Thursday, October 30, 2008

பீம்பாய் பீம்பாய் புதிருக்கான விடையச் சொல்லிட்டுப் போகலாமே

எஸ் பாஸ். அதேதான் பாஸ். நீங்களே கோடி காமிச்சீங்களே பாஸ்.
மக்கள்தான் பாஸ், அதைச் சரியாப் புரிஞ்சுக்கலை.

இல்லையே....புதுசா நம்ம வகுப்புலே சேர்ந்திருக்கும் மாணவி சிந்து, சரியான பதிலைக் கண்டுபிடிச்சுட்டாங்களே.....

அப்படியா பாஸ். எனக்குச் சொல்லவே இல்லையே பாஸ்.

புது மாணவி சிந்துவுக்கு எல்லாரும் சேர்ந்து ஒரு 'ஓஓஓஓஓஓஒ' போடுங்க:-))))

சரிங்க பாஸ்....ooooooooooooo

படம்: மைக்கேல் மதன காமராஜன்.

ரம்பம் பம் ஆரம்பம்

Love has started
It gives me happiness
I didn't sleep from 7 to 8 days
thinking you



சுந்தரி நீயும் சுந்தரன் நானும் சேர்ந்திருந்தால் .
If both we join together, it is a festival
our eyes and hands have joined.
It is a good time.


சிவராத்திரி, தூக்கம் ஏது....
It's a non sleeping day.
Don't sleep
We won't sleep on
our first night



அடுத்த பாட்டில் இந்த கோனை எதுக்கு இருக்கு?
குற்றாலம் என்றதை இப்படி ஆக்குன மகானுபாவன் யார்?
Your touch is like jasmine & cool like konai!
This girl will live & talk with me forever

36 comments:

said...

சிந்துவுக்கு என் வாழ்த்துக்கள்!

யோசித்து யோசித்து மண்டை காய்ந்தே போக, I gave up. ஹிஹி.

said...

என்ன கொடுமை ரீச்சர் இது?

said...

வாங்க ராமலக்ஷ்மி.

படத்தில் பாடல் மொழி பெயர்ப்பைக் கவனிச்சதாலேதான் எனக்கும் புரிஞ்சது.

இல்லேனா நானும் அம்பேல்தான்!

சிந்து நிஜமாவே க்ரேட்!

said...

வாங்க கொத்ஸ்.

என்ன கொடுமை...?

இது வேற படமாச்சே:-)

said...

அட போங்கப்பா.. இருக்கிற ஒன்னு ரெண்டும் போயிரப்போவுது..

said...

//புதுசா நம்ம வகுப்புலே சேர்ந்திருக்கும் மாணவி சிந்து, சரியான பதிலைக் கண்டுபிடிச்சுட்டாங்களே.....
//

குட் கேர்ள்!

வாழ்த்துக்கள் டீச்சர்!

said...

//இலவசக்கொத்தனார் said...
என்ன கொடுமை ரீச்சர் இது?//


ரிப்பிட்டிக்கிறேன் டீச்சர் :))))

said...

டீச்சர், இவ்வளவு கஷ்டமான புதிருக்கு விடை சொல்லி இருக்காங்களே ஒரு வேளை சிந்து தான் இந்த மொழிபெயர்ப்பு செய்து இருப்பாங்களோ?
(ஹிஹிஹி புது ஸ்டூடண்டாச்சே... அதான் இராக்கிங் நடக்குது)

said...

ஒத்துக்கிறேன் சிந்து பெரிய ஆளுங்கிறத ஒத்துக்கிறேன்!

said...

ஒண்ணுமே புரியலை !!!!

said...

என்ன கொடுமை டீச்சர் இது?

சிந்துவுக்கு பாராட்டுக்கள்.. நல்லா பாருங்க அந்த முழி பெயர்ப்பை உங்களுக்கு அனுப்பனதே அவங்களா இருக்கப்போவுது.. :)))

Anonymous said...

கோனைங்கறது பாபுவா நியூ கினில பேசப்படற மொழியாச்சே.:)

said...

பாட்டு அனுபவம் மிக்க சிந்துவுக்கு வாழ்த்துகள், இந்தக் கோனையன் தான் கொஞ்சம் குழப்பிட்டது! :(

said...

நன்றி நன்றி! என்னையும் உங்ககூட சேர்த்துகிட்ட துளசி மேடத்துக்கு ரொம்பவும் நன்றி.

said...

நன்றி நன்றி! என்னையும் உங்ககூட சேர்த்துகிட்ட துளசி மேடத்துக்கு ரொம்பவும் நன்றி.

said...

நன்றி நன்றி! என்னையும் உங்ககூட சேர்த்துகிட்ட துளசி மேடத்துக்கு ரொம்பவும் நன்றி.

said...

போன பதிவில் படிச்சிட்டு மண்டை ய குழப்பி யோசிச்சேன் ..ஆனா நேரமில்லாததால் அதிகம் குழப்பிக்க முடியல.. நல்லாவே மொழி பெயர்த்திருக்காங்க..புதுமாணவிக்கு ஒரு ஓஓஓஓஒ

said...

சிந்துசுபாஷ் எங்கியோ போயிட்டீங்க.வாஹ்,வாஹ்


துளசி, இந்தக் கோனை அருவி சென்னை பக்கத்தில இருக்கு. ஒரு வேளை முழி பெயர்த்தவங்க அதைத்தான் சொன்னாங்களோ என்னவோ!!!!!!

said...

\\ILA said...
அட போங்கப்பா.. இருக்கிற ஒன்னு ரெண்டும் போயிரப்போவுது..
\\

ரீப்பிட்டே ;)

வேற வழி தெரியல டீச்சர் ;))

said...

யாருங்க இப்படி மொழி பெயர்த்தது,டிவிடி சப்டைட்டிலா?

said...

என்னங்க இளா இப்படி?
விவசாயி, நிலம் தரிசலுன்னு சொல்லலாமா? :-)

said...

வாங்க ஆயில்யன்.

கொடுமை கொடுமைன்னு கோயிலுக்குப் போன கதைதான்!

said...

வாங்க தமிழ் பிரியன்.

அட! இருக்குமோ? நீங்க சொன்னபிறகு எனக்கும் லேசா இந்த சந்தேகம் வருதே....

said...

வாங்க குசும்பன்.

புதுசாவந்தப் பெரிய ஆளு அவுங்க.

(ஐயோ...நம்ம பதிவுக்குப் பெரிய ஆளுங்க வந்துபோறாங்கன்னு மலைப்பா இருக்கே)

said...

வாங்க நசரேயன்.

வகுப்புத் தலைவர், கடமை தவறாக் கொத்ஸ்கிட்டே கேளுங்க. விலாவரியாச் சொல்வார்:-)

said...

வாங்க வெண்பூ.

இந்த வேலை கிடைக்குமான்னு தேடணும். நம்மளும் கொஞ்சம் பூந்து வெளையாடலாம்:-)

said...

வாங்க சின்ன அம்மிணி.

மொழி பெயர்ப்பாளர் பாப்புவா நியூ கினிவரை வந்துட்டுப்போனாரோ என்னவோ?

said...

வாங்க கீதா.

அந்த 7, 8 ஐவச்சுக் கண்டுபிடிச்சுருப்பாங்கன்னு நினைக்கிறேன்.

கோனையன் எல்லாரையுமே குழப்பிவிட்டுருக்கான்.

said...

என்னங்க சிந்து.
இப்படி ஒரேதா உணர்ச்சிவசப்பட்டா எப்படி?

இல்லே 3 முறை சொல்லக் காரணம் ஏதும் இருக்கா?

தேவையில்லாம ஒரு பழமொழி வேற நினைவுக்கு வந்து தொலைக்குதே....

said...

வாங்க கயலு.

'இதுக்குப்போய் அலட்டிக்கலாமா?'ன்னு ஒரு பாட்டு இருக்கு:-)))

said...

வாங்க வல்லி.

முழி பெயர்த்தவர் குற்றாலம் போனதில்லை போல:-))))

தெரிஞ்சதைச் சொன்னாப் போதுமுன்னு இருந்துட்டார்

said...

வாங்க கோபி.
வேற வழி தெரியலையா?


எல்லாருக்கும் வாசல்தான் வழி:-))))

said...

வாங்க வருங்கால முதல்வர்.

உங்க ஆட்சியில் டிவிடி சப்டைட்டில் சரி பண்ண ஒரு புது இலாகா போட்டுருங்க:-)

said...

மன்னிக்கனும்… அனுப்புகின்ற முறையில் ஒரு சின்ன குழப்பம் அதனால் தான் 3 முறை.

said...

நானு விடுமுறையில் இருந்ததால இதுல கலந்துக்க முடியல டீச்சர். இனி இந்த வகுப்புக்கு மட்டுமாவது வரணும்.

எனக்காக இந்த சப்ஜக்ட்ல மட்டும் ஒரு வீட்டுப்பாடம் தனிப் பதிவா கொடுக்கவும்:)

said...

வாங்க மது.

நானும் செல்லில் இருந்ததாலே உடனே பதில் போட முடியலை:-))))

வீட்டுப்பாடம் எல்லாமே மாணாக்கரின் விருப்பப் பாடம்தான்.

எழுதுங்க...ஜமாய்ச்சுறலாம்:-))))