Monday, May 28, 2007

நியூஸிலாந்து பகுதி 62

அரசியல் நிகழ்ச்சிகள் ஒரு கூத்து பார்க்கறமாதிரி ஆயிருச்சுங்க. திருப்பித் திருப்பி சரித்திரத்துலே அரசியல் முக்கிய இடம் பிடிச்சிருது. சொல்லித்தான் ஆகணும். ஒருத்தரை ஒருத்தர் காலை வாருவது, சமயம் பார்த்து முதுகுலே குத்துறது( சீஸருக்கும் இப்படித்தானே?) கட்சித்தாவல் ( இதுக்கு இங்கே 'waka jumping' னு பேர்)இதெல்லாம் அரசியலிலே சகஜமப்பா:-)))) நாடுகள்தோறும் மொழிகள் (மட்டுமே) வேறு என்பது நூத்துக்கு இருநூறு உண்மை!



இந்த இடத்துலே இன்னொண்ணு சொல்லிக்கறேன். இங்கே பெரிய தலைவர்களா இருந்தாலும் சரி, சின்னப் பிள்ளைகளா இருந்தாலும் சரி, எல்லாருக்கும் அவுங்க பெயரை சுருக்கி ஒரு செல்லப் பெயர் வச்சுக்கிறது வழக்கம். அந்தச் செல்லப்பேரிலேயே பத்திரிக்கைகள், தொலைக்காட்சிகள் இன்னும் எல்லா இடங்களிலும் சொல்றதும் ஒரு வழக்கம். ஆனா,பட்டப்பேர் கொடுக்கறதோ, அதால் அறியப்படுறதோ கிடையவே கிடையாது. ( ஹூம்....... எப்பத்தான் திருந்தப் போகுதோ?)




தலைக்கு மேலேக் கத்தி தொங்கிக்கிட்டு இருந்தா எப்படி இருக்கும்? அப்படி ஆகிப்போச்சு ஆளும் கட்சியின் நிலமை.எந்த சமயம் யார் எதிர்க்கட்சியில் போய் சேர்ந்துருவாங்களோன்னு பயமா இருந்திருக்கும். போன சட்டசபையில்இவுங்க பக்கம் உக்காந்துருந்தவங்க சிலர் இப்ப எதிர்வரிசையில் இருக்காங்களே. போன பகுதியில் குறிப்பிட்டேன் பாருங்க,வின்ஸ்டன் பீட்டர் சுவாரசியமானவர்னு. இப்ப அவரைப் பத்துன சில செய்திகளைப் பார்க்கலாம்.



1990 தேர்தலில் நேஷனல் கட்சி அபார வெற்றியடைஞ்சது பாருங்க, அப்ப இவர் அந்தக் கட்சியில்தான் இருந்தார்.இவருக்கு 'மவொரி அபேர்ஸ்' மந்திரிப் பதவியும் கிடைச்சது. மனசில் பட்டதை அப்படியே 'பளிச்'னு பேசற குணம்இருக்கறதாலே, கட்சித் தலைமையுடன் பல விஷயங்களில் கருத்து வேறுபாடு. இந்த மோதல்கள் எல்லாம் ஒளிவுமறைவு இல்லாம வெளியே செய்திகளா வந்துக்கிட்டு இருந்ததாலே பொதுஜனங்கள் மத்தியில் இவருக்குப் புகழ் கூடுதலாச்சு.அதே சமயம் கட்சியைப் பத்துன நல்ல எண்ணங்களுக்கு இறக்கம். கட்சியில் பல்லைக் கடிச்சுக்கிட்டுப் பொறுத்துப் போய்க்கிட்டுஇருந்தாலும், அடுத்த தேர்தலில் எங்கே மக்கள் ஆப்படிச்சுருவாங்கன்ற பயம் வந்துருச்சு. மந்திரிப் பதவியைப் பிடுங்கிடுச்சுக் கட்சி.பேசாம வெறும் பார்லிமெண்டு அங்கத்தினரா இருந்தார். அடுத்த தேர்தலுக்கு, கட்சிசார்பா யார் யார் நிக்கப்போறாங்கன்னு லிஸ்ட் போட்டப்ப இவர் பேரே அதுலே இல்லை. இதை எதிர்த்து வழக்குப் போட்டார். அதுலே இவர் பக்கம் தோல்வி.



கொஞ்சம் யோசிச்ச மனிதர், பேசாம கட்சியில் இருந்தும், பாராளுமன்ற அங்கத்தினர் பதவியில் இருந்தும் ராஜினாமா செஞ்சுட்டார். அவரோட தொகுதிக்கு இடைத் தேர்தல் வந்துச்சு. அந்தத் தொகுதியின் பெயர் டாவ்ராங்கா( Tauranga)அந்த இடத்துலே சுயேச்சையா நின்னு 90.71% ஓட்டுகள் வாங்கி வெற்றியடைஞ்சார். பொதுத் தேர்தல் வர்றதுக்கு ஆறே மாசம்தான் இருந்துச்சு.அதனாலே மெனெக்கெட வேணாமுன்னுட்டு இந்த இடைத்தேர்தலில் பெரியகட்சி எதுவும் நிக்கலை. பத்துச் சின்னக் கட்சிகள்தான் விலை போகுமா, மார்கெட் இருக்கான்னு பரிசோதனையா நின்னு பார்த்தாங்க. இதுலே ஒரு கட்சி வெறும் 24 ஓட்டுகள் தான் வாங்குச்சு.



ஆஹா........ மக்கள் நம்மைக் கைவிடலைன்னு புரிஞ்சுபோச்சு. அப்புறம் என்ன........ 'நியூஸி ஃபர்ஸ்ட்'னு புதுக் கட்சி ஆரம்பிச்சார். இதுதான் இப்ப அவர் எதிர்க்கட்சி வரிசையில் உட்கார்ந்திருக்கும் 'கதை'. இது இப்படி இருக்க,
அதே 1990 சமயம் ஜென்னி( ஜெனிஃபர்) ஷிப்லின்ற பெண்மணி, சோஷியல் வெல்ஃபேர் மந்திரியா இருந்தார். இவரும்,நிதி மந்திரியம்மா (ரூத் ரிச்சர்ட்ஸன்) சேர்ந்துதான் அப்ப உதவித் தொகைகளையெல்லாம் குறைச்சாங்க. நாட்டுக்கு நல்லதுன்னாலும், அதேதான் கட்சியின் இறக்கத்துக்குக் காரணமாப் போச்சு. 1993 அமைச்சரவையில் ஷிப்லிக்கு வேற இலாகா சுகாதாரம் & பெண்கள் நலம் மந்திரி ஒதுக்குனாங்க. இந்த 1996 அமைச்சரவையில் நைஸா நிதி அமைச்சர் பதவியை, 'பில் பிர்ச்' என்றவருக்குக் கொடுத்துட்டார் பிரதமர். நம்ம ஜென்னி ஷிப்லி, இப்ப அரசாங்கத்துக்குச் சொந்தமான கம்பெனிகள் நிர்வாக மந்திரி.


இந்த 1996 தேர்தல்தான் யாருக்கும் மெஜாரிட்டி இல்லாம ஆயிருச்சு. சபாஷ்! சரியான போட்டி. நேஷனல் & லேபர் ரெண்டுபேருக்கும் சரிசமமா 41 இடங்கள். பாக்கி இருந்த 17 இடத்துலே யுனைட்டட் கட்சிக்கு 7, நியூஸி ஃபர்ஸ்ட்க்கு 5, அப்புறம் அலையன்ஸ்க்கு 2. மிச்சம் இருந்த 3 இடங்கள் மூணு வெவ்வேற கட்சிக்கு ஆளுக்கு ஒண்ணு. மீண்டும் டானிக்,தாது புஷ்டி எல்லாம் தேவை. இந்த சங்கடமான நிலையில்தான் 'கேக்' உதவிக்கரம் கொடுத்துச்சு.




அதான் MMP க்கு ஆதரவு தெரிவிச்சிருந்தோமே. பாராளுமன்றத்தை விரிவாக்குறோமுன்னு 120 இடங்கள்னு முடிவாச்சு. அப்புறம் சரிக்குச் சரியாப்போனா வம்புன்னுட்டு 121 இடங்கள்னு ஆக்குனாங்க. அந்தக் கணக்குலே 'கேக்'கைப் பங்குபோடறோமுன்னு இங்கே வெட்டி, அங்கெ வெட்டி விகிதாச்சாரம் பார்த்துக் கடைசியிலே அறிவிச்சது இப்படி.


நேஷனலுக்கு 44

லேபருக்கு 37

நியூஸி ஃபர்ஸ்ட் 17

அலையன்ஸ் 13

ஆக்ட் 8

யுனைட்டட் நியூஸி 1

கணக்கு ஒண்ணும் எனக்கு(!) சரியாப் புரியலை. வாயைத் திறந்து கேக்கலாமுன்னா........... கேக்கால வாய் அடைஞ்சு போயிருந்துச்சு. யார் ஆட்சி அமைக்கப் போறாங்க? கூட்டு மந்திரி சபைதான்னு தெரிஞ்சுபோச்சு.'ஆதாயம் இல்லாம யாராவது ஆத்தோட போவாங்களா'? யார்....... யாரோட? 'பேச்சு வார்த்தைகள்' நடக்குது. ( நோ ஸூட் கேஸ்)


நாங்களும் தொலைக்காட்சியும், தினசரிப் பேப்பருமா கண்ணு நட்டுக்கிட்டு இருக்கோம். நேஷனலும், நியூஸி ஃபர்ஸ்ட் கூட்டு. அடிச்சது லக்கி பிரைஸ் நியூஸி ஃபர்ஸ்ட்க்கு. என்ன அப்படிப் பிரமாதமான பிரைஸ்? பிரமாதம்தான்.(உதவி)பிரதமர்தான். 'கூட்டத்துலே கோவிந்தா'ன்னு இல்லாமத் தனியாப் போனது நல்லதாப் போச்சோ?


'யானை'க்கு வாலா இருக்கறதைவிட 'பூனை'க்குத் தலையா......... இது எப்படி இருக்கு?எப்பப் பார்த்தாலும் புலி, எலின்னு சொல்றதை எப்படி மாத்திட்டேன்:-))) ( அப்பாடா, நம்ம யானையையும் பூனையும் சரித்திர வகுப்புக்குக் கொண்டாந்துட்டேன்)



வின்ஸ்டன் பீட்டர் இப்ப உதவிப் பிரதமர். அவரோட கட்சி எம்.பி.ங்க சிலருக்கு 'இணை அமைச்சர்' பதவிகள். ( உங்களுக்கு வேற ஞாபகம்
வந்தால் நான் பொறுப்பல்ல!)


எங்கூரு பார்லிமெண்டுக்குப் பேர் 'தேன்கூடு' ! விளையாட்டுக்குச் சொல்லலைங்க. உண்மையாத்தான். தேன்கூடுமாதிரி வட்டமான டிஸைன்லே கட்டி இருக்காங்க. உள்ளே சபை எப்படி இருக்கு பாருங்க. படம் போட்டுருக்கேன்!

20 comments:

said...

அட! அதுக்குள்ள லீவு முடிஞ்சு போச்சா?
பயணக்கதை எப்போது?
பயணமெல்லாம் இனிதாக இருந்ததா?

said...

//அரசியல் நிகழ்ச்சிகள் ஒரு கூத்து பார்க்கறமாதிரி ஆயிருச்சுங்க. திருப்பித் திருப்பி சரித்திரத்துலே அரசியல் முக்கிய இடம் பிடிச்சிருது. சொல்லித்தான் ஆகணும். ஒருத்தரை ஒருத்தர் காலை வாருவது, சமயம் பார்த்து முதுகுலே குத்துறது( சீஸருக்கும் இப்படித்தானே?) கட்சித்தாவல் ( இதுக்கு இங்கே 'waka jumping' னு பேர்)இதெல்லாம் அரசியலிலே சகஜமப்பா:-)))) நாடுகள்தோறும் மொழிகள் (மட்டுமே) வேறு என்பது நூத்துக்கு இருநூறு உண்மை!//

சூப்பர் பஞ்ச்,

நியூசி அரசியல் கட்சிகள் குறித்து உங்கள் ஞானம் தெளிவாக இருக்கிறது...சொல்லப்பட்ட விதத்தை வைத்துச் சொல்கிறேன்.

ஆல் இன் ஆல் துளிசிகோபால்.

said...

நானும் தேன்கூட்டை தினமும் பாத்துக்கிட்டேதான் 5 வருசம் வேலைக்குப்பொனேன். போற வழிதான். மதியம் நண்பர்களுடன் அங்கே புல்வெளியில உக்காந்து சாப்பிடுவோம். அழகிய சூழ்நிலை உருவாக்கி இருக்காங்க.
ப்ரிஸ்பேன் நல்லா சுத்தினீங்களா?

said...

அதுக்குள்ளெ லீவு முடிஞ்சது உங்களுக்கு
இவ்வளவு 'சோகம்' தந்துருச்சா? :-)

இந்த முறை முதலில் நியூஸியை முடிச்சுட்டுத்தான்
வேற வேலைன்னு 'ப்ரிஸ்பேன்'லே கங்கணம் கட்டிக்கிட்டு
வந்துருக்கேன்:-)

said...

வாங்க ஜிகே.

என்ன பெரிய அரசியல் ஞானம்?

ஆன்னா ஊன்னா பத்திரிக்கை, தொலைக்காட்சின்னு கருத்துக்கணிப்பா இங்கே
ச்சீப்படுதே. நாலுநாள் டிவி பார்த்தாலே போதும்.


இன்னிக்குப் பாருங்க

said...

வாங்க ச்சின்ன அம்மிணி.

நல்லவேளை, இங்கே இன்னும் எல்லா இடத்துக்கும் நாம போய்வர முடியுது.
நம்மூர்லே பார்லிமெண்ட் பக்கம் காரை ஒரு நிமிஷம் நிறுத்தக்கூட 'தடா'தான்(-:
என்ன செய்யறது, அங்கத்து நிலமை அப்படி(-:

ப்ரிஸ்பேனை ஒரு வழி பண்ணிட்டோம்லெ:-)))

said...

//இந்த முறை முதலில் நியூஸியை முடிச்சுட்டுத்தான்
வேற வேலைன்னு //

நியூசியின் அடுத்த உலகத்தலைவி டீச்சர் வாழ்க. எங்கள் தங்கத் தலைவி டீச்சர் வாழ்க. மாணவர்கள் முன்னேற்றத்திற்குப் பா(ட்)டு ப(பா)டும் டீச்சர் வாழ்க!

ஆமா பின்ன நியூசியை முடிக்கிறதுன்னு தீர்மானம் பண்ணியாச்சு. அப்புறம் ஆட்சியைப் பிடிக்காம எப்படி?

said...

வாங்க கொத்ஸ்.

டீச்சரைப் பத்தி நல்லாவே தெரிஞ்சு வச்சுருக்கீங்க.
நம்ம கையில் கிட்டுனதை முடிக்காம விட்டதா 'சரித்திரமே' கிடையாது.:-))


உங்களுக்குத்தான் பதவி வரப் போகுது.
நியூஸியின் முதல் 'கொ.ப.செ':-)

said...

நியூசியின் அடுத்த உலகத்தலைவி டீச்சர் வாழ்க. எங்கள் தங்கத் தலைவி டீச்சர் வாழ்க. மாணவர்கள் முன்னேற்றத்திற்குப் பா(ட்)டு ப(பா)டும் டீச்சர் வாழ்க!

ஆமா பின்ன நியூசியை முடிக்கிறதுன்னு தீர்மானம் பண்ணியாச்சு. அப்புறம் ஆட்சியைப் பிடிக்காம எப்படி?

ஐயோ!ஐயோ!
கொல்கிறாரப்பா,இ.கொத்தனார்.

said...

ஆனா,பட்டப்பேர் கொடுக்கறதோ, அதால் அறியப்படுறதோ கிடையவே கிடையாது. ( ஹூம்....... எப்பத்தான் திருந்தப் போகுதோ?)....

இவ்வளவுதானேப்பா.
வேணும்கிற பட்டம் நாம கொடுக்கலாமே. எது இருக்கோ இல்லையோ,முன்னாடியே யாரு அந்தப்பட்டம் வச்சு இருந்தாலும்,அதுக்கு முன்னாடி ஒரு வைத்தியர் பேரும் போட்டு கொடுத்துடலாமில்ல...சரியா நான் சொல்ரது..:-)))))

said...

அடடே! இப்ப அந்த வினுசெண்டு பீட்டருதான் பிரதமரா...அடேங்கப்பா! என்ன வளர்ச்சி என்ன வளர்ச்சி...

கட்சி தாவுறது பத்திச் சொன்னீங்களே...நம்மூர்ல கட்சி தாவாத கட்சியே கெடையாது. ஆனா அடுத்த கட்சியை மட்டும் அப்படிச் சொல்வாங்க. எல்லாம் பொழப்பத்த பயக. எரிச்சலா வருது.

said...

ஜிரா, வின்சென்ட் பீட்டர் பிரதமரா? நியூசி தாங்குமா?
டீச்சர்,ஏதாவது பண்ணுங்களென்

said...

வாங்க ராகவன்.

நான் இப்ப எழுதுன பகுதி 1996லே நடந்த 'கதை':-)

நம்ம வின்ஸ்டன் பீட்டர் அப்ப உதவிப் பிரதமரா ஆக்கப்பட்டார். இல்லேன்னா
கூட்டு'டமால்' ஆகி இருக்குமே!

//எல்லாம் பொழப்பத்த பயக//

சரியாப்போச்சு. அரசியல் வியாதிகள் பொழக்கறதே நம்மளை வச்சுத்தானே:-)

said...

வாங்க ச்சின்ன அம்மிணி.

இப்படிச் சொன்னா எப்படி? அரசியலில் எதுவும் நடக்கலாம். அவரோட கனவு
நிறைவேறிட்டா................ ஒருவேளை நாடு பிழைச்சாலும் பிழைக்கும்.

நம்ம 'லாலு'வைப் பார்த்தீங்கல்லே?

said...

வாங்க குமார்.

கொத்ஸ் கொல்றாரா? :-)

இந்த வாரம் அவருக்கு வேற வேலை வந்துருக்கு

ஜொலிக்கறார்:-))))))

said...

வாங்க 'டாக்டர்' வல்லி.

நீங்க சொன்னது ரொம்பச் சரி:-)

said...

தேன்கூட்டில் ராணி தேனீயாய் நீங்கள் இருந்தால் பார்ப்பதற்கு எவ்வளவு பொருத்தமாக இருக்கும்!! :-)

said...

டீச்சர்,

உங்களுக்கு எதிரா சதி பண்ணறாரு இந்த சி.வி.ஆர். நீங்க கஷ்டப்பட்டு உங்க தேனீக்களைக் கொண்டு தேன் சேர்க்கணும். ஆனா கூடு முழுசா ஆகும் போது இவரு வந்து தேன் எல்லாம் தட்டிக்கிட்டு போயிடலாமுன்னு பார்க்கிறாரு. சாக்கிரதை.

இப்படிக்கு
புறங்கையில் வழியும் தேனை நக்கிக் கொண்டிருக்கும்
கொத்ஸ்

said...

வாங்க CVR.

இது என்ன 'விபரீத' ஆசை. உடம்பு சரியில்லையா உங்களுக்கு? இப்படி
'இல்யூஷனா' வருதேப்பா(-:

ஏற்கெனவே தேன்கூட்டுலே ஒரு 'ராணி' இருக்குப்பா.

said...

கொத்ஸ்,

கையைக் கழுவிக்கிட்டுத் தேன்கூட்டைவிட்டுத் தள்ளி நில்லுங்க. இப்ப
'அங்கே இருக்கும் ராணி' செமக்கடுப்புலே இருக்காம்( கருத்துக்கணிப்பு வெளிவந்திருக்கே)