Tuesday, February 16, 2010

எட்டுக்கோவில் வளாகம் (குஜராத் பயணத்தொடர் 23)

சோம்நாத் ட்ரஸ்ட் நிர்வாகத்தின் கீழ் இந்த 'கோலோக் தாம் தீர்த்' கோவில்கள் இருக்கு. நல்ல பெரிய வளாகம். ஆற்றின் கரையோரம். அருமையான சூழல். 1970வது வருஷம் பிர்லாக் குடும்பம், கோவில் புனரமைப்புக்குப் பெரும் பொருளுதவி செஞ்சுருக்கு.
வளாகத்தின் நடுவில் சின்னதா ஒரு அலங்கார மண்டபம். அதுலே பளிங்குலே சதுரமேடையில் ஸ்ரீ கிருஷ்ணரின் பாதங்கள்.கால்தடங்களை நமக்கு விட்டுட்டு, இங்கிருந்துதான் அவர் உலகவாழ்வை நீத்து ஸ்ரீவைகுண்டம் போயிட்டாராம்.

கீதா மந்திர், கோவில் முகப்பில் பெயருக்கேத்தபடி அர்ஜுனனுக்குக் கீதை சொன்ன ஸீன். உள்ளே சிம்பிளான அலங்காரத்துடன் பெருசா ஒரு ஹால். குழலூதும் கண்ணன் சிலை மட்டும் இருக்கு. விஸ்வரூப தரிசனமுன்னு ஒரு பெரிய கட் அவுட் வச்சுருக்காங்க.

அடுத்த கோவில் பலராமனுக்கு. தரையைவிட ஒரு அடித் தாழ்வா இருந்தாக்கூட குகைன்னு சொல்லிடுவாங்க போல. காலில் அடிபட்டுக் கிடந்த கிருஷ்ணனை, பலராமன் இங்கே கொண்டுவந்தார். பூமியில் தன்னுடைய காலம் முடிஞ்சுருச்சுன்னு சொன்ன கிருஷ்ணர், தன் காலடிகளைப் பதிச்சுட்டுத் தன் சொந்த உருவில் வைகுண்டத்துக்குத் திரும்பிப் போயிடரார். பலராமனும் பெருமாள் இல்லாத இடத்தில் தனக்கு என்ன வேலைன்னு அவரும் தன் சொந்த உருவான பாம்பு வடிவத்தில் பாதாளலோகம் போயிடறார். அதுவும் வெள்ளைப்பாம்பு உருவில் சரசரன்னு குகைக்குள் இறங்கிட்டாராம். அந்தப் பாதாளத்துக்கு வாசல், இந்த குகைதானாம். சுவத்துலே ஒரு பாம்பு வடிவம் செதுக்கி இருக்கு. பளிங்குச் சிற்பமா ஆளுயர பலராமர் சிலையும் வச்சுருக்காங்க.

பல்ராம்
பலராமன் = பாம்பு. இதுக்கும் ஒரு கதை இருக்கு. சுருக்கமாச் சொல்லப் பார்க்கிறேன். ஸ்ரீ வைகுண்டத்தில் பாற்கடலில் பாம்புப் படுக்கையில் பகவான் விஷ்ணு படுத்துருக்கார். அந்தப் பாம்புக்கு அஞ்சு தலை இருக்கு. ஆதிசேஷன் இவர். பெருமாள் ஒவ்வொரு அவதாரம் எடுத்து பூமிக்கு வரும்போதும், படுக்கையும் கூடவே கிளம்பி வருது. (நாங்க சின்னப்பிள்ளைகளா இருந்தப்ப ஊருக்குப் போகணுமுன்னால் ஜமக்காளம் தலைகாணி, போர்வைன்னு படுக்கை ஒன்னு கட்டி எடுத்துக்கிட்டுப் போவோம் ) தசாவதாரத்துலே முதல் ஏழெட்டு வகைகளில் என்னவா இருந்துருக்குமுன்னு விவரம் சரியாத் தெரியலை. ஒருவேளை அதெல்லாம் ஜஸ்ட் டே ட்ரிப் என்பதால் படுக்கைக்கும் பாய்க்கும் மெனெக்கெடலை போல! ஆன்மீகப்பதிவர்கள் யாராவது விளக்கினால் நல்லது. ராமாவதாரத்தில், இந்த ஆதிசேஷந்தான், தம்பி லக்ஷ்மணனா கூடவே பிறந்து கூடவே இருந்துருக்கார். அப்போ இவருடைய சேவையைப் பார்த்து ரொம்பவே மகிழ்ந்துபோனார் ராமர். அண்ணனுக்கு இவ்வளவு சேவை செஞ்சியேப்பா.... இதுக்குப் பதில் மரியாதையா நீ எனக்கு அண்ணனா இருந்து நான் உனக்குத் தம்பியாப் பொறந்து உனக்குக் கொஞ்சமாவது சேவை செய்யணுமுன்னு இருக்கேன்னார். அதன்படித்தான் கிருஷ்ணாவதாரத்தில் சேஷன், பலராமனா அவதரிச்சாராம். பதஞ்சலி முனிவர், ராமானுஜர்ன்னு அவதரிச்சதும் சேஷன்தானாம்.
லக்ஷ்மிநாராயணன் கோவில். பெரிய அளவில் பளிங்குச்சிலை. மஞ்சள் நிறப் புடவையில் மங்களகரமாய் லக்ஷ்மி. அலங்கார பூஷிதனாக நாராயணன். எதிரில் பெரிய திருவடி கூப்பிய கரங்களுடன் மண்டிபோட்டு உக்கார்ந்துருக்கார். எல்லாமே வெண்பளிங்கு!

காசி விஸ்வநாதர்க்குத் தனியா ஒரு கோவில். கோவிலுன்னும் சொல்லமுடியாது. சந்நிதின்னு வச்சுக்கலாம். லிங்கமும் சேஷமுமா இருக்கு.

சின்னதா வாசல் உள்ள ஒரு கட்டிடத்துக்குள் போனால் வல்லப் ஆச்சார்யாவைப் பின்பற்றும் வைணவர்களுக்கான கோவில் இருக்கு. 65வது பேதக்ன்னு எழுதிவச்சுருக்காங்க. (அப்படீன்னா என்ன? அறுபத்தியஞ்சாவது பீடாதிபதியா? அதுவும் எப்படி? இவர்தான் இந்த புஸ்டி மார்க் ஆரம்பிச்சதுன்னும் சொல்றாங்களே!). அவர் இருந்த இருக்கை, அவர் பூஜித்த கிருஷ்ணன்னு சகலமும் வச்சுருக்காங்க. 'சுத்த அத்வைதமாம்'. இந்த சம்பிரதாயத்தைப் 'புஸ்டி மார்க்கம்' ன்னு சொல்றாங்க. இவரும் எட்டெழுத்து மந்திரம்தான் சொல்லி இருக்கார். 'ஸ்ரீக்ருஷ்ண சரணம் மம:' அந்த பகவான் ஸ்ரீ க்ருஷ்ணனின் வாயாகவே இவர் அவதரித்தாராம். (ஆஹா..... க்ருஷ்ணா'ஸ் வாய்ஸ்) அவதார காலம் சமீபத்துலேதான். 15 ஆம் நூற்றாண்டு, 1479 லே பிறந்தவர் தனது 52 வது வயசுலே (1531) சாமிகிட்டே போயிட்டார். இவரை(யும்) அவதாரபுருஷர்ன்னு சொல்றாங்க. ஸ்ரீ க்ருஷ்ணனின் வாக்கு இப்படி வல்லபராக அவதரிச்சதாம். அதனால் இவர் சொன்னது எல்லாம் அந்த க்ருஷ்ணனே சொன்னதாக எடுத்துக்கணுமாம்.

இந்த மொத்தவளாகமும் படுசுத்தமாவும், சாந்தமாவும் இருக்கு. வளாகத்தையொட்டி ஓடும் ஆறு. அங்கே இறங்கிப்போகும் படித்துறை எல்லாமே அழகு. குளிர்ச்சிதரும் மரங்களும், இருக்கைகளுமா சூப்பர் லொகேஷன் போங்க.
போனவழியே திரும்பினோம். ரொம்ப தூரத்துலே இருந்தே சோம்நாத் கோவில் கோபுரம் தெரியுது. கோவிலுக்கு டாடா காமிச்சுட்டு அப்படியே ஊரைவிட்டுக்கிளம்பி கிழக்காலே பயணிக்கிறோம். வரைபடத்துலே 'மூல் த்வார்க்கா'ன்னு ஒரு இடம் இருக்கு. எத்தனையெத்தனை மூல்களடா...... ஆனாலும் அது என்னன்னு பார்த்தே ஆகணுமுன்னு இருக்கு.

நெடுஞ்சாலையை விட்டுப்பிரிஞ்சு சின்ன கிளைப்பாதையில் போகும்போது, சோளம், கரும்புன்னு விளைஞ்சு நிற்கும் பசுமைகள். ரொம்பதூரம் வந்துட்டோமேன்னால்.... மூல்த்வார்கான்னு ஒரு போர்டு. ஒரு பெரிய தொழிற்சாலைக்கு வந்துருக்கோம். அம்புஜா சிமெண்ட்ஸ். கடற்கரையை ஒட்டிய இடம். பேக்டரியில் இருந்து அப்படியே, கப்பலில் பல்க் லோடிங் செஞ்சுக்கக் கன்வேயர் எல்லாம் போட்டுவச்சு அமர்க்களமா இருக்கு. தொழிற்சாலையில் வேலைசெய்யும் மக்களுக்குக் குடியிருப்பு போல கொஞ்ச தூரத்துலே கண்ணுக்குப்பட்டது. சரியான இடம் பார்த்துத் தொழிற்சாலையை ஆரம்பிச்சவங்களுக்கு தொலைநோக்குப் பார்வை ஏராளம்.
கடற்கரையில் ஒரு பழங்காலக்கோவில் பாழடைஞ்ச நிலையில். தொல்பொருள் இலாகா ஏற்றெடுத்துருக்கு. பழுதுபார்த்துச் சரிபண்ணப்போறாங்களாம். வேலை நடக்க ஆரம்பிச்சு, கற்கள் வந்து இறங்கி இருக்கு. பக்கத்துலேயே சிவன்கோவில் ஒன்னு டைல்ஸ் பதிச்ச சாதாரணக்கட்டிடமா தினசரி பூஜைகள் முடங்காம நடக்குது. பழைய கோவிலைப் புதுப்பிச்சு முடிச்சால் சிவனை அங்கே ஷிஃப்ட் செஞ்சுட்டு, இதை எடுத்துறலாம். சூழ்நிலைக்குக் கொஞ்சமும் பொருத்தமில்லாமல் eyesore.

சூப்பர் கடற்கரை. தென்னைகளின் கூட்டம் ஒரு பக்கம். குடிசைபோட்டுக்கிட்டுத் தங்கிடலாம். நினைப்புதான்.......

திடுக் திருப்பம் ஒன்னு நினைச்சுக்கூட பார்க்காத இடத்துக்கு போறோம்.
இன்னும் கொஞ்சம் படங்கள் ஆல்பத்தில்!

பயணம் தொடரும்.........:-)

23 comments:

said...

\\ஒருவேளை அதெல்லாம் ஜஸ்ட் டே ட்ரிப் என்பதால் படுக்கைக்கும் பாய்க்கும் மெனெக்கெடலை போல!//

:)

நல்ல விசாரிச்சு எங்களுக்கு சொல்லனும்ன்னு நினைக்கிறீங்க் பாருங்க.. உங்க கடமை உணர்ச்சிக்கு பாராட்டுக்கள் துளசி..

said...

செய்யற வேலையை சலிப்பு இல்லாம செய்றிங்க பாருங்க.. அதுக்கு வாழ்த்துக்கள் டீச்சர்
அன்புடன்
ஜாக்கிசேகர்..

said...

நம்ம பதிவுகளிலே கொஞ்சமாவது இன்ஃபர்மேஷன் இருக்கணுமுல்லே?

அதானே வெல்த்:-))))

said...

வாங்க ஜாக்கி.
என்ன அபூர்வமா இந்தப் பக்கம்?

நல்லா இருக்கீங்களா?


எல்லாம் இந்த தாடிக்காரரால் வந்த வினை.
(டாடி இல்லே. தாடி)

'எண்ணித் துணிக'ன்னுட்டாரே....

துணிஞ்ச பிறகு இழுக்கு வர்றமாதிரி சலிச்சுக்கலாமோ?

said...

இந்த‌ அம்புஜா சிமிண்ட் அங்கு த‌யாரிப்ப‌தில்லை என்று நினைக்கிறேன் ஏனென்றால் சாலை எல்லாம் தூசியில்லாம‌ல் இருக்கிற‌தே!ப‌ட‌ங்க‌ளை ஆல்ப‌த்தில் பார்த்தேன்.
இப்ப‌டி ஒரு தொழிற்சாலை அங்கு தொட‌ங்க‌னும் என்ற‌ நினைப்பு வ‌ருவ‌த‌ற்கு முன்பே ப‌ல‌ வித‌ ஆராய்சிக‌ள் செய்து முடிவு செய்வார்க‌ள்.இதெல்லாம் இப்போது நான் பார்க்கும் வேலையில் இருந்து தெரிந்துகொண்டேன்.

said...

வாங்க குமார்.

வேற இடத்தில் தயாரிச்சு லோடிங் செய்யமட்டும் இங்கே வருதுன்னு நினைக்கிறேன்.

திட்டம் தீட்டுவது எவ்வளோ முக்கியமுன்னு சிலவருசங்களாக் கவனிச்சுக்கிட்டுத்தான் இருக்கேன்.

கோபாலின் வேலை அப்படி.

ஆனால் அதையெல்லாம் ஆஃபீஸோடு விட்டுறணும்.

ஏட்டுச்சுரைக்காய் வீட்டுக்கு உதவாது:-)

said...

பலராமனுக்கு இப்படி ஒரு கதை இருக்கா!!..ரைட்டு ;)

said...

முடிச்சுட்டேன்ல :))

அருமையான பயணக்கட்டுரை டீச்சர். போகிற கோவில்களிலெல்லாம் அவர்கள் கடைபிடிக்கிற சுத்தமும் சுகாதாரமும் ஆச்சர்யமளிக்கிறது.

said...

லக்ஷ்மிநாராயணன் பளிங்கு சிலை மிக அழகு...பலராமருக்கு எப்படி ஒரு கதையா?
நல்ல ரசனையான பதிவுகள்...
Keep Rocking....

said...

லஷ்மி நாராயண் கொள்ளை அழகு.அனேகமா வட இந்திய கோவில்களில் இந்தவகை பளிங்குசிலைகள் தான் நிறைய காணக்கிடைக்கிறது.இல்லைன்னா ஒரேயடியா செந்தூரம் பூசி வெச்சிடுறாங்க.

said...

Suspense Suspense.... adhu enna thiruppam teacher?

said...

We are getting more exclusive info day by day. Thanks to you we are visiting these places.

said...

Forgot..."அந்தப் பாதாளத்துக்கு வாசல் இந்த குஜைதானாம்" guess needs to be corrected.

said...

வாங்க கோபி.

பலராமனுக்கு மட்டுமா....? நமக்கே ஏராளமான கதை(கள்) இருக்கே:-))))))

said...

வாங்க நான் ஆதவன்.

வெரிகுட் வெரிவெரி குட்.

பாடத்துலே(யும்) இவ்வளவு ஆர்வர் காமிப்பது அருமை.

'மாணவர் திலகம்' பட்டம் உங்களுக்குத்தான்.

சுத்தமா இருப்பதைப் பார்த்தாலே மகிழ்ச்சியா இருக்குல்லையா?

எப்பத்தான் நம்ம பக்கம் மக்கள் இதை உணருவாங்களோ? :(

said...

வாங்க பத்மஜா.

நீங்கெல்லாம் கூடவே வர்றீங்கன்ற தைரியம்தான் 'கதைகள்' எல்லாம் நீண்டுக்கிட்டே போகுது:-)

said...

வாங்க அமைதிச்சாரல்.

இங்கே வட இந்தியாவில் மட்டும்தான் இப்படிச் சிந்தூர மெழுகல். வெளிநாடுகளில் அநேகமா எல்லாக் கோவில்களும் வெண் பளிங்காத்தான் இருக்கு. ராஜஸ்தானில் ஏற்றுமதிக்குன்னே அட்டகாசமான சிலைகள் செய்ய்யறாங்க.

நம்ம நியூஸியில்கூட ஆக்லாந்து நகரத்தில் இருக்கும் 7 கோவில்களில் ஒன்னைத்தவிர மற்றவைகளில் பளிங்குதான்.

விடுபட்ட ஒன்னு முருகன் கோவில். அது இலங்கைத்தமிழர்கள் கட்டுனது. அங்கே மட்டும் கற்சிலை இருக்கு.

said...

வாங்க ப்ரசன்னா.

ரொம்ப எதிர்பார்க்காதீங்க. சாதாரண சஸ்பென்ஸ்தான்:-))

அடுத்தபகுதியில் வருது!

said...

வாங்க சந்தியா.

தொடர்ந்துவரும் ஆதரவுக்கு நன்றிப்பா.

குஃபா, குகைன்னு மாறிமாறித் தட்டி, இப்ப கீ போர்டுக்கு கன்ஃப்யூஷன். குஜைன்னு புதுச்சொல் வந்துருச்சே:-))))))

மாத்திட்டேன். 'கவனிப்பு'க்கு ஒரு ஸ்பெஷல் டேங்கீஸ்!

said...

முத்துலெட்சுமி சொன்னதை போல நானும் யோசிச்சேன் டீச்சர்...எதையும் விடாம தெளிவா விளக்கமா ....சந்தேகமா..மூச்.ன்னு சொல்லிக்கறளவு....கிரேட் டீச்சர் கிரேட்.

said...

வாங்க சிந்து.

இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்பு ரணகளமாப் போயிருதுப்பா!!!

கூடுதல் கவனமால்லெ இருக்கவேண்டி இருக்கு:-)))))

said...

"நீ எனக்கு அண்ணனா இருந்து நான் உனக்குத் தம்பியாப் பொறந்து" அறிந்து கொண்டேன்.

said...

வாங்க மாதேவி.

எல்லாத்துக்கும் பூர்வ ஜென்மக் கடன் ஒன்னு இருக்கு. அது சாமியாவே இருந்தாலும் என்பது தான்......

ஏதோ சில ஜென்மத்துலே பதிவர்கள் எல்லாம் என்னை ஒருவிதத்தில் இம்சிச்சு இருக்கணும். அதான் இப்போ இந்த ஜென்மத்தில் 'பழி' வாங்கறேன்:-)))))))))