Friday, October 20, 2006

ஜனதா வண்டியும் சிங்கார வேலனும் (A t d - பகுதி 1)




A t d = Across the ditch


ஆங்கிலம் - தமிழ் அகராதியைப் பார்த்தப்ப 'டிச்'சுக்குச் சாக்கடை, கால்வாய்ன்னு போட்டுருந்துச்சு.அய்யே...... சாக்கடைன்னா நல்லவா இருக்கு? சமுத்திரமுன்னு வச்சுக்கலாம்.இல்லே? இங்கே லோகல் ஸ்லாங்லே பக்கத்தூரு ஆஸ்தராலியாவை இப்படித்தான் 'அக்ராஸ் த டிச்'ன்னு சொல்றாங்க.நாமும் ஊரோடு ஒத்து வாழ வேணாமோ? அதான் இப்படி:-)


போட்டும், நம் வருகையை அங்கே கொண்டாடவேணுமுல்லையா? முன்னதாகவே பலான பலான நாளிலே, பலான பலான ஆள் அங்கே வருதுன்னு நம்ம ஆஸி வாழ் தமிழ்மண மக்களுக்குத் தகவல் தெரிவிச்சேன். (அதானே, ஓசைப்படாமப் போய் வர்றதுக்கு நான் பைத்தியமா என்ன?)


சிட்னி சிங்காரவேலன் சந்நிதி( பெயர் உதவி ஷ்ரேயா)யில் நம் தமிழ் ம(ன)ணங்கள் ஒன்றோடொன்று கலந்து உறவாடணுமுன்னு ஒரு பிரார்த்தனை வேற பாக்கி இருந்துச்சு. மின்னஞ்சல் மூலம் நேரம், நாள் எல்லாம் குறிச்சாச்சு.புரட்டாசி மாசம், கடைசிச் சனிக்கிழமை, உச்சிகால பூஜை நேரம்.சுபயோக சுப முகூர்த்தம்.


சனிக்கிழமை பொழுது விடிஞ்சுச்சு நியூஸியிலே. காலையிலே அஞ்சரைக்கே ஏர்ப்போட்டுலே ஆஜர். அந்த நேரத்துலே கூட்டமோ நெரியுது. எல்லாம் ஜெட் ஸ்டார் உபயம். மலிவு விலை டிக்கெட். மலிவு விலையிலே எதெது அடக்கமுன்னு அப்புறம் சொல்றேனே!


திங்கக்கிழமை பள்ளிக்கூடம் திறக்குது. ரெண்டு வாரம் விடுமுறைக்கு வந்த ஆஸிக்கூட்டம் புள்ளையும்,குட்டிகளுமாத் திரும்பிப்போறாங்க. மலிவுப் பயணம்ன்றதாலே இப்படிக் கூட்டமாம். வழக்கமா ப்ளேன்லே கொடுக்கற 'உபசரிப்புகள்' ஏதும் இருக்காதுன்னு தெரிஞ்சதாலே வீட்டுலே இருந்து கொண்டு போன 'வெண் பொங்கலை' செக் இன் பண்ணதுமே தின்னுட்டு ஒரு கப்புச்சீனோவை உள்ளெ ஊத்திக்கிட்டோம். கையிருப்பு கொஞ்சம் வெஜிடபுள் சமோசாக்கள். அது அப்புறம்.


வண்டிக்குள் போக அழைப்பு வந்துருச்சு. உள்ளெ அச்சு அசல் பஸ் வண்டிதான். இதுவும் ஏர்பஸ் தானாம்:-) நசுங்கலான இருக்கைகள். கஷ்டப்பட்டு உள்ளெ திணிஞ்சுக்கிட்டோம். புள்ளையாரை வேண்டிக்கிட்டு விக்கினம்இல்லாமப்போய்ச் சேரணுமுன்னு மனசுலே கும்பிட்டுக்கிட்டு, நம்ம முன்னாலே இருக்கற வலைப்பையிலேபடிக்க எதாச்சும் இருக்கான்னு பார்த்தா............ அட! நம்மாளு இருக்கார்.




வண்டி கிளம்புச்சு, சொல்லிவச்சாப்புலேகுழந்தைங்க அழுகையை ஆரம்பிச்சதுங்க. சத்தமான சத்தம். அக்கம்பக்கத்துலே பார்த்தா, கொஞ்சம் பெரியபசங்க திங்கக்கிழமை பள்ளிக்கூடத்துலே கொடுக்க வேண்டிய பாடங்களை அடிச்சுப் புடிச்சு எழுதிக்கிட்டு இருக்காங்க.ரெண்டு வாரம் குஜாலாப் போயிருச்சு. லாஸ்ட் மினிட் அர்ஜெண்ட்?


நம்மூர்லே பிருந்தாவன் எக்ஸ்ப்ரெஸ்லே பயணம் போயிருக்கீங்கதானே? அதையே ப்ளேனா மாத்திட்டாங்கப்பா!மலிவு டிக்கெட்டாமே. குடிக்கத் தண்ணி வேணுமுன்னாலும் 3 $ காசு. மெனு லிஸ்ட்டைப் பார்த்தேன். காபி, சாயாதண்ணி, ஜூஸ் எல்லாமே ஒரே விலை.( எதைக் குடிச்சா என்ன?) அப்புறம் லாலி ஒரு சின்னப் பொதி. அதுக்கும்இதே காசு. அடப்பாவிங்களா? படத்தை வேற போட்டுருக்கான். பசங்க ச்சும்மா இருக்குமா? லாலி அமோக விற்பனை!


மெனுவிலே அடுத்ததாக நூடுல்ஸ் சூப்! கப்புலே நூடுல்ஸைப் போட்டு ஆளுங்க முன்னாலே வச்சுட்டு அதுலே கொதிக்கிற தண்ணியை ஊத்துதுங்க. சூடு ஆறும்போது நூடுல்ஸ் வெந்துருமாம்! படம் எதாச்சும் பார்க்கணுமா? அதுக்கும் 10 $வாடகை கொடுத்தா ஒரு ச்சின்ன டிவிடி ப்ளேயர் சீட்டுக்கு வருது. ஒரு படம் தருவாங்களாம். ஒரே வித்தியாசம் என்னன்னா நம்ம ரயிலிலே காபி, டீ, வடைன்னு கூவிக்கிட்டு வருவாங்க. இங்கே அந்தக் கூவல் இல்லை! கிஃப்ட் ஷாப் இருக்கு. அதை இன்னும் கொஞ்ச நேரத்துலே மூடிடப் போறொமுன்னு ஒரு பயமுறுத்தல் வேற.


நம்ம மக்கள்ஸ் கில்லாடிங்கப்பா. எல்லாரும் கையிலேயே கட்டுச்சோறு மூட்டையும் கொண்டு வந்துருந்தாங்க.ஒவ்வொண்ணாத் தின்னு முடிக்க முடிக்க அந்தக் குப்பையை வாங்கறதுக்கு விமானப் பணி நபர்கள் ஸீட் ஸீட்டாநின்னு நின்னு போறதும் வாறதுமா இருந்தாங்க.


சமோஸாப் பொதியை திறந்தவுடன் பக்கத்துலே ஆள் வந்துருச்சு, பேப்பர் நாப்கினை வாங்க. அட..... தின்ன விடுங்கப்பா. வியாபாரம் நடக்கற ஜரூரைப் பார்த்தா பேசாம நம்ம சமோசாவை ரெண்டு டாலர்னு வச்சு வித்துருக்கலாம். ஹூம்...அடுத்தமுறை இதுலே வர்றதா இருந்தா சமோசா கொண்டு வந்து டிக்கட் காசைத் தேத்திறணும்:-)


காலையிலே 6.50க்கு ஏறுனோம், 7.10க்கு இறங்குனோம். நமக்கும் அவுங்களுக்கும் இப்போ 3 மணி நேர வித்தியாசம் இருக்கு. இறங்கும்போது ஏர்பிரிட்ஜ் கிடையாது. எங்கியோ ஒரு மூலையிலே வண்டியை நிறுத்திட்டு படி வழியா இறங்கி, பஸ்( நிஜமான பஸ்) லே ஏத்தி ஏர்ப் போர்ட்லே கொண்டு வந்து கொட்டுனாங்க. பயணத்துலே ஒவ்வொரு நிமிஷத்துலேயும் ' நீங்கள் அனுபவிப்பது மலிவு விலை டிக்கெட். சகாயக் கட்டணம்'னு உணர்த்திக்கிட்டே இருந்தாங்க.


இமிக்ரேஷன் லைன், லைனா அது? ஒரு ஒழுங்கே இல்லாம இங்கே அங்கேன்னு நடுநடுவிலே ஆளுங்க வந்து சேர்ந்துக்கற மாதிரிஇருக்கு. ஒரே கூட்டம். நமக்குத்தான் 4 பேருக்கு மேலே இருந்தாலே கூட்டமாச்சே. இங்கே என்னன்னா நிஜமான கூட்டம். ஒரு வழியா வெளியே வந்து டாக்ஸி பிடிச்சு தங்கற இடத்துக்குப் போனோம். டாக்ஸியிலே நாட்டு/வீட்டு நிலவரத்தைச்சொல்லிக்கிட்டு வந்தார் பங்களாதேசி ட்ரைவர். தன்னுடைய தகப்பன் சொன்ன பெண்ணைக் கட்டிக்காமப் போயிட்டமேன்னு ரொம்பவே வருத்தப்பட்டார். பொண்ணு இங்கத்துப் பொண்ணான்னு கேட்டேன். இல்லையாம் . ஊர்லேதான் பொண்ணு எடுத்தாராம். ஊர்லேதான் கல்யாணம் ஆச்சாம். ஆனாலும் அது அப்பன் சொன்ன பொண்ணு இல்லையாம்! ( வேறயார் சொல்லி இருப்பாங்க?)



ரெண்டு புள்ளைங்க இருக்காம், ஆறும் நாலுமா. கலாச்சாரம்(???) சரியில்லைன்னு ஊருக்குப் போயிரலாமுன்னு நினைச்சா, வீட்டம்மா வரமாட்டேங்குதாம். ஹூம்... அப்பன் சொன்ன பொண்ணை.................


சனிக்கிழமை காலையிலே எட்டரை மணிக்கே பப் வாசல்லே இளைஞர், இளைஞி கூட்டம். அதைவேறக் காமிச்சுப் புலம்பிக்கிட்டே வந்தார். நம்ம ரிலிஜனுக்கெல்லாம் சரிப்படாதுன்னார். நீங்க என்ன ரிலிஜன்னு கேட்டேன். முஸ்லீம்னுசொன்னார். இப்ப நோம்பு காலமாச்சே, நோம்பு உண்டான்னு கேட்டேன். ஆமான்னு சொன்னார். தீபாவளி, ரம்ஜான் எல்லாம் எப்பவுமே ஒரு நாலு நாள் வித்தியாசத்துலேதானெ வருது? இறங்குறப்ப அவருக்கு ரம்ஜான் வாழ்த்துக்களைச் சொல்லிக்கிட்டேன்.


அறைக்குப்போய் குளிச்சு உடை மாத்தி, கொஞ்சம் டிபன் காஃபி முடிச்சுக்கிட்டு குவீன் விக்டோரியா பில்டிங்லேஇருக்கற என்னோட ஃபேவரிட் கடிகாரத்தை ஒரு நோட்டம் விட்டுட்டு, டவுன் ஹால் ஸ்டேஷனுக்குள்ளெ நுழைஞ்சு டிக்கெட் வாங்கிக்கிட்டு ப்ளாட்பாரத்துக்குப் போனோம். என்னவோ அமெரிக்கா ஞாபகம் வந்துக்கிட்டே இருந்துச்சு.


'மழை'யுடன் போட்டத் திட்டப்படி 10.50 ரயிலைப் பிடிச்சு 'பரமட்டா ஸ்டேஷன்'லே இறங்கியாச்சு. வெளியே வந்தாநம்ம மழையும், கஸ்தூரிப்பெண்ணும், அவுங்க மறுபாதியும் நமக்காக வெயிட்டிங். வரவேற்பு, அறிமுகம் எல்லாம் ஆச்சு.அங்கே இருந்து ஒரு பத்து நிமிஷ ட்ரைவ். இதோ சிட்னி சிங்காரவேல(ர்)ன் கோயில். வெளியே இன்னொரு ச்சின்னக் கூட்டம்.இருந்த மூணு ஆட்களில் கானாபிரபாவை அடையாளம் தெரிஞ்சுக்கிட்டேன். மத்தவங்க பொட் டீக்கடைக்காரர், பக்திப்பூக்கள்,மினி நூலகம் எல்லாம் வச்சுருக்கற கனக்ஸ் ஸ்ரீதரன்.


கோயிலுக்குள்ளெ நுழைஞ்சோம். கிட்டத்தட்ட 300 பேருக்கு மேல் இருப்பாங்க. டிசைன் டிசைனாப் புடவைகள். நம்ம புள்ளையாருக்குப் பூஜை நடந்துக்கிட்டு இருக்கு. பார்த்தீங்களா எப்படி'டாண்'னு 'யானை' முகத்தோன் டைமுக்குப் போயிட்டேன்!


புள்ளையார், சிவலிங்கம், சிங்காரவேலன்ன்னு வரிசையாப் பூஜைகள் நடந்துச்சு. ஒவ்வொரு சந்நிதியிலும் பூஜை நடக்கும்போது கூட்டம் முழுசும் அங்கே. எல்லாம் இந்தப்பூஜை முறைக்கு பழக்கப்பட்ட மக்கள்ஸ். அங்கங்கே மொத்தக்கூட்டமும் அலை அலையாய் இடம் பெயர்ந்து போனாங்க. கோயில் அருமையா இருக்கு. ஒரு பிரமாண்டமான ஹால். எல்லா சந்நிதிகளும் பக்கம்பக்கமா. ஹாலின் வலது பக்கம் உற்சவ மூர்த்திகள்.ஐம்பொன் விக்கிரகங்கள். பளபளான்னு ஜொலிப்பு. அவுங்களுக்கு முன்னாலே ஒரு சின்னப் படையல். படையலின் மத்தியில் தட்டு நிறைய 'வடை'கள்.






பரவாயில்லை. வலைப்பதிவர் சந்திப்புலே போண்டாவுக்கு மட்டுமா அனுமதி?


தொடரும்............


அனைவருக்கும் எங்கள் இனிய தீபாவளி வாழ்த்து(க்)கள்.

56 comments:

said...

'.சாக்கடை' இத வடிகால் னு சொல்லலாமே. இல்லே கழிவுநீர்வடிகால் னு சொல்லலாமே

said...

ஆரம்பிச்சுதா ஆஸ்திரெலிய ஆட்டம்..
ஜமாய்ங்க

சிட்னிக்குப் போய் வந்தேன் நாராயணா
சட்னிசெய்ய கத்துக்கிட்டேன்நாராயணா

வழியில் ஒரு குமரன் கோயில் நாரா..
வடையெல்லாம் படைச்சிருக்கு நாரா..

யானை ஒண்ணு ஆடுதிங்கே நாரா
பூனை யெல்லாம் வாடுதங்கே நாரா..

said...

துளசியம்மை,

இங்க தான் இருக்கீங்களா இல்ல தென்தீவுல இருக்கீங்களா? "டவுன் பஸ்" பிரயாணத்தையும் திண்டிவனம் பஸ் ஸ்டாண்ட்ல பஸ்ஸுக்குள்ள "சூடான சுண்டல் சார் சூடில்லன்னா பணம் வாபஸ்" சார்ங்கற மாதிரி எங்கூர் டவுன்பஸ்ஸுக்குள்ள டோனட்ஸ், அனுபவத்தையும் நல்லா என்சாய் பண்ணியிருப்பீங்க :))

என்னா தான் நீங்க புள்ளையார் விசிறியா இருந்தாலும் "மேஸ் ஹில்ஸ்" ஐடல் மிஸ்டர் சிங்காரத்தோட போட்டோவ போடாததை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

//கோயிலுக்குள்ளெ நுழைஞ்சோம். கிட்டத்தட்ட 300 பேருக்கு மேல் இருப்பாங்க. டிசைன் டிசைனாப் புடவைகள்.//

மெய்யாலுமா? நா யாரையுமே பாக்கலியே...

வாழ்த்துக்கள்.

said...

துளசியக்கா,
உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் உளம் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

said...

வாங்க சதயம்.

முதல் போணி நீங்கதான்:-)))))

said...

சிஜி,

அடடா........... இப்படி வரகவியாப் பாட்டெல்லாம் பாடுவீங்கன்னு நம்ம மக்கள்ஸ்க்கு
தெரியப்படுத்துனதுக்கு ..............

தமிழ் ஆன்லைன் டிக்ஷ்னரி இப்படித்தான் சா**டைன்னு சொல்லுது(-:

said...

டீக்கடைக்காரரே,

நலமா? நேத்தே திரும்பியாச்சு. QVB படிக்கட்டுகளைப் பாருங்க.
கொஞ்சம் தேஞ்சு போய் இருக்கும்:-)))))

//மெய்யாலுமா? நா யாரையுமே பாக்கலியே...//

உள்ளெ வராம வெளிப்பக்கமா சுத்தி சாப்புடற இடத்துக்குப் போயிட்டா புடவை எண்ணிக்கை எங்கே தெரியும்?
இதுக்கெல்லாம் ஒரு ஸ்பெஷல் விஷன் வேணுமாக்கும்:-))))

சிங்காரம் படத்தைப் போட்டாக் கோவிச்சுக்கிட்டாருன்னா?
ஆமாம். உங்க படத்தையெல்லாம் போட அனுமதி இருக்கா?

said...

நம்ம டெக்கான் ஏர்லைன்ஸ் ரகம் போலருக்கு.

இருந்தாலும் வீட்டு சாப்பாட்ட கொண்டுவந்து ப்ளேன்ல சாப்பட விடுவாங்கன்னு சொன்னப்போ.. நம்ம நாட்டு பஸ் ஞாபகந்தான் வருது..

தீபாவளி வாழ்த்துக்கள்..

அட ஜி! என்ன இப்பல்லாம் நம்ம வீட்டுப் பக்காம் வரமாட்டேங்கறீங்க?

ஏதாச்சும் கோபமா?

சரி பரவால்லை.. ஒங்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.

said...

வாங்க ஜோ.

குழந்தை எப்படி இருக்கார்? நலம்தானே?

உங்கள் அனைவருக்கும் பண்டிகைக் கால வாழ்த்து(க்)கள்.

சிங்கப்பூரே 'ஜிலுஜிலு'ன்னு ஜொலிக்குமே இப்ப:-)))))

said...

கோவில்களுக்குப் போவது புதுப் புடைவையை அணிந்து காட்டவும் அரட்டை அடிக்கவும் என்று சொல்வது ஆஸ்திரேலியா போனாலும் விடாது என்பதை பதிந்திருக்கிறீர்கள். தீபாவளிக்கு வடை போட்டோ அருமை.

நாங்கள் எல்லோரும் பூப்பறிக்கும் ஓசை வகுப்பை 'ditch' செய்து விட்டோம் :))

said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் அன்பான தீபாவளி வாழ்த்துக்கள்!!

said...

உளம் கனிந்த திபாவளி நல்வாழ்த்து(க்)கள்!!!

said...

வாங்க டிபிஆர்ஜோ.

உங்கள் அனைவருக்கும் பண்டிகைக் கால வாழ்த்து(க்)கள்.

// வீட்டுச் சாப்பாடு ப்ளென்லே.....//

அதெல்லாம் விடுவாங்க. இறங்குற இடத்துலேதான் தகராறு. நாங்களே சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்லே
அவிச்ச வேர்க்கடலையை உரிச்சுத்தின்ன ஆளுங்க. சிங்கையிலே சாப்புட நேரமில்லாமப்போய்
கையிலே கொண்டுவந்து.......... அதெல்லாம் ஒரு காலம்.

said...

வாங்க மணியன்.

உங்கள் அனைவருக்கும் பண்டிகைக் கால வாழ்த்து(க்)கள்.

ஆஸ்தராலியா என்னங்க? எங்கே போனாலும் மனுஷ சுபாவம் ஒண்ணுதானே?
இந்த வடைக்கே சொல்லிட்டீங்களே. இன்னும் வருது பாருங்க:-))))

said...

வாங்க நன்மனம்.

உங்கள் அனைவருக்கும் பண்டிகைக் கால வாழ்த்து(க்)கள்.
எங்களுக்குத்தான் மொத தீபாவளியாக்கும்:-))))

said...

நியூசிலாந்து-சிட்னி ஒரு நாள் சூறாவளி சுற்றுப் பயணமா? அதோட மரபுகளை உடைக்கற மாதிரி போண்டா இல்லாம "சாமிக்குப் படைக்கப் பட்ட வடைகளோட" சிட்னி தமிழ் வலைப்பதிவாளர் சந்திப்பு வேறயா? சூப்பர். நல்லா எஞ்சாய் மாடிருக்கீங்கன்னு சொல்லுங்க. ஆமா நியூசிலாந்துலேருந்து ஆஸ்டிரேலியா போக விசா சுலபமா கெடச்சிடுமா?

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இதயங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகள்.

said...

ஆரம்பமே அமர்க்களமா இருக்கே.

இப்படி உங்க ஊரிலேயும் ஆகாய ஊர்தி:-)) இருக்குமா.
அட முருகா. இனி வரப் போற பதிவெல்லாம் வடையும்,பாதுஷ்ஆவுமா இருக்கப் போறது.
எங்கள் தீபாவளி நல் வாழ்த்துக்கள்
உங்க குடும்பத்துக்கு.

said...

//நீங்கள் அனுபவிப்பது மலிவு விலை டிக்கெட். சகாயக் கட்டணம்'னு உணர்த்திக்கிட்டே இருந்தாங்க.//

நான்கு மடங்கு கட்டணம் கொடுத்து செயற்கைப் புன்னகைகளையும், பெட்டியில் அடைத்த உணவையும் சாப்பிட்டு வருவதை விட இது போல பேருந்து பாணி நல்லதுதானே! என்ன பயணம் போகும் போதும் சமையல் வேலை இருக்கும்.

அன்புடன்,

மா சிவகுமார்

said...

//குழந்தை எப்படி இருக்கார்? நலம்தானே? //
ரொம்ப நல்லாயிருக்கார் துளசியக்கா!நடக்குறதுக்கு முயற்சி பண்ணுறார்.

//சிங்கப்பூரே 'ஜிலுஜிலு'ன்னு ஜொலிக்குமே இப்ப:-))))) //
ஆமாக்கா! இந்த வருஷம் வழக்கத்தைவிட அதிகமாக 2 சாலைகளில் மின்விளக்கு அலங்காரம் போடப்பட்டுள்ளது.

said...

---வியாபாரம் நடக்கற ஜரூரைப் பார்த்தா பேசாம நம்ம சமோசாவை ரெண்டு டாலர்னு வச்சு வித்துருக்கலாம்.---

:-))))

said...

தீபாவளி நல்வாழ்த்துக்கள் துளசி .

said...

டீச்சர்

பிரசென்ட் டீச்சர்!

தீபாவளி நன்னாள் வாழ்த்துக்கள், உங்களுக்கும், குடும்பத்தார் மற்றும் நண்பர்களுக்கும்!
பதிவில் போடப்படும் வடையே தனி தான்; எத்தனை பேர் சாப்பிட்டாலும் அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரம் தான் போங்க! :-)

//எங்களுக்குத்தான் மொத தீபாவளியாக்கும்:-)))) //

நாங்க உங்க டயத்துக்கே ஆரம்பிச்சு, இங்கே முடியும் வரை கொண்டாடுவோம்! எங்களுக்குத் தான் தீப்ஸ் அதிக நேரமாக்கும், தெரிஞ்சுக்குங்க :-))

said...

வைசா,

நீங்க வேற போட்டுக் கொடுத்துறாதீங்க:-)))

சில கோயில்களில் படம் எடுக்க அனுமதி உண்டு.
நாங்க பிஜியில் இருக்கும்போது மூலவரையே படம்
எடுத்துருக்கோம். நமக்கு அங்கெ விசேஷ மரியாதை.
என்ன இருந்தாலும் நாமெல்லாம் 'ஊர்க்காரங்க'ளாச்சே!

said...

வாங்க கைப்புள்ளெ.

உங்களுக்கும் தீபாவளி நல் வாழ்த்து(க்)கள்.

இது அஞ்சுநாள் சூறாவளி:-)))

நியூஸி குடிமக்களுக்கு ஆஸி போக விஸா தேவை இல்லை. அதே போலத்தான்
அவுங்களுக்கும். கையிலே நாலு காசு சேர்த்தா, அப்படியே போய் டிக்கெட்( சிலசமயம்
ஏர்ப்போர்ட்லேயே )வாங்கிக்கிட்டு பஸ்ஸுலே போறமாதிரி போய்க்கிட்டே இருக்கறதுதான்.

நியூஸி பாஸ்போர்ட் இருந்தா உலகின் பல பாகங்களுக்கு விஸா வேணாம்.
ஆனா, நாங்க இந்தியா போக விஸா எடுக்கணும்(-:

said...

வாங்க வல்லி.
இந்த 'ஊர்தி' இப்ப புதுசா வந்துருக்கு. இது ஒரு ஆஸ்தராலியன் கம்பெனி நடத்துது.
இதோட கூட்டு' க்வாண்டாஸ் ஏர்வேஸ்'

சிலப்ப 139$ன்னு விளம்பரம் பண்ணுவாங்க. பொடி எழுத்துலே ட்யூட்டி, ஏர்போர்ட் டாக்ஸ் அது இதுன்னு
சேர்த்து 400$ ஆயிரும். 700க்கு இது மேல்தானே?

said...

வாங்க சிவகுமார்.

இங்கேயும் ப்ளாஸ்டிக் புன்னகை இருக்கு:-)))))

said...

வாங்க சிவகுமார்.

இங்கேயும் ப்ளாஸ்டிக் புன்னகை இருக்கு:-)))))

said...

ஜோ,

'நடக்க முயற்சி'யா? நல்லது. வீட்டுலே ஒரு சாமானையும் கீழே மறந்தும்
வச்சுறாதீங்க. டேபிள் க்ளாத் கூடவே கூடாது. கவனமா இருக்கணும்.

said...

வாங்க பாபா.
நாமும் நாலு காசைத் தேத்தணும். இல்லையா? :-))

said...

வாங்க ஜெயஸ்ரீ.

உங்களுக்கும் ,உங்கள் குடும்பத்தாருக்கும் தீபாவளி நல் வாழ்த்து(க்)கள்.

said...

KRS,

என்ன இன்னிக்கு ஆஜர்? தீபாவளிக்கு ஸ்கூல் லீவாச்சேப்பா:-)))))

போனவருசம் பாலாவும் இதேதான் சொன்னார். நீஈஈஈஈஈஈஈஈஈண்ட தீபாவளி
உங்களுக்குத்தான்னு:-))))

சரி. கொண்டாடுங்க. நடக்கட்டும். ஆனா இங்கே 'எங்க தீபாவளி' நவம்பர் 11 வரை
இருக்காக்கும்:-)))))


உங்களுக்கும் ,உங்கள் குடும்பத்தாருக்கும் தீபாவளி நல் வாழ்த்து(க்)கள்.
ஷ்ரவணுக்கு ஸ்பெஷல் ஆசீர்வாதங்களும், அன்பும்.

said...

நன்றி வைசா.

உங்கள் அனைவருக்கும் வாழ்த்து(க்)கள்.

said...

தீபாவளி நல்வாழ்த்துகள்!

said...

துளசி அக்காஉங்களுக்கும் உங்க ஆத்தில் உள்ள அனைவருக்கும் என் உளம்கனிந்த தீபாவ்ளி நல் வாழ்த்துக்க்ள்.

said...

//எங்க தீபாவளி நவம்பர் 11 வரை//

அட்றா சக்கை!
அப்ப நவ,11 வரை லீவுதேங்

said...

நண்ரி உதயகுமார்.

உங்களுக்கும் எங்களின் தீபாவளி வாழ்த்து(க்)கள்.

said...

வாங்க சிறில்.

ரொம்ப நன்றிப்பா.

உங்காத்துலேயும் எல்லாரையும் கேட்டதாச் சொல்லுங்கோ.

உங்களுக்கும் பண்டிகைக்கால வாழ்த்து(க்)கள்.

said...

சிஜி,

வாங்க. வர வர எதுக்குத்தான் சந்தோஷப்படறதுன்னு ஒரு 'இது '
இல்லாமப் போச்சோ? :-))))))))

said...

துளசி அக்கா, தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் எனது தீபாவளி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சிட்னியில் தங்களையும் தங்கள் கணவரையும் மற்றும் சிட்னி சக பதிவர்களையும் சந்தித்தது ஒரு நல்ல மகிழ்ச்சிகரமான அநுபவம்.

said...

துளசியக்கா!
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்
யோகன் பாரிஸ்

said...

என்ன டீச்சர் இப்படி பண்ணீட்டிங்க1 சிட்னி போறோம்னு ஒரு வார்த்தை சொல்லாக்கூடாது.அங்கேதானே
நம்ப பொண்ணும் பேரனும் இருக்கான். பாத்திருக்காம்லே.
உளம் கனிந்த தீபாவளி வாழ்த்துக்கள் உங்களுக்கும் குடும்பத்துக்கும்.
இன்னும் நிறைய போட்டோ வரும்னு சொல்லுங்க.குறைந்த கட்டணம் குறைந்த வசதி.மாவுக்கேத்த பணியாராம்

said...

அதென்ன உதயகுமாருக்கு மட்டும்
"நண்ரி"; மற்றவங்களுக்கு நன்றி.
ஏன் இந்த வித்தியாசம்?ட்டீச்சர் எல்லாருக்கும் பொதுவா இருக்கோணும், ஆமா!

said...

கனக்ஸ்,

எனக்கும் உங்களையெல்லாம் சந்தித்ததில் ஏகப்பட்ட மகிழ்ச்சிதான்!
இப்பத்தான் நம்ம சந்திப்பு அனுபவங்களை எழுதிக்கிட்டு இருக்கேன்.

உங்களுக்கும் எங்கள் அன்பான தீபாவளி வாழ்த்து(க்)கள்.

said...

யோகன்,

பாரீஸ்லே எப்படி இருக்கு தீபாவளிக் கொண்டாட்டங்கள்?

பட்டாஸ் வெடிக்க அனுமதி உண்டா?

நாங்கள் போன' கை ஃபாக்ஸ் டே'க்கு வாங்கி வச்சிருந்த
'கம்பி மத்தாப்புகளை' ( உன்னைக் கண்டு நானாட ...... பாட்டுப் படாமல்)
கொளுத்திக் கொண்டாடி முடிச்சாச்சு.
உங்களுக்கும் எங்கள் அன்பான தீபாவளி வாழ்த்து(க்)கள்.

said...

வாங்க தி.ரா.ச.

உங்க மகள் அங்கே இருக்காங்களா? தெரியாமப் போச்சே.

அடிக்கடி போய் வர்ற இடம்தான். அடுத்தமுறை முன்னாலேயே உங்களுக்குச் சொல்றேன்.

//மாவுக்கேத்த பணியாராம் // கரெக்ட்டாச் சொன்னீங்க.

உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எங்கள் அன்பான தீபாவளி வாழ்த்து(க்)கள்.

said...

சிஜி,

வாங்க. 'வகுப்புலே மாணவர்கள் தூங்காம இருக்காங்களா'ன்னு பார்க்கத்தான்
அப்பப்ப இப்படி எதாவது ஸ்பெல்லிங் மிஸ்டேக் போட்டுப் பார்க்கறது.
இது என் வழக்கம்:-))))))))))))))))( அப்பாடா...... எப்படியோ இந்த முறை தப்பிச்சுட்டேன்)
விழித்திருந்ததுக்கு உங்களுக்கு ஒரு சிறப்பு 'நன்றி'

said...

50!!!

said...

//வகுப்பிலே மாணவர்கள் தூங்காமெ
இருக்காங்களா னு டெஸ்ட்......//

ட்டீச்சர் விழிப்பா இருக்காங்களானு
நாங்களும் டெஸ்ட் பண்றது வழக்கம்..
அதான் 'வாடிகால்'(வடிகால்)னு போட்டு டெஸ்ட் செஞ்சோம்

said...

பயணத்தொடரைப் படிக்க மீண்டும் வந்துவிட்டேன் அக்கா. :-)

said...

வாங்க கொத்ஸ்.
எண்ணிக்கையிலேதான் இருக்கு விஷயமுன்னு சொல்லாமச் சொல்லிட்டீங்க:-))))

said...

சிஜி,

பேராசிரியரா இருந்துக்கிட்டு, இப்படி டீச்சரோட சரிக்குச்சரி மல்லுக் கட்டுறது நல்லால்லே .ஆமாம்:-))))

said...

குமரன் தம்பி வாங்க.
ஆன்மீகச் செம்மல்கள் வருகை! நல்லா இருக்கீங்களா?

said...

வலைப்பதிவைத் தொகுத்தளித்தமைக்கு நன்றி.

said...

வசந்தன்,

வாங்க வாங்க. நலமா?

உங்களைப் பத்தியும் நானும் மழையும் கதைச்சோம்ப்பா. ஆமாம், ப்ரிஸ்பேன்லே இருந்து யாராவது
வலை பதியறாங்களா?

said...

பெரிய "தலை"(தருமி)யே படத்தத் தூக்கிடலாமான்னு இருக்க சொல்ல நம்மள மாதிரி கத்துக்குட்டிங்க படத்தையெல்லாம் பப்ளிக்கா போட்டுகிட்டு...நீங்க பாத்ததே போதும் ஆயிரம் பதிவர் பாத்ததுக்கு சமம்.;)

said...

வாங்க டீக்கடைக்காரரே.

உங்க விருப்பம்போலவே ஆச்சுன்னு வச்சுக்குங்க.

ஆமாம், தருமி அந்த ப்ளாக் & ஒயிட்டைத் 'தூக்கிட்டு'க் கலர் போட்டோ போட்டதை பார்க்கலையா? :-)))))