Friday, October 06, 2006

ரெடிமேட் பகுதி 16


நம்ம வீட்டுக்குப் பக்கத்துலே ஒரு நீச்சல்குளம் இருக்கு. அங்கெ ச்சின்னப்பிள்ளைகளுக்கு நீச்சல் சொல்லித்தராங்கன்னு கேள்விப்பட்டு அங்கே வகுப்புலே சேர்த்தோம். வாரம் மூணு நாள். 30 நிமிஷ வகுப்பு. நாலுமாசம்இருக்கே. எதாவது செஞ்சு நாளைப் போக்கணுமா இல்லியா?


அங்கே பிள்ளைகளுக்குன்னே ஆழம் குறைஞ்ச ச்சின்ன குளம் இருக்கு. தண்ணியும் சுடுதண்ணி. சொல்லித்தர்றவர் பேர் ஜாஃப்ரி. ஆன்னா ஊன்னா 'ஸ்டேண்ட் ஸ்டில்'ன்னு கத்திக்கிட்டு இருப்பார். எட்டு பிள்ளைங்க அந்த வகுப்புலே.ஒரு புள்ளைக்குச் சொல்லித் தர்றப்ப மத்தபிள்ளைங்க கரையைப் பிடிச்சுக்கிட்டு 'ஸ்டேண்ட் ஸ்டில்'. மூணு நிமிஷம்தான்வரும் ஒவ்வொரு பிள்ளைக்கும். அடப்பாவி. இதுக்கா இவ்வளொ காசு?


நீச்சல் உடுப்பு சீக்கிரம் பாழாயிரும். தண்ணியிலே குளோரின், இன்னும் மத்த கெமிக்கல்ஸ் இருக்குல்லே. ஆறுவாரத்துமேலே தாங்காது. குழந்தை சைஸ்ன்றதாலே விலை மலிவாம். 25 டாலர். தலைக்குத் தொப்பி, கண்ணுக்குக் கண்ணாடின்னுஅது இன்னொரு செலவு. எல்லாத்துக்கும் கணக்குப் பார்க்க முடியுமா? கிண்டர்கார்டன் ஸ்கூலுக்குப் போனப்பதினம் டாக்ஸி, பொம்மை, தீனின்னு முப்பது நாப்பது டாலர் செலவாச்சுல்லையா? அதுக்கு இது எவ்வளவோ மேல்.


செப்டம்பர் முதல் வாரம் வருது மகளொட பிறந்த நாள். எந்த ஏரியா பள்ளின்னு தேர்ந்தெடுத்து அங்கே பதிவு செஞ்சுக்கிட்டோம். ஒவ்வொரு பள்ளிக்கூடத்துக்கும் ஏரியா எல்லை இருக்கு. அதுக்குள்ளெ நாம் வசிக்கணும். இந்த விவரமெல்லாம் இவர்கூட வேலை செய்யறவங்ககிட்டே இருந்து தெரிஞ்சுக்கிட்டு, மொதல்லே பள்ளிக்கூடத்தைத் தெரிவு செஞ்சோம். ரேஸியல் ஏற்றத்தாழ்வு இல்லாத ஏரியா நமக்கு முக்கியம். என்னதான் சொன்னாலும் நாம்வேறு இன மக்கள்தானே. நமக்கு எப்படி மத்த இனத்தைப் பார்த்தா உள்ளே பயமோ அதே பயம் அவுங்களுக்கும் நம்மைப் பார்த்தா இருக்கும்தானே? இப்பன்னா நிறைய மத்த இனங்கள் இங்கே வந்துட்டாங்க. நான் சொல்லிக்கிட்டுவர்றது 19 வருசத்துக்கு முந்தி. தமிழ்நாட்டுலெ இருந்து வந்த முதல் குடும்பம் நம்மதுதான்னா பாருங்க.


இங்கே யூனிவர்சிட்டிக்கு எப்பவும் மத்த நாடுகளிலே இருந்து படிக்கறதுக்கு மாணவர்களும், விசிட்டிங் ப்ரொபஸர்களும் வந்துக்கிட்டும் போய்க்கிட்டும் இருக்கறதாலெ, அந்த ஏரியாவுலெ இருக்கற பள்ளிக்கூடத்துலேதான் அவுங்க பிள்ளைகளும் ஆறுமாசம், மூணுமாசம்னு வரப் போக இருக்காங்க. அங்கே படிக்கிற மத்த குழந்தைகளுக்கும் வேற்றுநாட்டு பிள்ளைகளைப் பார்க்கறது பழகிப்போன விஷயம். அதாலேதான் இந்தப் பள்ளிக்கூடத்தைத் தேர்ந்தெடுத்தோம். வீடு மாத்திக்கணுமுன்னு முடிவு செஞ்சப்ப, பள்ளிக்கூடத்துலே இருந்து ஒரு அஞ்சு நிமிஷ நடையிலே ஒரு வீடு விலைக்கு வந்துச்சு. அதையே வாங்கிட்டோம். வீடு மெயின் ரோடுலே இருக்கு. ஆஹான்னு மகிழ்ந்து போயிட்டேன். நம்மூர்லே மெயின் ரோடுலெ வீடுன்னாமதிப்பு நிறையவாச்சே.வடக்குப் பார்த்த வீடுவேற. இன்னும் சந்தோஷமாயிருச்சு. பூ மத்தியரேகைக்கு கீழே தெக்கே இருக்கற இடங்களுக்கு சாஸ்த்திர சம்பிரதாயங்கள் 'உல்ட்டா'வா இருக்குமோ? நம்மூரில் 'தெற்கே இருந்துவரும் தென்றல்' இங்கே அப்படியே 'வாடை'யாயிருது!


மகள் பிறந்தநாள் பள்ளிக்கூட 'செகண்ட் டெர்ம் ஹாலிடேஸ்'லே வருது. அதனாலே பள்ளிக்கூடம், லீவுக்கு மூடறதுக்கு ஒரு வாரம் இருக்கறப்பயே கொண்டு வந்து சேர்த்துருங்கன்னு சொல்லிட்டாங்க. நாங்களும் ஆகஸ்ட் முதல்வாரம் வீடு மாறி வந்துட்டோம். அப்பத்தான் இவரோட கம்பெனியில் கூட வேலை செய்யறவங்க சொல்றாங்க,'என்னத்துக்கு மெயின் ரோடுலே வீடு வாங்கினே? இங்கே மெயின் ரோடு வீட்டுக்கு மதிப்பு இல்லை. வீட்டை, திரும்ப விக்கும்போது கஷ்டம்'னு.


அடக் கடவுளே. இதையெல்லாம் அப்ப நமக்கு விளக்கமாச் சொல்லக்கூட யாரும் இல்லாமப் போயிட்டாங்களே(-:


இப்போ என்ன செய்யறது? ச்சின்னப் பொருளா, வேணாமுன்னா தூக்கி வீச?


அதுக்கப்புறம் எனக்கு நிறைய நண்பர்கள் கிடைச்சாங்க. அவுங்களும் 'ஏன் மெயின் ரோடுலே வீடு வாங்கிட்டே? கார் பஸ் போற சத்தம் தொல்லை இல்லையா?'னு கேப்பாங்க. நானும் ' எங்க ஊர்லே நிறைய சத்தத்துக்குப் பழகி இருக்கோம். வீட்டிலே இருந்து பார்த்தா எப்பவும் கார் நடமாட்டம்(???) தெரியறது எனக்குப் பிடிச்சிருக்கு'ன்னு சொல்வேன். எங்க இவர்வேற அடிக்கடி வெளிநாட்டுக்குப் போயிருவார். தனியா பிள்ளையோட இருக்கறப்ப, வேறமனுஷங்களையும் பார்க்க முடியாமப் போயிட்டா எனக்கு பயம் வந்துரும். வீட்டுக்குப் பக்கத்துலே ஒரு 500 மீட்டர் தூரத்துலெ ஒரு சூப்பர் மார்கெட்டும், ஷாப்பிங் செண்ட்டரும் இருக்கு. நல்ல வசதியான ஏரியா. போதாக்குறைக்குப் பொன்னம்மான்னு நம்ம வீட்டுக் காம்பவுண்டு சுவரை ஒட்டி பஸ் ஸ்டாப்.


தெருவுக்கும் வீட்டுக்கும் 35 அடி இடைவெளி இருக்கு. வீட்டுக்குள்ளெ வந்துட்டோமுன்னா உண்மைக்கும் ஒரு சத்தமும் கேக்காது. கண்ணாடிவழியாப் பார்க்கும்போது போக்குவரத்து மட்டும் ஓசைப்படாம போகும். தெருவைப் பார்த்தபடி இருக்கற ஒரு சன் ரூமிலே மெஷினைப் போட்டாச்சு. வெய்யில் உறைக்கலேன்னாலும்,சூரிய வெளிச்சம் மூணு பக்கத்துலேயும் வரும்.


செப்டம்பர் வந்துருச்சுன்னா குளிர்காலம் ( இவுங்களுக்கு)முடிஞ்சு போச்சாம். ஸ்ப்ரிங் வந்துருச்சாம் துள்ளிக்கிட்டு! அதுனாலே சம்மர் யூனிஃபாரம் போடணுமாம். அதுக்கு என்ன மாதிரி இருக்கணுமுன்னு பள்ளிக்கூடத்துலேயே கேட்டு, அவுங்ககிட்டேயே துணியோட பேட்டர்ன் பேப்பர் கட்டிங் வாங்கிவந்தேன். அதைப் படிச்சா தலையும் புரியலை,வாலும்( காலும்) புரியலை. ட்ரெஸ் மேக்கிங் டெர்ம்ஸ் 'செல்வேஜ் அது இதுன்னு என்னென்னமோ இருக்கு. யாரு கண்டா அதெல்லாம்? என்ன துணின்னு மட்டும் பார்த்துக்கிட்டு கடையிலே துணி வாங்கிவந்து எனக்குத் 'தெரிஞ்சமாதிரி' தச்சுட்டேன். உண்மைக்கும் சொன்னா நம்ம தச்சதுதான் தாராளமா குழந்தை ஓடி ஆடி விளையாட நல்லா இருக்கு.அவுங்க கொடுத்த பேட்டர்ன் தச்சா மாடு விரட்டுனா ஓட முடியாது. இங்கே மாடு தெருவிலே மேயாதுன்றது வேற கதை.


ஒரு நாள் வேற எதோ வேலையா ஒரு ஷாப்பிங் செண்டருக்குப் போனப்ப அகஸ்மாத்தா ஒரு விஷயம் கண்ணுலே பட்டது. தைய்யல் வகுப்புகள் நடத்தறாங்களாம். உள்ளேபோய் என்ன ஏதுன்னு விசாரிச்சேன். அதிர்ஷடம் நம்ம பக்கத்துலே நிக்குது. நீச்சல் உடை, மாலைநேர உடுப்பு, உள்ளாடைகள், காஷுவல் ட்ரெஸ்ன்னு பலவிதம். ஒவ்வொண்ணுக்கும் ஒரு தனி வகுப்பு.பகலிலே வகுப்புக்குப் போக நேரம் இல்லைன்னாலும் பரவாயில்லை. மாலைநேர வகுப்பு அங்கெ இருக்கு.


மொத்தம் நாலே மணி நேரம்தான். ரெண்டேரெண்டு நாள். சாயந்திரம் ஏழரை முதல் ஒம்போதரை வரை. 'நீச்சல் உடை' மாலை நேர வகுப்புக்கு வரேன்னு சொன்னேன். அட! என் வாழ்க்கையிலேயே நான் செஞ்ச ஒரு நல்ல காரியம். மகளோட நீச்சல் வகுப்பு தொடர்ந்துக்கிட்டு இருந்துச்சு.


பள்ளிக்கூடத்துக்குப் போகும் நாளும் வந்துச்சு. அங்கேபோய் ப்ரின்ஸியைப் பார்த்துப் பேசினோம். இன்னும்ஒரு டெர்ம்தான் வருஷமுடிவுக்கு இருக்கறதாலே 'நியூ எண்ட்ரெண்ட்ஸ்' னு ஒரு வகுப்புலே மகளைப் போடுவாங்களாம். புதுவருசம் பிறந்து பள்ளிக்கூடம் திறந்த பிறகு 'ஜே ஒன்' ஜூனியர் வகுப்புக்கு மாத்துவாங்களாம். அவுங்களே எங்களை வகுப்பறைக்குக் கூட்டிக்கிட்டுப் போனாங்க. அஸிஸ்டண்ட் ப்ரின்ஸிதான் அந்த வகுப்புக்குடீச்சர். அவுங்களைப் பரிச்சயப்படுத்தினாங்க. இதுவரை அந்த வகுப்புலே 23 பிள்ளைங்க இருக்காங்க. மகள் 24வது.பேசி முடிச்சுட்டு, மகளை வகுப்புக்குள்ளே கொண்டு போனாங்க. நானும் கூடவே போனேன். அங்கே இருந்த மத்தபிள்ளைகளிலே ஒரு முகம் எனக்கு ரொம்பப் பழகின முகம்.
யார் தெரியுமா?


சாக்ஷாத் நம்ம ஜோஷுவாதான்.


படம்: முதல் நாள் பள்ளி.

22 comments:

said...

உள்ளேன் டீச்சர்.

said...

//சாக்ஷாத் நம்ம ஜோஷுவாதான்//

அடப்பாவி மக்கா. அவனா? :-)))
ச்சே என்ன இருந்தாலும் அவனும் ஒரு குழந்தை தானே! அப்பறம் என்ன ஆச்சி டீச்சர்?

//பூ மத்தியரேகைக்கு கீழே தெக்கே இருக்கற இடங்களுக்கு சாஸ்த்திர சம்பிரதாயங்கள் 'உல்ட்டா'வா இருக்குமோ? நம்மூரில் 'தெற்கே இருந்துவரும் தென்றல்' இங்கே அப்படியே 'வாடை'யாயிருது!//

இது இங்கேயும் உண்டு டீச்சர், அதனால் தான் confused desi என்கிறார்கள்!

//தெருவைப் பார்த்தபடி இருக்கற ஒரு சன் ரூமிலே மெஷினைப் போட்டாச்சு.//

ரோடு சத்தத்தை விடத் தையல் மிஷின் சத்தம் ஜாஸ்தின்னு அக்கம் பக்கப் பாட்டி ஏதாச்ச்சும் கம்ப்ளெயிண்டு கிம்ப்ளெயிண்டு பண்ணாம இருந்தா சரி! :-)))

said...

வாங்க கொத்ஸ்.

உக்காருங்க. எதுக்கு நிக்கறீங்க? :-)))
ப்ரெசெண்ட் போட்டாச்சு.

said...

KRS,

//இது இங்கேயும் உண்டு டீச்சர், அதனால் தான்
confused desi என்கிறார்கள்//

:-))))) ஆமாம். அங்கே எல்லாமெ இந்தியா உள்பட 'நார்தர்ன் ஹெமிஸ்பயர்'தானே ?
அப்புறம் என்ன கன்ப்யூஷன்?

அப்ப எனக்கு நோ அக்கம்பக்கம் பாட்டீஸ்:-)))

வீட்டுக்கு ரெண்டு பக்கமும் வேற மாதிரி அமைஞ்சது. ஒரு பக்கம் பிஸியோ தெரபி க்ளீனிக்.
சாயந்திரம் மூடிருவாங்க. இன்னொரு பக்கம் யாரோ யூனி மாணவர்கள். வெவ்வெற ஆட்கள்
வர்றதும் போறதுமா இருக்கும். ஒரே ஒரு சமயம்தான் பியோனான்னு ஒரு லேடி இருந்தாங்க.
அவுங்களும் அவுங்க 13 பூனைகளும்.
17 வருஷம் நெய்பர்ஸ் இல்லாம இருந்துட்டேன். நோ தொந்திரவு & பிடுங்கல்ஸ்:-)))

said...

"தென்றலே வாராயோ"வை விட்டுட்டு
"வாடைக்காற்றம்மா" னு ஆரம்பிச்சுட்டீங்களா?

said...

19 வருஷத்துக்கு முன்பு "முதல் ஆளாக (குடும்பமாக)" போன கொஞ்ச நாள் திரில்லாக இருந்த்திருக்குமே!!
எனக்கென்னவோ!! நம்மளை சுத்தி நாலு சுவர் கட்டும் போதே பிரச்சனைகள் வர ஆரம்பித்துவிடுகிறது மாதிரி தெரிகிறது.அதற்காக வெளியிலா நிற்கமுடியும்? அதுவும் உங்க மாதிரி ஊர்களில்.:-))
மொத்தமாக சொன்னா, பிரச்சனைகளுடன் கூடிய சொகுசான வாழ்கை வாழ கத்துக்கனும்.
அப்படித்தானே??
வீட்டுக்கான வலைபதிவு இன்னும் பாக்கி இருக்கு தானே?

said...

சிஜி,

இங்கே தெற்குக் காத்து தான் வாடை. அண்ட்டார்டிக்லே இருந்துவருது(-:

வடக்கே....... தென்றல்.............ஜாலியோ ஜாலி.

//வாடைக்காற்றம்மா// பாட்டு.. ஊஹூம்....சரிவராது

said...

வாங்க குமார்.

த்ரில்லுக்கு என்ன பஞ்சம் அப்பெல்லாம்? ஒரு கடையில் கத்தரிக்காயைப்
பார்த்துட்டு ஆடுன ஆனந்த நடனம்..............?
அல்ப சந்தோஷி!

எந்தப் பிரச்சனையுமே நடக்கற நிமிஷம்தான் பூதாகரமா இருக்கும்.
இப்ப திரும்பிப்பார்த்தா சிரிப்புதான் வருது.

மனுஷன் எப்பவும் இடத்துக்கேத்தமாதிரி வாழக் கத்துப்பான்.
இது மனுஷனுக்கு மட்டுமில்லை. எல்லா உயிருக்கும் பொருந்தும்.

சிங்கம் புலியே இப்ப மனுஷன் கையை எதிர்பார்த்து நிக்குது உயிரியல் பூங்காவுலெ.

இதை வச்சும் ஒரு பதிவு எழுதணும்.

'வீடு'ம் ரெடியாத்தான் இருக்கு.
ஏற்கெனவே ஆரம்பிச்சதை முடிச்சுட்டு இதைப் பார்க்கலாமுன்னு இருக்கேன்.
ஒரே சமயம் 'டூ மெனி'யாகிப்போச்சு(-:

said...

எனக்கும் என் மக்களை பிரசிடென்ட் ஓட்டலில் நீச்சல் பயிற்சிக்கு அழைத்துச் சென்றது நினைவுக்கு வந்தது. அந்த பயிற்சியாளரும் bubbles, bubbles என்று வாயால் உடலிலிருந்து காற்றை வெளிக் கொணர கூவிக்கொண்டிருப்பார் !

அப்போ இளவேனில் காலம் ஆரம்பித்துவிட்டது என்று சொல்லுங்கள்! நேரமெல்லாம் பகலொளி சேமிப்பு நேரத்திற்கு மாறியாகிவிட்டதா ?

said...

வாங்க மணியன்.

என்ன இளவேனிலோ? வஸந்தகாலம் செப்டம்பர் முதல்தேதிக்கு ஆரம்பிச்சு
இப்ப மறுபடி குளிர்காலத்தை நோக்கி ரிவர்ஸ் கியர்லே போகுது.
16 இல் ஆரம்பிச்சது இப்ப 10லெ வந்து நிக்குதுங்க.

இந்த அழகுலெ அக்டோபர் 1 முதல் பகல் நேர சேமிப்பும் ஆரம்பிச்சு,
மனுஷனைக் கொல்லுது.

கண்டுக்காதீங்க. இந்தப் புலம்பல் வருஷாவருஷம் வருவதுதான்.

said...

நீங்க தையல பத்தி சொல்லச் சொல்ல எனக்கு ஆசை கொழுந்து விட்டு எரியுது.. ஆனா உங்க பொண்ண போல எனக்கு இளிச்சவாய்(!) இன்னும் யாரும் சிக்கலியே :( மாடு முட்டினா ஓட வசதி இல்லியா.. ஆண்டவா..

said...

வாங்க வைசா.

பகல் நேரம்கூடுனா அதுலெ என்னங்க சந்தோஷம் இருக்கு? குளிர்லே எப்படியும்
வீட்டுக்குள்ளெ முடங்கணும். இருட்டுச்சுன்னா சீக்கிரமாத் தூங்கிரலாம்.
வெளியே வார்மா இருந்து பகல் நேரம் கூடுனாதாங்க மஜா.

said...

பொற்கொடி,
கவலைப்படாதீங்க. உங்களுக்கு ஒரு இளிச்சவாய் சீக்கிரம் கிடைக்கட்டுமென
இறைவனை வேண்டுவோம்:-)

said...

பதிவு படிப்பது ஒரு சந்தோஷம். பின்னூட்டாங்கள் அடுத்த சந்தோஷம்.

fஆரெவர் ஸ்மைலிங்னு என் பையன் சொல்லிட்டுப் போறான்.
ஆமாம் அதுமாதிரி இந்த ரைட்டிங் இருக்குனு சொன்னேன்.

பொண்ணு என்ன சமத்தா போஸ் கொடுக்குது!!
செல்லமா இருக்கு.
வாடைக்காற்றம்மா வேணாமா.?
அப்பொ இது மார்கழி மாசம் முன் பனிக்காலம் பாடலாமே:-)

பனி விழும் மலர்வனம்'
இன்னும் எத்தனையோ இருக்கு,
' குமார் சொல்கிறார் நம்மளைச் சுத்தி நாலு சுவர்'னு.
மனசு சுவர் தானே வேண்டாம். வீட்டு சுவர் காவலுக்கு.
எப்படியோ ரொம்ப நல்ல பதிவு காலையில் படிசாச்சு.(பின்னூட்டங்களையும் சேர்த்து)
















;-
0

said...

வைசா,

உங்க வாய் முஹூர்த்தம் பலிக்கட்டும்.

இன்னிக்கே 17 டிகிரி வந்துச்சு:-)

said...

வல்லி,

குமாரும் மனச்சுவரைத்தான் சொல்றார்.

'கதவில்லாமப் பட்ட கஷ்டம் 'அனுபவிச்சவங்களுக்குத்தானே
தெரியும். இல்லையா? :-))))))))))))

said...

ரோட்டுக்கு மேல இருக்குற வீட்டுக்கு மதிப்பில்லையா! அடக் கொடுமையே....இங்கெ பெங்களூர்ல அப்பார்ட்மெண்ட் வாங்குனப்பக் கூட ரோட்டுக்கு மேல வேண்டாம்னு கொஞ்சம் உள்ள தள்ளியிருக்குற மாதிரி பாத்தோம். அந்தளவுக்கு டிராபிக்.

அங்கயும் தையல் வகுப்பா! அவங்க ஒங்களுக்குச் சொல்லிக் கொடுத்தது போக நீங்க அவங்களுக்கு நம்மூரு பாவடை ஜாக்கெட் தைக்கச் சொல்லிக் கொடுத்திருக்கலாம்ல. ஃபீஸ் கட்டியிருக்க வேண்டாம்ல.

ஜோஷ்வா? வரட்டும் வரட்டும்.

said...

வாங்க ராகவன்.

இந்த ரோடுக்குத்தான் இப்படி. இன்னொரு மெயின் ரோடு இருக்கு, ஏர்போர்ட்
போற வழி. அந்த ஏரியாவை ஒரே தூக்கா தூக்கிட்டாங்க. அங்கே ரோடுக்கு நடுவுலே
மீடியன் ஸ்ட்ரிப் வேற இருக்கு. ரெண்டு சைடுலேயும் இருக்கறவங்க எதிர்த்திசை
போகணுமுன்னா சுத்துக்கிட்டு வரணும். ஆனா அங்கெ டபுள் மடங்கு விலை.

இதையெல்லாம் இப்படி ஏத்திவிடறது யாரா இருக்கும்?

பாவாடை, ஜாக்கெட் தைக்கக் கத்துக்கிட்டா அவுங்களுக்கு என்ன பயன்?
அதான் பண்டமாற்று வேலைக்காகலை(-:

said...

என்ன துளசி எப்படி இருக்கீங்க!

//பூ மத்தியரேகைக்கு கீழே தெக்கே இருக்கற இடங்களுக்கு சாஸ்த்திர சம்பிரதாயங்கள் 'உல்ட்டா'வா இருக்குமோ? நம்மூரில் 'தெற்கே இருந்துவரும் தென்றல்' இங்கே அப்படியே 'வாடை'யாயிருது!// சரியான விஞ்ஞானக் கேள்வி!

said...

வாங்க உதயகுமார்.

நலமா? இப்பத்தான் உங்க வீடியோ க்ளிப் 'தபு & பிரகாஷ்ராஜ்' பார்த்துட்டு இந்த சீனை 'அப்ப' சரியாக்
கவனிக்கலையேன்னு நினைச்சுக்கிட்டு இங்கே வந்தா நீங்க வந்துட்டுப் போயிருக்கீங்க.

நம்மூர் வாஸ்துகூட இங்கே உல்டாவா இருக்குமோன்னு ஒரு தோணல். இங்கே சூரியன் கிழக்கே
உதிக்கறதில்லை. வடகிழக்குதான். அதான் வாஸ்து பார்க்கணுமுன்னா எப்படி? ன்னு ஒரு வேண்டாத
யோசனை:-)

said...

துளசி, ஜோஷுவா படுத்தாம இருந்தானா?
உடனே 17 போடவும்.

said...

வல்லி,

அய்யோ இங்கே புள்ளைங்களை அடிக்கிறது கிரிமினல் குற்றம். ஜோஷுவா படுத்தினாலுமே எப்படி 17 போட முடியும்? நீங்க சொன்னது 17 அடிதானே? :-)))))