Wednesday, October 04, 2006

நான் பெற்ற இன்பம்.





கண்ணபிரானோட திருமலை பிரம்மோத்ஸவம் படிச்சுக்கிட்டே ஒரு புறம்நவராத்திரி விழாவையும் கொண்டாடிக்கிட்டே இருந்தேன். திடீர்னு ஒருநாள்அகஸ்மாத்தாப் பார்த்தப்ப ஒரு ஒளி வீட்டுக்குள்ளே.


இந்த வீட்டுலே இது ரெண்டாவது நவராத்திரி. போனவருசம் இதுபோல ஒண்ணு வரவே இல்லை.


மறுநாளும் அதெ சமயத்துக்குக் காத்திருந்தேன். ஒண்ணும் இல்லை. இப்படியே அடுத்து வந்த சில நாட்களும்........ ஊஹூம்


ஏமாத்தமா இருந்துச்சு. வீட்டுக்குள்ளெ போனா அங்கே பெருமாளோட படத்துலே கால் பக்கம் இன்னொரு ஜொலிப்பு.


டிஜிட்டல் கேமெரா வந்தப்பிறகு எல்லாம் ரொம்ப வசதியாப் போச்சு இல்லை?


எப்பவும் க்ளிக் க்ளிக்தான்:-))))


ரொம்ப சாதாரண நிகழ்வுதான்னு அறிவு சொன்னாலும் மனசு அதைக் கேட்டாத்தானே?


கிடைச்ச திருப்தியையும், சந்தோஷத்தையும் உங்களோடு பகிர்ந்துக்கலாமுன்னு இந்தப் பதிவு.

37 comments:

said...

//ரொம்ப சாதாரண நிகழ்வுதான்னு அறிவு சொன்னாலும் மனசு அதைக் கேட்டாத்தானே?///

சரிதான் .நீங்களும் ஒரு கல்ட் ஆரம்பிக்கலாம் ..ஓவியம்/புகைப்படம் பதிவில் போட்டதற்கு பதில் ஆன்மீகம்ன்னு போட்டிருந்தா நம்ம ஊர் பேப்பர்ல் "துளசி அக்கா வீட்டில அதிசயம் கடவுள் அவதாரம்" ன்னு எதாவது சொல்லி டிக்கெட்ப் போட்டு காசுப் பாத்திருக்கலாம் ..சான்ஸ மிஸ் பண்ணிட்டீங்க

said...

வினா வேங்கடேசம் ந நாதோ ந நாத:
சதா வேங்கடேசம் ஸ்மராமி ஸ்மராமி I
ஹரே வேங்கடேச ப்ரஸீத ப்ரஸீத
ப்ரியம் வேங்கடேச ப்ரயச்ச ப்ரயச்ச II

said...

எனக்கும்ஒளி தெரிகிறது

said...

தோ ஓடியாந்தேன் டீச்சர்!
பிரமாதம்!
வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி-ன்னு ஒரு பாட்டு வரும்! அதான் ஞாபகத்துக்கு வந்துச்சு!

//ரொம்ப சாதாரண நிகழ்வுதான்னு அறிவு சொன்னாலும் மனசு அதைக் கேட்டாத்தானே?//
ரொம்பவே ரசிச்சேன்.

கோவில் கருவறைகளில் ஆண்டுக்கு ஒரு நாள் இப்படி ஓளி வருமாறு பாத்து கட்டி இருப்பாங்க...engineering marvel!
அதைப் போல ஒரு மார்வல் பண்ண கோபால் சாருக்குத் தான் all credit!
உஙக்ளுக்கு ஒண்ணும் கிடையாது தெரிஞ்சுக்குங்க!! :-))))

said...

டீச்சர்

இன்னொரு விஷயம். உங்க வீட்டு வாசல்ல ஒரு பெரிய க்யூ நிக்குதாமே! நீங்க பார் கோட் பட்டை எல்லாம் கட்டி விடறீங்களாமே. இப்ப தான் CNN-ல்ல பாத்தேன்! :-))))
யாருப்பா ரவிஷங்கர், உன் அடுத்த பதிவு நியுசி-இல் நடக்கும் உற்சவத்தைக் கவர் பண்ணுப்பா!! :-))

said...

பகிர்ந்து கொள்ளப்படும் சந்தோஷம்
பன்மடங்காய் அதிகரிக்கும்

said...

கூத்தாடி வாங்க.

அப்டீங்கறிங்க?

அட! மிஸ் பண்ணிட்டேனே(-:

இதுக்குத்தான் மொதல்லே கன்ஸல்டண்ட்டைப் பார்க்கணுங்கறது.இல்லை? :-)

said...

வாங்க எஸ்.கே.

சுப்ரபாதத்துலெ அருமையா சொல்லியிருக்கு. இல்லை?

said...

குமார்,

'ஒளி மயமான எதிர்காலம்' தெரியலையா? :-))))

said...

KRS,


ஆமாம், இதுலே கோபால் சாருக்கு என்ன பங்கு? வாசலுக்குக் கண்ணாடி செலக்ட் செஞ்ச எனக்கு
அப்ப ஒண்ணும் இல்லியா?(-:

அதுசரி? அந்த ரவிஷங்கர் யாரு? ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ இல்லைதானே?
வாசலில் கூட்டம்தான். (நாலு பேருக்கும் கூட என்றால் கூட்டம்தான் என்று உணர்க)
ஆனா நாய்ஸ் & பூனைஸ்:-)))

பார் கோட் கட்ட 'வாலை' நீட்டிக்கிட்டு இருக்குதுங்க.

said...

சிஜி,

உண்மைதான். இப்ப சந்தோஷம் நாலிப்பு ஆயிருக்கு.
( எத்தனை நாளுக்கு ரெட்டிப்புன்னே சொல்றது?)

said...

SK கூறுவதைத் தமிழில் கூறமுடியுமா?

said...

டீச்சர், பெங்களூர்ல ஊருக்கு வெளிய ஓசுருக்குப் பக்கமா கொஞ்சம் பொறம்போக்கு இருக்குது. நீங்க இந்த போட்டோவ எடுத்துக்கிட்டு ஒடனே பொறப்பட்டு வாங்க....துளசியாஸ்ரமம் தொடங்கீரலாம். துளசிமாதா, கோபாலானந்தா, ராகவானந்தா, தொணைக்கு இளவஞ்சியானந்தாவையும் கூப்பிட்டுக்கலாம். :-)

உண்மையிலேயே அந்த ஒளிப் பொட்டுகள் மிக அழகு. மிகவும் அழகு. அப்படியே வெளிச்சத்தை நீராகக் கரைத்து மேலாகத் தெளித்தாற்போல. ஆகா...ரெண்டு நாளைக்கு முன்னாடிதான் இருளில் ஒளிரும் நட்சத்திரங்களையும் நிலாவையும் படுக்கையறையில மாட்டி வெச்சேன். சகோதரியரின் கொழந்தைங்க..."மாமா வானத்தையே வீட்டுக்குள்ள கொண்டாந்துட்டாங்க"ன்னு ஒரே கூச்சல். கும்மரிச்சம். :-)

said...

சிஜி,


வெங்கடேசனைத் தவிர நம்மைக் காப்பாற்ற வேற யாருமே இல்லை.
அதனாலே எப்போதும் வெங்கடேசா வெங்கடேசா என்று சதாசர்வகாலமும் ஸ்மரணை
(ஜெபிச்சுக்கிட்டே, சொல்லிக்கிட்டே)செய்துகொண்டே இருப்பேன்.
எங்கள் இஷ்டதெய்வமான வெங்கடேசப்பெருமாளே, எங்களுடைய
வேண்டுதல்களையெல்லாம் நிறைவேற்றுவாயாக.

இப்படித்தான் தமிழில் அர்த்தம் வரும்.
தவறாக சொல்லி இருந்தால் மன்னிக்கணும்.
தெரிந்தவர்கள் திருத்துங்கள்.

said...

அதென்ன அத்தனை பக்குவமா
கால் மேல ஒளி விழுந்து இருக்கு?

பாத தரிசனம் அருமை. திருப்பதி போனால் கூட இவ்வளவு பக்கத்தில
பாக்க முடியும்னு தோணலை.

said...

எங்க வீட்டுப் பிரச்சினையெல்லாம் உங்களிடம் சொல்லி அருள்வாக்கு பெற வேண்டும் :) எப்ப முன்னறிந்த சந்திப்பிற்கு சமயம் கொடுக்க முடியும் ?

தேவுடு கூட உங்கள் 'வீட்டிற்கு' தான் பின்னூட்டமிட வருகிறார். பின்னூட்ட நாயகியே வாழ்க!!

said...

ரொம்ப சாதாரண நிகழ்வுதான்னு அறிவு சொன்னாலும் மனசு அதைக் கேட்டாத்தானே//

நம்பிக்கைதாங்க இதுக்கு வேணும்.. அதுக்கு சுத்தமான மனசு இருந்தாலே போறும்.. மூளைக்கும் இதுக்கும் சம்பந்தமேயில்லை..

said...

//ரொம்ப சாதாரண நிகழ்வுதான்னு அறிவு சொன்னாலும் மனசு அதைக் கேட்டாத்தானே?


கிடைச்ச திருப்தியையும், சந்தோஷத்தையும் உங்களோடு பகிர்ந்துக்கலாமுன்னு இந்தப் பதிவு.//

எல்லாத்தையும் அறிவுபூர்வமாகவும் விஞ்ஞானப் பூர்வமாவும் பாக்காம சில சமயம் உணர்வு பூர்வமா பாத்தா சந்தோஷமாத் தான் இருக்கும். என்னிக்கும் வராத ஒளி அன்னிக்கு வந்தது கண்டிப்பா மனசுக்குச் சந்தோஷமான ஒரு விஷயம் தான். பகிர்ந்துக்கிட்டதுக்கு நன்றி.

said...

துளசியக்கா!
குழந்தையும் தெய்வமும் கொண்டாடுமிடத்தில் என்பாங்க!!!
இதை அருள் ஒளியேன ஏன்???கொள்ளக் கூடாது.
யோகன் பாரிஸ்

said...

வாங்க ராகவன்.

//துளசிமாதா, கோபாலானந்தா, ராகவானந்தா,
தொணைக்கு இளவஞ்சியானந்தாவையும் //

ஆசிரமம் கட்டிறலாமுன்னுதான் தோணுது. நாலடியார்கள் இருக்கோமே.
நம்ம சுதர்ஸனானந்தாவையும் கட்டாயம் 'கூட்டு' சேர்த்துக்கலாம்:-)))

அந்தப் புறம்போக்கு நிலத்தை 'நம்ம வசமாக்க' ஏற்பாடு செய்யுங்க.:-))))

//கும்மரிச்சம். :-)// பிடிச்சிருக்கு. கும்மாளம் & கூச்சல் & ஆனந்தம்.

said...

வல்லி,

வாங்க. அது என்னமோ அன்னிக்கு அப்படி அமைஞ்சது. இப்பக் கவனிச்சுப்
பார்த்தா முன் வாசக்கதவுலே போட்டுருக்க பிள்ளையார்/யானை, 4 வது
படத்துலே தும்பிக்கையோடு ரெண்டு பக்கமும் இருக்குறதும் லேசாத் தெரியுது.
கஜலக்ஷ்மிக்கு ரெண்டு பக்கமும் இருக்குமே அதைப்போல..

said...

வாங்க மணியன்.

ராகவனோட பின்னூட்டம் பார்த்தீங்களா? ஆசிரமம் கட்டுனதும் உங்களுக்குத்தான்
மொதல் 'முன்னறிந்த சந்திப்பு.'

அட! அப்பாயிண்ட்மெண்ட்க்கு இதுதான் தமிழாக்கமா?

said...

டிபிஆர்ஜோ,

சரியாச் சொன்னீங்க.

நம்பிக்கைதானே வாழ்க்கையும்கூட.

said...

கைப்புள்ளெ,

வாங்க. 'தாண்டியா' எல்லாம் ஆடி முடிச்சாச்சா?

சந்தோஷத்தில் கலந்துக்கிட்டதுக்கு ரொம்ப சந்தோஷம்.

said...

யோகன்,

ஒளிவெள்ளமாய் வந்த அருள் வெள்ளம்?

ஓக்கே. அப்படியே எடுத்துக்கலாம்.

said...

ரொம்ப ஆசிர்வாதமா இருந்திருக்கும் அந்த திடீர் ஒளி.. பகிர்ந்ததுக்கு மிக்க நன்றி.Divine wonder!

said...

வாங்க தீக்ஷ்ண்யா .

அருமையா இருக்கு உங்க பேர்.

(ஆதவன் தீக்ஷண்யா ஞாபகம் வருது)

ஆமாங்க. அன்னிக்கு மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு.

ச்சின்னப்புள்ளையிலே கேட்ட ஒரு கதையும் ( எங்க அக்கா சொன்னது)நினைவுக்கு வந்துச்சு
அதுலெ எல்லோரும் 'கடவுளே எங்களுக்குக் காட்சி கொடுத்தீரே'ன்னு கோரஸ்ஸா
அலறுவாங்க:-)))))

நானும் ஏறக்குறைய இப்படிக் கத்தி இருக்கலாமோ?:-))))

said...

துளசியக்கா,

சின்னச் சின்ன நிகழ்வுகள் என்ற போதும் அதில் நம்பிக்கை இருக்கும் போது கிட்டும் மகிழ்ச்சியே தனி!

போனவருஷம் இங்கே குவைத்தில் எனக்குத் தெரிந்த ஒருவர் ஒரு ருத்ராஷத்தை நீ வைச்சுக்கோ-ன்னு தந்தார். இப்போ 8 மாதமாக ரெகுலராக "ருத்ரம்& சமகம்" சென்று கற்கிறேன்!

சிவனே என்னைத் தேடி வந்தருளியமாதிரி உணர்ந்தேன்.

சிவன் கூடுதலாக இன்னொரு நண்பர் மூலமாக இளையராஜாவின் திருவாசக சிடியையும் அனுப்பிவைத்தார்!

அன்புடன்,

ஹரிஹரன்

said...

என்ன கேமரா உபயோகிக்கிறீங்க?

said...

ரவி,

படங்கள் சொதப்புதா?:-))))

Sony Cybershot 7.2 MP DSC- P200

நம்ம கைப்புள்ளெ மாதிரியேதான் இன்னும் மேன்யுவலை முழுசாப் படிக்கலை
( ஆங்........ படிச்சாலும் எல்லாம் புரிஞ்சுறப்போது......)

இன்னும் செட்டிங்ஸ் எல்லாம் எப்படிச் செய்யணுமுன்னு தெரிஞ்சுக்கலை.
ஜஸ்ட் எய்ம் & ஷூட் லே போய்க்கிட்டு இருக்கேன். ஆனா zoom( விஜயகாந்த்
ஸ்டைலில் சொன்னா ஜூம்) பண்ணத் தெரிஞ்சிருக்கு:-)))))

இப்பத்தான் வாங்குனோம், சமீபத்துலே 10 மாசம் முந்தி.


யாராவது எளிய வழி 'போதித்தால்' நல்லா இருக்கும்.

said...

ஹரிஹரன்,

அதே அதே. நம்மைத்தேடி வர்றதுக்கு மதிப்பு ஜாஸ்திதான்.
'கிடைக்கணுங்கறது கிடைக்காமப்போகாது' :-)))))

said...

அம்மா,
இன்னக்கி தான் இந்த பதிவை படித்தேன் ஆண்டவனே சில சமயம் இப்படி காட்சி தருவதும், அபூர்வங்களில் அபூர்வம்.

(கொஞ்சம் பெருமாளை அதிகமாக தியானித்த போது எழுந்த கேள்வி: பக்கத்தில எதாவது வீடு இடித்து கட்டுகிறார்களோ?)

said...

அந்தப் பகலவன் உலகெங்கும் தனது ஓளிக்கிரணங்களை அனுப்பித்தேட கட்டளை இட்டார்.இந்த மூவுலகங்களையும் ஈரடியால் அளந்த பரமனின் அடி எங்கெஇருக்கிறது என்று.கிரணங்கள் கடைசியில் கண்டு பிடித்தன அது டீச்சர் வீட்டிற்குள்தான் இருக்கிறது என்று.
பார்க்க பார்க்க திகட்டுமொ உந்தன் பாத தரிசனம்.
நன்றி டீச்சர்

said...

வாங்க சிவமுருகன்.

மதுரை எப்படி இருக்கு? செட்டில் ஆகிட்டீங்களா? அம்மா அப்பா எல்லோரும் சுகமா?

வீடு இடிச்சுக் கட்டுறது? புரியலையேப்பா?
கொஞ்சம் விளக்கம் சொல்லுங்களேன்.

said...

தி.ரா.ச,

நல்லா வர்ணிச்சுட்டீங்க. நன்றிங்க.
அதுக்கப்புறம் இந்த 'ஒளி' வந்தாலும், சரியா ஸ்வாமி பாதத்துலே
விழுந்ததென்னவோ அன்னிக்கு மட்டும்தான்.

பூமி சுத்தறது தெளிவா இருக்கு!

said...

அம்மா,
//வாங்க சிவமுருகன்.

மதுரை எப்படி இருக்கு? செட்டில் ஆகிட்டீங்களா? அம்மா அப்பா எல்லோரும் சுகமா? //

எல்லோரும் சுகம்.


// வீடு இடிச்சுக் கட்டுறது? புரியலையேப்பா?
கொஞ்சம் விளக்கம் சொல்லுங்களேன்//

கொஞ்சம் தூரத்தில யாராவது வீடு இடித்து கட்டினால் இது மாதிரி எங்கிருந்தாவது சூரிய ஒளிவந்து விழும் அதை தான் கேட்டேன்.

said...

வாங்க சிவமுருகன்.


//கொஞ்சம் தூரத்தில யாராவது வீடு இடித்து கட்டினால்
இது மாதிரி எங்கிருந்தாவது சூரிய ஒளிவந்து விழும்
அதை தான் கேட்டேன்.//

அட! இது புது நியூஸ் எனக்கு.
அப்படி ஒண்ணும் இங்கே நடக்கலையேப்பா.

சூரியன் அந்த ஆங்கிளில் வீட்டுக்குள்ளெ வந்திருக்கார்:-)