Thursday, September 25, 2008

என் வீட்டுத் தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப்பார்.....

முந்தாநாள் ஊரைச் சுற்றியதுன்னா, இன்னிக்கு?

இது நம்ம புழக்கடைத் தோட்டத்தில் சுத்திச் சுத்தி எடுத்ததுதான்.திகட்டத் திகட்டப் பூக்கள்.




Arum Lily


Polyanthus . இதில்தான் எத்தனை வகை!!!!!


































Saxifrage




Rhododendron



Hyacinth





மொட்டுவிட்டிருக்கும் bogainvilla



Snowballs







பெயர் தெரியாப் பூக்கள்.


செப்டம்பர் ஒன்னுதான் இங்கே வசந்தகாலம் ஆரம்பமாகுதுன்னு இந்தச் செம்பருத்திக்குக்கூடத் தெரிஞ்சுருக்கு பாருங்களேன்!!!






ஐலா வீட்டு மரம்




எல்லாத்துக்கும் சிகரம் வச்சதுபோல் நம்மவீட்டுக் கருப்பு ரோஜா:-)


அன்பாக வாழ்த்திய அனைத்து அன்புள்ளங்களுக்கும் இந்தப் பூக்கள் சமர்ப்பணம்.

நன்றி நன்றி நன்றி.

48 comments:

said...

வீட்டுப்பூ,வலைப்பூ இரண்டுக்கும் தண்ணீர் ஊத்த உங்களுக்கு எப்படி டீச்சர் நேரம் கிடைக்குது.(கோபால் சார்தான் ஒரு பூவுக்கு தண்ணி ஊத்துறார் அப்படிங்கற ரகசியத்தை யாருக்கும் சொல்லாதீங்க)

said...

துளசி பூக்காலமா.
பூக்கோலம் மகாபலிக்குப் போட்டு இருக்கலாம்:)

இப்பதான் இது வலைப்பூ.
கறுப்பு ரோஜாதான் சூப்பர்.
செல்லம் காவலா பூவுக்கு.

said...

சூப்பர் பூந்தோட்டம்... பாதுகாக்கறதுக்கு ரொம்பவே நேரமும் / பொறுமையும் வேணுமே....:-)))

said...

அடேயப்பா!!

ஹ்ம்ம்ம்..
இப்படிக்கு,
Ms. Brown Thumb

said...

அத்தனை பூக்களும் எங்களுக்கா? நன்றி ந்ன்றி. கறுப்பு ரோஜாவும்தானா:)?

said...

ஆகா! பூக்களெல்லாம் செம ஜோரு! அதிலும் அந்த கருப்பு ஜோர் குளிருக்கு இதமா வெயிலில் இருப்பது நல்லா இருக்கு!

said...

போன பதிவில் சொல்லாமல் போனதுக்கு இந்தப் பதிவில் படம் போட்டு அட்ஜெஸ்ட்மெண்டா? இதெல்லாம் ஒத்துக்க முடியாது.

இவண்

கோகி முன்னேற்றக் கழகம்!

said...

பூக்களெல்லாம் கொள்ளை அழகு!!

said...

அழகான பூக்கள், நேர்த்தியான புகைபடங்கள் அத்துடன் பூக்களின் பெயருடன் வந்தது மேலும் சிறப்பு.

said...

பூக்கள் சூப்பர்!:)


கறுப்பு பூ இன்னும் கொஞ்ச்ம் குளோசப்ல படமெடுத்திருக்கலாமே!

said...

உங்களுக்கு வசந்தம், எங்களுக்கு முதுவேனில்......
எல்லா மரத்திலையும் இலையள் பழுத்து இண்டைக்கோ நாளைக்கோ விழுவம் எண்ட நிலையிலை இருக்கு.......

நானும் வீட்டிலை ஒரு செம்பருத்தி வச்சிருக்கன் வீட்டுக்கு உள்ள :)

said...

கண்களுக்கு விருந்து!!

said...

டீச்சர் வாழ்த்து சொல்ல விட்டுப்போச்சு
:(

அதனால் இங்க ஒரு வாழ்த்து சொல்லிக்கிட்டு ஒரு பூந்தொட்டிய எடுத்துக்குறேன்:)

said...

கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்குங்க... ரொம்ப அழகா இருக்கு..

said...

Arum Lily & பெயர் தெரியாப் பூக்கள்...ஐ லைக் வெறி மச்.....;))

said...

எப்பா எத்தனை செடிங்க.. இதெல்லாம் குளிர் காலத்த தாங்கிக்குமா? இங்கே எல்லா 6 மாசம் காடு, 6 மாசம் வூடுன்னுதான் என் செடிங்க வளருது..

said...

இவ்வளவு பூவா!, இரசித்து தான் தோட்டம் செய்கிறீர்கள் வாழ்த்துக்கள்.

said...

நான் சொல்ல நினைத்ததைப் பூக்களிடம் சொல்லி விட்டேன். உங்களிடம் சொல்வதாக இல்லை. (உங்களுக்குப் பொறாமை வந்து விடும்)

said...

வாங்க வாங்க வாங்க.

பின்னூட்டத்துக்குப் பதில் சொல்ல ரொம்பத் தாமதமா வரேன்(-:

எங்கெ போனேன்னு கேக்கமாட்டீங்கதானே? தோட்டத்துலே செடிகள் பராமரிப்புன்னு சொல்லித் தப்பிச்சுக்குவேன்:-)))))

said...

வாங்க குடுகுடுப்பை.
ஐடியாக் கிடைச்சிருச்சு.....

பேசாம 'அதிக நேரம் செலவழிக்காமல் வீட்டுத்தோட்டத்தைப் பராமரிப்பது எப்படி?'ன்னு ஒரு தொடர் எழுதலாம் போல இருக்கே:-))))

கறுப்பு ரோஜா மட்டும் உண்மையில் கோபாலோடதுதான். ஆனா அதுக்கும் நானேதான் தண்ணி ஊத்துறேன்னு சொன்னா நம்புங்கப்பா....

said...

வாங்க வல்லி.

பாலியந்தஸ் பூக்கள் செடியிலே விட்டால் பலநாட்களுக்கு இருக்கு. பறிச்சோமுன்னா ஒரு மணிநேரம்கூடத் தாங்காதுப்பா. அதான் மகாபலி வர்ற வழியிலேயே பார்த்துக்கட்டுமுன்னு விட்டுட்டேன்.

செல்லம்தான் வீட்டுக்காவல் & அம்மாவுக்கு அடியாள்:-))))

said...

வாங்க ச்சின்னப் பையன்.

பொறுமைக்கு என்ன குறைச்சல். பூமாதேவி தோத்துப்போவாங்க. வேணுமுன்னா ரெண்டு கிலோ உங்களுக்கு அனுப்பவா?:-))))

இண்டோர் கார்டனுக்குத்தான் கொஞ்சம் மெனெக்கெடணும். மத்தபடி.......

செடிகள் 'வாழநினைத்தால் வாழலாம்':-)

said...

வாங்க ஷ்ரேயா.

பால்கனியில் செடிகள் இருக்குன்னு நினைவில் வச்சுக்குங்க. ப்ரவுண் தம்ப் பச்சையா மாறிடும்:-)

said...

வாங்க ராமலக்ஷ்மி.

தாராலமா எடுத்துக்குங்க. கறுப்பு ரோஜாவை உங்களுக்கு எழுதிவச்சுறட்டா?

பயங்கர டிமாண்டிங் பேர்வழி. வாய்ப்பேச்சு மட்டும் இல்லை. கண்ணாலேயே ஆர்டர்ஸ் கொடுப்பதில் கில்லாடிப்பா:-)))

said...

வாங்க தமிழ் பிரியன்.

எந்தெந்த இடம் குளிருக்கு இதமுன்னு நாம் நினைக்கிறோமோ அங்கெல்லாம் நமக்கு முன்னே ஆஜராகிருவார் கோகி:-)

said...

வாங்க கொத்ஸ்.

உங்களை கோகிக்கு ரொம்பவே பிடிச்சுப்போச்சாம். கொத்ஸ் கொத்ஸ்ன்னு இங்கே கொண்டாடிக்கிட்டு இருக்கான்.

படம் எடுத்த தேதி பார்க்கலையா? :-)

said...

//பயங்கர டிமாண்டிங் பேர்வழி.//

எழுதி வைக்கிறேன்னு சொல்லிட்டு கூடவே இப்படி பயம் காட்டினா எப்படி:)? சரி சரி அட்ஜஸ்ட் ஆகிடுவேன்:)!

said...

வாங்க கவிநயா.

அழகு? உங்க பெயரைவிடவா? !!!!

said...

வாங்க வின்சென்ட்.

எனக்கு எதையும் பெயர் தெரிஞ்சுக்கலைன்னா தலை வெடிச்சுரும்:-)

முதல்முறையா வந்துருக்கீங்க போல?

நலமா?

பெயர் என்பது ரொம்ப முக்கியம்தானே? அதுதான்.....:-)

said...

வாங்க ஆயில்யன்.

கறுப்பூ ரொம்ப யோசனையுடன் சோகமா வெய்யில் காய்ஞ்சுக்கிட்டு இருந்துச்சு. தொந்திரவு செய்யவேணாமுன்னு நான் இருந்த இடத்தில் இருந்தபடி:-)

said...

வாங்க வி.ஜெ. சந்திரன்.

வடகோளமுன்னா இப்பத்தானே இலையுதிர்காலம்.

நான் செம்பருத்திகள் மட்டுமில்லை ஒரு வாழையையே வீட்டில் கன்ஸர்வேட்டரியில் வச்சுருக்கேன்.

said...

வாங்க சந்தனமுல்லை.

உங்களுக்குக் காஃபி கொடுக்கவேண்டியநாள் சமீபிக்குது.
'அந்தக் காஃபிச்செடி' தளதளன்னு என் உயரத்துக்கு வளர்ந்து நிக்குது.

ஒரு ஒன்னரையடி மேடையில் வச்சுருக்கேன்:-)))))

said...

வாங்க குசும்பன்.

அதென்ன ஒன்னேஒன்னு? எல்லாத்தையும் எடுத்துக்கலாம். பிரச்சனை இல்லை:-)

said...

வாங்க அமுதா.

அழகுக்கு அழகென்றே பெயர்:-))))

said...

வாங்க கோபி.

இந்த ஆரும்லிலியில் ஒரு விநோதம் போனவருசம் பூத்துமுடியும் சமயம் பார்த்தேன். போட்டோப் புதிருக்காகப் படம் எடுத்துவச்சுருக்கேன்:-)

அந்தப் பெயர் தெரியாத பூக்கள் க்ளோஸப்பில் ரோஸா மாதிரி இருக்கு!

said...

வாங்க இளா.

பாலியந்தஸ் குளிரைத் தாங்குது. இதெல்லாமே மூணுவருசம் முந்தி வச்ச செடிகள். வருசாவருசம் செத்துட்டு அப்புறம்தானே உயிர்பிழைச்சு வந்துக்கிட்டு இருக்கு.

அடுத்த சீஸனுக்காவது இன்னும் மற்ற நிறங்களில் வாங்கி வைக்கணும்.

மற்றபடி கெமிலியாக்கள், ரோடோஸ் எல்லாம் குளிர்காலத்துப் பூக்கள்தான்.

said...

வாங்க காரூரன்.

தோட்டநகரில் இருந்துக்கிட்டுத் தோட்டம் வைக்கலைன்னா எப்படி?

ஆனால் 'ஈஸி மெயிண்டனன்ஸ்' என்ற பெயரில் எல்லாவற்றையும் தொட்டிகளில் வச்சுருக்கேன்.

said...

வாங்க ரத்னேஷ் சீனியர்.

பூக்கள் ரகசியத்தைக் காப்பாற்றாதாம். அது எல்லாத்தையும் வாசனையா வெளியிடுமாம். அப்படி ஒரு வரம் வாங்கி இருக்கு:-))))

said...

ராமலக்ஷ்மி,

கோகி ரொம்பப் ப்யாரா. பழகிட்டான்னா ஒரே ஜொள்ளுதான்:-))))

said...

//அழகு? உங்க பெயரைவிடவா? !!!! //

ஆஹா, குளுகுளுன்னு இருக்கே :)))

said...

அழகோ அழகு அள்ளிக் கொள்ள :))

said...

மெய்யாலுமே உங்க வீட்டுப் பூக்களா?
வலைப்பூக்களை விட
அதிகமாக இருக்கும் போலிருக்கு.
ஒவ்வொரு பூக்களுமே ஒரு கவிதை/அழகு

said...

வாங்க புதுக அப்துல்லா.

இதுதான் அள்ள அள்ளக் குறையாத அழகுதானே......... அள்ளிக்குங்க:-)

said...

வாங்க ஜோதி பாரதி.

கவிஞர் கண்களுக்கு அழகை ரசிக்கச் சொல்லித்தரணுமா என்ன?:-))))

வருகைக்கு நன்றி.

said...

அழகு

http://adiraijamal.blogspot.com

said...

வாங்க அதிரை ஜமால்.

நன்றி.

said...

டீச்சர், பூக்களெல்லாம் அழகு..
உங்க வீட்டுக்கு ஒரு முறை வந்து எல்லாத்துலயும் செடியா அள்ளிட்டுப் போகணும் போல இருக்கு... :)

அப்புறம் டீச்சர், மிஸஸ்.செல்வமணியை உங்க தோட்டத்துல காணோமே ? பிடிக்காதா உங்களுக்கு?

said...

வாங்க ரிஷான்.

மிஸஸ் செல்வமணி இப்பத்தான் மொட்டுவிட்டுக்கிட்டு இருக்காங்க. இப்ப சீஸன் இல்லை. எப்படியும் நவம்பர் வரணும்.