Friday, April 16, 2010

ஆயிரத்தில் ஒருத்தியின் அபூர்வ வாசகி

ஒரு மூணு வருசம் இருக்கும். ஜூன் அஞ்சு. ஃபோன் அடிக்குதேன்னு எடுத்தால்... திருமணநாள் வாழ்த்துச் சொல்லும் புதிய குரல் யாருன்னே தெரியலை. நம்ம நம்பர் எப்படிக் கிடைச்சதாம்? துப்பறிஞ்சு கண்டு பிடிச்சவங்க அமெரிக்காவில் இருந்து பேசறாங்க. துளசிதளத்தின் வாசகி(யாம்) ஆனா பின்னூட்டமாட்டாங்க. அக்கவுண்டு எடுத்துக்கலை(யாம்). நம்ம வீட்டிலோ அனானிகளுக்குத் தடா. ஓசைப்படாமல் வந்து வாசிச்சுட்டுப்போவாங்க(ளாம்) பூனையைப்போல:-)

அறிமுகம் எல்லாம் ஆயிருச்சேன்னு, தனி மடலிலும் சாட் லைனிலும் வந்து அப்பப்ப 'நான் இருக்கேன்'னு சொல்வாங்க. போனவருசம் இந்தியா போறேன்னு சொன்னதும்

"'பச்சை கலர்; எடுக்காதே. பார்த்துப் பார்த்து அலுத்துப்போச்சு"

த்தோடா..... பச்சை ரெண்டோ மூணோதான் இருக்குமுன்னு அடிச்சுச் சொல்லிட்டு உள்ளே நம்ம வார்ட்ரோபைப் பார்த்தால் ரொம்பச் சரி. ரெண்டோ மூணோதான் பச்சை இல்லாமக் கிடக்கு:(

வீட்டுலே அண்ணன் அண்ணிகிட்டே சொல்லிக்கிட்டு இருந்தேன். துணிக்கடைக்குப் போனால் கை என்னையறியாமலேயே பச்சையை எடுப்பதும், அண்ணனோ இல்லை அண்ணியோ 'பச்சை பச்சை'ன்னு அலறுவதுமா அந்தப் பயணத்துலே ஷாப்பிங் எபிஸோடு பேஜாராப் போனதுதான் உண்மை. இப்படி அவுங்க பெயர் நம்ம ஹௌஸ்ஸோல்ட்லே புழங்குனது அதிகம். கோபாலுக்கு ஏகப்பட்ட சந்தோஷம். பச்சை இல்லை என்பதால் நம்பர் ஆஃப் ஐட்டம்ஸ் குறைஞ்சு போச்சு. ஆனா அதை வெளியே காட்டிக்காம இருக்க அவர் பட்ட பாடு இருக்கே...........

"ஏம்மா.... ஒன்னுமே எடுக்கலை. இது போதுமா? அந்த பச்சை ரொம்ப நல்லா இருக்கு. உனக்குப் போட்டால் அருமைதான். ஆனா வேணாங்கறியே......"

போன ஜூனில் சென்னைக்கு வந்து, கொஞ்சநாள் இருக்கும் வாய்ப்புக் கிடைச்சது. நானும் விட்டதைப் பிடிக்கிறேன்னு ஓடி ஓடிக் காணாததையெல்லாம் கண்டுக்கிட்டு இருந்தேன். ஒரு நாள் மடல் வருது. சென்னைக்கு வந்துருக்கேன். உங்களை நேரில் சந்திக்கணும். 'வாங்க. இன்ன இடம் இன்ன நேரம்' எல்லாம் சொல்லிட்டு ஓடிப்போய் அலமாரியைத் திறந்து, முதல்லே கண்ணில் பட்ட பச்சையைத் தள்ளிட்டு ஒரு சிகப்பை எடுத்து வச்சேன்.

மகளையும் கூட்டிக்கிட்டு வந்தாங்க. 'நான் சொன்னேனில்லை இவுங்கதான் அந்த யானை ஆண்ட்டி'


ஓ மை காட்!!!!!!!!!!!!! நான் பூனைச்சட்டைதான் போட்டுருந்தேன்:(

சூட்டிகையான பொண்ணு. பாட்டெல்லாம் கத்துக்கறாங்க. பாடுன்னதும் தாளம்போட்டு நல்லாப் பாடுனாங்க. இந்த வருசம் வர்ற கொலுவுக்கு அந்தப் பாட்டை எடுத்து வச்சுக்கிட்டேன்.

புதுசா சந்திக்கிறோமேன்ற எண்ணமே இல்லாம பேசிக்கிட்டே இருந்தோம்.
'நீங்க மட்டும் துளசிதளத்துலே பரிட்சை வச்சா நாந்தான் முதல் மார்க் எடுப்பேன். அப்படி எல்லாமே உருப்போட்டு வச்சுருக்கேன்'னதும் 'ஆஹா..... துளசிக்கொரு தேசிகி கிடைச்சுட்டாங்க'னு மனசு கூத்தாடுனது என்னவோ உண்மை.

ஆயிரம் வரப்போகுதேன்னு அவுங்களுக்கு ரொம்ப மகிழ்ச்சி. அதுக்காக எனக்கு அனுப்புன பரிசுதான் இது. நானும் பத்திரமா எடுத்து வச்சு இன்னிக்கு விளம்பியிருக்கேன்.


ஆயிரம் பதிவுகள் இட்டாய்
பல்லாயிரம் புண்ணியம் பெற்றாய்

காவியம் பல சொன்னாய்
ஓவியம் போல் மனதில் பதிந்தாய்

நெஞ்சம் வாடிய போது தேற்றினாய்
அஞ்சும் போது துணை நின்றாய்

வாய் விட்டு சிரிக்க வைத்தாய் - என்
தாய் போல அறிவுருத்தினாய்

எழுதிய சொல்லினால் கட்டி இழுத்தாய்
நல்கிய நெஞ்சத்தில் ஆட் கொண்டாய்

டீச்சரும் ஆனாய் - நல்ல
ப்ரீசரும் ஆனாய் - என் => Preacher here (you are cool too - may be freezar is also good)
தோழியும் ஆனாய்
வாழி நீ பல்லாண்டு !!!

குறைவில்லாத கோபாலனோடு
வரைவில்லாத மகிழ்ச்சியோடு
அளவில்லாத நெஞ்சங்களோடு
வாழி நீ பல்லாண்டு !!!

கலைமகளின் பிம்பமே
வலைமகளின் சின்னமே
விஜியின் "துல்ஸ்"யே
வாழி நீ பல்லாண்டு !!!


என் எழுத்துகளுக்கு ஆதரவாக இருந்த நண்பர்களுக்கும், வாசகர்களுக்கும், பின்னூட்டம் இட்டும் இடாமலும் என்னை ஊக்கப்படுத்திய அனைவருக்கும்,
நம்மாழ்வார் ரேஞ்சுக்குப்போய் பல்லாண்டு பாடுன என் அபூர்வவாசகி விஜிக்கும் என் அன்பையும் நன்றியையும் இங்கே பதிவு செய்வதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.

127 comments:

said...

டீச்சர் வாழ்த்துக்கள். இன்னும் பல ஆயிரம் பதிவுகள் போடவேண்டும். அருமையான வாசகி அண்ட் ரசிகை உங்களுக்கு கிடைச்சிருக்காங்க.
//"ஏம்மா.... ஒன்னுமே எடுக்கலை. இது போதுமா? அந்த பச்சை ரொம்ப நல்லா இருக்கு. உனக்குப் போட்டால் அருமைதான். ஆனா வேணாங்கறியே......"//

ஹ்ம்ம்

said...

**மகளையும் கூட்டிக்கிட்டு வந்தாங்க. 'நான் சொன்னேனில்லை இவுங்கதான் அந்த யானை ஆண்ட்டி'***

LOL! எனக்கும் உங்க தளத்தைப்பத்தி நெனச்சாலே அந்த யானைதான் ஞாபகம் வரும்! :)

ஆயிரம் பதிவுகள் எழுதி தமிழ் வளர்த்த தங்களுக்கு கோடி வாழ்த்துக்கள் டீச்சர்! :) அதனுடன் இனிய புத்தாண்டு வாழ்த்துக்களும்!

said...

ஆயிரம் பதிவெழுதி சாதித்த எங்கள் டீச்சருக்கு வாழ்த்துக்கள். விஜியின் கவிதை அருமை. இன்னமும் நிறைய பதிவுகள் எழுத வேண்டுகின்றேம். நன்றி டீச்சர்.

said...

ஆயிரம் பதிவுக்கும் உங்கள் பதிவுகளை உரு போட்டு வைத்திருக்கும் உங்கள் வாசகிக்கும் என் வாழ்த்துக்கள்...ஒரு தனிபட்ட முறையில் சொந்தங்களை தவிர கவர தனி அளுமை வேண்டும்.. அல்லது எதாவது சரக்கு இருக்க வேண்டும்...கவிதை எல்லாம் எழுதி வந்து இருக்காகங்கன்னா யோசிச்சு பாருங்க...

said...

//"'பச்சை கலர்; எடுக்காதே. பார்த்துப் பார்த்து அலுத்துப்போச்சு"//

தற்செயலான்னு தெரியல, எனக்கும் உங்களை நினைச்சா பச்சைக்கலர் உடையுடன் தான் நினைவுக்கு வருகிறீர்கள்.

said...

உங்கள் பதிவில் ஆயிரமும் பொன்னாச்சே !

ஆயிராமவது பதிவை ரொம்ப சிம்பிளாக முடித்து இருக்கிறீர்கள் இன்னும் எழுதி இருக்கலாம்.

வாழ்த்துகள் அம்மா !

said...

உங்கள் பதிவை கிரியும் 1000 எப்போது ஆகும் என எண்ணிக் கொண்டிருந்தார்.

said...

அடேயப்பா... அடிச்சு.. இன்னும் ஆடுங்க.. ! :)

said...

அன்பின் துளசி

ஆயிரமாவது இடுகை - பிரமிக்க வைக்கிறது உழைப்பும் திறமையும் - எழுதாத தலைப்பே இல்லை - தொடாத துறையே இல்லை - செல்லாத தலமே இல்லை - சுற்றிய இடங்கள் தான் பற்றிய கருத்துக்கு வெற்றியை அளித்துள்ளது - ஒண்பான் சுவையினையும் எழுதியது நன்று.

படங்களோடு கருத்தினைக் கூறுவது சாலச் சிறந்தது. இடுகைகள் ஆயிரம் எனில் வாசகர்கள் பல்லாயிரம் - வாழ்க வாழ்க

நல்வாழ்த்துகள் துளசி
நட்புடன் சீனா
செல்வி ஷங்கர்

said...

விட்டா என் பதவியைப் பறிச்சு அங்க குடுத்துடுவீங்க போல! இந்த மகளிர் தலைமை கிட்ட கொஞ்சம் சாக்கிரதையாகவே இருக்கணும்!

ஆயிரத்தில் ஒருத்தியே வாழ்க!
நியூசியின் புதல்வியே வாழ்க!

said...

எங்க வீட்டு உங்க வாசகியும் வாழ்த்துகள் சொல்லச் சொன்னாங்க.

said...

வாழ்த்துகள், போட்டிக்கு இருக்கோமில்ல??? ஹிஹிஹி, மொத்தமும் சேர்த்தால் ஆயிரத்துக்கும் மேலே போயிடும்ங்கறது வேறே விஷயம். எண்ணங்களிலே மட்டும் ஆயிரத்தை எப்போவோ நெருங்கிட்டோம். வரேன் சீக்கிரமாவே!

மீண்டும் இதயம் கனிந்த வாழ்த்துகள்.

said...

//அப்போத் தான் தினமலரில் ஒருநாள் தற்செயலாக துளசியின் பதிவு பற்றிப் பார்க்க நேர்ந்தது. பதிவு பற்றிய விமரிசனத்தில் எழுத்தில் துளசியின் மணம் வீசுவதாகவும் எழுதி இருந்தார்கள். அப்போ எனக்கு இருந்த ஆஸ்த்மா இருமலுக்கும், தொந்தரவுக்கும் துளசியின் மணம் என்றால் ஆஹா, எவ்வளவு நல்லது? போய்ப் பார்த்தேன். அங்கே இருந்து பல பதிவுகள். மெல்ல, மெல்லப் பின்னூட்டங்கள் கொடுக்க ஆரம்பித்தேன். ஆனால் ஆங்கிலத்தில் தான். தமிழில் அப்போ தட்டச்ச முடியலை.//

எழுதி வச்சிருக்கோமாக்கும், ஆயிரமாவது பதிவுக்கு. இன்னிக்கு எல்லாரையும் நான் பயமுறுத்தறதுக்கு நீங்க தான் மறைமுகக் காரணம் அப்படினு உலகுக்கே அறிவிக்கப் போறேன். :))))))))

மீண்டும் வாழ்த்துகள்.

said...

உங்கள் ஆயிரமாவது பதிவுக்கு
வாழ்த்துக்கள் டீச்சர்:)))))

said...

ஆயிரம் பதிவு படைத்த எங்கள் kiwi மேடம் ku வாழ்த்துக்கள்.பார்த்தீங்களா மேடம், ரெகுலர் ah பின்னூட்டம் ,போடலைனாலும்,உங்கள் எழுத்தை ரசிக்க,எத்தனை பேர் இருக்கோம்.

said...

well done, keep rocking

said...

ஆயிரத்தையும் படித்தவனின் ஆயிரம் வாழ்த்துகள் :-)

said...

ஆயிரத்துக்கு வாழ்த்துக்கள் "டீச்சர்" .

தொடர்ந்து வாசிக்க பலர் உள்ளனர், தொடர வாழ்த்துக்கள்.

said...

ஆயிரம் பதிவுகள் சளைக்காமல் எழுதி இருப்பது வியக்க வைக்கிறது.
உங்களது பதிவுகளை நான் 2 வருடங்கள் முன்னாலே படிக்க ஆரம்பித்து விட்டேன். இடையில் வலைகள் பக்கம் வருவது இலை என்றாலும் எப்போதாவது உங்கள் பதிவுகள் மட்டும் வந்த சென்று கொண்டிருந்தேன். நேரம் கிடைக்கும் போது பழைய பதிவுகளை பார்க்க வேண்டும். இப்போதைக்கு கூட பயணித்தல் என்று முடிவு.

உங்கள் ஆரோக்கியத்துக்கும் உங்கள் குடும்ப ஆரோக்கியத்துக்கும் என் பிரார்த்தனைகள்.Gopal Sir இன்னும் உங்களை பல இடங்களுக்கு அழைச்சுட்டு போகணும்னு கிருஷ்ணன் கிட்டே கனவிலே வந்து உத்தரவு போட சொல்லி வேண்டிக்கறேன். அப்போ தான் நாங்க உட்கார்ந்த இடத்திலே இருந்து இப்படி எல்லாம் பார்த்து ரசிக்கமுடியும்

//ஓர்மகள் திரிச்சு வந்நு//
இதுக்கு என்ன அர்த்தம்நு சும்மா சிதறு தேங்காய் மாதிரி போடுங்க பார்க்கலாம்.

http://www.virutcham.com

said...

ஆயிரத்திற்கு வாழ்த்துக்கள்

said...

விஜி எப்படியோ அது உங்களுக்கு தான் தெரியும், ஆனா நானும் எல்லா பதிவையும் 5 தடவைக்கு குறையாம படிச்சுருப்பேன்னா பாருங்க.. சாப்பிட உக்காந்தா போதும், படிச்சதையே படிச்சு படிச்சு.. :))) இது மாதிரி பாடத்தை படிச்சுருந்தா..!

பரீட்சை வெச்சா என்னைக் கூப்பிடணும்ங்கறதுக்கு தான் இந்த பில்டப்பு. 1000க்கு அந்த அப்புறம் கதைகள்ல இருந்து ஒண்ணையும் எடுத்து விட்டுருக்கலாமில்லே டீச்சர்.. எவ்ளோ நாளா கேக்குறோம்?

1000க்கு (வாழ்த்த வயதில்லை) வணக்கங்கள் டீச்சர்.

said...

ஆயிரம் பதிவு கண்ட அபூர்வ சிகாமணி துளசிம்மாவை வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்

said...

அந்த கவிதை....நன்றாக வந்திருக்கு.
10000 எப்போது?

said...

ஆயிரம் பதிவுகள் எழுதிய அபூர்வ சிந்தாமணி துளசியம்மாவுக்கு வாழ்த்துகள்!

said...

அருமை துளசி. ஆயிரத்தில் ஒருத்தி நீதான். வாழ்த்துகள் பா. அவசரமா ஒரு இடம் போறேன். வந்து மிச்சத்தை எழுதறேன்.
பல்லாயிரம் எழுத வாழ்த்துகள்.

said...

வாழ்த்துகள் துளசிம்மா. என்னுடைய ஆரம்ப நாட்களில் நீங்கள் தந்த ஊக்கம் மறக்க முடியாதது.இன்னும் வரும் புதியவர்களையும் பல்லாண்டுகள் நீங்க ஊக்கவிக்க இறைவனை வேண்டுகின்றேன்.

said...

ஆயிரம் பதிவுகள் சும்மாயில்லை. வலையுலகில் ஒரு சாதனைதான். வாழ்த்துக்கள் டீச்சர். உங்கள் வாசகியின் கவிதையும் அருமை. அவருக்கும் வாழ்த்தை சொல்லிடுங்க

said...

வாழ்த்துக்கள் அம்மா

said...

ஆயிரம் பதிவுகளுக்கு வாழ்த்துக்கள்! இன்னும் வளர வாழ்த்துக்கள்!

said...

ஆயிரம் பல்லாயிரமாகட்டும்.. வாழ்த்துக்கள்..:)

விஜிக்கும் பாரட்டுகளை சேர்ப்பிச்சிருங்க..

said...

ஏழு வருட உழைப்பு!
ஆயிரத்திற்கு மேல் இடுகைகள்
இரண்டு லட்சத்தைத் தாண்டிய வாசகர்கள்!

வாழ்த்துக்கள்

said...

வாழ்த்துகள் டீச்சர்

said...

வாழ்த்துகள் டீச்சர் மேடம்:)

said...

அன்பு டீச்சருக்கு எனது அன்பான வாழ்த்துக்கள். இன்னும் எழுதுங்கள். தொடர்ந்துவருவேன் :-)

said...

ஆயிரமாயிரம் வாழ்த்துகள் டீச்சர்!

said...

டீச்சர்....மனமார்ந்த 1000 பதிவுக்கு வாழ்த்துக்கள் ;)))

சீனியர் மாணவி அபூர்வ வாசகி விஜி அவர்களுக்கும் வாழ்த்துக்கள் ;))

said...

1000த்துக்கு வாழ்த்துக்கள் டீச்சர் :)))

said...

வாழ்த்துகள்
10*

said...

அடேயப்பா...!!!!!!!!!!!!

ஆயிரம் பதிவுகள் கண்ட டீச்சருக்கு என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள். :)

said...

// முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆயிரம் பல்லாயிரமாகட்டும்.. வாழ்த்துக்கள்..:)//

ரீப்பிட்டு :))

said...

சீனியர் விஜி அவர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள் ;)

Anonymous said...

வாழ்த்துக்கள். சென்னை போன நேரம் நூறு ஆயிரமா பெருகியிருக்கு :)

said...

வாழ்த்துக்கள்.ஆயிரம் பல்லாயிரமாய் தொடரட்டும்.

உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் நல்வாழ்த்துக்கள்.

said...

அன்பு துளசி மனம் நிறைந்த வாழ்த்துகள். உங்கள் நல்ல ரசிகை விஜியும் இந்தப் பதிவைப் படித்திருப்பார் என்று நம்புகிறேன். அவருக்கும் எங்கள் அன்பையும் வாழ்த்துகளையும் சொல்லுங்கள்.

எல்லோருக்கும் மகிழ்ச்சி கொடுக்கும் உங்கள் பதிவுகள் இன்னும் வளர்ந்து ஆயிரம் ஆயிரமாகப் பெருக வேண்டும்..

நாங்களும் விடாமல் படிக்கவேண்டும்.

said...

ஆஹா.. வட போச்சே..தினமும் எண்ணிக்கிட்டிருந்து இன்னிக்கு கோட்டை விட்டுட்டேனே. டீச்சர், கடைசி பெஞ்சில் இருந்து நானும் வாழ்த்திக்கறேன்.வாழ்த்துக்கள்.

said...

துளசி மேடம், உங்க பதிவுகளில்
பரீட்சை வைத்தால் கிளாஸ் டாப்பர் ஆக
விஜி எனக்கு சரியான
போட்டியாக இருப்பார் போலிருக்கிறது.
ஆயிரம் பல்லாயிரமாக பெருக
அன்பு வாழ்த்துக்கள்.
எழிலரசி பழனிவேல்

said...

ஆயிரம் பதிவிட்ட அபூர்வ டீச்சருக்கு வாழ்த்துக்கள்!

டீச்சரிடம் ஒரு கம்ப்ளெயிண்ட். நான் எழுத வந்ததை கானா ப்ரபா என் மனசுல இருந்து முதல்லயே காபி அடிச்சிட்டார். கொஞ்சம் ஆப்ராஹவுஸ் மாடியில நிக்க வையுங்க...

தொடரட்டும் உலகின் கோடியில் இருந்து உங்கள் அற்புதப் பதிவுகள்.

said...

We will be wishing you for your 10,000 entry too!!!!!இன்னும் பல ஆயிரம் பதிவுகள் போடவேண்டும்!!!

said...

மின்மடலில் வந்த கடிதம்.

Oh my god!!!. I have experienced 7th heaven. Never knew such simple joy of reading could provide me such happiness and recognition in a world wide famous blog. I am honored Tuls. Thank you and the number of folks who have wished me (valliamma, muthakka, porkodi, gopi, and a whole lot of others). Let me start preparing myself for your 10,000th post.

In essence, you have made my life ;) .
And how did you know that scene of krishna is one of the most favorite ones of mine?

Cheers,
Viji

said...

நண்பர்கள் அனைவருக்கும் மீண்டும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாமென்ன பொதுக்கூட்டம் போட்டாப் பேசறோம். ஒட்டுமொத்தமா ஒரு நன்றியைச் சொல்ல?

நம்மை மதிச்சு வீடுவரை வந்துருக்கீங்க.

ஒவ்வொருவராத் தனியாக் 'கவனிச்சு'த்தான் அனுப்புவேன்:-)

ரெடி ஸ்டார்ட்......

said...

வாங்க எல் கே.

அவுங்கமட்டும் அருமை இல்லைப்பா. நீங்க எல்லோருமே எனக்கு அருமையானவர்கள்தான்.

வாழ்த்து(க்)களுக்கு நன்றி

said...

வாங்க வருண்.

நன்றி. & நன்றி.

'வரவர டீச்சர் யானை மாதிரி ஊதல்'ன்னு புது மொழி வந்துருச்சு;-))))

said...

வாங்க பித்தனின் வாக்கு.

இன்னும் நிறைய எழுதுன்னுட்டு.... அப்புறம் வருத்தப்படப்போறீங்க ஆமாம்:-)))

நன்றியோ நன்றி..

said...

வாங்க ஜாக்கி.
யோசிக்க யோசிக்க எனக்கும் தான் 'ஆ'ன்னு ஆகிப்போச்சு!!!!!

ஆளுமை, சரக்கு எல்லாம் இருக்கான்னு இனிதான் தேடணும்!

வாழ்த்து(க்)களுக்கு நன்றி

said...

வாங்க கோவியாரே.

ஆயிரத்தின் முன்னோடியே நீங்கதானே!!!!!

வாழ்த்து(க்)களுக்கு நன்றி.

பச்சை விஷயம் உண்மை:-)

சிம்பிளானதுக்கு ஒன்னைக் குறைச்சுக்கிட்டு மீதி 999 பவுனை அனுப்புங்க சீக்கிரம்:-))))

கிரி இனி நமக்கு ஆஸ்தான ஆடிட்டர்.

said...

வாங்க பாலா.

அடிச்சு ஆடவா????????

நான் அடிக்க அடிக்க கோபால் அழுதுக்கிட்டே ஆடறார்:-))))))

said...

வாங்க செல்வி & சீனா.

ஒண்பான் சுவை?

தமிழாசிரியை அவர்களே விளக்கம் சொல்லுங்க.

இனிய வாழ்த்து(க்)களுக்கு நன்றி

பஸ் பிடிச்சு வந்ததுக்கு உங்களுக்கும் 'டிக்கெட்' வாங்கின கோவிக்கும் இன்னொரு ஸ்பெஷல் நன்றி.

said...

வாங்க கொத்ஸ்.

லீடர் இல்லாமலேயே வகுப்பு முழுசும் தேறியாச்சு. லீடர்கள்தான் இனி கவனமா இருக்கணும்.

மகளிரணி உங்களை ஓட்டினால் கவலை எதுக்கு? அதான் மேல்சபை இருக்கே:-))))

கோஷம் போட்டுத்தான்..... தமிழன்.......

அது இருக்கட்டும்.

நன்றி & நன்றி

said...

கோவியார் வீட்டு வாசகிக்கு என் நன்றி.

'ஓசைப்படாமல்' வாசிப்பு !!!!

said...

வாங்க கீதா.

சீக்கிரமா ஆயிரத்தைப் போடுங்க. கிடைக்க இருக்கும் கொஞ்சம் புகழை விட்டுறலாமா:-))))))

துளசி மணம் கமகமன்னு வீசட்டுமே!

வாழ்த்து(க்)களுக்கு நன்றிப்பா.

said...

வாங்க சுமதி.

வாழ்த்து(க்)களுக்கு நன்றி

said...

வாங்க பானு.

நீங்க சொன்னது மனசுக்கு ஆறுதலா இருக்கு!

வாழ்த்து(க்)களுக்கு நன்றி

said...

வாங்க ராம்ஜி_யாஹூ

தேங்க்ஸ்.

said...

வாங்க பினாத்தலாரே.

இது முழுசும் உண்மையே அன்றி பினாத்தல் இல்லை என நம்புவோமாக:-))))

நன்றி x ஆயிரம்.

said...

வாங்க நன்மனம்.

வாழ்த்து(க்)களுக்கு நன்றி.

தொடரத்தான் வேணும். இல்லேன்னா கோல்ட் டர்க்கிதான்;-))))

said...

வாங்க விருட்சம்.

கோபால் சார் இங்கே இருக்கும் மூன்றெழுத்துக் கடைக்குத் 'துணை'யாக வரணுமுன்னு அவர் கனவில் கிருஷ்ணரைப்போய் சொல்லச் சொல்லணும்.

விஷ்ணு அலங்காரப்ப்ரியன்.

அது என்ன இருந்த இடத்தில் உக்காந்து ரசிப்பது?

'மரம்' என்பதாலா!!!!

//ஓர்மகள் திரிச்சு வந்நு//

பதிவுல மொழியில் இதுக்குக் கொசுவத்தின்னு பெயர். காப்பிரைட் எனக்கானது.

said...

வாங்க பாலாஜி.

வாழ்த்து(க்)களுக்கு நன்றி

said...

வாங்க பொற்கொடி.

அட்வான்ஸ் லெவலில் உங்களையும் போட்டாச்சு. நோ ஒர்ரீஸ்:-))))

வாழ்த்துவதற்கு வயசு எதுக்கு? மனசு இருந்தால் போதும்.

1500 ஆரம்பிக்கத்தான் வேணும். ஏற்பாடுகள் தொடங்கி இருக்கு.

உங்களுக்காக ஒரு ட்ரெய்லர்:

சாம்பிள் தலைப்பு : சந்த்ராக்காவின் லட்டுக் கம்மல்.

said...

வாங்க பிரபா.

நல்ல வேளை, ஆயிரம் தலையை வாங்காம விட்டேனே!

வாழ்த்துவதற்கு வயசெல்லாம் வேணாம்.

வணக்கத்துக்கு பதில் வணக்கம் சொல்லிக்கறேன்.

நன்றிகள் பல.

said...

வாங்க குமார்.

அது..... 9999க்கு அப்புறம்:-)

விஜி கவிதை எழுதுவாங்கன்னே எனக்குத் தெரியாது!

said...

வாங்க அத்திவெட்டி ஜோதிபாரதி.

வாழ்த்து(க்)களுக்கு நன்றி கவிஞரே!

said...

வாங்க வல்லி.

பின்னூட்டத்தோடு நில்லாமல் நேரில் வந்து வாழ்த்தியதற்கும் ரொம்ப நன்றிப்பா.

என்ன ஒரு அழகான பூங்கொத்து.

இடுகையில் அதை போட்டுருக்கேன்.

அதையே நன்றி நவிலலுக்கும் பயன்படுத்திட்டேன்.

பயங்கரக் கருமிப்பா நான்:-)))))

said...

வாங்க அப்துல்லா.

ஊக்கு 'விக்க' நான் எப்பவும் தயார்!!

தமிழ்ச்சேவை செய்யவரும் உடன்பிறப்புகளுக்கு பதில் சேவை செய்யத்தானே வேணும்:-))))))

said...

வாங்க புதுகைத் தென்றல்.

புதுகை மக்கள் சொல்லிவச்சிக்கிட்டு சேர்ந்து வந்தாப்லெ இருக்கே:-)))))

வாழ்த்து(க்)களுக்கு நன்றிப்பா.

சாரிப்பா. நேத்து லைனில் வந்தப்பப்பேச முடியாமல் போயிருச்சு.
வீட்டில் விருந்தினர்கள் கொண்டாட வந்துருந்தாங்க:-))))))

said...

வாங்க லோகன்.

வாழ்த்து(க்)களுக்கு நன்றி.

said...

வாங்க தமிழ்ப்பிரியன்.

வாழ்த்து(க்)களுக்கு நன்றி.

இன்னும் வளர்ந்தால்.....தாங்காது. வளர்ச்சி குறுக்கே போக ஆரம்பிச்சுக் கனகாலமாச்சு:-))))

said...

வாங்க கயலு..

குருவுக்கு மிஞ்சின சிஷ்யையாக இருக்கணும்.ஆமா:-))))

வாழ்த்து(க்)களுக்கு நன்றி.

முத்தக்கா, விஜியின் மடலைப் பார்க்கவும்.

said...

வாங்க மெனெக்கெட்டு.

ஏழு, ஆரம்பிச்சது சரிதான்.

ஹிட்டும் ரெட்டிப்பாகப்போகுது. நாலு லட்சம் சமீபிக்குது.

வாழ்த்து(க்)களுக்கு நன்றி.

said...

வாங்க பாலராஜன் கீதா.

ஆதி முதல் கூடவே வந்துக்கிட்டு இருக்கீங்க. மகிழ்ச்சியா இருக்கு.

வாழ்த்து(க்)களுக்கு நன்றி.

said...

வாங்க வித்யா.

நன்றிகள் பல.

said...

வாங்க, பாரதி மணி சார்!

உங்க வாழ்த்துகளுக்கு நன்றி!

said...

சூப்பர். வாழ்த்துக்கள்.

எல்லா பநிவுகளையும் புத்தகமாக வந்தால்...

'பின்னூட்டம் இட்டும் இடாமலும்' ஊக்கப்படுத்தும் வாசகி.

said...

வாங்க ரிஷான்.

தொடர்ந்து வருவது கேரண்டீன்னா நானும் தொடரத்தான் வேணும்:-))))

வாழ்த்து(க்)களுக்கு நன்றி.

said...

வாங்க நட்புடன் ஜமால்.

வாழ்த்து(க்)களுக்கு நன்றி.

said...

வாங்க கோபி.

அதென்ன அஞ்சு வார்த்தைகள் எழுதிட்டீங்க அதிசயமா!!!!!!


விஜியும் படிச்சுக்கிட்டுதான் இருப்பாங்க.

வாழ்த்து(க்)களுக்கு நன்றி.

said...

வாங்க ஆயில்யன்.


வாழ்த்து(க்)களுக்கு நன்றி.

said...

வாங்க சஞ்சய் காந்தி.

ஆஹா..... இந்தப் பத்து மொக்கைக்குமுன்னு பஸ்லே போகும்போது பார்த்தேனே!!!!!

said...

வாங்க நான் ஆதவன்.

வாழ்த்து(க்)களுக்கு நன்றி.

பல் ஆயிரம் ஆனா நல்லாவா இருக்கும்?

said...

வாங்க சின்ன அம்மிணி.

எல்லாம் நேரம் தான்:-)))))))))))

வாழ்த்து(க்)களுக்கு நன்றி.

said...

வாங்க மாதேவி'

வாழ்த்து(க்)களுக்கு நன்றி.

கூடவே வருவது மகிழ்ச்சியாவும் பயமில்லாமலும் இருக்கு:-)

said...

வல்லி,

விஜிக்கும் வியப்புதானாம். அவுங்க மடலை காப்பி & பேஸ்ட் பண்ணிட்டேன்.

தனிப் பதிவாப் போட்டு என் வாயை அடைச்சுட்டீங்களேப்பா:-)))))

said...

வாங்க அமைதிச்சாரல்.

லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டாத்தான் வந்துருக்கீங்க.

வாழ்த்து(க்)களுக்கு நன்றி.

said...

வாங்க எழிலரசி.

அட்வான்ஸ் லெவலுக்கு அனுப்பி இருக்கேன்.

எக்ஸாமுக்கு தயாராகுங்க:-)))

வாழ்த்து(க்)களுக்கு நன்றி.

said...

வாங்க நாகு.

ஓப்ரா ஹௌஸ்லே நிக்க முடியாது. வழுக்கிவிட்டுரும். அதுக்குப் பதிலா என்ன செய்யலாமுன்னு யோசிங்க:-))))

கோடியில் 'ஒருத்தி'யா இருக்கேன்ப்பா!

தனியா என்னை விட்டுப்போயிட்டாங்க மத்த ரெண்டு பேரும்:(

வாழ்த்து(க்)களுக்கு நன்றி.

said...

வாங்க சந்தியா.

10,000...........

தாங்குமா (பதிவு) உலகம்!!!!!

வாழ்த்து(க்)களுக்கு நன்றி.

said...

வாங்க பாரதி மணி ஐயா.

ஹைய்யோ ஹைய்யோ:-)))))))))

இப்படி என் வேலையை சுளுவாக்கிட்டீங்களே!!!!

said...

வாங்க வெற்றிமகள்.

எல்லாப் புகழும் வாசகர்களுக்கே!!!!


வாழ்த்து(க்)களுக்கு நன்றி.

said...

வாழ்த்துக்கள் மேடம்:)! ஆயிரமாவது பதிவில் அபூர்வ வாசகியைப் பற்றி பகிர்ந்து கொண்டது மிகப் பொருத்தம்.

said...

அட!! இப்பத்தான் பார்த்தோம் துளசி . well done !!. எங்களோட Congrats:))
மங்களூர், உடுப்பில்லாம் போனீங்களா! அப்புறம் வந்து மெதுவா படிக்கிறேன்.

said...

மிக நிதானமாக வந்தாலும் 1000ஆவது பதிவுக்கு 100வது பின்னூட்டத்தை இட்டு வாழ்த்துக்களைத் தெரிவிச்சுக்கறேன் ரீச்சர்....:).

இப்படிக்கு,
கடைசி பெஞ்ச் மாணவன். :)

said...

wow.........congrats for 1000 teacher. Post many more 1000s like this. BTW enjoying the udipi series. photos and details are excellent.

said...

WOW congrats!

Ram

said...

அமைதிச்சாரல் கடைசி பெஞ்சிலிருந்து வாழ்த்தினால், நான் க்ளாசுக்கு வெளியே நிற்கிறேன். “மே ஐ கம் இன்?”
ஆயிரம் பிறை கண்டது போல் ஆயிரம் பதிவு கண்ட அன்பு துள்சிக்கு ஆயிரமாயிரம் வாழ்த்துக்கள்!!!!!

இறுக்கமாய் எழுதிக்கொண்டிருந்த என்னை என் இயல்பான நடைக்கு மாத்தியது உங்கள் பதிவுகள்தான்.

said...

அடடா !! என்ன இது !!! நான் வாழ்த்துகள் சொல்ல வருவதற்குள்ளே கூட்டம் அலை மோதுகிறதே !!
திருப்பதி பெருமாள் சன்னதி போல்..... ஜரகண்டி, ஜரகண்டி...

உங்கள் ஆயிரத்தில் ஒருத்தி, ஆருயிர் வாசகி விஜி அவர்களின் பாடலை என்னால்
இயன்ற வரை ஷண்முகாபிரியா ராகத்தில் பாடி இருக்கிறேன். வழக்கமான எனது
பதிவில் இட்டிருக்கிறேன்.

உங்கள் தோழி விஜி ஒரு எமோஷணல் ஆக பாடிய கவிதை ஒரு சந்தத்திற்கும் அப்பாற்பட்டதாக‌
இருந்தது. அதனால், சில இடங்களில் விருத்தம் போல் பாடுகிறேன்.

அது இருக்கட்டும்.

2000 பதிவு போடும்போதாவது, உங்கள் வாசகர்களையெல்லாம் கூப்பிட்டு, ஒரு தஞ்சாவூர்
விருந்து சாப்பாடு போடுவீர்களென ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

சுப்பு தாத்தா
மீனாட்சி பாட்டி.

said...

http://www.youtube.com/watch?v=_fef8k9jk6Y

Please visit this link to listen to the song by Madam Viji.

subbu thatha
Meena paatti.
now at
Doha (qatar)

said...

வாங்க ராமலக்ஷ்மி.

வாசகர்கள் விரும்பிப் படிக்கலைன்னா எழுதறதுக்கு ஆர்வம் எப்படிப்பா வரும்?

ஆளில்லாத கடையில் டீ ஆத்திக்கிட்டு இருக்க வேண்டியதுதான்:-))))))))

வாழ்த்து(க்)களுக்கு நன்றிப்பா.

said...

வாங்க ஜெயஸ்ரீ.

காற்றுள்ளபோதே.....தான்:-)
சீக்கிரம் இந்தியாவை விட்டுக் கிளம்ப வேண்டி இருக்கும்.

உடுப்பிப் பதிவுகள்தான் இப்போ எழுதிக்கிட்டு இருக்கேன். நிதானமா நேரம் கிடைக்கும்போது படிங்க.

வாழ்த்து(க்)களுக்கு நன்றி.

said...

வாங்க மதுரையம்பதி.

நீங்க ஒருதடவை பின்னூட்டினால் அது 100க்குச் சமம் இல்லையா:-))))

வாழ்த்து(க்)களுக்கு நன்றி

said...

வாங்க ப்ரசன்னா.

வாழ்த்து(க்)களுக்கும் உடுப்பித் தொடரைப் பிடிச்சுருக்குன்னு சொன்னதுக்கும் நன்றிகள் பல.

said...

வாங்க ராம்.

நன்றி நன்றி

said...

வாங்க நானானி.

அதென்ன மே ஐ கம் இன்?

உள்ளே வந்து என் நெஞ்சில் இடம்பிடிச்சு அமர்ந்தாச்சு. அப்புறம் என்னவாம்!!!!

said...

வாங்க சுப்புரத்தினம் ஐயா & மீனாட்சி அக்கா.

தஞ்சாவூர் சாப்பாடு போட உங்களைத் தேடினால் நீங்கள் தோகா (ஹிந்தி) கொடுத்துட்டு தோஹா போயிட்டீங்களே!

பாட்டு ரொம்ப அருமையா வந்துருக்கு. ரசிச்சுக் கேட்டேன்.

கதகளி மோகியாட்டம் எல்லாமும் ஆடினேன்:-))))

ஆனாலும்.........

இவ்வளவு அன்புக்கு நான் அருகதையான்னும் ஒரு நினைப்பு வருதே!

மனமார்ந்த நன்றி.

said...

இதனால் சகலமானவர்களும் அறிவது
இன்று முதல் துளசியக்கா வலையுலகின் 'பிதாமகி'எனப் பட்டம் பெறுகிறார்.

மனம் கனிந்த வாழ்த்துக்கள் அக்கா

said...

//உள்ளே வந்து என் நெஞ்சில் இடம்பிடிச்சு அமர்ந்தாச்சு. அப்புறம் என்னவாம்!!!!//

தன்யளானேன் துள்சி!!

ஒழுங்காப் படிக்காட்டாலும் உங்க வார்த்தைகள் நூத்துக்குநூறு வாங்கிய சந்தோஷத்தை தருது.

said...

கலக்குங்க டீச்சர்.

said...

ஆயிரம் பதிவுகள் எழுதிய சாதனை நாயகிக்கு வாழ்த்துக்கள்.

அதற்கு உங்களுக்கு உறுதுணையாக இருந்த கோபல் சாருக்கும் வாழ்த்துக்கள்.

பல்லாண்டு பாடிய விஜிக்கு வாழ்த்துக்கள்.

அழகான மலர் செண்டு கொடுத்து
வாழ்த்திய அன்பு வல்லி அக்காவுக்கு நன்றி.

புத்தாண்டு வாழ்த்துக்கள்.

said...

வாங்க கண்மணி.

சில வருசங்களுக்கு முன் நம்ம கொத்ஸ், மாதாமகி'ன்னு பட்டம் கொடுத்தார். இப்போ பிதாமகின்னு நீங்க கொடுத்துட்டீங்க.

தினமலர்லே முழுப்பக்க விளம்பரம் கொடுப்பது எப்போ?

:-)))))))))))))))

said...

கண்மணி,

வாழ்த்து(க்)களுக்கு நன்றி.

நானானி,

100க்கு 100 ன்னு கொண்டாடாமல் அப்பப்பக் கொஞ்சம் படிக்கவும் வேணும் ஆமா:-)))))))))

said...

வாங்க சூர்யா.

தெளியும்வரை கலக்கல்தான்:-)

said...

வாங்க கோமதி அரசு.

ஆஹா............ எல்லோரையும் வாழ்த்திய அந்தப் பெரியமனசுக்கு நன்றியோ நன்றி.

said...

ஆயிரம் பிறை கண்ட டீச்சருக்கு ஆயிரம் வாழ்த்துக்கள்!
பல்லாயிரம் வாழ்த்துக்கள்!
வாரணம் ஆயிரம் வாழ்த்துக்கள்!

சரி, ஒரு கனகாபிஷேகம் பண்ணீருவோமா? :)
ஆயிரம் தங்க டாலர் தேவை-ன்னு ஒரு பதிவு போட்டுருவோம்! :)

said...

பதிவுலகம் வாழ பதிவர்கள் தாம்வாழ
மதியுலக மங்கையர் புதிதாக - விதியுலகம்
பண்ணவரு பாவையாம் துளசியின் தளமே
இன்னுமொரு நூற்றாண்டு இரும்!

:)))

said...

வாங்க கே ஆர் எஸ்.

தன்யளானேன். ராமானுசனைப் பாடிய வாயால் இந்த டீச்சரையும் பாடுவது நியாயமா?

நூற்றாண்டெல்லாம் டூ மச். அவ்வளவு நாள் எழுதச் சரக்கு இருக்காது:-)

தங்க டாலர் எல்லாம் வேணாம். பெரிய மனுஷியா லக்ஷணமா இல்லாமப் போயிட்டான்ற அவப்பெயர் வந்துரும்!

said...

மாசக்கணக்குல லேட்டா வந்து வாழ்த்து சொல்றதுக்கு மன்னிச்சுக்கோங்க அக்கா. இப்பத் தான் உங்க குஜராத் தொடரே படிச்சு முடிக்கப் போறேன். தற்செயலா இந்த இடுகையை இன்னிக்கு படிச்சதால இப்பவே வாழ்த்துகள் சொல்ல முடிஞ்சது; இல்லாட்டி இன்னும் எத்தனை மாசம் ஆயிருக்குமோ!

ஆயிரத்தில் ஒருத்திக்கு வாழ்த்து(க்)கள்!

said...

வாங்க குமரன் தம்பி.

தாமதமானால் என்ன?

உங்க வாழ்த்தெல்லாம் பிறந்தவீட்டுச் சீர்.

எங்கேயும் போயிறாது!

said...

அடடா மிஸ் பண்ணிட்டேனே..

வாழ்த்துகள்ங்க மேடம்.

ஆனாலும், உங்க பயணக் கட்டுரைகளில் இன்னும் நிறைய வாசிக்காமல் குமிஞ்சிருக்கு. அவ்வப்போது பொறுமையா வாசிக்கிறேன்.

said...

வாங்க கையேடு.

வாழ்த்து(க்)களுக்கு நன்றி. தாமதமாச் சொன்னா(லும்) பிரச்சனை இல்லை. ஊசியா போகப்போகுது?

தினமும் ஒன்னாப் படிச்சா கிட்டத்தட்ட மூணு வருசத்துக்கு கேரண்டி:-))))