Thursday, May 15, 2008

இன்னிக்கு ரொம்பவே பணக்காரி ஆகிட்டேனாமே......

இன்னிக்கு ரொம்பவே பணக்காரி ஆகிட்டேனாமே......
அடிச்சது லாட்டரி:-))

மொதல்லே ஒரு பவுண்டுக்கு எத்தனை ரூபாய்ன்னு பார்க்கணும். கொஞ்சம் இருங்கப்பு.


http://www.xe.com/ போய்ப் பார்க்கலாம் வாங்களேன் கூடவே.
1GBP = INR 82.6530

பரவாயில்லையே நல்ல ரேட்தான் போல.


இப்ப எல்லாரும் கால்குலேட்டர் கையிலே எடுத்துக்குங்க. இன்னிக்கு நம்ம வகுப்புலே கணக்கு. கணக்குதான்.


500 தவுஸண்ட் பவுண்டுக்கு எவ்வளோ வருதுன்னு பார்த்துச் சொல்லுங்க.
நானும் அதுக்குள்ளே என்ஸ்ச்சேஞ்சுலே போய்க் கேட்டுட்டு வரேன்.

5,000,00.00 GBP
=
413,150,71.96 INR
United Kingdom Pounds India Rupees 1 GBP = 82.6301 INR 1 INR = 0.0121021 GBP

அந்த 96 பைசா வேணாம் போனாப் போகட்டும்!

வெறும் நாலு கோடிச் சொச்சம்தானா?


யாஹூ & மைக்ரோசாஃப்ட்லே இருந்து மடலில் வந்து காசு கொடுக்கறாங்கப்பா.


கீழே இருக்கு பாருங்க, இதுதான்.

பார்க்கவும் படிக்கவும் இன்னொசெண்ட்டா இருக்குல்லே.



-- Yahoo / Microsoft Incorporation.
Baley House,
Har Road,
Sutton,
Greater London SM1 4te,
United Kingdom.



Dear Sir/Madam.This is to inform you that you have won a prize money of Five hundredthousand,Great Britain Pound Sterlings(£500,000.00)for the month ofMAY 2008 Lottery promotion, which is organized by YAHOO/MICROSOFTLOTTERY INC & WINDOWS LIVE.YAHOO/MSN & MICROSOFT WINDOWS,collects all the email addresses of thepeople that are active online,among the millions that subscribed toYahoo and Hotmail we only select five people every Month as ourwinners through electronic balloting System without the winnerapplying,we congratulate you for being one of the people selected.


You are to contact the events manager on or before your date of Claim,Winners Shall be paid in accordance with his/her SettlementCentre.


These are your identification numbers:

Batch number.....................YM 09102XN


Reff number.......................YM35447XN


Winning number...................YM09788



These numbers fall within your Location file, you are requested tocontact the events manager,send your winning identification numbers tohim,to enable him verify your claims.How ever you will have to filland submit this form to the events manager for verification & directionon how you can claim your winning fund.


1. Full name..............


2. Contact Address........

3. Age....................

4. Telephone Number.......

5. Marital Status.........

6. Sex....................

7. Zip Code...............

8. Occupation.............

9. Company................

10.State:.................

11.Country................

12.Nationality............

Reference and Batch number:(CONTACT EVENTS MANAGER)


Name: Mr.Melvin JohnE-mail: melvin.john007@live.com

Tele Number: +44 70457 54964


Thank you and Accept my hearty congratulations once again!

Yours faithfully,

Mrs.Gloria Bent(Yahoo/Msn Lottery Games/Lottery Coordinator).--


Saunalahti Ykkönen: Puhelut kaikkiin liittymiin 0,069 e/min ja nyt kaupan päälle Sisärengas-puhelut ja tekstarit viiteen valitsemaasi liittymään 0 e!http://saunalahti.fi



மனுசனைச் சும்மா இருக்கவிட்டாலும்.....................

47 comments:

said...

துளசி மேடம்! நல்ல காமெடி போங்க.

said...

மாசத்துக்கு ஒரு மெயில் வருதுப்பா. உங்களுக்குமா::)
முன்னெல்லாம் ஆசையா
க்ளிக் செய்து பார்ப்பேன்.

அப்புறம் ஏதாவது வைரஸ் வந்து விடப் போகிறதேஎ என்று து.கா.து.கானு டெலிட் செய்யறேன்.

நல்லா வருது நமக்கு.
என்னதான் செய்யலாம் இவங்களை:(

said...

துளசி அம்மா,

திருப்பதி பாலாஜி கடிதம் எதும் 50 பிரதி எடுத்து யாருக்கும் அனுப்புனிங்களா ?
நல்லா பாருங்க ஒரிஜினல் லெட்டராக இருக்கும். பரிசு கிடைத்தாலும் கிடைக்கலாம்.
:)

அதிர்ஷ்டம் இப்பெல்லாம் இமெயில் ஜங்க் பாக்ஸுக்குள்ளே கொட்டுது !

said...

////இப்ப எல்லாரும் கால்குலேட்டர் கையிலே எடுத்துக்குங்க. இன்னிக்கு நம்ம வகுப்புலே கணக்கு. கணக்குதான்.///

டீச்சர் கால்குலேட்டரோட உட்கார்ந்திருக்கேனே --- வகுப்பு எப்போ?
நாளைக்கா?

இந்த அவுன்ஸ், பவுண்டு கணக்கெல்லாம் எனக்கு சுத்தமா புரியாது!

நம்மூர் அரை,முக்கால், மாகானிக் கணக்கெல்லாம் இல்லையா?
எங்க ஊர்லயெல்லாம் மனப்பாடமாவே சொல்லுவாங்க!
கால்குலேட்டர் எல்லாம் வேண்டாம்!

said...

எல்லோருக்கும் இது போன்று மின்னஞ்சல்கள் வருகின்றன. இது போன்ற ஒரு பழைய பதிவு

said...

வாங்க பிரேம்ஜி.

தினசரிப் புத்துணர்வுக்கு டானிக் இது:-)

said...

வல்லி.

மூட்டை கட்டும்வேலை தொடங்கியாச்சா?

ரகம்ரகமாக் காசு வருதுப்பா. எங்கே கொண்டு வச்சுக்கலாமுன்னு யோசிக்கிறேன்:-))))

said...

ஹா ஹா ஹா.

நம்ம பதிவுகளுக்கு காமெண்ட் கூட "Please click here" என்று மட்டும் வருகிறது. இன்னும் கொஞ்ச நாளில் அதிலும் அதிர்ஷ்டம் வந்து கொட்டலாம் :)))

said...

ரீச்சர், பணமா வந்தா மட்டும் ஒரு 10% கிளாஸ் லீடர் நல நிதிக்காக என் பெயரில் ஒரு செக் குடுத்துடுங்க.

said...

வாங்க கோவியார்.

இந்த பிரதிகள் அனுப்பும் வேலை செய்யறதே இல்லை. இந்தச் சங்கிலிகளை அறுத்த புண்ணியம் எனக்குதான். அதான் காசா வருது:-))))

ஜங்க் திறக்கவே மாட்டேன். நேரடியா எம்ப்டி தான். என்னென்ன நிசமான நல்ல மெயில்கள் அதுலே போயிருச்சோ...... போகட்டும்.

said...

ரீச்சர், இது எல்லாம் கொஞ்சம் ஓவரு

நான் பதிவு போட்டு மூனு மாசம் கூட ஆவலை அதுக்குள்ள மீள்பதிவா? உண்மையாவே இன்னிக்கு டாலர் விலை கூடி இருக்கு, (1 USடாலர்=42.1) அதனால நிறைய பணம் இந்தியாவுக்கு மாறிட்டு இருக்கு., அதைத்தான் சொல்ல வந்தீங்களோன்னு நினைச்சுட்டேன். மொக்கையோ மொக்கை

said...

வாங்க வாத்தியார் ஐயா.

தப்புதான். இந்த பிசாத்து 500 ஆயிரத்துக்குக் கால்குலேட்டர் வேற வேணுமா என்ன?

ஆனா 82.63லே பெருக்கக் கஷ்டமாப் போச்சு:-))))

பழைய வாய்ப்பாடுகளைப் பற்றி ஒரு பதிவு போடணும். இப்போதையத் தலைமுறைக்கு மாகாணி, வீசம் எல்லாம் தெரியாதுல்லே?

said...

வாங்க மனிதன்.

நானும் முன்னே ஒரு பதிவு போட்டுருக்கேந்தான்.

இப்பெல்லாம் யாஹூ, மைக்ரோசாஃப்ட் ன்னு நம்பகமான பேருலேயே வர ஆரம்பிச்சுட்டாங்க.

ஆப்பிரிக்கா பேங்க் எல்லாம் போயே போச்:-))))

said...

வாங்க இளா.

எனக்கு மட்டும் ஆசை இருக்காதா மொக்கை ஒன்னு போடணுமுன்னு:-)

ஆனா உங்க அதிர்ஷ்டம் நமக்கில்லை.

நீங்க மில்லியனர்.

எனக்கு வெறும் அரை மில்லியந்தான்(-:

said...

வாங்க சதங்கா.

இன்னிக்குப் பொழுது விடிஞ்சதுமே தெரிஞ்சுபோச்சு எனக்கு.

அதான் தினசரிக் காலண்டர்லே நம்ம ராசிக்கு 'வரவு' ன்னு போட்டுருந்துச்சே:-)))))))))

said...

வாங்க கொத்ஸ்.

அதென்ன லீடர் நல நிதி?

காசு வந்தவுடனே வகுப்புலே எல்லாருக்கும் தனித்தனியாப் புது லேப்டாப் & ஹைஸ்பீடு ப்ராட்பேண்ட் அன்லிமிட்டட் இன்னும் சாப்பாட்டுக்குன்னு ஸ்பெஷலா ஒரு அடுக்களை எல்லாம் வச்சுறலாம்.

தினம் சமைக்கிறதைப் படமெடுத்துப் பதிவு போடவும் வசதி ஆச்சு:-))))

said...

என்னங்க துளசி,எனக்குத் தெரிந்து ஒரு 7 வருடமா இந்த மாதிரி மடல்கள் வந்துகிட்டு இருக்கு...

மேடம்,ரொம்ம்ம்மம்ம்மம்ப லேட்.

said...

வாங்க அறிவன்.

லேட்டூங்கறீங்க?

பில்கேட்ஸ் அனுப்புறாரேன்னுதான் இங்கே போட்டேன்:-)

இமெயில் போததுன்னு உண்மையான மெயிலில்கூட நிறையவந்து, ஸ்டாம்ப் ஒட்டியே களைச்சுப்போய் விட்டுட்டாங்க இப்ப:-)

said...

டீச்சர்..

எனக்கும் இது மாதிரி வாரத்துக்கு ஒண்ணு வந்துக்கிட்டே இருக்கு.. நான் கூட நியூஸிலாந்துல இருந்து பொழுது போகாத ஒரு அம்மாதான் இதனை அல்லாருக்கும் அனுப்பி சூடாக்குறாங்கன்னு அப்பவே நினைச்சேன்.

அது நீங்கதானா..?

ஒருவாட்டி நானும் ச்சும்மா பேச்சுக்கு அல்லாத்தையும் fillup செஞ்சு அனுப்பி வைச்சேன்.. தொடர்ந்து மெயில், மேல மெயில் அனுப்பிக்கிட்டேயிருந்தான் அது வேணும்.. இது வேணும்னு..

எல்லாம் முடிஞ்சப்புறம் கடைசியா எங்கூர் மதிப்புல 45000 ரூபாய் பணம் கட்டணும்னு மேட்டரை உட்டான்.. நானும் உட்டேன் எஸ்கேப்..

said...

<==
கோவி.கண்ணன் said...
துளசி அம்மா,

திருப்பதி பாலாஜி கடிதம் எதும் 50 பிரதி எடுத்து யாருக்கும் அனுப்புனிங்களா ?
நல்லா பாருங்க ஒரிஜினல் லெட்டராக இருக்கும். பரிசு கிடைத்தாலும் கிடைக்கலாம்.
:)

அதிர்ஷ்டம் இப்பெல்லாம் இமெயில் ஜங்க் பாக்ஸுக்குள்ளே கொட்டுது !
==>
இந்த கமெண்ட் சூப்பர்.

said...

காசு வந்தவுடனே வகுப்புலே எல்லாருக்கும் தனித்தனியாப் புது லேப்டாப் & ஹைஸ்பீடு ப்ராட்பேண்ட் அன்லிமிட்டட் இன்னும் சாப்பாட்டுக்குன்னு ஸ்பெஷலா ஒரு அடுக்களை எல்லாம் வச்சுறலாம்.//

யாரு சமையல். கொத்ஸ் தானா.:))

6 மணி நேரம் வகுப்பில், நாலு மணி நேரம் சாப்பாடு. ரெண்டு மணி நேரம் தூக்கம். சரியா.

மூட்டை கட்டிக்கிட்டேதான் இருக்கேன் பாஸ்போர்ட் நாளைதான் கைக்கு வரணும் சாமி கடவுளே காப்பாத்து.

said...

இப்படி தான் நைஜீரியாகாரன் டீல் பேசிகிட்டு இருக்கான் தினமும் ஒரு மெயில்.
ஒரு பிளாக் ஆரம்பிச்சு நாம எவ்ளோ பெரிய ஆளாயிட்டோம் பாருங்க. :p

said...

//பணமா வந்தா மட்டும் ஒரு 10% கிளாஸ் லீடர் நல நிதிக்காக என் பெயரில் ஒரு செக் குடுத்துடுங்க.
//

@koths, உரலை நக்கினானாம் ஒருத்தன், அவன் உதட்டை நக்கினானாம் இன்னோருத்தன். இதுவும் நம்மூர் வழக்கு தாண்ணே! :))

Anonymous said...

இந்த ஈ மெயிலுக்கு ஏமாந்து போனவங்க இருக்காங்க. டீவி ல கூட காட்டினாங்க. நல்ல காமெடியாத்தான் இருக்கு. எப்படித்தான் நம்பறாங்களோ

said...

அடாடா..மாட்டிக்கிட்டீங்களா டீச்சர்? :(

said...

வணக்கம் டீச்சர்,

லாட்டரிச் சீட்டு வாங்கமலே வெற்றியா? வாழ்த்துகள் டீச்சர். :) :)

எனக்கும் நீங்கள் சொன்ன மாதிரி ஸ்டாம்ப் ஒட்டி, நல்ல குவாலிட்டி பேப்பரில், இங்கே உள்ள பிரபல லாட்டரி நிறுவனத்தின் வாட்டர் மார்க்குடன், ஒரு கடிதம் வந்தது.

பக்கா ஸ்டாம்ப், ஒரு 20 நிமிஷம் அந்த டாக்குமெண்டைப் புரட்டிப் புரட்டிப் பார்த்தேன்.தப்பே சொல்ல முடியாது.அவ்ளோ பக்கா.

அப்புறம்,கூகுள்லில் தேடிய போது, 'Remember one thing.You can never win a lottery if you haven't bought one' என்று தெளிவாய் ஆரம்பித்து, இது எல்லாம் நம்மிடம் காசு பிடுங்கும் சித்து வேலை என்று தெரிந்தது.

இப்பொழுது இது மாதிரி Job offers கூட வருதாம்.தங்கள் resume வலை டேட்டாபேசில் கிடைத்தது,உங்களுக்கான appointment order இது.20 நாளில் UK வந்து பணியில் சேரவும்ன்னு, இந்தியர்களுக்கு மின்னஞ்சல் செல்கிறதாம்.

said...

நானும் ஏதோ உண்மையென்று நினைத்தேன். அட! இப்படிப் போகுதா கதை... கணநேர சந்தோசங் கொடுக்கிறார்களாக்கும்:)

said...

துள்சி!
நீங்க சொன்ன தொகைக்கு எத்தனை டிஜிட்ன்னு கூடத் தெரியாது. நானும் இதுபோல் லேப்டாப், ப்ளைட் டிக்கெட்,
லாட்டரி எல்லாம் மெயிலில் பாத்து ஆஹா!என்றிருக்கிறேன். தெரியாத மெயிலையெல்லாம் திறக்காதே!!என்று பிள்ளைகள் எச்சரித்தார்கள்.அதிலிருந்து
கப்சிப்!

said...

இதே போன்ற ஒரு மடல் போன முறை வேலையில்லாமல் சென்னையில் இருந்த போது எனக்கும் வந்தது, பொழுது போகாமல் அதற்க்கு பதிலெழுத! பதில் மேல் பதில் வந்தது! (நல்ல வேளை தில்லி போலிசின் ஒரு எச்சரிக்கை விளம்பரத்தை படித்திருந்தேன்.) கொஞ்சம் பதில் சொல்லித்தான் பாருங்களேன்! என்னென்ன வார்த்தைகளை சொல்லி உங்களிடம் பணம் கேட்பர் என்று தெரிந்துகொள்ளலாம்.(ரூ.5000 - 5 லட்சம் வரை கேட்பர்!, என்னிடம் கேட்டது ரூ.3,25,300) மிக்க நன்றி அதை ஏதாவது அனாதை ஆசிரமத்திற்க்கு கொடுத்து விடும்படி சொல்லி நழுவிவிட்டேன்.

said...

//இன்னிக்கு ரொம்பவே பணக்காரி ஆகிட்டேனாமே......

இன்னிக்கு ரொம்பவே பணக்காரி ஆகிட்டேனாமே......
அடிச்சது லாட்டரி:-))

மொதல்லே ஒரு பவுண்டுக்கு எத்தனை ரூபாய்ன்னு பார்க்கணும். கொஞ்சம் இருங்கப்பு.//

ஹா..ஹா..:)))))

said...

வாங்க உண்மைத்தமிழன்.

சொன்னதெல்லாம் கரீட்டு ஒன்னைத்தவிர.

//நியூஸிலாந்துல இருந்து பொழுது போகாத ஒரு அம்மாதான்....//

இந்தியப் பெண்கள் செஞ்ச பாக்கியம் நாங்க செய்யலையேன்னு குமுறிக்கிட்டு இருக்கேன்.

நம்ம ரிச்மண்ட் தமிழ்ச்சங்கம் நேத்து போட்ட ஒரு கதையைப் படிச்சீங்களா?

மெசினா...... இருக்குன்னாலும்...அதை ஓட்ட ஒரு ஆள் வேணாமா?

said...

வாங்க சாமான்யன்,

இந்தப் பகுதிக்கான பரிசு கோவிக்கு:-))))

said...

வாங்க வல்லி.

கொத்ஸ் சமையல்ன்னா கொலஸ்ட்ரால் இருக்காது:-))))

கடவுள் காப்பாத்திட்டாராம். சொன்னார்:-)

said...

வாங்க அம்பி.

இப்பெல்லாம் நைஜீரியாக்காரன் வர்றதில்லை:-)

பழமொழி சூப்பர். நம்மகிட்டே இருக்கும் பழமொழிகள் புத்தகத்துலே இது இருக்கான்னு பார்க்கணும்:-)

said...

வாங்க சின்ன அம்மிணி.

நம்ம Fair go விலும் எத்தனை ஏமாத்து வந்துகிட்டு இருக்க்கு பார்த்தீங்களா?


வகைவகையா ஏமாத்துறாங்கப்பா(-:

said...

வாங்க ரிஷான்.

அப்பப்ப வர்றதைக் கழிச்சுக்கட்டும் பழக்கம்தான். ஆனாலும் இந்த முறை கொஞ்சம் ஓவர்.

ஒரு எச்சரிக்கையாத்தான் இதைப் போட்டுருக்கேன்.

said...

வாங்க புதுவண்டு.

இதைச் செய்ய ஆகும் செலவு & நேரத்தையெல்லாம் பயனுள்ளதாச் செலவு செய்யறாங்களோ? :-)))))

said...

வாங்க தமிழ்நதி.

நலமா?

உண்மைன்னு நினைச்சுட்டீங்களா?

அப்படி வந்துட்டா..... அமுக்கமா இருக்கமாட்டேனா? :-))))

said...

வாங்க நானானி.

நம்ம இண்டர்நெட் ப்ரொவைடர் xtra. இதை இப்ப yahoo வாங்கிக்கூட்டு வச்சுருக்கு.

இவுங்களே அனுப்புவதுபோல என்ன சூழ்ச்சி பாருங்க!!!!!

இப்பெல்லாம் ஜங்க் மெயிலே என் பெயரில் நானே அனுப்புனதா எனக்கே வருது.

said...

வாங்க சிவமுருகன்.

ஏமாத்தும் கூட்டம் அசர மாட்டாங்கபோல!

நம்ம ஃபிஸிகல் அட்ரெஸ் எல்லாம் இவுங்களுக்கு அத்துபடி.

அப்புறம் என்ன ப்ரைவஸி ஆக்ட்?

said...

வாங்க ரசிகன்.

ரசித்தீரா? :-))))))

said...

;)))

said...

வாங்க கோபி.

பாருங்க நம்ம பொழப்பை....
சிரிப்பாச் சிரிக்குது.

எனக்கு அனுப்பினா ஒன்னும் வேலைக்காகலைன்னு இன்னிக்கு
ஸ்டாம்ப் எல்லாம் ஒட்டுன கவர் ஸ்பெயின் மேட்ரிட்லே இருந்து கோபாலுக்கு வந்துருக்கு.

815 ஆயிரத்துச் சொச்சம் யூரோவாம்:-)))

said...

டீச்சர்...இது போல டீச்சருக்கே ஏமாத்து மெயில் அனுப்பறவங்களை எல்லாம் உங்க பிரம்பு ஒன்னும் செய்யாதே!
பாவம் அப்பாவி வகுப்பு லீடர் கொத்ஸை மட்டும் தான் அது பதம் பாக்கும் போல! :-)

said...

இந்த மாதிரி மெயில் ஒன்னு வந்துச்சு. படிச்சிட்டு இப்பிடி ரிப்ளை பண்ணேன்.

ஏய்யா இவ்ளோ பெரிய கம்பெரி பரிசுன்னு சொல்ற... ஆனா ஒன்னோட ஈ மெயில் ஐடீல அந்தக் கம்பெனியோட டொமைனே இல்லையேன்னு.

ரெண்டு நாளு கழிச்சி அதுக்கு ரிப்ளை... டொமைன் பேர லேசா தட்டிச் செதுக்கி (yahooo) அதுல இருந்து மெயில் அனுப்பீருந்தாங்க. செம காமெடி. கண்டுக்காம விட்டுட்டேன்.

ஆமா நாலு கோடி வைக்கிறதுக்கு அந்த அரமணைய வாங்கீருக்கலாம். :( விட்டுட்டீங்களே!

said...

வாங்க கே ஆர் எஸ்.

கொத்ஸ் நம்ம க்ளாஸ் லீடர் இல்லையா?

அதான் நல்லதும் கெட்டதும் அவருக்கேன்னு போயிருது:-))))

said...

வாங்க ராகவன்.

அரமனைதான் கை விட்டுப்போயிருச்சே......

அதைப் பராமரிக்க நாலுகோடி எல்லாம் எந்த மூலைக்கு?

நல்லாத்தான் கேட்டீங்க 'மொய்' எழுதச் சொன்னவரை:-)))))