Monday, January 22, 2007

அம்மா வந்தாள்


முந்தாநாளு கொஞ்சம் அலட்சியமா ச்சின்னப் புதருக்குள்ளே உக்காந்து வேடிக்கைப் பார்த்துக்கிட்டு இருந்தேன். மேலேயும் கம்பி வலை போட்ட தோட்டம். நினைச்சாலும் எகிறிப்போக முடியாது. ச்சும்மாத் தோட்டத்துக்குப் போகவும் இங்கே ஒவ்வொருத்தருக்கும் ஒரு குறிப்பிட்ட நேரமாம். மிஸ் லுலு மட்டும் ( என்னோட பக்கத்து ரூம்) நான் வெளியேபோனதைப் பார்த்துட்டுக் கொஞ்சம் சவுண்டு விட்டுக்கிட்டு இருந்துச்சு.


திடீர்னு பரிச்சயமான குரல்கள். ஜேன் மட்டும் 'என்னை'க் கூப்புட்டுக்கிட்டே வந்தாங்க. 'இதோ இந்தப் புதர்தான் இவனோட ஃபேவரிட் ப்ளேஸ்'
குனிஞ்சு பார்த்துக்கிட்டு இருந்தது.... அட...அம்மா!!!!! கூடவே அப்பாவும் இருக்கார்.ஹா....... வந்தாச்சா? இத்தனை நாள் சட்டை பண்ணாம விட்டுட்டுப் போயிட்டு இப்ப வந்துகுரலில் தேனைத் தடவிக்கிட்டுக் கூப்பிடும் அம்மா........".ஜிகே... ஜிகே.... வாடா ச்செல்லம்."


மெதுவா வெளியே வந்த என்னை, அப்பாதான் சடார்னு குனிஞ்சு வாரி எடுத்துக்கிட்டார்.என்னதான் இருந்தாலும் நான் அப்பாச் செல்லம், இல்லையா?

நல்லா வெயிட் போட்டுருக்கான்னு சொன்னார். அங்கே மட்டும் என்ன வாழுதாம்? தொப்பை கொஞ்சம் பெருசாத்தான் இருக்கு.


கணக்கை செட்டில் செஞ்சுட்டு என்னை வீட்டுக்குக் கூட்டிப் போனாங்க. கார்லே ஏறும்வரை எல்லாரும் எனக்கு பைபை... டாட்டா எல்லாம் சொல்லிக்கிட்டே இருந்தாங்க. வர்றவழி பூராவும் வழக்கத்துக்கு மாறா அப்பப்ப பேசிக்கிட்டே வந்தேன். எல்லாம் மிஸ் லுலுகிட்டே கத்துக்கிட்டதுதான். பக்கத்து ரூமுக்கு வந்து ஒரு வாரம்தான் ஆச்சுன்னாலும், அவ பயங்கர வாயாடி. 'எனக்குப் பேச இப்ப மூடு இல்லை'ன்னு சொல்லிக்கிட்டேதான் இருந்தேன். இப்பப் பார்த்தா என்னை அறியாம அவ பழக்கம் எனக்கும் ஒட்டிக்கிச்சு. ஹூம்...ஆளு நல்லா 'நிகுநிகு'ன்னுத்தான்இருக்கா. அம்மாக்கூட, அவகிட்டே ரெண்டு வார்த்தை பேசிட்டுத்தான் வந்தாங்க.


வீட்டுக்கு வந்து, எல்லாம் எப்படி இருக்குன்னு ஒரு சுத்து வந்தேன். அட இது என்ன என் தட்டு வெளியே இருக்கு.அதுலே சாப்பாடு கொஞ்சம்போல ஒட்டிக்கிட்டு இருக்கு. நானோ இப்பத்தான் வீட்டுக்குள்ளே வரேன்,அப்ப யாரு வந்துபோயிருப்பா? எனக்கு இருக்கற 17 மில்லியன் மோப்ப நரம்பாலே,யார் வந்தாங்கன்னு 'டக்'னு புரிஞ்சுபோச்சு. இந்த Boonyப் பையன் வந்துருக்கான். அம்மாவை மொறைச்சேன்.


"போனாப்போகட்டும்டா..... நான் வந்து இறங்குனவுடன் அடுக்களைப் பக்கமா வந்து நின்னு ஒரே அழுகை இந்த பூனி.கதறலைத் தாங்கமுடியாம உன் சாப்பாட்டைக் கொஞ்சம் கொடுத்தேன்"


"ஆமாமாம்.... வீட்டு ஆளை விட்டுட்டு, ரோட்டுலே போறதுக்கு சேவை பண்ணறதுதான் இப்ப ரொம்ப முக்கியம். மனுசப்பசங்க என்னவோ பழமொழி வேற சொல்லிக்குவாங்க, ஊரார் புள்ளை, தன்புள்ளைன்னு.."


எதோ ஒரு வாரம் பத்துநாளுன்னு நினைச்சா, இப்படி ஒரேடியா 6 வாரம் காணாமப்போன இந்த அம்மாவை என்ன செய்யலாம்? ஆனா..பார்த்தாப் பாவமாவும் இருக்கு. லொக்கு லொக்குன்னு ஓயாம இருமல் வேற. தோட்டத்துலே செடிகள் கொஞ்சம் காஞ்சு நிக்குதுன்னு புலம்பல்வேற. அதான் பளிச்சுன்னு ஒரு தாமரை பூத்துருக்குல்லே, இன்னும் என்ன வேணுமாம்?


இனிப்பாத்தான் பேசறா, ஆனா நம்ப முடியாது. எதுக்கும் கூடவே ஒட்டிக்கிட்டு இருக்கறதுதான் நல்லது. பெட்டிகளைத் திறந்து கடை பரப்பிக்கிட்டு இருக்காங்க ரெண்டு பேரும். இந்தவாட்டிக் கொஞ்சம் புத்தகங்கள் கூடுதலா இருக்கே.என்னவோ திருவிழாவாம்.... அங்கே புடிச்சுக்கிட்டு வந்ததாம். இன்னும் என்னென்ன இருக்குன்னு கவனிச்சுப் பார்க்கணும்.


இப்பப் பார்த்து, இந்த 'பூனி', கொல்லைப்புறமா வீட்டுக்குள்ளெ வரப்பாக்குது. இருங்க, அதைக் கொஞ்சம் ஓட ஓட விரட்டிட்டு வரேன். சுதந்திரமா கையைக் காலை நீட்டி இப்படி ஓடியாடியே நாப்பது நாளுக்கு மேலே ஆயிருச்சு.
பயந்தாங்குளி....ஃபென்ஸ் மேலே ஏறிட்டான். எனக்கு மட்டும் தெரியாதா? டாய்...............

39 comments:

said...

வழக்கம்போல நாந்தானே முதல்?!

said...

//அங்கே மட்டும் என்ன வாழுதாம்? தொப்பை கொஞ்சம் பெருசாத்தான் இருக்கு.//

நேராச் சொல்ல முடியலையாக்கும். ஜிகே விடு தூதா வருது. விட்டா உங்களை விட்டுட்டு எடிஸன் சரவணபவனில் சாப்பிட்டதுதான் காரணமுன்னு வேற சொல்லுவீங்க போல இருக்கே! :)

//அங்கே மட்டும் என்ன வாழுதாம்? தொப்பை கொஞ்சம் பெருசாத்தான் இருக்கு.//

என்ன ஆச்சு. உடம்பைப் பாத்துக்குங்க! சரியான பின்னாடி இந்தியா விஜயம் பத்தி எல்லாம் போடலாம். அவசரம் ஒண்ணுமில்லை!

said...

வாங்க டீச்சர் வாங்க
வலைப்பதிவுகளுக்கு வாங்க
ஏங்கி ஏங்கித் தாங்க
இங்க பலபேர் வீங்கினாங்க...

என்ன இருமல்? நியூசிலாந்து குளிரு ஒத்துக்கலையோ? டீ போட்டுக் குடிச்சா சரியாப் போகும். டீயில ரெண்டு பட்டையும் சுக்கும் தட்டிப் போட்டா ஜம்முன்னு இருக்கும்.

புத்தகங்கள் வாங்குனீங்களா? என்னென்ன? நா அடுத்த வாரந்தான் சென்னை போறேன். ஆனா இந்த வாரத்தோட புத்தகக் கண்காட்சியை மூடீட்டாங்க. ரொம்ப மோசம்.

பெங்களூருக்கு நீங்க வரலையா?

Anonymous said...

//தேனைத் தடவிக்கிட்டுக் கூப்பிடும் அம்மா........".ஜிகே... ஜிகே.... வாடா ச்செல்லம்."//
துளசியம்மா,

ஆகா ... தாயும் சேயும் சேர்ந்தாச்சா ?
பதிவில் பாசம் பீறிடுகிறது...!
:)))))))))

said...

துளசி அக்கா,

வணக்கம். வந்தனம். புத்தாண்டு வாழ்த்துக்கள். விடுமுறை, பொங்கல் எல்லாம் எப்படி போச்சு?

வெல்கம் பேக்.

said...

ஜிகே.. அம்மா வந்தாள்னு நீ போட்டதும் புத்தகத்துப் பேருன்னு நினைச்சு வந்தேன். சொந்தக் கதையா.. சரி சரி.

அம்மா என்ன வாங்கியாந்தாங்க உனக்கு? இருமலுக்கு மருந்து சாப்பிட்டாங்களா? தன்னையும் கவனிச்சுக்கணும்னு அவங்ககிட்டே சொல்லு என்ன! :O)

Anonymous said...

ஆகா இந்த பூனைக்கு தான்
என்ன பாசம் உங்க ரெண்டுபேர் மேல.
சென்னை தில்லி சிங்கப்பூர் என்று விதவிதமான வெப்பநிலையை சந்தித்ததால் இருமலா ?
பார்த்துக்கோங்க.

said...

ஒரே டச்சிங் பதிவு தான் போங்க..!!!!!!!

Anonymous said...

ம்.....சிறப்புதான்

Anonymous said...

வகுப்பு, மாணவர்கள்னு வரவர இங்க ஒரே நெரிசலாப்போச்சு:)) இருந்தாலும் பழையபாசத்துல உங்கள ஜன்னல்வழியாவாவது பாத்துட்டுப்போலம்னு வாரது. மீண்டும் வந்தது மகிழ்ச்சி. ஆண்மொழி, பெண்மொழியெல்லாம் தாண்டி, பூனைமொழி எழுத உங்களவிட்டா இங்க யார் இருக்கா? ரசித்தேன். ஆறுவாரமா? அப்பப் பயணத்தொடர் எத்தனை பாகமா வரும்னு யோசிச்சுக்கிட்டிருக்கேன்:)) உடல்நிலை விரைவில் தேறட்டும் உங்களுக்கு.

said...

வாங்க கொத்ஸ்.
வகுப்பு லீடரா இருந்தா முதல்லெ வரத்தானே வேணும்:-)

//நேராச் சொல்ல முடியலையாக்கும்//

அதெல்லாம் பலமுறை ஓதியாச்சு:-) நாமார்க்கும் அஞ்சோம்.

said...

வாங்க ராகவன்.

நீங்க வேற சிங்கை போயிட்டீங்க. அதான் பெங்களுரை ரத்து செஞ்சுட்டேன்:-)

புத்தகங்கள் சுமாராத்தான் வாங்குனேன். கோபால்கூட கொஞ்சம் வாங்கிக்கிட்டார்.

இத்தனைநாள் ஆட்டம் காமிச்ச வெயிலு இன்னிக்கு இங்கே பேயாட்டம் ஆடுச்சு.
31 டிகிரி!!!!

said...

வாங்க ஜிகே.

தகப்பன்கிட்டே இருந்து இப்பக் கட்சித்தாவல் செஞ்சுருக்கு நியூஸி ஜிகே:-)))

said...

ஹரிஹரன்,

உங்களுக்கும் விழாக்கால வாழ்த்து(க்)கள்.

ரொம்ப வருஷத்துக்கப்புறம் வீட்டோட சேர்ந்து பொங்கல். சம்பிரதாயமா கரும்பு எல்லாம்
வச்சு, மொட்டைமாடியில் சூரியனுக்குப் படைச்சாச்சு. ஆனா கரும்பு திங்கறதுக்கு மறந்துட்டோம்(-:

said...

வாங்க ஷ்ரேயா.
உங்க தரிப்புகளையெல்லாம் இனித்தான் படிக்கணும்.

//அம்மா என்ன வாங்கியாந்தாங்க உனக்கு? //

ஆமாம்......... வாங்கிவந்துட்டாலும்............ (-:

said...

வாங்க லட்சுமி.

'அண்ணன்' எப்படி இருக்கார்? :-)

//சென்னை தில்லி சிங்கப்பூர் என்று விதவிதமான
வெப்பநிலையை சந்தித்ததால் இருமலா ?//

எல்லாம் மாசுதான் காரணமுன்னு சொல்லி இன்ஹேலரை இன்னும் நாலு இழுப்பு
இழுக்கச் சொல்லிட்டாங்க டாக்டரம்மா:-)))

said...

ரவி,

பெங்களூர் வந்தா உங்களைச் சந்திக்கணுமுன்னு ப்ளான் இருந்தது.
ஆனா கைகூடி வரலை(-:

said...

நன்றி சோமி.

Anonymous said...

என்னுடைய முதல் பின்னூட்டம் வரவில்லை போலும்.


முதல் பதிவே வீட்டுக்காரங்களுக்கா?
ஆமாம் தொப்பை கொஞ்சம் பெரிசாகத்தான் "படத்தில்" தெரிகிறது.

said...

"உள்ளேன் அம்மா"

Anonymous said...

:)

உங்களை சந்தித்தது மிக்க மகிழ்ச்சி! அதிகநேர்ரம் உரையாட முடியவில்லை...ம்ம்

said...

வரணும் வரணும் துளசியம்மா!:-0)
அப்பா சாமி.
ராகவன் சொன்ன மாதிரிதான் ஆச்சு.
இப்போதான் ஒளி கூடி இருக்கு. மகரத்துக்கு சூரியன் பெயர்ந்ததுனு சொன்னாங்க.
நீங்களும் திரும்பி எழுதினதுதான்
சந்தோஷம்.
ஜிகே நல்லா வால் வளர்த்துட்டான் போல.
பேசாத பேச்செல்லாம் பேசிட்டானெ.
42 நாள் மௌனம்தான் காரணமோ.
உடம்பு தேறணும் சுருக்க.(சீக்கிரம்)

said...

வாங்க குமார்.

முதல் பின்னூட்டம் வந்து சேரலை(-:

//தொப்பை கொஞ்சம் பெரிசாகத்தான் "படத்தில்" தெரிகிறது//

ஆமாம். அதான் ஆபத்து. ஒரு வழி பண்ணிருவேன். அடுக்களையைப் பூட்டியாச்சு:-)

said...

வாங்க செல்வா.
நீங்க 'ஜன்னல்வழி நாயகி'யா? தெரியாமப்போச்சேப்பா:-)

ஏற்கெனவே எல்லோருக்கும் வயித்தைக் கலக்கிக்கிட்டு இருக்கும்,
இந்த 6 (ஆர)வாரத்துக்கு எத்தனை பதிவுகளோன்னு:-)

பேசாம எல்லாருக்கும் ஒரு இனிய அதிச்சி கொடுத்துறவா?
ஒண்ணும் இதைப் பத்தி எழுதாம விட்டுடறேனே...ப்ளீஸ்.

said...

மதி,

'பிரசெண்ட்' போட்டாச்சுப்பா:-)

said...

வாங்க திரு.

பேசாம நியூஸி வாங்களேன்.

said...

வல்லி,
அன்பான வரவேற்புக்கு ரொம்ப மனசு நெகிழ்ந்து போச்சுப்பா.

உங்க நினைவா ஒரு ஹயக்ரீவர் வாங்கிவந்தேன்:-)))))

Anonymous said...

வணக்கம் துளசி

உங்க அனுபவங்களை சொல்லுகளால அள்ளி வீசுறீங்க, போங்க! நல்லாருக்கு படிக்க. நன்றி

said...

வாங்க துளசி...

அருமையா இருக்கு பதிவு...

உங்களை சந்திச்சது, ஆச்சிரியம்+மகிழ்ச்சி+இன்ப அதிர்ச்சி....

அன்புடன் மங்கை

said...

வணக்கம் துளசி மேடம்.

புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துக்கள்.

சென்னையில் இருந்து.

வணக்கத்துடன்

said...

ஜிகே நல்லாச் சொல்லு. இனிமே உன்னை இப்படி விட்டுட்டுப் போகக் கூடாதுண்ணு...

பூனிக்கு கொஞ்சம் கொடுத்தா என்னப்பா. பகிர்ந்துண்டு வாழணும்பா...

Anonymous said...

வந்துட்டீங்களா பத்திரமா?
//ஏற்கெனவே எல்லோருக்கும் வயித்தைக் கலக்கிக்கிட்டு இருக்கும்,
இந்த 6 (ஆர)வாரத்துக்கு எத்தனை பதிவுகளோன்னு:-)//
இதுதான் துளசி பன்ச்...
ஒருவாரம் அங்கிட்டு இங்கிட்டு நகராம பதியுங்கோ (சமையல் மற்றும் இதர வீட்ட்டு வேலகள்ள கோபால் கில்லாடின்னுதான் எனக்கு தெரியுமே) அடுத்தவார நட்சத்திரமா ஆக்கிர வேண்டிதான்..

said...

வாங்க செல்லி.

அதென்ன நம்ம 'நேயடு' படத்தைப் போட்டுருக்கீங்க.

பிடிச்சிருக்கு,பிடிச்சிருக்கு.

வருகைக்கு நன்றி.

said...

மங்கை,

உங்களுக்கு மட்டுமா? எனக்கும்தான் இன்ப அதிர்ச்சி.

(உங்க மெயில் ஐடி அனுப்புங்களேன். அதை கண்டிப்பா
பப்ளீஷ் செய்யமாட்டேன்)

said...

வாங்க நன்மனம்.

எத்தனை வார விடுமுறை? அதென்ன நான் கிளம்பின பிறகு
வந்துருக்கீங்க? ரொம்ப முன் ஜாக்கிரதைதான் போங்க:-)))

said...

சிந்தாநதி, அதென்ன இப்படிச் சொல்லிட்டீங்க?

அம்மா ஒரு அன்ன பூரணி. என் சாப்பாட்டை பூனிக்கு மட்டுமில்லை,
ஆலி, முள்ளீ, இன்னும் பேர் தெரியாத எதுத்த வீட்டுப் பூனைங்க எல்லாருக்கும்
வழங்கும் வள்ளல். 'ஊரான்வீட்டு நெய்யே' கதை தெரியுமில்லே?:-))

என்கிட்டே போட்டோ எவிடன்ஸ் இருக்கு.

அன்புடன்,
ஜிகே

ஆலி- பக்கத்துவீட்டு நாய்

முள்ளீ- ஒரு ஹெட்ஜ்ஹாக்

said...

கிவியன்,

வாங்க. நலமா?

//அடுத்தவார நட்சத்திரமா ஆக்கிர வேண்டிதான்.. //

யாரை? கோபாலையா? :-)))

said...

ஹஹஹா..
ரசித்தேன்.. இதை படிக்கும்போது ஒரு நாயோ அல்ல பூனையின் சுயசரிதைன்னு நினைச்சேன்.

என் கெஸ் கரெக்டு.. ;)

said...

வாங்க மை ஃப்ரெண்ட்.

பூனை & நாய்க்கதைகள் பிடிக்குமுன்னா சொல்லுங்க. நம்ம ப்ளொக்லேயே
எக்கச்சக்கமா எழுதிப் போட்டுருக்கேன்:-)

கரெக்ட்டா கெஸ் பண்ணதுக்கு ஒரு 'சபாஷ்'

படத்துலே 'மிஸ்டர் ப்ளாக்' தான் நம்ம ஆளு"-)