Monday, November 20, 2006

வர்ட்டா மக்களே:-)))

ஒரு வாரம் ஓடிருச்சு. உங்களையெல்லாம் நல்ல பாடகர்களா ஆக்கியிருப்பேனே? அதுக்கு நியாயமா நீங்கதான் எனக்கு நன்றி சொல்லி இருக்கணும்:-)))


சரி, இப்ப எல்லாருமா சேர்ந்து, கோரஸா அந்தப் பாட்டைப் பாடுங்க,
பார்க்கலாம்... ரெடி, ஒன், டூ, த்ரீ


" சோதனை மேல் சோதனை...போதுமடா சாமி......."


சபாஷ்! நல்லா தேறிட்டீங்க. பேஷ் பேஷ்.


நம்ம 'ங்' கேட்ட தேதிகள் சரியா இருக்குமுன்னு தோணியதாலெ மறுவார்த்தை பேசாமச் சரின்னுட்டேன்.


'வலை பதிவர்களுக்கு அவர்களின் மறுபாதி செய்வது உதவியா இல்லை உபத்திரவமா?'


என்ன ஒரு அழகான, அர்த்தமான, ஆழமான தலைப்பு இல்லை? பட்டிமன்றம் ஒண்ணு கட்டாயமா நடத்திறணும்.


இதை எடுத்துக்கொடுத்தவர்கூட உங்களுக்கெல்லாம் நல்லா அறிமுகமானவர்தான்.ஒரு வலைப்பதிவாளரின் மறுபாதி. அப்பப்ப அவரை இழுக்கலைன்னா எனக்குத் தூக்கம் அம்பேல்:-)))))


யோசிச்சுப் பார்த்தா நம்ம 'கேஸ்'லே உதவிதான் ரொம்பச் செஞ்சுருக்கார். நட்சத்திரவாரம் பார்த்து ஊரைவிட்டே ஓடிட்டார். நானும் இந்த உதவிக்குஎன்ன கைமாறுன்னு கலங்கிப்போய் கணினியே கதின்னு கிடந்தேன்.



முதல் பதிவு போட்டதும் நம்ம பொன்ஸ் ஓடோடி வந்து தன்னோட பொன் கையாலே பின்னூட்டத்தைப் போணி பண்ணாங்க. தங்கக் கைங்க! ச்சும்மா சொல்லக்கூடாது. கடையில் யாவாரம் அமோகம்.


வழக்கமா வர்றவங்களோட, புது வாசகர்களும் வந்துபோக ஆரம்பிச்சுருக்காங்க.ரொம்ப மகிழ்ச்சியான விஷயம்.


இதுலே நம்ம ப்ளொக்கர் ஒருத்தர் இங்கிலிபீஸுலே எழுதிக்கிட்டு இருந்தவரைப் படுத்துனதுலே அவரே தமிழுக்கு வந்துட்டார். புது விவசாயி (இ)கலப்பையாலே உழ ஆரம்பிச்சுட்டார். உள்ளுக்குள்ளே தீயா கனன்று நின்னவரை 'அகத்தீ' ' ன்னு ஆக்கியாச்சு. (அவருக்கு உதவி தேவையாம். கொஞ்சம் பாருங்களேன்.)


மொத்தம் இதோட சேர்த்து பத்துப்பதிவுகள். ரொம்ப ஓஹோன்னு இல்லைன்னாலும்,ஓரளவு சுமாரா வந்துருக்குன்னு நினைக்கிறேன்.


அந்த இத்தாலிய மொழி சினிமாவைப் பத்தின மேல் விவரம் கிடைச்சிருக்கு.படத்தோட பேரு 'டிக்கெட்ஸ்' . மூன்று பகுதிகளாக மூன்று இயக்குனர்கள் இயக்குனது, ஒரு இங்கிலீஷ்காரர், ஒரு இத்தாலியர், ஒரு இரானியர்னு.


மடிக்கணினி தாத்தா- ஆங்கிலேயர்

குண்டு அம்மா - இத்தாலியர்

அல்பேனியக் குடும்பம்- இரானியர்


ஒரு ப்ளைட்லெ பார்க்க விட்டுப்போன விவரத்தை, இன்னொரு ஃப்ளைட்டுலே போய்ப் பார்த்துக்கிட்டு வந்துட்டார்:-))))) 'அதெல்லாம் விட்டதைப் புடிச்சுருவொம்லே!'


சினிமா & சமையல் பதிவுகளிலே ஆர்வமா பலரும் கலந்துக்கிட்டீங்க. அதுபோலத்தான் புதிர்விடை கண்டுபிடிப்புகளிலும். இன்னும் நம்ம மனசுலே குழந்தைத்தனத்தின் மிச்சம் இருக்குதானே? இது வாழ்க்கைக்கு ரொம்ப முக்கியம். விருப்பு வெறுப்புன்னு ரொம்ப ஒண்ணும் குழப்பாத குழந்தைமனசு, எல்லாத்தையும் தெரிஞ்சுக்க இஷடப்படும் குழந்தை மனசோட பரபரப்பு, ஆர்வம் இதுதான் வாழ்க்கையை இன்னும் சுவையா ஆக்குது.


விருப்பு வெறுப்புன்னதும் இன்னொண்ணும் சொல்றேன். மகிழ்ச்சி வருத்தம். இந்த வாரம் மகிழ்ச்சியிலே ஆழ்த்துனது ரெண்டு பதிவுகள், அதே போல வருத்தம்( கொஞ்சம்தான்) பட வச்சதும் இன்னும் ரெண்டு பதிவுகள்.


நம்ம மலைநாடான் பாட்டாப் போட்டுட்டார்.


நம்ம மா.சிவகுமார் மகுடமே சூட்டிட்டார்.


இது மனமகிழ்ச்சியைத் தந்துச்சு.


அப்ப வருத்தம் தந்தது? வேணாம். அது இருந்துட்டுப் போட்டும்.

எழுதுனவங்களுக்கு அது ஓரளவு மகிழ்ச்சியைத் தந்துருக்கலாம்தானே?
ரெண்டு இப்படின்னா ரெண்டு அப்படி. பேலன்ஸ் சரியாப்போச்சு:-)))


இதுபோல உங்களோடு மனம்விட்டுப் பேச ஒரு சந்தர்ப்பம் உண்டாக்கித் தந்த நம்ம 'ங்' காருக்கு நன்றி.


வீட்டுக்கு வந்தவங்களுக்கு ஒரு காப்பித்தண்ணி கூடக் கொடுக்கலைன்னா எப்படி? இருந்து சாப்புடறவங்களுக்கு ஒரு ச்சின்ன விருந்தாவது வைக்காட்டா எப்படி? (அதான் விர்ச்சுவல் விருந்து வச்சுட்டொம்லே?)


தலைக்கனம் இல்லாம இருக்கணும் என்றதுதான் என்னோட விருப்பம்னு சொல்லிக்கிட்டாலும் உங்க அன்பையும் நட்புணர்வுகளையும் அனுபவிச்சதுலே உண்மையாவே நெஞ்சும் தலையும் கனத்துத்தான் போச்சு.மொத்தத்துலே கூட்டிக்கழிச்சுப் பார்த்தா நிறைவுகள்தான் அதிகம்.


அடுத்தவாரம் மின்னப்போகும் நட்சத்திரத்துக்கு வரவேற்பும் வாழ்த்து(க்)களும் சொல்லிக்கறேன்.


அனைவருக்கும் என் அன்பும் ஆசிகளும்.


நல்லா இருங்க. வர்ட்டா மக்களே:-)))

62 comments:

said...

ஓ.கே மிஸ்!
டாட்டா மிஸ்!
பை பை மிஸ்!

(எங்க டியூஷன்லே கிளம்பும்போது இப்படித்தான் சொல்லுவோம், 6வது படிக்கும்போது)

said...

கண்ணுபடப் போகுதம்மா.....பார்த்து..


ஆசீர்வாதத்திற்கு நன்றி!

"ஆசி எனக்கு
வாதம்....."(கலைவாணர் என்.எஸ்.கே)

இன்னிக்கு நான் பர்ஸ்ட்டு

said...

வணக்கம் துளசிம்மா

பதில்களை உடனுக்குடன் போடமுடியாவிட்டாலும், எல்லாப் பதிவையும் வாசித்தேன். அருமையான நியூசிலாந்து சமையல் போங்கள்.

said...

அட, ஒரு வாரம் ஓடியே போச்சா !

நல்லா இருந்தது இந்த வாரம்.

திரும்பவும் சந்திப்போம் (உங்க அடுத்த பதிவில)

said...

வாங்க சிபி.

"பத்திரமாப் போயிட்டு நாளைக்கு வாங்க.
பராக்குப் பார்த்துக்கிட்டு அங்கே இங்கே நிக்காம ஒழுங்கா
வீடு போய்ச்சேரணும்."

டியூஷன் முடிஞ்சு, வீட்டுக்குப் போற பசங்களுக்கு
டீச்சருங்க இப்படித்தான் சொல்றது:-)))

said...

சிஜி,

நீங்க ரெண்டாவதுங்க. சிபி முந்திக்கிட்டாரு. ஓடறதுக்கு இவ்வளவு போட்டியா
உங்களுக்குள்ளே? :-))))

"ஆசி எனக்கு
வாதம் உனக்கு
ஞாபகம் இருக்கு":-))))

said...

வாங்க பிரபா.

வந்து போனேன்னு சொன்னதே திருப்திதான். அதிலேயும் சமையல் அருமைன்னு
பாராட்டுனதுக்கு.......... நன்றி:-)))

said...

ஜெயஸ்ரீ,

//நல்லா இருந்தது இந்த வாரம்.//

நன்றிங்க, அன்புக்கும் ஆதரவுக்கும்.

said...

ரொம்ப டேங்ஸ் டீச்சர்.

திருவிழா இனிதாக முடிந்தது, இனி வழக்கம் போல் பள்ளிக்கூடம் நடக்கும். நாளை முதல் அனைவரும் கிளாசுக்கு வரவும்.

said...

உங்களுக்கு ஃபேர்வெல் பார்ட்டியும் கொடுத்தாச்சு!

(ஹிஹி.. ஆனா தமிழ்மணத்துலதான் ஏனோ சேர்க்க முடியலை)

said...

வாங்க கொத்ஸ்.

கடமை தவறாத 'க்ளாஸ்' லீடர்.
ரொம்பப் பெருமையா இருக்கு.

said...

சிபி,



இப்படி என் கண்ணுலெ (ஆனந்த) கண்ணீர் வர வச்சுட்டீங்களே!

நன்றி நன்றி நன்றி.

said...

துளசியம்மா,

எல்லோரும் பூனை முகத்தில் தான் முழித்தோம் !

உங்கள் ஜி.கே தமிழ்மண முகப்பில் அழகோ அழகு !

said...

வாங்க ஜிகே.

//எல்லோரும் பூனை முகத்தில் தான் முழித்தோம் //

மங்களம் உண்டாகட்டும்:-)

ஒரிஜனல் ஜிகே

தமிழ்மண முகப்பில் இருப்பவர் 'லேட்' கப்பு.

said...

துளசி இவ்வளவு நாள் சூரியன் (சூரியனும் நட்சத்திரம் தானே) மாதிரி நல்லாவே ஒளி கொடுத்தீங்க.. வாழ்த்துக்கள்.. உங்களைப் போலவே நானும் அடுத்த வாரத்திற்க்கான நட்சத்திரத்தை எதிர் நோக்குகிறேன்

said...

வாங்க கார்த்திக்.

வாழ்த்து(க்)களுக்கு நன்றி.

என்ன சூரியனா?

ஜோக்கடிக்காதீங்க.
இங்கெ ஸ்ப்ரிங்/சம்மர்ன்னு இருக்கோம். இன்னும் பளிச்சுன்னு
சூரியன் வந்த பாட்டைக் காணோம்(-:

said...

பை துளசிக்கா.. என் பேருமா இந்தப் பதிவுல!! ஆஹா.. என்ன சொல்ல!! சிபி போட்டிருந்த யானைப் படம் மாதிரி எனக்கும் ஒரே அழுவாச்சியா வருது..

சரி, இந்த அகத்தீ அவங்க சுட்டி கொடுங்களேன்.. உதவி கேட்கிறாங்கங்கிறீங்களே..

said...

நீங்க எப்பவுமே ஸ்டார் தானே.. எதுக்கு பை பை எல்லாம்..

நல்லா போச்சு துளசியக்கா, (எல்லாரும் துளசியம்மா/ அக்கான்னு சொல்றாங்க, நான் மட்டும் துளசின்னா அதிக பிரசங்கி மாதிரி இருக்கு..:-)))..)

//'வலை பதிவர்களுக்கு அவர்களின் மறுபாதி செய்வது உதவியா இல்லை உபத்திரவமா//

கடைசியில..உங்க style ல..

ஏதோ நம்மால ஆனது.. இல்ல?

said...

"ஹலோ மிஸ் ஹலோ மிஸ்
எங்கே போறீங்க!", என்ற பாட்டு தான் நினைவுக்கு வருது டீச்சர்.

காபியில் ஆரம்பிச்சீங்க!
நடுவில் சினிமாக்கு கூட்டிப் போனீங்க!
பெரும் விருந்தில் முடிச்சீங்க!!

இதுக்குப் பேர் தான் தமிழ்நாட்டு விருந்தோம்பல்; அதை நியூசியில் இருந்து வழங்கிய உங்களுக்கும், உங்க "அவருக்கும்" எங்கள் அனைவரின் மனமார்ந்த நன்றிகள்!!

போயிட்டு வாங்க டீச்சர்! ஊருக்குப் போய் சேர்ந்ததும் மறக்காம லெட்டர் போடுங்க டீச்சர்!

said...

போற போக்கில வரப்போற நட்சத்திரத்துக்கு வாழ்த்து சொன்னது, நல்லா இருந்த்துங்க.

said...

வாங்கம்மா பொன்ஸ்.

தங்கக்கைகாரி(கையே)

இதோ உதவி கேட்டவர் இங்கே பாருங்க.

அகத்தீ

said...

மங்கை,

எல்லாரும் கூப்புடற மாதியே நமக்கும் வந்துருதுல்லே? :-)

இப்படித்தான் என் பொண்ணு ஒண்ணாப்புப் படிக்கையிலே பசங்க எல்லாம்
வீட்டுக்கு வந்து விளையாடுங்க. அவுங்க எல்லாம் துள்சி ன்னு கூப்புடறதைக் கேட்டிட்டு
இவளும் 'துள்சி'ன்னு கூப்புட்டுட்டு அப்புறம்"oops" ன்னு சொன்னா:-)))

said...

வாங்க KRS,
// ஊருக்குப் போய் சேர்ந்ததும் மறக்காம லெட்டர் போடுங்க //

முந்தி , நாங்களும் இப்படித்தான் சொல்வோம்.

"லெட்டர் எழுத நேரமில்லைன்னா ஒரு மணி ஆர்டர் பண்ணுங்க. நீங்க
பத்திரமாப் 'போய்ச் சேர்ந்துட்டீங்க'ன்னு தெரிஞ்சுக்குவோம்"

said...

வாங்க குமார்.

போறவங்க, வாறவங்களை வரவேற்கணுமா இல்லையா? :-)

இதோ இன்னும் சில மணி நேரத்துலே புது நட்சத்திரம் வந்துருவாங்க.

said...

நண்பர் ஆப்பு அவர்களே,

உங்க பின்னூட்டம் 'ஆபத்தா' இல்லேன்னாலும் அதை பிரசுரிக்க
முடியாமைக்கு வருந்துகின்றேன்.
நன்றி.

said...

டாடா மிஸ்...
தேங்க்யூ மிஸ்...

//எங்க டியூஷன்லே கிளம்பும்போது இப்படித்தான் சொல்லுவோம், 6வது படிக்கும்போது)//

6வது படிக்கும் போதுனா என்ன அர்த்தம்? இப்போ மட்டும் என்ன IAS படிச்சிருக்கீங்க? இப்பவும் அதே 6 தானே?:)))))


அன்புடன்...
சரவணன்.

said...

துளசியக்கா, நீங்கல்லாம் என்னைக்குமே வலையுலகின் உதிராத நட்சத்திரங்கள்ல ஒருத்தர். (ஐஸெல்லாம் இல்லங்க. நிஜமாத்தான்) அதனால இந்த 'வர்ட்டா' எல்லாம் நீங்க எங்கேயோ பொறமாதிரில்லாம் இல்லை. எப்பயும்போல தொடந்து உங்க பதிவுகளை எதிர்பாத்திட்டு இருக்கோம்.

said...

மொத்தம் இதோட சேர்த்து பத்துப்பதிவுகள். ரொம்ப ஓஹோன்னு இல்லைன்னாலும்,ஓரளவு சுமாரா வந்துருக்குன்னு நினைக்கிறேன்.//

அப்படியா.. சரி:)

Anonymous said...

//இதுலே நம்ம ப்ளொக்கர் ஒருத்தர் இங்கிலிபீஸுலே எழுதிக்கிட்டு இருந்தவரைப் படுத்துனதுலே அவரே தமிழுக்கு வந்துட்டார். புது விவசாயி (இ)கலப்பையாலே உழ ஆரம்பிச்சுட்டார். உள்ளுக்குள்ளே தீயா கனன்று நின்னவரை 'அகத்தீ' ' ன்னு ஆக்கியாச்சு. (அவருக்கு உதவி தேவையாம். கொஞ்சம் பாருங்களேன்.)//

படித்தேன். நெகிழ்ந்தேன். உங்கள் பெருந்தன்மையை எண்ணி வியக்கிறேன். God bless you akka.

said...

பை பை...கலக்கிட்டீங்க...

said...

//லெட்டர் எழுத நேரமில்லைன்னா ஒரு மணி ஆர்டர் பண்ணுங்க. நீங்க
பத்திரமாப் 'போய்ச் சேர்ந்துட்டீங்க'ன்னு தெரிஞ்சுக்குவோம்"//

"இக்கடிதம் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் பதில் கடிதம் போடவும்" னு கூட சில பேரு எழுதறாங்க!

said...

துளசியக்கா,

அடுத்து வர்ற நட்சத்திரதுக்கு வெல்கம் விஷ் என்ற விஷயம் பின் பற்றப்பட வேண்டிய நல்ல அம்சம்.

பெரியவங்க பதிவுகளில் நல்லது இதுமாதிரி எதாச்சும் கிடைச்சுட்டே இருக்கும். என்றைக்கும் நட்சத்திரம் நீங்க!

தங்கள் ஆசிகளுகு என் நன்றிகள்!

said...

வாங்க சரவணன்.

சரி . டாட்டா....பை பை

ஓவர் டு சிபி:-))))

said...

வாங்க அருள் குமார்.

ஜொலிச்சுக்கிட்டே வர்றீங்க? நாடகம் உண்டா?
'மரபு' ன்னு ஒண்ணு இருக்கே அதை மீற முடியுமா?

காணாமல் போனவர்கள் பட்டியலைச் சரி பார்க்கவும்:-)))

said...

வாங்க டிபிஆர்ஜோ.

நீங்க சொன்னாச் சரி:-)

said...

அகத்தீ,

என்னங்க நீங்க? வுட்டா அக்காவுக்குக் 'கோயில்' கட்டிருவீங்க போல:-)))))

ஒருத்தருக்கொருத்தர் உதவி செய்யணுமா இல்லையா? அப்படித்தான் இதுவும்.
இப்பப் பாருங்க நம்ம 'பொன்ஸ்' உதவிக்கரம் நீட்டி இருக்காங்க.
'சிக்' எனப் பிடித்தேன்னு இருங்க:-))))

said...

வாங்க செந்தழல் ரவி.

'ஹை & பை' ... யா? :-)

said...

சிபி,

//இக்கடிதம் கிடைத்தாலும்
கிடைக்காவிட்டாலும் பதில்
கடிதம் போடவும்" //

இது நல்ல கூத்து:-)))

சரவணன் என்னவோ கேக்குறாரு!

said...

ஹரிஹரன்,

இதைத்தான் நானும் சொல்றேன்.
கண்ணையும், காதையும் மட்டுமில்லை. நம்ம மனசையும்
திறந்து வச்சுருந்தா..... எத்தனையோ நல்ல விஷயங்கள் கிடைக்கும்.

கொட்டிக்கிடக்கு.
கொஞ்சம் கவனிப்பாப் பார்க்கணும்:-))))))

said...

தமிழ் மணத்தில் மணம் கமழ செய்த நல்ல வாரம்.

வாங்க வாங்க!!! (வர்ட்டானு கேட்டீங்களே அதுக்கு தான் ;-) )

said...

//6வது படிக்கும் போதுனா என்ன அர்த்தம்? இப்போ மட்டும் என்ன IAS படிச்சிருக்கீங்க? இப்பவும் அதே 6 தானே?:)))))
//

ஆமாங்க! அதே அதே!

துளசியக்காவைப் பொறுத்தவரை நாங்க எப்பபுமே ஸ்டூடண்டுங்கதான்.
(ஸ்டூடண்டு நெ.1 -சிபி ராஜ்)

IAS - இண்டர்நேஷனல் அப்பாவிகள் சொஸைட்டிதானுங்களே!

said...

நல்ல பதிவு. மின்மடல் அனுப்பியதற்கு நன்றி

Anonymous said...

அக்கா!!
போயிட்டு வாங்கோ!
யோகன் பாரிஸ்

said...

துளசிம்மா!

அந்த முப்பரிமானத்துக்க மறைந்திருந்த மரியாதை என்னன்னு கண்டுக்கவே இல்லையே. சரி இன்னொருவாட்டி பாருங்க, உங்கதேசத்தின் மூவர்ணம் தெரியும். என்ன வெள்ளைப்பின்னியில் வெள்ளை தெரியாதென்பதற்காக கொஞ்சூண்டு மஞ்சள் கலந்திருக்கேன்.

மாபெரும் சபைதனில் நீநடந்தால் ... பாடத்தோனுது
நன்றி!

said...

//'ஹை & பை' ... யா? :-)//
ம்.
முதல் பதிவும் இந்த பதிவும்தான் படித்தேன். அதனால தாமதமான வரவேற்பு மற்றும் வழியனுப்பு வாழ்த்துகள் :-)

Anonymous said...

//என்னங்க நீங்க? வுட்டா அக்காவுக்குக் 'கோயில்' கட்டிருவீங்க போல:-)))))//

துளசி அக்கா....கோயில் கட்டுவதை விட இதயத்தில் இடம் கொடுப்பதை நான் பெரிதாக எண்ணுகிறேன். You are in my heart as a great personage whom I respect.

//இப்பப் பாருங்க நம்ம 'பொன்ஸ்' உதவிக்கரம் நீட்டி இருக்காங்க.
'சிக்' எனப் பிடித்தேன்னு இருங்க:-))))//

பொன்ஸ்க்குகாக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன்.

said...

//அடுத்தவாரம் மின்னப்போகும் நட்சத்திரத்துக்கு வரவேற்பும் வாழ்த்து(க்)களும் சொல்லிக்கறேன்.//

மிக்க நன்றி துளசியக்கா :)

said...

வாங்க நன்மனம்.

நன்றிங்க.

தோ,வந்ட்டேன்..........:-)



சிபி,

நீங்க 'அந்த' சிபியா? :-)



லொள்ளு சபா வாங்க.

உங்க பதிலுக்கும் நன்றிங்க.


யோகன்,

நன்றி.

said...

முத்துக் குமரன்,

வாங்க வாங்க.
அப்படொ ஒண்ணும் நீங்க ரொம்ப எதையும் மிஸ் பண்ணலை.
போட்டதுலே இது ரெண்டும்தான் கொஞ்சம் உருப்படியா இருந்துச்சு:-))))


அகத்தீ,

'உதவிக்கு மக்கள்' வந்துக்கிட்டு இருப்பாங்கன்னு நினைக்கிறேன்.


அருள்குமார்,

நீங்க இங்கே என்ன செய்யறீங்க?

கவிதையெல்லாம் அதுக்குள்ளெ படிச்சு முடிச்சாச்சா?

'டும்டும்'வேற நெருங்குதுன்னு பொன்ஸ் எழுதி இருந்தாங்க.

said...

வாங்க மலைநாடான்.

அடடா.... நீங்க சொன்னபிறகுதான் அது எந்த முப்பரிமாணமுன்னு
'கண்டு பிடிச்சேன்'
'சட்'ன்னு மனசுலே 'க்ளிக்' ஆகலை(-:

நன்றிங்க.

said...

வலைப்பதிவர் சந்திப்பிலே ஒருவர் சொன்னார்: “யாராவது உங்க வீட்டுக்கு வந்தா நீங்க அவங்க வீட்டுக்குப் போறதுதான் மரியாதை”அப்பிடீன்னு. வந்துட்டேன்… உங்க வீடு ரொம்ப சுத்தமா விரும்பத்தக்கதா நட்புணர்வோட இருக்கு. ரிமோட் வைச்சிக்கிட்டிருக்கிறது நம்ம ஆள்தான். எனக்கென்னவோ அவருக்கு நம்மைவிட அறிவு ஜாஸ்தின்னுதான் தோணுது.

இப்படிக்கு
மற்றுமொரு யானை பூனை நாய் பிரியை

said...

வாங்க தமிழ்நதி.

//வலைப்பதிவர் சந்திப்பிலே ஒருவர் சொன்னார்: “யாராவது
உங்க வீட்டுக்கு வந்தா நீங்க அவங்க வீட்டுக்குப் போறதுதான்
மரியாதை”அப்பிடீன்னு.....//

நல்ல விஷயங்களை யாரு சொன்னாலும் கேட்டுக்கணும்தானெ? :-)))

//இப்படிக்கு
மற்றுமொரு யானை பூனை நாய் பிரியை //


ஆஹா..... வாங்க நம்ம கூட்டம் கொஞ்சம் கொஞ்சமா வளருது. உங்காளு
இப்பச் சென்னையிலேயா இருக்கார்? அவர் பேரு என்னன்னு சொல்லுங்களேன்.

எங்க கோபாலகிருஷ்ணன்(ஜிகே) ரொம்பக் கேட்டதாச் சொல்லச் சொன்னார்.

said...

டீச்சர்,

போனவாரம் வந்து ஓ போட்டுபிட்டு இப்போதான் வர்ரேன். ரெகுலர் அட்டெண்ஸ் இல்லேததுக்காக மன்னிச்சிருங்க டீச்சர்...

:)

said...

//சிபி,

நீங்க 'அந்த' சிபியா? :-)
//

ஆமாம் டீச்சர்.

:-)

said...

டீச்சர், உங்களோட ரெண்டாவது நட்சத்திர வாரமும் நல்லபடியாவே போச்சு. மகசூல் பிரமாதமா இருந்தத நீங்களே சொல்லீட்டீங்க. அப்புறமென்ன...வெளுத்துக் கட்டுங்க....

said...

வாங்க ராம்.

//ரெகுலர் அட்டெண்ஸ் இல்லேததுக்காக மன்னிச்சிருங்க டீச்சர்...//


லேட்டாவாவது வந்துட்டீங்கதானே?

அரியர்ஸ் முடிக்கணும். அவ்வளவுதான் சொல்லமுடியும், ஆமா:-))))

said...

சிபி, அந்த 'சிபி' இந்த 'சிபி'ன்னு இப்பத்தான் தெரிஞ்சது.

விளக்கத்துக்கு(?) நன்றி:-)

said...

வாங்க ராகவன்,

அஞ்சுக்கு மூணு பழுதில்லாமப் போனாவே நல்ல மகசூல்தானே?
அந்தக் கணக்குலே 'ஜெயிக்க'வச்ச மக்கள்ஸ்க்குத்தான்
நன்றி சொல்லணும்.

said...

//வர்ட்டா மக்களே//
மீண்டும் மீண்டும் வாங்க!!

said...

அதுக்குள்ளேயா ஒரு வாரம ஆயிடுத்து. நம்பவே முடியலையே.நல்ல போச்சு டீச்சர்.
நாம் எங்கிருந்தாலும் என்ன நமக்குத் தொழில் எழுத்து. அதைத் தொடருவோம்.கருத்துக்களைப் பதிப்போம்.

said...

வாங்க மணியன்.

வராம எங்கே போறது?
மீண்டும் மீண்டும் இங்கேதான்.

க.கெ.கு. சுவர்? :-))))

said...

வாங்க தி.ரா.ச.

ஒரு வாரம் எப்ப முடியும்னு இருந்துச்சு எனக்கு.

//கருத்துக்களைப் பதிப்போம்.//

பதிவுக்கு 'எழுதி இருந்த' சில விஷயங்களை
எழுதாம விட்டுட்டேன்.

'சண்டை' வேணாமுன்னுதான்:-))))