Thursday, April 30, 2009

வெங்கட்டும் வரதராஜனும். திருநெல்வேலிக்கே அல்வாவா?......(2009 பயணம் : பகுதி 18)

'அசல்' கடையில் ஒரு பத்துப் பதினைஞ்சுபேர் கூட்டமா நின்னுக்கிட்டு இருந்தாங்க. ஒருகிலோ பொதியோடு கோபால் திரும்பிவந்தார். ஏற்கெனவே பாக்கெட் போட்டு வச்சுருக்காங்களாம், ஒருகிலோ அரைக்கிலோன்னு. விலை? அநியாயத்துக்கு ரொம்பவே மலிவு. வெறும் நூறுரூபாய்தான் கிலோவுக்கு. ஒரு மாசம்வரை கெடாதாம், வெளியே வச்சுருந்தாலுமே. 'சிங்' முகத்தில் சிரிப்பே இருக்காதுன்னார் உலகநாதன். .

மறுநாள் காலை ஏழுமணிக்கு வந்துருவேன்னு சொல்லிட்டுப்போனார், நாங்க அறைக்குப் போனோம். கதவின் குமிழைத் திருப்புனதும் திறந்துருச்சு. பூட்டாமலா காலையில் கிளம்பி இருக்கோம்? இவரைக்கேட்டால் இழுத்து மூடினேன். ஆனால் குமிழைத் திருப்பிப் பார்க்கலைன்றார். உலகமெல்லாம் சுத்துற ஆளு கதவைப் பூட்டலைன்னா எப்படி? ஆஹா.... புரிஞ்சு போச்சு அவருக்கு. பொதுவா எல்லா ஹொட்டேலிலும் இருக்கும் ஆட்டோ லாக்ன்னு நினைச்சுச் சாத்திட்டு வந்துருக்கார். ஊம்....இருக்குமோன்னு, இன்னொருக்கா செக் பண்ணிப்பார்த்தால் சாவி போட்டுத் திருப்புனாத்தான் பூட்டுது.

அறைக்குள்ளே போய்ப் பார்த்தால் எல்லாம் சரியாத்தான் இருக்கு. திருநெல்வேலிக்காரங்க, அநியாயத்துக்கு நல்லவங்களா இருக்காங்கன்னு புரிஞ்சது. நம்ம ஆர்யாஸிலேயே போய் சாப்பிட்டோம். இடியாப்பம் கிடைச்சது. அவருக்குக் குருமாவும் எனக்கு சக்கரையுமா. அப்படியே முன்பக்கப் படிகளில் இறங்கி ஒரு வாக் போனா.......

ரெண்டு லேடீஸ் வந்து, ஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீ ஆன்மீக மீட்டிங் (ராஜயோகமாம்) இங்கே எங்கே நடக்குதுன்னாங்க?
க்யா மாலும்? லௌகீகம்தான் இந்த க்ஷணத்துத் தெரியுது நமக்கு. பக்கத்துக் கட்டிடத்தில் ஒரு அரைமணிநேரம் நெட்டிலே உலாவி மெயில் பார்த்துக்கிட்டு இந்தப் பக்கம் நடந்தால் ஒரு ம்யூஸிக் ஷாப் கண்ணுலே பட்டது. கால்கள் தானாக அங்கே போச்சுங்க. தமிழனையும் சினிமாவையும் பிரிக்கவே முடியாதே:-)

நாந்தான் அறுதப் பழசா சில படங்கள் வாங்கினேன். நூத்துக்கு நூறு, பாலாபிஷேகம் இப்படி. மலையாளப்படங்கள் இருக்கான்னு தேடுனா கொஞ்சம் இருக்கு. அதுலே நாடோடிக்காற்று, ஃபோட்டோகிராஃபர், நிவேத்யம் இப்படி. விற்பனைப்பெண் கிறிஸ்டி பயங்கர ஸ்நேகம். சிடி வேலை செய்யலைன்னா எத்தனை நாள் கழிச்சு வந்தாலும் மாத்தித் தருவாங்களாம். அட! இதையே சாக்கா வச்சு இன்னொருக்கா இந்தப் பக்கம் வந்துறணும்:-)

இருட்டுக்கடை அல்வா எப்படித்தான் இருக்குன்னு பார்த்துறலாமே! பொதியைத் திறந்தால் கருப்பும் இல்லாம ப்ரவுணாவும் இல்லாம ஒரு நிறத்துலே இருக்கு. பார்க்க அப்பீலா இல்லை. கொஞ்சம் சாப்பிட்டுப் பார்த்தேன். பனங்கல்கண்டு இல்லைன்னாக் கருப்பட்டி ருசியும் வாசனையும் தெரியுது. கையிலே பிசுக்குன்னு ஒட்டாமல் நெய் நிறையதான் போட்டுச் செஞ்சுருக்காங்க. ஆனால் இன்னமும் புரியாத ஒன்னு என்னென்னா எப்படி நூறு ரூபாய்க்குக் கட்டுபடி ஆகுதுன்றதுதான்? போதும் ருசி பார்த்தது. அதான் ஃப்ரிஜ்லே வைக்காமலேயே கெடாதாமே. அண்ணன் அண்ணிக்கு எடுத்துவச்சுட்டேன்.

தெந்தமிழ்நாடுகளில் மாடு, யானைன்னு கட்டிப் போர் அடிச்ச காலம் மாறி இப்பெல்லாம் கார் ஓட்டிப் போர் அடிக்கும் காலம் வந்தாச்சேன்னு பாடலாம் போல இருக்கே. கும்பகோணம் போனப்ப இருந்தே இதை கவனிச்சுக்கிட்டுத்தான் இருக்கேன். இன்னும் இந்தப் பக்கங்களில் நீர்வளம் குறையாமல் இருப்பதால் சாகுபடி நல்லாவே இருக்கு. அதான் தெங்கும் வாழையுமா கண்நிறைஞ்சு கிடக்கே.
நடுத்தெருவில் (அக்கப்)போர்

குறுகலான சாலைகளிலும் இப்படிக் குவிச்சுப்போட்டு வைச்சிருக்கறது நல்லதுக்கில்லை. கொஞ்சம் ஒரு வண்டி போகும் அளவுக்காவது இடம் வுட்டுருக்கலாமோ? (அதுக்கேது இடம்?) வண்டிச் சக்கரங்களில் இந்த வைக்கோல்கள் சிலசமயம் மாட்டிக்கிட்டு விபத்தும் நடந்துருதாம். உலகநாதன் புலம்பலை ஊர்மக்கள் கேட்டுட்டாலும்......
காக்காத்தோப்பு பள்ளிவாசலைக் கடந்து திருவேங்கடநாதபுரம், போய்க்கிட்டு இருக்கோம். வழியெல்லாம் ஒரே செம்மண் பூமி. காணியெல்லாம் சிகப்பு என்றதால் இந்த ஊரைச் செங்காணின்னும் சொல்றாங்க. தென் திருப்பதியாம் இது. திருப்பதிக்கு நேர்ந்துக்கிட்டு, அங்கே போகமுடியலைன்னா இங்கே கொடுத்தாலும் போதுமாம். இந்தக் காலத்துலே இருக்கும் பேங்கிங் நெட் ஒர்க்கைத் தூக்கிச் சாப்பிடும்விதம் அந்தக் காலத்துலேயே மக்களுக்கு வசதி பண்ணிவச்சுட்டார் சாமி:-)))) சரியான வசூல் ராஜா.

தென் திருப்பதின்னு ஏராளமான கோவில்கள் அங்கங்கே இருக்கு பாருங்க. எதுலே வேணுமுன்னாலும் காணிக்கையைச் சேர்த்துறலாமாம். இது போதாதுன்னு இப்ப திருமலை திருப்பதி தேவஸ்தானமே இந்தியாவில் பல இடங்களில் கோவில்கள் கட்டிக்கிட்டு இருக்காம். அதானே 'வர்றதை' ஏன் விடணும்? இன்னும் நம்ம வெங்கடநாராயணா ரோடில் இருக்கும் தேவஸ்தான ஆஃபீஸில் 'மொட்டையடிக்கும்' ஏற்பாடு வரலை போல இருக்கே!
மேலத் திருவேங்கடநாதபுரம். அழகான அளவான கோவில். ஒரு சின்னக் குன்றின்மேல் இருக்கு. இந்தக் கோவில் இருக்கும் விவரமே எங்களுக்கு உலகநாதன் சொல்லித்தான் தெரியும். அதான் நேத்தே நவதிருப்பதிகளையும் பார்த்து முடிச்சாச்சே. இன்னிக்கு நம்ம காந்திமதியையும் நெல்லையப்பரையும் சேவிச்சுக்கணுமுன்னு சொன்னப்ப, என்னோட பெருமாள் ஆசையை எப்படியோ புரிஞ்சுக்கிட்ட மாதிரி, காலையில் கிளம்புனீங்கன்னா ஒரு பெருமாள் கோவிலுக்குப் போயிட்டு, வரும்போது நெல்லையப்பரைத் தரிசிக்கலாமுன்னு ஐடியா கொடுத்தார்.
கோவிலில் இருந்து ஊரைப் பார்த்தால்.....

தினம்தினம் ஆர்யாவில் (நேத்து ஒருநாள்தான் சாப்புட்டு இருக்கோம், அதுவே தினம்தினமா?) என்ன ப்ரேக் ஃபாஸ்ட்? வேற எங்கியாவது போகலாமுன்னு சொன்னப்ப, 'ஜானகிராமன்' போகலாம்னு உலகநாதன் கூட்டிப்போனார். (ஜானகிராமன்......ஆஹா....எங்க மாமா ஒருத்தர் இந்தப் பெயரில் இருந்தார். காந்திக் காங்கிரஸ் ஆளு. கதர்தான் போட்டுக்குவார். கூடவே ஒரு குல்லாவும்)அருமையா இருக்கு அந்த ரெஸ்டாரெண்ட். ரெஸ்ட்ரூம் வசதி அமோகம். நீட் & டைடி.(அப்பப்ப இந்த ரெஸ்ட்ரூம்களைப் போகறபோக்கில் சொல்லிட்டுப் போறது எதுக்குன்னா..... பயணிகளுக்கு, முக்கியமாப் பெண் பயணிகளுக்குப் பயனா இருக்குமேன்னு. ச்சும்மா டிப்ஸ்)

மெனுகார்டைப் பார்த்தால் இதுக்குமுன்னே இதையே எங்கியோ பார்த்த ஞாபகம். ரெண்டு வினாடிக்குப் பிறகு புரிஞ்சது. ஆர்யாஸ் ரெஸ்ட்டாரெண்டில் இதை, இதே ஆர்டரில் பார்த்துருக்கோம். அதோட ஃபோட்டோக் காப்பியா என்ன?

எதையும் தீர விசாரிக்கணும். அப்ப உண்மை தெரிஞ்சுரும். தெரிஞ்சதே..... இந்த ஜானகிராமனும், ஆர்யாவும் ஒரே குடும்பமப்பா:-)))) சிஸ்ட்டர்ஸ். ஆனா ஆர்யாவில் ஃபேமிலி ரெஸ்ட்டாரெண்ட். டைனிங்ஹால் நடுவில் குழந்தைகள் ஏரியா. விளையாட இடம் நல்லாவே இருக்கு. நேத்து இரவு புள்ளைகள் பாட்டுக்கு விளையாட, அம்மாக்கள் கையிலே தட்டை எடுத்து வச்சு, ஊட்டிக்கிட்டு இருந்தாங்க. ஜானகிராமில் ப்ரைவஸிக்காக க்யூபிக்கிள். ஒரு காலத்துலே ஜானகிராமனுக்கு வந்த ஜோடிகள் அப்படியே இப்ப ஆர்யாவுக்கு ஷிஃப்ட் ஆகி இருப்பாங்க.

ஆர்யா ரெஸ்ட்டாரண்ட்

பாருங்க, பெருமாளைவிட்டுட்டு அனுமாரைப் பிடிச்ச கதையா.....சொல்லிக்கிட்டு இருந்ததை விட்டுட்டு....

விழாவுக்காக அலங்கரிச்சக் கொடிமரம்

திருவேங்கடநாதர் அச்சு அசலா நம்ம வெங்கிதான். அழகான அலங்காரத்தோட ஜொலிக்கிறார். கோவிலில் பட்டரைத் தவிர ஈயும் காக்காயுமா நாங்க ரெண்டே பேர். திவ்யமான தரிசனம். தரிசனம் ஆனதும் மண்டபத்தில் கொஞ்ச நேரம் பட்டரோடு பேசிக்கொண்டிருந்தோம். அவர் திருமண் இட்டிருந்த வகை எனக்கு ரொம்பவே பிடிச்சுப்போச்சு. அழகா இருக்குன்னு சொன்னேன். (அழகை அழகுன்னு சொல்லித்தானே ஆகணும்?)

தென்திருப்பதி பட்டர் (பெயர்? சூர்யாவா, பாஸ்கரான்னு நினைவில்லே)

நாப்பது வருசப் பழக்கம்னு சொல்லிச் சிரிச்சார். கருடாழ்வார் இங்கு ஒரு தினுசா இருக்கார் பார்த்தீங்களான்னார். சரியாக் கவனிக்கலையேன்னு எழுந்துபோய்ப் பார்த்தேன். அட! வழக்கமா இருக்கும் ரெண்டு ரெக்கைகளையும் மடிச்சு வச்சுக்கிட்டு, ரெண்டு தோளிலும் சங்கு சக்கரத்தோடு காட்சி தர்றார்.

இங்கே வரும்போதே இன்னொரு கோவில் இருக்கறதைக் கவனிச்சேன். வரும்போது பார்த்துக்கலாமுன்னு நினைச்சதை மறக்காமல், அங்கேயும் போனோம். கீழத் திருவேங்கிடநாதபுரம். இதுவும் பெருமாள் கோவில்தான். வரதராஜப் பெருமாள். சின்னக்கோயிலாத்தான் இருக்கு. மண்டபத்தில் ஏறிப்போனதும், புதுசா பளபளன்னு மின்னும் கருடவாகனம் கண்ணைப் பறிக்குது. இவர் சமீபத்திய வரவு. மூலவராக ஸ்ரீதேவி & பூதேவி சமேதராய் நின்றவண்ணம், கேட்கும் வரங்களையெல்லாம் தரும் வரதராஜர். பட்டர் நிதானமா தீபாராதனை செஞ்சார். இங்கேயும் நமக்கு ஏகாந்த தரிசனம்தான்.

உற்சவர் கீழத்திருப்பதி

சடாரி, தீர்த்தம் எல்லாம் ஆனதும் கொஞ்சம் பூவோடு ரெண்டு ரூபாய் நாணயம் ஒன்னும், ஸ்ரீவரதராஜப்பெருமாளின் சிலபடங்களும், நவதிருப்பதிகள் ஸ்டிக்கர்ஸ் பிரசாதமாத் தந்தார். எதுக்கு இந்தக் காசு?இங்கிட்டு இருந்து அங்கிட்டுப்போறது எப்படி அங்கிட்டு இருந்து இங்கிட்டு வருது? பொதுவா நாம்தானே கோயிலுக்குக் காசு போடுவோமுன்னு குழப்பம்.
இந்தக் காசைப் பத்திரமா வீட்டுலே வச்சுக்கிட்டா ரொம்ப நல்லதுன்னார். ஏனாம்? இங்கே எம் பெருமாள் நான்கு கைகளில் பின்னால் இருக்கும் ரெண்டு கைகளில் வழக்கமான சங்கும் சக்கரமும், மற்ற இரண்டு கைகளில் வலது கையில் அபயஹஸ்தம், இடது கையில் கதாயுதமாவும் இருக்கார். இந்த வலது உள்ளங் கையில் தனரேகையுடன் காட்சி தர்றார். அந்தக் கையில் காசு வச்சு எடுத்துக்கிட்டுப்போய் வீட்டுலே வச்சுக்கிட்டால் செல்வம் குறையாமல் இருக்குமுன்னு மக்கள் நம்பிக்கை (எப்படியோ ஏற்பட்டுப்போச்சுன்னு வையுங்க)

தலவரலாறு

இதெல்லாமொன்னும் தெரிஞ்சுக்காம 'தேமே' ன்னு (தெய்வமேன்னு சொல்வதன் சுருக்) போனதால் பட்டரே நமக்கு 'நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்'ன்னு கொடுத்துருக்கார். இந்தக் கோயில் சுக்கிரஸ்தலமாம். பிரகாரம் சுற்றலாமுன்னு படி இறங்குனதும், மடப்பள்ளியில் இருந்து, கையில் பாத்திரத்துடன் வந்தவர் நம் கைகளில் ததியோன்னம் வைத்தார். நல்ல இதமான சூட்டில் இருந்துச்சு, வழக்கமா ஆயிரம் யோசனை செய்யும் நான் என்னை அறியாமலேயே வாயில் போட்டுக்கிட்டேன். கோபால், 'இது என்ன விபரீதம்?' என்றதுபோல் முழிச்சாரா..அப்பத்தான் 'அடக்கடவுளே...என்ன காரியம் செய்துவிட்டேன்'னு விளங்குது. 'க்ருஷ்ணார்ப்பணம்'னு சொன்னேன்.

முள்காடாய் இருந்த இடமாம். இப்போ கொஞ்சம் கொஞ்சமா நல்லா ஆகி வருது. அனுமன் சந்நிதியில் ஸ்ரீ அஞ்சலி வரத ஆஞ்சநேயர். சிகப்பு மூக்கோடு இருக்கார். செந்தூரமோ? வரப்ரஸாதியாம். மனசுக்கு ரொம்பவே நிறைவான தரிசனம் இன்றைக்கு.

காஞ்சிபுரம் வரதனுக்கு வேண்டுனதை இங்கே கொடுக்கலாமாம். குன்றின்மேல் தென் திருப்பதின்னா, இங்கே இது தென் காஞ்சி.

நல்லா பிராஞ்ச் ஆஃபீஸ் வச்சுருக்காருப்பா சாமி!!!!

தொடரும்.........:-)

35 comments:

said...

டீச்சர் அல்வாவுல ஆரம்பிச்சி ஆண்டவனில் முடிச்சிட்டிங்க ;))

said...

வாங்க கோபி.

தூணிலும் துரும்பிலும் இருக்கும் கடவுள் அல்வாவிலும் இருக்கமாட்டாரா என்ன?

said...

திர் நவேலி மக்கள் பலாப்பழம் மாதிரி.அவுங்க மனசு அல்வா மாதிரி இளகினது,இனிமையானது.இருட்டுக்கடை அல்வா மூணு மாசம் வரை தாங்கும். நாம அதுவரெ விட்டு வச்சிருந்தா.திரு நெவேலி பசுமைய பாத்தே இப்பிடின்னா அடுத்த தடவ கன்னியாகுமரி மாவட்டத்த ஒரு ரவுண்டு அடிச்சிட்டு சொல்லுங்க. கோயில் தரிசனமும் படங்களும் அருமை ஜானகிராமன் --->ஆர்யா :-))).வசூல் ராஜா? உண்மைதான் !.

said...

திருப்பதி போக முடியலை..
தென் திருப்பதியும் போக முடியலை...
கவலையே வேண்டாம்,இந்த பதிவுகளை பார்த்தால் போதும் அந்த பலன் கிடைத்திடும்.உபரியாக அல்வாவும் ததியோனமும் கிடைக்கும். :-))

said...

யப்பாடி, அல்வா,தயிர் சாதம், ஆர்யா'ஸ், ஜானகிராமன். சரிப்பா சாப்பிட்டாச்சு
நெல்லைக்காரங்களைப் பத்தி நல்ல வார்த்தை சொன்னதுக்காக ஒரு பெரிய நமஸ்காரம்.

ஆமாம் இந்தக் கோபி தூங்காதா. எனக்கு முன்னாடி கமெண்ட் போட வந்துவிட்டதே.

இவ்வளவு பெருமாள் கோவில். ஒவ்வொண்ணுக்கும் ஒரு அழகு. சுலப தரிசனம். நீங்க சோழ நாட்டுக்கும், பாண்டிய நாட்டுக்கும் ஒரு வித்தியாசத்தைப் பார்த்திருப்பீர்கள்.
நெல்லையில் பந்தாவே காட்ட மாட்டார்கள்.மனசுக்கு ரொம்ப நிறைவா இருக்கு துளசி. உங்கள் கண்களால் எங்க ஊர்களைப் பார்ப்பது.

நன்றிங்கோவ்.
இந்த வைக்கோல் தொல்லை திருச்சியிலும் உண்டு, சமயபுரம் போகும் வழியெல்லாம் வைக்கோல் மாட்டிச் சின்ன வாகனங்களின் சாஸில மாட்டிக்கும். எங்க காருக்கும் ஆகி இருக்கிறது.

said...

ஒரு முறை நெல்லையிலிருந்து பத்தமடை பாய் கொரியர்ல வந்துச்சு கொரியர் பாய் (பொள்ளாச்சிக்கு) இது என்னங்க பாயெல்லாம் கொரியரில் சரி கூடவே இது என்ன சின்னபாக்கெட் அதையும் சொல்லிடுங்கன்னார். அதுவா அல்வான்னேன்.. அடன்னு ஆச்சரியப்பட்டார்.. ஆனா இப்ப எங்கெங்கும் அல்வா கொரியரில் கிடைக்கிறது..

வயதான காலத்தில் காசிக்கு போகமுடியல கங்கைக்கு போக முடியல திருப்பதி போகமுடியலன்னு யாரு ம் வருத்தப்பட்டா சாமி தாங்குவாரா அதான் ப்ராஞ்ச் ஆபிஸுங்க..

said...

வாங்க ஐம்கூல்.

பலாப்பழம் உவமை ரொம்பச் சரி. எனக்குப் பலான்னா உசுரு. ஆனா திங்கத்தான் சான்ஸ் கிடைக்கலை.

திருநெல்வேலியோடத் திரும்பிடலை. பச்சைப் பார்த்துட்டுத்தான் வந்தேன்:-)

said...

நானும் திருப்பதிக்குப் போய் பத்துவருசமாகப் போகுது.

அதென்னமோ ரெண்டு மூணுமுறை சென்னைக்கு வந்தும் 'போகணுமுன்னு தோணலை'

அவனே கூப்புடட்டுமுன்னு இருக்கேன்:-)

said...

வாங்க வல்லி.

பெருமாளோ அலங்காரப்பிரியன். அதான் ஒவ்வொரு தினுசா ஒவ்வொரு இடத்தில்.

பல இடங்களில் கஷ்டப்படாமத்தான் தரிசனம் கிடைச்சதுப்பா. எதிர்பார்க்காம இருந்ததெல்லாம் கிடைச்சதும் மகிழ்ச்சிதான்.

போர் அடிக்க வேற இடம் பார்க்கப்படாதோ?

சட்டம், ஒழுங்கு எல்லாருக்கும் ஒன்னுன்னு இருந்தால்தானே?

said...

வாங்க கயலு.

ப்ராஞ்ச் ஆஃபீஸ் காரணம் ரொம்பச் சரி.

இருக்குமிடத்தில் இருந்தால் இன்னும் சரி:-))))

said...

நைட் டூட்டில இருக்கான் கோபி. தூங்கினா அஸஸன் பேரை அழுத்தி 3 தடவை சொல்லி கோபியை உங்க சென்னைக்கு பார்சேல் பண்ணிடுவாங்க வல்லிம்மா!

said...

ருவேங்கடனாத புரம் (திருனான்கொவில்) பற்றிய பதிவிற்கு நன்றி.

ஒரு விடயம் சொல்கிறேன், ஒருமுறை பெருமாள் திருநாளுக்கு பாடகர் உன்னி கிருஷ்ணனை இருபாயிரம் கொடுத்து அழைத்து இருந்தோம். வந்து கோவிலையும் பெருமாளையும் பார்த்தவர், பணமே வேண்டம் என்று சொல்லி நான்கு மணி நேரம் கச்சேரி செய்தார்.

மிகவும் அருமையான கோயில் அது.

ஆமாம் ஆர்யாசும் ஜனகிரம் ஹோடேலும் சொந்தம்னு யாரு உங்க கிட்ட புருடா விட்டது. ஜனகிரம் ஹோட்டல் உரிமையாளர் ஒரு யாஹூ சட்டர், வலை பதிவர் கூட.

அடுத்த முறை நெல்லை பக்கம் போனால், குறுக்குதுறை முருகன் கோவில், தாமிரபரணி குளியல் செய்து விட்டு வாருங்கள்.

வற்றாத நதியாம் தாமிரபரணி. மேல் அதிக செய்திகளுக்கு தாமிரபரணி தந்த சிங்கம் டுபுக்கு பதிவுகள்.

குப்பன்_யாஹூ


I hope u write about Nellaipppar koil, 7 swara pillar etc in next post.

said...

திருநெல்வேலி அல்வா சாப்பிட்ட மாதிரியே இருக்கு - மொத நாளு நவதிருப்பதி - இன்னிக்கு காந்திமதியும் நெல்லையப்பருமா ..

இணையத்தின் மூலம் இன்று வங்கிகள் இணைவதை அக்காலத்திலேயே அரசர்கள் செய்திருக்கிறார்கள்.

இறைப்பயணம் இறைப்பயணமே !

நல்லதொரு இடுகை கண்டு மகிழ்ந்தேன்

said...

தூணிலும் துரும்பிலும் இருக்கும் கடவுள் அல்வாவிலும் இருக்கமாட்டாரா என்ன?

என்ன கொடும சார் இது :(((((((

said...

ஓ அதுதானா அபி அப்பா. பாவம் பிள்ளை.
இன்னிக்கு வெள்ளிக்கிழமை தானே. தூங்கட்டும்.

said...

//நல்லா பிராஞ்ச் ஆஃபீஸ் வச்சுருக்காருப்பா சாமி!!!!//

ஹிஹி! அந்த ஆஃபீசுக்கு கேஷியர் நான் தான் டீச்சர்! பரவாயில்லை...என் கிட்டயே கொடுத்துருங்க! :))

said...

//கோபிநாத் said...
டீச்சர் அல்வாவுல ஆரம்பிச்சி ஆண்டவனில் முடிச்சிட்டிங்க ;))//

//துளசி கோபால் said...
வாங்க கோபி.
தூணிலும் துரும்பிலும் இருக்கும் கடவுள் அல்வாவிலும் இருக்கமாட்டாரா என்ன?//

அதானே! டீச்சர் சொல்றது ரைட்டு தான் கோபி!

தூணிலும் இருப்பான்! துரும்பிலும் இருப்பான்!
ஊசியிலும் இருப்பான்! நியூசியிலும் இருப்பான்!

அல்வாவிலும் இருப்பான்! ஆமைவடையிலும் இருப்பான்!

அல்வாவும் நீயே! அசோகாவும் நீயே!
அன்புடனே அள்ளித் தரும் கேசரியும் நீயே!
அல்வாவும் நீயே! :))

said...

//தென் திருப்பதின்னு ஏராளமான கோவில்கள் அங்கங்கே இருக்கு பாருங்க. எதுலே வேணுமுன்னாலும் காணிக்கையைச் சேர்த்துறலாமாம். இது போதாதுன்னு இப்ப திருமலை திருப்பதி தேவஸ்தானமே...//

இந்தாங்க ஆன்லைன் ஸ்ரீவாரி உண்டியல்! :)
http://www.ttdsevaonline.com/ehundi/ehundi.aspx//இன்னும் நம்ம வெங்கடநாராயணா ரோடில் இருக்கும் தேவஸ்தான ஆஃபீஸில் 'மொட்டையடிக்கும்' ஏற்பாடு வரலை போல இருக்கே!//

ஹைய்யோ! என்னா மாதிரி ஐடியா! இன்னும் கொஞ்சம் உரக்கச் சொன்னீங்க-ன்னா அம்புட்டு தான்! உங்களுக்கு ஒரு ராயல்டி கொடுத்துட்டு கொண்டாந்தாலும் கொண்டாந்துருவாங்க! :)

said...

//கருடாழ்வார் இங்கு ஒரு தினுசா இருக்கார் பார்த்தீங்களான்னார். சரியாக் கவனிக்கலையேன்னு எழுந்துபோய்ப் பார்த்தேன். அட! வழக்கமா இருக்கும் ரெண்டு ரெக்கைகளையும் மடிச்சு வச்சுக்கிட்டு, ரெண்டு தோளிலும் சங்கு சக்கரத்தோடு காட்சி தர்றார்//

பொதுவா அஞ்சலிக் கையராக (அஞ்சலி ஹஸ்தராக) எப்பவும் பறக்கத் தயார் நிலையில் இருப்பது போலத் தான் இருப்பார் பெரிய திருவடிகளான கருடாழ்வார்! ஒரு காலை மடித்து வைத்து!

சங்கு சக்கர கருடன் அரிதிலும் அரிது!
108 திவ்யதேசத்தில் ஒரே இடம் தான் இப்படி! மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள திருவெள்ளியங்குடி! கோல வல் வில்லி இராமப் பெருமாள்!

அதே போல சங்கு சக்கர அனுமன், சோளிங்கபுரம் என்னும் திருக்கடிகை!

ஸ்ரீவில்லிபுத்தூரில், கருடன் பெருமாளுக்கு எதிரே கைகட்டி நிற்காமல்,
கோதையின் சிபாரிசால், பெருமாளுக்கு சைட் பை சைட் நிப்பாரு! ஏகாசனம்!
முதலாளி + தொழிலாளி ஒரே சீட்ல இருப்பாங்க! வீட்டுக்காரம்மா சட்டப்படி! :)

said...

//கோபால், 'இது என்ன விபரீதம்?' என்றதுபோல் முழிச்சாரா..அப்பத்தான் 'அடக்கடவுளே...என்ன காரியம் செய்துவிட்டேன்'னு விளங்குது. 'க்ருஷ்ணார்ப்பணம்'னு சொன்னேன்//

:)
Bingo!
Like u very much teacher!
No tension, Keep it simple! :)

said...

//கருடாழ்வார் இங்கு ஒரு தினுசா இருக்கார் பார்த்தீங்களான்னார். சரியாக் கவனிக்கலையேன்னு எழுந்துபோய்ப் பார்த்தேன். அட! வழக்கமா இருக்கும் ரெண்டு ரெக்கைகளையும் மடிச்சு வச்சுக்கிட்டு, ரெண்டு தோளிலும் சங்கு சக்கரத்தோடு காட்சி தர்றார்//

இவர் படம் எடுத்திருந்த அனுப்புங்க டீச்சர்.

அல்வா சாப்பிட்டு ஆனந்தமா பெருமாள் கிட்ட இருந்து ரெண்டு ரூபாய் வாங்கியிருக்கீக்க வாழ்த்துக்கள்.

said...

வாங்க குப்பன்_யாஹூ.

கச்சேரி பத்தின விவரத்துக்கு நன்றி.

பெருமாள் பெரும் ஆள்தான்:-)

ஜானகிராமும் ஆர்யாஸும் சொந்தமில்லையா? அடக் கடவுளே.... மெனு கார்டை ஒரே இடத்தில் ப்ரிண்ட் பண்ணி வாங்கிட்டாங்களோ என்னவோ:-))))

இன்னொருமுறை போகத்தான் வேணும். அடுத்தபதிவு நீங்க சொன்னதேதான்:-)

said...

வாங்க செல்விஷங்கர்.

பட்டாம்பூச்சி விருதுக்கு உங்களை இங்கேயும் ஒருமுறை வாழ்த்துகின்றேன்.

பயணங்கள் முடிவதில்லை:-)

said...

வாங்க காடுவெட்டி.

என்னத்தைக் கொடுமைங்கறீங்க?:-)))))

said...

வாங்க கே ஆர் எஸ்.

அடுக்குப் பின்னூட்டமா? ஆகட்டுமே. வரவோ வரவு.

மயிலாடுதுறைப் பக்கம் இன்னும் போகலை. இந்த 107 திவ்யதேசங்களைத் தரிசிக்கிறதை ஒரு அஸைன்மெண்டா எடுத்துக்கலாமான்னு இருக்கு. 108வது தானே கிடைச்சுரும்.மெனெக்கெட வேண்டாம்:-)

உண்மையாவே கிருஷ்ணார்ப்பணமாத்தான் ஆனது:-)

ஆன்லைன் உண்டியலை யாரும் திருடமாட்டாங்கன்றது ஒரு நிம்மதி!

said...

வாங்க கைலாஷி.

படம் எடுக்கணுமுன்னு 'சட்'னு தோணலை.

ஆனா ரொம்ப அழகா இருந்தார் பெரியதிருவடி.

said...

கே ஆர் எஸ்,

கேசரி கேசரின்னு உரக்கச் சொல்லாதீங்க. அம்பி ஜாக்கிரதை:-)))

said...

நேரில் போய்வந்த திருப்தி பதிவை படித்தபோது கிடைத்தது.போக வேண்டும் என்கிற ஆவலையும் தூண்டுகிறது.

said...

திருநெல்வேலிக்காரங்க, அநியாயத்துக்கு நல்லவங்களா இருக்காங்கன்னு புரிஞ்சது.

மேடம் நீங்க ரொம்ப லேட் :)

said...

குன்றின் மேல் கோயில் வர்ணத்துடன் கூடிய அழகு.

மனசுக்கு ரொம்பவே நிறைவான தரிசனம் எமக்கும்.

said...

டீச்சர்!நீங்க திருநெல்வேலி அல்வா சாப்பிடுங்க.எனக்கு ஆட்சேபணையில்லை.ஆனால் மூட்டு வழி தோழிக்கு இன்னொரு தோழி அனுப்பினாங்கன்னு டாக்டர்.முருகானந்தம் கிட்ட சொன்னதுக்கு குறைந்த பட்ச எனக்குத் தெரிந்த இயற்கை வைத்தியம் அரிசி சாப்பாடு சாப்பிடுறீங்களா?இனிமேல் தடா.

(இந்தியப் பயணத்தில் வித விதமா அரிசிய உத்துப் பார்த்துட்டு வந்தவங்க கிட்ட வைத்தியம் தேறுமோ என்னவோ:)

said...

வாங்க ஞாபகம் வருதே.

வருகைக்கு நன்றி.

தொடர்ந்து வரணுமுன்னு விண்ணப்பம்.

said...

வாங்க செல்வேந்திரன்.

லேட்டுத்தான். இப்பத்தானே வாய்ச்சது.

இப்பவாவது கிடைச்சதேன்னு மகிழ்ச்சிதான்.

said...

வாங்க மாதேவி.

பழங்காலக் கோவில்கள் எல்லாமே ஏதோ ஒருவிதத்தில் மனநிறைவைத் தருது.

சும்மாவாச் சொல்லி இருக்காங்க,'கோவில் இல்லா ஊரில் குடி இருக்கவேண்டாம்'னு!!!

said...

வாங்க நடராஜன்.

தேறாத கேஸ்தான். பிறந்த ஆறுமாசம் முதல் அரிசி.
ஒருநாள் உணவை ஒழி என்றால்.....
இந்த உணவு= அரிசிச்சோறு.

தோழிகள் பலர் சோறே தின்னாதக் கோதுமைகள்.
அவுங்களுக்கு மூட்டுவலிகள் இருக்கு:-))))