Thursday, May 08, 2008

அடிக் கள்ளி ... முடிவுப்பகுதி

போனவகுப்பில் வராத மாணவ மணிகளுக்கு: முதல் பகுதி இங்கே:-)



கள்ளி கத்தாழை இதுகளில் என்ன வித்தியாசம் இருக்குது? இங்கே இந்தச் சொற்களை இப்படி எடுத்துக்கிட்டு இருக்கேன்.

கள்ளி = Cactus (பன்மை cacti .ஆனால் cactuses ன்னும் சொல்லலாமாம்)

கத்தாழை = succulents


எல்லாக் கள்ளியும் கத்தாழைதான். ஆனா எல்லாக் கத்தாழையும் கள்ளி இல்லை.


இந்த succulents என்றதுக்குப் பொருளே சதைப்பிடிப்பானது, தண்ணீரைத் தேக்கி வச்சுக்கும் குணமுடையதுன்றதுதான்.



பொதுப்படையாச் சொல்லிக்கலாமுன்னா கள்ளியில் முள்ளு இருக்கும். கத்தாழையில் சதை இருக்கும். (அதான் சோத்துக் கத்தாழைன்னு ஒண்ணு இருக்கே. விதிவிலக்குகள் எக்கச் சக்கம். (எந்தப்பக்கமும் போக விடமாட்டேங்குதே)



எல்லாக் கள்ளிகளும் அடிப்படியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்ததுதானாம்.

ஆனா இந்தக் கத்தாழைகள் அடிப்படையில் 12 குடும்பத்தைச் சேர்ந்துன்னு ஆரம்பிச்சு அதுலே இருந்து கிளை பிரிஞ்சு இப்பக் கணக்கில்லாமப் பெருகி இருக்கு. (சுருக்கமாச் சொன்னா சீனா & இந்தியாவைக் காப்பியடிச்சுருச்சு)



இங்கே நியூஸியில் கள்ளி(யிலும்) பால் வகைகளை நான் கண்ணுலேயே பார்க்கலை. நம்மூர்க்கே அதை வித்திச்சுருக்கு போல. அப்பத்தானே பெண் பிஞ்சுகளை ஒரேடியா அழிக்க முடியும்?(-:


நம்ம ஊர்லேதாங்க கள்ளி, ரயில் கத்தாழை, சோத்துக் கத்தாழை, சப்பாத்திக் கள்ளின்னு பேர்கள் இருக்கு. இங்கெல்லாம் இதெல்லாத்தையும் ரெண்டே வகையில் அடக்கிட்டாங்க.cacti & succulents.



கத்தாழைச் செடிகளில்கூட பலவிதம் இருக்கு. இதைப் பாருங்க புலி வேசம் போட்டுக்கிட்டு வரிவரியா இருக்கு.





இது என்னன்னா சதைப்பிடிப்பா முதுகிலும் பல் வச்சுருக்கு:-)

இது கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய் வகையோ?




நானானி கேட்டுக்கிட்டு இருந்த மாமியார் ஸ்டூல் இதுதான்:-) எங்கூர் பொட்டானிக்கல் கார்டன் காக்டெஸ் ஹவுஸில் எடுத்தது.

இதே ஸ்டூலின் சின்ன வகை நம்ம வீட்டில். பூ எவ்வளவு அழகு பாருங்க.


இன்னும் சில விதப் பூக்கள் பூக்கும் நம்மூட்டுக் கள்ளிகள் இவை.







நம்ம பழைய வீட்டில் ஒரு கள்ளிச்செடி இருக்கு. ஆளுயரமுன்னு சொல்ல முடியாது. அது ரெண்டரை மீட்டர் உயரத்துக்கு வளர்ந்து, கட்டிடத்தின் ஜன்னல் மேலே வரும் சாஃபிட்டை இடிச்சுக்கிட்டு மேலே போக இடமில்லாமல் வளைய ஆரம்பிச்சது.

இவ்வளோ பெருசா வளர்ந்துபோன கள்ளியை வேற இடத்துக்கு ( இப்ப இருக்கும் வீட்டுக்கு) மாத்திக்கலாமுன்னு நினைச்சேன். வெளியேதான் தோட்டத்தில் நடணும். குளிர் ஊரில் ட்ரான்ஸ்ப்ளாண்ட் ஷாக் ஆகிப்போச்சுன்னா?



நம்மூர் பொட்டானிக்கல் கார்டனில் ஒரு காக்டெஸ் ஹவுஸ் இருக்கு. பேசாம அவுங்களுக்குத் 'தானம்' செஞ்சுறலாமுன்னு ஒரு நாள் 'கார்டன் கிரவுண்ட் கோ ஆர்டினேட்டர்'க்கு ஒரு மடல் தட்டிவிட்டேன். அவர் அவரோட மேலதிகாரிக்கு அனுப்பிக் கேட்டுருக்கார்.



I think it may be more trouble than it is worth at that size. Politely decline the offer அப்படின்னு பதில் வந்துருக்கு. அந்த மடலையும் சேர்த்து ரொம்பப் பணிவா
எனக்கு அனுப்பிட்டாங்க. இப்படித் 'தானம் கொடுக்க நினைச்ச மாட்டைப் பல்லை(முள்ளை)ப்புடிச்சுப் பார்த்துட்டாங்களே'ன்னு கொஞ்சம் புலம்பிக்கிட்டு இருந்தேன்.




மேல்விதானத்தில் இடிக்குதே அதையாவது வெட்டிச் சரிபண்ணிரலாமுன்னு அந்த வீட்டுக்கு மராமத்து வேலைக்கு வந்துருந்த நம்ம கிச்சன் கிங்கிட்டே சொன்னேன். கண்ணுலே ஒரு மிரட்சி இருந்துச்சு. ரம்பம் வச்சு அதை அறுத்துறலாமுன்னு யோசனையும் சொன்னேன். மறுநாள் அந்தப் பக்கம் வேற வேலையாப் போறேன்.... 'கிங்'கின் வண்டி நிக்குது. என்ன நடக்குதுன்னு எட்டிப்பார்த்தா..... கட்டிட்டுவான்னா வெட்டிட்டு வர்ற ஆளுப்பா இந்த கிங்!!!!




பரபரன்னு கள்ளியை அறுத்துக்கிட்டு இருக்கார். எப்படி அந்த நேரத்துக்கு அங்கே போனேன்னு பிரமிப்புதான் எனக்கு. வெட்டுன துண்டுகளை எப்படியாவது என்னமாவது செஞ்சு முளைக்க வைக்கமுடியுமான்னு பரிசோதிச்சே ஆகணும் எனக்கு. வீட்டுக்குத் தூக்கிவந்தேன்.


நேராப் போய் விழுந்தது கூகுளார்கிட்டேதான். அறுத்த துண்டுகளை நாலுவாரம் கழிச்சு நட்டு வைக்கணுமாம். அப்பத்தான் அதுலே இருந்த தண்ணீர் எல்லாம் வற்றி முளைக்கும் ஆர்வம் வரலாமாம். நெசமாவா சொல்றாரு? (கூகுள்) ஆண்டவரே சொன்னாலும், அப்படிச் 'சட்'னு நம்பிருவேனா? அதான் ரெண்டு இருக்கே. ஒண்ணு இன்னிக்கு இன்னொண்ணு நாலு வாரம் கழிச்சு. செஞ்சுறலாம்





வளர இடமில்லாமல் தலைதட்டிப் பாவமா கிடக்கும் நம்ம வீட்டுப் பாம்பு.........


பொட்டானிகல் கார்டனில் வளர்ந்து போய்க்கிட்டே இருக்கும் பாம்புகள்.


நம்ம வீட்டுக்கு வந்தாச்சுல்லே.... இனி எல்லாம் சுகமே:-)


பூப்பதற்கு முன்னும் பின்னும்


கீழே உள்ள படம் கிறிஸ்மஸ் காக்டஸ். குளிர்காலத்தில் பூக்கும் பூ.





கள்ளியை முள்ளுன்னு தள்ளிவிடாம வகுப்புலே ஆர்வமாக் கலந்துக்கிட்டக் கண்மணிகளுக்கு நன்றி.


35 comments:

said...

படங்கள் நன்றாக இருக்கு.
ஆனா.... சின்னதாகவே இருக்கு, மறந்திட்டீங்களா?

said...

வாங்க குமார்.

போன முறை எப்படி நல்லா வந்துச்சு.இந்த முறை ஏன் பெருசு பண்ண முடியலை இப்படி ஒன்னுமே புரியலை(-:

என்னதான் செஞ்சு தொலைச்சேனோ?

said...

/////எல்லாக் கள்ளியும் கத்தாழைதான். ஆனா எல்லாக் கத்தாழையும் கள்ளி இல்லை. /////

ப்ளாக் எழுதுறவங்க எல்லாம் எழுத்தாளர்கள்தான்.ஆனா எழுதுறவங்க அத்தனை பேரும் ப்ளாக்கர்கள் இல்லை!

கரெக்டா டீச்சர்?

அப்பாடா! இன்னிக்கு அடிச்சுப் பிடிச்சு, கொத்தனாருக்கு முன்னாடியே வந்து வகுப்பில உட்கார்ந்திட்டேன். அவரு வந்தாருன்னா பாடத்தைக் கவனிக்க விட மாட்டாரு!

said...

வாவ்..மிக அருமை டீச்சர்.

கள்ளிப்பூக்கள் தான் எவ்வளவு அழகு...
பூக்கும் கள்ளிகள் எங்கள் வீட்டில் இல்லை.சப்பாத்திக் கள்ளியும் பூக்கும்.கண்டிருக்கிறீர்களா? அழகான சிவப்புப்பூக்கள் அவையும்.

உங்கள் கூரையில் முட்டுகிறது பாருங்கள் ஒரு கள்ளி.அது எங்கள் வீட்டு மதிலுக்கருகிலும் வளர்ந்தது.என்னை விடவும் உயர்ந்தது.5 வருஷம் நல்லாத்தான் இருந்தது.பிறகு பார்த்தால் ஒரு நாள் அடியிலிருந்து செத்துக்கொண்டு வந்தது.கறுப்பு நிறப் பெரிய எறும்புகள் அவற்றை சாப்பிடுகின்றன.காப்பாற்றவே முடியாமல் போய்விட்டது.

சிறு துண்டுகளை நட்டுப் பார்த்தேன்.முளைத்து விட்டது.

கள்ளிகள் வீட்டுக்கு ஆகாது என கிராமங்களில் சொல்வார்கள்.நீங்கள் கள்ளியிருக்கும் வீட்டில் குடியிருக்கிறீர்கள் டீச்சர். :)

அடுத்து என்ன வகுப்பு டீச்சர்?
என் பெயரை முதலிலேயே தந்துடறேன். :)

said...

படங்கள் எல்லாம் கலக்குது....அந்த பாம்பு படம்! ! !...ரொம்ப அழகாக இருக்கு..அப்படியே ஸ்டூலின் சின்ன வகையும் அழகு ;)

\\எல்லாக் கள்ளியும் கத்தாழைதான். ஆனா எல்லாக் கத்தாழையும் கள்ளி இல்லை. \\

டீச்சர்..அதிகம் சிம்பு படம் பார்க்காதிங்கன்னு சொன்னா கேட்க மாட்டிங்க போல!!! ;)))

said...

துளசி மேடம்! உங்க வீட்டு சிவப்பு கள்ளி சூப்பர். எல்லா படங்களும் அருமையா இருக்கு.

said...

கத்தாழக்கண்ணாலே குத்தாதே நீ என்னை....பாட்டு நீங்க எழுதினதுதானே? உண்மையச் சொல்லுங்க:-))

said...

//போனவகுப்பில் வராத மாணவ மணிகளுக்கு: முதல் பகுதி இங்கே:-)//

அப்போ வந்தவங்களுக்கு முதல் பகுதி வேற இடத்தில் இருக்கா?

said...

//கள்ளி = Cactus (பன்மை cacti .ஆனால் cactuses ன்னும் சொல்லலாமாம்)//

catuses அப்படின்னு கேட்டதே இல்லையே. cactii - உங்க ஸ்பெல்லிங் தப்பு! :))

எனக்கு தான் என்ற அகம்பாவம் இல்லை என்பதால் I போடவில்லை என்ற சால்ஜாப்பு எல்லாம் வேண்டாம்!

said...

//

நானானி கேட்டுக்கிட்டு இருந்த மாமியார் ஸ்டூல் இதுதான்:-) எங்கூர் பொட்டானிக்கல் கார்டன் காக்டெஸ் ஹவுஸில் எடுத்தது. //

ஆஹா. மாமியார் மேல எம்புட்டு பாசம்!!! நல்லா இருங்கம்மா.....

said...

//கள்ளியை முள்ளுன்னு தள்ளிவிடாம வகுப்புலே ஆர்வமாக் கலந்துக்கிட்டக் கண்மணிகளுக்கு நன்றி.//

இருக்கட்டும் இருக்கட்டும். கள்ளிகள் குத்தும், வலிக்கும் எனத் தெரிந்தாலும் அவைகளைப் பார்ப்பதில் எங்களுக்கு ஆர்வம் குறைவதே இல்லை! :))

said...

பார்த்தீங்களா?
நான் சொன்ன மாதிரியே ஆச்சு!
அடுத்தடுத்து நாலு கேள்வி கேட்டு
வகுப்பையே திசை திருப்பிட்டார் பார்த்தீங்களா டீச்சர்?

said...

மாமியார் ஸ்டூல் எங்க வீட்டிலேயும் இருக்கு.
அதோட மதர்-இந்லா'ஸ் டங் வேற இருக்கு. கொடுவாள் போல இருக்கும்:)

படம் எல்லாம் சூப்பர். என்ன கலர்ப்பா. அந்த பெரிய செடி...மரம் இந்த வீட்டுக்கு வந்துடும்னு நினைச்சேன்.

said...

வாங்க வாத்தியார் ஐயா.

வகுப்புக்குள்ளே வரலையே தவிர மெயில்பாக்ஸ் பக்கம் நோட்டமெல்லாம் இருக்கு போல.


நான் கவனிக்கறதுக்குள்ளே
தடதடன்னு பின்னூட்ட மழை பொழிஞ்சுட்டார்.

வகுப்புத்தலைவன் பதவின்னாச் சும்மாவா? :-)))

said...

வாங்க ரிஷான்.

கட்டெறும்பு தின்னுச்சா?

அப்ப கள்ளியின் உள்ளே இனிப்பா இருக்குமோ?
நம்மூர்லே எறும்பு வகைகள் கிடையாது. வேற எதாவது வண்டுகள் வந்தால்தான் உண்டு.

கள்ளி வீட்டுக்காகாது. வெட்டிப்போட்டுருங்கன்னு இங்கெயும் ஒருத்தர் சொன்னார். இந்தக் கள்ளிக்காகத்தான் வீட்டை வாங்குனேன்னு சொன்னதும் கப்சுப்:-)))

துண்டுகள் நட்டால் முளைக்குதா? அப்பாடா.... இப்பத்தான் மனசுக்கு ஆறுதலா இருக்கு.

நன்றிப்பா.

said...

வாங்க கோபி.

எங்கேப்பா அதிகம் பார்த்தேன்.

'காளை'யே ஒரு ரெண்டுமூணு வருசம் தாங்காது? :-)))

said...

வாங்க பிரேம்ஜி.

படங்கள் எல்லாம் குண்டுசட்டிக்குள்ளேக் குதிரை ஓட்டுறதுதான்:-)))

said...

வாங்க தங்ஸ்.

பாட்டெல்லாம் எழுதும் அளவுக்கு போயிட்டேனா?

அட! தெரியாமப்போச்சே:-)))

said...

வாங்க கொத்ஸ்.

வகுப்புலே கண் இருக்குன்னு வாத்தியார் ஐயாவுக்குச் சொல்லிட்டீங்களா?

வந்தவுங்களுக்கு இந்த ரெண்டாவது பகுதிதான்.
ரெண்டு வாழ(ழை)ப்பழம் மாதிரி:-)

'ஐ'யை வேணுமுன்னா வச்சுக்கலாம், வேணாமுன்னா வுட்டுரலாம். நான் (என்ற அகம்பாவத்தை)விட்டுட்டேன். நீங்க?


அமாம். நாங்க தங்குகளின் மாமியாரைப் பத்திச் சொல்றொம். உங்க ரங்குகளின் மாமியைப் பத்தி இல்லை. அதுக்கு ஏன் இம்புட்டுக் கோவம்?

said...

வாத்தியார் ஐயா,

அவருக்கு ஆர்வம் குறைவதே இல்லையாம்:-)))

said...

வாங்க வல்லி.

இங்கேயும் மாமியார் நாக்கு இருக்குப்பா:-)))))

முழுசா இல்லேன்னாலும் ரெண்டு துண்டு வந்துருக்கு இங்கே. முளைச்சு வந்தாப் போதும். (மனசு எல்லாம் பொன் செய்யும் மருந்து)

Anonymous said...

//ஆஹா. மாமியார் மேல எம்புட்டு பாசம்!!! நல்லா இருங்கம்மா.....
\\ என்னது, இந்த ஸ்டூல் மேல தான் மாமியார் உக்காறணுமா???? அடப்பாவமே, அந்தக்கள்ளி - அட அந்தச்செடிய நெனச்சா பாவமா இருக்கு.

said...

//இது கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய் வகையோ?
//

ஹஹா மிகவும் ரசித்தேன். :))

said...

kuzhandhaikalai kuuppittu kaattineen thulasi
avangkallu poo vandha cactus, paampu mathiri vandhadu, suvathula mutti idamillama valanjathau ithu 3 num romba pidichudham


veroru manaveli pinnuutathil,

en thozhikalum idhil irukkirarkal endru ezhuthi ennai thozhiyaaga etru kondatharku nandri tulasi

said...

படமெல்லாம் நல்லா இருக்கு.

said...

அற்புதமாக இருந்தன உங்கள் புகைப்படங்கள். அவற்றை பேணி வளர்ப்பது ஆனந்தம். இவற்றில் ஒரு சிலவற்றை நானும் வீட்டில் வைத்திருந்தேன். மிகுதி எல்லாம் எனக்குப் புதிது. ரசித்தேன்.

said...

போட்டோ மட்டுமல்ல.. விவரித்த விதமும் சூப்பருங்க அக்கா:)

said...

அம்பி,

இதுக்கு வெறும் நன்றி மட்டும்தான். நோ கேசரி:-)

said...

வாங்க மாதங்கி.

பாம்பை இந்த மாதிரிப் பார்த்தால் உண்டு. இங்கே இந்த நாட்டில் பாம்பு கிடையாது.

இன்னும் சொன்னால் தேள் கூட இல்லை.

நோ எருமை ஆல்ஸோ:-)

said...

வாங்க சாமான்யன் சிவா.

வருகைக்கு நன்றி.

said...

வாங்க டாக்டர்.

பேஷிண்டைப் பார்க்கும் இடையிலும் பேஷிண்டா வந்து பதிவைப்பார்த்துப் பதில் அளித்ததுக்கு நன்றி.

இங்கே இன்னும் ஏராளமான வகை இருக்கு.

ஞாயித்துக்கிழமைச் சந்தைக்குப் போனால் ஒன்று அல்லது ரெண்டு டாலருக்கு பேபியாச் சின்னது கிடைக்கும். வாங்கிவந்துருவோம்.

அப்புறம் எல்லாம் நம்ம வளர்ப்புதான்:-))

said...

வாங்க ரசிகன்.

பேருக்கேத்த ரசிப்புத்தன்மை.

அதுக்கொரு சபாஷ்.

said...

வாங்க சின்ன அம்மிணி.

இப்பவே ஏன் கவலைப்படறிங்க?

நீங்க மாமியாராக ஆக இன்னும் ரொம்ப வருசமிருக்கு:-)))

said...

ரெண்டு கள்ளிப் பதிவும் படிச்சேன்.துளசி மேடம் பதிவுல இருக்குற மேட்டர் சூப்பரா..இல்லை எழுதுற நடையழகு சூப்பரான்னு பட்டி மன்றமே வைக்கலாம் போலருக்கு..

said...

வாங்க பாசமலர்.

நம்ம மேலே இருக்கும் ஒரு பாசத்தால் கொஞ்சம் அதிகமாகவேச் சொல்லிட்டீங்க:-)))))

இங்கே நடையில் நம்மை மிஞ்சும் ஆட்கள் நிறைய இருக்காங்க!!!

இன்னிக்குத்தான் வளைஞ்ச கள்ளீயை நட்டு வச்சேன். நாலு வாரம் காயப்போடுன்னா நான் அஞ்சு வாரம் ஆக்கிட்டேன்.பாவம் அது.