Sunday, November 04, 2007

வீடு 'வா வா'ங்குது ! பகுதி 43

13/2
பாதிக் குடும்பம் அங்கே மீதிக் குடும்பம் இங்கேன்னு நம்ம கப்பு, ஜி.ஜே ரெண்டும் அங்கே (311)தான் இருக்காங்க. இங்கே ஒருமாதிரி ஒழிச்சு வச்சாத்தான் அவுங்களைக் கொண்டுவர முடியும்.

ஆனா, பிள்ளைங்க பசியாலே துடிச்சிடுமே! காலையிலே 7 மணிக்குக் கிளம்பி அங்கெ போய் சாப்பாடு கொடுக்கலாம்ன்னு முடிவாயிருக்கு.
ஆனா, ஒருதடவை இல்லே, பலமுறை போகணும். கப்பு பரவாயில்லெ . ஜிகே உடம்பு சரியில்லாத ஆளாச்சே!
இன்னைக்கும் இங்கே வீடு அடுக்கற வேலை! கூடவே 311 சுத்தம் செய்யறவேலையும் சேர்ந்துக்கிச்சு!




14/2
இன்று காதலர் தினம்! காதலர்கள் ரெண்டு பேருமா சேர்ந்து வீடு அடுக்கணும்! எங்கே? இவர் வேலைக்குப் போயாச்சு! நாந்தான்
பசங்களுக்குச் சாப்பாடு கொடுத்துட்டு, அங்கே கொஞ்சம் சுத்தம் செஞ்சிட்டு வந்தேன். ஒரேடியா முடியாதே(-:


4.50 சாயந்திரம், 'சிடிகேர் டிக்கர்' கொண்டுவந்து வச்சிட்டுப் வயித்துலே பாலை வார்த்துட்டுப் போயிருக்காங்க! வீட்டுக்கு முன்புறம் சமன் செய்யணும். மழைவந்தாச் சகதியாப் போயிரும். அப்படி இருக்கு மண்வாகு. நம்ம க்ளீண்டன் செஞ்சுவச்ச மணைக்கட்டைதான் இப்ப முன்வாசலுக்குப் படி.

இன்று நோ சமையல், சாயந்திரம் 'ஸ்பகெலேமி'யிலே பிட்ஸா வாங்கித் தின்னாச்சு!


15/2
இப்பல்லாம் காலையிலே சீக்கிரமாக் கிளம்பி 311 போய் பசங்களுக்கு சாப்பாடு கொடுத்துட்டு வரோம். கப்புதான் ரொம்பவே 'சோகமா'
இருக்கா(ள்)ன்! புரியுது போல, 'அம்மா' வீட்டுலே இல்லே எங்கேயொ தொலைஞ்சிருச்சுன்னு!
8 மணிக்கு முன்னாலேயெ 'சிடி கேர்' ஆளுங்க ரெண்டு பேர் வந்து வேலையை ஆரம்பிச்சிட்டாங்களாம். நான் 311 லேயிருந்து 9 மணிக்குத்தான்
வந்தேன்.
பள்ளம் தோண்டி மண்ணை வாரிக்கிட்டு இருந்தாங்க! அதை 'டம்ப்' செய்ய நாம தனியாக் காசு தரணும்ன்னு சொன்னாங்க! நாம் அடிச்சோம் ப்ரைஸ்!

நமக்கோ பின்பக்கத் தோட்டத்துலே லெவல் கீழே இருக்கு. மழைத்தண்ணி நின்னுச்சுன்னா கஷ்டம். அந்தத் தரையை பக்கத்து வீட்டு லெவலுக்கு உயர்த்தணும்ன்னு இருந்தோம். அதுக்கு நாம் மண்ணை வெளியே வாங்கணும். இப்ப நம்ம வீட்டு மண்ணே இருக்கு! அதை அங்கேயே போடச் சொன்னோம். சரின்னுட்டு, ட்ரக்லே ஏத்தி பின்னலெ கொண்டு போய் கொட்டினாங்க!


அது குவியல் குவியலா 9 குவியல் இருக்கு! அதை கொஞ்சம் நிரவி விட்டா நல்லது! அதனாலெ அதைக் கொஞ்சம் நிரவுங்கோன்னு
சொன்னதுக்கு நாளைக்கு செய்யறேன்னு சொன்னாங்க! முதல்லே இவர் என்கிட்டே சொன்னாரு, ஒரு 'வீல் பாரோ' வாங்கணும்னு.


எதுக்காம்? மண்ணை அள்ளி நிரவறதுக்காம்! சரியாப் போச்சு, இது செய்து முடிக்க நமக்கு ஒரு வருசம் ஆயிருமே! அவுங்களையே கேளுங்க.
அந்த 'டிக்கர்' லேயெ செஞ்சிருவாங்க. அதுக்குத் தனியா பணம் வேணுமுன்னா கொடுத்தரலாம்! அப்படியே ஆச்சு!


சாயந்திரம் வரை 'ட்ரைவ் வே' வேலை செஞ்சாங்க. நாளைக்கு 'ரோலர்' கொண்டு மண்ணை அமர்த்திட்டு, ஜல்லி போட்டு கம்பி
வச்சிருவாங்களாம். அப்புறம் அதுமேல காங்க்ரீட் ஊத்துவாங்க போல!




16/2
ஒரு மணி நேரத்துலே மண்ணையெல்லாம் நிரவியாச்சு! ரோலர் போட்டுக்கிட்டு இருக்காங்க! நம்ம வீட்டுலே புதுசா டி.விக்கு
ஆன்டெனா போட்டோமில்லையா, அதோட ரிசப்ஷன் சரியா இல்லை. அதை ட்யூன் செய்யணுமாம்.நாளைக்கு மத்தியானமா
ஒருத்தர் வருவாராம். அதுக்கு சார்ஜ் 40 $ ஆன்டெனா போட்டு ட்யூன் பண்ணிக் கொடுக்கமாட்டாங்களா? ஒவ்வொண்ணுக்கும் தனிக்காசா? நல்ல கதை(-:






நாளைக்குப் பகல் 12.30க்கு ஷவர்க்குக் கண்ணாடி தடுப்புச்சுவர் போட ஆள் வருது! பேசாம இன்னொரு குளியலறையில் இருக்கரதுபோல க்யூபிக்கிள் வச்சுருக்கலாமோ?


நான் இன்னைக்கு 'ஆல்தெர்ம்'க்கு ஃபோன் செஞ்சு, நம்ம வீட்டுலே அவுங்க கார்டு இருந்ததைச் சொன்னேன். (வீட்டுவாசல்லே கொண்டுவந்து வச்சுட்டுப் போயிருக்காங்க. எல்லாம் ஒரு வியாபாரத் தந்திரம்தான். புது வீட்டுலே எதாவது வேலை இருக்காதா என்ன? ) அப்படியே
நமக்கு ஒரு கன்சர்வேட்டரி வேணும்ன்னு சொன்னதுக்கு ரிச்சர்டுன்னு ஒருத்தர் நாளைக்கு 2 மணிக்கு வந்து பாக்கறேன்னு சொன்னார். இதை மட்டும் நம்பாம இன்னும் ரெண்டு மூணு இடத்துலே க்வோட் எடுக்கணும்!





நம்ம கப்புதான் பாவம்! சாப்பிடாம துக்கிதனாக இருக்கான்! ரொம்ப நாசூக்கான சுபாவம்.

17/2
ஷவர் கண்ணாடி போட்டுட்டாங்க. நம்ம பாத்ரூமில் ஷவர்க்கூடு வைக்கலை. தடுப்புச்சுவரா ஒரு 10 மிமீ கனமுள்ள 1.2 மீட்டர் அகலக் கண்ணாடி மட்டும்தான். ஆனா அது உயரமா ரெண்டு மீட்டருக்கு நெடுநெடுன்னு இருக்கு. அது கொஞ்சம் ஆடுமோன்னு பயமாவும் இருக்கு. . அதுவும் டாய்லெட்க்கு ராத்திரி தூக்கக் கலக்கத்துலே இவர் போய் இடிச்சுக்கிட்டாருன்னா?







அந்த ஆளுங்களே இன்னொரு கண்ணாடித்துண்டு குறுக்காலே வச்சு சப்போர்ட் தரோம்னு சொன்னாங்க. ஆனா அதுக்கு அளவெடுத்து
வெட்டிக்கிட்டு வரணுமாம். அடுத்த வியாழன்னு முடிவாச்சு. அந்த 'சீல்' காயறவரைக்கும் 24 மணிநேரம் ஷவரை உபயோகப் படுத்த வேணாம்னு
சொல்லியிருக்காங்க. 24 மணி நேரம் என்ன? சப்போர்ட் கண்ணாடி வர்ற வரைக்குமே யூஸ் பண்ணாம இருந்தாப் போச்சு! அதான் இன்னோரு

பாத்ரூம் இருக்குல்லே!




18/2
இன்னைக்கும் வழக்கம்போல பசங்களுக்குச் சாப்பாடு கொடுக்கப் போயிட்டு வந்தேன். சாயந்திரம் கப்புவை மட்டும் இங்கே கொண்டு வந்துட்டோம்!
வந்தவுடனே நேரா சாமிகிட்டே போய் கும்பிட்டுக்கிட்டு, நம்ம படுக்கையறைக்குக் கொண்டு போனேன். அந்த 'ஷீட்' வாசனைக்காக அதையெல்லாம் மாத்தாமலெயே போட்டு வச்சிருந்தோமில்லே. அதையெல்லாம் மோந்து பார்த்துட்டு கொஞ்ச நேரம் அங்கெயே படுத்துக்கிட்டான்!




இவர் சொல்லிக்கிட்டே இருக்கார், 'அவன் ராத்திரியெல்லாம் 'கத்தி'க்கிட்டு இருக்கப் போறான். கராஜ்லே விட்டுடு'. ஆனா, நம்ம கப்பு 'பட்டுச்செல்லம்!' ச்சுப்புன்னு இருந்தது. ராத்திரியெல்லாம் என்கிட்டேயே படுத்துச்சு!






19/2
காலையிலே கோயிலுக்குப் போனோம். ஜிகேவை எஸ்பிசிஏ விலே கொடுக்கணும்ன்னு சொல்றார். எனக்கோ துக்கம் துக்கமா வருது!
சாமிகிட்டே முறையிட்டுக்கிட்டு இருக்கேன்.


அப்புறம் ஒரு முடிவுக்கு வந்தேன், 'என்ன ஆனாலும் ஜிக்குவை புது வீட்டுக்குக் கொண்டு போகலாம். வெளியே வைக்கலாம். இருந்தா
இருக்கட்டும். இல்லைன்னா அவனா வேற இடம் போனாப் போகட்டும்'!
அது சரியான பயந்தாங்குள்ளீ. கொண்டு வரப்பயே பயத்துலே ச்சுச்சு போயிருச்சு! அப்புறம் கோவமா 'சிங்கம்' போல நடந்துக்கிட்டு இருக்கு.
பின்பக்கத்து வீட்டுக்கும் நமக்கும் இருக்கற ஃபென்ஸ் ஓட்டையிலே அடியிலே போய் அவுங்க வீட்டுலே செடிக்கடியில் உக்கார்ந்துக்கிட்டு இங்கே நம்ம வீட்டை ஓரக்கண்ணுலே பார்த்துக்கிட்டு இருந்தது!



நான் அப்பப்பப்போய் அவன் அங்கேதான் இருக்கணுமுன்ற ஒரு அனுமானத்திலே 'ஜிக்கு ஜிக்கு'ன்னு தர்மக்கூச்சல் போட்டுக்கிட்டே இருந்தேன்.




சாயந்திர, மெதுவா வெளியிலே வந்தது. நான் ஒண்ணும் தெரியாதமாதிரி, வழக்கம்போல சாப்பாடைத் தட்டுலே வச்சேன். அதுவும் ஏதும் நடக்காத மாதிரி நல்லா சாப்பிட்டுச்சு! ஒரு ப்ளாங்கெட்டை விரிச்சுப் போட்டேன். ஜம்முன்னு அதுலே படுத்து தூங்கிடுச்சு! ஸோ செட்டில்டு!


தொடரும்.......

------------------------------

10 comments:

said...

//காதலர்கள் ரெண்டு பேருமா சேர்ந்து வீடு அடுக்கணும்! //

முன்னமே சொல்லி இருக்கேன் - ஆரியக்கூத்தாடினாலும் தாண்டவக்கோனே!!

//ராத்திரி தூக்கக் கலக்கத்துலே இவர் போய் இடிச்சுக்கிட்டாருன்னா?//

ஆமாம். எங்களுக்கு ராத்திரியே ஆகாது. அப்படியே ஆனாலும் தூக்கமே வராது. அப்படியே தூக்கம் வந்தாலும் எழுந்திருக்க மாட்டோம். அப்படியே எழுந்தாலும் டாய்லெட் போக மாட்டோம். அப்படியே போனாலும் இடிச்சுக்க மாட்டோம்.

ஆமாம், இவர் போய் இடிச்சுக்கிட்டாருன்னா - சரியான கேள்விதான் ரீச்சர்.

Anonymous said...

ஜீகே வை எஸ்பிசிஏ வுக்கு குடுக்கறதா. நாங்களே ஒத்துக்க மாட்டோம். நீங்க எப்படி ஒத்துப்பீங்க.

said...

வாங்க கொத்ஸ்.

நாங்கெல்லாம் மறக்காம லைட் போட்டுட்டுத்தான் உள்ளெயே காலடி எடுத்துவைக்கும் பிரிவாக்கும்.:-))))

'காரியத்தில் கண் வைய்யடா தாண்டவக்கோனே'

said...

வாங்க ச்சின்ன அம்மிணி.

இப்ப என்னடான்னா ஜிகே வீட்டுக்கு உரிமையாளரா ஆயிட்டான். எங்களை எஸ் பி சி பி யிலே விடாம இருந்தாச் சரி:-))))

said...

துளசி

என்ன வீடு வா....ங்கு வா....ங்குன்னு (முறிச்செடுக்குது) போல்ருக்கே

said...

வாங்க செல்லி.

ரொம்ப நாளைக்கு ரொம்ப நாளு!
நல்லா இருக்கீங்களா?

முறிச்செடுக்காம இருக்குமா?

வாயைத் திறக்காமயெ வேலையை வாங்குறதுலே வீட்டை அடிச்சுக்க முடியுமா? :-))))

said...

ஓஹோ கப்பு ஸ்டோரியும் வருமே.
சரி சரி.
ஜிகேக்குத் தெரியாத ஆட்டமா:))

வீடு கட்டினதைவிட பொறுமையா எழுதி வச்சீங்க பாருங்க. அதுக்கே பெரிய கும்பிடு போடணும்.

said...

வாங்க வல்லி.

அதெல்லாம் நான் (அவ்வை)பாட்டிசொல்லைத் தட்டமாட்டேன்..

அதான் 'பொறுமை என்னும் நகை'யை எடுத்து அணிஞ்சவ, இன்னும் கழட்டலை:-)))

said...

hello mam,
was out of station for a week so didnot read the blog.
eppo orae adila 38to 42 poyachu...
blog eluthalam than....
erkanavae naan researchla concentrate panrathu illanu guide solrar.....
enga akkaVUKU mail panni unga bloga padika sonanen
seekaram print out edukanum .....
pinnadi uthuvumla.......


veedu pinnuthu.....


anbudun guna.k

said...

என்ன ஒரு விஸ்ரந்தியானாதூக்கம்
ஹ்ம். :)