Tuesday, September 25, 2007

வீடு 'வா வா'ங்குது ! பகுதி 26

4/12
இன்னைக்கு 9 மணிக்கு சிடிகேர் ஆளுங்க வந்து மண்ணையெல்லாம் நிறுவி, சின்ன ரோலர் போட்டுச் சரி பண்ணிட்டாங்க. சும்மா ஒரு 3 மணி நேரத்துலே எல்லா வேலையும் நடந்தது! ஆனா 'பிட்'லே இன்னும் ரொப்பலே! அதுக்கு வேற நாளு வருவாங்களாம்.




பல்க் ஹெட் லைட்டுக்கு கொஞ்சம் அலைஞ்சோம். வேனிட்டி லைட்டுக்கு ஆர்டர் கொடுத்தோம். கிங்குகிட்டே வாஷ்பேசின் வைக்கறதைப்பத்திப் பேசுனோம். அப்பத்தான் தெரியுது அந்த இடத்துலே போதுமான ஸ்டட் இல்லையாம். ஃப்ரீ ஸ்டேண்டிங் டிஸைனாத்தான் வைக்கணும். ஒரு வாஷ் பேஸினுக்குக்கூட என்ன தகராறு பாருங்க(-:



இன்னைக்கு டோனி மட்டும் வந்து பெயிண்ட் அடிச்சுகிட்டு இருக்காரு. ராத்திரி போய்ப் பூட்டிட்டு வர்றது இப்ப இன்னோரு வேலை!


மறுபடிக் காலையிலெ போய் திறந்துவிடணும்! ஒரு நாளைக்கு ச்சும்மா 10 தடவை போய்க்கிட்டே இருக்கோம்.


வார்டுரோப்க்கு $1477 ஆகுமாம். இந்தக் காசுக்கு எத்தனை புடவை வாங்கிக்கலாம்?




5/12
இன்னைக்கு மகள் வீடு மாத்தறா. இவர் ஒரே கவலையா இருக்கறாரு. நானும்தான்! மத்தியானமாப் போய் இன்னும் சில லைட்டிங் கடைகளைப் பார்த்துட்டு அப்படியே ஹார்வி நார்மனுக்குப் போனோம். ஃப்ரீ ஸ்டேண்டிங் ஸ்டாண்ட் கிடைக்கலே. யோசனையா இருக்கு. இன்னைக்கு அந்த பால் ( அஞ்சு பிள்ளைக்காரர்) வரேன்னுட்டு வரலை. அந்த ஆளு பூசுன சிமெண்ட்டு அதுக்குள்ளே பேர்ந்திட்டு இருக்கு!



6/12
இன்னைக்கும் ப்ளம்பர் வரலெ. காலையிலெ ·போன் செஞ்சதுக்கு, 'ஆஸ்பத்திரியிலே ஸ்கேன் பண்ண வெயிட் செய்யறேன். 9 மணிக்கு வரேன்'னு சொன்னார். அப்புறம் வரவே இல்லை!




நான் 2 மணிக்குத்தான் போனேன். பில்டர் வெளியே காங்க்ரீட் போட பாக்ஸ்ஸிங் செஞ்சு வச்சிருக்கார். கராஜ்லே மேன் ஹோலுக்கு சட்டம் அடிச்சுகிட்டு இருந்தாரு.



பெயிண்ட்டிங் நடக்குது! கிங்கும் போவும் அடுக்களை சரி செஞ்சுகிட்டு இருக்காங்க. கைப்பிடி போட்டுகிட்டு இருந்தாங்க.



ப்ளம்பர் இதுவரைக்கும் வரலே! அப்புறம் ஃபோன் செஞ்சு கேட்டா சொல்றாரு, அவராலெ வரமுடியாதாம்! அவரோட மனைவிக்கு 'மிஸ்கேரேஜ்' ஆயிடுச்சாம்! கேக்கவே ஐய்யோன்னு இருக்கு! ஆனா நம்ம வேலையை இப்படி அந்தரத்துலே விட்டுட்டாரே. முதல்லேயே வர மாட்டேன்னு சொல்லியிருந்தா நாம் வேற ஏற்பாடு செய்யலாமில்லே?



சரி, ஆனது ஆச்சு. 'இந்த மாதிரி விஷயமெல்லாம்' சொல்லிட்டா ஆகுது? நல்லபடியா குணமாகி வீட்டுக்கு வரட்டும்! பாவம்தானே பொம்பிளைங்க!
நம்மோட ரெகுலர் 'ப்ளம்பர்'க்கு ( இத்தனை வருஷமா நம்மோட வீட்டுலே ஏதாவது குழாய் தகராறுன்னா வந்து சரி செய்யற மால்கம் & மைக்கேல் கோவைப்ளம்பர்)க்கு ஃபோன் போட்டுச் சொல்லி, இந்த ஒரு வேலையைச் செய்யமுடியுமான்னு கேட்டோம். நாளைக்கு காலையிலே வரேன்னு சொல்லியிருக்கார்.



இந்த வீடு ஆரம்பிச்சப்பவே இவுங்களுக்குத்தான் சொன்னோம், ப்ளம்பிங் வேலைக்கு ஒரு க்வோட் கொடுங்கன்னு. இவுங்கதான் 'ரொம்ப பிஸி. சின்னச் சின்ன வேலையிலெதான் நிறையக் காசு'ன்னுட்டு வரலை. பார்க்கலாம், நாளைக்கு இவுங்களாவது வராங்களான்னு!



7/12
அப்பாடான்னு இருக்கு. ப்ளம்பர் வேலை செஞ்சுகிட்டு இருந்தாரு! நம்ம மைக்கேல்தான்! பெயிண்டிங்கும் நடக்குது! நான் அப்படியே லைப்ரரிக்குப் போயிட்டேன். இன்னிக்கு செவ்வாய் ஆச்சே! படுக்கை அறையிலே உள்ள ஸ்கர்ட் போர்டுக்கு என்ன கலர் அடிக்கணும்ன்னு முடிவாச்சு! நாங்க வெள்ளையா விட்டுடலாம்ன்னு நினைச்சோம்.ஆனா, பெயிண்டருங்க சொல்றது, ஃபீச்சர் வால் கலர்தான் அடிக்கணும். மத்த இடத்துக்கு காஸ்மிக் ப்ளூ அடிச்சுடலாம்! சரின்னுட்டேன். அடுக்களை பக்கத்துலே வர ஃபீச்சர் வாலுக்கு 'பேக்குடு பீட்ரூட்' ( கலரோட பேருங்க! எல்லாம் நம்ம கத்திரிக்காய் கலர்தான்)) அடிக்கலாம்ன்னு சொல்லிட்டேன்!



தூணுங்களுக்கு 'நியூ டெனிம் ப்ளூ' நம்ம மேற்கூரைக் கலர் அடிச்சாதான் நல்லா இருக்கும். சுவரோட கலர் அடிக்காதீங்க. தூண் இருக்கறது தெரியாதுன்னு டோனி அபிப்பிராயப்பட்டார். அவுங்க தொழிலே பெயிண்டிங்தான். அவுங்க சொன்னா சரியா இருக்கும்ன்னு நினைச்சு, நாங்க மனசுலெ வச்சிருந்த சுவர் கலரைவிட கொஞ்சம் (3 ஷேட் டார்க்) அழுத்தமா இருக்கணும் என்ற எண்ணத்தை மாத்திக்கிட்டோம்!



கேரியும் ஸ்விட்ச்செல்லாம் போட்டுக்கிட்டு இருந்தாரு. பாத்ரூம்க்குப் போடற ஃபோர் இன் ஒன் வேணும்ன்னு சொன்னாரு. எப்படியும் மத்தியானம் வரணுமே, அப்ப கொண்டாரேன்னு சொன்னேன். எல்லாம் எப்பவோ சேல் பார்த்து வாங்கி வச்சிருக்கு!



மத்தியானம் 1 மணிக்கு 'டான் Don' ட்ரெண்டி மிர்ரர் ஆளு கண்ணாடிக்கு அளக்க வராரில்லையா? டானும் வண்டி பங்ச்சர் ஆயிடுச்சுன்னு அரைமணி லேட்டா வந்தாரு. ரெண்டு பாத் ரூம்லேயும் வேனிட்டிக்கு கண்ணாடி அளந்தாச்சு! கோபாலும் ரெண்டுநாளா கை கழுவற கண்ணாடிப் பாத்திரத்தை வண்டியிலேயே வச்சு அலைஞ்சுகிட்டு இருக்கார். அதுக்குத்தான் ஒரு ஸ்டேண்டு பாக்கணும்!



ஸ்விட்ச் வச்ச இடம் சரியில்லே அதனாலே 'ஸ்விங்கிங் ஹீட்டட் டவல் ரெய்ல்' போடறது கஷ்டமாம்! அதையும் இவரு போய் மாஸ்டர் ட்ரேட்லெ இருந்து எடுத்துகிட்டு வந்தார். மெயின் பாத் ரும்லேயே வேற இடத்துலே வைக்கலாம்ன்னு முடிவாச்சு!



நம்ம பாத்ரூம்லேதான் இடம் நெருக்கமா இருக்கு! பாக்கலாம்!
முன்வாசக் கதவுக்கு நம்ம பிள்ளையார்/யானைக் கண்ணாடியும், உள் வாசலுக்கு பூனைக் கண்ணாடியும் வந்து போட்டுட்டாங்க! அட்டகாசமாஇருக்கு! என் கண்ணே பட்டுடும்போல!



நாம் கொடுத்த படம் நல்லாவே டிஸைன் செஞ்சு வந்துருக்கு.






டி.வி. ஏரியல் போடவும் ஒரு பையன் வந்தார்! கையிலே காசு கொடுத்துடணும்ன்னு ஏற்பாடாம். வேலை முடியறவரை அங்கேயே இருந்தேன். 250$ காசு வீட்டுலே இருந்து கொண்டுபோனதைக் கொடுத்தேன்.
நம்ம கேரியோட மனைவிக்கு நாளைக்கு ஒரு ஆபரேஷன் இருக்காம். 'வெரிகோஸ் வெயின்' தொல்லையாம். அதனாலெ நாளைக்கு வர நேரம் இருக்காதுன்னு, இன்னைக்கே நிறையநேரம் வேலை செஞ்சுகிட்டு இருந்தார்.




8/12
ஒரு பத்து மணிக்குப் போனா, அங்கெ ஜன்னலுக்கு கண்ணாடி போடற ஆளுங்க வந்திருந்தாங்க! ஆனா ரைலாக் ஆளுங்க இல்லே! 'பில்கிங்டன் க்ளாஸ்' உடனே இவருக்கு ஃபோன் போட்டுச் சொன்னேன். வந்தாரு. யாரு போட்டா என்ன ,வேலை முடிஞ்சாச் சரி! ரைலாக்குக்கு முடியாம இவுங்களைப் போடச் சொல்லியிருக்காங்களோ? அங்கெ ரைலாக்குலே என்ன தகராறோ? முன்வாசக்கதவுக்கு மேலே ஒரு பெரிய அரைவட்டக் கண்ணாடி இன்னும் போடலை. அந்த ஃப்ரேம்லேயும் மூணு கம்பிகள் ரெண்டு கண்ணாடிக்குள்ளேயும் வருது.




பெயிண்டருங்கதான் ஒழுங்கா வேலை செய்யறாங்க! அடுக்களை வேலை செய்ய கிங் சாயந்திரமா வருவாராம்!



வாஷ் ஸ்டேண்டுக்கு வாங்கின 'சங்கு' லைட்டை பெட்ரூமுக்கு வச்சுப் பார்த்தா நல்லாதான் இருக்கு! இப்ப இன்னும் கொஞ்ச நேரத்துலே இவர் வந்தார்ன்னா, இன்னும் ரெண்டு லைட்டுக்கு ஆர்டர் கொடுக்கணும்!


தொடரும்..............


======================


10 comments:

said...

கண்ணாடி டிசைன் ரொம்ப அழகா இருக்கு டீச்சர். இது கிளாஸ் பெயிண்டிங் வகையா? நான் முந்தி கிளாஸ் பெயிண்டிங் செய்வேன். அதுல லெட்டுல லைன் வரைஞ்சு...கோடுகளுக்குள்ள வண்ணத்தைத் தீட்டுறது. சிலர் அந்த ஓவியத்து மேல இன்னொரு கண்ணாடி வெச்சு பாதுகாப்பாச் செஞ்சிருவாங்க. அந்த மாதிரிச் செஞ்சதா இது? இல்ல வேற முறையா?

said...

வாங்க ராகவன்.


// நான் முந்தி கிளாஸ் பெயிண்டிங் செய்வேன்//
நீங்களும் க்ளாஸ் பெயிண்டிங்க்கா?

மகளும் நல்லாவே செய்யறாள். இங்கே க்ராஃப்ட் கடைகளில் லெட் லைட் கிறிஸ்டல்கள் கிடைக்குது. ச்சின்னப் பசங்களுக்குத் தோதா டிஸைனும் ( அலுமினியம்) ஃப்ரேம் வருது. அதுலே கலர் கிறிஸ்டல்களை ரொப்பி 100 டிகிரி அவன்லே 20 நிமிஷம் வச்சாலே அழகா வருது.

நம்ம கதவுலே போட்டுருக்கறதுலே ரெண்டு பக்கமுமே லெட் கம்பிகள் இருக்கு. நடுவிலே அவுங்களும் கலர் போட்டு விசேஷமா சூடு பண்ணி உருக்கி ஒட்டவைக்கறாங்க.

Anonymous said...

//வார்டுரோப்க்கு $1477 ஆகுமாம். இந்தக் காசுக்கு எத்தனை புடவை வாங்கிக்கலாம்?//
அதானே.
சும்மா சொல்லக்கூடாது. கதவு டிசைன் சூப்பரா இருக்கு.
(இப்பகூட ஒரு தோழி இந்தியா போயிட்டு வந்தப்ப வேணாம்னு சொல்ல சொல்ல ஒரு நல்ல பட்டு புடவை வாங்கிட்டு வந்துட்டாங்க. புடவை கட்டணும்னா ஏதாவது ஒரு நல்ல நிகழ்ச்சி வேணும்ல. பட்டுப்புடவை கட்டிட்டு உக்காந்து புக் படிக்கவா முடியும். நாம வேணாம்னு சொன்னாலும் அன்புத்தொல்லை.)

said...

வாங்க ச்சின்ன அம்மிணி.

//பட்டுப்புடவை கட்டிட்டு உக்காந்து புக் படிக்கவா முடியும்//

ஏங்க சூப்பர் மார்கெட் போகலாமே:-)))))

உங்களுக்குத்தான் அங்கே வெலிங்டனில் நல்ல கோயில்கள் இருக்கே. அங்கே போகும்போது கட்டிக்கலாம்.

அன்புத்தொல்லை சகிக்க முடியலைன்னா எனக்கு அனுப்பிருங்க. நான் தமிழ்ச்சங்கத்துக்குக் கட்டிக்கறேன்:-))

said...

//அன்புத்தொல்லை சகிக்க முடியலைன்னா எனக்கு அனுப்பிருங்க. நான் தமிழ்ச்சங்கத்துக்குக் கட்டிக்கறேன்:-))//

அப்படியே வேட்டி சட்டை எல்லாம் இங்க பார்ஸல்!!

டீச்சர், பதிவைப் பத்தி சொல்ல வந்துட்டு பின்னூட்டத்தைப் பத்தி சொல்லிட்டுப் போறேன் பாருங்க!! :))

said...

எல்லோரும் சொன்ன மாதிரி கதவு டிசைன் அருமை.

said...

பிள்ளையார் கண்ணாடி கதவு சூப்பர்...
யானை யானை அம்பாரி யானை...எல்லா இடமும் யானை தானா....

said...

வாங்க கொத்ஸ்.

வேட்டி சட்டை வந்தவுடன்,
எனக்குக் கமிஷன் அனுப்பிறணும் ஆமா:-))))

said...

வாங்க குமார்.

கதவு பிடிச்சிருக்கறது சந்தோஷம்.

said...

வாங்க முத்துலெட்சுமி.

வீடு பூராவும் யானைகள்தான்.என்னையும் சேர்த்து எத்தனைன்னு ஒரு நாள் எண்ணனும்:-)