Friday, July 25, 2008

கல்யாண வீட்டு விஷயங்கள்: நான்காம் நாள்.

இன்று முதல் கல்யாண வீட்டு நிகழ்ச்சிகள் சூடு பிடிக்க ஆரம்பிச்சது. நாலைஞ்சுவிதமான சம்பிரதாய வகைகள். இதுக்கப்புறம் அது, அதுக்கப்புறம் இன்னொண்ணுன்னு வரிசை கட்டியிருந்துச்சு.


இன்னிக்குக் காலையில் கணபதி பூஜை. சரியா எட்டரை மணிக்கே ஆரம்பிச்சது. பண்டிட் சரியான நேரத்துக்கு வந்து ஆரம்பிச்சுட்டார். மணைப்பலகையின் மீது சிகப்புப் பட்டுத் துணி விரிச்சு அதுலே ஒரு கிண்ணம் கோதுமையைச் சுத்திவரப் பரத்தினார். மூலைகள் சந்திக்கும் பகுதியிலேக் கோதுமையைக் கொஞ்சம் உள்ளெ தள்ளியதும் அழகான கரைபோட்ட டிசைனா ஆனது. இன்னொரு கிண்ணம் கோதுமை நடுவுலே குவிச்சு அதையே கணபதி உருவமாச் செஞ்சார். எல்லாத்துக்கும் நமக்கு அரிசின்னா இவுங்களுக்குக் கோதுமை:-)

அரிசியும் இருந்துச்சு ஒரு சின்னக் கிண்ணத்தில். பக்கத்திலே சிகப்புக் குங்குமம் கொஞ்சமாத் தண்ணீரில் கரைச்சு வச்சுருந்தாங்க. கிழக்குப் பார்த்தச் சுவத்துலே 'வரனும் கன்யாவும் சுகமா இருக்கட்டும்'னு குஜராத்தியில் எழுதுன பட்டுத் துணி. அதுலேயும் நடுவில் ஒரு புள்ளையார். எதிராப் போட்ட இன்னொரு மணை மாப்பிள்ளைக்கு. அவர் வந்து உக்கார்ந்ததும் குழைச்சக் குங்குமத்தைத் தொட்டு நெற்றியில் தீற்றி அதுக்கு மேலே ஒரு சிட்டிகை அரிசியை ஒட்ட வைக்கிறாங்க. கழுத்தில் ஒரு பூ மாலை.

பூ மாலைகள் விற்கும் வியாபாரம் இந்த நாட்டில் இல்லாததால், விசேஷங்களுக்கு இப்படி வீட்டுலே பூக்கும் ஒத்தை நந்தியாவட்டைப் பூக்களைத் தொடுத்து இடையிடையே ரோஜா, பச்சை இலைகள் சிலன்னு வச்சுக்கறாங்க. சும்மா இருக்கும் பெண்களுக்குப் பூமாலைகள் தயாராக்கி ஃப்ரிட்ஜில் வைப்பதுதான் ஒரு வேலை. (துல்சி பென் ஃபோட்டோ கிராஃபரா வேலை பார்த்துக்கிட்டு இருந்தாங்க. கோபால் பாய் ஆஃபீஸுக்கு அட்வைஸ் பண்ணப் போயிட்டார்)

வழக்கமான கணபதி பூஜைதான். சமஸ்கிரத மந்திரம். தீபாராதனை ஆனதும் எல்லாருக்கும் லாப்ஸியில் ( உடைஞ்ச கோதுமை) செஞ்சப் பிரஸாதம். சக்கரைப்பொங்கல் போல இருந்துச்சு. கடைசியில் கலசத்தில் இருக்கும் தேங்காய் வெற்றிலைபாக்கு பூ எல்லாத்தையும் மாப்பிள்ளையின் அம்மாவின் முந்தானையில் வாங்கினாங்க. சம்கிப் புடவையில் கவனமா ஒரு பெரிய கைகுட்டையை முந்தானையில்வச்சு அதுக்குள்ளே வாங்கினாங்க. அதைஅப்புறம் தனியா ஒரு மூட்டையாக் கட்டிவைச்சாங்க. ஒரு மணி நேரத்தில் பூஜை முடிஞ்சது. பண்டிட் கிளம்பிப்போனதும் இன்னும் சில சாஸ்த்திரங்கள். அலங்காரமா இருந்த (செயற்கைத்) தேங்காயை மாப்பிள்ளை கையில் கொடுத்துட்டு, ரெண்டு கோலாட்டக் குச்சி மாதிரி இருந்ததை கால் கை, தோள், தலைன்னு வச்சு எடுத்தாங்க.

'காப்டன்' மாமி (மனி பென்)தான் (இவுகளைப்பத்தி அப்புறம் சொல்றேன்)இதுக்கெல்லாம் பாட்டு ஆரம்பிக்கறது. கோரஸா எல்லாரும் சேர்ந்து பாடுனாங்க. இது எல்லாத்துக்கும் என்ன பொருள்ன்னு அப்பப்பக் கேட்டுக்கிட்டே இருந்தேன். எல்லாக் கேள்விகளுக்கும் ஒரே பதில்தான். "தெரியாது". முன்னோர்கள் இப்படிச் செய்வாங்க அதையே கடைப்பிடிக்கிறோம். அர்த்தம் தான் தெரியலையே தவிர எல்லோருக்கும் அபாரா ஞாபக சக்தி. ஒன்னு விடாம அனுசரிக்கிறாங்க:-))))


அடுத்த நிகழ்ச்சி ஹல்தி பூசுவது. நம்ம பக்கத்து நலங்கு மாதிரி தண்ணீரில் குழைச்ச மஞ்சள் பொடியை மாப்பிள்ளையின் முகம் கை கால்களில் பூசும் நிகழ்ச்சி. தாய் ஆரம்பிச்சுவச்சாங்க. அடுத்து ரெண்டு அக்காக்கள். அப்புறம் மற்ற உறவினர்னு ஒரு முக்கால் மணி நேரம் ஆச்சு. எல்லாரும் நெத்தியில் குங்குமம் பூசிப்பூசி முகம் முழுக்க சிகப்பாக்கி வச்சுருந்தாங்க.
(மணமகன் தாய் தந்தையுடன்)

அடுத்ததாக மாப்பிள்ளையை ஒரு நாற்காலியில் உக்காரவச்சு இனிப்புத் தருவது. சொந்தக்காரர்கள், நண்பர்கள்ன்னு எல்லாரும் ஒவ்வொரு இனிப்புப் பெட்டிகளைக் கொண்டுவந்துருந்தாங்க. டப்பாவில் இருந்து கொஞ்சம் எடுத்து மாப்பிள்ளைக்கு ஊட்டுதல். பாவம்..... நுள்ளி நுள்ளிக் கொஞ்சமாக் கொடுத்தாலும் எவ்வளோன்னு தான் திங்க முடியும். இது முடிஞ்சதும் வந்திருந்த இனிப்புகளை எல்லாருக்கும் கொண்டுவந்து நீட்டிக்கிட்டு இருக்காங்க. ஒரு அறுபது எழுபது தட்டுகள். பெயர் தெரியாத பல ரகங்கள். நான் நல்லா வெட்டுனேன்:-)

இது முடிஞ்சதும் பரபரன்னு எல்லாரும் ஓடிப்போய் கட்டிக்கிட்டு இருந்த அலங்காரப்புடவைகளை மாத்திச் சாதாரணப்புடவைகள், சல்வார் கமீஸுன்னு உடுப்பு மாத்திக்கிட்டு அடுத்த வேலைக்குத் தயாரா ஆனாங்க.

நாம் கொழுக்கட்டைக்கு மேல் மாவு கிளறுவது போல கிளறி அதைச் சின்ன உருண்டைகளா உருட்டுனாங்க. எல்லாம் குறைஞ்சது 28 இருக்கணுமாம். அரிசி மாவு, கோதுமை மாவு, மஞ்சள் பொடி சேர்த்த மாவுன்னு நாலு வகை உருண்டைகள். அரிசி மாவு உருண்டைகளை மட்டும் சின்னப்பூரியா திரட்டி நெய்யில் பொரிச்சு வெள்ளையா எடுத்தாங்க. மற்ற உருண்டைகள் கொஞ்சம் காத்தாறவிட்டுக் கொஞ்சம் உலர்ந்ததும் அதைத் தனித்தனியா (சீடை மாதிரி) பொரிக்கணுமாம். நேத்து வர்ணம் தீட்டி வச்ச மண் பானைகளில் ஒவ்வொரு வகையில் எவ்வேழுன்னு போட்டு வைக்கணுமாம். எதுக்கு இதெல்லாம்? என் கேள்விக்குப் பதில் 'க்யா மாலும். வைஸாயீ கர்னேக்கா' :-)))) எல்லாவிதமான சாஸ்த்திர சம்பிரதாயங்களும் மனி மாமி சொல்படி:-))))

சமையல்வேலைகளில் மட்டுமே மூழ்கிப்போயிறாமல், சட்னு சமையலை முடிச்சுக்கிட்டு, வண்ணவண்ணப் புடவைகளில் பளிச்னு வேசம் மாறிவந்து உற்சாகத்தோடு கலந்துக்கறது பார்க்க ரொம்ப நல்லா இருக்கு. சோம்பல், சோர்வு எல்லாம் மருந்துக்கும் இல்லை. அடிஷனல் அட்ராக்ஷனா ஒவ்வொரு ரகமான ப்ளவுஸ்கள் விண்டோஸ் & டோர்ஸ்ன்னு கண்ணுக்கும் விருந்து.

மாலையில் தேங்காய் மாற்றும் வைபவம். சம்கி எல்லாம் ஒட்டிவச்சுருந்த ஒரு அலங்காரத் தேங்காய், இன்னும் மங்கலப்பொருட்கள் எல்லாம் வச்ச ஒரு தட்டு மாப்பிள்ளையின் பக்கத்தில் இருந்துச்சு. எல்லா மங்கல நிகழ்ச்சிகளையும் தொடங்கி வைப்பது பெற்ற தாய்க்கு இருக்கும் உரிமையாம். மணமகனின் தாய் முதலில், பையன் நெற்றியில் ஈரக் குங்குமம் தடவி அதன் மேல் அரிசியை ஒட்டவச்சாங்க. அலங்காரத் தேங்காயை மாப்பிள்ளை கையில் கொடுத்தாங்க. சாதாரணத் தேங்காயை எடுத்து அதுக்கு கொஞ்சம் குங்குமம் தடவி, வலது கையில் பிடிச்சுக்கிட்டாங்க. மாப்பிள்ளையின் கையில் இருக்கும் அலங்காரத் தேங்காயை இடது கையில் பிடிச்சு எடுத்துக்கிட்டு வலது கையில் இருக்கும் தேங்காயை அவர் கைகளில் வச்சாங்க. ஒரு விநாடியில் அதை எடுத்து இது, இதை எடுத்து அதுன்னு நாலுமுறை ரீப்ளேஸ் ஆச்சு. அவ்ளோதான். சாதாரணத் தேங்காய் கீழே இருக்கும் தாம்பாளத்தட்டுக்கு வந்துருச்சு.



தேங்காய் மாற்றம் ( பெரியம்மா, அக்கா, இன்னும் சிலர்)

அம்மாவுக்கு அப்புறம் அக்காள், தங்கை, மற்ற உறவினர், நண்பர்கள்ன்னு ஒவ்வொருவரா வந்து மாப்பிள்ளை கையில்....... தேங்காய் கை மாறிக்கிட்டே இருக்கு. எல்லாரும் தேங்காய் வீட்டில் இருந்தே கொண்டு வந்துருக்காங்க. கொண்டுவராதவங்க.... அங்கே ஒரு தட்டில் கொஞ்சம் காசைப்போட்டுட்டு, அங்கே இருக்கும் தேங்காயை எடுத்து சாங்கியம் செய்யறாங்க. யார் தேங்காயை மாத்துறாங்களோ, அவுங்க யாரு என்னன்ற விவரம் நம்ம மனி மாமி & க்ரூப்பால் பாட்டா வந்துக்கிட்டு இருக்கு. மணமகனுக்கு யார் யார் என்ன உறவுன்னு தெரியவருது. நமக்கும்தான்:-)

அடுத்து 'கர்பா' ன்னு சொல்லும் கும்மி நிகழ்ச்சி. நாங்க வெளியே பந்தலுக்கு வரப்போறொமுன்னதும் ஆண்கள் எல்லாம் அடிச்சுப்புடிச்சு எழுந்து குடி மேசைகளை அப்படியேப் புல் வெளியில் லாகவமா நகர்த்திக்கிட்டாங்க. ஒரு சொட்டும் தளும்பாமல் இழுத்ததைப் பார்க்கணுமே:-)))



கர்பா டான்ஸ்

மனி மாமி குரலெடுக்கப் பாட்டு ஆரம்பமாச்சு. ஒரு 20 நிமிசமானதும், தாண்டியா என்னும் கோலாட்டம். ஒரு பெண்மணி மட்டும் ரொம்ப சீரியஸாக் கவனமா அடிபிறளாமல் ஆடுனாங்க. சமீபத்தில் இந்தியாவில் இருந்து வந்தவங்களாம். இந்த நடனத்தில் ஆண்களும் கலந்துக்கிட்டு ஒரே ஆட்டம். தீபக் பையா சுழண்டு சுழண்டு ஆடினார். தினமும் யோகா செய்கிறார். பாடி நல்லா ஃபிட்டா இருக்கு:-)

இரவு விருந்தில் செம்மீன்கள் சிறப்புவகை. பகல் விருந்தில் பால் பாயாஸம், இரவில் மாம்பழ ஜூஸ் இப்படிக் கூடுதல் சுவை.

உங்களுக்காக சில நிமிச வீடியோக்கள் இந்தப் பதிவில் யூ ட்யூபின் உதவியோடு இணைச்சிருக்கேன்.

20 comments:

said...

ஜன்னல், கதவுகளின் கண்காட்சி நல்லா இருந்தது.... ;))

said...

ரொம்ப கலர்ஃபுல்..சூப்பர்..எல்லா இடத்திலயும் இப்படித்தானா.ஏன்னு தெரியாமயே செய்றது!!

said...

வாங்க தமிழ் பிரியன்.

ஜன்னல்களில் பூ வச்சு மறைக்கலாம். தொடுத்த சரத்தை இங்கே தள்ளிவிடுங்க:-))))

said...

வாங்க நட்சத்திரமே.

ஆஹா...... சந்தனமுல்லை கமகமக்குதேன்னு பார்த்தேன்.

பூனையைக் கட்டிப்போட்டுட்டுப் பூஜை ஆரம்பிக்கணும் என்ற கதை ஞாபகத்துக்கு வருது.

மியாவ்...:-)

said...

கல்யாணம் நாலு நாளா நடந்ததா. சாமி.ம்ம்ம். சரிதான். நல்லாத்தான் நடந்துருக்கு. என்ன ஒத்துமை இல்ல, துளசி.!!!

அந்த மாவு உருண்டகளைப் பாலிகையாக் கரைச்சிருப்பாங்களொ.
இல்லாட்டக் கழக்கோடி ஏத்தி இறக்கிறதுனு ஒரு வகைமுறை உண்டு அதா இருக்குமோ. அழகா இருக்குப்பா படங்க எல்லாம்.

said...

//'க்யா மாலும். வைஸாயீ கர்னேக்கா' :-)))) //

ரைட்டு :-)

//சமையல் வேலையில் மட்டும் மூழ்காமல், உற்சாகத்துடன் வண்ண உடைகளில்...//

நல்ல விஷயம்.

//கர்பா டான்ஸ்... //

வடநாட்டில் உள்ள ஒரு நல்ல பழக்கம். கூச்சம் போகும். சிறியவரில் இருந்து பெரியவர் வரை ஆடுவார்கள். :-)

said...

///'க்யா மாலும். வைஸாயீ கர்னேக்கா'///'அமெரிக்காகார... ///'க்யா மாலும். வைஸாயீ கர்னேக்கா'///
'அமெரிக்காகாரன் ராக்கெட்டை கொண்டு போகும் ரயில் அகலம்,குதிரை வண்டியின் அகலம்' என்று எங்கோ படித்த ஞாபகம் :))
ஸ்டாண்டர்ட் என்று எதையும் ப்ளைண்டாய் ஃபாலோ பண்ணுவது தானே நம் ஸ்பெஷாலிட்டி! :))

'விண்டோஸ்,டோர்ஸ்,எக்ஸ்பி,விஸ்டான்னு' சும்மா கலக்குறீங்க,டீச்சர்!! :)))

உங்க பதிவுக்கான இந்த பின்னோட்டத ராமலக்ஷ்மி பதிவுல போட்டுட்டேன் டீச்சர்.. :)) நல்ல வேளை அவங்க அடிக்காம விட்டாங்க!!!

Anonymous said...

ஸ்வஸ்திக் சின்னத்தைப்பாத்து அலற மேற்கத்தியவர்கள் யாரும் வரலையா!!! ஆக்லந்துல ஒரு வட நாட்டவர் வீட்டு கூடை மேல ஸ்வஸ்திக் சின்னத்தை போட்டு அக்கம்பக்கத்துல எல்லாரும் அலறினாங்களே

said...

தினம் கலக்கறீங்களே துளசி டீச்சர். நீங்க மட்டும் இந்த நேரத்தில் எழுதுவதை படிப்பதால் தான் பல மீட்டிங்குகளில் தூங்காமல் தப்பிக்கிறேன். அதை பற்றி எழுதலாம் என்று நினைக்கிறேன்.

said...

//சும்மா இருக்கும் பெண்களுக்குப் பூமாலைகள் தயாராக்கி ஃப்ரிட்ஜில் வைப்பதுதான் ஒரு வேலை//

உங்க ஃப்ரிட்ஜில் எவ்வளவு பூமாலை டீச்சர்...சும்மா கவுன்ட் பண்ணிக்கறேனே! :)

அப்படியே அதில் இருக்கும் பாதாம்கீர் கொஞ்சம் அடிச்சிக்கறேன்! :)

said...

டீச்சர்
மாப்பிள்ளைப் பையன் ரொம்ப பொறுமைசாலி போல, என்னைப் போலவே!
எம்புட்டு நேரம் கை வலிக்காம தேங்காயைப் புடிச்சிக்கிட்டு இருக்காரு பாருங்க!:)

மே பி குஜராத்தி மே போல் ரஹாஹூன்
'வரனும் கன்யாவும் சுகமா இருக்கட்டும்'

said...

இந்த தாண்டியா தாண்டியாவே அல்ல!
பொய்த் தகவல்களைத் தரும் டீச்சரைக் கண்டிக்க முடியாமல் தவிக்கிறேன்!

ஆண்களும் பெண்களும் சேர்ந்து ஆடினாத் தானே அது கார்பா/தாண்டியா! இது வெறும் போண்டியா! ஒத்துக்க முடியாது! ஒத்துக்க முடியாது! :)
We will also dance! :))

said...

வாங்க வல்லி.

இது 7 நாள் கல்யாணம்ப்பா.

மாவு உருண்டைகளைச் சுட்டுட்டாங்கப்பா!!

எண்ணெயில்தான்:-)

சூட்டதெல்லாம் பானையில் வச்சாங்க.

said...

வாங்க புதுவண்டு.

ஆட்டம்பாட்டம் கொண்டாட்டம்தான்:-)

said...

வாங்க தமாம் பாலா.

விஸ்டா வந்ததும் உண்மையாவே கலக்குனது(கலங்குனது)உங்களுக்குத் தெரியாதா? அடடா.....

said...

வாங்க சின்ன அம்மிணி.

இந்தக் கல்யாணத்துலே ஒரே ஒரு மேற்கத்தவர்தான். அவரும் நாம் கொண்டுபோனவர்.

அவரை எங்கே இதைப் பார்க்க விட்டாங்க. 'பாரில் 'புடிச்சுப்போட்டுட்டாங்கப்பா:-)

said...

வாங்க க.ஜூ.

நம்ம பதிவு அப்பப் பயனுள்ள பதிவுன்னு சொல்லுங்க.

இன்வாய்ஸ் அனுப்பிவிடறேன்:-))))

said...

வாங்க கே ஆர் எஸ்.

என்ன ஆளைக் கொஞ்சநாளாவே காணோம்?

1. பூமாலை ஃப்ரிட்ஜில் இல்லை.(பாதாம் கீரும்தான்)

2. மாப்பிள்ளைப் பையந்தான் நிகழ்ச்சியின் நாயகன். பொறுமை காத்துத்தான் ஆகணும். இப்ப இருந்து ஆரம்பிச்சாத்தான் பிற்காலத்துக்கு வசதி:-)
வாழ்த்தியதுக்கு நன்றி.

3. ஆம்பிளைங்களும் கலந்துக்கிட்டுக் கொஞ்சம் சொதப்பினாங்க. எல்லாம் தள்ளாட்டம்தான். கலர்ஃபுல்லா இருக்கட்டுமுன்னுதான் எடுத்த க்ளிப்பிங்ஸ்லே இதை மட்டும் போட்டேன்:-)

said...

// இது முடிஞ்சதும் வந்திருந்த இனிப்புகளை எல்லாருக்கும் கொண்டுவந்து நீட்டிக்கிட்டு இருக்காங்க. ஒரு அறுபது எழுபது தட்டுகள். பெயர் தெரியாத பல ரகங்கள். நான் நல்லா வெட்டுனேன்:‍)//


என்ன‌து ! அறுப‌து எழுப‌து த‌ட்டு ஸ்வீட் நீங்க‌ ம‌ட்டும் வெட்டினீக‌ளா !
அம்மாடியோவ் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

சீக்கிரம் ஒரு ப்ளட் டெஸ்ட் லிபிட் ப்ரோஃபைல் ( ரத்தத்தில் கொழுப்பு சக்தி ) பண்ணிக்கங்க. இனிப்பு பண்டங்கள், எண்ணை ச்மாசாரங்களினால் நம்ம ரத்தத்திலே
லோ கொலஸ்டிரால் விழுக்காடு ஏறிப்போச்சுன்னா அப்புறம் கஸ்டம் )

ஹை கொலஸ்ட்ரால் ( 37க்கு மேல‌
இருக்க‌ணும் ) இது ந‌ல்ல‌ கொல‌ஸ்டிரால்.

லோ கொலொஸ்ட்ரால் ( 150க்கு கீழே இருக்கணும் ) டோடல் கொலஸ்ட்ரால் 250 நார்ம‌ல்.
ட்ரிகெலிசெரைட்ஸ் 140 க்கு கீழே இருக்க‌ணும்.

எல்லாம் செக் பண்ணிக்கணும். இந்த டெஸ்ட் காலை எழுநத உடன்
காபி கூட குடிக்காம் பண்ணிக்கணும்.

இதுலே ரிஸ்க் ஃபாக்டர் 1, 2 ந்னு வேற இருக்கு.

எல்லாமே ஜாஸ்தியா இருந்துச்சுன்னா, அடோர்வாஸ்டின் 20 எம்.ஜி.
ஒரு 10 மாசம் சாப்பிடுங்க . கூட‌வே நெய், ஊறுகாய், எண்ணையிலே
வ‌றுத்த‌ பொறிய‌ல், வ‌ருவ‌ல், கேக், ஆலு ம‌ட்ட‌ர் எல்லாம் அவாய்ட்
ப‌ண்ணுங்க‌.

மீ.பா.
த‌ஞ்சை.
http://ceebrospark.blogspsot.com

said...

வாங்க மீனாட்சி அக்கா.

நல்லா வெட்டுனேன்னா மொத்தத்தையுமா?

போங்கக்கா...... தின்னிப்பண்டாரமுன்னு சொல்லிட்டீங்க.........ஊம்ம்.....(அழுவாச்சியா வருது)

அதெல்லாம் சூதானமா நடந்துக்க மாட்டேனா? நான் யாரு? உங்க தங்கச்சி இல்லையா? :-))))

ரத்த அழுத்தம் கூடுதலுன்னு தினம் மாத்திரை போட்டுக்கறேன்.

அப்புறம்...தின்றதுக்குன்னு ஒரு ஜென்மம் புதுசா எடுக்க முடியுமா? ஆசைப்பட்டதை ( கிடைக்கும்போதுதான்) எல்லாம் கொஞ்சம் தின்னு பார்த்துட்டே போகணுமுன்னு இப்போதைய முடிவு:-))))