Wednesday, December 06, 2006

நற்செய்தி!


டிசம்பர் மாசம் எட்டாம் தேதி இப்படி ஒரு நற்செய்தியோடு தேவ தூதன் கேப்ரியேல், மரியத்துக்கு முன்னாலே தோன்றினாராம். அதென்ன நற்செய்தி?


"இந்தப் பூவுலகில் தேவ குமாரன் பிறக்கப் போறார். நீங்க(நம்ம மரியம்/ மேரியம்மா)தான்அந்தக் குழந்தையைப் பெத்தெடுக்கப் போறீங்க"


அதுக்கப்புறம் அந்தக் குழந்தை பிறந்ததும், மத்த விவரங்களும், புது மதம் தோன்றியதும் எல்லாம் ஊர் உலகத்துக்கே தெரியும்.


டிசம்பர் மாசம் ரொம்ப நல்ல மாசம். கிறிஸ்மஸ் வர்றதாலே மட்டுமில்லை,நமக்கும் இது மார்கழியாப் போயிருது. பெருமாளுக்கே உகந்த மாசம்.ஸ்ரீ கிருஷ்ண பகவானே மாதங்களில் 'அவர் மார்கழி' ன்னு சொல்லிட்டார்.



எங்கே பார்த்தாலும் பண்டிகைக்காலக் கொண்டாட்டங்கள்! ஊரே களைகட்டிக் கிடக்கு.இந்த மாசம் மூணாம்தேதி ஞாயித்துக்கிழமை எங்கூருக்கு 'சேண்ட்டா' வந்துட்டுப் போனார்.


இத்தனை வருசம், நம்மளைக் கடந்து போக ஒரு மணி நேரம் எடுக்கும் கிறிஸ்மஸ் சேண்ட்டா பரேடு இந்த வருஷம் 33% கூடுதல் நேரம் எடுத்துக்குச்சு. (ஹா...அங்கேயும் 33% ஆஆஆஆஆ)



இந்தோனேசியர்கள், சோமாலிகள், சீனர்கள், தாய்வான்காரர்கள், கொரியர்கள், ஜப்பான்காரர்கள்னு பல 'எத்னிக்' குழுக்களும் இப்பெல்லாம் ஊர்வலத்தில் பங்கெடுக்கறாங்க. சீன தேசத்தில் தடை செஞ்சிருக்கும் Falun Dafa ன்னு சொல்ற ஒரு ஆன்மீக(?)இயக்கம் சேர்ந்த ஒரு பெரியகூட்டம்( 'நாலு பேருக்கு மேல் இருந்தால் கூட்டம் என்று கொள்க' ன்னு நான் எப்பவும் சொல்றது இங்கே கணக்கில் வராது) சுமார் 100 பேருக்கு மேலே இருக்கும், ஒரே மாதிரி உடைகள் ஒரே நிறத்தில் அணிஞ்சு வந்தாங்க.


சீனர்கள் ஸ்பெஷாலிட்டியான 'லயன் டான்ஸ்' சிங்கம் 'எட்டி எட்டிப் பார்த்துச்சு. அந்த டும் சத்தமே ஒரு அழகான லயத்தோட வருது பாருங்க. கொஞ்சம் விட்டா நானும் ஆடியிருப்பேன்:-))) தூள் கிளப்பிட்டாங்க.


பாலே, அக்ரோபாடிக், பால் டான்ஸ்,டாப் டான்ஸ்ன்னு சொல்லிக்கொடுக்கற பள்ளிக்கூடங்களும், பாட்டு, இசைக்கருவிகள்ன்னு சொல்லித் தர்ற பள்ளிக்கூடங்களும் அவுங்கவுங்க மாணவ மணிகளை ஆட, பாடவிட்டுக் கூட்டிட்டுப் போனாங்க.



நாய்ஸ் க்ளப்( கென்னல் க்ளப்) அழகா நடை போட்டுப் போச்சு. பின்னாலெயே குட்டிக்குதிரைகள் வந்துச்சு.ஐய்யோ... எல்லாம் ச்செல்லம்போல....... பார்க்கவே ஆசையா பொம்மைங்க போல இருக்கே!


எங்க நாடுதான் ஆட்டுக்குப் பேர் போனதாச்சே. ஆளாளுக்கு 14 ஆடு இருக்கு. அதுலெ ஒரு நாலு இன்னிக்கு நகருக்கு விஸிட் அடிச்சது. இடைக்கிடைக்கு மார்ச்சிங் கேள்ஸ், பேண்ட் வாத்திய கோஷ்டி, ஹை லேண்ட் ம்யூஸிக் பேக் பைப் குழுன்னு போகும்போது, ச்சின்னப் பசங்களுக்காக சிம்சன் குடும்பம், சூப்பர் மேன், ஸ்பைடர் மேன், மிஸ் பிக்கி & கெர்மிட்.


குழந்தைகள் கதைப் புத்தகத்திலே இருந்து நம்ம ஆலீஸ், ஹேன்ஸல் & க்ரேட்டல், மதர் கூஸ், ஹாண்டட் ஹவுஸ்னு ஒரு 80 நிமிஷம் போனதே தெரியலை.


பிக் பாய்ஸ்க்காக 'ஹார்லி டேவிட்ஸன்' பைக்! 'உர் உர்'ன்னு சத்தம் போட்டுக்கிட்டு, வெள்ளி போல மின்னும் மோட்டர் சைக்கிள்கள். கன கம்பீரமா 'உலகமே எனக்குப் புல்'ன்னு 'லுக்' கோடு, எஞ்சினை உறுமவிட்டுக்கிட்டு இருக்கும் லெதர் ஜாக்கெட் மனுஷனை அப்படியே பசை போட்டு ஒட்டுனாப்போல புடிச்சுக்கிட்டுப் பின்னாலே உக்காந்துருக்கும் லெதர் ஜாக்கெட் மனுஷிங்கன்னு அட்டகாசம் போங்க.


இங்கே இருக்கும் 'சின்மயா மிஷன்' மக்களும், நம்ம ஹரே கிருஷ்ணா இயக்கத்தைச் சேர்ந்த மக்களும் நம்ம நாட்டுப் பாரம்பரிய உடையான புடவைகளை( ஏங்க இன்னும் பாரம்பரிய இந்திய உடை புடவைதானே? இல்லே சல்வார்கமீஸா மாறிப்போச்சா? ) அணிஞ்சு ஒரே கலர் ஃபுல்லா ( நமக்கு யூனிஃபார்ம் எல்லாம் சரிப்பட்டு வராது. அதானே பக்கத்து வீட்டு அம்மா/அக்கா வாங்குனது போல நாம் வாங்கிருவோமா என்ன? )வந்தாங்க.இங்கே ஹரே கிருஷ்ணா இயக்கத்துக்கு ஒரு ரதம்கூட இருக்கு. அதனாலே இது 'ரத யாத்திரை'(அட, நம்மூர் தேர்த் திருவிழாதாங்க)யாகவும் அமைஞ்சு போச்சு.


யானை இல்லாத திருவிழா உண்டோ? அதனாலே எங்கூருலே இருக்குற 'ஒரே யானை' அம்பாரியோடு 'அழகி'களைச் சுமந்து கன கம்பீரமா ஊர்வலத்துலே உருண்டு வந்துச்சு!





இன்னும் 19 நாள்தானே இருக்கு பண்டிகைக்கு. கடை கண்ணிகள் எல்லாம் ஜேஜே. நட்பும் பரிவும் காட்டவேண்டிய இந்த விழாக்காலத்தில் வண்டி நிறுத்த இடமில்லாம, கிடைக்கிற பார்க்கிங் ஸ்பேஸுக்கு போட்டா போட்டி. 'பரிவையெல்லாம் நான் ஷாப்பிங் முடிச்சுட்டுக் காட்டுறேன்'னு மனசுக்குள்ளே சொல்லிக்குவாங்களோ?


நம்ம பங்கு 'குட்வில்' என்னன்னா சேண்ட்டா ஊர்வலத்தில் இலவசமா என்னென்னவோ கொடுத்துக்கிட்டுப் போவாங்க பாருங்க, டிஸ்கவுண்டு கூப்பன், இலவச ஐஸ்க்ரீம், லாலி பாப் ன்னு இன்னபிற வகைகள். அதையெல்லாம் கையை நீட்டி நீட்டி வாங்கி( சிலசமயம், 'எக்ச்சூஸ்மீ'( வடிவேலு ஸ்டைலில் படிக்கவும்)ன்னுகூப்புட்டுக் கேட்டு வாங்கி, என் பக்கத்துலே நின்னுக்கிட்டு இருந்த சில ச்சின்னப்புள்ளைங்களுக்குக் கொடுத்ததுதான்.


இங்கே எங்களுக்கு பெரிய லீவு இந்த சமயம்தான் வருது.கோடைகால விடுமுறைக்கு பள்ளிக்கூடங்கள் எல்லாம் 6 வாரத்துக்கு லீவு. இங்கெல்லாம் எல்லாமே வாரக் கணக்குத்தான்! வீட்டுவாடகை, பல பேருக்குச் சம்பளம் இதெல்லாம் கூட வாரக் கணக்குத்தான்.


பள்ளிக்கூடம் லீவு வுட்டா......... டீச்சருங்களுக்கும் லீவு தானே? அதான் நானும் லீவுலே போறேன்.எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாம ஒரு நீண்ட விடுமுறை. தமிழ்மணம் படிக்கக் கிடைக்குமா, ப்ரவுஸிங் செண்டர்களிலே தமிழில் தட்டச்சு செய்ய முடியுமான்னு கூட தெரியலை. போனமுறை ஒண்ணும் சரிவரலை. மடிக்கணினி இருந்தாலும் நெட் தொடர்பு கிடைக்குமான்னு தெரியலை. அதான் சொன்னேனே எதிர்பார்ப்புகள் இல்லாத ஒரு விடுமுறைன்னு:-))))


நற்செய்தி எங்கேன்னு கேட்க்கும் 'வலைக் கண்மணி' களுக்கு........... இன்னுமா புரியலை?பள்ளிக்கூடம் லீவு வுட்டாச்சு கண்ணுங்களா:-)
மீண்டும் அடுத்த வருசம் வகுப்பு நடக்கும். கட்டாயம் எல்லோரும் வந்துருங்க.


எல்லோருக்கும் இனிய கிறிஸ்மஸ், புது வருஷம் & பொங்கல் வாழ்த்து(க்)கள்.

58 comments:

said...

அடடா கிறிஸ்மஸ் துவங்கியாச்சா..
விடுமுறைய எஞ்சாய் பண்ணுங்க.

இனிய விழாக்கால வாழ்த்துக்கள்.

said...

டீச்சர்,

பசங்களை எல்லாம் நேரில் பாருங்கள். மேய்மய்யம் (அதாங்க பிரவுசிங் செண்டர், வார்த்தை உபயம் ஓகை) போன கலப்பை இல்லாம தமிழில் எழுதுவது எப்படின்னு நம்ம விக்கி பசங்க பதிவில் இருக்கு. பாத்து வெச்சுக்குங்க.

எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லைன்னாலும் நாங்க எப்பவாவது உங்க வருகையை எதிர்பார்ப்போம். அதனால தலையை காண்பிங்க.

நீங்க வரும் வரை நான் இந்த பசங்களை ஒழுங்க பாத்துக்கறேன். :)

Anonymous said...

நிறைய பரிசுகளுடன் எங்க ஊருக்கும் 'சேண்ட்டா' வை சீக்கிரம் அனுப்பி வைங்க.

அங்கனய புடிச்சி வெச்சுக்க வேணாம்.

said...

//பள்ளிக்கூடம் லீவு வுட்டாச்சு கண்ணுங்களா//

ஐய்யா! இன்னும் ஒரு மாசத்துக்கு டீச்சர் வரமாட்டாங்களே!

said...

மிஸ்!

கிறிஸ்துமஸ் & பொங்கல் வாழ்த்துக்கள்!

தேங்க் யூ மிஸ்! பை பை மிஸ்! டாட்டா மிஸ்!

said...

மிஸ்! நீங்க நற்செய்தி சொன்னவுடன் எங்க வீட்டுலே ஸ்டார் கட்டிட்டேன். வந்து பார்த்து எப்படி இருக்குன்னு சொல்லுங்க! வீட்டுக்கு புதுசா பெயிண்ட் எல்லாம் அடிச்சிருக்கேன்!

said...

வாங்க சிறில்.

//அடடா கிறிஸ்மஸ் துவங்கியாச்சா.. //

போட்டிகளில் வெற்றிக்குமேல் வெற்றியை வாரிக் குவிச்சுக்கிட்டு இருந்தா
இப்படித்தான் உலகம் மறந்து போகுமாம்:-))))

அதுக்குத்தான் நவம்பர் கடைசியிலேயே ஒரு 'அட்வெண்ட்டு காலண்டர்' வாங்கி
வச்சுக்கிட்டு தினமும் ஒரு சாக்லெட் பிச்சுத் தின்னணுங்கறது.

இன்னும் 20 ஸ்லீப்ஸ்தான் இருக்கு:-)

said...

வாங்க கொத்ஸ்.

//நீங்க வரும் வரை நான் இந்த பசங்களை ஒழுங்க பாத்துக்கறேன். :)//

சரியான 'வகுப்புத் தலைவன்'றதை அப்பப்ப நிரூபிச்சுக்கிட்டே வர்றீங்க.

பொங்குதமிழ்/ சுரதா இருந்தாப் போதும்தானே?

மேய்மய்யம் -கவனம் வச்சுக்கறேன்.

said...

வாங்க அகில் பூங்குன்றன்.

அப்பவே அனுப்பியாச்சே சேண்டாவை. இன்னுமா வந்து சேரலை? பாருங்க உங்க
வீட்டுச் சிமினியிலே மாட்டிக்கிட்டாரான்னு:-)

said...

சிபி,

ஆஹா.... 'பின்னூட்ட வள்ளல்'ன்னு உங்களுக்கு ஒரு பட்டம் கொடுக்கலாமான்னு
ஒரு எண்ணம் இருக்கு.

வீட்டுக்குப் போயிட்டுதான் வந்தேன். அலங்காரம் நல்லா இருக்கு. பெயிண்ட்
இருக்கறவங்க அடிச்சுக்கறாங்க:-) இல்லை?

said...

அடடா, இன்னும் ஒரு மாசத்துக்கு உங்களை (தமிழ்மணத்துல) பாக்க முடியாதா ((

உங்களுக்கு மனமார்ந்த கிறிஸ்மஸ், புது வருஷ வாழ்த்துக்கள்.

நல்லா enjoy பண்ணுங்க !!

said...

ரொம்ப மகிழ்ச்சியா இருந்தது, படிப்பதற்கே!

படங்களுடன் மிகப் பிரமாதம்!

இந்தப் பதிவையெல்லாம் மறந்துவிட்டு நிம்மதியாய் இர்ந்துட்டு வாங்க!

இது எங்கேயும் ஓடிப்போகாது!

:))

புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துகள்!

said...

யாணைக்கு கூட "பார்" பிடிக்கலை போல! எதிர் பக்கம் திரும்பி போஸ் குடுக்குது?
சிங்கைக்கு வந்தால் கம்பிவடமில்லா இணையச்சேவை பல இடங்களில் பைசா செலவு பண்ணாமல் கிடைக்கிறது.
வாருங்கள்.

said...

வாங்க ஜெயஸ்ரீ.

எங்கெங்கே ச்சான்ஸ் கிடைக்குதோ அங்கெல்லாம் கட்டாயம் தமிழ்மணம்
படிச்சுக்குவேன். எழுதமுடியுமா, இல்லே பின்னூட்டம் மட்டுமாவது போட
முடியுமான்னு தெரியலை. பார்க்கலாம்.

வாழ்த்துகளுக்கு நன்றி.

said...

வாங்க SK.

சிங்கையிலே செந்தோசாவுலே இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கே.சட்னு
கிளம்பிட்டீங்க!

//இது எங்கேயும் ஓடிப்போகாது!//

ரொம்பச் சரி. ஆனால் 'கோல்ட் டர்க்கி' வராம இருக்கணுமே எனக்கு:-)

வாழ்த்துகளுக்கு நன்றி.

said...

குமார்,
என்ன யானை எங்கே பார்க்குது?
நம்மைத்தானே பார்க்குது, இல்லையா?


உங்க ஏர்ப்போர்ட்லே நேரம் இருந்தா வலை மேயறதுதான் அப்பப்ப:-)

said...

அட! அதுக்குள்ள கிறிஸ்துமஸ் வந்துருச்சா?

என்னதான் சொன்னாலும் அந்த புடவை அழகே அழகுதாங்க.. அவங்களுக்கு எவ்வளவு அம்சமா இருக்கு பாருங்க..

கிறிஸ்துமஸ் க்ரிப்(Crib)வைக்கற வழக்கம் இருக்கா? இருந்தா மாதிரிக்கு ஒரு படம் போடுங்க..

இந்த கிறிஸ்துமஸ் ஒங்களுக்கு இந்தியாவுலதான?

said...

மேய்மய்யம்..

மேய் மையம்னு சொன்னா நல்லருக்கும்லே..

Anonymous said...

மாடம்
இப்பதான் சேர்ந்திருக்கேன். அதுக்குல்ல விடுமுரயா?
எழுத்து பிழைகலை மன்னிக்கனும். இப்பதான் முதல் முரையா முயர்ச்சிக்கிரென்.Dont fail me

Anonymous said...

இன்னிக்கு மத்தியானம் கிறிஸ்துமஸ் சாப்பாடு சாப்புட்டு ன்ல்ல தூக்கம். வீட்டுக்கு வன்த்து பாத்தா இன்றே கடைசின்னுட்டீங்க. ஆபிஸில போர் அடிச்சா இனி வேற எத்தயாவதுதான் பண்ணணும்.

said...

வாங்க டிபிஆர்ஜோ.

//கிறிஸ்துமஸ் க்ரிப்(Crib)வைக்கற
வழக்கம் இருக்கா? இருந்தா மாதிரிக்கு
ஒரு படம் போடுங்க..//

படம் இருக்குங்க. போட்டாப் போச்சு:-)

மேய் மையம்
மேய் மையம்
மேய் மையம்
மேய் மையம்
மேய் மையம்

சரியாச் சொல்லி இருக்கேனா? :-)

said...

வாங்க சின்ன அம்மிணி,

பள்ளிக்கூடம் அடைக்கிறதுக்கு ரெண்டு நாளைக்கு முன்னாலே வந்து
சேர்ந்தா இப்படித்தான்:-)))))

அடுத்தவருடமும் இதே வகுப்புதான். பரவாயில்லையா?

இது உண்மையாவே நியூஸி ஸ்டைல்தாங்க. இங்கே அஞ்சாவது
பிறந்த நாள் அன்னிக்கு பள்ளிக்கூடத்துலே சேரலாம். இப்படி கடைசி
நாளா இருந்தாலும்கூட:-)))

சரி விடுமுறையை வீணாக்காம, மத்த பதிவர்களுக்குத் தமிழிலே
பின்னூட்டங்கள் விடாமப் போட்டு, உங்க தமிழ் தட்டச்சுத் திறமையை
வளர்த்துக்குங்க. கலப்பையைப் பிடிக்கிறது பிடிபட்டுப்போச்சுன்னு வையுங்க,
அப்புறம் ஒரே டேக் ஆஃப்தான்:-))))

said...

ஏங்க சின்ன அம்மிணி,

ஆஃபீஸ்லே போர் அடிச்சா இனி ஒண்ணு செய்யுங்களேன்.
அதான் 'ஆஃபீஸ்களிலே 'வேலை'ன்னு ஒன்னு இருக்குமே அதை:-))))

அட! பாருங்க ரெண்டாவது பின்னூட்டத்துலேயே தமிழ் வெகுவா முன்னேறி இருக்கு.
நீங்க பாஸ் பண்ணிட்டீங்க அம்மிணி:-)))

said...

அட வேடிக்கையப் பாருங்க. நான் விடுமுறையிலேந்து திரும்பி வந்து அட்டண்டன்ஸ் கொடுக்க வந்தா, பள்ளிக்கூடத்த லீவுவிட்டு கிளம்பிட்டீங்க.
சரி நடத்தி முடிச்ச பாடத்தொல்லாம் படிச்சுகிட்டு இருக்கேன்

said...

கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் நேரில் பார்த்த உணர்வு.
அப்ப ஆறு வாரம் விடுமுறையா ? மனமும் உடலும் புத்துணர்ச்சி பெற விடுமுறையை இனிமையாக கழிக்க வாழ்த்துக்கள்!

கிறிஸ்மஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள் !!

மேய் மையத்திலிருந்து உங்கள் பின்னூட்டத்தையாவது எதிர்பார்க்கலாம்தானே :)

said...

விடுமுறையை ஆனந்தமா கழித்து, ஏதாவது பயணக்கட்டுரைக்கு மேட்டர் தேத்த பாருங்க டீச்சர்.

said...

துளசி டீச்சர் உங்களுக்கு,ம் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் மனமார்ந்த பண்டிகைக் கால நல்வாழ்த்துக்கள்

said...

பை பை துளசி.
நல்லா விடுமுறை கொண்டாடுங்க.
அப்பப்போ முடிஞ்சபோது
ரெண்டு வரி எழுதுங்க.
இல்லாட்டி எப்படி?:-((

உங்களுக்கும் எங்கள் விழாக்கால வாழ்த்துக்கள்.

said...

ஒரு மாசம் லீவா?
அய்யோ ஒரு நிமிசமா ஓடிடுமே

Anonymous said...

Christmas kondaadum anaivarukkum Merry Christmas :)

postum merry doi

said...

வாங்க மதி. விடுமுறை நல்லாப் போச்சா?

எப்படி உங்க விடுமுறைகள் இருந்துச்சுன்னு 20 பக்கத்திற்குக் குறையாமல்
பொடி எழுத்துலே கட்டுரை எழுதிக்கிட்டு வாங்க அடுத்த வகுப்புக்கு.

//சரி நடத்தி முடிச்ச பாடத்தொல்லாம் படிச்சுகிட்டு இருக்கேன்//

அப்படியே செய்யுங்க. இதுதான் நல்ல பிள்ளைகளுக்கு அடையாளம்:-))))

said...

மணியன் வாங்க.

வாழ்த்துகளுக்கு நன்றிங்க.

சந்தர்ப்பம் கிடைச்சால் தவறாம ஒரு
சில பின்னூட்டங்களாவது போடுவேன்.
அப்படி ஒரேதா தமிழ்மணத்தை விட்டு விலகமுடியுமுன்னு
தோணலை.:-)

said...

நன்றி ரவி.

உங்க நட்சத்திரவாரம் நல்லாவே போகுது.

//மேட்டர் தேத்த பாருங்க டீச்சர்.//

பிரச்சனை இருக்காது. ஊரெல்லாம் 'மேட்டர்'ங்க
கொட்டிக்கிடக்குதப்பா:-)))

said...

வாங்க தேவ்.

வாழ்த்துகளுக்கு நன்றி.

said...

வல்லி,
இவ்வளோ பிஸியிலேயும் எட்டிப் பார்த்துருக்கீங்க!

கட்டாயம் முயற்சிக்கிறேன்.

said...

சிஜி,

எங்கே ஸ்மைலி?
இல்லே, இது உண்மையான 'இரங்கலா?'

said...

கிட்டு,

வாங்க. புதுசுங்களா?

நன்றிங்க.

said...

நன்றி வைசா.

உங்களுக்கும் வாழ்த்து(க்)கள்.

said...

கிருஸ்மஸ் அதுக்குள்ளயா?

ஒருமாசம் லீவு ரொம்ப போரடிக்குமே!

வாழ்த்துக்கள். :)

said...

நன்றி சிவமுருகன்.

உங்களுக்கும் பண்டிகைக்கால வாழ்த்துக்கள்.

said...

ஜோசப், மேய்மையம் என்பதே சரியானது. நான் கொத்தனாருக்கு முதலில் அனுப்பிய மடலில் தவறாக தட்டிச்சியதை நீங்கள் திறுத்தியதற்கு நன்றி. எனக்காக ஒரு டீச்சரே இம்பொசிஷன் எழுதியதற்கு ரொம்ப நன்றி.(எத்தன பேர வாட்டுனாங்களோ, இப்ப அனுபவிக்கிறாங்க.)

அனைவருக்கும் இனிய கிருஸ்துமஸ் வாழ்த்துக்கள்.

Anonymous said...

கிறிஸ்மஸ் என்றாலே ஒரு விடுமுறை உணர்வும்,கொண்டாட்டமும் மனதில் வந்து விடுகிறது. இதை இங்கு எல்லா மதத்தினரும் சொல்லக் கேட்டிருக்கிறேன். இனிய விடுமுறைகால வாழ்த்துக்கள்.

said...

ஓகை,

எல்லாரும் சமம். டீச்சருக்கு மட்டும் என்ன ஸ்பெஷல்?:-)

said...

ஆதிபகவன்,

வாங்க. புதுவரவா?

சந்தோஷம். பண்டிகைக்கால வாழ்த்து(க்)கள்.

said...

//திறுத்தியதற்கு//

ஓகையாரே இன்னும் ஒரு திருத்தம். இது திருத்தியது அப்படின்னு இல்ல வரணும்!!

டீச்சர், இந்த வார்த்தையையும் ஒரு பத்து முறை எழுதுங்க!!!

said...

டீச்சர் ,

இந்தியாவுக்கு போறீங்களா, முடிஞ்சா அங்கே சந்திப்போம்.

said...

//நட்பும் பரிவும் காட்டவேண்டிய இந்த விழாக்காலத்தில்//

டீச்சர், நட்பும் "பரிசும்" ன்னு நினைச்சி தானே அதை டைப் பண்ணீங்க? தட்டச்சுப் பிழை தானே அது? :-))

அது எப்படி நீங்க லீவு வுடலாம்? சாண்டா வேடமிட்டு, எங்களுக்குப் பரிசு எல்லாம் கொடுப்பார்களே பள்ளிக்கூடத்தில்! அதெல்லாம் எங்கே????????

நீங்க ஒரு மாதம் எங்கு போனாலும், பின்னாலயே அந்த யானை மேல் ஏறி, அழகிகளுடன் வந்து எல்லாப் பரிசையும் வாங்கிக்க மாட்டமா என்ன? எதுக்கும் கிப்ட் வ்ராப் பண்ணும் போது கொஞ்சம் உள்ள என்ன இருக்குன்னு தெரியுறா மாதிரி சுத்தி வையுங்க டீச்சர்!

Happy Holidays, Merry Christmas, Happy New Year and இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!

said...

இனிய கிருத்துமஸ் திருவிழா வாழ்த்துகள் டீச்சர். அடுத்த வருசம் கண்டிப்பா வந்துரனும். சொல்லீட்டேன்.

என்னவோ கொஞ்ச நாளா ஒங்க வலைப்பக்கமே வராத மாதிரி ஒரு எண்ணம் இன்னைக்கு. உங்க பதிவைத் தமிழ்மணத்துல பாத்த நினைவும் இல்லை. சரி. தமிழ்மணத்துல இருந்தாதான் பாக்கனுமான்னு நேராவே வந்துட்டேன். :-) வந்ததுக்கு வஞ்சகமில்லாம நல்ல பதிவு. டீச்சர், படங்கள்ள சேலை கெட்டிக்கிட்டு வெள்ளைக்காரங்க உக்காந்திருக்காங்களே. அவங்க யாரு?

said...

ஹைய்யா ஸ்கூல் லீவா... அப்போ ஜாலியா இருக்கலாம்.... டாட்டா டீச்சர்..

Anonymous said...

விழாக்கால வாழ்த்துக்கள் டீச்சர்.

[நான் புதுசா சேர்ந்திருக்குற ஸ்டூடண்ட்]

said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழியே..

இந்த வருடத்தில் கிடைத்த உங்கள் நட்பு எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. பரந்து விரிந்த இந்த உலகத்தில் நம்மை சேர்த்து வைத்த இந்த பிளாக்கருக்கு நன்றி.

இந்த புதிய வருடத்தில் ஆண்டவனிடன் நீங்கள் வேண்டும் யாவும் கிடைக்கப்பெற்று, நல்ல ஆரோக்கியத்துடன் நீங்களும் உங்களும் குடும்பத்தினரும் எல்லா வித இன்பங்களும் கிடைக்கப் பெற்று வாழ வாழ்த்துக்கள். தாங்கள் பணிபுரியும் அலுவலகத்தில் மேலும் மேன்மை அடைந்து சிறக்க வாழ்த்துக்கள்

said...

Happy New Year. Sorry for the belated greetings.

Anonymous said...

ok

said...

வந்துட்டீங்களா? வாங்க வாங்க!! இனிமே இந்தியா விஜயத்தை ஒட்டி ஒரு 50 பதிவுகள் எதிர்பார்க்கலாமா! நம்ம பக்கம் வந்து ஒரு எட்டு பாத்துட்டு போங்க! :)

said...

வந்துட்டீங்களா வாங்க..
நாம சூடா கதை எழுதற நேரம் பார்த்து, கதை படிக்கிறவங்க விடுமுறையில் போயிட்டாங்களேன்னு நினைச்சேன்.

நல்ல பதிவுகளைத் தாங்க... நம்ம கதைகளையும் ஒரு எட்டு பாத்துட்டுப் போங்க...

http://valai.blogspirit.com/

Anonymous said...

தாமதமான பொங்கல் வாழ்த்துக்கள்.
அப்படியே எங்க வீட்டு பொங்கலையும் ஒரு நடை வந்து பாத்துட்டு போங்க.

www.manjoorraja.blogspot.com

Anonymous said...

துளசியக்கா!
வந்துட்டியளா?? புதுவருட பொங்கல் வாழ்த்துக்கள்!!
இனி எழுத வேண்டியது தானே!!!
யோகன் பாரிஸ்

said...

கொத்ஸ், பெருசு, KRS, ராகவன், ராம், ஜி, கார்த்திகேயன், கீதா, ஷ்யாம்ஜக், சிந்தாநதி,
மஞ்சூர் ராசா, யோகன்

அனைவருக்கும் நன்றி.

தோ.... அர்ரியர்ஸ் படிக்கக் கிளம்பியிருக்கேன். ஏறக்குறைய 700 பதிவுகள் இருக்கு.
மெதுவாத்தான் படிக்கணும். ஆனா... படிச்சுருவேன்.