Thursday, September 24, 2009

துளசியின் தளத்துக்கும் மணாளனுக்கும் பொறந்தநாள்.


நம்ம தளத்துக்கும் நம்மூட்டுத் 'தல'க்கும் இன்னிக்குப் பொறந்தநாள்.

என்னவோ இப்பத்தான் எழுதவந்தது மாதிரி இருக்கு. அஞ்சு முடிஞ்சு ஆறாவது வருசம் ஆரம்பிச்சாச்சு. உருப்படியா ஏதாவது செஞ்சேனான்னு இன்னும் யோசிச்சுக்கிட்டுத்தான் இருக்கேன்.

'தல' யின் பிறந்தநாளை எங்கே மறந்திடப் போறேனோன்னு தளத்தோடு முடிச்சுப்போட்டு வச்சுக்கிட்டது ரொம்ப நல்லதாப் போச்சு.


வழக்கம்போல் உங்கள் அன்பும் ஆதரவும் கிடைக்கணுமுன்னு தமிழ்கூறும் நல்லுலகத்தைக் கேட்டுக்கொள்கின்றேன்.

என்றும் அன்புடன்,

துளசி

40 comments:

said...

வாழ்த்துக்கள் துளசி தளமே!
வாழ்த்துக்கள் துளசி தலயே! :))

said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் டீச்சர் வலைப்பூவுக்கும், வலைப்பூவை வைச்சி விடும் கோபால் சாருக்கும்! :)

said...

happy birth day to both of you !!

said...

***உருப்படியா ஏதாவது செஞ்சேனான்னு இன்னும் யோசிச்சுக்கிட்டுத்தான் இருக்கேன்.***

என்ன ஒரு அடக்கம்! என்ன ஒரு அடக்கம்!!! :-))))

உங்கள் தளத்திற்கும், "தலைவரு"க்கும் பொறந்தநாள் வாழத்துக்கள், டீச்சர்!

Anonymous said...

தளத்திற்கும், தலைக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்

said...

ஆகா, வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்!

முதலில் கோபால் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!

ஐந்து முடிந்து ஆறில் கால் வைத்து வெற்றி நடை போடும் துளசி தளத்திற்கும்!

said...

##வாழ்த்துக்கள் துளசி தளமே!
வாழ்த்துக்கள் துளசி தலயே! :))////

கண்ணா பின்னான்னு ரிப்பீட்டுகிறேன்.

துளசி தளம் எப்போதும் போல மிளிரட்டும். கோபால் சார்க்கு வாழ்த்து சொல்ல வயதில்லை. வணங்கி ஆசி வேண்டுகிறேன்!!!!

said...

துளசி தளம் எப்போதும் போல மிளிரட்டும்.

கோபால் சார்க்கு வாழ்த்து சொல்ல வயதில்லை. வணங்கி ஆசி வேண்டுகிறேன்!!!!

அதே ! :))))

said...

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் டீச்சர் வலைப்பூவுக்கும், வலைப்பூவை வைச்சி விடும் கோபால் சாருக்கும்! :)//

இதுக்கு ஒரு ரிப்பிட்டேய்ய்ய்ய் :))))

said...

கோபால் சாருக்கு பிறந்த நாளா?

என்னோட வாழ்த்துகளை அவரிடம் சொல்லவும்!

மற்றபடி இப்ப எந்த நாட்டில இருக்கிய!

said...

வாழ்க, வளர்க, துளசியின் தளமும், தலமும், ஹிஹிஹி, தலைவரும்! மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள் இருவருக்கும்.

said...

கொலுவைத்த கோமான், பொறுமையின் சிகரம், ஒடுக்கப்பட்டோர் சங்கத்தின் மூத்த குடிமகனார் கோபால் இன்றுபோல் என்றும் வாழ்கவென பிரார்த்திக்கிறோம்.

said...

தங்கள் கனவரின் பிறந்த நாள் வாழ்த்துக்கள், இதுபோன்று மென்மேலும் பல நாட்கள் சீறும் சிறப்புமாக வாழ்ந்திட எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கின்றேன்.

// ***உருப்படியா ஏதாவது செஞ்சேனான்னு இன்னும் யோசிச்சுக்கிட்டுத்தான் இருக்கேன்.***//

தாங்கள் எழுதிய பயணக் கட்டுரைகள்(கோவில்கள்) எல்லாம் உருப்படிக்கும் மேலானது. அவற்றை தொகுத்து ஒரு புத்தகம் கூட போடலாம்.
தாங்களை வீட உங்களுக்கு இவ்வளவு ஆதரவு கொடுத்து ஊக்கமும் கொடுக்கும் தங்களின் தலையை நினைக்கும்போது பெருமையாக உள்ளது. பல பிறந்த நாள் கொண்டாட வாழ்த்துக்கள்.

said...

happy birthday to you!!
happy birthday to you!!
happy birthday to you and yours too!!
happy birthday to you!!

said...

வாழ்த்துக்கள் டீச்சர்!!கோபால்ஜிக்கு என்னோட ஸ்பெஷல் வாழ்த்துக்கள்.

said...

கோபால் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!

துளசி தளத்திற்கும் வாழ்த்துகள்!

said...

துளசி(யில்) தீர்த்தமான கோபால் ஐயாவிற்கு இனிய நல்வாழ்த்துகள்.

said...

முதலில் துளசியின் மணாளான்
திரு. கோபால் அவர்களுக்கு
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

வாழ்க வளமுடன்!

துளசி தளம் வாழ்க வளர்க!

துளசி வாழ்க வளமுடன்.!

said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கோபால் சார்!

துளசி தளத்திற்கும் வாழ்த்துக்கள்

said...

வாழ்த்துகள்! :-)

said...

//கொலுவைத்த கோமான், பொறுமையின் சிகரம், ஒடுக்கப்பட்டோர் சங்கத்தின் மூத்த குடிமகனார் கோபால் இன்றுபோல் என்றும் வாழ்கவென பிரார்த்திக்கிறோம்.//

இது தான் வாழ்த்து, பல நாட்கள் கழிச்சு நம்ம பெனாத்தல் டச்! ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்டேஏஏஏஏஏஏ!!!!!!!! நாம நேரிலேயே பார்த்துட்டோமில்ல! :))))))))))

said...

இதயம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் ‘தல' - தள.

said...

வாழ்த்து(க்)கள் மேடம் .. :-)

அப்படியே சார் க்கும் :-)

said...

உங்கள் தளத்திற்கும், "தலைவரு"க்கும் பொறந்தநாள் வாழத்துக்கள்!!!

Sridhar

said...

நூறாண்டுகள் வாழ்க! நோய்நொடியில்லாமல் வளர்க !!
தலைவருக்கு ஜே ! வரும் ஆண்டுகள் வளமாக அமைய வாழ்த்துகள் !!


ஆறிலிருந்து அறுபதாக வளர துளசி தளத்திற்கு வாழ்த்துகள் !!

said...

பாருங்க, பிறந்தா நாளும் அதுவுமா சாருக்கு ஒரு டோங்கா கிண்ணத்துல கேசரி செஞ்சு குடுக்க தெரிஞ்சதா? :p

ஆனா அவரு பெருந்தன்மையா தளத்துக்கு பதிவு போட ஐடியா எல்லாம் தராரு. :))

சங்கு சுட்டாலும் வெண்மை தரும்.

said...

கோபால் சாருக்கு வாழ்த்துக்கள்..
அப்படியே ஆறாம் ஆண்டில் அடிஎடுத்துவச்சிருக்கும்
துளசி தளத்துக்கும் வாழ்த்து. :)

said...

கோபால் அய்யாவுக்கு ஆறு வயசாயிடுச்சா?

பாத்தா அப்பிடி தெரியலையே?

said...

//'தல' யின் பிறந்தநாளை எங்கே மறந்திடப் போறேனோன்னு தளத்தோடு முடிச்சுப்போட்டு வச்சுக்கிட்டது ரொம்ப நல்லதாப் போச்சு.//

:-))))

அப்படியே தலைகீழா இருக்கே. :-) எனக்கெல்லாம் என்னைக்கு பதிவு எழுதத் தொடங்கினோம்னே நினைவில்லை. அக்டோபர் 2005 ஏதோ ஒரு நாள். நானும் எங்க திருமண நாளில் தொடங்கினேன்னு சொல்லிக்கிட்டா ரெண்டுமே நினைவிருக்கும்ன்னு நெனைக்கிறேன்.

தளத்திற்கும் மாமாவுக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்.

said...

வா(வ்)ழ்த்துக்கள் :-)

said...

நானும் சொல்லிக்கிறேன் “வாழ்த்துக்கள்”.

said...

ஈங்கு.. ஈப்பொழுது.. துளசி தளத்துக்கும், ஐடியா கொடுத்து உற்சாகப்படுத்தும் அண்ணலுக்கும், துளசிதள உலகப்பேரவை சதுரம் எண் 007 சார்பாக வாழ்த்து(க்)களை பொன்னாடையாக அணிவிக்கிறோம்.

said...

வாழ்த்துக்கள்.

உங்களை பற்றி "தேவதை" இதழில் குறிப்பிட்டிருந்தார்கள். படிக்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

உடன் இருந்தவர்களிடம் காட்டி பெருமை பட்டேன்.

வாழ்த்துக்கள்.

said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் ;))

said...

பிறந்த நாள் வாழ்த்துகள் துளசி தளத்திற்கும் கோபால் சாருக்கும் ! மேலும் பல பெருமைகள் சேர்ப்பீர் :))

said...

//இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் டீச்சர் வலைப்பூவுக்கும், வலைப்பூவை வைச்சி விடும் கோபால் சாருக்கும்! :)//

repeateyyy

said...

டீச்சர் ரெம்ப நாளா உங்க வகுப்புக்கு வரலை.. இனிமேல ஒழுங்கா வாறன்.. அப்புறமா உங்களுக்கு வாழ்த்து சொல்லுற அளவுக்கு எனக்கு வயசு இல்லை.. ஏன்னா நான் ஒரு மக்கு மாணவன்

said...

வாழ்த்துகள் ரெண்டு பேருக்கும் :)

said...

அன்பைக் கண்டுத் திக்குமுக்காடி அதுலேயே மூழ்கிப்போனேன். நினைவு திரும்ப ரெண்டு நாள் ஆச்சு!!!!

said...

அன்பு மனங்களே.....

கே ஆர் எஸ்

ஜெயஸ்ரீ

வருண்

சின்ன அம்மிணி

ராமலக்ஷ்மி

அபி அப்பா

ஆயில்யன்

அத்திவெட்டி ஜோதிபாரதி

கீதா சாம்பசிவம்

பினாத்தல் சுரேஷ்

பித்தன்
சிந்து சுபாஷ்

கொத்ஸ்

நிஜமா நல்லவன்

கோவி.கண்ணன்

கோமதி அரசு
அமித்து அம்மா
சந்தனமுல்லை

வெயிலான்
கிரி
நன்மனம்

மணியன்

அம்பி

கயலு

அப்பாவி முரு

குமரன்
சென்ஷி

வடுவூர் குமார்

ஐம்கூல்

ஸ்ரீஜா
கோபி

கபீர் அன்பன்

டி வி ராதாகிருஷ்ணன்

நசரேயன்

நான் ஆதவன்

உங்கள் அனைவருக்கும் நன்றியோ நன்றி.

என்றும் அன்புடன்,
துளசியும் கோபாலும்.

டீச்சரின் பி.கு: வாழ்த்த வயசெல்லாம் வேணாம்.மனம் மட்டும் இருந்தால் போதும்:-)))))