Thursday, September 20, 2007

இப்பவோ எப்பவோ..........

விறுவிறுப்பா தமிழ்ச்சேவை(?) செய்யும்போது இப்படி ஒரு முன்னறிவிப்பும் இல்லாமச் 'சட்'னு மண்டையைப்போடும் பழக்கத்தை எங்கே யார்கிட்டே இருந்துக் கத்துக்கிச்சு இது? பத்துப் பதினைஞ்சு நாளா இதே நிலமை. போனதும் பதறாமல்( முதல் முறை பதறுனது கணக்கில் வருமா? )சுவத்தில் இருக்கும் பவர் சுவிட்சை அணைச்சுட்டு, எண்ணி அஞ்சே நிமிஷத்துலே மறுபடி,எல்லாத்தையும் முதல்லே இருந்து ஆரம்பிச்சா, என்னவோ இப்பத்தான் புதுநாளைத் தொடங்கறதுபோல, 'என்னடா........ இப்படிச் செஞ்சுட்டோமே'ன்ற குற்ற உணர்வு கொஞ்சம்கூட இல்லாம வேலை செய்ய ஆரம்பிக்குது.


வாரண்டி இருக்கா இல்லே தீர்ந்துபோச்சான்னு நினைவில்லை. வாங்குன பில்லைக் காணொம்.ரெண்டுநாளா இதே வேலையா இருந்து தேடுனோம். அஞ்சுவருசம் மூணுமாசம், நாயா பேயா உழைச்சுருக்கு.ஆனா அதுக்கு எப்படித் தெரிஞ்சது நாம் அஞ்சு வருசத்துக்குத்தான் வாரண்டி வாங்குனோமுன்னு!!!! கில்லாடி.



வேட்டை ஆரம்பம். வீட்டுக்கு வரும் ஜங்க் மெயில் போதாதா என்ன? வகைவகையா கூவிக்கூவி விக்கறாங்க.



கண்ணில் பட்ட முதல் கடையிலே மூவாயிரத்துலே ஆயிரம் குறைச்சுக்கலாமாம்.



Hewlett Packard Multi Media PC Package.21" LCD MonitorModel M81701.6 GHZ Pendium D processor1 GB DDR2 RAM 320 GB Hard Drive DVD Super Multi Drive HP printer C5280


கண்ணில் பார்க்கணுமேன்னு கடைக்கு நேரில் போனா, அட்டகாசமா இருக்கு. கார்ட்லெஸ் மவுஸ் & கீ போர்டு. இதுலே டிவியும் பார்த்துக்கலாமாம். ரிமோட் இருக்கு.


நல்லா இருக்குன்னு சொன்னாலும் அப்படியே வாங்கிறமுடியுதா? ரெண்டு இடத்துலே விசாரிக்க வேணாம்?



அடுத்தகடை. இங்கே நமக்குத் தெரிஞ்ச பையன் ஒருத்தர் வேலை செய்யறார். மேற்படி எல்லாம் அடங்குனதுஇங்கே 2200. முதல் கடையைப் பத்திச் சொன்னதும் ஒரு அஞ்சு வினாடி யோசிச்சுட்டு, நாங்க அதே விலையை மேட்ச் பண்ணறோம். ஆனா HP மானிட்டர் இல்லை. 21க்குப் பதிலா 22 இஞ்ச்சு Acer மானிட்டர் தர்றோம்.



ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்......... இதுக்குப் பக்கத்துலேயே அடுத்தமாடல் M 8190 உக்காந்து இருக்கு. நாலாயிரம் ஆகுது. நம் தமிழ்ச்சேவை ஆற்றும் அழகுக்கு நாலாயிரம் கொஞ்சம் கூடிபோகுதே...........


இப்பத் தெரிஞ்ச பையன் அடுத்த குண்டைத் தூக்கிப் போட்டார். உங்களுக்கு என்னாத்துக்கு டெஸ்க் டாப்? அதுக்குன்னு ஒரு இடம் வச்சுக்கிட்டு அந்த அறையை அனாவசியமா ஹீட் பண்ணனுமா? லேப்டாப் அருமையா இருக்கு. ஒரு லைஃப் டைம் கேரண்டியோட wireless router 86 டாலருக்கு இருக்கு. நீலப்பல்லு. வீட்டுலே எங்கே வேணுமுன்னாலும் வச்சுக்கலாம். வேலை முடிஞ்சதும் மூடி அலமாரியில் போட்டுறலாம். இதைப் பாருங்கன்னு காமிச்சார்.



Pentium Core 2 Duo. 160 GB Hard Drive. இதுலேயே ஒம்போது படம் டவுன்லோடு பண்ணிக்கலாம். 16000போட்டோஸ், இன்பில்ட் கேமெரா, மைக்ரோஃபோன், ஸ்க்ராட்ச் ப்ரூஃப் (பூனை?) கீபோர்டு, கைரேகை லாக்ன்னு இன்னபிற அம்சம்ங்கள்.


மாடல் DV 9514TX 2498 க்கு தராங்க. 200$ குறை(ரை)ச்சிருக்காங்களாம்.இப்ப சேல் இருக்கு. கொஞ்சம் யோசிச்சுட்டு வரேன்னு சொல்லிட்டு வந்தோம். நம்ம விக்கிப் பசங்களில் விஸ்டா வேணுமா வேணாமான்னு வெங்கட் எழுதுனதைக் கொஞ்சம் மேலோட்டமாத்தான் படிச்சுருந்தேன். அதனாலே விஸ்டா இல்லாம ஹெச். பி கிடைக்குமான்னு கேட்டா............. அதல்லாம் பழய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்து. யாருக்கு வேணும்? இனிமே புது யுகத்துக்கு விஸ்டாதான்னு பதில்.



வீட்டுக்குவந்து மேஜையா, மடியான்னு மண்டையைக் காய்ச்சிக்கிட்டு இருந்தப்ப, நம்ம இலங்கை நண்பர் ஒருத்தர் வந்தவர், விஸ்டா வேணவேவேணாம். எல்லாத்தையும் ஒரிஜனலாப் போடச் சொல்லும். பேசாம ஹெச்பி கிடைக்குதான்னு பாருங்கன்னார். மேஜை என்னாத்துக்கு, பேசாம மடியையே வாங்குங்க. ஆனா டோஷிபாவா இருக்கட்டும். அதுதான் ரொம்ப நல்லது. ஸ்க்ரீனை வளைச்சாலும் வளையாதுன்னார். ( எதுக்காக ஸ்க்ரீனை வளைக்கணுமாம்? ஙே.............)


எதாவது வாங்கித்தான் ஆகணும். இதுவேற 'பொட் பொட்'டுன்னு போறதும் வாரதுமா இருக்கே. ராத்திரி கடக்கட்டும். மறுநாள் சேல் முடியப்போகுது.
கடைசிநாள் இன்னிக்குத்தான். போனோம். யானையை வாங்கியாச்சு. மடிமேலே வச்சுக்கலாம். யானைக்கு ஒரு பணம், அங்குசத்துக்குஅரைப்பணம். வீட்டுக்குக் கொண்டுவந்ததும் நம்ம ஜிகேவுக்கு பரம சந்தோஷம். எதாவது பொட்டியைத் தொறந்தா ஓடிவந்துருவான், வேடிக்கை பார்க்க.
ரொம்ப நோஸி:-)



கலப்பையை இறக்குனாத்தானே தமிழ்ச்சேவை செய்ய முடியும். ஆச்சு. ஆனா கீபோர்டு மாத்தமுடியலை. நம்ம முகுந்துக்கு அவசர மயில். சிலபேருக்கு வேலை செய்யுமாம். சிலபேருக்கு இல்லையாம். இல்லாத பாவிகளில் நான் இருக்கேன். புதுக்கலப்பை செஞ்சுக்கிட்டு இருக்காராம். காத்துக் கிடக்கறேன்.


அது வர்றதுக்குள்ளே வேற எப்படியாவது தமிழ் எழுத்து வரவழைக்க என்ன செய்யலாமுன்னு இப்ப இன்னொரு மண்டைக்காச்சல். பராஹாவை இறக்குனேன். எமெஸ் வேர்டுலே கொஞ்சம் காப்பாத்த வருது. ஆனா நோட்பேடுலே தமிழே வர்றதில்லைப்பா.....................


போதாக்குறைக்கு பொன்னம்மான்னு, வாங்குன router ம் கனெக்ட் பண்ண முடியலை(-:


ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன. சேவை இனி உங்கள் கையில்:-)))

39 comments:

said...

விஸ்தாவுல இந்தப்பிரச்சினை இருக்குங்க. ஆனா re-install பண்ணிட்டா வேலை முடிஞ்சுது. கொஞ்சம் கோக்கு மாக்கு வேலைதான். சுரதா அண்ணன் இருக்காங்களே, மறந்துட்டீங்ஜகளா? இல்லாட்டி சுரதா அண்ணன் html mail save பண்ணி ஒருflash driveல வெச்சுக்குங்க. நான் அப்படிதான் பண்ணிருக்கேன்

said...

துளசி
லினக்ஸ் இருக்கா என்று கேட்கமாட்டீர்களா?
அங்கு கலப்பையும் தேவையில்லை. (முகுந்த கோச்சுக்காதீங்க)
வேண்டும் என்றால் இரண்டையும் போட்டு கொடுப்பார்களே!!

said...

நமக்கு தெரிஞ்சதெல்லாம்... வேலை செய்யலையா... அப்போ ஈயம் பித்தளைக்கு பேரீச்சம்பழம் தாங்க... நீங்க விஸ்டா வேலை செய்யலைன்னதும்... பதறி ஓடியாந்து பழமொழி ஞாபகப் படுத்திட்டு போலாமுன்னு வந்தேன். :-)

said...

என்னென்னமோ சொல்றீங்க .. ஒண்ணும் புரியலை. கேட்டா பெருசா 'நான் ஒரு க.கை. நா.' அப்டின்றீங்க .. ம்ம்..

Anonymous said...

நானெல்லாம் உங்க கட்சி(கணினிக்கைநாட்டு). ஓடிப்போயர்றேன்.

said...

வாங்க இளா.

கோக் & மாக் எல்லாம் தெரியாதுப்பா. டீச்சர் ரொம்ப ஸீதா & சாதா
ரெண்டுமூணு தடவை ரீ இன்ஸ்ட்டால் செஞ்சுபார்த்தாச்சு.

சுரதா அண்ணனை மறந்தே போனேன் (-:
இப்பப் போய்ப் பார்க்கறென்.

said...

வாங்க குமார்.

லினெக்ஸ் எல்லாம் சரியா(??) தெரிஞ்சுவச்சுக்கலை. க கை நா. ஆச்சே!

இனிமேத்தான் அவசியமுன்னு வந்தவுடன் அங்கெல்லாம் போய் மேயணும்

said...

வாங்க காட்டாறு.
வாங்குன மறுநாளே பேரீச்சம்பழம் தின்ன ஆசைவருமா? :-)

said...

லேப்டாப் ல டைப் பண்ண வருதான்னு பாருங்க..இல்லைன்னா புது கீ போர்ட் ஒண்ணு வாங்கிடுங்க..

said...

வாங்க தருமி.

இன்னும் அதே க.கை.நா தான். கொஞ்சமா அப்பப்ப உதார் வுட்டுக்கறேன்
ஸ்மைலி போட்டா அது சதுரமா வருது.............தாங்கலை சாமி........

said...

வாங்க டெல்ஃபீன்

வாழ்த்து(க்)களுக்கு நன்றி.
உங்களுக்காவது க்ரீக் & லத்தீன். எனக்கு ஏலியன் 

said...

வாங்க ச்சின்ன அம்மிணி.
ஓடாதீங்கப்பா. நின்னு வேடிக்கை பாருங்க.

said...

வாங்க அய்யனார்.

கீ போர்டு பிரச்சனை இல்லை. ஃபுல் சைஸ் போர்டுதான்.

வாலில்லாத எலி மட்டும் ஒண்ணு கூடுதலா வாங்கிக்கிட்டேன்

பாருங்க எப்படிச் சதுரமாச் சிரிக்கிறேன்னு

said...

ஓட்டை உடைசல் கணினிக்கு....
பேரீச்சம்பழம்.....பேரீச்சம்பழம்

said...

ஸாரி...இதுல நான் ஜீரோ. ஜூட்.

said...

புதிசா விண்டோஸ் எxபி வாங்கிடுங்கோ.
இதில சினிமா பார்ப்பீங்களாம்.
அதில தமிழ் எழுதலாம்.
மத்தபடி விவரமே புரியலை. தெரிஞ்சவங்க பதில் சொல்லுவாங்க. நாங்க படிச்சுக்கிறோம்.:)))))
வணக்கம் துளசி அம்மா க.மொ.கா:)))

said...

வாங்க சிஜி.

பரவாயில்லை உங்களுக்கு நல்ல வசதி. பேரீச்சம்பழமாவது கிடைக்குது.அதுவும் வீட்டுக்கே வந்து கொடுக்கறாங்க..

இங்கே டம்ப் சார்ஜ் நாம்தான் கொடுக்கணும்(-:

said...

வாங்க ஆடுமாடு.
ஜீரோவா அதுக்கு ஏங்க கவலை? கொஞ்சம் ஒரு எட்டு முன்னால் பாருங்க,
நான் நிக்கறது தெரியுதுங்களா? அதே ( அலை) வரிசைதான்

said...

வாழ்த்துக்கள் துளசி புது கணினி யா...ம் என்ன சொல்லிட்டு இப்ப நீங்க மட்டும் புகைவிட வ்வைக்கிரீங்களே...

5 வருஷம் முடிச்சு கரெக்டா வேலையை காமிச்ச உங்க வீட்டு பழைய கண்னி உங்களளப்பொலவே பெரிய ஆளு தான். :)

said...

வாங்க வல்லி.
இனி இங்கே ஹெச்பி வரவேவராதாம். எல்லாம் காக்கா ஊஊஊஊஊஷ்
routerகூட கனெக்ட் பண்ணியாச்சு. அடுக்களை மேசையிலிருந்து
சேவை ‘செய்பவர்’ உங்கள் துளசி:-)

said...

வாங்க முத்துலெட்சுமி
இப்பப் புகை கோபால் வயித்துலே இருந்துதான் வந்துக்கிட்டு இருக்கு
பர்ஸ் பழுத்துருச்சேப்பா;-)))

இப்பெல்லாம் சதுரச்சிரிப்புதான். நல்லா இருக்கா?

said...

புது வீடு, புது கணினி, புது பதிவு கலக்குறீங்க துளசி :-))

said...

புதுசா மடிக்கணினி வாங்கியாச்சா வாழ்த்துகள், தமிழ் தட்டச்சு செய்ய தமிழ்விசை என்ற ஒரு நீட்சி(extension for firfox) இருக்கிறது அதனை ஃபையர் பாக்சில் நிறுவிக்கொண்டால் நேரடியாக தட்டச்சு செய்யலாம். முகுந்த் அவர்களின் பதிவில் இருக்கிறது.

இங்கே பாருங்க:
http://mugunth.blogspot.com/2006/12/tamilkey-03-thamizh-visai-released.html

தெரிஞ்சதை சொல்லிட்டேன் இது வேலை செய்யலைனா என்னை திட்டக்கூடாது :-))

said...

ரெண்டு மாசம் கழிச்சு இன்னிக்குத்தான் உங்க பதிவோட கமெண்ட்ஸ் பாக்ஸ் என்னோட கம்ப்யூட்டர்ல ஓப்பன் ஆகியிருக்கு டீச்சர்..

ஏதோ பேரீச்சம்பழம்.. எடைக்கு எடை.. அப்படி.. இப்படீன்னு படிச்சுத்தான் என்னமோ ஏதோன்னு பயந்து போய் ஓடியாந்தேன்.

சரி.. பரவாயில்லை. அதை அப்படியே பார்சல் கட்டி இங்கிட்டு தட்டி விடுங்க.. நான் எப்படியாச்சும் சரி பண்ணி உங்க ஞாபகமார்த்தமா பத்திரமா வைச்சுக்குறேன்..

said...

சொல்ல மறந்திட்டேன், தமிழ்99 தட்டச்சு முறையில் தான் வேலை செய்யும், தமிங்கில தட்டச்சு அல்ல. மேலும் நிறுவிய பிறகு மவுசை வலது கிளிக் செய்து வரும் ஆப்ஷனில் எந்த தட்டச்சு என்று தேர்வு செய்து கொள்ளலாம்.

said...

புது கணினியா - நடத்துங்க...

ஃபயர்ஃபாக்ஸும் அதில் இருக்கற தமிழ் கீ எக்ஸ்டென்ஷனும் இருந்தால் போதும். கலப்பையெல்லாம் தேவையில்லை. ஆனால் மத்ததுல தமிழ்ல அடிக்கனும்னா கலப்பை தேவை.

ஃபயர்ஃபாக்ஸ்ல தமிழ் தெரியறதுக்கு கொஞ்சம் மோதனும்னு நினைக்கிறேன்.

said...

வாங்க ஜெஸீலா.

புதுவீடு பழையவீடாப்போச்சுப்பா. குடிவந்தெ ரெண்டேமுக்கால் வருசமாகுது:-)

புதுக்கணினி............
எனக்கு மந்திரிச்சுக் கட்டுன தாயத்து.
இல்லென்னா வெறி புடிச்சுருமாம்.
தடுப்பூசின்னு வச்சுக்கலாம்.

said...

வாங்க வவ்வால்.

விளக்கத்துக்கு நன்றிங்க. இதையேதான் நம்ம முகுந்தும்
மடலில் குறிப்பிட்டு இருந்தார்.

இப்போ இந்த நிமிஷம் தமிழில் தட்ட
கலப்பை வந்து உக்கார்ந்துருக்கு:-)

said...

வாங்க உண்மைத்தமிழன்.
பின்னுட்டப்பெட்டிக் கொஞ்சநாளா இப்படி டிமிக்கிக் கொடுத்துக்கிட்டு இருக்கு.

பார்சல் அனுப்பிறலாம்தான். எடைதான் கூடுதலா இருக்கு:-)))))

said...

வாங்க நாகு.

எழுதரதுன்னாவே முட்டிமோதிப் பார்க்கணுமுன்னு இருக்கு:-))))

முயற்சி செஞ்சுக்கிட்டு இருக்கேன். திருவினையாக்குமான்னு தெரியலை:-)

said...

இங்க இன்னும் எச்.பி விண்டோசோட கிடைக்குது. விஸ்டா நமக்கு தேவையில்லைதான்.

ஈகலப்பை செட்டப் ஃபைல ஒங்க பழைய டெஸ்க்டாப்புலருந்து இதுக்கு மாத்தி இன்ஸ்டால் பண்ணிக்கலாம்.

ஆனா நீங்க சொல்ற விலை கொஞ்சம் ஜாஸ்தி. இந்தியாவுலயே பரவால்லை.

ஒருவேளை நாங்க பல்க்கா வாங்கறதால இருக்குமோ என்னவோ.

லாப்டாப் கீ போர்டுதான் ஈசி டு ஆப்பரேட். எக்ஸ்ட்ரா கீ போர்ட் மவுசெல்லாம் வாங்காதீங்க. கொஞ்ச நாள்ல இதுவே பழகிப்போயிரும்.

ரொம்ப நாளாச்சி ஒங்க வீட்டுக்கு (தளத்துக்கு) வந்து. இப்ப வந்ததும் ஒங்க புது லாப்டாப்ப பார்த்ததுல ரொம்ப சந்தோஷம். வாழ்த்துக்கள்.

said...

பின்னுட்டப்பெட்டிக் கொஞ்சநாளா இப்படி டிமிக்கிக் கொடுத்துக்கிட்டு இருக்கு.//

துளசி,

உங்க 'செட்டிங்ஸ்' பேஜ்ல 'கமெண்ட்ஸ்' பகுதியில கீழருக்கறா மாதிரி ஒரு கேள்வி இருக்கும். அதுல 'நோ' க்ளிக் பண்ணுங்க.

Show comments in a popup window? Yes No

கமெண்ட்ஸ் பெட்டி தனியா பாப் அப் ஸ்க்ரீன்ல திறக்காது:-)

said...

வாங்க டிபிஆர்ஜோ.

நலமா? ரொம்ப பிஸியா இருக்கீங்க போல.
நீங்க சொல்றதுபோல விலை கொஞ்சம் ஜாஸ்தின்னுதான் நாங்களும்
நினைக்கிறோம். ஆனா இங்கே எதுதான் விலை குறைச்சல்? கடைகளிலும்
ஓவர்ஹெட் கூடுதல். நல்ல சர்வீஸுக்காக எக்கச்சக்கமா ஆட்களை வச்சுக்கறாங்க.
கணினி ஒரு பக்கமுன்னா, அதுக்கு அஞ்சு வருஷ வாரண்ட்டின்னு ரொம்பப் பிடுங்கிடறாங்க. வேணாமுன்னு இருக்கவும் பயமா இருக்கு.
நீங்க சொல்ரதுபோல பல்க் ஆர்டர்ன்னா விலை குறையுமோ என்னவோ!
இங்கே ஏது கூட்டம்?

இந்தப் பாப் அப் போட்டபிறகுதான் இவ்வளவாவது வேலை செய்யுது. இதுக்கு முன்னாலே கொஞ்சநாள் ரொம்ப சுத்தம்:-)

பேஜ் லோட் ஆகும்போதெ ‘டன் வித் எர்ரர்’ன்னு காமிக்குது(-:

said...

நீங்க மடிக்கணனி வாங்கியதால், உங்களுடன் சேர்ந்து நானும் நிறைய விசயங்கள் தெரிந்து கொண்டேன்.
எனக்கு முன்னால் வரிசையில் நின்று கொண்டிருந்த ரெண்டு , மூணு பேரையாவது பின்னுக்கு தள்ளியிருப்பேன்னு நினைக்கிறேன்.

said...

வாங்க வெயிலான்.

இன்னும் விஸ்டாவோட முட்டி மோதிவந்ததையும் எழுதலாமான்னு இருக்கு. முதல்லெ கரை ஏறுவேனான்னு பார்க்கணும்:-)

said...

புதியதாக மடிக்கணிணி வாங்கியதற்கு மகிழ்ச்சி - வாழ்த்துகள் - Initial Teething troubles இருக்கத்தான் செய்யும். கவலை வேண்டாம். சரி செய்து விடுவார்கள்

said...

வாங்க சீனா.

நன்றி.

//Initial Teething troubles//

சரியாகலைன்னா பேசாம பல்லைப் பிடுங்கிட்டு 'செட்'வச்சுக்க வேண்டியதுதான்;-)))))

said...

அன்புச் சகோதரி துளசி,

பின்னூட்டங்களுக்குப் பதில் சொல்லும் போது, பதிவர்களை வாங்க வாங்கன்னு வாய் நிறைய அன்புடன் அழைப்பது எனக்கு மிகவும் பிடிக்கிறது.

பல பின்னூட்டங்களில் தங்களை வலைப் பதிவர்கள் துளசி அம்மா, துளசி அக்கா, துளசி டீச்சர் என அழைக்கிறார்கள். அன்பின் வெளிப்பாடு அது.

பல்லைப் பிடுங்கி செட் வைச்சீங்கண்ணா அது சரிப்படாது.
பல்லெயே பல் டாக்டர் கிட்டே காமிங்க
(மடிக்கணிணி சிறந்தது)

சரியாக வாழ்த்துகள்
நன்றி
அன்புடன் சீனா.

said...

என்னங்க சீனா,

சரிதான், உங்களுக்கு இங்கத்து விஷயம் தெரியாதா? சொத்தையைப் பிடுங்கச் சொன்னா சொத்தையேப் பிடுங்கிருவாங்க இங்கத்துப் பல்வைத்தியர்கள்.

இது சம்பந்தமான என் பழைய பதிவு

http://thulasidhalam.blogspot.com/2005/09/blog-post_06.html

நீங்கவேற புதுசுன்னு சொன்னீங்களா அதான் பதிவுக்கு மறுவாழ்வு கொடுத்துருக்கேன்:-)