Saturday, September 08, 2007

வீடு 'வா வா'ங்குது ! பகுதி 19

21/10
இன்னைக்கு யாருமே வேலைக்கு வரலே. எல்லாம் திருப்பதி அம்பட்ட(ன்)ர் கதைதான்! வெள்ளைக்காரன் என்னமோ ரொம்ப நியாயம்னு சொல்றோமே, இந்த ஆளுங்க போன ஜென்மத்துலே இந்தியாவுலெ பிறந்திருப்பாங்க போல!

22/10
இன்னைக்கு செங்கல் வைக்கறவுங்க வந்திருந்தாங்களாம். சாயந்திரம் வழக்கம் போலப் போனா ஒரு 'ஷாக்!'

'ஸிடி கவுன்சில் இன்ஸ்பெக்ஷன்' வந்துட்டு 'ஃபெயிலர் நோட்டீஸ் ஒட்டிட்டுப் போயிருக்காங்க! இன்ஸுலேஷன் சரியில்லையாம். அப்புறம் ஏதோ ஒரு போல்ட்டு(!) சரியில்லையாம்!


பில்டர்க்கு ஃபோன் அடிச்சா யாரும் எடுக்கலே. மெஸ்ஸேஜ் விட்டாச்சு. இந்த வாரம் லாங் வீக் எண்ட் வேற! என்ன நடக்குதுன்னு புரியலை!
அப்புறம் 'பில்டரே' ஃபோன் செஞ்சார். ஏற்கெனவே இன்ஸ்பெக்ஷன் வந்துட்டு பாஸ் ஆயிடுச்சாம். இப்ப இது என்ன இன்ஸ்பெக்ஷன்? எங்களையே கேக்கறார்.



மகள் கிட்டே சொல்லி மீதி இருக்கற பிங்க் பேட்ஸ் பையிலே போட்டு இங்கே நம்ம வீட்டுக்குக் கொண்டுவர ஏற்பாடு செஞ்சிருந்தோம். தேவைக்கும்
அதிகமா வாங்கி வச்சுருக்கார் க்ரேக். தேவை? அப்புறம் ஒரு பாட்டம் அழறேன் இதைப் பத்தி...................

இப்ப பேட்ஸ் மூட்டையை எடுக்க வேணாம். இன்ஸுலேஷன் மறுபடி போடணும்ன்னா அது வேணுமே! மகளுக்கு ஃபோன் பண்ணிச் சொல்லியாச்சு. இந்த 'வீடு' வேலைகளில் மாட்டிக்கிட்டதாலே இந்த வருஷம் கொலு ரொம்ப சிம்பிளா வச்சாச்சு ( இல்லேன்னா மட்டும்? ) நாளைக்கு 'விஜய தசமிக்கு'ச் சின்னப் பூஜை அங்கே செய்யலாம்ன்னு இருக்கோம். பூஜைக்கு வரமாட்டேன்னு மகள் சொல்லிட்டா!


23/10
மத்தியானம் போய் 'விஷ்ணு சஹஸ்ரநாமம்' மட்டும் சொல்லி பூஜையை முடிச்சோம். பிரசாதம்? இருக்கவே இருக்கு நமக்கு ஆகிவந்த கேசரி.




24/10
எங்கெங்கே என்ன கலர்ன்னு முடிவு செஞ்சோம். அதுக்கே 2 மணி நேரமாயிருச்சு! கலர்ஸ் கைடு, இன்னும் கலர்ச்சார்ட்ன்னு பெயிண்ட் கடை, பில்டிங் சாமான்கள் விற்கும் கடை, ஹார்டுவேர் ஸ்டோர்ஸ்ன்னு பல இடங்களில் வகைவகையான விளம்பரங்கள் கொட்டிக்கிடக்கு. என்ன தரத்தில் வேணும், வாஷபிள் பெயிண்ட்டா, வெளிப்புறத்துக்கா,உள்ப்புறத்துக்கா, மரத்துக்கா, சுவத்துக்கா, வெயில் வரும் இடமா, வராத இடமான்னு நூறு கேள்விகள். நிதானமாஒவ்வொண்ணும் கவனிக்கணும். கண்ணுக்கு உறுத்தல் இல்லாத நிறம் முக்கியம். அந்த நிறத்துக்கு ஏத்தமாதிரி,திரைச்சீலை, கார்பெட் இத்தியாதிகள் வாங்கணும். நம்ம வீட்டுலே ஜன்னல்கள் ஃப்ரேம் எல்லாம் நியூ டெனிம் ப்ளூ போட்டாச்சு. இப்ப இதுக்குப் பொருத்தமா மத்தது இருக்கணும்.


இப்ப இருக்கும் பழைய வீட்டை அஞ்சு வருசத்துக்கு முன் புதுப்பிச்சப்ப, வீட்டுக்குள்ளெ இருந்த 'ஹானஸ்டி' கலரை மாத்தினோம். இந்த வீடு வாங்குனப்ப இருந்தக் கலரைப் பார்த்திருந்தால் நீங்க பயந்து நடுங்கி இருப்பீங்க. 'டார்க் ஆலிவ் க்ரீன்' அடிச்சு வச்சுருந்தாங்க. ஒரே இருட்டா இருக்கும். நாலுமாசம் பல்லைக் கடிச்சுக்கிட்டு இருந்துட்டு, இந்த ஹானஸ்டிக்கு மாத்துனோம்.அப்பெல்லாம் காசு கொடுத்து ஆள் வைக்க முடியாத நிலை. நாங்களே பெயிண்ட் அடிச்சோம். முன் அனுபவமுன்னு ஒண்ணுமே இல்லைதானே? ஒரு நாள் வேலையை நாலு நாள் செய்யறது என்னும் கணக்கில் போச்சு. மூணு கோட்டிங் அடிக்கவேண்டியதாப் போச்சு, அந்த்ப் பச்சையை மறைக்க. பெயிண்ட் அடிக்கத் தெரியாததால், நல்லா வராத இடங்களில் ரோலரைக் குறை சொல்லிக்கிட்டு, வெவ்வேற ரோலர்களை வாங்கியே கொஞ்சம் ரோலர் விற்பனையை ஏத்தினோம். ஆடமாட்டாதவ கூடம் கோணல்ன்னு சொன்னாளாம்....................


அடுத்த பத்துவருசத்துலே பெயிண்ட் அடிக்கறதுலே கைதேர்ந்தவங்களா ஆனது தனிக்கதை. ஹான்ஸ்டியை மாத்துனது வீடு ரினொவேஷன் செஞ்சப்ப. அப்ப Highland morning கலர் சுவத்துக்கு, Maffra Green கலர் கார்னீஸ். sage brush கலர் ஸ்கிட்(skirt/skit?) போர்டுக்கும் அடிச்சோம். கண்ணுக்கு இதமா இருப்பதா ஒரு உணர்வு. அதனால் இந்த வீட்டுக்கும் இதுவேதான்னு முடிவு ஏற்கெனவே மனசுலே ஒருபக்கம் இருந்துச்சு. இங்கே ஃபீச்சர் வால் ஒண்ணு வருதே. அதுவுமில்லாம மற்ற ரெண்டு படுக்கை அறைகளில் க்ரீம் மேங்கோ கலர், மாஸ்டர் பெட்ரூமுக்கு இளநீலம், அங்கே ஃபீச்சர் வாலுக்குக் கருநீலம். பொதுவா இங்கே சீலிங் மட்டும் வெள்ளையாவே விட்டுரும் வழக்கம் இருக்கு. அதையும் மாத்தி, எங்கே எந்த நிறம் அடிக்குறோமோ, அங்கே இருக்கும் ஸிலிங் அதே நிறத்தில் ஒரு ஷேடு கம்மியா இருக்கறதாப் போட்டுக்கணுமுன்னு முடிவு. லிவிங் ஏரியாவில் வரும் ஃபீச்சர் வால் கத்தரிக்காய்க் கலர்:-)



அப்படியே லாண்டரி சிங்க் பார்த்துட்டு வந்தோம்.இங்கே ஹோம் ஐடியாஸ்ன்னு ஒரு ஷோரூம் இருக்கு. பாத்ரூம், கிச்சன், வெளி & உள்ப்புற அலங்காரமுன்னு எல்லா விஷயத்துக்கும் அந்தந்த நிறுவனத்தைச் சேர்ந்தவங்க அவுங்க பொருட்களை டிஸ்ப்ளே பண்ணி வச்சுருக்காங்க.எல்லாத்துக்கும் ஒவ்வொரு நம்பர் கொடுத்துருக்கு. இந்தக் கட்டிடத்துக்குள்ளெ நுழைஞ்சவுடன், வரவேற்பில் இருக்கும் நபர் நம் கையில் ஒரு பென்சிலும், ஒரு படிவமும் தருவாங்க. நமக்கு எந்தெந்தப் பொருட்கள் விவரம் தெரியணுமோ,அந்த நம்பர்களை எழுதிக்கிட்டு வந்து அவுங்ககிட்டே கொடுத்துட்டாப் போதும். சம்பந்தப்பட்டப் பொருட்களின் ஏஜெண்டுகள் நம்மோடு தொலைபேசி மேல்விவரமெல்லாம் தருவாங்க. வீட்டுக்கு வந்து பார்த்து விவரம் சொல்றொமுன்னும் சொல்வாங்க. எல்லாம் நோ ஆப்ளிகேஷந்தான். இதுவரை ஒரு அம்பது அறுபது தடவை இங்கே வந்து பார்த்தாச்சு. பிடிச்சது நாலு தேர்ந்தெடுத்து விலையெல்லாம் நம்ம பட்ஜெட்டுக்குள்ளே வர்றதா வாங்கிக்கலாம்.


25/10
ஃபார்மர்ஸ் கடையிலெ சேல் இருக்குன்னு 'டிஷ் வாஷர்' வாங்கப் போனா ஃப்ரிட்ஜ் நல்ல டீல் இருந்துச்சு. அதுக்கு 600$ கழிவு! அதுக்குக் காசு கட்டிட்டு, டிஸம்பர் மாதம் டெலிவரி கொடுக்கச் சொல்லிட்டோம். ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ஃப்ரிட்ஜ் வாங்கலாமுன்னுதான் நினைச்சது. ஆனா இப்ப இங்கே இருடியம் கலர் (Iridium embossed stainless steel exterior )வந்துக்கிட்டு இருக்கு. நம்ம கையில் இருக்கும் எண்ணெய்ப் பசையெல்லாம் (fingermarks)அதுலே ஒட்டாதாம். என்னதான் பொழுதன்னிக்கும் கை கழுவிக்கிட்டே இருந்தாலும் ஃப்ரிட்ஜ், லைட் ஸ்விட்ச் எல்லாம் நம்ம கை பட்டே அதைச் சுத்தி ஒரு பிசுக் வந்துருதில்லையா? ஒரு ஆங்கிளில் பார்த்தா, இது பளிச்சுன்னு தெரியும். 'சோம்பேறிக்கு இப்ப வாழைப்பழத்தை உரிச்சுத் தரேன்'னு சொல்றப்ப வேணாமுன்னு இருக்கலாமா?



'டிஷ் வாஷர்' சேல் இப்பச் சரியில்லையாம். இன்னையோடு இந்த டீல் முடியுது. நாளைக்கு வேற புது சேல். கொஞ்சம் மலிவா வருமாம். அந்த டீல் ரெண்டு வாரம் வரை இருக்கும்னு அங்கே சேல்ஸில் இருந்தவர் சொன்னார்.அது பாக்கணும். புது சேல் வருதுன்னு தெரியாம வாங்கிட்டாலும் பெரிய பிரச்சனை இல்லை. மறு வாரத்துக்குள்ளே புது சேல் வந்துருச்சுன்னா, நாம வாங்குனதைத் திருப்பிக் கொடுத்துத் திரும்ப வாங்கிக்கலாம். Buy back:-)


26/10
இன்னைக்கு முன் வாசக் கதவுக்கு க்ளாஸ் டிஸைன் முடிவு பண்ண 'லெட் லைட் கம்பெனி பேட் (patrishia)' நம்ம ஸைட்டுக்கு வரேன்னதாலெ பகல்1.30 மணிக்குப் போனா,
'ப்ரிக் ஆளுங்க லவுஞ்சிலே உக்காந்து லஞ்ச் சாப்புடறாங்க. ரெண்டு மூணுநாளா இங்கே பழம் தோலு, தின்னது மிச்சம்ன்னு குப்பை போட்டுட்டு போற ஆளுங்க இவுங்கதான்னு தெரிஞ்சது. இந்தக் கூட்டத்துலெ 'க்ளிண்டன்' ஒரு சேர்லே உக்காந்துகிட்டு சாப்பிட்டுக்கிட்டு இருக்கான். கண்ணை மூடித் தவம் இருக்கறமாதிரி போஸ் குடுக்கறான். கையிலெ பாதி கடிச்ச சாண்ட்விச். ரேடியோல பாட்டு சத்தமா முழங்கிகிட்டு இருக்கு. ஆமாம்......... இவனுக்கு ஏது நாற்காலி?

வீட்டுலே இருந்து கொண்டு வந்துருக்கானாம்!

தொடரும்.....................

10 comments:

Anonymous said...

பில்டர்ஸுக்கு இங்கே ஏக கிராக்கி. இ ஆளுங்களுக்கப்பறம் பில்டர்ஸும், ரோடு வேலை இந்த மாதிரி ஹெவி வேலை செய்யறவங்களுக்கு விசா சுலபமா கிடைக்குது. சமோவா, டோங்கா மாதிரி தீவுகள்ல இருந்து வந்து கொஞ்ச நாள் இருந்து நல்ல பணம் சம்பாதிக்கறவங்க இருக்காங்க‌

said...

வேலைக்கு கிளம்பும் நேரம் பார்த்து படிக்கவேண்டி வந்தது,பிறகு வருகிறேன்.

said...

என்னாது? டீச்சரையே பெயில் பண்ணறாங்களா? அடிங்கொ.......டேய் ராமசாமி, முனுசாமி, பெருசு அல்லாரும் வாங்கடா!!

said...

முதல் படத்தில்,சுவற்றில் ஒரு வெள்ளை பெட்டி தெரியுதே,அது என்ன?
பிங்க் பேர்ட க்கும் அந்த நீல தரைவிரிப்பு மேல் உட்கார்ந்து படிக்கும் நீங்கள் - படம் அருமை.ஏதோ தியானம் மாதிரி இருக்கு.
பெயிண்டிங் வர்ணம் மாற்றும் போது அண்டர் கோட் பொதுவாக வெள்ளை வர்ணத்தை அடித்துவிட்டு அதன் மேல் நமக்கு தேவையான வர்ணத்தை கொடுத்தால் காரியம் எளிதாக முடியும்.
அறை/ வீட்டுக்கு அடிக்கும் வர்ணங்களே வீட்டின் அமைப்பை அப்படியே தூக்கிக்காட்டிவிடும்.்

said...

சின்ன அம்மினி
பில்டர்சுக்கு ஏக கிராக்கியா?
கொஞ்சம் கால தாமதம் ஆகிவிட்டது இல்லாவிட்டால் முயற்சிக்கலாம்.

said...

வாங்க ச்சின்ன அம்மிணி.

ஐலண்ட் மக்கள் நல்லா 'பிக் பில்ட்'டா இருந்தாலும், ரோடு & கட்டிட வேலைகளுக்கு
அப்படியே அவுங்களை எடுத்துக்கறதில்லை. இங்கே கொஞ்சநாள் பயிற்சி எடுத்துக்கணும்.
இல்லைன்னா, வேலை சம்பந்தப்பட்ட விபத்து ஆயிருச்சுன்னா ACC ஒண்ணும் தராது.
அதுவுமில்லாம இவுங்களை வேலைக்கு வச்சுக்கற கம்பெனிகளுக்கு லெவியும் கூடுதல்.
இப்ப எல்லாம் கண்காணிப்புக் கூடுதல். ஒரு 20 வருசமுன்பு, மக்கள் இங்கே மூணு மாச விஸாவில்
வந்து சம்மர் சீஸனில் fruits picking வேலை செஞ்சு காசு சேர்த்துக்கிட்டு போவாங்க.

said...

கொத்ஸ்,

கண் கொத்திப் பாம்பா இருக்கும் டீச்சருக்கே இந்த கதி வந்துருச்சேப்பா:-)
ஓடியாங்கப்பா எல்லாரும். அந்த இன்ஸ்பெக்டரை ஒரு வழி பண்ணியே ஆகணும்............

said...

வாங்க குமார்.
மும்முறைக்கு நன்றி.

அந்த வெள்ளைப்பெட்டிதான் கேஸ் ஹாட் வாட்டர் சிஸ்டம். அதுலே இருந்துதான்
சுடுதண்ணீர் வெளியேறும்.

பெயிண்ட் செய்யறதுக்கு அண்டர் கோட் கொடுக்கறாங்கதான். ஆனா அந்த 'டார்க் பச்சை', அண்டர் கோட்டுக்கே
மசியலை. முயற்சி செஞ்சுட்டுத்தான் மூணு கோட் கலரே அடிச்சோம். அதென்னவோ அவுங்களுக்கு அப்படி ஒரு
இருட்டுக் கலர் பிடிச்சுப்போயிருந்துச்சு(-:

said...

ஆகா துடைக்கவேனாமா பிர்ட்ஜை பளீர்ன்னே இருக்குமா? என்ன அடுத்த ஆசைன்னு லிஸ்ட் வச்சுக்கிட்டே இருப்பேன் .அப்ப லிஸ்ட்ல சேத்துடறேன்...

said...

வாங்க முத்துலெட்சுமி.

இன்னும் நமக்கு வேணுமுன்னா அடுக்களையில் இருக்கும் கப்போர்டுகள் கலர்லேயே
ஃப்ரிட்ஜ், டிஷ் வாஷர் எல்லாம் integrated செஞ்சுக்கலாம். பார்க்கறதுக்கு வெளியே ஒண்ணுமே
தெரியாது. ஆனா அடுப்புக்கு மாத்திரம் இது முடியாது(-: