Tuesday, October 23, 2007

வீடு 'வா வா'ங்குது ! பகுதி 38

18/1
காலையிலே க்ரெளட்டிங் போட எட்டு மணிக்கே ஆளு வந்தாச்சு! இந்த ப்ளம்பர்தான் 7.30க்கு வரவேண்டியவர் வரலை! அப்புறம் இவர் ஃபோன்
அடிச்சப்ப 11 மணிக்கு வரேன்னுட்டும் வரலையாம்! ச்சீன்னு இருக்கு.
இன்னைக்கு லைப்ரரி முடிஞ்சதும் அங்கே ஃபென்ஸிங் போடற வேலைக்கு அளந்து பார்த்து க்வோட் தர ஒருஆளு வரார்ன்னு போனோம். பக்கத்து வீட்டுப்பக்கம் 'ஹோ'ன்னு கிடக்கே. இன்னும் ஏதாவது மரம்கிரம் விழுந்து தொலைச்சால்? அங்கே குடியேறுமுன்னே கூடியவரை எல்லா வேலைகளையும் முடிச்சுக்கணுமுன்னு நினைக்கிறேன்.
அந்த ஆளும் 12.15 வரை வரலை. நாங்க வந்துட்டோம்.


மகள்கிட்டே சொல்லி ஆர்டர் செஞ்ச ஐ லிட் விளக்கு வந்துருச்சாம்! இவர்போய் வாங்கிக்கிட்டு வந்தார்.
வீட்டுக்கு வந்து பகல் சாப்பாடு சாப்பிடறப்ப ஃபென்ஸிங் ஆளு ஃபோன் செஞ்சார். ப்ளம்பரும் 1 மணிக்கு வரேன்னுசொன்னதாலெ இவர்
உடனே கிளம்பிப் போயிட்டார்.


நான் 1.30க்கு ஃபிஸியோதெரபிக்குப் போனேன். முதுகு & இடுப்பு வலி என்னைத் தின்னுகிட்டு இருக்கே! நல்லவேளை, நம்ம பக்கத்து வீடுதான் பிஸியோவின் க்ளினிக். 2.20க்கு வந்துட்டு ஃபோன் செஞ்சு கேட்டேன். ப்ளம்பர் வந்து வேலை நடந்துக்கிட்டு இருக்காம்! மழைதான் வரப்போகுது!

நாலுமணிக்கு இவர்கூட அங்கெ போனேன். இந்த இடுப்புவலி இருக்கறதாலெ என்னாலெ கார் ஓட்டிக்கிட்டுப் போகமுடியுமான்னு தெரியலை!


அடுக்களையிலே டிஷ் வாஷர்ங்க, ஸிங் அப்புறம் ரெண்டு பாத் ரூமுங்கன்னு பைப் கனெக்ஷன் குடுத்திருந்தது!


நம்ம வாஷ் பேஸினுக்கும் பைப் போட்டாச்சு! அந்தக் கண்ணாடியை மூடி வைக்கலாம். ஏதாவது கனமா விழுந்துடுமேன்னு அதுவந்த பாக்ஸ்லே இருந்து தெர்மாகோல் பேக்கை எடுத்தா அதுக்குள்ளெ ஒரு அட்டைப் பெட்டி இருக்கு! கண்ணாடிக்குப் பொருத்தமானது எல்லாம் அதுலேயே வந்திருக்கு!
ஆனா யாருமே அதைப் பார்க்கலை! பாக்கிங்கைக்கூட ஒழுங்காப் பிரிச்சுப் பார்க்க முடியாதா இந்த மக்களுக்கு(-: ஆனா இந்த இந்த சிங்க் வேலை யாருது? கிங்கோடதா? இல்லையாமே.......... கண்ணாடிக்கு பீடம் வச்சதுதான் அவரோட வேலையாம். மத்தபடி வேஸ்ட் ட்ராப், கனெக்ஷன் எல்லாம் ப்ளம்பரோடதாம். என்னாங்கடா இது............

எல்லாம் அரைவேலை அண்ணாச்சிங்க. ப்ளம்பர்கிட்டே காமிச்சு அதையே ஃபிக்ஸ் பண்ணச் சொன்னேன். இதெல்லாம் தனியா வாங்கியாங்கன்னு சொல்லி, நாம் கடைகடையா அலைஞ்சு வாங்கின வேஸ்ட் ட்ராப் எல்லாமெ வேஸ்ட்தான்! இதோட ரசீதை எங்கே வச்சோம்ன்னு தேடி எடுக்கணும். ரசீதில்லாம திருப்பிக் கொடுக்க முடியாது.


இனி கிங் திரும்பி வந்ததும் வாஷ் பேஸின் ஸ்டாண்ட் முகப்புக்கு அடுக்களைக்கு மேட்சா வரும் இருடியம் கலர் போர்ட் வச்சு சரி செய்யணும்.
லாண்டரியிலேயும் பைப்பை வச்சாச்சு! வாஷிங் மெஷினுக்கும் கனெக்ஷன் கொடுத்தாச்சு! இன்னும் நம்ம பாத்ரூம்தான் பாக்கி.


நாளைக்கு காலையிலே 9க்கு வரேன்னுட்டு போயிட்டார் ப்ளம்பர். வந்தாதான் வேலை நடக்கும். வருவாரான்னு தெரியலையே!


19/1
இவருமட்டும் காலையிலே எட்டேமுக்காலுக்குப் போனார். எனக்கு இன்னைக்கு 8.50க்கு ஃபிஸியோ போகணும்! இங்கேயும் ஒரு நாளுக்கு ஒரு நேரம்:-)


பத்தரை மணிக்கு வந்து, என்னையும் கொண்டுபோனார். நம்ம பில்டரும் வரேன்னு ஃபோன் செஞ்சாராம். மைட்டர் 10 க்குப்
போய் ரெண்டு டோர் ஸ்டாப்பர் வாங்கிக்கிட்டுப் போனோம்.
க்ரேக் வந்ததும் என்னென்ன செய்யணும்ன்னு சொன்னேன். எல்லா டாய்லெட்லேயும் பேப்பர் ஹோல்டர் போட்டாச்சு. கதவுங்களுக்கும்
ஸ்டாப்பர் போட்டாச்சு. நம்ம பாத்ரூமுக்கு ஷாம்பூ வைக்க ஒரு கண்ணாடி ஸ்டேண்ட் வாங்கியிருந்தது போடணும். இப்பப் பார்த்தா
அதை எப்படி ஃபிக்ஸ் செய்யணும்ன்னு தெரியலையாம். க்ரேகை அங்கே நாப்ஸ் அண்ட் நாக்கர்ஸ் போய் பார்த்துட்டுவரச் சொன்னேன்.
பார்த்துட்டு வந்து சொல்றாரு அவுங்க தப்பான ஃபிட்டிங் கொடுத்துட்டங்களாம். இவுங்க எல்லாம் என்ன வேலை செய்யறாங்க. எடுத்துக் கொடுக்கும்போது சாமான்களைப் பார்க்கவே மாட்டாங்களா?


சொல்லி வாய் மூடலை. ப்ளம்பர் சொல்றாரு, நாம வாங்கிவச்ச டாய்லெட் அந்த இடத்துக்கு சரிவராதாம்! பைப் வெளியே தெரியுமாம்.
அதுக்கு முதலிலேயே பைப்பைத் தள்ளிப் போட்டிருக்கணுமாம்!
சரி. அந்த பைப்பை போட்டது நீதானே? முதலிலேயே எந்த மாதிரி டிஸைன் டாய்லெட்ன்னு சொல்லியிருக்கோம் இல்லையா? அதுக்கேத்தமாதிரி
ஏன் பைப் செட் செய்யலை?


நமக்கு நல்லதாப் போடலாம்ன்னுதான் கொஞ்சம் விலைகூடிய டாய்லெட் வாங்கினோம். இப்ப மத்த பாத்ரூம்லே போட்டதே வாங்கணும்.
இதைத் திருப்பிக் கொடுத்துடலாம். ப்ரச்சனை இல்லை. ஆனாலும் நமக்கு வேண்டியது கிடைக்காது.......அட்ஜஸ்ட்மெண்ட்!!!!!!!! காம்ப்ரமைஸ்!!!!!


இவர் உடனே மாஸ்டர் ட்ரேட்க்குப் ஃபோன் செஞ்சு விஷயத்தைச் சொன்னார். அது வர ரெண்டு நாள் ஆகுமாம். இந்த ப்ளம்பரை இப்ப
விட்டுட்டா மறுபடி பிடிக்கறது கஷ்டமாச்சே! வேற வழி என்னன்னு கேட்டப்ப, நாமே அவுங்களோட வேர்ஹவுஸில் போய் எடுக்கறதா
இருந்தா இப்பவே கிடைக்குமாம்! இவர் ஓடுனாரு. கொஞ்ச நேரத்துலே கொண்டுவந்துட்டார்.


நான் அதுவரைக்கும் அங்கெயே உக்கார்ந்து விஷ்ணு சஹஸ்ரநாமம் படிச்சுக்கிட்டே இருந்தேன். ஒரு காப்பி கொண்டு வச்சது நல்லதாப்
போச்சு. இவர் வந்தவுடனெ நான் கார்லெ போய் உக்கார்ந்துகிட்டு, அங்கே வச்சிருந்த வாழைப்பழத்தைச் சாப்பிட ஆரம்பிச்சேன்.
இவர் ஓடி வரார். என்னன்னா, அவர் கொண்டுவந்த டாய்லெட் தப்பான டிஸைனாம். நமக்கு 'எஸ்' ட்ராப் வேணுமாம். ஆனா 'பி ட்ராப்'
கொடுத்துட்டாங்களாம். மறுபடி ஓடு...........



இவர் புலம்பிக்கிட்டே வரார். கொண்டு போறதுக்குள்ளெ ப்ளம்பர் போயிடுவானென்னு பதறரார். தெருமுனையிலே திரும்புறப்பவே
ப்ளம்பரின் வண்டி இன்னும் நம்ம வீட்டு முன்னாலெ நிக்கறதைப் பார்த்ததும்தான் உயிரே வந்துச்சு! போய்ச் சேர்ந்தப்ப இன்னும்
சில வேலைகளை முடிச்சிக்கிட்டு இருந்தாங்க. இந்த டாய்லெட்டையும் போட்டு முடிச்சாச்சு. அப்புறம் நான் போய் எப்படி வந்திருக்குன்னு
பார்க்கறேன்.....! ம்ம்ம்ம்ம்.... இருக்கற இடத்தை சென்டர் செய்யாம ஒரு பக்கமா இருக்கு! இதைப் போடறதுக்கு முன்னாலெயே
டாய்லெட் பேப்பர் ஹோல்டரை பதிச்சாச்சு! எல்லாமெ ஒரு விதம்தான்.......... அதை எடுத்தா அங்கே டைல்ஸ்லே ஒரு ஓட்டை
வந்துருமே! சரி. இது இப்படித்தான் அமைஞ்சதுன்னு நினைச்சுக்கிட்டேன்!


அப்புறம் வீட்டுக்கு வந்து சாப்பிட்டுட்டு, 'ஹப்பர்ஸ்' கடைக்குப் போனோம். அங்கே இன்னோரு கூத்து!

காலையிலேயே ஃபோன்லெ அந்த ஆளு (சேல்ஸ்மேன்) ஷேன் 9500 ஆகும்ன்னு சொன்னார். நாங்க போனப்பவும்
அதையேதான் சொன்னார். ஆனா சொன்ன விதம்?


" எங்க கடை உரிமையாளர் இப்ப லீவுலே இருக்கார். அவர்கிட்டே கேட்டுட்டு உங்களுக்கு விலை குறைச்சுத் தரேன். நீங்க
50 மீட்டர் கார்பெட் வாங்கறதாலே விலை கட்டாயம் குறைக்கலாம்"
முதல்தடவை போனபோது இது அவரே எங்ககிட்டே சொன்னது!
இன்னைக்கு? '9500 ஆகும். அதுக்குக் கீழே விலை குறைக்க முடியாது. ஐ டோண்ட் கேர் இஃப் யு ஆர் நாட் பையிங்'ன்னு அவரோட 'பாஸ்' சொன்னாராம்.



என்ன விலை போட்டிருக்காங்கன்னு பார்த்தா அவுங்க ஏற்கெனவே போட்டிருக்கற 'ஸேல் ப்ரைஸ்'தான்! எங்கே குறைச்சாங்க? ஆனா கார்பெட்
போடும் லேயரிங் சார்ஜ் மட்டும் குறைச்சுருக்காங்க. அதுக்கு வேற சப் காண்ட்ராக்ட். அது போகட்டும்.


" எங்க பாஸ் இப்படிச் சொல்லிட்டார். அவர் பேச்சை என்னாலே மீற முடியாது. சாரி"


இப்படிச் சொல்லியிருந்தா, சரின்னு அங்கெயே வாங்கி இருப்பேன்!
கொஞ்சம் கொஞ்சமா இவரே 'பாஸ்' ஆயிட்ட மாதிரி, 'ஐ டோண்ட் கேர் இஃப் யு ஆர் நாட் பையிங்'ன்னு சொன்னதும் எனக்குக்
கோவம் வந்துருச்சு! நாம என்ன சும்மாவா வாங்கறோம். வைனல் சேர்த்துக் கிட்டத்தட்ட 12,000 டாலர்! நம்ம ஊர்க்கணக்குலே
மூணு லட்சத்து அறுபதாயிரம்! ச்சும்மா வருதா? நீ இல்லேன்னா ஆயிரம் கடை! உனக்கு எங்க காசுவர்றதுக்கு கொடுப்பனை
இல்லென்னு நினைச்சுக்கிட்டு வந்துட்டோம்!


வர்ற வழியிலேயே ஃபோன். 'ப்ளம்பிங் வொர்ல்ட் கேஸ்' ஆளு வந்து எல்லாத்தையும் சரியா கனெக்ஷன் ஆகி வேலை செய்யுதான்னு பார்க்க வர்றாராம்! அவர் ஒரு சான்றிதழ் கொடுக்கணும். அப்பத்தான் கடைசி இன்ஸ்பெக்ஷன் வேலை நடக்கும்!


வந்து பார்த்துட்டு, புது அடுப்பு எப்படி வெலை செய்யுதுன்னு காமிச்சார். அப்படியே சுடுதண்ணியோட வெப்பநிலை சரி செய்யறது எல்லாம்
செக் பண்ணிட்டு நாங்க என்ன செய்யணும்ன்னும் சொல்லிக் கொடுத்துட்டு அப்படியே ஒரு சர்ட்டிஃபிகேட் எழுதிக் கொடுத்துட்டுப் போனார்!



மத்தியானமா 1.30க்கு மில்லர்ஸ் ஆளுவந்து கர்ட்டெயின் ட்ராக் போட ஆரம்பிச்சார்! பேரு ட்ராவர். அப்பத்தான் தெரியுது ஜன்னலுங்களைக்
கொஞ்சம் கோணையா வச்சிருக்கறது!!!!!!!!!!!!!!! அட்ஜஸ்ட் செஞ்சு போட்டாச்சு!

தொடரும்....

------------------------------------

10 comments:

said...

அட்ஜஸ்ட்மெண்ட்!!!!!!!! காம்ப்ரமைஸ்!!!!!
எல்லா வீட்டு வேலைகளும் இப்படித்தான் முடிகிறது.

said...

அடப்பாவிகளா? இங்கதான் பதிவைப் படிக்காம பின்னூட்டம் போடறாங்கன்னா (நான் இல்லை டீச்சர், மத்தவங்களைச் சொன்னேன்) அங்க வந்த பார்சலைப் பிரிக்காம வேலை செய்யறாங்களா? நல்லா இருங்கப்பா...

said...

//சரி. அந்த பைப்பை போட்டது நீதானே? முதலிலேயே எந்த மாதிரி டிஸைன் டாய்லெட்ன்னு சொல்லியிருக்கோம் இல்லையா? அதுக்கேத்தமாதிரி
ஏன் பைப் செட் செய்யலை?//

இது மாதிரிக் கேள்விகளுக்கு விடை என்றுமே கிடைக்காது!
:))
//டாய்லெட் பேப்பர் ஹோல்டரை பதிச்சாச்சு! எல்லாமெ ஒரு விதம்தான்.......... அதை எடுத்தா அங்கே டைல்ஸ்லே ஒரு ஓட்டை
வந்துருமே! சரி. இது இப்படித்தான் அமைஞ்சதுன்னு நினைச்சுக்கிட்டேன்!//

ஸீட்ல உட்கார்ந்தா எடுக்கற மாதிரிதானே!
:))

அப்பாடா! கொத்ஸ் என்னைத் திட்ட மாட்டாரு!
:))

said...

என்ன தான் முடியாட்டியும் நீங்க ஓடி ஓடி பார்த்தாலும்சில விசயம் இப்படி காம்ப்ரமை ஸ் பன்ணனும்ன்னு வந்தா கஷ்டமா இருக்குல்ல.. கேள்வி மேல கேள்வி கேட்டுக்கிட்டே இருக்கனும் இல்லானா விட்டுருவாங்க இல்லாட்டி மறந்துருவாங்க ... நமக்குத்தானே கவலை ..

said...

வாங்க குமார்.

"அதுதான் நினைச்சது ஒண்ணு நடந்தது ஒண்ணு
அதனாலெ முழிக்குதே அம்மாக்கண்ணு"

கையைவிட்டுப்போன கேஸ் எல்லாம் காம்ப்ரமைஸ்தானே?:-)

said...

வாங்க கொத்ஸ்.

நீங்க போட்ட போடுலே 'மருத்துவர் ஐயா' பயந்துட்டாரு போல:-)))))

க்ளாஸ் லீடருன்னா இப்படித்தான் இருக்கணும்!

said...

வாங்க விஎஸ்கே.

வரிக்கு வரி படிச்சதை நிரூபிச்சாச்சு:-)))))

அதெல்லாம் கைக்கு எட்டுது:-))))

said...

வாங்க முத்துலெட்சுமி.

அதான் கண்ணுலெ 'விளக்கெண்ணெய்' ஊத்திக்கிட்டுப் பார்க்கலாமுன்னா,
பிசுபிசுப்பாயிருமுன்னு விட்டுட்டேன்:-)))))

ஆனாலும் சொல்லிக்கலாம்,'பார்த்துப்பார்த்துக் கட்டுன வீடு இது'ன்னு:-))))

said...

mam,
this is gunasekar from iit delhi...
i am never a regular guy to blogs and i visit some tops when i need some relaxation on net....
i was looking on to your home works and read all the chaps in a moment....
seekram naanum try pandraen(blog elatha illa,veedu katta...)

said...

வாங்க குணசேகர்.

நலமா? முதல்முறையா வந்துருக்கீங்க. ரொம்ப மகிழ்ச்சி.

பிடியுங்க எங்க அட்வான்ஸ் வாழ்த்து(க்)களை. அதெல்லாம் அமோகமாக் கட்டுவீங்க. வீட்டைத்தான்:-))))

அப்படியெ பதிவராகவும் ஆகி உங்கள் அனுபவங்களையெல்லாம் எங்களோடு பகிர்ந்துக்கலாமே.