Friday, February 12, 2010

கண்ணனுக்குக் காலில் காயம்(: (குஜராத் பயணத்தொடர் 21)

வெராவல் என்ற ஊருக்குப் போறோம். அங்கேதான் கண்ணனின் கடைசிக் காலம்............ஹொட்டேலில் இருந்து ஒரு இருவது நிமிசப் பயணம்தான். காலையில் சுக்சாகர் கொட்டாயில் எட்டிப் பார்த்தால் இட்லி வடை இருக்குன்னு சொல்லி வயித்துலே பால் வார்த்தான் அங்கே வேலை செய்யும் பொடியன். கடைசியில் வார்த்தியதென்னவோ திரிஞ்சுபோன பால். பார்த்தாலே 'யக்'ன்னு சொல்லும் இட்லிகளும் வடையும். சாமி...... வேணாம் நைனா. இன்னும் கொஞ்சநாள் ஜீவிச்சு இருக்கவேண்டிய கட்டாயம் இருக்கு(பயணப்பதிவு முடிக்கணுமே) வேறெங்காவது பார்த்துக்கலாமுன்னு அறையைக் காலி செஞ்சுட்டுக் கிளம்பினோம்.
வழியில் ஒரு மீன்பிடி கிராமத்தைக் கடந்தோம். ஆற்றுப் பாலத்தையொட்டி ஆயிரக்கணக்கான படகுகள். என்னவோ 'சாண்டில்யன் கதைகளில் வரும் மரக்கலங்களின் அணிவகுப்போ'ன்னு பிரமிப்பு. இன்னும் படகு கட்டும் தொழிலும் பலமா நடக்குதுன்னு பார்த்தாலே தெரியுது அங்கே பாதிவேலை முடிஞ்சு நிற்கும் கலங்களைப் பார்த்தால்......

'பால்கா தீர்த் மந்திர்' வந்து, உள்ளே போனால்.....ஜரா என்னும் வேடனால் உள்ளங்காலில் அம்பு தைத்த காயத்துடன் கண்ணன். பார்க்கப்பார்க்கத் தெவிட்டாத முக லக்ஷ்ணங்களோடு அப்படியொரு அழகுச் சிற்பம். வெள்ளைப்பளிங்காம்.. அந்த மினுமினுப்பு ஏதோ 'போர்ஸலீன் டால்'போல் டாலடிக்குது. பெரிய சிலை. ஒரு காலைத் தூக்கி மற்றொரு முழங்கால்மேல் தூக்கிவச்சுக்கிட்டுச் சாய்ஞ்சு படுத்துருக்கார். எதிரில் ஒரு பக்கம் சின்ன மேடை ஒன்னில் வேடன் ஜரா, கூப்பின கையோடு அடக்கமா உக்கார்ந்துருக்கான்.
கதை அநேகமாத் தெரிஞ்சுருக்குமுன்னு நினைக்கிறேன். தெரியாதவங்களுக்காக..... இதோ!

பாரதப்போர் முடிஞ்சு பாண்டவர் ஆட்சி அமைஞ்சு எல்லாம் நல்லபடியாச்சு. கண்ணன் த்வாரகைக்குத் திரும்பிப்போய் 'எட்டுடன்' மகிழ்ச்சியாக இருக்கான். ஒரு குறைவும் இல்லாத மக்கள் ரொம்ப ஜாலியா மிதமிஞ்சிய சந்தோஷத்துடன் வாழ்க்கையை அனுபவிச்சு வாழ்ந்துக்கிட்டு இருக்காங்க. கவலையோ குறையோ இல்லைன்னா கேலிக்கும் கிண்டலுக்கும் கேட்பானேன்.

பலவருசங்களுக்குப் பிறகு ஒரு முனிவர் அந்தநாட்டுக்கு வர்றார். யாதவக்கூட்டத்து இளைஞர்களில் சிலர் முனிவரைக் கலாய்க்கலாம். பொழுது போக்க நல்ல வாய்ப்புன்னு நினைச்சுக்கிட்டு, சாம்பன்ன்னு ஒருத்தனுக்கு வயித்துலே தலைகாணியைக் கட்டிவிட்டுப் பொம்பளை வேஷம் போட்டுவிட்டுப் பிள்ளைத்தாய்ச்சிமாதிரி அய்யோ அம்மம்மா....ன்னு வலிதாங்காம; நடந்துவரச்செஞ்சு, அந்த முனிவரை வணங்கி, சாமி, நீங்கதான் ஞானதிருஷ்டியிலே எல்லாம் பார்த்துச் சொல்வீங்களாமே. இவளுக்கு என்ன பிள்ளை பிறக்கும்னு பார்த்துச் சொல்லுங்கன்னான் ஒருத்தன்.

முனிவர் உண்மையாவே ஞானி. அவருக்குக் கோபம் வந்துருச்சு. இவளுக்கு உலக்கைதான் பிறக்கும்.அதுவே உங்கள் குலத்துக்கு யமனா இருக்குமுன்னு சொல்லிட்டுப் போயிட்டார். கொஞ்ச நேரத்துலே சாம்பனுக்குப் பிரசவ வலி வந்துருச்சு. ஒரு உலக்கையைப் பெற்றெடுத்தான். இதென்னடா வம்பு . முனிவர் வாக்கு பலிச்சுருச்சே. நம்ம குலத்துக்கு அழிவுன்னு சொன்னதும்கூடப் பலிச்சுரும்போல இருக்கே. என்ன செய்யலாமுன்னு உக்காந்து யோசிச்சானுங்க. ஐடியாக் கிடைச்சுருச்சு. அந்த உலக்கையைச் சுட்டுச் சாம்பலாக்கி, அந்த சாம்பலை எடுத்துக் கடல்தண்ணீரில் போட்டுட்டானுங்க.

அலையிலடிச்சுக்கிட்டு வந்த சாம்பல் கடற்கரையில் ஒதுங்குச்சு. கொஞ்சநாளில் சாம்பல் படிஞ்ச இடங்களிலெல்லாம் கோரைப்புல் முளைச்சு வளர்ந்துருச்சு. இதையாரும் பெருசாக் கண்டுக்கலை.

வசந்தகாலம் வந்ததும் கடற்கரையில் போய் உல்லாசமாக இருந்தாங்க யாதவமக்கள். சாப்பாடு, குடின்னு பிக்னிக் அயிட்டங்கள் வேற. மிதமிஞ்சிய குடி, கேளிக்கைன்னு நேரம் போய்க்கிட்டு இருக்கு. ஒருத்தரை ஒருத்தர் சீண்டிக் கலாட்டா செஞ்சுக்கிட்டு இருந்தவங்க, பேச்சிலூடாக் கொசுவத்தி ஒன்னை ஏத்தி வச்சானுங்க. பாரதப்போர் பற்றிப் பேச்சு வந்துச்சு. அபிமன்யூவைத் தந்திரமாக் கொன்னது, அதுக்குப் பழிவாங்க அர்ஜுனன் சபதம் போட்டு கௌரவர்களைக் கொன்னது. பீமன் துரியோதனனை அடிச்சு குற்றுயிராக்கி வச்சது. மகன் இறந்துட்டான் என்ற வதந்தியை நம்பி துக்கம் மேலிட்டு ஆயுதங்களை வீசி எறிஞ்சு, தரையிலே நிஷ்டையில் இருந்த துரோணர் தலையை , திருஷ்டத்யும்னன் ஒரே போடாச் சீவி எறிஞ்சதுன்னு............சொல்ல ஆரம்பிச்சால் 'மகாபாரதம்' போல நீண்டு போகும்:-)

பாரதக் கதையை நம்ம இஷ்டைலில் கதையாச் சொல்லணுமுன்னு ரொம்பநாளா ஒரு ஆசை. நியூஸியில் வாரம் ஒருநாள்ன்னு நம்ம வீட்டுலே கதாகாலக்ஷேபம் நடத்தணுமுன்னு நினைப்பு. யாரும் வந்து கேக்கலைன்னாலும் கோபால் இருக்காரே. அவருக்கே இந்தப் புராணக்கதைகள் ஒன்னும் தெரியாது. (எங்க வீட்டுலே எங்க பாட்டி, கதை சொல்வதில் கில்லாடி..அவுங்ககிட்டேக் கதை கேட்டு வளர்ந்தவள் நான்.) அவருக்குச் சொல்லலாமுன்னா ஆள் பாதிநாள் நாடு தங்கறதில்லை. நம்ம கப்புவும் கோகியும் இருக்காங்கன்னா..... கோகியைப் பார்த்தாலே கப்பு 'ச்சீ'ன்னு துப்பிட்டுப்போகும். கடைசியில் மிஞ்சுனவன் நம்ம கோகிதான். அவனோ, உம்' கொட்டாமத்தான் கதை கேப்பான். சிலசமயம் பாதிக்கதையில் கைகாலை நீட்டிக்கிட்டுக் குறட்டைவிட்டுத் தூக்கம் வேற, விடிஞ்சதுபோன்னு இருந்துருவேன். ஹூம்...பாரதமுன்னு பேச்சுவந்தாவே எப்படி நீண்டுபோகுது பாருங்க. .....நம்ம கச்சேரியை வேறொரு நாளைக்கு வச்சுக்கணும்.

யாதவகுலத்து க்ருதவர்மன் கௌரவர்களோடு சேர்ந்து சண்டை போட்டது, கடைசியில் கௌரவர்கள் எல்லாம் அழிஞ்சபிறகு, துரோணரின் மகன் அசுவத்தாமனுடன் சேர்ந்து, பாசறையில் தூங்கும் பாண்டவப் படையை தீவச்சுக் கொளுத்துனது எல்லாம் பேச்சோடு பேச்சா வந்துக்கிட்டு இருந்துச்சு. அந்த இடத்துலே துரதிஷ்டவசமா க்ருதவர்மர் இருக்கார். அவர்கிட்டேயே போய், 'தூங்கிக்கிட்டு இருந்தவங்களை எந்த சுத்த வீரனாவது கொல்வானா'?ன்னு கேக்க, அவருக்குக் கோபம் வந்துச்சோ இல்லையோ அவருடைய அல்லக்கைகளுக்குக் கோவம் வந்துருச்சு. ஆதரவாளர் எதிர்ப்பாளர்ன்னு கூட்டம் ரெண்டாப் பிரிஞ்சு ஒருத்தரை ஒருத்தர் திட்டிக்கிட்டே சண்டைபோட ஆரம்பிச்சாங்க. உள்ளே போயிருந்த மது,. யாரையும் ஒழுங்கா யோசிக்க விடலை. வாய்ச்சண்டை கைச்சண்டையாச்சு. அப்புறம் குச்சி இருந்தா அடிக்கலாமுன்னு தேடுனப்பக் கடற்கரையில் காடா வளர்ந்து நின்ன கோரைப்புல் கண்ணுலே பட்டுச்சு. அப்படியே வேரோடு பிடுங்கி பளார் பளார்ன்னு ஒருத்தரை ஒருத்தர் அடிச்சுக்கிட்டே இருந்தாங்க. கொஞ்ச நேரத்துலே கையிலே இருந்த கோரையெல்லாம் உலக்கையா மாறிப்போச்சு. சண்டை ஜோர்லே இதையெல்லாம் யாருமே கவனிக்கலை. கண்மண் தெரியாத கோபம் எல்லோருக்கும்.

மண்டையிலே அடிபலமா விழவிழ ஒவ்வொருத்தரா 'மேலே' போய்ச் சேர்ந்தாங்க. கடைசியில் எஞ்சி நின்னது கண்ணனும் பலராமனும்தான்.. அவுங்க இந்த இடத்துலே இல்லை. அரண்மனையிலே இருந்துருப்பாங்க போல!

குலநாசம் ஆனதைக் கேள்விப்பட்ட கண்ணன், மனசுக் கஷ்டத்தோடே காட்டுக்குள்ளே நடந்துக்கிட்டு இருந்தான். உடம்பெல்லாம் வலி. ஒரு மரத்தடியில் படுத்துக்கிட்டு ஒரு காலைத்தூக்கி இன்னொரு கால் மேலே போட்டுக்கிட்டு இப்படி ஆச்சேன்னு வருந்தும் சமயம், ஜரா என்ற பெயருடைய ஒரு வேடன், காட்டுக்குள்ளே எதாவது மிருகம் ஆப்டுமான்னு தேடிக்கிட்டே வர்றான். தூரத்துலே இருந்து பார்க்கும்போது, கண்ணனுடைய உள்ளங்கால், ஏதோ மான் தலை மாதிரித் தெரிஞ்சது. இன்னிக்கு நல்ல வேட்டை. மான் கிடைச்சுருச்சுன்னு விஷம் தொட்ட அம்பை எய்துட்டான். 'சரக்'னு வந்து அது கண்ணனின் உள்ளங்காலில் தைச்சது. 'அம்மா'ன்னு ஒரு அலறல்.(அப்படித்தான் இருந்துருக்கணும்) மனிதக் குரல் கேட்டதும் என்னவோ தப்பா நடந்துபோச்சுன்னு வேடன் ஓடிவந்து பார்த்தால் த்வாரகை மன்னன், அநாதையாத் தனியாக் கிடக்கான்.

'சாமி...தப்பு பண்ணிட்டேன் சாமி. தெரியாம நடந்துபோச்சு. என்னை மன்னிச்சுருங்க'ன்னு அழுத முகத்தோடு கைகூப்பி வணங்கறான்.
அந்த இடம்தான் இது. அதே ஸீன்தான் உள்ளே சிலைகளா இருக்கு.
அடப்பாவமே...க்ருஷ்ணா.......... உனக்கு இந்த கதியான்னு மனசு புலம்ப வெளியில் வந்தோம். வளாகத்துலே இன்னொரு சிவன் கோவிலும் இருக்கு. சின்ன சேஷன் சுத்தி இருக்கும் சின்ன லிங்கம். ஸ்ரீ ப்ரக்டேஷ்வர் மகாதேவ். இவருக்குத்தான் நம்ம தஞ்சையில் பெரிய கோவிலா இல்லே கட்டிவுட்டுருக்கார் ராஜராஜர்.
கோவில் வளாகம் நல்ல சுத்தமா இருக்கு. நடுவில் ஒரு குளம். இதுவும் நல்ல பாராமரிப்போடு சுத்தம்தான். அதுக்கு அந்தப் பக்கம் ஸ்ரீ ஹரிநாம சங்கீர்த்தனம் செய்யும் கோவிலாம்.
இந்த பால்கா மந்திரைத் தொட்டடுத்து பெரிய சைஸுலே ஒரு சிவலிங்கம் இருக்கேன்னு அங்கே போனால்..... வாங்க வாங்கன்னு அன்பான வரவேற்பு.
சிவலிங்க உருவில் கட்டடம் இருக்கு. வட்டமான அறை. பிரம்மகுமாரிகள் சங்கமாம். உள்ளே கூட்டிட்டுப்போய்க் காமிச்சாங்க. சிவன் கோவில்கள், பிரம்மகுமாரிகள் சங்கத்தைத் தோற்றுவிச்ச சாமியார் ஒருவரின் கொள்கைகள், பிறவிக்கடலை நீந்தி எப்படி ஞானம் அடைவதுன்னு கண்ணாடி பொருத்திய ஏழெட்டு மாடங்களில் சின்னச்சின்ன பொம்மைகளை வச்சு டிஸ்ப்ளே செஞ்சுருக்காங்க. வட்டவடிவக் கொலு. ஒருமாடத்தில் ஏசு நாதர், புத்தர், ஒரு இஸ்லாமியர்ன்னுக்கூட பொம்மைகள் இருந்துச்சு. எல்லா மதமும் ஒன்றுன்னு சொல்றாங்க,இல்லே? அது என்னவோ உண்மைதான். சாமி ஒன்னுதானே!

(உள்ளே படம் எடுக்க அனுமதி இல்லைன்னு பணிவாச் சொன்னாங்க. போயிட்டுப்போகுது போங்க.)


அங்கே இருந்த ஒரு பொத்தானை அமுக்கினால் ஆடியோவில் அரைமணிநேர விளக்கம் கிடைக்குமாம். போடவான்னு கேட்டாங்க. வேணாமுன்னு சொன்னோம். அப்போப் பார்த்து பள்ளிக்கூடப் பிள்ளைகள் கூட்டம் ஒன்னு வந்துச்சு. அதுகளுக்கு விளக்கிச் சொல்லலாமுல்லே? ஒரு ப்ரம்மகுமாரி ஒன்னும் பேசாம ஓரமா நாற்காலி ஒன்னில் உக்கார்ந்துக்கிட்டாங்க. பாவம் பிள்ளைகள். எல்லா மாடத்தையும் ஒவ்வொன்னாத் தொட்டுக் கும்பிட்டுக்கிட்டே ஓடுச்சுங்க. சாமியைப் பார்த்தால் கண்ணுலே தொட்டு ஒத்திக்கோன்னுதானே பிள்ளைகளுக்கு வீட்டுலே சொல்லிக் கொடுக்கறாங்க. இல்லேன்னா சாமி கண்ணைக் குத்திருமே. நானும் அப்படி வளர்க்கப்பட்டவள்தான். ஆனால்.... என் குழந்தையை அப்படி வளர்க்கலைன்னு மகிழ்ச்சியா இருக்கு. சாமின்றது ஒரு உணர்வு, அனுபவமுன்னு புரிஞ்சுக்கிட்டேன். அது அவளுக்குக் கிடைக்கும்போது, கடவுளை நம்புனால் போதும். அதுவரை? நல்ல மனசுள்ள மனுஷியா, மனிதத்தோடு இருந்தாலே தாராளம். அப்படித்தான் இருக்காள்.

மாடியிலே ஒரு போட்டோ கண்காட்சி இருக்கு. வந்து பாருங்கன்னு கூப்பிட்டாங்கதான். நமக்கும் போதுமுன்னு ஆகிருச்சு. இன்னொருநாள் பார்க்கிறேன்னு பூசி மெழுகிட்டு, வந்தவழியே திரும்பி சோமநாத் கோவிலின் முதலடுக்குப் பாதுகாப்பை நோக்கிப் போனோம்.

பயணம் தொடரும்...............:-)

28 comments:

said...

// வாய்ச்சண்டை கைச்சண்டையாச்சு. அப்புறம் குச்சி இருந்தா அடிக்கலாமுன்னு தேடுனப்பக் கடற்கரையில் காடா வளர்ந்து நின்ன கோரைப்புல் கண்ணுலே பட்டுச்சு.//

பேச்சு.. பேச்சா இருக்கணும்ன்னு தெரியலை பாருங்க் :-))

இன்னிக்கி மீ த ஃபர்ஸ்ட்டா!!!

said...

வாங்க அமைதிச்சாரல்.

இன்னிக்கும் நீங்கதான் ஃபர்ஸ்ட்டு:-)

Anonymous said...

//நல்ல மனசுள்ள மனுஷியா, மனிதத்தோடு இருந்தாலே தாராளம். அப்படித்தான் இருக்காள்.//

இது பிடிச்சிருக்கு.

கிருஷ்ணரோட கடைசிக்காலம் பத்தி பாலகுமாரன் ஒரு கதை எழுதினார். அதன் மூலமா தெரிஞ்ச்சுக்கிட்டேன்.

said...

வாங்க சின்ன அம்மிணி.

கதையோட பெயர் என்னன்னு நினைவிருந்தாச் சொல்லுங்க.

அவர், ஆன்மீகமுன்னா அட்டகாசமா எழுதி இருப்பாரே!

said...

நீங்களே பெரிய கதாகாலேட்சேபம் நடத்தறேங்கறிங்க உங்களுக்கே அரைமணி நேர ஆடியோ விளக்கமா ;)

said...

மரக்கலங்களின் அணிவகுப்பு,பெரிய லிங்கக் கட்டிடம் படங்கள் நன்றாக இருக்கின்றன.

காயத்துடன் இருக்கும் கண்ணனின் வெள்ளைப்பளிங்குச் சிற்பம் கொள்ளை அழகுடன் இருக்கிறது.

said...

படகுகளும் படித்துறையும் சிவலிங்கக் கட்டிடமும் அழகு.

said...

//சாமின்றது ஒரு உணர்வு, அனுபவமுன்னு புரிஞ்சுக்கிட்டேன். அது அவளுக்குக் கிடைக்கும்போது, கடவுளை நம்புனால் போதும். அதுவரை? நல்ல மனசுள்ள மனுஷியா, மனிதத்தோடு இருந்தாலே தாராளம். அப்படித்தான் இருக்காள்.//
மிக சரியான அணுகுமுறை.
அன்புடன் எழிலரசி பழனிவேல்

said...

ம்ம்...காலில் காயத்துக்கு இம்புட்டு பெரிய கதையா!! ;)

said...

விட்டு போன பதிவையெல்லாம் படிச்சுட்டு வாரேன் டீச்சர்...

கிருஷ்னரோட கதையில் இப்படியெல்லாம் டிவிஸ்ட் இருக்கா...பாட்டி கதை சொல்லி கேக்கறதுக்கு வாய்க்கலை டீச்சர்.

said...

அப்ப நான் ஒரு கதாகாலஷேபம் ஏற்பாடு பண்ணவா டீச்சர்

http://lksthoughts.blogspot.com/2010/02/blog-post_12.html

said...

//ம்ம்...காலில் காயத்துக்கு இம்புட்டு பெரிய கதையா!! ;)//

இல்லை கோபி அது கிருஷ்ணரோட இறுதி

Anonymous said...

இண்டியா டுடேல வந்துது. ஒரு பன்னெண்டு வருஷம் முன்னாடி. பெயர் ஞாபகம் இல்லை. சிறுகதை.

said...

வாங்க கயலு.

வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு:-)))))

said...

வாங்க மாதேவி.

ரசிப்புக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி.

said...

வாங்க ராமலக்ஷ்மி.

தொடர்ந்து வருவது மகிழ்ச்சியா இருக்கு.

சிவலிங்கக் கட்டடம், அருமையான ஐடியா. இல்லே!!!!

said...

வாங்க எழிலரசி.

பாயிண்டைச் சரியாப் பிடிச்சீங்க!!!!!

said...

வாங்க கோபி.

இதென்ன நடக்கும்போது, கால் தடுக்கி வந்த காயமா?

கொலை...மேன் ஸ்லாட்டர்!!!

said...

வாங்க சிந்து.

'நல்ல மாணவி' டைட்டில் உங்களுக்கு!

அரியர்ஸ் தள்ளிப்போடலை பாருங்க, அதுக்கு:-))))

said...

வாங்க எல் கே.

'கூடம் கோணலா இல்லாமல்' பார்த்துக்குங்க:-))))

said...

சின்ன அம்மிணி.

ஆஹா..... மாமாங்கமாச்சா!!!!

said...

avlothana pannidalam

said...

அந்த உலக்கைத் துண்டு ஒண்ணை மீன் ஒண்ணு முழுங்கி, அதை இந்த வேடன் தன் அம்பு நுனில பொருத்தி, அதை வச்சு கிருஷ்ணன் கால்ல தச்சு,யப்பா இதுவே இவ்வளவு நேரமாறதே துளசி.
பொறுமையின் மறு அவதாரம் நீங்கதான். இத்தனை டீடெய்லா ஒரு பயணத்தைச் சொல்ல்றது மகா கஷ்டம்பா. அந்த கலங்கள் கட்டுமிடம் தத்ரூபமா போட்டொவில விழுந்திருக்கு. ஒரு எக்ஸிபிஷன் வச்சிடலாமா

said...

பாதி பாடம் படிச்சுட்டேன். மீதியையும் படிச்சுருவேன் :)

said...

நம்ப நெல்சன், பிக்டனுக்கு sister town போல இருக்கு !!

அபிமன்யு வததில தொடங்கினது.. குடி , உளரலில் பெரிதாபோய் வம்சமே அழிந்து தெய்வ புருஷனை துக்க படுத்தி அவன் மறைவுக்கும் காரணமானது .. நம்ப ஊர் week end pub விஷயம் !!
உடம்பு தேவலையா? தாயாரு வந்தாச்சா?

said...

வாங்க வல்லி.

எக்ஸிபிஷன் ஃபோட்டோவுக்குத்தானே? வச்சுட்டால் ஆச்சு.

கலெக்ஷன் தேறுமா:-)))))))))

said...

வாங்க நான் ஆதவன்.

பொறுப்பான மாணவர் அவார்ட் உங்களுக்குக் காத்துருக்கு:-)

said...

வாங்க ஜயஸ்ரீ.

போதை ஏறுனவுடந்தான் உளறல் ஆரம்பிச்சுருதே:(

இருகோடுகள் தத்துவம்தான். உடல்நிலை இப்போ சின்னக்கோடா ஆயாச்சு.

'தாயார் திக்விஜயம்' போயிண்டுருக்கு:-)