Sunday, April 26, 2009

உன்னை விடமாட்டேன்னு குறுக்காலே புகுந்து இப்படி இழுத்தா.......(2009 பயணம் : பகுதி 16)

'திருச்செந்தூர் கோவிலைப் பகலில் மூடுறதே இல்லை. பேசாம அங்கே போய்ச் சாப்பாட்டையும் முடிச்சுக்கிட்டுக் கோவிலையும் தரிசிச்சுட்டு இங்கே வந்துறலாம்'. ஆஹா....ஒரே கல்லில் ரெண்டு மாம்பழம்(எனக்குக் காய் பிடிக்காது)
முக்கால்மணி நேரப் பயணம்தான். நிறைய பக்தர்கள் வருகையுடன் ஊரே ஜேஜேன்னு இருக்கு. இன்னிக்கு மகா சிவராத்திரிப் பண்டிகை. காவேரி உணவகத்தில் சாப்பிடலாமுன்னு எங்களை அங்கே இறக்கிவிட்டுட்டு வண்டியை நிறுத்திட்டுவரேன்னு போயிட்டார் உலகநாதன். இறக்கிவிட்ட இடத்தில் கண்ணுக்கு நேரா ஒரு தேநீர்க்கடை. ஹைய்யோ....
கண்ணைப் பறிக்குது வடைகள் மசாலும் மெதுவுமா. சில்லுக்கருப்பட்டி ஸ்டால் வா...அருகில் வா ன்னு மயக்குது. 'சொக்கா...இது எனக்கில்லை'ன்னு காவேரியில் எட்டிப்பார்த்தால் கால்வைக்க இடம் இல்லை. இதுக்கு எதிர்வரிசையில் அசோக் ன்னு ஒரு உணவகம். (வித்தியாசமான ஸ்பெல்லிங் பெயர்ப்பலகையில்)அங்கே போய்ப் பார்த்தோம். அங்கேயும் இடமில்லை. ஆனால் வெளியே மெனு எழுதிவச்சுருந்தாங்க. ஊஹூம்....ஒன்னும் சுவாரசியப்படலை.
இதுக்குள்ளே உலகநாதன் வந்துட்டார். காவேரியில் அவர் முதலில் நுழைஞ்சார். பெரிய டைனிங் ஹாலுக்குப் இடது பக்கம் இருக்கும் சின்ன டைனிங் ரூமில் எப்படியோ (?) இடம் கிடைச்சிருச்சு. (இதுக்கெல்லாம் கூட ஒரு டெக்னிக் இருக்குபோல.) மற்ற இருக்கைகளில் மக்கள் குடும்பம்குடும்பமா குழந்தையும் குட்டிகளுமா மொட்டைத் தலையோடும், கழுத்து 'நிறைய' ஜொலிக்கும் தங்க ஆபரணங்களோடும், பட்டுப்புடவைகளோடும் சாப்புட்டுக்கிட்டு இருக்காங்க. 'தங்கம் விலை கூடிப்போச்சு. தங்கநகை அணிஞ்சால் ஆபத்து, நகைத் திருடர்கள் காத்துக்கிட்டு இருக்காங்க' போன்ற தினமலர்/தினத்தந்தி செய்திகள் எல்லாம் ஒரு கணம் மனசுலே வந்து போச்சு. நமக்குத்தான் ஊர் உலகத்துலே இல்லாத பயம் இருக்கு!
தென்னிந்திய சைவ உணவு. பரிமாறுனவர் என்னை ஒரு பரிதாப 'லுக்' விட்டுட்டு, 'ஒன்னுமே சாப்புடலையேம்மா'ன்னார். 'ஒரு ஸ்பூன் நெய் மட்டும் தாங்க'ன்னேன். பில் எழுதும்போது, 'இது என்னம்மா... குழந்தைச் சாப்பாடு? அரை சாப்பாடுன்னு எழுதறேன். ரெண்டரை'ன்னார்.

முருகனைக் காணப்போனோம். முருகனடியார்கள் நம்ம ஜீரா, உண்மைத்தமிழன், விஎஸ்கே எல்லாம் என்கூடவே வர்றாங்க. கோவிலுக்குள் நுழைஞ்சதும், ஒரு குருக்கள் 'மொத்தக் குடும்பத்துக்கும் சேர்த்து அர்ச்சனை பண்ணிறலாம் இந்தப் பக்கம் வாங்க'ன்னு கூப்ட்டுக்கிட்டு போனார். ' நூத்தியோரு ரூபாயை இங்கே கட்டிச் சீட்டு வாங்கிருங்க'ன்னார். வாய்பேசாமல் சொன்னதைச் செஞ்சோம். கையில் ஒரு அர்ச்சனைத் தட்டுடன் பெயர்களைக்கேட்டுச் சங்கல்ப்பம் ஆச்சு. குடும்பத்துலே கோகியையும் விடலை நான்.
அப்போ அங்கே வந்த இன்னொரு குருக்களின் கையில் எங்களை ஒப்படைச்சு, என் அண்ணாதான். கூடவே போங்கன்னுட்டார். அண்ணன் எங்களை உள்ளே கூட்டிட்டுப்போனார். சந்தனக்காப்பில் மூலவர் மின்னறார். அவருக்கு முன்னே ஒரு பத்தடி இடம் இருக்கு. அதை ஒட்டி இந்தப் பக்கம் 'ப' வைக் கவுத்துப்போட்டாப்போல கம்பித் தடுப்பு. அதுக்குள்ளே வரிசைவரிசையா மக்கள்ஸ் உக்கார்ந்துருக்காங்க.

'ப'முழுசும் நிரம்பியாச்சு. அண்ணன் எங்களைக் கூட்டிட்டுப்போய் கம்பிக்கு 'அந்தப் பக்கம்' உக்காரவச்சுட்டார். மக்களுக்கு எங்கள் முதுகைக் காட்டறதான்னு நடுவில் இடம்விட்டு நானும் கோபாலும் ரெண்டு பக்கத்திலும் ஒருவரை ஒருவர் பார்த்தமாதிரி திரும்பி உக்காந்தோம். பின்னால் 'ப'வில் இருக்கறவங்களுக்கும் மறைக்காமல் இருக்குமே. ஹைய்யோ..... சாமிக்கும் எங்களுக்கும் எட்டே அடி தான் இருக்கு. கீழே மண்தரை, நறநறன்னு..... ஹூ கேர்ஸ்? முருகனே, எட்டும் இடத்தில். வேறென்ன வேணும்?

அர்ச்சனைகள், தீபாராதனைகள் எல்லாம் ஆச்சு. பதினைஞ்சு நிமிஷம் போனதே தெரியலை. வெளியே வந்ததும் 'எந்த அண்ணன் தம்பி நமக்கு உதவுனாங்க? முகம் ஞாபகம் இல்லையே....' எனக்குத் தெரிஞ்ச அண்ணன் தம்பி புள்ளையாரும் முருகனும்தான். அங்கே இருந்த சின்ன மண்டபத்தின் படியில் உக்கார்ந்தோம். அண்ணனோ தம்பியோ வந்து நம்மைக் கண்டுபிடிக்கட்டும்.
தம்பி எங்கிருந்தோ 'தோன்றினார்.' விபூதிப் பொட்டலம், சந்தனம் குங்குமம், தேங்காய் பழம் இருந்த பையை எங்களிடம் கொடுத்துட்டு, ஒரு சின்ன மாலையை கோபாலின் கழுத்தில் போட்டு ஆசீர்வதித்தார். கோயிலைச்சுத்தி ரொம்ப நீளத்துக்கு மேற்கூரை போட்டு நல்ல குளுமையா இருந்துச்சு. அப்படியே நடந்து கடல் பக்கம் போனோம். பாதிப்பேர் தண்ணியிலும் மீதிப்பேர் தரையிலுமாய் நல்ல கூட்டம்தான்.


இந்தக் கூட்டத்துக்கிடையிலும் எங்கிருந்தோ கொண்டுவந்த எலும்புடன் 2 ஒரு பைரவர். கார் பார்க்கில் நின்னு பார்க்கும்போது....அடிக்கும் மொட்டைவெய்யிலில் ராஜகோபுரம் வெள்ளையாய் மின்னுது.
கருடன்கள் சிலர் வானத்தில். வள்ளிக்குகைக்குப் போகும்வழின்னு ஒரு தகவல் பலகை. இதுமட்டும் என்னவோ மலையாளத்தில் எழுதிவச்சுருக்கு.
இங்கே வரணுமுன்னு நம்ம பயணத்திட்டத்தில் இல்லை. தானாய் அமைஞ்சது. மேஜிக் ஷோ போல எல்லாம் சட்னு ஒரு மணி நேரத்துக்குள்ளே..... சரியாச் சொன்னால் 54 நிமிஷம்! முருகா முருகா.... விடமாட்டேன்றயே....இப்படிக் கூப்ட்டுக்கூப்ட்டு தரிசனம் தர்றயேப்பா.....நீ நல்லா இரு:-)
விட்டதைப்பிடிக்கணுமேன்னு தூத்துக்குடி வட்டத்தை விட்டு திருநெல்வேலி வட்டத்துக்கு வந்தோம். வழியில் ஒரு இடத்தில் (வரதராஜபுரம் கிராம ஊராட்சி?) கிராமதேவதைகள் கோயில் போல ஒன்னு இருந்துச்சு. சிலைகள் ஏதுமில்லை.
அப்பன் கோவில் செல்லும் வழின்னு ஒரு போர்டு. கிராமங்களைக் கடக்கும்போது ஆலமரத்தடியைப் பார்த்தாப்போதும், நாட்டாமை பஞ்சாயத்து செய்யறாரான்னு கண்ணு தேடும். தமிழ்ச் சினிமா அதிகம் பார்க்கும் எஃபெக்ட்டு.

தொடரும்.....:-)

45 comments:

said...

நானும் தான் 4 மாசத்துக்கு முன்னர் இங்கே போனேன். இப்படி விவரமா எழுத தெரியல பாருங்க. டீச்சர்ன்னா டீச்சர் தான். சில்லு கருப்பட்டி வாங்காம வந்துட்டீங்க போல. நெசமாவே நல்லா இருக்கும் இங்கே. யாசிப்பவரின் தொல்லை பற்றி ஒன்னுமே எழுதல. உங்களுக்கு அந்த பிரச்சனை வரலையோ?

said...

அந்த மேற்கூரையில் காக்கா உட்காரக்கூட இடம் கொடுத்திருக்கும் படி அமைத்திருப்பது நெகிழ்வாக இருந்தாலும் ....Alignment ஐ இதைவிட மோசமாக செய்திருக்க முடியாது.முருகா மன்னிசிருப்பா!!

said...

டீச்சர் இந்த பதிவு என்ன முருகன் ஸ்பெசலா!! ;)

\\இங்கே வரணுமுன்னு நம்ம பயணத்திட்டத்தில் இல்லை. தானாய் அமைஞ்சது. மேஜிக் ஷோ போல எல்லாம் சட்னு ஒரு மணி நேரத்துக்குள்ளே..... சரியாச் சொன்னால் 54 நிமிஷம்! முருகா முருகா.... விடமாட்டேன்றயே....இப்படிக் கூப்ட்டுக்கூப்ட்டு தரிசனம் தர்றயேப்பா.....நீ நல்லா இரு:-)\\

ஆகா...! ;)

said...

இந்தப் பதிவை நான் கன்னா பின்னா-ன்னு புறக்கணிக்கறேன்!
அது எப்படி முருகப் பய புள்ள தோள் மேல கை போட்டு பேசும் என்னைய இந்த டீச்சர் உள்ளாற கூட்டிக்கிட்டுப் போவாம போகலாம்? :(((

ஆனாலும் அந்தச் சில்லுக்கருப்பட்டி ஒன்னே ஒன்னுத்துக்காக உங்க பதிவைப் புறக்கணிக்காம வுடறேன்! நியுயார்க்குக்கு ஒரு ஓலைக் கருப்பட்டி பார்சேல்ல்ல்ல்ல்!

said...

அறிவால் அறிந்து உன் இரு தாள் இறைஞ்சும்
அடியார் இடைஞ்சல் களைவோனே!

அழகான செம்பொன் மயில் மீது அமர்ந்து அலைவாய் உகந்த பெருமாளே...

செந்தூர் அலைவாய் உகந்த பெருமாளே!

said...

திருச்செந்தூர் தரிசனம் நல்லா இருந்துச்சு. ஜிகேவிற்கு இங்கே மொட்ட போட்டு காது குத்திறலாமா?.அம்மா அப்பா அண்ணன் இவுங்கள மட்டும் பாத்துட்டு அவரை பாக்காட்டா? அதான் இழுத்துட்டார்.நாழிக்கிணறு பார்த்தீங்களா?.

said...

வாங்க காட்டாறு.

யாசிப்பவர்? அட! நிஜமாவே யாருமே கண்ணுலே படலையே. ஒருவேளை கோயில் உள்ளே கார் பார்க்கிங் வரை அவுங்களுக்கு அனுமதி இல்லை போல.

நிறைய காவல்துறையினர் ட்யூட்டியில் இருந்தாங்க. அதுலே ஒரு பெண் போலீஸ்தான் நமக்கு எந்த வழியில் போகணுமுன்னு வழியும் காட்டுனாங்க.

கருப்பட்டி முன்னொரு காலத்தில் தின்னுருக்கேன். இப்பெல்லாம் கண்ணால் தின்பதோடு சரி:-)

said...

வாங்க குமார்.

கட்டிடப்பணி ஆகட்டும், எல்க்ட்ரிகல் வேலை ஆகட்டும் நம்மூர்லே 'தரம்' எதிர்பார்க்க முடியாது.

கோபால் ஒயரிங்கைப் பார்த்துட்டு(அவரவர் தொழில்)ஐயோ ஐயோன்னு கூவிக்கிட்டு இருப்பார்:-)


எல்லாம் ஈஸ்வரோ ரக்ஷிது

said...

வாங்க கோபி.

இன்னிக்கு அக்ஷ்யத் திருதியை ஸ்பெஷலா முருகன் வந்துருக்கார் பதிவுலகுக்கு:-)

said...

வாங்க கே ஆர் எஸ்.

நீங்கதான் 'மாநிதி'யை விட்டு வரமாட்டேன்னு அடம்பிடிச்சீங்களே அப்புறம் எங்கே திருச்செந்தூர் கூட்டிவர்றது?

சில்லுக் கருப்பட்டி(படம்) அத்தனையும் உங்களுக்கே கொடுத்தாச்சு.

முருகா முருகா.....

said...

வாங்க ஐம்கூல்.

ஜிகேவுக்கு மொட்டை போடலாம் பிரச்சனை இல்லை. ஆனா யார் போட்டுவிடுவாங்க? வெட்'நரி' படிச்ச நாவிதர்கள் திருச்செந்தூர்லே கிடைக்கணுமே!!!

காது ஏற்கெனவே ஃபைட்டிங்லே கீறிக்கிடக்கு.

said...

//அசோக் ன்னு ஒரு உணவகம். (வித்தியாசமான ஸ்பெல்லிங் பெயர்ப்பலகையில்)//


அந்த ஏபெல்லிங்க்ல கழுதைப் பேர் ASS வருதுல்ல தல...


அதுனால ராசிங்க

said...

//அப்போ அங்கே வந்த இன்னொரு குருக்களின் கையில் எங்களை ஒப்படைச்சு, என் அண்ணாதான். கூடவே போங்கன்னுட்டார். //


:))

said...

//அடிக்கும் மொட்டைவெய்யிலில் ராஜகோபுரம் வெள்ளையாய் மின்னுது//

ஆனால் அதையும் மரத்தோடு படம் பிடிச்சி பசுமையா ஆக்கின டீச்சர் வாழ்க!
வெள்ளைக் கோபுரமும் பச்சை மரங்களும் பார்க்கவே குளிர்ச்சி!

//சந்தனக்காப்பில் மூலவர் மின்னறார்.
ஹைய்யோ..... சாமிக்கும் எங்களுக்கும் எட்டே அடி தான் இருக்கு//

எட்டாதவர்க்கும் எட்டும் அடி!
எட்டியவர்க்கோ எட்டே அடி!
ஒட்டியவர்க்கும் ஒட்டார்க்கும் ஓடி வந்து முகம் காட்டி,
முகத்திலே முறுவல் காட்டி,
முறுவலில் முருகு காட்டி,
முருகிலே மூலம் காட்டி,

அஞ்சு முகம் தோன்றில் ஆறு முகம் தோன்றும்
வெஞ்சமரில் அஞ்சேல் என வேல் தோன்றும்
நெஞ்சில் ஒரு கால் நினைக்கில் இரு காலும் தோன்றும்
முருகாஆஆஆஆஆ என்று ஓதுவார் முன்!

சந்தனக் காப்பிலே ஜொலித்தே சிரிக்கும் செந்திலாண்டவனை நானும் உங்களுடன் எட்டடி அண்மையில் இருந்தே எட்டி அணைத்துச் சேவித்துக் கொள்கிறேன்!

திருமகுடம் அவன் சென்னியில் திமீர் திமீர் என
திருநெற்றித் திரு நீறும் வெளீர் வெளீர் என
திருக்கண்கள் என்னைப் பார்த்து பளீர் பளீர் என
திருச்செவ்வாய் என்னிடம் வாடா வாடா என

கையிலே ஜெப மாலையும்
தோளிலே வெற்றி வேலும்
கழுத்திலே கடம்ப மாலையும்
இடுப்பிலே வெண் பட்டும் இறுக்கக் கட்டி

தழையத் தழையத் தொங்கும் பட்டு வேட்டி பாதங்களில் வீழ...உடன் அடியேனும் வீழ...
அந்த பாத கமலங்களில், பாதக மலம் அற...சிரம் தாழ்த்தி, கண்ணை மேலே திருப்பினால்....

சந்தனக் காப்பை முகவாய் ஓரமாக கொஞ்சமாய் வழித்து எடுக்கிறார் அர்ச்சகர்!
ஹைய்யோ! என் முருகன் குறு நகை காட்டிச் சிரிக்கின்றானே!

மூலத்தானத்து முதல்வன் சிரிக்கின்றானே!

செந்தூரின் செவ்வேள் சிரிக்கின்றானே!

முருகா! முருகா! முருகா!

said...

ம்ம்ம்.கண்போன போக்கிலா கார் போக விட்டு இப்ப இப்படிக் குறுக்கால புகுந்தாப்பில எழிதினா ஒத்துக்குவோமா.

அதெல்லாம் முருகன்ன் முன்னாஅடியே கொக்கி போட்டு விட்டுட்டாரு. கூடவந்தவரோ உலகநாதன். என்ன நல்ல இடம் திஎஉச்செந்தூர். அந்தக் காற்றையும்,மணலையும்,அலைகளையும் மறக்க முடியாது.
நாங்க போனபோது சாப்பிட்டபிறகு காலி டிபன் காரியரைக் கையில் பிடித்து நின்றோம்.
என்னையும் தள்ளி, காரியரையும் எடுத்துப் போய்விட்ட அலை, மீண்டும் அய்ய இது எனக்கு வேணாம்னு கொடுத்துவிட்டட்து:)

said...

டீச்சர், ரொம்ப நல்லா இருக்கு பதிவு. நாங்களும் இப்ப தான் திருச்சந்தூர் தரிசனம் பன்னிட்டு வந்தோம்.... பொறந்தா கோகியா பொறக்கணும், கொடுத்து வச்சவ, அர்ச்சனை எல்லாம் பன்றீங்களே

said...

உங்க சபரி அண்ணாத்தைக்கு மொட்டை போட்ட ஊரு.. :)

said...

வாங்க சுரேஷ்.


கழுதை ராசியா? அட! தெரியாமப்போச்சே. ஆனாலும் வரும்வழியில் ஒரு கழுதையைப் பார்த்தேன். எங்கூர்லே கழுதை இல்லையேன்னு அதைப் படமும் எடுத்துட்டேன்.

பதிவுக்கு ராசியா அதை அடுத்த பதிவில் போட்டுறலாமா?:-)))

said...

கே ஆர் எஸ்,

அடடா.....இப்படி முருகன் உம்முள் புகுந்து விளையாடுகிறானே!!!!

முருகா, ஞானபண்டிதா.... இப்படிப் பதிவர்களோடு நீ ஆடும் ஆட்டம் படிக்க இனிமையோ இனிமை.

தமிழ் ஞானப்பழம் நீயப்பா.......

said...

வாங்க வல்லி.

அலையையும் கண்ணில் கண்டதோடு சரி. தண்ணீரில் இறங்கிக் கால் நனைக்கலைப்பா(-:

said...

வாங்க அது ஒரு கனாக் காலம்.

குடும்பமுன்னு சொன்னால் அது கோபாலகிருஷ்ணனும் சேர்ந்துதானே:-))))

said...

வாங்க கயலு.

அட! அண்ணாத்தைக்கு மொட்டை போட்ட ஊரா? அதான் பார்த்ததும் பரவசமா இருந்துச்சு:-)

Anonymous said...

நல்ல வேளை நீங்க தண்ணீல இறங்கலை, சின்ன வயசில நாங்க போனப்போ என் அண்ணன் நீந்தறேன் பேர்வழின்னு நீந்தப்போய் ஆளைக்காணோம். குடும்ப நண்பர் ஒரு அண்ணாச்சி கடல்ல தேடிக்கண்டுபுடிச்சார். அண்ணன் ஜாலியா நீந்திக்கிட்டு இருந்தானாம்.

said...

ஒரு சஸ்தங்கதுல கேட்டது பெருமாள் பக்தர்களை மீனாக்ஷி அம்மன் எங்க அண்ணனோட பக்தர்களாச்சே வங்கனு வரவேர்பாலாம் அப்படித்தான் முருகனும் உங்கள குபிட்டு இருகார். நல்ல தரிசனம் போல் இருக்கே. கோவில்கல்லா எல்லாம் இப்போ வியாபாரம் அய்டுசு! அதுதான் வேதனை. இன்று ஸ்பெஷல் முருகனுக்கு உங்கள் பெரை சொல்லி நானும் ஒரு அரொஹரா!!!! அருண்மொழி

said...

திருசெந்தூருக்கே போய்ட்டு வந்த மாதிரி இருந்தது டீச்சர்...

செந்தூர்முருகன் அழகை பற்றி வருணிக்க வார்த்தைகள் இல்லை

நன்றி..

said...

//தினமலர்/தினத்தந்தி //
இதுக்குத் தான் படிச்சவங்க ரொம்ப பயந்தவங்கன்னு சொல்றாங்க போல

said...

டீச்சர், இந்தப் பதிவைப் பாருங்க... இந்த ஆஸ்ஹோக் பவந்தானே நீங்க பாத்த அசோக்பவன்.

http://gragavan.blogspot.com/2006/06/12.html

முந்தி திருச்செந்தூர் போனப்போ எழுதுன பதிவு.

said...

செந்தில் முருகா
பருகப் பாலுண்டு
அருந்தச் சோறுண்டு
வந்தார் சென்றார்
என்று கூட்டம் நூறுண்டு
இவர்களின் துயர் நீக்க வருவார்
உன்னைப் போல் யாருண்டு
உனக்கும் எங்கள் உள்ளத்தில்
ஊருண்டு
அதில் கோயிலுண்டு
அதற்குள் தேருண்டு
தினந்தோறும் திருநாளுண்டு!
உன் அருளுண்டு
வாழும் நெஞ்சில்
என்றென்றும் இடமுண்டு!

said...

// சாமிக்கும் எங்களுக்கும் எட்டே அடி தான் இருக்கு. கீழே மண்தரை, நறநறன்னு..... ஹூ கேர்ஸ்? //

டீச்சர்... அதுக்குக் காரணம் இருக்கு. அது மண்தரையில்லை. நல்ல கல்தரைதான். ஆனா கடக்கரை மணல் எல்லாரோட கால்ல பட்டு கொஞ்சம் கொஞ்சமா கோயிலுக்குள்ள வந்துரும். அதான் அப்படி.

// வழியில் ஒரு இடத்தில் (வரதராஜபுரம் கிராம ஊராட்சி?) கிராமதேவதைகள் கோயில் போல ஒன்னு இருந்துச்சு. சிலைகள் ஏதுமில்லை.
அப்பன் கோவில் செல்லும் வழின்னு ஒரு போர்டு. //

இந்த மாதிரிக் கோயில்களெல்லாம் தெக்குல ரொம்பப் பாக்கலாம். உள்ளூர்ச்சாமியா இருக்கும். எங்கூர்ல இதே மாதிரி கோயில். வெல்லக்கட்டி மாதிரி சாமி இருக்கும். அந்தக் கோயிலுக்குக் காச்சக்கார அம்மன் கோயில்னு பேரு.

said...

'//எந்த அண்ணன் தம்பி நமக்கு உதவுனாங்க? முகம் ஞாபகம் இல்லையே....' //

ஹிஹிஹி, அவங்க எப்படியோ கண்டுபிடிச்சுட்டு வந்துடறாங்க, நமக்குத் தான் முழிப்பா இருக்கும். இலை விபூதி கிடைச்சதா?

வள்ளி குகையைப் பார்க்க அலைகடலெனத் திரண்டு வரச் சொன்னீங்களேனு வந்தால் ஒண்ணையும் காணோமே? :P:P:P

said...

யாசிப்பவர்கள் இப்போ உள்ளே விடறதில்லை, ஆனால் அதுக்கும் சேத்துப் பழநியிலே போற இடமெல்லாம் கூடவே வருவாங்க. போனீங்களா இல்லையா?

said...

ha ha arumai nanum pona mathiri irnuthuchu

said...

வாங்க சின்ன அம்மிணி.

நியூஸி வந்தபிறகு கடல் அலையில் கால் நனைக்கும் ஆசை போயே போச்(-:

ஐஸ்கட்டியில் எப்படிப்பாக் கால் வைப்பது?

said...

வாங்க அருண்மொழி.

அதுவும் ஞாயம்தான். மாமனைப் பார்க்கப்போகும்போது மருமகனையும் பார்க்கத்தானே வேணும்:-)

said...

வாங்க தீப்பெட்டி.

இன்னும் மொட்டைபோடும் இடம், நாழிக்கிணறு பக்கமெல்லாம் போயிருக்கலாம். மனம் குளிர சாமி தரிசனம் கிடைச்சதும் மத்த எல்லாத்தையும் மறந்துட்டேன்.

said...

வாங்க இளா.

சரியாத்தான் சொன்னீங்க. படிப்பால்(?) வந்த வினை.:-)

said...

வாங்க ராகவன்.

அதே ஆஸ்ஹோக் பவன்தான்:-))))))
நேமாலஜி இந்தப் பாடு படுத்துது!!

கல்தரைதானா? நான் முருகன் குகையில் இருப்பதால் கடல்மண்ணில் குகை இருக்குன்னு நினைச்சுட்டேன்.

முருகனுக்குப் பாமாலை தொடுத்துட்டீங்க.

ஆன்மீகச் செம்மல்ன்னு சும்மாவா சொல்றாங்க!!!

said...

வாங்க கீதா.

இலை விபூதி , சந்தனக்காப்புச் சந்தனம் எல்லாம் கிடைச்சது. வள்ளிக்குகைக்கு நானும் போகலைப்பா(-:

பழனிக்கு இந்த முறை போகலை.
பயணம் எல்லாம் கிழக்கில் மட்டுமே:-)

said...

வாங்க சுரேஷ்.

இது நம்ம சரித்திரவகுப்பிலே சுற்றுப்பயணப்பகுதி:-)

டீச்சர் கூடவே எல்லாரும் வருவது மகிழ்ச்சியே!!

said...

கலக்கல் ரீச்சர்...திருச்செந்தூர் போயி ரொம்ப வருஷம் ஆச்சு, போகணுமுன்னு நினைக்கையில் உங்க பதிவு...:-)

said...

வாங்க மதுரையம்பதி.

போனேன் வந்தேன்னு இருந்ததால் நிறைய விஷயங்கள் பார்க்கலை.

நீங்க போய்வந்து விரிவா எழுதுங்க.

காத்திருப்போம்.

said...

அன்பின் துளசி

முருகப்பெருமானை நல்லாருப்பா என வாழ்த்தும் வாய்ப்பு துளசிக்குத்தான் கிடைத்திருக்கிறது. நல்வாழ்த்துகள் துளசி

திருச்செந்தூர் பயணம் மனதினிற்கு அமைதியைக் கொடுக்கும். நல்ல கடற்கரை - கோவில் - சுற்றுப்புற சூழ்நிலை - அனுபவிக்க வேண்டிய இடம்.

அப்படியே கண்ணில் பட்டதை எல்லாம் ஒன்று விடாமல் 5000 புகைப்படங்களுக்குள் அடக்கி பதிவிலே தொடர் இடுகைகளாக நாங்களெல்லாம் கண்டு மகிழ அளிக்கும் பண்பினிற்கு நன்றி துளசி

said...

வாங்க சீனா.

'கண் எதிரே சின்னப் பையனா நிக்கிறான் முருகன்'. பின்னே வயசான நான் எப்படிச் சும்மா இருப்பது? அதான் நல்லா இருப்பான்னு வாழ்த்திட்டு வந்தேன்:-)

said...

//cheena (சீனா) said...
அன்பின் துளசி
முருகப்பெருமானை நல்லாருப்பா என வாழ்த்தும் வாய்ப்பு துளசிக்குத்தான் கிடைத்திருக்கிறது//

சீனா சார்,
பல்லாண்டு நல்லா இரு!
உன் மார்புப் பெண்ணோடு நல்லா இரு!
உன் சங்கு சக்கரத்தோடு நல்லா இரு!
ஒரு குறையும் இல்லாம நல்லா இரு!
-ன்னு பெருமாளையே வாழ்த்தினாராம் பெரியாழ்வார்! அது மாதிரி எங்க டீச்சர்!

பேசாம டீச்சரை ஆழ்வார் ஆக்கிரலாமா? என் கோதைக்கு ஒரு கம்பெனியாகவும் இருக்கும்! ரெண்டு பெண் ஆழ்வார்கள்-ன்னு கணக்கும் நேராயிடும்! என்னா சொல்றீங்க?

துளசிகோபாலாழ்வார் வாழ்க வாழ்க! :)
துளசிகோபாலாழ்வார் பாதங்கள் யாமுடைய பற்று!:)

said...

அச்சச்சோ...... என்னைக் கூண்டுக்குள்ளே வச்சுறாதீங்கப்பா.

சுதந்திரம் என் உயிர் மூச்சு!!!!