Tuesday, July 03, 2007

நாங்க கப்பல் வாங்கியிருக்கொம்லெ

இப்ப ஒரு ரெண்டு வாரத்துக்கு முன்னாலெதான் வாங்குனோம். பழைய கப்பல் ரொம்பவே பழசாகிப்போச்சு. அதுக்குப் பதிலா வேற ஒண்ணு வாங்கிக்கணுமுன்னு தீர்மானிச்சு, அதுக்கு ஆர்டர் கொடுத்துக் கட்டி முடிக்கவே இம்மாநாளு ஆகிருச்சு.


நம்ம பக்கத்தூருக்காரங்கதான் கட்டிக் கொடுத்தாங்க. நெதர்லேண்ட் கம்பெனிதான். ஆனா ஆஸ்ட்ராலிய கப்பல் கட்டும் கம்பெனியுடன் சப் காண்ட்ராக்ட். மெல்பேர்ன் நகரத்துலே இதைக் கட்டி முடிச்சு,எங்க 'அம்மா' போய்ப் பார்த்து 'ஆசீர்வதிச்சது' போனமாசம் 13 தேதிக்கு. தேதியைக் கவனிச்சீங்களா? பதிமூணு. வெள்ளைக்காரங்களுக்கு ஆகாத நம்பர். ஆனா இந்தப் பதிமூணு வர்றது வெள்ளிக்கிழமையா இருந்தாத்தான் ஆபத்து கூடுதலாம். 'ப்ளாக் ஃப்ரைடேன்னு சொல்றாங்க அதை. அதுகிடக்கு விடுங்க.எங்கம்மாவுக்குக் கடவுள் நம்பிக்கையெல்லாம் கிடையாது. ஆனா ஏழைகள் சிரிப்பில் இறைவனைக் காணுவார். அது போதாதா என்ன?

கப்பலுக்குப் பேர் HMNZS Canterbury L421. எங்கூரு பேர் என்றதாலே எங்களுக்குத்தானே முன்னுரிமை தரணும்?கப்பல் ஆஸியிலே இருந்து கிளம்பி, நேரா எங்கூரு துறைமுகம் 'லிட்டில்டன்' வந்துருச்சு. எங்க காசுலே வாங்குனதை,எங்களையெல்லாம் கூப்புட்டுக் காமிக்கணுமா இல்லையா?

கூப்புட்டாங்க. July 1, ஞாயிறு மதியம் ஒன்னு முதல் நாலரை வரை. நாங்களும் சாப்பாடு முடிச்சுக்கிட்டு நிதானமாக் கிளம்புனோம். அப்பவே பகல் ஒன்னரை மணி. லிட்டில்டன் நெருங்க நெருங்க கார்க்கூட்டம் அதிகமா ஆகுது.'நாலு பேர் = கூட்டம்' என்ற என்னோட ஈக்குவேஷன் இதுக்குச் சரிப்படாது. உண்மையான கூட்டம். டன்னலுக்குள்ளே போகவே நேரமாச்சு. அப்படி ஊர்ந்துக்கிட்டு இருக்கோம். ஏங்க, நாந்தான் உங்களுக்கெல்லாம் சொல்லணுமேன்னுஓடிக்கிட்டு இருக்கேன். மத்தாளுங்களுக்கு என்னா இப்படி ஒரு 'தேச பக்தி'?

ச்சின்ன ஊர், அந்த லிட்டில்டன்ன்னு சொல்றது. வீடுங்க எல்லாம் மலைச்சரிவிலே. ரோடுங்க எல்லாம் ஒரே ஏத்தமும்,இறக்கமும். ரொம்ப நாளுக்கு முன்னாலே 'ஃப்ரைட்டனர்ஸ்' The Frightenersஒரு படம் வந்துச்சுங்களே நினைவிருக்கா? மைக்கேல் ஜே ஃபாக்ஸ் நடிச்சது. அதை இந்தூர்லெதான் எடுத்தாங்க. அந்தக் கல்லறைத் தோட்டமெல்லாம் இங்கத்து இடம்தான். இந்தப் படத்தோட இயக்குனர் பீட்டர் ஜாக்ஸன் (Peter Jackson) இங்கே நியூஸியிலே பிறந்தவர். அந்த அபிமானத்துலே அவரோட படங்களில் சில இடத்தையாவது இங்கே எடுக்கணுமுன்னு ஆர்வம். அதுக்கப்புறம் அவரோடலார்ட் ஆஃப் த ரிங்(LOTR) முழுப்படமும் இங்கே நியூஸியில்தான் எடுத்தார். அந்த இடங்கள் எல்லாம் இப்பப் பெரிய சுற்றுலாத்தலமா ஆகி இருக்கு.

இந்த லிட்டில்டன்லேதான் ஆதிகாலத்துலே வெள்ளையர்கள் முதல்முதலில் காலு குத்துனது. அதனாலேதான் இந்தஊர் இருக்கும் கேண்டர்பரி தொகுதியை 'மெயின்லேண்ட்'ன்னு இப்பவும் குறிப்பிட்டுச் சொல்றது வழக்கம்.
டன்னலைவிட்டு வெளியில் வந்தவுடன் கண்முன்னே 'பளிச்'ன்னு நிக்குது கப்பல். அதுமேலேயும், அக்கம்பக்கமும்கட்டெறும்பு ஊருதோன்னு ஒரு மெலிசான நகர்வு. அட! அம்புட்டும் ஆள்க் கூட்டம். வண்டியை நிறுத்த இடம்தேடி அலையவேண்டியதாப் போச்சு. இண்டு இடுக்கு விடாம தெருவின் ரெண்டு பக்கமும் அடைச்சு நிறுத்தி இருக்காங்க.

ஒரு தெருவுலே இடமிருக்கான்னு தேடிப்பார்த்துட்டு, மடங்கித் திரும்புறோம். அப்ப 'கணகண'ன்னு மணிஅடிக்குது. நாங்க நிக்கற இடம் ஒரு தீயணைப்பு நிலையம். 'ஓரங்கட்டு, ஓரங்கட்டு'ன்னு சொல்லி வழிவிட்டு ஒதுங்குனோம்.ஒன்றன்பின்னாலே ஒன்றா, அங்கே இருக்குற ரெண்டு தீயணைப்பு வண்டிகளும் ஷட்டரைத் திறந்துக்கிட்டு வெளியே வருதுங்க.இதுவரை நான் பார்க்காத காட்சி. (க்ளிக் க்ளிக்)
அடிச்சுப்பிடிச்சு, மூணாவது தெருவிலே வண்டியை நிறுத்திட்டு போறொம்.
இறக்கமான ரோடு. கண்ணு முன்னாடி கடலில்'நம்ம' கப்பல். போற வழியிலேயே சரித்திரக்குறிப்பு ஒண்ணு இருக்கு. 1850லே கப்பலில் வந்து இறங்கிய மக்கள் தங்குன இடம் இதுதான்னு. பெரிய மலைப்பாம்பு போல வளைஞ்சு நிக்கும் வரிசையில் நாங்களும் கலந்தப்ப மணி2.45. எங்களுக்கு முன்னாலே ஒரு ஆப்பிரிக்க நாட்டுக்காரர்கள். அவுங்களோட பெண் குழந்தை வயசு ஒரு 6 இருக்கும்.ரொம்ப அழகா தலையைக் கட்டம் கட்டமா பாத்தி பிரிச்சுப் பின்னிய முடி அலங்காரம். கிட்டப் பார்த்தா சன்னமா ஒரு சடைபின்னி இருக்கு. யப்பாடா.......... எவ்வளோ பொறுமை வேணும்!!!!

நாலரை மணிவரை மட்டுமே உள்ளெ போய்ப் பார்க்க முடியும். வரிசை ரொம்ப மெதுவா நகருது. துறைமுகத்துக்குள்ளே இறங்கும்தெரு, பாலம் எல்லாம் போக்குவரத்தை மூடியாச்சு. கப்பல் உள்ளே பார்க்க வேணாமுன்னா நாம பாட்டுக்குப் போய்வெளியே கப்பலைத் தொட்டுப் பார்த்துட்டும் வரலாம். அதுக்கு வரிசையில் நிக்க வேணாம். ஆனா நம்ம இலக்கே வேற!மக்களை வேடிக்கைப் பார்த்துக்கிட்டே நகர்ந்துக்கிட்டு இருந்தோம். மூணரை மணியானப்ப, சில Sea Cadets வந்து,இனிமேற்பட்டு வரிசையில் சேரவர்றவங்களை அனுமதிக்கவிடலை. வரிசையின் கடைசியில் இவுங்க சேர்ந்துக்கிட்டு,எதிர்புறமா திரும்பி நின்னுக்கிட்டாங்க. நாசுக்கா மன்னிப்புக் கேட்டுக்கிட்டு வந்தவங்களைத் திருப்பி அனுப்பிக்கிட்டு இருந்தாங்க.

துறைமுகத்துலே கண்டெயினர் ஏத்தறதுக்குப் புதுசா இன்னும் ரெண்டு க்ரேன் அமைச்சிருந்தாங்க. சுறுசுறுப்பாஅந்த வேலை நடந்துக்கிட்டு இருந்துச்சு. ஏற்றுமதிக்காகக் காத்திருக்கும் மரங்கள் ஒரு பக்கம் அடுக்கடுக்கா.(இப்படி ஏத்திவிட்டா.........இனிமே எங்களுக்குப் ப்ளாஸ்டிக் கிறிஸ்மஸ் மரம்தானா? )அங்கே இருந்து திரும்பிப் பார்க்கும்போது மலையின் இந்தப் பக்கமெல்லாம் விதவிதமான வீடுகள். டைம்பால் ஸ்டேஷன் பக்கம் எதோ ஒரு டவர் கட்டிக்கிட்டு இருக்காங்க. ஒரு ரஷ்யாக் கப்பல் நின்னுக்கிட்டு இருந்துச்சு. நம்ம 'ரஷ்யா ராம்ஸ்' நினைவுக்கு வந்தார்.

பாலம்விட்டுக் கீழே இறங்குனதும், நேவி வண்டி ஒண்ணு காட்சிக்கு இருந்துச்சு. ஒரு பஸ்தான். உள்ளே போனா,கடற்படையின் சேவை, மற்றவிவரங்கள் எல்லாம் படங்கள் மூலம். கூடவே ஆறு கணினித்திரைகள். எல்லாம்டச் ஸ்க்ரீன். கொஞ்சம் அங்கேயும் நேரம் போக்கிட்டு, மறுபடி வரிசையில் நம்ம இடத்துலே சேர்ந்துக்கிட்டேன்.கடற்படையில் சேரச்சொல்லி விளம்பரங்கள் இருந்துச்சு. ஆளுங்க வரமாட்டேங்கறாங்களாமே! எனக்கு வேலைகிடைக்குமான்னு பார்க்கணும்:-)

கப்பலுக்குள்ளில் இருந்து, 'காணாமப்போன அப்பா அம்மா'க்களின் அறிவிப்பு மைக்லே வந்துக்கிட்டு இருந்துச்சு.பசங்க பத்திரமா இருக்காங்களாம். நமக்கு பின்னாலே நின்னிருந்தவர், கப்பலுள்ளெ பார்த்துட்டுத் திரும்பி வந்துக்கிட்டு இருந்த நண்பரிடம், 'எப்படி இருக்கு?'ன்னு கேட்டார். நானும் கொஞ்சம் காதைத் தீட்டிக்கிட்டு நின்னேன்,ப்ரிவியூ கிடைக்குமேன்னு. அந்த மனுஷர், அதை மட்டும் விட்டுட்டு, எங்கே இருந்து,எத்தனை மணி நேரம் வரிசையில் நின்னார்ன்றதை மட்டுமே திருப்பித் திருப்பிச் சொல்லிக்கிட்டு இருந்தார். செலக்டிவ் அம்னீஷியா?

மணி அஞ்சு. இன்னும் வெளியேதான் கப்பல்கிட்டே நிக்கறோம். மேல்தளத்துலே பறந்துக்கிட்டு இருந்த கொடியை,அதுக்குரிய மரியாதையோடு இறக்குனதைப் பார்த்தேன். குளிர்காலத்தில் அஞ்சு மணிக்கு. இதுவே வெய்யில்காலமாஇருந்தா ஆறு மணிக்காம். சில ஆர்மி வண்டிகளை வெளியே கொண்டு போனாங்க. இதெல்லாம் கப்பலுக்குள்ளேஇருக்குமாம். உள்ளூர் ட்ரைக்க்ளீன் கம்பெனி வண்டி ஒண்ணு வந்து சுத்தம் செஞ்ச அம்பது அறுவது சீருடைகளைக் கொடுத்துட்டுப்போச்சு.

5.20க்கு ஏணிப்படியில் கால் வச்சோம். அதுக்குள்ளெ நல்லா இருட்டிப்போச்சு. ஏறிப்போனதும் அங்கே பெரிய ஓப்பன்டெக். வலது புறம் பெரிய ராட்சஸக் கதவு. உள்ளே பிரமாண்டமான ஹால். கீழே இருந்து பார்க்கும் போது இதோடஅகலம் அவ்வளவாத் தெரியலை. பத்து பதினைஞ்சு கொடிகள் ஒரு பக்கமா இருந்துச்சு. ஒவ்வொரு மாடியா ஏறிப்போனோம்.நாலாவது மாடியில், ப்ரிட்ஜ். எல்லாம் கணினிகள். பழைய கப்பலில் இருக்கறது போல இல்லாமல் மாடர்ன் டெக்னாலஜி.300 டிகிரி வரை பார்க்கும் வசதி. பசங்க எல்லாரும் முண்டியடிச்சுக்கிட்டு, அங்கிருக்கும் குமிழ்த் திருகிகளையெல்லாம் ஒரு கை பார்த்துக்கிட்டு இருந்தாங்க. நம்ம பங்குக்கு நாமும்! பச்சை முகக் காம்பஸ் ஒண்ணு கிழக்கு மேற்கைச் சொல்லிக்கிட்டு இருக்கு. ( நம்மூரா இருந்தா உள்ளெயே விடமாட்டாங்கன்னு இவர் சொன்னார். ஆமாமாம், அப்படியே விட்டாலும் செக்யூரிட்டி செக்கப்புன்னு கேமெரா, செல்பேசி எல்லாத்தையும் பிடுங்கிருவாங்க)

கீழே இறங்கி வரும்போது மொத்தம் ஏழு மாடிகள். அழகா, வரிசை பிசகாமல் ஒயரிங் செஞ்சு இருக்கறதைக் கோபால்'ரஸிச்சார்'! இருக்காதா பின்னே? ஒவ்வொரு மாடியிலும் வெவ்வேறு வசதிகள். ஹாஸ்பிடல் ரூம், ஜிம், பொழுதுபோக்கும் அறை, படுக்கை அறைன்னு ஜோரா இருக்கு. நாலு மூலையிலும் பங்க் பெட். ஒவ்வொண்ணிலும் மூணுஅடுக்கு. தலையணை, போர்வை வச்சுக்கறதுக்கு வலை அலமாரி. ச்சின்ன வாஷ் பேஸின். ஆனாலும் 12 பேர் ஒருஅறையில் என்றது அவ்வளவு நல்லாவா இருக்கும்?

பெரிய பெரிய விஸ்தாரமான ஹால்கள். கப்பலுக்குப் புதுசாக் கொடுத்த கூடுதல் ப்ரொபெல்லர், மற்ற உதிரி உபகரணங்கள்ன்னு கிரகப்பிரவேசம் ஆன புது வீட்டுலே இருக்கறமாதிரி சாமான்கள். இன்னும் ஒண்ணும் எடுத்து அடுக்க நேரமில்லை.கேண்டர்பரின்ற பெயருக்குப் பொருத்தமா ஒவ்வொரு ஹாலுக்கும், ரூமுக்கும், காரிடாருக்கும் உள்ளூர்லே இருக்கும்தெரு, இடங்களின் பெயர்களை, 'கதீட்ரல் ஸ்கொயர், டீன்ஸ் அவென்யூ'ன்னு வச்சுருக்காங்க. எல்லாம் அழகா அம்சமா இருக்குன்னாலும், இந்த காரிடாரில் நடக்கும்போது மெலிசான (துர்)நாத்தம். ஒருவேளை ஸ்டில் வாட்டர்லே நிக்கறதாலேயா?

ஒரு தளம் பூராவும் வண்டிகள் நிறுத்தறதுக்காம். அதுகளைக் கப்பல் வயித்துக்குள்ளெ ஏத்த இறக்க பிரமாண்டமான கதவு. அங்கிருந்த அதிகாரியிடம் கொஞ்சநேரம் பேசுனதில் கிடைச்ச விவரங்கள். இப்ப இதுலே 83 பேர் வேலைசெய்யலாமாம். இன்னிக்குக் கணக்குலெ 60 பேர்தான் இருக்காங்களாம். அவசியம், ஆபத்துன்னு வரும்போது 500 ஆட்களுக்கு இடவசதி இருக்கு. ஒரு நாளைக்கு அம்பதாயிரம் லிட்டர் கடல் தண்ணீரைச் சுத்தம் செஞ்சு பயன்படுத்தும் வசதி . உணவுப்பொருட்களைச் சேமிக்கும் அறை, அடுக்களைகள் எல்லாம் நல்ல பிரமாண்டமான அளவில் செஞ்சுருக்கு. மேல்தளத்துலே ரெண்டு ஹெலி பேட் களுக்கு இடம் ஒதுக்கி இருக்காங்களாம்.

மத்த 'புள்ளி' விவரங்கள்:

மொத்தக் கப்பலின் எடை 8000 டன்

கப்பலின் நீளம் 131 மீட்டர்

அகலம் 23.4 மீட்டர்

பயணிக்கும் வேகம் 19 நாட்

60 டன் எடை தூக்கும் க்ரேன் வச்சிருக்காங்க.

25mm Cannon இருக்குச் சுட்டுத்தள்ள(??)

நாலு ஹெலிக்காப்டர் தங்குமிடம்

ஒரு Ready-use hanger for Seasprite.

கப்பல் படம் போட்டு, எல்லா விவரங்களும் அடங்கிய பெரிய போஸ்டர், நமக்கெல்லாம் அன்பளிப்பு.

கடைசியா ஒரு கேள்வி.

ஆமா.........இது என்ன விலை இருக்கும்? அட...... தெரிஞ்சா ஒண்னு ரெண்டு வாங்கிப்போடலாமுன்னுதான். விலையைச் சொன்னதும், ரொம்பவே மலிவுன்னு கோபால் சொல்லிக்கிட்டு இருந்தார். வெறும் 100மில்லியன் அமெரிக்கன் டாலர்கள்தானாம்.( எங்கூருக்காசு ஒரு 130 மில்லியன் வரும்)

மறுபடி மூணு மாடி ஏறி வெளியே வரும்போது திருப்பதியில் வரிசையில் நின்னு சாமி பார்த்த மாதிரி திருப்தியா இருந்துச்சு. மணி ஆறு.

கால் கெஞ்ச கெஞ்ச, மூச்சு வாங்கிக்கிட்டு ஏத்தத்துலே 15 நிமிஷம் ஏறிக் காரைக் 'கண்டுபிடிச்சு' வீடு வந்து சேர்ந்தோம்.


35 comments:

said...

அம்மாடி! எவ்வளோ பெரிசு. ஜிம் என்ன, ரெஸ்ட் ஏரியா என்ன, சிவாஜி பாக்கறதுக்குமுன்னாடி இதைப்பாத்தரணும்

said...

குட்மானிங் டீச்சர்

திங்கட்கிழமை சரியா வந்துட்டேன். நாளைக்கு வரும்போது அப்பாகிட்டேயிருந்து லீவ் லெட்டர் நானே கையெழுத்து போட்டு வாங்கிட்டு வந்திர்ரேன்.

said...

// கப்பலுக்குள்ளில் இருந்து, 'காணாமப்போன அப்பா அம்மா'க்களின் அறிவிப்பு மைக்லே வந்துக்கிட்டு இருந்துச்சு.பசங்க பத்திரமா இருக்காங்களாம். //

இதுதான் டீச்சரின் touch(e') :-)))

said...

//அழகா, வரிசை பிசகாமல் ஒயரிங் செஞ்சு இருக்கறதைக் கோபால்'ரஸிச்சார்'! இருக்காதா பின்னே?//

அதைத்தான் படம் பிடிச்சுப் போட்டாச்சே!! :)))

said...

துளசியக்கா!
நீங்கள் சொல்லுவதை வைத்துப்பார்த்தால் இங்கிலாந்துக்கும் ஏனைய ஐரோப்பிய நாடுகளுக்கு மிடையில் ஓடும் Ferry போலவும் இருக்கிறது,படமும் தான்.
அதில் பலதடை சென்றுள்ளேன் பிரமாண்டமானதே!
இப்போ ஈரோஸ்ரார் தான்!
இது உங்கள் சொந்த ஊர்க் கப்பல் பெருமைப்படலாம்.

said...

வாங்க ச்சின்ன அம்மிணி.

நேத்து மத்தியானம் 2 மணிக்குக் கிளம்பி டிமரு போகுது. அங்கே ஜூலை 4
பொதுமக்கள் பார்வைக்கு. உங்க ஊருக்கு என்னிக்கு வருதுன்னு பாருங்க. ஒன்ஸ் இன்
லைஃப் டைம் விஸிட்னு வச்சுக்கலாம்:-))))

said...

வாங்க பெருசு.

//...........லீவ் லெட்டர் நானே கையெழுத்து போட்டு ..............//

இது:-))))))

said...

வாங்க பாலராஜன்கீதா.

உங்கூருக்கு நிமிட்ஸ் வந்துருக்குன்னு எல்லாரும் கூவும்போது,
நானும் நம்ம கப்பல்பத்திக் கொஞ்சம் சொல்லிக்கணுமுல்லே? :-))))

டீச்சரின் 'டச்'இல்லேன்னா எப்படி? :-)

said...

வாங்க கொத்ஸ்.

தூண்டில்காரனுக்கு மிதப்பு மேல்தானே கண்ணு? :-))))))

said...

கப்பல் ஏறிப் போயாச்சு
சுத்தமான ஊராச்சு
துளசியம்மா அம்மம்மா
பட்டப் பகல் ரோடாச்சு
ஊரெல்லாம் செந்தாச்சு
என்னம்மா

இப்படியெல்லாம் நீங்க பாடவேயில்லையா!!!!!!!

said...

வாங்க யோகன்.

இங்கேயும் ஃபெர்ரி சர்வீஸ் இருக்கு. அதெல்லாம் பயணிகளுக்கு.

இது சமாதானத்துக்குன்னு வச்சுக்கலாம். நாங்க ஏன் சண்டைக்குப் போகப்போறோம்?:-)))))

நானும் ஒரு சமயம் இங்கிலாந்துலே இருந்து ஃப்ரான்ஸ்க்கு ஃபெர்ரியில் வந்துருக்கேன்.
திரும்ப வரும்போது டன்னல் வழியா ட்ரெயினில்.

said...

வாங்க ராகவன்.

அடடா......... நல்ல பாட்டை தவறவிட்டுட்டேனே(-:

ஆனா, நெதர்லேண்டு கம்பெனின்னதும் உங்களை நினைச்சேன்:-)

said...

//காணாமல்போன அப்பா அம்மாக்கள்/

'நச்'னு இருக்கு

said...

வாங்க சிஜி.

இன்னிக்கு என்ன ஏகாதசியா?

said...

emmaam periya kappalu.

emmaam periya padhivu :))

said...

அடடே.... நட்சத்திர வருகையா?

வாங்க சர்வே சன்.

பெரிய கப்பலுக்குப் பெரிய பதிவு.
ச்சின்னக் கப்பல் வரும்போது ச்சின்னதாப் போடுவேன்:-))))

said...

வெறும் 100 மில்லியன் டாலர் தானா??
நாமளும் ஒன்னு நாளைக்கு வாங்கி போட்டுற வேண்டியது தான்!! :-D

said...

//வெறும் 100 மில்லியன் டாலர் தானா??
நாமளும் ஒன்னு நாளைக்கு வாங்கி போட்டுற வேண்டியது தான்!! :-D//

CVR என்ன சாப்ட்வேர் ஆளா? இம்புட்டு பணம் வெச்சு இருக்காரு? :))

said...

3=5=?
நான் படத்தை சொன்னேன்.
என்னடா சம்பந்தம் இல்லாமல் கேபிள் படம் இங்கே என்று பார்த்தேன்.கொஞ்சம் கீழே விளக்கம் கொடுத்துள்ளீர்கள்.
83 பேர் வேலை பார்க்கக்கூடிய கப்பலில் 60 பேர் தான் இருக்கிறார்களா?மீதி வேலை உள்ளூர்காரர்களுக்கு மட்டும் தானா? :-)

said...

வாங்க CVR.

அதென்ன ஒண்ணு? அட.... ஒரு நாலைஞ்சு வாங்கிப்போடுங்க. மலிவுதான்:-)

said...

கொத்ஸ்,

இவர் சாஃப்ட்வேர் ஆர்கிடெக்ட். அதான் நிறைய வச்சுருக்கார்.

said...

வாங்க குமார்.
அதான் நேவியில் சேர யாரும் முன்வர்றதில்லைன்னு அரசாங்கம் சொல்லிக்கிட்டே இருக்கே.

கொஞ்சம் Sea Cadets மட்டும் இப்ப ட்ரெயினிங்லே இருக்காங்க. ச்சின்னப்பசங்களா இருக்குங்க,
பையன்களும் பொண்ணுமா. அவுங்கதான் அன்னிக்குக் காணாமப் போனவங்களைத் தேடற வேலையில்:-)
ஒரு பொண்ணு பார்க்கறதுக்கு 13 வயசுபோல இருந்துச்சு. நேவிக்குத் தேவையான உயரம், எடை இதெல்லாம்
குறைச்சுட்டாங்க போல!

said...

சே, ஓசி கப்பல்லையே அங்கன வந்துரலாம்னு பார்த்தா இப்படி சொல்லிபுட்டீங்களே, சலீசாகிடைச்சா ஒரு நாலு வாங்கி குடுங்க. கண்ணும் கருத்துமா காப்பாதிக்கிறோம்

said...

வாங்க இளா.

கொஞ்சம் பொறுங்க. நம்ம சிவிஆர்கூட வாங்கறார்.
அதுலேயே இடம் புடிச்சுக்கிட்டு இங்கே வந்துறலாமே:-)

said...

இப்பத்தான் யாரோ ஒரு முதலாளி க்வீன் எலிசபெத்தை...கப்பல்பா,
வாங்கிட்டாருனு படிச்சேன்.
நீங்களுமா.:)))

ஒரு அம்பது,அறுபது வாங்கிப்போட்டால் இத்தனை பேரும் போய்வரலாமில்லியா.

said...

//மறுபடி மூணு மாடி ஏறி வெளியே வரும்போது திருப்பதியில் வரிசையில் நின்னு சாமி பார்த்த மாதிரி திருப்தியா இருந்துச்சு. மணி ஆறு//

Where is the laddu? :-)

டீச்சர்
அந்த காம்பஸ் படம் சூப்பர்.
மொதல்ல பாக்கறதுக்கு ஏதோ நீங்க தான் கோலம் போட்டீங்களோன்னு நினைச்சேன்! அப்பறம் பாத்தா...NW, NNW ன்னு அழகான காம்பஸ்! (இதுக்குத் தமிழ்ப் பெயர் என்ன? - திசைக்காட்டி?)

said...

வாங்க KRS.

லாடுக்கு எங்கே போறது? தேங்குழல்தான் பிரசாதம். வண்டியிலே வச்சுட்டுப் போயிட்டோம்.
இவ்வளவு நேரம் நிக்கணுமுன்னு தெரிஞ்சிருந்தா........... கையில் கொண்டுபோய் கொஞ்சம்
கரக்மு(ரு)ரக்கியிருக்கலாம்:-)

அந்தக் காம்பஸ் எனக்குமே பிடிச்சது.

said...

வாங்க வல்லி

//ஒரு அம்பது,அறுபது வாங்கிப்போட்டால்
இத்தனை பேரும் போய்வரலாமில்லியா. //

என்ன கொஞ்சமாச் சொல்றீங்க? இது போதுங்கறீங்க?

இன்னும் ஒரு நாப்பது சேர்த்து நூறா வாங்கிக்கறேனே,ப்ளீஸ்:-)))))

said...

டீச்சர், நீங்க ரொம்ப டீட்டேய்ல்டு ஆளா இருக்குறது நாங்கள் பண்ணிய புண்ணியமோ? வரிசைல நிற்கும் போது கூட பக்கத்தில் உள்ள குழந்தையின் தலையை விட்டு வைக்கவில்லையே. side track தான் high light. கப்பலையும், குழந்தையின் தலை வாரலையும் கண்டு களித்தேன். நன்றி!

said...

\\கப்பலுக்குள்ளில் இருந்து, 'காணாமப்போன அப்பா அம்மா'க்களின் அறிவிப்பு மைக்லே வந்துக்கிட்டு இருந்துச்சு.பசங்க பத்திரமா இருக்காங்களாம்.//

அட அட...அசத்துங்க..

said...

வாங்க டெல்ஃபீன்.

வாங்கி இருக்கலாம்தான். ஆனா..... அந்தக் கழுதையை கட்டிவைக்க இடம்
இல்லையே!:-)))))

said...

வாங்க காட்டாறு.

நம்மைச் சுத்தி நிறைஞ்சுருக்க இன்பத்தை வுட்டுற முடியுதா?

said...

வாங்க முத்துலெட்சுமி.

பசங்க இங்கே கெட்டியா இருக்குங்க. நாம்தான்.....................

said...

உங்களால நானும் நல்லா சுத்திப் பார்த்துட்டேன் உங்க கப்பலை..

இப்ப எங்க ஊர்லேயும் ஒரு கப்பல் வந்து நிக்குது. ஆனா யாரையும் உள்ள விடலை.. துறைமுகத்துல இருந்து 4 கிலோ மீட்டர் தள்ளி நிறுத்திக்காங்க.. முக்கியமானவங்களை மட்டும்தான் கூட்டிட்டுப் போயிருக்காங்க. என்னைக்கு நம்ம ஆட்சியாளர்களுக்கு ஓட்டுப் போட்ட ஜனங்களை கண்ணுக்குத் தெரிஞ்சிருக்கு..

said...

உங்கூர்லே வந்து நிக்கறது விருந்தாளிங்க கப்பல்.
ஆனா எங்கது? எங்க சொந்தக் காசுலே வாங்குனதாச்சே.
அதான் உரிமை ஜாஸ்தி:-))))