ட‌த்த போடுவீங்க‌ன்னு நினைச்சேன்.

சரி நாங்க வாழ்த்த‌றது இருக்க‌ட்டும், இந்த பிற‌ந்த நாளுக்கு நீங்க‌ என்ன ப‌ரிசு வாங்கிக் கொடுத்தீங்க‌.

(//கீழேந்து 3வது வரியை படிச்சு புரிந்துகொள்ள சில நிமிடங்கள் ஆனது.நான் கொஞ்சம் "டூப் லைட்"தான்.//
இங்கேயும் அப்படித்தான்.
உங்க student எல்லாரும் brillientன்னு நினைச்சி பதிவப் போடாதீங்க, எங்களப் போல ஆளுங்களும் இருக்காங்க.உள்குத்து(?) இல்லாம இருந்தாதன் உடனே புரிஞ்சிப்போம்)

said...

வாங்க சிஜி.

வாழ்த்துகளுக்கு நன்றிங்க. எல்லாம் உங்க ஆசீர்வாதம்.

ஆமாங்க.ஜ்ஜூட்தான்.

பயந்தாங்கொள்ளீ(யோ)? பர்த்டே கிஃப்ட் வாங்கி தர்றதுக்கு பயந்துக்கிட்டு.....


வலையிலே என்னத்தவிர அதிகாரபூர்வமான 'அக்கா' வேற யார் இருக்காங்க?
'நாந்தான் ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு'ன்னுஇருக்கற அக்கா.
அக்காவுக்கெ அல்வா கொடுக்கற வேலை வேணாம்.
சொல்லிப்புட்டேன்...ஆமா....:-)))

said...

சதயம்,

வாங்க வாங்க.

வாழ்த்துகளுக்கு நன்றிங்க.

said...

ஆராதனா,

தேங்க்ஸ்ப்பா.

said...

மதி,

என்ன? இதுவரை மாமா படத்தைப் பார்க்கலையா? மெய்யாலுமா?

பேசாம அடுத்த வருஷம் போஸ்ட்டர் அடிச்சு வலைஉலகம் பூரா ஒட்டிறணும்:-)))

//வாழ்த்த வ‌யது தேவையில்லை, ம‌னது ம‌ட்டும் போதும் என்று நினைக்கிற‌வன் நான்...//

அது. அது. அங்கெதான் நீங்க 'நிக்கறீங்க'

வாழ்த்துகளுக்கு நன்றி மதி,

said...

குறையில்லாமல், அரோக்கியமாக வாழ மனதார பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்...

துளசி,, அவர் 23 ஆ 24 ஆ,, ஏன்னா நான் 23...இன்னைக்கு மட்டும் 23 ல் பிறந்தவங்க 2 பேர கேள்வி பட்டுடேன்

நீங்க 'S'சொன்னா '3'

அண்ணன் இருந்தும் நாத்தனாரா இருக்கும் பாக்கியம் கிடைக்கலை.. அது பெரிய குறையாகவே இருக்கு..ஹிஹ்ஹி..
அதானால எல்லாரும் உங்கள அக்கானு கூப்பிடறாங்க,, ஒரு change க்கு.. நான் நாத்தனார் ஆயிடரனே. நாத்தனாரா இருந்தா எப்படித்தான் இருக்கும்னு பாத்திரலாமே..எத்தன நாளைக்கு தான் நாம அண்ணியாகவே இருக்கிறது

என்ன சொல்றீங்க...:-))

anyways...again.. அண்ணா குறையில்லாமல், அரோக்கியமாக வாழ மனதார பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்...

மங்கை

said...

மங்கை,


வாழ்த்துகளுக்கு நன்றி.

இவர் 24தான். நாங்க டேட்லைன்லெ இருக்கறதாலெ எல்லாமே ஊருலகத்துக்கு முந்திதான்:-))))

அண்ணின்னு கூப்புட்டா பிரச்சனை ஒண்ணும் இல்லை. ஆனா நம்ம வீட்டுலே 'நாத்தனார்'க்குன்னே சில
சம்பிரதாயங்கள் எல்லாம் இருக்கு. பரவாயில்லையா? :-))))

ஐட்டம் லிஸ்ட் எல்லாம் கொஞ்சம் பெருசு.

சொல்றதைச் சொல்லிட்டேன். அப்புறம் உங்க இஷ்டம்:-))))

பி.கு: நேத்து ரெண்டுவகை சக்கரைப் பொங்கல் சாப்பிட்டேன். என்னவோ தெரியலை
உங்க ஞாபகம் வந்துச்சு.

said...

டீச்சர்

கோபால் சாருக்கு என் கிள்ளை ஷ்ரவண் சார்பாக, இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் (இன்னும் இங்கே Sep 24 தான், so no belated :-)

உங்கள் "துளசி தளம்" இன்னும் பல சிறப்புகள் பெற அந்த துளசி மார்பனை வேண்டிக் கொள்கிறேன்!

சரி நவராத்திரி சுண்டலுடன் கேக் (அதுவும் 2) கொடுத்தால் வேணாமுன்னு சொல்லுவோமா? :-)

//இன்னும் எதுக்காக 1.94, 3.36 , 7.98ன்னு பிலிம் காட்டுறாங்க?//

ஹா ஹா. டீச்சர் அதை விடக் கொடுமை இங்கே 14-1/2 street 15-1/2 street எல்லாம் இருக்கு! நம்மூருல முகவரி கொடுத்தா ஒரு மாதிரியா பாக்குறாங்க!

said...

அம்மா வழ்த்துக்கள்,

இதுவும் மறக்க முடியாத நாள் தான், இன்று (25 செப்). என்னுடைய அண்ணனின் பிறந்த நாள்.

சிவமுருகன்

said...

வாங்க சிவமுருகன்.

வாழ்த்துகளுக்கு நன்றி.

மதுரை எப்படி இருக்கு? உங்க உடம்புக்கு ஒண்ணும் இல்லையே?
நல்லா இருக்கீங்களா? ( பயந்துறாதீங்க. காலைக் காணொமேன்னு உளறிட்டேன்)

அண்ணனுக்கு எங்கள் வாழ்த்துகளைச் சொல்லுங்க.

said...

அக்கா, ஆண்டு நிறைவுக்கு வாழ்த்துக்கள்..

ரெண்டு வருஷம் தான் ஆச்சா?! நீங்க ரொம்ம்ம்ம்ம்ப நாளா எழுதுறீங்கன்னு நினைச்சிகிட்டிருந்தேனே!

கோபால் சாருக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள் :)

said...

பொன்ஸ்,

வாங்கம்மா வாங்க.

ரொம்பநாள் ஆனமாதிரி இருக்கா? மொத்தம் ரெண்டரை வருசம்தான். முதல் ஆறுமாசம்
மரத்தடியில் குப்பை கொ(கூ)ட்டிக்கிட்டு இருந்தேன். அப்புரண்ட்டீஸ்:-))))))

ப்ளேடு கூடிப்போய் யுகமாத் தெரியுதோ? (-:

வாழ்த்துகளுக்கு நன்றிகள்

said...

வாழ்த்துக்கள் உங்கள் மறுபகுதிக்கும் உங்களுக்கும்.

said...

KRS,

//கிள்ளை ஷ்ரவண் சார்பாக...//

???????

டீச்சரையே மடக்குனா எப்படி?

//துளசி மார்பனை ...//

கூடவே இருக்கா(ர்)ன் கோபாலன்:-)))))

//ஹா ஹா. டீச்சர் அதை விடக் கொடுமை இங்கே 14-1/2 street 15-1/2 street
எல்லாம் இருக்கு! நம்மூருல முகவரி கொடுத்தா ஒரு மாதிரியா பாக்குறாங்க//

எல்லாம் 'வெற்றிக்கொடி கட்டு' பார்த்த விவரமான ஆளுங்க போல:-))))

said...

அடடடா..

ரெண்டு வயசு முடிஞ்சுருக்கு. தட்டுத்தடுமாறி நடைபழகிக்கிட்டு இருக்கும் இதுக்கு உங்கள் வழக்கமான ஆதரவு எப்பவும் வேணும்//

சாரோட பிறந்தநாள் அன்னைக்கித்தான் நீங்களும் ஒங்க பதிவ ஆரம்பிச்சீங்களா?

சரி.. இந்தாங்க ரெண்டு பேருக்குமே ஆதரவு..

அதாவது எழுதுற உங்களுக்கும் ஒங்கள நிம்மதியா எழுத விட்ட உங்களவருக்கும்..

said...

வாங்க இளா.

நன்றி(கள்)

said...

டிபிஆர்ஜோ,,

வாங்க. 'நீங்களும்' இந்த உம் ?????

// எழுதுற உங்களுக்கும் ஒங்கள நிம்மதியா எழுத விட்ட உங்களவருக்கும்//

இதைப் பத்திதான் ஒரு நாள் சொல்லிக்கிட்டு இருந்தார்.

'வலைபதிவர்களுக்கு அவர்களது துணை உதவியா இல்லை உபத்திரவமா?' ன்னு
கேட்டு ஒரு பட்டிமன்றம் போடேன்னு.

அப்ப நடத்திறணும் போல இருக்கு. வேளை......... வந்துருச்சு:-)

வாழ்த்துகளுக்கு நன்றிங்க.

said...

இரண்டாவது வருடத்தில் காலடி வைக்கும் துளசிதளத்திற்கும் 50+ எட்டியிருக்கும் துளசிமணவாளனுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் !!
நூறாண்டு காலம் வாழ்க! நோய்நொடியில்லாமல் வாழ்க!!
உங்கள் பதிவும் தமிழ் போல் தழைக்க!

said...

வாங்க மணியன்.

வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.
உங்களுக்கு அப்ஜெக்ஷன் இல்லைன்னா
//இரண்டாவது வருடத்தில்//
இதை "மூன்றாவது வருடத்தில்'ன்னு வச்சுக்கவா?-))))

said...

Oops :(

said...

//ஐட்டம் லிஸ்ட் எல்லாம் கொஞ்சம் பெருசு//

பாத்தீங்களா.. இதுக்கு பயந்துதான் நான் முந்தி நாத்தனார் ஆலாம்னு பார்த்தேன்...ஹ்ம்ம்ம் பரவாயில்லை.. நாங்க இதுக்கு எல்லாம் அசரமாட்டோம்...அனுப்புங்க..

//பி.கு: நேத்து ரெண்டுவகை சக்கரைப் பொங்கல் சாப்பிட்டேன். என்னவோ தெரியலை
உங்க ஞாபகம் வந்துச்சு//

இருக்காதா பின்ன.. என்ன இருந்தாலும் ஒரு ஊர்காரங்க இல்ல.. நான் கோவை.. போடியும் கோவையும் பக்கம் தானே... போடியிலும் இருக்காங்க நம்ம சொந்தக்காரங்க..

ஞாபகம் வந்ததுக்கு ரொம்பபபபப thankssss

மங்கை

said...

"MANY MORE RETURNS OF THE DAY" 'HAPPY BIRTHDAY THULASITHALAM'.
ஹாப்பி பர்த் டே பாட்டெல்லாம் பாடி இருகேன். ஒரு சாக்லேட் குட்ங்க டீச்சர்.
//கடைகண்ணிகளுக்கு மட்டும்தான் பொறந்தநாள் வருமா? மனுஷாளுக்கு வராதா? மத்த ஜீவராசிகளுக்கு வராதா? ...... //
அவங்க மேல எதுக்கு இவ்வளவு கோபம்?.
ஒரு டவுட்டும் கூட இருக்கு டீச்சர் (நான் கொஞ்சம் டூப் லைட்!) செய்தியோடை-ன்னு கேட்டா என்ன கொடுக்கனும் டீச்சர். 2நாளா மண்டையை உடச்சிக்கறேன்..........இங்க வந்தால் ரத்தம் வந்ததை காட்றேன்..........

said...

மணியன்,

அது பரவாயில்லை :-))))


மங்கை,

அநேகமா இன்னிக்கும் சக்கரைப் பொங்கலிருக்கும்.

நினைச்சுக்கவா? :-)

said...

மிக்கிமவுஸ்,

சரித்திர டீச்சர் கிட்டே கேட்டா எப்படி?

கம்ப்யூட்டர் டீச்சர் கிட்டே இல்லெ கேக்கணும்?

( அப்பாடா.... தப்பிச்சுட்டேன். பொழுதண்ணிக்கும் நான் க.கை.நா.ன்னு சொல்லிக்கிட்டே
இருக்க முடியுமா?)

அந்த செய்தி ஓடைன்றது RSS Feed ன்னு இருக்கெ அதுவா இருக்குமோ? (-:

ஏம்ப்பா, வகுப்புலே இருக்கற கம்ப்யூட்டர் மாணவத் திலகங்கள் பதில் சொல்லக்கூடாதா?

மொதல்லெ மண்டைக்கு ஒரு கட்டுப் போடுங்க.

said...

எலிவால்ராஜா,

ச்சும்மா மசால்வடை கேட்டா எப்படி? இப்படி உக்காந்து ஒரு பாட்டுப் பாடுங்கோ.
நவராத்ரி சீஸன்வேற இருக்கே.

கொஞ்சம் வாலை அந்தப் பக்கமா வச்சுக்குங்கோ. யாராவது காலுன்னு நினைச்சு
வாலை மிதிச்சுடப் போறாங்க.

எனக்கும் மசால்வடைன்னா உயிர்.

இங்கே இருக்கு உங்களுக்காக.