Monday, March 19, 2007

அக்ஷர்தாம் ( தொடர்ச்சி)





நெஞ்சாங்கூட்டில்.........நீயே நிற்கிறாய் ( பாகம் 5)


அடுத்த கட்டமா ரெண்டாவது பிரிவுக்குப் போறொம். அவ்வளவு பெரிய தியேட்டர் முழுசும் நிறைஞ்சுபோச்சு.அஞ்சு பள்ளிகளில் இருந்து பசங்க வந்துருக்காங்க. ஒவ்வொரு பள்ளிக்கூடமும் ஒவ்வொரு யூனிஃபார்ம்லே. அங்கங்கேஇருக்கும் உதவியாளர்கள் எங்களை ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் குழுக்கள் பிரிச்சு அனுப்புனாங்க. டிஸ்னிலேண்ட்லே வரிசையில் நின்னு போவோம் பாருங்க அதைப்போல இருக்கு! ஒலியும் ஒளியும் காட்சிகள். பகவான் ஸ்வாமிநாராயணின் வாழ்க்கைக் காட்சிகள். இப்பத்தானே படம் பார்த்துட்டு வந்தோம், அதனாலே சம்பவங்கள் சுலபமாப் புரிஞ்சது. முக்கால் இருட்டானஅரங்கத்துலே நல்ல மரப்பெஞ்சுகள் போட்டு வச்சுருக்காங்க. நாம் போய் உக்கார்ந்ததும் அரங்குலே வெளிச்சம் பரவுது. காட்சிகள்கண் முன்னே. எல்லாமே லைஃப் சைஸ் உருவங்கள். பொம்மையாச் சும்மா இருக்காம பேசவும் நடக்கவும் செய்யுது. தத்ரூபமாஇருக்கு. அஞ்சு நிமிஷம். இது முடிஞ்சு அடுத்துன்னு போகணும். கிராம மக்களைச் சந்திச்சுப்பேசும் நீல்கண்ட், குருகுலத்தில் மாணவர்கள், கிராமத்துலே மரத்தடியில் விளையாடும் பிள்ளைகள், பஞ்சம் வந்த காரணத்தால் குடிபெயரும் ஏழை விவசாயி இப்படிச் சரியா 15 காட்சிகள் இருக்கு. அதி சூப்பர்ன்னு சொல்லிக்கிட்டேன். ரொம்ப சிஸ்டமாடிக்காத் தொய்வு இல்லாமப் போய்க்கிட்டு இருக்கு எல்லாம்.




இப்போ மூணாம் பிரிவுக்கு வந்தோம். மறுபடியும் அமெரிக்கா , அங்கே 'பைரேட்ஸ் அஃப் கரீபியன் ரைடு' ஞாபகம்.அதைப்போலவே ச்சின்னப் படகுகளில் அஞ்சாறு பேராப் போறோம். ரெண்டு கரைகளிலும் காட்சிகள் மாறிமாறிப் பார்க்கணும்.ஆயிரக்கணக்கான வருசங்களுக்கு முன்னே மக்கள் எப்படி இருந்தாங்க, அந்தக் காலக் கல்விக்கூடம், அரசர்கள் தளபதிகளுடன் போர் சம்பந்தப்பட்ட ஆயுதங்களைப் பரிசீலிக்கிறது, வைத்தியர்கள், நோயாளிக்குச் சிகிச்சை செய்யறது, மிருக வைத்தியம்,ஆடல்பாடல் கலைகள், கடைவீதின்னு நம்மளை எங்கியோ கொண்டு போயிடறாங்க அந்த 12 நிமிஷத்துலே! படகுப்பயணம்முடியும் முன்பு ஒரு சின்னப்பாலத்துக்கடியில் படகு வரும்போது உலகத்துக் குழந்தைகள் எல்லோருமே ஒண்ணா இருக்கறமாதிரி ஒரு சீன்.




வெளியே வந்து சுத்துப்புற வெராண்டா மாதிரி இருக்கும் அமைப்பில் வலம் வர்றோம். பிரமாண்டமான தோட்டம்.அழகா நிர்மாணிச்சு வச்சுருக்காங்க. லேண்ட்ஸ்கேப் அட்டகாசம். பொருத்தமான செடிகள். தோட்டம் மட்டுமே60 ஏக்கர் நிலமாம். சொல்ல மறந்துட்டேனே...அங்கங்கே ரெஸ்ட் ரூம்கள். உண்மைக்குமே படு சுத்தமா இருக்கு. குடிதண்ணீருக்கும் அங்கங்கே குழாய்கள் வச்சிருக்காங்க.




'யக்னபுருஷ் குண்ட்'ன்ற பேரில் யாகம் செய்யும் குண்டம் போன்ற ஒரு பெரிய அமைப்பு. அதைப் பார்த்தபடி நிற்கும் ஸ்ரீ நீல்கண்ட்டின் பிரமாண்டமான உருவச்சிலை. ( இங்கே எல்லாமே பிரமாண்டம்தான். கோயிலுக்கு உள்ளே இருக்கும்சிலையும் 11 அடி உயரம். எதுக்கெடுத்தாலும் பிரமாண்டம்ன்னு சொல்லியே எனக்கு அலுத்துப்போச்சு. இந்த வார்த்தைக்குப்பதிலா வேறொரு சொல் இருக்கான்னு நம்ம 'சொல் ஒரு சொல்' மக்களைக் கேக்கணும்) முன்னூறு அடிக்கு முன்னூறுன்னு சதுரமான குண்டத்துலே எட்டிதழ் தாமரை அமைப்பில் இருக்கு. இங்கே இறங்கி வர்றதுக்கு நாலாபக்கமும் சேர்ந்து2870 படிக்கட்டுகள். அதுலே அங்கங்கே குட்டிக்குட்டி மாடங்களாச் சின்னச்சின்ன கோயில்கள் அமைப்பு 108 இருக்கு.


இந்தியா முழுசும் இருக்கும் 151 நதிகளில் இருந்து புனித நீர் கொண்டுவந்து இந்த செயற்கை நீர் ஊற்றில் கலந்துருக்காங்களாம். மானசரோவர் ஏரியில் இருந்தும் புனித நீர் கொண்டு வந்தாங்களாம். இதுதான் போன பதிவில் இருக்கும் கோமுகங்கள் வாயில் சன்னமா வர்ற தண்ணீர். இந்த கோமுகங்களின் எண்ணிக்கைகூட 108. இங்கேதான் இசை நீர் ஊற்றுக் காட்சி நடக்கும்.இசை நீர் ஊற்றுக்கள் காட்சியும் அமர்க்களமாவே இருக்குமாம். ச்சும்மா இசைக்குப் பதிலா வேத மந்திரங்கள் ஒலிக்க அதுக்கேத்த மாதிரி தண்ணீர் மாயாஜாலம் காமிக்குதாம். ஆனா ஆறே முக்காலுக்குத்தான் ஆரம்பமாம். குளிர் காலம் முடிஞ்சதும் ஏழு மணிக்காம். அவ்வளவு நேரம் இருக்கமுடியாதுன்றதாலே கிளம்பிட்டோம்.செந்தோஷாவுலே பார்த்துருக்கோமேன்னு மனசைச் சமாதானப் படுத்த வேண்டியதாப் போச்சு.



தோட்டத்தைச் சுற்றி வந்து வெளியேறும் இடம் ஒரு பெரிய ஹால். அமெரிக்கன் ஸ்டைலில் ஞாபகச் சின்னங்கள் படங்கள், டி. ஷர்ட்டுகள்ன்னு விற்கும் இடம். இதே மாதிரி பெங்களூர் ஹரே கிருஷ்ணாவிலும் பார்த்திருந்தேன்.படம் எடுக்கத்தான் அனுமதி இல்லையே.......... அதனால் சில படங்களை வாங்கிக்கிட்டோம். கோபாலை எப்படியும் சந்நியாசியாக்கியே தீருவதுன்னு அவருக்கு ஒரு ருத்திராட்ச மாலை வேற.


இங்கே ஒரு ரெஸ்டாரண்ட் இருக்குன்னு போர்டுலே பார்த்தேன். ஆனா நாங்க போன அன்னிக்கு மூடி இருந்தது. கண்ணு நிறைஞ்சு மனசும் நிறைஞ்சு இருந்ததாலே பசி மறந்து போச்சு. ஒரு நாள் பகல் சாப்பாடு போனாப் போட்டும்.


பிற்பகல் மூணு மணிக்கப்புறம் ஒரு வலைப்பதிவர் சந்திப்பு இருந்ததாலே இன்னொரு நாள் (???) ஆறுதலா வந்து தூண்களையும், தோட்டத்தையும் ( மட்டும்) ரசிக்கலாமுன்னு மனசுக்குள்ளெ திட்டம் தீட்டிவச்சேன். போனோம் ,பார்த்தோம், வந்தோமுன்னு இருக்கறவளா நான்? அதைப் பத்தியே இண்டு இடுக்குவிடாம யோசிச்சுக்கிட்டு இருந்தேன்.



இந்தப் படகு சவாரியிலே போறப்ப ரெண்டு பக்கமும் அற்புதக் காட்சிகள் இருக்கு. நாம ஒரு பக்கம் பார்த்து ரசிக்குமுன்னே இந்தப் பக்கம் காட்சியைக் கோட்டை விட்டுடறோம். இதே படகு ஒருமுறை இந்தப் பக்கம் போய் சுத்தி,அதே பக்கம் மறுபடித்திரும்ப வந்தால் அடுத்த கரையில் இருக்கும் காட்சிகளை மிஸ் செய்ய மாட்டோம். நிர்வாகம் இதைக் கவனிச்சால்நல்லா இருக்கும். போனாப் போட்டுமுன்னு சொல்ல முடியாத அழகா இருக்கறதாலேதான் இந்த விண்ணப்பம். அப்படிஇல்லையா............ இன்னும் நின்னு நிதானிச்சுப் போகணும் படகு. இந்தப் பன்னிரெண்டு நிமிஷத்தை இருபது நிமிஷமாக்கினால் நல்லது.


கோயிலில் பூஜை நேரமுன்னு ஒதுக்கி வைக்கலை. அதனாலே நாம் பூஜை சாமான்கள் வாங்கிப்போறது, கற்பூரம் ஏத்தறது, தேங்காய் உடைக்கிறதுன்னு ஒண்ணும் கிடையாது. இதெல்லாம் இல்லாததாலே நம்மூர் கோயில் வாசலில்பார்க்கும் பூக்கடை, அர்ச்சனைப்பொருட்கள் விற்கும் கடைன்னு களேபரம் இல்லாம இருக்கு. முக்கியமா பிச்சைக்காரர்கள் வாசலில் வரிசையா இருக்கும் காட்சி இல்லை. இதுவே கொஞ்சம் ஆசுவாசமா இருக்கு. கோயிலுக்குள்ளும்படு சுத்தமா இருக்கு. விபூதி, குங்குமப் பிரசாதமும் இல்லை, அதனால் அதை வாங்கி நெத்தியில் இட்டது போகத் தூண்களில் கொட்டிட்டுப்போறதும் இல்லை.அங்கே தரையில் யாரையும் உக்கார அனுமதிக்கிறது இல்லை. அந்தப் படிகளில்கூட அமர அனுமதி இல்லையாம். நமக்கோ........ கோயிலுக்குப்போனா ஒரு ரெண்டு நிமிஷமாவது உக்காரணும். அப்பத்தான் பலன்னுசொல்லி வளர்த்த பாட்டிதான் நினைவுக்கு வராங்க. ஒவ்வொரு கோயிலும் ஒரு விதம். அந்தந்த வழக்கபடிக் கும்புட்டாப் போச்சு.



கலாச்சாரமையத்துக்கு ஒரு நாள் அவுட்டிங் வர்றதுபோல மக்கள்ஸ் வராங்க. அதுலே இளம்வயதுக்காரர்கள் ஏராளம். புதுக்கருக்கழியாத நகையும் நட்டுமா, கைகளில் மருதாணி இன்னும் பளிச்சுன்னு கோலம் போட, கணவன் ரகசியமா எதோ காதில் சொல்ல, அதைக்கேட்டு உலக மகா ஜோக் போல ரசிச்சுச் சிரிச்சுக்கிட்டு இருந்த சில தேன்நிலவு ஜோடிகளைக் கூடப் பார்த்தோம். நம்ம பக்கத்தைவிட வடக்கத்தி மக்கள் இன்னும் ச்சின்னவயசுலேயே கல்யாணம் பண்ணிக்கறாங்க போல இருக்கு.


நீங்க போறப்ப திங்கக்கிழமை மட்டும் போயிறாதீங்க. அன்னிக்கு வார விடுமுறையாம்.


ஏழை நாட்டுக்கு இவ்வளவு ஆடம்பரம் தேவையான்னு ஒரு பக்கம் பேச்சு அடிபட்டுக்கிட்டு இருந்தாலும் இது ஒரு மகத்தான சாதனைன்னுதான் சொல்லணும். முந்தியெல்லாம் டெல்லின்னதும் ஆக்ராவும் தாஜ்மகாலும் உண்டாக்கும் தாக்கத்தை இனி வரும் நாட்களில் இந்தக் கோயில் ஏற்படுத்தத்தான் போகுது. ஒரு பத்தே வருசம் டைம் கொடுத்துப்பாருங்கன்னு சொன்னேன் கோபால்கிட்டே.


தாஜ்மகால் ஒரு அதிசய அழகுதான்னாலும் அது சமகாலத்துக் கட்டிடம் இல்லை. ஆனா அக்ஷர்தாம் நம்ம கட்டிடக் கலைஞர்களைக்கொண்டே கட்டப்பட்டது. கட்டுறப்ப இதோட ஒவ்வொரு நிலையையும் நல்லபடியா ஆவணப்படுத்தி வச்சுருக்காங்க. கலைகள் நசிச்சுப்போகுதுன்னுகூப்பாடு போடும் காலக்கட்டத்தில் இப்படி ஒண்ணு கட்டப்பட்டிருக்கறது அற்புதமுன்னே நான் நினைக்கிறேன். இதே மாதிரி கோயில் ஒண்ணு காந்திதாம் குஜராத்லேயும் கட்டி இருக்காங்களாம். இங்கே எங்க நியூஸியிலும் ஆக்லாந்து நகரில் ஒருகோயில் ( கோயில் மட்டும்) கட்டி இருக்காங்க. அதுக்கும் தூண் முதற்கொண்டு எல்லாமே இந்தியாவில் செஞ்சு,இங்கே கொண்டுவந்து கோயிலை எழுப்புனாங்கதான். அதே பிங் ஸ்டோனும் மார்பிளும். சுமார் மூணு வருசம்முந்தி அதைப் பர்க்கப்போனப்ப, அங்கே ஆமதாபாத்தில் கட்டி இருக்கும் கலாச்சாரமையத்தோடு கூடிய கோயிலைப்பத்தின விவரம் அடங்கிய புத்தகம் ஒண்ணு கிடைச்சது. படங்கள் எல்லாமே கண்ணைப் பறிச்சது. எழுத்துகள் ஒண்ணும் படிக்கத்தெரியலை. அப்படியும் எழுத்துக்கூட்டித் தட்டிமுட்டிப் படிச்சு(!!)பார்த்தேன். குஜராத்தியிலே அச்சடிச்சு இருந்துச்சு.முக்கால்வாசி ஹிந்தி எழுத்துக்கள்தான். அந்தப் படங்களையும், இப்ப டெல்லியிலே பார்த்த கோயிலின் அமைப்பையும் பார்த்தப்பத்தான் தெரியுது ரெண்டுமே வெவ்வேற அழகுன்னு. கலாச்சார மையங்களிலும் வெவ்வேற காட்சிகளா இருக்கு.



இவுங்கதான் உலகமெங்கும் கோயில் கட்டிக்கிட்டு வராங்களே. நியூஸி கோயில் இவுங்களோட 416வது கோயில்.அது ஆச்சு அஞ்சு வருஷம். அதுக்கப்புறம் எத்தனையோ? அதுலே அந்தந்த நாட்டுக் கட்டுத்திட்டத்தின் படித்தான்கட்டவேணும். உள்ளூர் கட்டிடக் கம்பெனியுடன் கூட்டாய்ச் சேர்ந்துதான் கட்டவேணும். நியூஸியில் ஆக்லாந்துக் கோயிலுக்கும் இந்தியாவிலே இருந்து கொண்டுவரப்பட்ட தூண்கள் கொஞ்சம் உருமாறிச் சிதைஞ்சுப் போச்சுன்னாலும், கூடவே வந்த கலைஞர்கள் ராவும் பகலுமா உக்கார்ந்து சரி செஞ்சுட்டாங்க. அலங்காரத்தூண்கள் எல்லாம் ஒண்ணு போல இருக்கே,அதுக்கும் சில டெம்ப்ளேட் பயன்படுத்துனாங்களாம். 'இந்தியாவுலே ஸ்டீல் காங்க்ரீட் எல்லாம் பயன்படுத்தாமத்தான் கட்டுறோம். இதுவரை ஒரு கோயிலும் இடிஞ்சு விழலை'ன்னு கோயில் நிர்வாகம் சொன்னாலும் இங்கே தூண்கள் வைக்கவும், இன்னும் வெளிப்புற பூச்சு வேலைக்கெல்லாம் பீம்கள் வைக்கத்தான் வேண்டி இருந்துச்சுச்சாம். இதெல்லாம் 'கட்டுமானத்துறை குமாருக்கு நல்லா விளங்கும்'. ஊரில் இருந்து வந்த பிரமாண்டமான தேக்கு மர முன்வாசக் கதவுகளைப் பொருத்துனது, ப்ரீகேஸ்ட்டா வந்த பாகங்களைப் பயன்படுத்துனதுன்னு எல்லாமே உள்ளூர் கம்பெனிக்கு ஒரு சேலஞ்சிங் ஜாப் ஆக இருந்துச்சுன்னு கம்பெனியின் சைட் மேனேஜர் சொல்லி இருக்கார்.


இந்தக் கோயில்கள் கட்டாயம் பார்க்கவேண்டியவை. உலகத்துலே நீங்க எங்கெங்கே இருக்கீங்களோ அங்கே இருக்கறதைப் பார்க்கத் தவற விடாதீங்க.


நாளைக்கு இன்னொரு கோயிலுக்குக் கூட்டிட்டுப்போவேன் உங்களை.


தொடரும்............

24 comments:

said...

//அதனால் சில படங்களை வாங்கிக்கிட்டோம். கோபாலை எப்படியும் சந்நியாசியாக்கியே தீருவதுன்னு அவருக்கு ஒரு ருத்திராட்ச மாலை வேற.//

ஆக்கியே தீருவதா? எனக்கு என்னமோ ஆக்கினதுனாலதான் மாலையோன்னு சந்தேகமாவே இருக்கு. :))

said...

வாங்க கொத்ஸ்.

:-)

எப்படியும் வச்சுக்கலாம்:-)

said...

கோபாலை எப்படியும் சந்நியாசியாக்கியே தீருவதுன்னு அவருக்கு ஒரு ருத்திராட்ச மாலை வேற.
திரு.கோபால் தைரியமாக இருக்கலாம்.சொல்பவர்கள் பலர் செய்வதில்லை.:-))

said...

நான் இன்னமும் முழுதாக சுற்றிப்பார்க்கவில்லை.ஆனால் சுற்றிப்
பார்த்தமாதிரி செய்திருக்கிறது
உங்கள் எழுத்து.
\\உலகத்துலே நீங்க எங்கெங்கே இருக்கீங்களோ அங்கே இருக்கறதைப் பார்க்கத் தவற விடாதீங்க.//
உண்மையான வார்த்தைகள்.
ஆனால் பக்கத்தில் இருப்பதற்கு
எப்போதும் குறைவாகவே மதிப்பிடுகிறோம்.

said...

வாங்க குமார்.

//சொல்பவர்கள் பலர் செய்வதில்லை.:-))//

அப்படியா? என் வழி தனி வழி:-)

said...

வாங்க முத்துலெட்சுமி.

'இங்கெதானெ இருக்கு. அப்புறமாப் போனாப் போச்சு'ன்ற மெத்தனம்தான்.

இப்படி அருமையான பல விஷயங்களைக் கோட்டை விட்டுருக்கேன்(-:

said...

'கேமரா'க் கண்!
உள்வாங்கியதைவிட வெளிப்படுத்தியதில்
நீங்க
எங்கேயோ போய்ட்டீங்க..

said...

அற்புதமான வர்ணனை. கண்டிப்பா ஒரு தடவை அக்ஷர்தாம் போகணும்.

//'இங்கெதானெ இருக்கு. அப்புறமாப் போனாப் போச்சு'ன்ற மெத்தனம்தான்.//

100% சரி. நானும் இதே மாதிரி நிறைய தவற விட்டிருக்கேன்.

அடுத்தது எந்த கோயில்?

said...

வாங்க சிஜி.

//'கேமரா'க் கண்!
உள்வாங்கியதைவிட வெளிப்படுத்தியதில்
நீங்க
எங்கேயோ போய்ட்டீங்க..//


இதுலே உ.கு. எதுவும் இல்லை என்று நம்பலாமா? :-)

said...

வாங்க பிரசன்னா.

இனிமே 'போனா வராது பொழுது போனாக் கிடைக்காது'ன்ற
பாலிசியைப் பிடிச்சுக்கணும்:-)

said...

துளசியக்கா!
லண்டனில் ஆலயத்துள் அமைதியாக இருந்து வழிபடலாம்; தீபாராதனை உண்டு. ஆனால் நாம் எதுவும் கொண்டு செல்லத் தேவையில்லை. படக்காட்டி;சிறுகண்காட்சி போன்றவையுண்டு.
தூய்மை;வெகுவாகக் கடைப்பிடிக்கிறார்கள்.உள்ளே படம் பிடிக்க அனுமதியில்லை.
கோவில் படம் அழகாக உள்ளது.

said...

உண்மையாகவே ப்ரமாண்டம்தான்.
இத்தனை உழைப்போடு உருவாச்சுன்னால் அதிசயமக இருக்கு.
எவ்வளவு தீவிரம் காட்டி செய்திருக்காங்க.!

ஒண்ணு கூட மறக்காம நல்லாப் பதிஞ்சு இருக்கீங்க துளசி.
போனோம் வந்தோம்னு ஒண்ணும் செய்யக் கூடாதுனு தான் நினைக்கிறது. சில சமயம் அப்படித்தான் நடக்கிறது/.:(

said...

ரொம்ப அருமையா எழுதியிருக்கீங்க. கட்டி முடிச்ச வரைக்கும் நான் கேள்வியேபடாத கோவில் இது. என்ன பிரம்மாண்டம். கொடுத்து வச்சவங்க நீங்க. அடுத்த வாட்டி இந்தியா போகும்போது கண்டிப்பா பாக்கவேண்டிய இடம்னு நினைக்கிறேன். ஆனா என்ன பண்றது? அந்த மாதிரி ஒரு லிஸ்ட் வளந்துகிட்டே போகுது :-(

நான் டெல்லில கொஞ்ச நாள் இருந்ததால, இந்த கோவில் எந்த இடத்துல இருக்குன்னு மண்டைல ஒரே கொடச்சல். அந்த சந்தேகத்த தீத்து வச்சதுக்கும் ஒரு பெரிய நன்றி.

said...

அக்காவ்,

வார இறுதியில் தாய்நாட்டு பயணம் தலைநகரிலிருந்துதான் ஆரம்பிக்குது. நம்ம "பார்க்க/செய்ய வேண்டிய" லிஸ்டுல இந்த கோவிலும்!!! நல்ல நேரத்துக்கு உங்க எழுத்து ஆசிர்வாதத்தை வாங்கிகிட்டு போகலாமுன்னு இங்க எட்டி பார்த்தா.......

//நீங்க போறப்ப திங்கக்கிழமை மட்டும் போயிறாதீங்க. அன்னிக்கு வார விடுமுறையாம்.// காப்பாத்திட்டீங்க... இல்லன்னா, ஏமாந்துல வந்துருப்போம்!!!


//எதுக்கெடுத்தாலும் பிரமாண்டம்ன்னு சொல்லியே எனக்கு அலுத்துப்போச்சு. இந்த வார்த்தைக்குப்பதிலா வேறொரு சொல் இருக்கான்னு நம்ம 'சொல் ஒரு சொல்' மக்களைக் கேக்கணும்) //
ம்ம்ம்ம்ம்ம்ம்..... "மெகா" ன்னு சொல்லலாமா(சங்கர் பாணியில)

said...

நேர்ல பாத்தமாதிரி உணர்ரென். அக்ஷர்தாம் நேர்ல பாக்கணும்கற உணர்வை துண்டி விட்டுட்டீங்க‌

said...

வாங்க யோகன்.

இங்கே கூட வேற நேரத்துலே வழிபாடு இருக்கலாம்.
நாங்க போறப்பவே 11 மணி ஆயிருச்சு.

பூஜை நேரத்தைப் பத்தி விசாரிக்கத் தோணலை(-:

said...

வாங்க வல்லி.

இப்பத்தான் நமக்குன்னு பதிவு இருக்கே. போன இடத்தைப் பதிவு பண்ணி வச்சுக்கிட்டா
நாலுபேருக்கு உதவுமுன்னாலும் நமக்கே ஒரு ஆவணமா இருக்காதா?

said...

வாங்க நாகு.

இப்படித்தான் லிஸ்ட் அனுமார்வால் மாதிரி வளர்ந்துக்கிட்டே போகுது.

இருக்கட்டும் அது பாட்டுக்கு.

சந்தர்ப்பம் கிடைக்கும்போது விட்டுறக் கூடாதுல்லே?

said...

வாங்க கஸ்தூரிப்பெண்ணே.

'மெகா' ன்றது தமிழ்ச் சொல்லா?

அப்ப ஜெய்குண்டோன்னும் சொல்லிக்கலாமா? :-)))))

சந்தோஷமா ஊருக்குப் போயிட்டு வாங்க.

முடிஞ்சா சாயந்திரம் இசை நீரூற்றும் பாருங்க. வெறும் 20 ரூபாதான்
டிக்கெட்டு. மத்தியானம் சாப்பாடு முடிச்சுக்கிட்டுக் கிளம்பினா
நேரம் சரியா இருக்கும்.

said...

வாங்க ச்சின்ன அம்மிணி.

இப்போதைக்கு இந்தியா போகலைன்னாலும் ஆக்லாந்துக்குப் போகும்போது
அப்படியே ஒரு நடை போயிட்டு வாங்களேன்.

said...

அழகான படங்களும், நல்ல கட்டுரையும் தந்திருக்கிறியள்.
சுந்தரி

said...

வாங்க சுந்தரி.

முதல்முறையா வந்துருக்கீங்க போல இருக்கு?
நலமா?

பின்னூட்டியதுக்கு நன்றி.

அடிக்கடி வந்து போகணும்,ஆமா:-)))

said...

நீங்க எழுதுனதைப் படிச்சா எப்படா போய் பாப்போம்ன்னு இருக்கு துளசியக்கா. அடுத்த வார இறுதிக்கு சிகாகோ போகலாமான்னு வீட்டுல கேட்டுக்கிட்டு இருக்காங்க. அங்கெ இவங்க கோவில் ஒன்னு இருக்கு. போய் பாக்க முடியுமான்னு பாக்கணும்.

said...

வாங்க குமரன்.

இவுங்களோட ஒவ்வொரு அக்ஷர்தாம் கோயிலும் ஒவ்வொரு விதமான
அலங்காரம், கல்ச்சுரல் செண்ட்டரும் வெவ்வேற சீன்கள். கட்டாயம் சிகாகோ
கோயில் போய்ப் பாருங்க.