Tuesday, January 27, 2009

வீடு மாத்திக்கிட்டு வர்றதுன்னா இப்படியா?

அந்த வீட்டுலே இருந்து சாமான்களைக் கொண்டுவந்து புது இடத்துலே நமக்கு ஏத்தாப்போல அடுக்கமாட்டாங்களாம். அந்த வீட்டையே பெயர்த்து எடுத்துக்கிட்டு வந்து வச்சுருவாங்களாம். பிரமிப்புதான்.

எங்க பக்கத்துலே ஒரு அபூர்வமான கடல் சிப்பி கிடைக்குதுங்க. உலகத்துலே அழகான வர்ணங்கள் உள்ளதுன்னு இதை எல்லோரும் நம்ம விக்கிபீடியா உள்பட புகழுறாங்க. நியூஸியின் தெற்குத் தீவில் கட்டக் கடைசி வால் இருக்குபாருங்க, அந்தப் பாகத்துலே இருந்து அண்டார்ட்டிக் வரைக்கும் இடைப்பட்டக் கடல் பகுதிகளில் உயிர்வாழும் ஒரு சிப்பி இனம் பாவாச் சிப்பிகள். Paua shells. நல்லா விரிச்சுவைச்ச உள்ளங்கை அகலத்துக்கு இருக்கு. ச்சும்மாப் பார்த்தீங்கன்னா அழுக்கு வெள்ளை நிறத்தில் மொத்தையா இருக்கும். எல்லாம் அதுமேலே ஒட்டிப் பிடிச்சிருக்கும் கால்சியம், கடலுப்பு சமாச்சாரங்கள். வெளிப்புறமாச் சுரண்டி எடுத்தீங்கன்னா...... நம்ம ஆரெம்கேவி, சென்னைசில்க்ஸ் எல்லாம் தோத்துச்சு. அப்படி ஒரு நிறம். மயிலை நினைவுபடுத்தும் வண்ணம்.



நம்ம வீட்டுலே ஒரு காலத்துலே வாங்கிவச்சது. இன்னும் முழுசாச் சுரண்ட நேரம் கிடைக்கலை(-:

சிப்பிகளைக் கண்டமானம் தேய்ச்சுறமுடியாது. கொஞ்சம் மென்மையான வகை. அப்படியே நொறுங்கிப்போயிரும் சில சமயம். இதுக்குன்னே காரையைச் சுரண்டி எடுக்கப் பயன்படும் கருவிகள் இருக்கு. எல்லாத்தையும் செவ்வனே செதுக்கி, பாலீஷ் செஞ்சீங்கன்னா.....வச்ச கண்ணை எடுக்க முடியாது. இந்தச் சிப்பித் துண்டுகளை வச்சு நகை நட்டெல்லாம் செய்யறாங்க.

நியூஸி நாட்டின் தென்கோடியிலே (Bluff) ப்ளஃப்ன்னு ஒரு ஊர் இருக்கு. அங்கே ஒரு ஜோடி. ஐயா பெயர் Fred அம்மா பெயர் Myrtle. ஃப்ரெட் அங்கே துறைமுகத்தில் கட்டட வேலை. இந்த பாவாச் சிப்பிகள் மேலே ஒரு ஈடுபாடு. மனைவிக்கும் இதே மாதிரி. கல்யாணம் கட்டுனது 1930லே. சிப்பிகளைச் சேகரிச்சு, வீட்டு வரவேற்பறை முழுக்கப் பரத்தி வச்சுத் தரையில் நடக்கவே முடியாம இருந்துச்சாம். 27 வருசமா இந்த அறையைப் வீட்டைப் பெருக்கவே இல்லையே. கொஞ்சம் இதையெல்லாம் நகர்த்தி வையுங்கன்னு அம்மா சொன்னதுதான் ஒரு டர்னிங் பாய்ண்ட்.

Fred & Myrtle Flutey


'இதோ.... இப்பப் பாரு'ன்னு நல்லாச் சுத்தம் செஞ்ச பாவாச் சிப்பி ஒன்னை, வீட்டுச் சுவத்துலே ஆணி அடிச்சு மாட்டுனாரு ஐயா. ஆஹா.... ஐடியாக் கிடைச்சிருச்சு. இது நடந்தது 1961 வது வருசம். அப்ப நினைச்சுக்கூடப் பார்த்திருக்க மாட்டாங்க வீட்டுச் சுவர் முழுக்க ஆணியாலே நிரம்பப் போகுதுன்னு!!!!! உள்ளங்கை அகலச் சிப்பிகள் ஏறக்குறைய 1200.

ஆர்வம், அதீத ஆர்வம் பயங்கரமாப் பெருகி வீட்டு வரவேற்பு அறை முழுசும் பாவா(ய்) பாவா(ய்) கூடவே திமிங்கிலத்தில் பற்கள், கொஞ்சம் வெவ்வேற வகையான சங்கு, சிப்பின்னு மனுசர் கால் வைக்க இடமில்லாம எங்கெங்கு காணினும் சிப்பிகள். வேடிக்கை பார்க்க ஊர் ஜனம் வர ஆரம்பிச்சு , வெளிநாட்டு மக்கள் கூடத் தேடிவந்து பார்த்துட்டுப்போனாங்க. அந்த ஊருக்கு ஒரு ஐகானா மாற ரொம்ப நாள் எடுக்கலை. எண்ணி ரெண்டே வருசம். தினம் தினம் வீட்டைப் பொதுமக்கள் பார்வைக்கு விடறதுன்னா ச்சும்மாவா?
1963 முதல் 2000 வருசம்வரை தினம் காலை 9 முதல் மாலை 5 வரை 37 வருசம். இவுங்களோட 70 வருசத் திருமணவாழ்க்கையில் கடைசி 37 வருசம் கோலாகலமா, புதுசுபுதுசாச் சந்திச்ச மக்கள் மட்டும் 10 லட்சத்துக்கும் கூடுதலாம். இங்கே வேணுமுன்னாப் போய்ப் பார்த்துட்டு வாங்களேன்.

சாதாரணமா ஒரு சிப்பியைச் சுத்தம் செஞ்சு பாலீஷ் செய்ய ரெண்டு மணி நேரத்துக்கும் மேல் எடுக்குமாம். இந்த ஐயா ஒரு நாளைக்கு ஆறு மணி நேரம் இதே வேலையா இருப்பாராம்!!!

சுற்றுலாத் துறை, இவுங்க சேவையைப் பாராட்டிப் பத்திரமெல்லாம் வழங்குச்சு. நியூஸியில் தொலைக்காட்சி ஆரம்பிச்சக் காலக்கட்டங்களில் அம்மாவும் ஐயாவும் ஐஸ்கிரீம், ப்ரெட் இதுக்கெல்லாம் மாடலிங் செஞ்சு விளம்பரப்படங்களில் வந்துருக்காங்க. ரொம்ப ஜாலியான தம்பதிகள்.

மே மாசம் 2000 வருசம், அம்மா தன்னோட 89 வயசுலே இறந்தாங்க. அதுக்குப்பிறகு ஒன்னரைவருசம்தான் ஐயா தாக்குப் பிடிச்சார். பல்லைக் கடிச்சுக்கிட்டு இன்னும் ரெண்டுவருசம் இருந்துருக்கலாம், நூற்றாண்டைக் கொண்டாடி இருப்பார்(-:. வீட்டை அப்படியே ஒரு ம்யூஸியமா வைக்கணுமுன்னு அவுங்களுக்கு ஆசை இருந்துருக்கு. ஆனா வாரிசுகளுக்கு வேற ஆசைகள் இருந்துருக்குமில்லே?


shells inside house
உயில்படி வீட்டுக்குச் சொந்தக்காரனான பேரன், ஒருநாள் ராவோட ராவா வந்து எல்லாச் சிப்பிகளையும் கழட்டி எடுத்துக்கிட்டு வீட்டை விக்கப் போட்டுட்டார். எங்க ஊர் மியூஸியத்துக்கு அந்தச் சிப்பிகளை 10 வருச ஒப்பந்தத்துக்கு விட்டுருக்கார் பேரன்.

இதுதான் ப்ளஃபில் இருந்த ஒரிஜனல் வீடு

எங்க மியூஸியம் ஆளுங்க என்ன பண்ணாங்கன்னா...... ஐயா & அம்மா வீட்டை அப்படியே பெயர்த்துக் கொண்டுவந்தமாதிரி அதே டிஸைனில் இங்கே மியூஸியத்துக்குள்ளேயே ஒரு ஹாலில் வீட்டைக் கட்டிட்டாங்க. வரவேற்பு அறை அங்கே எப்படியோ அதே போல. கூடவே ஒரு குட்டித் தியேட்டர் (20 பேர் உக்காரலாம்) அதுலே ஐயா அம்மா இதை எப்படி ஆரம்பிச்சாங்கன்னு எடுத்த குறும்படம் போட்டுக் காமிக்கிறாங்க. சின்னக் குழுவா உள்ளே அனுப்புறாங்க. 10 நிமிசப் படம். அது முடிஞ்சதும் வெளியேவந்து 'பாவா' வீட்டுக்குள் போறோம். தொடர்ந்து காலை 9 முதல் 5 வரை இங்கே பார்வையிட முடியும். எனக்கு அவ்வளவா மன சம்மதம் இல்லாமப்போனது ஒரே ஒரு விஷயம்தான். குறும்படம், நியூஸி தேசீய கீதத்துடன் ஆரம்பிக்குது. காலநேரம் இல்லாம தினமும் 9 மணிநேரம் ஒவ்வொரு 20 நிமிசத்துக்கும் தேசிய கீதம் ஒலிப்பது சரின்னு எனக்குப் படலை. தேசிய கீதம் இசைக்கும்போது அதுக்குரிய மரியாதை காமிக்கப்படவேணாமா? இதைப் பத்தி ம்யூஸியத்துக்கு ஒரு கடிதம் எழுதணுமுன்னு இருக்கேன்.

வீட்டைக் கட்டி......


ஆணிகள் அடிச்சு.........


காட்சிக்கு வச்சாச்சு!!!!

இதுவரை 75,000 பேர் வந்து பார்த்துட்டுப் போயிருக்காங்க. நமக்கும் 609 கிலோமீட்டர் பயணம் மிச்சம்:-)

என்னதான் இந்த விசேஷச் சிப்பிகள் அழகுன்னு சொன்னாலும்................ வீட்டை விட்டு வெளியில் வரும்போது ஒரே ஒரு பழமொழிதான் மனசுக்குள்ளே வந்தது.

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும்........................

32 comments:

said...

சிப்பிகளைப் பிரிச்சி வேய்ஞ்சுட்டாங்க.... இஃகிஃகி!

said...

ரீச்சர்,

கடைசி வரி படிச்சேன். பதிவு நீளத்தைப் பார்த்தேன். நிற்க அதற்குத் தகன்னு முடிவு பண்ணி...... ஹிஹி.... :)

said...

யப்பா...எவ்ளே பெரிய சிப்பி...எவ்வளவு சிப்பி..!!!!!

said...

நல்லா இருக்கு டீச்சர், ஓசியிலே நியூசி சுத்தி பார்க்க வைக்கிறதிற்கு நன்றி.
நான் இன்னைக்கு பாட குறிப்புகள் எல்லாம் எடுத்து இருக்கேன்.அதனாலே எனக்கு சிறந்த மாணவன் விருது கிடைக்குமா?

said...

இத்தனை சிப்பிங்களை எப்படிச் சேர்த்திருப்பாங்கன்னு நினைச்சாதான் மலைப்பா இருக்கு

said...

வாங்க பழமைபேசி.

அதே அதே:-))))

said...

வாங்கய்யா கொத்ஸ்,


'நிற்க அதற்குத் தக' ரொம்பச் சரி. ஆனால்.... எப்ப?

கற்றவை கற்றபின்.

அதுவும் எப்படி?

கசடறக் கற்றபின்.

ச்சும்மாக் கடைசி வரி மட்டும் படிச்சுட்டு......

வகுப்புத் தலைவன் இப்படி இருந்தா வகுப்பு வெளங்கிரும்!

ரோல் மாடலா இருக்காம இப்படி Roll மாடலா இருந்தா......

said...

வாங்க கோபி.

ஆமாம் ஆமாம் .....ரிப்பீட்டேய்.......

said...

வாங்க நசரேயன்.

சிறந்த மாணவன் விருதா? எதுக்கு இதெல்லாம்.....
பேசாம ஒரு பத்ம ஸ்ரீ கொடுத்துறலாம் பிரச்சனை இல்லை:-)

said...

வாங்க இளா.

முப்பது வருச சேமிப்பு அப்படியே கடைசிவரை வளர்ந்துக்கிட்டே இருந்துருக்கு.

இதைப் பார்த்தபிறகுதான்....
நம்ம வீட்டு யானைக் கலெக்ஷனைப் பத்தி யோசனையா இருக்கு.

நிறுத்தும் நேரம் வந்தாச்சுன்னு நினைக்கிறேன்.

said...

ஹ்ம் இங்கயும் வந்துட்டாங்களா விஜி... இப்பல்லாம் இப்படி அதிகம் பின்னூட்டம் வருதுப்பா..

நல்லா இருக்கு பட்டுபுடவை சிப்பி நகை சிப்பி... :) ஆனா அது மேலயெல்லாம் ஆசை இல்லாததால்.. விட்டுறலாம்..

நாங்களும் சுத்திப்பாத்துட்டோம் .. (எத்தனை மைல் மிச்சம்ன்னு தெரியல)

Anonymous said...

//27 வருசமா இந்த அறையைப் வீட்டைப் பெருக்கவே இல்லையே//

பெருக்கறேன்னு இவ்வளவு நாளா சேத்ததை யாராவது உடைச்சிட்டாங்கன்னா. :)

said...

மிக அருமையான பதிவு. சிப்பிகளின் உலகம் கவர்கிறது

said...

நம்ம வீட்டுலே ஒரு காலத்துலே வாங்கிவச்சது. இன்னும் முழுசாச் சுரண்ட நேரம் கிடைக்கலை(-:

சுரண்டி முடிச்சு வீட்டுல ஆணி அடிச்சவுடன் போட்டோ போடுங்க டீச்சர்

நல்ல பதிவு.

said...

அந்த பெரியவர்க்கு நிறைய (அந்த)காலம் இருந்தது போல் இருக்கு!!

said...

அருமையான சிப்பி பதிவு.. சிப்பி இருக்குது முத்தும் இருக்குது சுத்தம் செய்ய நேரமில்லடி ராசாத்தி!!! ஹூம் இவர் கிட்ட சொல்லனும்.. நான் ஒன்னும் ஜங்க் சேக்கலை.. அருங்காட்சியகம் வைக்க போரேன்னு...

said...

ரீச்சர்! உங்க கிட்ட பிடிச்சதே இந்த டைமிங் காமடிதான்! Roll மாடல் சூப்பர்!

எடக்கு முடக்கா பின்னூட்டம் போட்டா எடக்கு முடக்கா பதில் வருது!

சாதாரனமா போட்டா சாதாதரனமா வருது!

நான் இன்னிக்கிலேர்ந்து உங்க கிளாஸ் வால்பையன்! என்னை அடக்க முடியாதே கிஃகிஃகிஃஃகி

said...

ரீச்சர்! உங்களுக்கு ஒரு க்விஸ்! இந்த கிஃகிஃகிஃகி க்கு யார் காப்புரிமை???

சரியா சொன்னீங்கன்னா ஒரு அபி கவிதை அபராதம் சாரி பரிசு(அவ திட்ட போறா)

said...

வாங்க விஜி.

அதென்ன நியூஸ் பானை?????

said...

வாங்க கயலு.

இந்தச் சிப்பி நகை பார்க்க நல்லாவே இருக்குப்பா. எல்லாம் கருப்புக் கயறுலே கோர்த்துக் கட்டிக்கும் தாயத்து!!!!

said...

வாங்க சின்ன அம்மிணி.

அதானே? பெருக்கறேன்னு வகுத்துட்டாங்கன்னா......

கூட்டறேன்னு கழிச்சுறாம இருக்கணும். இல்லே?

said...

வாங்க டொக்டர் ஐயா.

கடலுக்குள்ளே ஒரு அபூர்வ உலகம் இருக்கே!!!!!

said...

வாங்க அமித்து அம்மா.



ஆணி பிடுங்கவே நேரம் சரியா இருக்கு, இதுலே எங்கே ஆணி அடிக்கறதாம்?

சுரண்ட நேரமில்லைப்பா.

said...

வாங்க குமார்.

இதுவும் ஒருவித அப்ஸஷென்.

வீடு கூட்டற நேரம் மிச்சமுன்னு இந்த வேலையில் இறங்கிட்டார்போல!!!!

'காலம்' இப்ப கோவி கையிலே இருக்கு:-)

said...

வாங்க இலா.

சிலபேர் ஜங்க்ன்னு நினைப்பது சில பேருக்கு ட்ரெஷர்ன்னு சொல்லி 'வையுங்க'ளேன்.

said...

வாங்க அபி அப்பா.

வால் பையனா?

கொத்ஸ் வந்துக்கிட்டே இருக்கார்......

இஃகி பழமை பேசி

கி கி தூயா

கிஃகி ????

அப்ப நீங்களேதான் இதுக்குக் காப்பிரைட்.

பிகு:
எனக்கும் கவிதைக்கும்
காத தூரம்!

said...

// அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும்........................//


முக்காலத்துக்கும் பொருந்தும் உண்மையை
மூணே வார்த்தைகளில்
சொல்லி விட்டீர்களே !!

சுப்பு ரத்தினம்.

said...

துளசி மேடம் ரொம்ப அருமயா சிப்பியை எல்லாருக்கும் காட்டிங்க. சிப்பி என்றால் இந்த மாதிரி கூட இருக்குமா என்று ஆச்சரியபடவைத்துட்டிங்க. நன்றி மேடம்.

said...

எவ்ளோ சிப்பிகள் நம்மளால பாரமே இல்லாத முத்திரைகளை கூட தொடர்ச்சியா சேகரிக்க முடியறதில்லை...

said...

வாங்க சூரி.

நான் எங்கே சொன்னேன்? நமக்கு முன்னாலேயே வாழ்ந்துட்டு போனவங்க இதையெல்லாம் கவனிச்சுச் சொல்லிவச்சுட்டுப் போயிட்டாங்களே.

நம்மை எங்கே சொல்ல விட்டாங்க?:-)

said...

வாங்க இண்டியாடேஸ்ட்ஸ்.

உங்க டேஸ்ட் அருமைதான். நல்லா இருப்பதை ரசிக்கவும் ருசி இருக்கணுமே!

said...

வாங்க தமிழன் - கறுப்பி.

ஐயோ..இப்ப எதுக்குத் தபால்தலையை ஞாபகப்படுத்துறீங்க:-)))))

அதுவேற ஒரு பக்கம் குவிஞ்சு கிடக்கு. ஒரு நாலுநாள் உக்கார்ந்தாதான் வேலை ஆகும்.