Friday, November 24, 2006

ஐஸ் உள்ளபோதே...........



முதல் சூரியனில் பார்த்தால்... தகதகன்னு பொன் மஞ்சள். அஞ்சே நிமிஷத்துலே மின்னும் வெள்ளி!


மாசு மருவில்லாத பளிச். தண்ணியிலே அன்னப்பறவை போல மிதந்து வரும் ஒய்யாரம். அலட்டல் இல்லாத பயணம்.


நீளம் முதலிலே ரெண்டு கிலோ மீட்டர்ன்னு சொல்லிக்கிட்டு இருந்தாங்க. அதுவே மூணு வாரத்துக்கு முன்னாலே. இப்போ கொஞ்சம் கொஞ்சமா நீளம் குறைஞ்சு போச்சாம். இப்பத்துக் கணக்கு ஒரு கிலோ மீட்டர்.அகலம்?


காற்றுள்ளபோதே தூற்றத் தெரிந்த மனுஷனுக்கு ஐஸ் உள்ள போதே என்னென்ன செஞ்சுக்கணுமுன்னு தெரியாதா என்ன?



யார் யாருக்குப் பார்க்கணுமுன்னு ஆசை இருக்கு? கை தூக்குங்க............


ஹெலிக்காப்டர்லே போகணுமா இல்லே விமானத்துலே போக ஆசையா?
காசு எவ்வளோ வச்சுருக்கீங்க?


விமானம்ன்னா, உள்ளே 40 பேர் இருப்பீங்க. ஆளுக்கு 395$ ரெண்டரைமணி நேரம் போகவர. இதுலே ஒரு அரைமணி நேரம் இந்த 'ஐஸ்' ஸைச் சுத்திக்கிட்டு. எல்லாரும் நல்லாப் பார்க்கணுங்கறதுக்காக, 1000 அடி உயரத்துலே தாழ்வா பறக்குமாம் ப்ளேன். விமானத்துலே முன்னாலே இருக்கும் இருக்கைகளை எடுத்துருவாங்களாம். அப்ப ஜனங்கக் கூடி நின்னு பார்க்க முடியுமாம். ஷாம்பெய்ன் வேற ஊத்திக் கொடுப்பாங்களாம்.


ஹெலிக்காப்டர்ன்னா 500$ ஆவும்.


1931லே இதே மாதிரி ஒண்ணு வந்துச்சாம். பொழைக்கத் தெரியாத ஆளுங்க, அப்பப் பேசாம இருந்துருக்கு. அது ஆச்சுல்லே 75 வருசம். இப்ப இதைவிட்டா உங்க வாழ்க்கையிலே இதுபோல ஒரு சான்ஸ் கிடைக்காது. என்னா சொல்றிங்க?


'டிமரு'ன்னு ஒரு ஊர் இருக்கு, இந்த தெற்குத்தீவு( நியூஸி)யிலே. அங்கே இருந்து கிழக்குலே 60 கிலோ மீட்டர் தூரத்துலே 'அம்மா' மிதந்துக்கிட்டு இருக்காங்க.


நவம்பர் 25 சனிக்கிழமைதான் ( நாளைக்குத்தாங்க ) முதல் பயணம் ஆரம்பிக்கப்போறாங்க. ஒரு நாளைக்கு6 ட்ரிப் அடிப்பாங்களாம். இப்பவே சனம் டிக்கெட்டுக்கு முண்டியடிக்குதுன்னு சொல்லிக்கிட்டு இருக்காங்க.


இதுலெ ஒரு ஜோடி, அங்கே போய் அதுமேலே நின்னு கல்யாணம் முடிக்கப்போறேன்னு சொல்லுது




ஒரு ஹெலிக்காப்டர்லே பொண்ணு மாப்பிளையும், கல்யாணத்தை நடத்தி வைக்கும் ரெஜிஸ்ட்ராரும் ஐஸ்லே இறங்கி 'I do' சொல்லப் போறாங்களாம். சாட்சி? அதான் ஐஸ் இருக்கே! ஆனா பிற்காலத்துலே எதுனா வம்பு வழக்குவந்தா 'சாட்சி' அம்பேல்:-)


கரையிலே இருந்து 12 நாட்டிகல் மைல் தள்ளி நடக்கற கல்யாணம் சட்டப்படி செல்லாதுன்னு அரசாங்க உள்துறை அறிவிப்புப் போட்டுருக்கு.


எதா இருந்தாலும் இன்னும் ஒரு நாலு வாரத்துக்கு எங்களுக்கு 'ஐஸ்' திருவிழாதான்.


வரணுமுன்னு நினைக்கிறவங்க சீக்கிரம் வந்து பார்த்துப்போங்க.
நேத்து என்னன்னா 'இங்கத்து எதிர்கட்சித்தலைவர் ராஜினாமா பண்ணிட்டார்'னு நியூஸ்.


இவ்வளவு கலாட்டாவுலே இதையாரும் சட்டையே பண்ணலை.


நீங்களே சொல்லுங்க, 'ஐஸ்' முக்கியமா 'அரசியல்வாதி' முக்கியமா?

30 comments:

said...

//நீங்களே சொல்லுங்க, 'ஐஸ்' முக்கியமா 'அரசியல்வாதி' முக்கியமா?//

ஐஸ்தாங்க முக்கியம். என்ன கேள்வி இது. அவங்க என்ன ஷூட்டிங்குக்கு அங்க வந்திருக்காங்க. அதைப் பத்தி ஒண்ணுமே சொல்லலையே. அவங்க படம் ஒண்ணு போட்டு இருக்கலாமில்ல.

said...

//யார் யாருக்குப் பார்க்கணுமுன்னு ஆசை இருக்கு? கை தூக்குங்க............


நான் முத ஆளா கை தூக்கிக்கிறேன்..

Anonymous said...

ஐஸ்வர்யா வையே இன்னும் பாக்கவில்லை, இதில எங்கே நியூஸ்லாந்து சென்று ஐஸ் மலையைப் பார்ப்பது. எனக்கும் ஆசையாத்தான் இருக்கு, ஆன கொஞ்சம் தாமதமாகுமே பரவாயில்லையா, ஒருவேலை நான் போறதுக்குள்ளே ஒரு கிலோமீட்டர் உருகி குச்சி ஐஸ் சைசுக்கு வந்திடுமே! அங்கே போய் அந்த குச்சி ஐஸ்சை பார்ப்பதற்கு இங்கேயே ஒரு டாலர் கொடுத்து ஒரு நல்ல சாக்லேட குச்சி ஐஸ் வாங்கி சாப்பிட்டுவிடலாம்னு இருக்கேன்..ஆகவே இந்த பயணத்தில் என்னால் கலந்துகொள்ள முடியாது, நீங்க எல்லாம் போயிட்டுவாங்க...
வரும்போது சூடா ஒரு கப் ஐஸ் வாங்கிகிட்டு வாங்க சரியா!

said...

வாங்க கொத்ஸ்.

//அவங்க என்ன ஷூட்டிங்குக்கு அங்க வந்திருக்காங்க.
அதைப் பத்தி ஒண்ணுமே சொல்லலையே.
அவங்க படம் ஒண்ணு போட்டு இருக்கலாமில்ல.//

அவுங்க பாட்டுக்குச் சொல்லாமக்கொள்ளாம வந்துட்டாங்க. அதான்
ரெண்டு படம் போட்டாச்சுல்லெ? :-)))

said...

வாங்க அபி( அரைபிளேடின் சுருக்கம்)

//நான் முத ஆளா கை தூக்கிக்கிறேன்..//

வெறுங்கையா? முழம் போடவா? :-)))

said...

வாங்க பிபி ( பிரியமுடன் பிரேம்)

என்ன இன்னும் ஐஸ்வர்யாவைப் பார்க்கலையா? ரியலி?
அதான் வீட்டுவீட்டுக்கு ஒண்ணு இருக்கேப்பா:-))))

அதுபோட்டும், என்ன...குச்சி ஐஸ் ஒரு டாலருக்குக் கிடைக்குதா?
பரவாயில்லையே. இங்கே அதுவே உங்க $ 2.10 (-:

said...

//முதல் சூரியனில் பார்த்தால்... தகதகன்னு பொன் மஞ்சள். அஞ்சே நிமிஷத்துலே மின்னும் வெள்ளி!
//

கவித... கவித! பின்றீங்களே டீச்சர் :)

said...

ஆ........ அருள்குமார்,

அட! நான் கவிதை(யும்) எழுதிட்டேனா? ஹைய்யோ....... ஆனந்தம்தான்.

ஆமாம், நட்சத்திரத்துக்கு இங்கே என்ன வேலை?

சரியான வால் நட்சத்திரம்.:-))))))

said...

மூணு டவுட்டு!

அந்த ஐஸ் உப்பு கரிக்குமா?
அதில ஜூஸ் போட முடியுமா?

கட்டக் கடைசியா ஒண்ணு

கொத்தனாரே முதல் பின்னூட்டமிடுவதன் ரகசியம் என்ன?

said...

டீச்சர். ஐஸ் அப்படீங்குறது ஐஸ்வரியாவைக் குறிக்குதோன்னு நெனச்சேன். ஆனால் பனிக்கட்டியாமே! அதும் மெதப்புல இருக்குற பனிக்கட்டியாமே! இந்தப் பனிக்கட்டி எந்த டைட்டானிக் மேலையும் மோதி ஒடஞ்சிராம பனிக்கட்டிய பத்திரமாப் பாத்துக்கோங்க. 19ம் நூற்றாண்டுல மைசூர்ல இதவிடப் பெரிய பனிக்கட்டி வந்து விழுந்துச்சாம்.

said...

கரையிலே இருந்து 12 நாட்டிகல் மைல் தள்ளி நடக்கற கல்யாணம் சட்டப்படி செல்லாதுன்னு அரசாங்க உள்துறை அறிவிப்புப் போட்டுருக்கு.//

அட அப்படியா.. அப்ப நா நீன்னு எல்லாரும் முண்டியடிச்சி போய் செஞ்சிக்குவாங்களே:)

said...

//tbr.joseph said...
கரையிலே இருந்து 12 நாட்டிகல் மைல் தள்ளி நடக்கற கல்யாணம் சட்டப்படி செல்லாதுன்னு அரசாங்க உள்துறை அறிவிப்புப் போட்டுருக்கு.//
அட அப்படியா.. அப்ப நா நீன்னு எல்லாரும் முண்டியடிச்சி போய் செஞ்சிக்குவாங்களே:)//

டீச்சர்
நீங்களும் ஜோசப் சாரும் இப்படி ஐடியாவை வாரி வழங்கறீங்களே! நியாயமா?
அங்க என்னடான்னா, நம்ம ராகவன், ரஷ்யாவில் பிச்சாலஜின்னு பிச்சி உதற்றார்! இங்க வந்தா நீங்க இது மாதிரி ஐடியா கொடுக்கறீங்க! :-)

உங்க தலைப்பைப் பாத்துட்டு, நம்ம ஐஸுக்குக் கல்யாண ஏற்பாடு பேசிட்டாங்க; அதனால் "ஐஸ் உள்ளபோதே" அவர் படமெல்லாம் பாத்துடுங்கன்னு சொல்ல வரீங்களோன்னு ஓடியாந்தா....

said...

தம்பி வாங்க.

1. கரிக்காது

2. முடியும்

3. கொத்ஸ்தான் க்( C)ளாஸ் லீடர். அப்புறம் அவர்தான் எப்பவும் விழிச்சிருக்கார்.:-))))

said...

வாங்க ராகவன்,

//19ம் நூற்றாண்டுல மைசூர்ல இதவிடப் பெரிய பனிக்கட்டி வந்து
விழுந்துச்சாம்.//

நிஜமாவா? எப்படி? விளக்கம் தாங்க ப்ளீஸ்.
ஐஸ்பெர்க் வெளியே தெரியறது 20 % தான். தண்ணிக்கடியிலே 80%
இருக்குமாம். இவ்வளோ பெருசு மைசூர்லே....? எங்கேருந்து?

said...

வாங்க டிபிஆர்ஜோ.

//அட அப்படியா.. அப்ப நா நீன்னு எல்லாரும் முண்டியடிச்சி
போய் செஞ்சிக்குவாங்களே:)//

அதான் இல்லே. எவ்வளவோ யோசனை செஞ்சுதான் கல்யாண முடிவே எடுக்குறாங்க.
அதனாலே நோ ச்சான்ஸ்(-:

கல்யாணமுன்னு செஞ்சுக்காட்டியும் ரெண்டு வருஷம் கூடவே வாழ்ந்துருந்தா,
கனவன் மனைவிக்குரிய எல்லா உரிமைகளும் (சொத்துப் பங்கீடு முதல்) இருக்கு.
அதனாலெ கல்யாணத்துக்கு 'அவசரப்படறது' இல்லை.

said...

வாங்க KRS..

அதென்ன ஐஸ்க்கு கல்யாண ஏற்பாடு பேசிட்டாங்கன்னு சொல்றீங்க? அதான்
அவுங்களே 'கடவுள் விதிப்படி ஆகட்டும்'னு சொல்லி இருக்காங்களே.
ஆமாம், கல்யாணத்துக்கும் படம் பண்ணறதுக்கும் சம்பந்தம் இருக்கா என்ன?

said...

அவங்க அவங்க பாணி என்றால் நீங்கள் நம் பாணியில் தூற்றிக் கொள்ளலாமே !

ஒரு சாம்பிள்:

இந்த பனிக்கட்டி சிவபெருமான் திருமணத்திற்கு அனைத்து உலக மக்களும் கூடியதால் தாழ்ந்த வடபுலத்தை சீராக்க வந்த அகத்திய முனிவன் தவமிருந்த வெள்ளி மலை. எழுப்பதைந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை கடலுக்கடியிலிருந்து வெளிவரும். இந்த பனிக்கட்டியின் ஒருபகுதியை கங்கைநீர் போல கும்பத்தில் அடைத்துள்ளோம். சிறிய கும்பம் $10/- பெரியது $25/- வீட்டில் தென்மூலையில் வைத்து பூசை செய்துவந்தால் வெள்ளியும் தங்கமும் நிறையும்( யாருக்கு என்பதெல்லாம் சொல்லக்கூடாது).

சூரியன் கரைப்பதிற்கு முன்னால் நாம் கரைத்துவிடலாம்.

said...

வாங்க மணியன்.

ஆஹா..... இது இது............

ஐய்யோ.... எனக்குத் தோணாமப் போச்சே:-)

இப்ப எப்படி அங்கெ போறது? கும்பம் வேற ரெண்டு அளவுகளில்
ஆர்டர் செய்யணும். எவ்வளோ வேலை பாக்கி இருக்கு. இதோ போறேன்.
கடவுளே... அதுக்குள்ளே 'அதை'க் கரைச்சுறாதே:-)

ஆமாம், எதுக்கு தூற்றணும்? போற்றிக்கலாம்தானே?

said...

//ஆமாம், எதுக்கு தூற்றணும்? போற்றிக்கலாம்தானே?//

ஐஸ் உள்ளபோதே...................
நான் நீங்கள் தலைப்பில் கோடிட்ட இடத்தை நிரப்பினேன்.. காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் ..

"போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே"

Anonymous said...

அக்கா!
நான் வீட்டு பிறிச்சுக்க கனக்கக் கிடக்குது!!
விடியச் சனி வேலையில்ல!!!
மனுசி ஏன் அவ்வளவு தூரம் போறீங்க!!எ
ன்னுறா!!
அதனால அதைப் பார்க்கிறன்!!(கிளீன் பண்ணப் போறன்)
கூப்பிட்டதுக்கு தங்ஸ் அக்கா
யோகன் பாரிஸ்

said...

மணியன்,

நான் 'பார்த்துக்கொள்' னு நினைச்சுக்கிட்டு இருந்தேன்:-)))))

said...

வாங்க யோகன்.

மனுஷி பேச்சைக் கேக்கலைன்னா அதோகதிதான்:-))))

வீடு க்ளீனா? பொன்ஸ் அப்பாவுக்குச் சந்தோஷமா இருக்கும்:-)

நம்மூட்டுலே 'கார்டனிங்' கைகாலெல்லாம் தளர்ந்து போச்சுது.(-:

said...

//கொத்தனாரே முதல் பின்னூட்டமிடுவதன் ரகசியம் என்ன?//


ஒரு வேளை துளசிதான் கொத்தனாராக டபுள் ஆக்ட் குடுக்கறாங்களோ?!!!

said...

'ஐஸாலங்கிடி கிரிகிரி'ன்றது
இதைத்தானோ...?

said...

வாய் விட்டுச் சிரிக்க வைத்த பதிவு, பின்னூட்டங்கள். நல்ல கலகலப்பான வகுப்புதான்.

நான் என்னவோ, தலைப்பைப் பார்த்து பனிக்கட்டியைத்தான் யோசித்தேன்.

அன்புடன்,

மா சிவகுமார்

Anonymous said...

அக்கா, அடுத்த பதிவுக்கு ஒரு ஐடியா...கண்ணாலம் கட்டப் போற அந்த புள்ளங்ககிட்ட ஒரு பேட்டி எடுத்துட்டு ஒரு பதிவு போடுங்க....அதுக்கு தலப்பு "ஐஸ் பாறை மேல் கண்ணாலம் கட்டறது எப்படி?" இது எப்படி? :-)))))

said...

சிஜி,

இதுக்கு அடுத்த வரி இதா?

"சைதாப்பேட்டை வடகறி"

said...

வாங்க சிவகுமார்.

எல்லாரும் உங்களை மாதிரி 'ஸீதா ஸாதா''வா?
ஐஸ் கட்டி ஞாபகம் வர? :-))))

மக்கள்ஸ் ஒரே 'ஜொள்ளு'ங்கதான்:-))))

said...

அகத்தீ,

அதான் அந்த ஐடியா மேலே தண்ணீர் ( வெந்நீர்) ஊத்திருச்சே அரசாங்கம்:-)

பேசாம, 'ஐஸ்மேல் நடக்க இருந்த கல்யாணத்தை தடுத்து நிறுத்துவது எப்படி?'ன்னு
பதிவு போடலாம்:-)))

லேட்டஸ்ட் நியூஸ்: நேத்து 190$க்கு ச்சும்மா ஹெலிக்காப்டர்லே போய் அந்த ஐஸ்
பார்த்துட்டு வர்ற சுற்றுலா நடந்துருக்கு!

said...

கொத்ஸ்,

ச்சும்மா இருங்கப்பா. உண்மைன்னு நினைச்சுக்கப் போறாங்க!
'விக்கிப் பசங்கள்'லே வேற என் 'பேர்' இருக்கு:-))))))

இலவசம்=ச்சும்மா