Friday, September 19, 2008

" என்னைத் தாலாட்ட வருவானா?"

தூக்கம் வராதவங்கதான் தூக்கத்தைப் பற்றிப் புலம்பிக்கீட்டிருப்பாங்க. ஒரு காலத்துலே, கல்லூரிவிடுதியிலே என் அறைத்தோழி சொல்வாள் " தூக்கம்தான் மனுஷ வாழ்க்கையிலே மிகவும் இன்பமானபகுதி, அதைக் கெடுக்காதே' என்று சொல்லிவிட்டு, நாங்கள் தரும் காப்பியைக் கண்களை மூடியபடியே குடித்துவிட்டு, மறுபடியும் தூங்கிவிடுவாள். ஒரு மாதிரி கலரில் இருக்கும் வென்னீரைத்தான், எங்க விடுதியிலே காப்பின்னு
சொல்லிகிட்டிருந்தாங்க. தவிர, விடுதியின் சமையலறையில் என்ன நடக்குதுன்னு அந்த வயதில் யாருக்கு அக்கறை இருந்திருக்கும் ?

இப்ப, இந்தவயசிலே, தூக்கம் வராம ராத்திரி முழுசும் புரள்றப்பதானே தூக்கத்தின் அருமை தெரியுது.
ஆனா ஜனங்களைத் தூங்க வைக்கறதிலே கில்லாடின்னா 'மொரிட்ஷியோ'வைத்தான் சொல்லணும்.

1999-லே, நாங்க, குடும்பத்துடன் ( குடும்பம்னா அளவான குடும்பம், நான், என் கணவர் அப்புறம்
என் 16 வயது மகள்) ஐரோப்பாவைச் சுற்றிப்பார்க்கும் ஆவலில் ஒரு சுற்றுப் பயணம் போனோம்.
'காஸ்மொஸ்' என்னும் நிறுவனத்தின் 19 நாட்கள் சுற்றுலா. அவர்கள் பலவிதமான வகைகள் வைத்திருக்கின்றனர்.
ஆனால், நம்முடைய 'ஐவேஜ்'க்குக் கிடைத்தது இந்த 19 நாள்தான்.

முதல் நாள், லண்டனில் ஒரு ஹோட்டலில் இருந்து ஒரு சாதாரண 'பஸ்'ஸில் 'டோவர்' வரை வந்து,
அங்கிருந்து ஒரு கப்பல்/·பெர்ரி மூலம் ·ப்ரான்ஸ் நாட்டுக்கு வந்தோம். எங்கள் குழுவிலே
மொத்தம் 35 பேர். ஆச்சரியப்படத்தக்க விஷயம் என்னென்னா, அதுலே 21 பேர் இந்தியர்கள். அதுவும்
பல ஊர்களில்இருந்து வந்திருந்தோம். என்னவோ தெரியலே, யாரும், மற்ற யாரோடும் பேசாம அவுங்கவுங்க குடும்பத்தினருடன் மட்டும் பேசிக்கிட்டிருந்தாங்க.

ஃப்ரான்ஸ்-லே, வழக்கம்போல பாஸ்போர்ட், மற்ற எல்லாவிதமான பரிசோதனைகளும்
முடிஞ்சது. வெளியே வந்து பார்த்தா, ஒரு அட்டகாசமான 'சொகுஸ¤ பஸ்' எங்களுக்காக காத்திருந்தது.
லண்டனிலிருந்து எங்களோடு வந்திருந்த வழிகாட்டி, எங்களையெல்லாம், மற்றொரு வழிகாட்டிகிட்டே
ஒப்படைச்சிட்டுப் போயிட்டார். பஸ் புறப்பட்டுச்சு.நாங்கெல்லாம் வழியெல்லாம் வேடிக்கைப் பார்த்துக்கிட்டே
'பெல்ஜியம்' நாட்டில், 'ப்ரஸல்ஸ்' வந்து சேர்ந்தோம். இந்த ஒரு நாட்டில்தான்,'ஹைவே'
முழுவதும் மின்சாரக் கம்பங்களில் விளக்கும் போட்டிருக்காங்க. அது எரியவும் செய்யுது.

மறுநாள் காலை ஏழரை மணிக்குள் எல்லோரும் தயாராகணும். இந்த மாதிரி சுற்றுலாக்களில்
தினமும், காலை உணவு நாம் தங்கியுள்ள ஹோட்டலிலேயே கிடைக்கும். தினமும்,'ப்ரேக்·பாஸ்ட்,
சில இடங்களில் டின்னெர்' என்று நம்முடைய மொத்த சுற்றுலா பயணத்திற்கும் சேர்த்துத்தான், நாம்
கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். காலை 7 மணிக்குமுன் நம் அறை வாசலில், நம் பெட்டிகளை
வச்சிடணும். அப்புறம் காலை உணவு. அது முடிந்ததும் நேரா 'பஸ்' தான்.

'டைனிங் ரூம்' போய்ப் பார்த்தால், அமர்க்களமான 'ப்ரேக்·பாஸ்ட், எங்களுடைய '·பேவரிட்'டான
'க்ரசாண்ட்' கூட இருக்கு. ஹையாஆஆஆஆஆ...'க்ரசாண்ட்' இது முதல் நாள். அப்புறம் சில நாட்களில்
அது 'ஐயோ..ஓஓஓஓஓஓஓஓஓஓஓ..'க்ரசாண்ட்'ஆகிவிட்டது. நொந்து நூடுல்ஸ் ஆன கதைதான்.

இந்த 19 நாட்களில் 7 நாடுகளைச் சுற்றினோம். ஆனா சொல்லிவச்ச மாதிரி எல்லா இடத்திலும்
ஒரே மாதிரியான காலை உணவு. ஹூம்....ஒரு நாள் இட்டிலி, ஒரு நாள் தோசை, ஒரு நாள்
பூரின்னு கிடைச்சிருக்கக்கூடாதான்னு மனசு ஏங்கிடுச்சு. எப்படியும் சென்னை வழியாதானே
நியூஸிலாந்து திரும்பப் போறோம். அப்பப் பாத்துக்கலாம்னு இருந்தோம். சொன்னா நம்பமாட்டீங்க!
திரும்பி வந்தவுடன், 2 வருஷத்துக்கு 'சூப்பர் மார்கெட்'லே 'க்ரசாண்ட்' இருந்த பக்கம் திரும்பிக்கூடப்
பார்க்கலே!

பாத்தீங்களா ? சொல்ல வந்த சமாச்சாரத்தை வீட்டுட்டு எங்கியோ போய்கிட்டு இருக்கேன்.அது போகட்டும்.
தினமும்' பஸ்' லே ஏறுன அஞ்சாவது நிமிஷம் எல்லோருக்கும்,(எல்லோருக்கும்னா சின்ன பசங்கள் உட்பட
எல்லோருக்கும்) கண்ணு ஒட்டிக்கும். இமைகளைப் பிசினு
போட்டு ஒட்டினமாதிரி, திறக்கவே முடியாதபடி. கண்டிப்பா வேடிக்கைப் பார்த்துகிட்டு போகணும்னு
நினைக்கறவங்கதான் இந்த அஞ்சு நிமிஷம் தாக்குப்பிடிக்கிறவுங்க. மத்தவுங்க? ரெண்டாவது நிமிஷமே
காலி.முக்கியமான விஷயத்தைக் கோட்டை விட்டுட்டேன் பாருங்க! நம்ம பஸ் ட்ரைவர் தான் ' மொரிட்ஷியோ'.
அலுங்காமக் குலுங்காம வண்டி ஓட்டறதுலே மன்னன்.




நம்ம கோபால் & மொரீட்ஷியோ



எல்லோரும் தூங்கிகிட்டே போவோமா, அப்ப ஏதாவது நம்மளைமாதிரி சுற்றுலா ஆளுங்க பார்க்க வேண்டிய
இடம் வருதுன்னு வச்சிகுங்க,உடனே 'மைக்'லே கரகரன்னு ஒரு சத்தம் லேசா காதுலே விழும்.' வேக்கி,
வேக்கி, வேக்கி'ன்னு, நம்ம கைடு வுடற சவுண்டு. ரொம்பக் கஷ்டத்தோட கண்ணைத்திறப்போம். அவரு,
நாங்க பார்க்கபோற இடத்தைப் பற்றி ஒரு விளக்கம் சொல்வார். பஸ் நிக்கும். எல்லோரும் ஒரு உற்சாகத்தோட
கீழே குதிச்சு இறங்குவோம். தூக்கம் ? 'போயே போச்', 'போயிந்தி', 'இட்ஸ் கான்'




டூர் கைடு பென்னி.

திரும்பி பஸ்ஸ¤க்குள்ள வரவேண்டியதுதான். மந்திரம் போட்ட மாதிரி, கண்ணு மேலே சொருகிடும். இதே
கதைதான் 18 நாளும். ஒரு வித்தியாசமும் இல்லை. நம்ம கைடுக்கே ஒரு தடவ வெறுத்துப் போச்சுன்னு
நினைக்கிறேன். இத்தாலியில், ஒரு பாதையில் நிறைய 'டன்னல்'வரும். அது மொத்தம் எத்தனைன்னு
சொன்னா ஒரு பரிசு தரேன்னு சொன்னார். நானும் ரொம்பக் கஷ்டப்பட்டு, எண்ணக்¢கிட்டே வந்தேன்.
இருவது, இருவத்தொன்னு, இருவத்திரண்டு...... யாருக்கு வேணும் அந்தப் பரிசு ? அப்புறம் 'முழிச்சிக்கிட்ட
பிறகு. கைடே சொன்னாரு அறுவத்தொம்பதுன்னு. அப்பாடா...நல்லவேளை தூங்கிட்டோம்.

கடைசி நாள், எங்களையெல்லாம் 'யூரோ டன்னல்' கிட்டே கொண்டுவந்து விட்டப்ப, ஐயோ, இனி தூங்கறதுக்குத்
தாலாட்ட 'மொரிட்ஷியோ' இல்லையேன்றதுதான் ஒரே வருத்தமா இருந்தது.

அப்பனே, 'மொரிட்ஷியோ' இப்ப எங்க ஐயா இருக்கே? தூக்கம் வராம பொரளறேனே! வந்து தாலாட்டக்
கூடாதா?


நன்றி : மரத்தடி 2004

39 comments:

said...

டீச்சர்! சூப்பரான அனுபவம்! நான் மிலானோ 15 நாள் ஆபீஸ் விஷயமா போனப்போ ...................... கொஞ்சம் கூட அனுபவம் இல்லை வறும் அவஸ்தை தான்!அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!!

அன்புடன்
அபிஅப்பா

said...

ஹா ஹா ஹா
டீச்சர் இன்னிக்கு வகுப்புக்கு நேரத்தோட வந்துட்டேன்.. :)

ஏனோ தெரியல டீச்சர்..எனக்கெல்லாம் வாகனத்துல போறப்ப மட்டும் தூக்கமே வராது.. மணித்தியாலக் கணக்குல போற பயணம்னாலும் சீட்ல உட்காந்ததிலிருந்தே தூங்க முயற்சித்து கண்ணையெல்லாம் மூடிக்குவேன். ஆனா தூக்கம் மட்டும் வராது. வாகனத்துல போறப்போ எப்படித் தூங்கணும்னு கொஞ்சம் சொல்லிக் கொடுத்தீங்கன்னா டீச்சருக்குப் புண்ணியமாப் போகும்.. :)

said...

ரீச்சர்,

இது இன்பச் சுற்றுலா தானே அப்பக் கூட ஏன் கோபால் சூட் டை எல்லாம்? ஒரு வேளை இழுத்த இழுப்புக்கு வரணும் அப்படின்னு நீங்கதான் டை கட்டி விட்டீங்களா?

19 நாள் டூர்ன்ன ஒரு 190 எபிசோட் ஆவது வருமே. எதிர்பார்க்கலாமா? :))

said...

அப்படி ஒரு அலைச்சல் துளசி:)
அதுவும் சாம்பார்,இட்லி,தோசை,வடாஇ வாசனை வந்தா முழிப்பு வந்திருக்கும்.
வெறும் சவ்வ்க்கு சவுக்னு ரொட்டியும் வெண்ணெயும் தூக்கம் தானே கொடுக்கும்.
மொரீட்ஷியானோ உங்க குரலுக்கு வந்தா இங்கயும் அனுப்புங்க துளசி. அடுத்தாப்பில என்ன ஊரில என்ன பார்த்தீங்கனு எழுதிடுங்க. ஆமாம்:)

said...

வணக்கம் துளசி டீச்சர்.

மீண்டும் நல்ல பயணக்கட்டுரை. :)

said...

அங்கெல்லாம் ரோடெல்லாம் நல்லா இருந்து இருக்கும் போல... :)
நமக்கு படுத்ததும், அல்லது வண்டியில் ஏறி அமர்ந்ததும் தூங்கும் பழக்கம் இருக்கு... வயசானால் மாறிடுமோ?...:)

said...

டீச்சர்!
கொட்ட கொட்ட முழுச்சுக்கிட்டே படிச்சேன் :))))))

said...

நல்ல நினைவுகள் டீச்சர்.. எனக்கு பயணத்தின் போது தூங்குவது என்பது குதிரைக் கொம்பு அது எவ்வளவு சொகுசு பஸ்ஸாக இருந்தாலும், ரயிலாக இருந்தாலும்.. :))))

said...

அந்த 3வது பின்னூட்டம்..... :-))
கோபாலாக இருந்தால் மட்டுருத்திருப்பார்.
பாருங்க பின்னூட்டம் கூட தட்டச்சு கூட பண்ணமுடியலை,அவ்வளவு சிரிப்பு.

said...

டீச்சரே இப்படி ஊர் ஊரா சுத்தினா உங்க மாணவர்கள் எப்படி:-)

பயணக்கட்டுரை நல்லா எழுதுறீங்க, அடுத்த முறை உங்கள காப்பி அடிச்சு எழுதிடுறேன்

Anonymous said...

நல்ல பயணக்கட்டுரை

said...

வாங்க அபி அப்பா.

ஆஃபீஸ் வேலையாப் போனா கிடைக்கும் அனுபவம் இப்படியா?

பேசாம குடும்பத்தோடு கிளம்புங்க. தனி அனுபவமா இருக்கும்:-)

said...

வாங்க ரிஷான்.

வாகனத்தை ஓட்டும்போது மட்டும் தூங்கக்கூடாது. மற்ற சமயம் ஓக்கே:-)

said...

வாங்க கொத்ஸ்.

என்னதான் இன்பச் சுற்றுலான்னாலும் சில இடங்களில் ஃபார்மல் டின்னர் இருக்காதா?

அதுவும் மொனாக்கோ மாண்டி கார்லோ வில் நம்ம பாண்டு அதான் ஜேம்ஸ்பாண்டு 007 வெள்ளாடுன இடத்துக்குப் போறப்ப இப்படி இல்லேன்னா உள்ளெ விடமாட்டாங்க.

அதான் நம்ம மொரிட்ஷியோ, பென்னி எல்லாம்கூட யூனிஃபார்மை மாத்திக்கிட்டாங்க.

said...

வாங்க வல்லி.

மொரிட்ஷியோ வந்தா அங்கேயும் ஒரு விஸிட் அடிக்கச் சொன்னால் ஆச்சு.

ரோடெல்லாம் அப்படி இருக்குப்பா. ஒரு குலுக்கல் இல்லாம அப்படியே வழுக்கிட்டு ஓடுது வண்டி.

said...

வாங்க க.ஜூ.

நன்றிப்பா.

said...

வாங்க தமிழ் பிரியன்.

வயசானா....ராத்தூக்கம்தான் போயிருது. வாகனத் தூக்கத்துக்குப் பழுது இருக்காது:-)

said...

வாங்க புதுகை அப்துல்லா.

'(கொட்டக் கொட்ட)விழிப்புணர்வு' வேணும் வகுப்புலே:-))))

said...

வாங்க வெண்பூ.

ரொம்ப நல்ல பழக்கம்தான். ஆனாலும் ஒருமுறை நம்ம மொரிட்ஷியோ ஓட்டும் வண்டியிலே உங்களை உக்கார்த்திவச்சுப் பார்க்கணும்:-)

said...

வாங்க குமார்.

கிளம்பும் நேரத்திலும் பின்னூட்டக் கடமை!!!!!!

ஆஹா.....

கொத்ஸ் இல்லேன்னா வகுப்பு போரடிச்சுரும் இல்லே?:-)

said...

வாங்க குடுகுடுப்பை.

சரித்திர டீச்சராச்சேப்பா.
சுத்தாம முடியுமா? ;-))))

said...

வாங்க கடையம் ஆனந்த்.

நன்றிங்க.

said...

சூப்பர் பயணம் டீச்சர் ;)

\\" தூக்கம்தான் மனுஷ வாழ்க்கையிலே மிகவும் இன்பமானபகுதி, அதைக் கெடுக்காதே' \\

இதை படிக்கும் போது அப்பா ஞாபகம் தான் வருது. தூங்கும் போது எழுப்புவது அவருக்கு பிடிக்கவே பிடிக்காது. அது அவர் தூங்கும் போதும் சரி மத்தவுங்க தூங்கும் போதும் சரி.

காலையில வேலைக்கு (4மணிக்கு) போறாதுக்கு எழுப்ப சொன்னா வருவார் ரெண்டு குரல் கொடுப்பாரு (அவருக்கே கேட்குமான்னு தெரியது அந்த அளவுக்கு) எழுத்திருக்க வில்லையா அவ்வளவு தான் விட்டுட்டு போயிக்கிட்டே இருப்பாரு.

அதனாலேயே அம்மாவே வந்து எழுப்புவாங்க.

said...

வாங்க கோபி.

'தூங்கறவங்களை எழுப்புனா பாவம்'ன்னுகூடச் சொல்வாங்க. எங்க பாட்டி இப்படிச் சொல்லிக்கிட்டே ராத்திரி முழுசும் பாத்ரூம் போறதும் வாறதுமா இருப்பாங்க. வயசாச்சுன்னா தூக்கமே வராது இல்லையா? இதுலே சரியாக் கண்ணுத் தெரியாம எங்க காலையெல்லாம் சிலசமயம் மிதிச்சு.... கலாட்டாதான்.

பாவம் அவுங்களைச் சொல்லி என்ன பண்ணறது? நாங்க மட்டும் சும்மாவா? படுக்கறது ஒரு இடமுன்னா உருண்டுகிட்டே வேற எங்கியோ குண்டக்கமண்டக்கன்னு இருப்போம்:-0

said...

அடடா....கொஞ்சநேரம் உங்களோட நாங்களும் வந்த உணர்வை
கொடுத்துட்டீங்க!

உங்க சிறப்பே, எந்த இடத்துக்குச்சென்றாலும்
அந்த இடத்தின் பதிவுகளை புகைப்படமா கொண்டுவர்றதுதான்!

ஆமா....இன்னும் அண்டார்ட்டிகா மட்டும்தான் போலையோ?
(ஏதோ புகையுற வாசனை வரலை?)
எல்லாம் வயிற்றிலேருந்துதான்!
:)

said...

நல்ல சாலைகள்,மொரீட்ஷியனோ மாதிரி நல்ல ஓட்டுனர் இதெல்லாம் இல்லாமலே எங்கள் சிங்காரச் சென்னையில் நகரப் பேருந்தில் ஏறியவுடனே தூங்கிப் பக்கத்தில் இருப்பவர் மேல் விழும் வித்தகர்கள் எல்லாம் இருக்கிறார்கள்.
சுவாரசியமான பயணக் கட்டுரை.

said...

என்ன மொரீட்ஷியோ வா? சைமன் கோவேல் மாதிரி இல்ல இருக்காரு.
சரி அதெல்லாம் ரொம்ப வருஷம் ஆச்சி. அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு தூங்க பழகுங்க! (no pun intended ;)

said...

வகுப்பில் எத்தனை பேரைத் தூங்க வச்சிருப்பீங்க, உங்களுக்குத் தூக்கம் ஒரு பிரச்னையா? கொடுமை தான்.

பிரயாணத்தை நீங்க விவரிக்கும் விதம் அருமையாக இருக்கிறது.

said...

என்ன டீச்சர் க்ராய்சானை இவ்ளோ லேசாச் சொல்லீட்டீங்க. எனக்கும் ரொம்பப் பிடிக்கும். அதிலும் ஆஸ்திரிய நாட்டு க்ராய்சான் அப்படியே பிறை வடிவத்துல இருக்கும். டச்சுக்காரங்க பிறைவடிவத்த விட்டுட்டு ஒரு மாதிரி முக்கோணமா போடுவாங்க. ஆனா பிரெஞ்சுக் க்ராய்சான் ரொம்ப நல்லாயிருக்கும்.

இந்தக் க்ராய்சானை மொதமொதலா செஞ்சவங்க ஆஸ்திரியாக்காரங்க. துருக்கியர்கள் ஒரு வாட்டி ஆஸ்திரியா மேலப் படையெடுத்து வந்தாங்களாம். அப்ப ஆஸ்திரியாக்காரங்க சண்டை போட்டு ஜெயிச்சாங்களாம். தங்கள் மேல படையெடுத்து வந்த ஒரு இஸ்லாமிய நாட்டை வெற்றி பெற்றதன் அடையாளமா பிறை வடிவத்துல ரொட்டி சுட்டுச் சாப்டாங்களாம். அதான் க்ராய்சான்.

இந்தக் கதைய ஆம்ஸ்டர்டாம்ல இருந்து ஆஸ்திரியாவுக்கு விமானத்துல போறப்போ அம்மாவுக்குச் சொன்னேன். ஏன்னா...விமானத்துல சாப்புடுறதுக்கு அம்மா தேர்ந்தெடுத்தது க்ராய்சான். :)

said...

வாங்க சுரேகா.

அண்டார்டிக்?

போய்வந்தாச்சு. நமக்காகவே இங்கே கிறைஸ்ட்சர்ச் நகரில் அண்டார்ட்டிக் செண்டர் ஒன்னு திறந்துருக்காங்க. 'அங்கே' இருக்கும் தட்பவெட்ப(?) நிலை உள்பட எல்லாம் இருக்கு.

http://www.iceberg.co.nz/

வழக்கம்போல் ஒரு முழக்கமும் சொல்லிக்கவா?

தென்கோளத்திலேயே இப்படி இருப்பது இது ஒன்னுதான்!!!!

said...

வாங்க சுந்தர்.

அட! ஆமாம்....ரொம்ப வருசமாயிருச்சு இல்லே?அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டுத்தான் இருக்கேன்.:-))))

said...

வாங்க சென்னை பித்தன்.

இப்ப எதுக்கு சிங்காரச்சென்னை நகரப்பேருந்துவை ஞாபகப்படுத்தினீங்க?

இருக்கற கூட்டத்தில் தனித்தனியா ஒவ்வொரு ஓரத்தில் நின்னுக்கிட்டு, எங்கே இறங்கணுமுன்னு தெரியாம இவர் வண்டியில் இருக்காரா இல்லையான்னு கூட்டத்தில் பார்க்கவும் முடியாம திகைப்போடத்தான் பயணம் எல்லாமே அந்தக் காலத்தில்.

அப்ப கோபாலுக்கு ஒரு ஆணாதிக்கப் பழக்கம். 'நாந்தான் கூடவரேனே எதுக்கு ஹேண்ட் பேக் கொண்டுவரே?'

எனக்கோ.... கற்பனைவளம் (அப்பவே) கூடுதல். பேருந்து கடைசி நிறுத்தம் வரைபோய் நிக்குது. வண்டியில் நான் மட்டுமிருக்கேன். இவரைக் காணோம். எப்போ எங்கே இறங்குனாரோ?

பேசாம ஒரு டாக்ஸி( அப்ப ஆட்டோ அதிகம் இல்லாத காலம்)பிடிச்சு வீட்டுக்குவந்து காசு எடுத்துக் கொடுக்கறேன்.

கற்பனையை முழுசும் அனுபவிக்க விடாம, 'வாம்மா இங்கே இறங்கணுமு'ன்னு இவர் பக்கத்தில் (கூட்டத்தில் நீந்தி)வந்து குரல் கொடுப்பார்:-)

said...

வாங்க ரத்னேஷ் சீனியர்.

நம்ம மாணவர்கள் தூங்குறாங்களான்னு தெரியாது. எல்லாம் தொலைதூரக்கல்வியா இருக்கே!

ஆனா...வகுப்பில் நான் தூங்க மாட்டேன்.

'ஆசிரியர் பாடம் நன்றாக நடத்தினாலும் நடந்துகொண்டே பாடத்தை நடத்துவதால் மாணவர்கள் கவனம் சிதறும் வாய்ப்புண்டு'

இது ஆசிரியர் பயிற்சி எடுத்தபோது
ப்ராக்டிக்கல் வகுப்புகளில் எனக்குக் கிடைச்ச ரிமார்க்.

நடக்காம இருந்தா எனக்கே தூக்கம் வந்துருமோ என்ற பயமாகவும் இருக்கலாம்:-))))

said...

வாங்க ராகவன்.

ஆகா 'பிறை'யின் கதை எனக்குப் புதுசு.

எனக்கும் க்ராய்சண்ட் ரொம்பப் பிடிக்கும். ஆனா தினம்தினமுன்னுன்னதும் ரொம்ப பேஜாராப் போயிருச்சு.

அது சரி. அம்மாவுக்குப் பிடிச்சுச்சா?

said...

// துளசி கோபால் said...

எனக்கும் க்ராய்சண்ட் ரொம்பப் பிடிக்கும். ஆனா தினம்தினமுன்னுன்னதும் ரொம்ப பேஜாராப் போயிருச்சு.

அது சரி. அம்மாவுக்குப் பிடிச்சுச்சா? //

நீங்க தொடர்ந்து 19 நாள் சுத்தீருக்கீங்க. அதான் பிரச்சனை. நான் மூனு நாளு..நாலு நாளுன்னு ஒவ்வொரு நாட்டுக்கும் தனித்தனியாக் கூட்டீட்டுப் போனேன். ஆகையால கிராய்சான் அவங்களுக்கு ரொம்பப் பிடிச்சிப் போச்சு. அப்பாக்கு சுகர் இருக்கு. இருந்தாலும் பாருங்க....காம்ப்ளிமெண்டரி பிரேக்பாஸ்ட்டுல க்ராய்சானுக்கு ஜாம் வெச்சிச் சாப்புடுவாரு. சரி. நெதர்லாந்துக்கு திரும்புனதும் வீட்டுச் சாப்பாடுதானேன்னு விட்டுருவோம். அதுல பாருங்க.. பிசா நகரத்துல ஓட்டல் பொலோன்யாவுல சக்கரச்சத்து இருக்குறவங்களுக்குன்னே தனியா ஜாம் வெச்சிருந்தான். கேக்கனுமா? :)

ஆனா மத்தபடி சாப்பாடுக்குப் போற எடத்துல கஷ்டப்பட்டாங்க. எனக்குப் பழகீருச்சு. சோறு இல்லைன்னா கவலையேயில்லை. பிரட்..மீட்னு சாப்டுருவேன். ஆகையால இந்திய விடுதிகள் கண்ணுல பட்டா அதுக்குள்ள நொழைஞ்சிருவோம். பிசாவுல இந்திய விடுதியில்லை. ஒரு பாகிஸ்தானி கடைதான். ஒரு வாட்டி உள்ள போனோம். அடுத்த வாட்டி வேற எங்கயும் சாப்புட வர மாட்டேன்னு உறுதியாச் சொல்லீட்டாங்க அப்பா. எங்க..பாஸ்தா வாங்கிக் குடுத்திருவேனோன்னு பயம். :)

said...

அது என்னவோ உண்மை ராகவன்.

பழகுன சாப்பாட்டை விட முடியாது. புது சாப்பாடுவகைகளைக் கொஞ்சம் பயத்தோடுதான் அணுகவேண்டி இருக்கு.


சக்கரை இருக்கும் மக்களுக்காகன்னு தனியா சாக்லேட் வகைகளும் இங்கே கிடைக்குது.

எதையும் வேணாமுன்னு ஒதுக்குனா மனசு சஞ்சலப்படுமில்லையா? ஆனா அதே விஷயத்தை, சக்கரை ஆட்களும் எடுத்துக்கறமாதிரி மாற்றிச் சமைச்சுத் தர்றாங்க.

காஃபிக்குக்கூட ஈக்குவல்ன்னு ஒரு மாத்திரையைக் காஃபியில் கலந்துக்கிட்டா நாக்குக்குச் சுவை. உடம்புக்கும் ஊறு இல்லை.

said...

பிரயானத்தில் தூங்குவதே ஓரு தனி சுகம் தான் டீச்சர்.

said...

வாங்க அதிரை ஜமால்.

தினமும் போகும் பயணங்களில் தூங்குனா பரவாயில்லை. ஆனால் வாழ்நாளில் ஒருமுறைமட்டுமே கிடைச்ச வாய்ப்பை...இப்படித் தூங்கிக் கெடுத்துட்டோமே....(-:

said...

ரொம்பவே பொசுக்ன்னு முடுச்சுட்டீங்க.