Friday, May 21, 2010

வேடிக்கை VS வாழ்க்கை

ஒரு ஊரையோ நாட்டையோச் சும்மாச் சுத்திப் பார்ப்பதைவிட அங்கேயே போய் குடும்பம் நடத்திக் குப்பை கொட்டுவது கொஞ்சம் சவாலான விஷயம்தான், இல்லையா? நிறைய நாட்களுக்குப் பிறகு சரியாச் சொன்னால் 35 வருசத்துக்குப்பிறகு சென்னையில் 'குப்பை கொட்ட' வந்தேன். கல்ச்சுரல் ஷாக்ன்னு சொல்வோம் பாருங்க. அதுதான் உண்மையில் ஏற்பட்டுச்சு. நகரம் வளர்ந்துருக்கு. கூடவே கூட்டமும் குப்பையும்.

அங்கங்கே தெரு முனைகளில் சின்னதா ஒரு குப்பை சேகரிப்புக்கான செவ்வகத் தொட்டி. உண்மையைச் சொன்னால் இந்த அளவுள்ள குப்பைத் தொட்டி ஒரு நாலு வீடுகளுக்கு மட்டுமே போதுமானது. அப்போ மீதி இருக்கும் வீடுகளுக்கு? பிரச்சனையே இதுதான். செய்வாங்க.ஆனா போதுமான அளவான்னு பார்த்துச் செய்ய மாட்டாங்க...... அதில் எப்போதும் நிறைந்து வெளியே வழிந்து தெருமுழுக்கப் பறக்கும் குப்பைகூளங்கள். தெருநாய்களும், குப்பையில் இருந்து காசு பண்ணக்கூடியப் பொருட்களைப் பிரித்தெடுக்கும் மனிதர்களும் சேர்த்து மிச்சம் மீதி உள்ளே இருக்கும் குப்பைகளையும் வெளியே இழுத்துப்போட்டுவிட்டுப் போய்விடுவதையும் பார்க்கிறேன். நாய்கள்....பாவம் நாய்கள். வெளியே இழுத்துப் போட்டவைகளை மீண்டும் அள்ளிப்போடத் தெரியாத ஜென்மம். ஆனால்....மனுஷன்? அப்படியே விட்டுவிட்டுப்போய் விடும் வெறும் ஜென்மம். (செனடாப் ரோடு மட்டும் விதிவிலக்கு. நோ குப்பை. எல்லாம் பளிச்!!!)

தெருவோரங்களை கக்கூஸாக மாற்றி வரும் ஆண்கள் (ஒரே சமத்துவம்தான். கோட்டு சூட் போட்டுக்கிட்டவங்களுக்கும் போற போக்கில் அடக்கமுடியாம அசுத்தம் செஞ்சுட்டுப் போறாய்ங்க) தாறுமாறாய் தெருவெங்கும் ஓடும் ஏகப்பட்ட வண்டிகள். சாலைகளில் நடக்கவே முடியாத நிலை. இருக்கும் கொஞ்சநஞ்ச இடங்களையும் அபகரிக்கும் ப்ளாட்பாரக் கடைகள் ...அடப் போங்கப்பா....எதைச் சொல்ல எதைவிட?


'இங்கெல்லாம் இப்படித்தான் இருக்கும். கொஞ்சநாளைக்கு வந்து இருந்துட்டுப்போற நீ இப்படியெல்லாம் அலட்டிக்கக்கூடாது' ' அண்ணியின் அருள் வாக்கு.

மனசுக்கு ஆசுவாசமா இருந்தது நண்பர்களின் அருகாமை மட்டுமே. இது இப்படி இருக்க, இடப்பெயர்ச்சி மறுபடியும் வந்துச்சு. பத்தே மாசத்தில் ரெண்டாவது முறையாக மூட்டை கட்டினோம். முற்றிலும் புது இடமாச்சேன்னு ஊருளவாரம் பார்க்க ஒரு ரெண்டு மாசம் முன்னால் வந்துட்டுப் போனேன். வீடு கிடைச்சது. ச்சும்மா வேடிக்கை பார்க்க வந்தப்ப ரொம்பவே நல்லா இருந்த இடத்துக்கு இப்போ 'குப்பை கொட்ட' வந்தபின் இண்டு இடுக்குகளில் ஒளிஞ்சுருந்த எல்லாம் கண்ணுலே பட ஆரம்பிச்சுருக்கு. நம் எண்ணங்கள் நேர்மறையா இருக்கணும். அதுதான் நாட்டுக்கும் வீட்டுக்கும் நல்லதுன்ற கொள்கையைக் கடைப்பிடிக்கலைன்னா.... .... மனசை ஒருமுகப்படுத்திக்கிட்டு இருக்கேன்.

முதல்லே குப்பையையே எடுத்துக்கலாம். இந்த நகரில் இதுவரை தெருமூலைக் குப்பைத் தொட்டிகளைக் காணோம். வீட்டுக்குக் குடிவந்த நாள், வீட்டு ஓனர் சொல்லியபடி ஒரு குப்பைத்தொட்டி (20 லிட்டர் கொள்ளும் மூடியோடுள்ள ப்ளாஸ்டிக் வாளி) வாங்கி நம்வீட்டு கேட்டுக்கு உட்புறம் ஒரு மூலையில் வச்சாச்சு. தினமும் காலை எட்டரைமணி அளவில் ஒரு நபர் கேட்டைத் திறந்து உள்ளே வந்து அதை எடுத்துக் காலி செஞ்சு, குப்பையை அவர் கொண்டுவரும் வண்டியில் போட்டுக்கறார். திரும்ப நம் வாளியைக் கொண்டுவந்து உரிய இடத்தில் வச்சுட்டுக் கேட்டைச் சாத்திக்கிட்டு போறார். எல்லார் வீட்டுக்கும் காம்பவுண்ட் சுவர் இருக்கு. மாசம் 25 ரூபாய் சிட்டிக் கவுன்ஸிலுக்கு நாம் கொடுக்கணும். ரெண்டு மாசத்துக்கு ஒரு முறை 50 அடைச்சால் போதும். வீட்டுக்கு ஆள் வந்து காசையும் கலெக்ட் செய்யறார்.
ஒவ்வொரு வகைப் பொருட்களுக்கும் ஒவ்வொரு செக்டரில் விசேஷக் கடைகள் இருக்குன்னு முந்தி சொல்லி இருந்தேன் பாருங்க. அது உதவியாவும் அதேசமயம் உபத்திரவமாவும் இருக்கு. வீட்டுலே ஒரு ஆணி அடிக்கணும். ஆணி வாங்க இந்த எண் உள்ள செக்டர் போகணும். காய் வாங்க இந்த எண், பூ வாங்க இந்த எண், உப்புப்புளி மொளகாய் வாங்க இந்த எண் இப்படி வெறும் எண்களையே மனப்பாடம் செஞ்சுக்கிட்டு இருக்கேன். இன்னும் ஊர் சரியாப் பிடிபடலை. ஊர் முழுக்கக் கோவில்கள் இருக்கு. அதுக்கும் செக்டர் எண்களை நினைவில் வச்சுக்கணும். 'எண்ணும் எண்ணும் கண்ணெனத் தகும்' நம்பர் மறந்தால் போச்சு:(
வீடுன்னா ரெண்டு செடிகள் இருக்கணுமேன்னு நாலு செடிகளை வாங்கிவந்து மொட்டைமாடியில் வச்சுருக்கேன். அடுக்கு மல்லி ச்சும்மா ஜமாய்க்குது வாசம். மற்றவை செத்திப்பூ, அப்புறம் பெயர் தெரியாத ஒன்னு ஆரஞ்சுப்பூ பூக்குது. எவர்க்ரீனா ஒன்னு இருக்கட்டுமுன்னு கள்ளிவகையில் சக்கூலண்ட் வாங்கி வந்துருக்கேன். செடி வாங்க ஒரு செக்டர், அதுக்குண்டான தொட்டி வாங்க இன்னொரு செக்டர்:-)))))
ஊரெங்கும் பசுமையான மாந்தோப்புகள் & மஞ்சள் மரங்கள். இப்போ சரக்கொன்றை பூக்கும் காலம்.
அநேகமா இங்கே இந்த ஊரில் ஒரு பத்து மாசம் இருக்கவேண்டி இருக்கலாம். சண்டி(ந)கரில் காலூன்றிய ஒரு புதிய சண்டியின் கண்ணோட்டத்தில்......அப்பப்பக் 'கண்டதை' இங்கே போட்டுவைக்க உத்தேசம்.
காலநிலை: வெய்யில் சக்கைப்போடு போடுது. 44 டிகிரி செல்ஷியஸ். வீட்டுக்குள்ளே 36

41 comments:

said...

டீச்சர் சண்டிகர் வாசி ஆகியாச்சா ? அருமை

said...

சென்னை பற்றி எழுதியிருப்பது மிக உண்மை தான்.

said...

டீச்சர் ரவுண்ட்ஸை ஆரம்பிச்சாச்சா.. கலக்குங்கு.. கலக்குங்க..!

இந்த வெயில்லேயே இப்படியா..?

said...

சென்னை நான் ஏதும் சொல்லலை. என்ன சொல்வேன்னு உங்களுக்கே தெரியும். சண்டிகர் பத்தி சொல்லுங்க. புதுசா தெரிஞ்சிக்கலாம். அப்புறம் செடிகள் போட்டோ நல்லா இருக்கு.

எஞ்சாய் செய்ய வாழ்த்துக்கள்

said...

ஆஹா.. டீச்சர் புலம்பறத பாத்தா இன்னும் கொஞ்ச நாள்ல சென்னைய சொர்க்கபூமின்னு சொல்லுவாங்க போலிருக்கு :-))))

said...

துளசிமேடம் - படங்கள் அருமை. சண்டீகர் வாழ்க்கைக்கு வாழ்த்துகள்.

கோபால்சாருக்கு சண்டீகருக்கு மாற்றலா இல்லை டெம்பரவரியா ? நீயூசி - சென்னை - ஊர் சுற்றல் பின்னர் சண்டீகர் ஆ?? அவர் எந்த துறையில்/company இருக்கிறார் மேடம்? தெரிஞ்சிக்கிட்டா நாங்களும் அந்த மாதிரி துறையை தேர்ந்தெடுத்தால், ஊர் சுற்ற வாய்ப்பு கிடைக்கும் இல்லையா ?

மறுபடியும் நீயூசி உண்டா ? இல்லை சென்னைதானா ? அப்ப அந்த பாத்து பாத்து கட்டின வீடு ?

said...

கோழி ஒரு செக்டர், முட்டை ஒரு செக்டர் ஆனா எந்த செக்டர் முதலில் வந்தது? சொல்லும்மா சொல்லு!! :)

சண்டிகரில் வேலூன்றி, ச்சே, வேரூன்றி / காலுன்றி நிற்க வாழ்த்துகள்!!

Anonymous said...

இங்கியும் ஒரு கன்சர்வெடரி போட்டுருங்க. :)

said...

அது அப்படித்தான் துளசி.. இப்ப தில்லிய நீங்க வேடிக்கை பாத்திருப்பீங்க..வாழறது ஒரு ஸ்டேட்ல , வேலை செய்யறது இன்னோரு ஸ்டேட்ல, ஷாப்பிங் இன்னோரு ஸ்டேட்ல ந்னு தில்லியி ல் இருக்கிற வாழ்க்கையை பாக்கலைல்ல..

said...

புதுசா தெரிந்துகொண்டோம்.இன்னும் நிறைய எழுதுங்கள்

said...

ஒரு ஊரையோ, நாட்டையோச் சும்மா சுத்தி பார்ப்பதற்கும் அங்கேயே குடும்பம் நடத்துவதற்கும் மிகவும் வித்தியாசம் இருக்கும் உண்மைதான் டீச்சர். எனக்கும் ஒவ்வோரு ஊர் மாறும்போதும் தோனும் டீச்சர்.நாங்களும் வேறு மாநிலம் (Maine,USA) மாறிவிட்டோம் டீச்சர். இங்கு நல்ல வீடு கிடைப்பதே கடினமாக இருக்கிறது டீச்சர் :((((

said...

உங்களோட பச்ச கலரு சிங்குசா... பதிவ அப்ப ரொம்ப ரசித்தேன்! இப்ப இந்தப் பதிவையும்! குப்பை சமாச்சாரத்த எழுதுரதில நீங்கதான் எக்ஸ்பர்ட் :-)))

///அப்பப்பக் 'கண்டதை' இங்கே போட்டுவைக்க உத்தேசம்.///

நடத்துங்க, நடத்துங்க...

said...

விவேக் ஒரு காமெடியில் கிண்டலாகச் சொல்வார்-தெருவெங்கும் சுத்தமாக இருந்தால் இன்னும் நகராட்சி குப்பை வண்டி வரவில்லை. தெருவெங்கும் குப்பை இறைந்து கிடந்தால் குப்பை வண்டி வந்து குப்பை அள்ளிச் சென்றுவிட்டது என்று அர்த்தம் என்று.
தங்கள் பதிவைப்படித்ததும் அதுதான் ஞாபகம் வருகிறது.

said...

வாங்க எல் கே.


நம்ம தலையில் இன்னும் எந்தெந்த ஊருத்தண்ணி பாக்கி இருக்கோ?

ஊர் நல்லாத்தான் இருக்கு நான் பார்த்தவரையில்.

said...

வாங்க சேட்டை.

எதுக்கெடுத்தாலும் தமிழன், தமிழ்ப்பண்பாடுன்னு பீத்திக்கிற மக்கள், சுத்தமா ஊரை வச்சுக்கறதும், அடுத்தவர்களிடம் மரியாதையாகப் பேசுவதும் பண்பாடுகளில் சேர்த்தின்னு தெரிஞ்சுக்கலை பாருங்க.

இதுலே எல்லா'குடி'களிலும் மூத்த 'குடி' தமிழராம். அது என்னவோ உண்மைதான்:-)))

said...

வாங்க உண்மைத்தமிழன்.

சுத்துன கால் சும்மா இருக்குமா? ரவுண்ட்ஸ் ஆரம்பிச்சது.

முருகன் கோவில் ஒன்னு இருக்கு. அங்கே போனபோது உங்களையும் நம்ம ஜீராவையும் நினைச்சேன்.

முருகன் எனக்கு ஒரு அஸைன்மெண்ட் கொடுத்துருக்கார். அதை அப்புறமாச் சொல்றேன்:-)

said...

வாங்க புதுகைத் தென்றல்.

ஊர் முழுக்க மரங்களும் தோட்டங்களும் இருக்கு. வெய்யிலில் இருந்து தப்பிக்க வீட்டைவிட்டு வெளியில் தலை காமிக்கக்கூடாது, மாலை ஆறரைவரை.

ஒரு நாலு செடிகள் மட்டுமே வாங்கினேன்ப்பா. அருமையான வகைகள் வச்சுருக்காங்க. தாற்காலிக வாசத்தில் இதெல்லாம் தேவையான்னு ஒரு தோணல்தான்.

said...

வாங்க அமைதிச்சாரல்.


கனவு காண்பதில் தவறே இல்லை:-)))))

said...

வாங்க சாம்பார் வடை.

இந்த வயசுக்கு மூட்டை தூக்குவது ரொம்பக் கஷ்டம்ப்பா.


இப்போ எதுக்கு நியூஸியை ஞாபகப்படுத்துறீங்க? அங்கே 13 டிகிரி.

கோபால் சாருக்கு ஒரு அஸைன்மெண்ட் இந்தியாவில். வந்த வேலை முடிஞ்சதும் நியூசிக்குக் கிளம்ப வேண்டியதுதான்.

கோபால் சாருக்கு அறிவுரை சொல்வது ரொம்பப்பிடிக்கும். டெக்னாலஜி அட்வைசரா இருக்கார்:-)))))

said...

வாங்க கொத்ஸ்.

சண்டிகரைப் பொறுத்தவரை முதலில் முட்டை. அப்புறம்தான் கோழி:-))))

கடை வாசலில் முட்டைகளையும், உள்ளே குளிரூட்டிய கண்ணாடிப் பெட்டிகளில் கோழி இறைச்சியையும் பார்த்தேன்.

said...

வாங்க சின்ன அம்மிணி.

வாடகை வீட்டுலே இருந்தமா போனோமான்னு இருக்கணும்ப்பா:-))))

said...

வாங்க கயலு.

ஒரு மாதிரி டில்லி வேடிக்கை பார்த்துக்கிட்டுத்தான் இருக்கேன்:-)))

ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடம் போவதே ஊர்ப்பயணம் மாதிரி இருக்கேப்பா. அதான் போன முறை உங்களை வந்து சந்திக்கவும் முடியலை:(

said...

வாங்க ஸாதிகா.

ஏற்கெனவே சில பதிவுகள் இந்தப் பக்கத்தைச் சுற்றியது வந்திருக்கு. நேரம் கிடைக்கும்போது பாருங்க.

முதல் பதிவின் சுட்டி இது.
அப்படியே நூல் பிடிச்சுப் போங்க.

http://thulasidhalam.blogspot.com/2010/03/blog-post_15.html

said...

வாங்க சுமதி.

சின்ன வயசுலே வீடுமாறுவது எல்லாம் ஒரு அனுபவம் & ஜாலி.

உள்ளூர்லேயே 6 மாசத்துக்கு ஒரு வீடுன்னு மாத்தின ஆள் நான். இப்போ முடியலைப்பா:(

சண்டிகரில் வீடுகள் பரவாயில்லை.

சென்னையைப்போல் வீட்டுச் சொந்தக்காரர்கள் பறக்கலை. வாடகையும் மலிவு. ஏறக்கொறைய சென்னையில் கொடுத்ததுலே பாதிதான் இங்கே. வீட்டுக்கு அட்வான்ஸும் ரெண்டு மாசம் வாடகைதான்.

said...

வாங்க சரவணன்.

அப்ப அப்படி என்னதான் எழுதி இருந்தேன்னு போய்ப் பார்த்தேன்.நாட் பேட்!!!!

குப்பைன்னு விட்டுறமுடியுதா சொல்லுங்க:-))))

நினவூட்டலுக்கு நன்றி.

கண்டதைக் கற்றால் பண்டிதனாவோம். கண்டதை எழுதினால்..... பதிவர் ஆவோம்:-))))

said...

வாங்க பிரகாசம்.

நம்மூர் நடைமுறையை இப்படி ஜோக்கா நினைச்சுச் சிரிச்சுக்கத்தான் வேணும்.

செய்யும் வேலையில் ஒரு ஒழுங்கு வேணுமுன்னு நினைப்பவர்கள் அருகி வர்றாங்க:(

said...

சண்டிகர் டீச்சருக்கு வாழ்த்துக்கள் :-)

சரக்கொன்றை என்றால் என்ன டீச்சர்? கீழே படத்திலுள்ள மஞ்சள் பூக்களா?

said...

வாங்க ரிஷான்.

அதே மஞ்சள் பூக்கள்தான். சரம் சரமாய்த் தொங்குவதால் இந்தப் பெயர்.

தனிமடல் பார்க்கவும்:-))))

said...

சண்டிகர் ரொம்பச் சுத்தமா இருக்கும்னு பேர் வாங்கின ஊராச்சே.

சென்னையை இனிமெ யாருமெ ஏதாவது மாற்ற முடியுமான்னு தெரியலப்பா.
எல்லோருமே பொறுத்துப்போகப் பழகிட்டோம்.
எண்ணிக்கிட்டே மாதங்கள் ஓடிடும் பாருங்க.
செடியும் தொட்டியும் படு ஜோர். ரொம்ப அழகா இருக்கு அந்த ஆரஞ்சுப்பூ.

said...

Dear Madam,

Welocome to chandigarh,

We are waiting to Read About Chandigarh Murugan what he has given to you,

said...

//ஒரு ஊரையோ நாட்டையோச் சும்மாச் சுத்திப் பார்ப்பதைவிட அங்கேயே போய் குடும்பம் நடத்திக் குப்பை கொட்டுவது கொஞ்சம் சவாலான விஷயம்தான், இல்லையா?//... 100 % உண்மை.

படங்கள் நல்லா இருக்கு!!!

said...

வாங்க வல்லி.

செடிகளும் தொட்டியும்கூட விலை மலிவுதான்.
எனக்குத்தான் முப்பதாம் வாய்ப்பாடு நல்லா வருதே!!!!!

said...

வாங்க சுடலை.

முதல்முறையா வந்துருக்கீங்க போல!
நலமா?

சண்டிகரில் வேறு பதிவர்கள் யாராவது இருக்காங்களான்னு தேடணும்.

இங்கேயும் பதிவர் சந்திப்பு நடத்தணுமுன்னு ஆசை:-)))

முருகன் வழி காமிக்கணும்.

said...

வாங்க ப்ரியா.

சுற்றுலாவில் 'ஆக்க' வேணாம். அதான் ஜோரா இருக்கு!

சவாலை, சமாளிக்கலாம் ப்ரியா:-)))

said...

வல்லி,

ஞாயிறு ஹிண்டு பேப்பர் பார்த்தீங்களா?

//சென்னையை இனிமெ யாருமெ ஏதாவது மாற்ற முடியுமான்னு தெரியலப்பா.//

இதைப்பற்றி ஒரு கட்டுரை வந்துருக்கு.

said...

ohh ippo Chandi-Raani aayitteengala??

:-))))

Orange poo arumai

said...

வாங்க ப்ரசன்னா.

சண்டிராணியா?

நீங்க ஒன்னு.... குண்டு ராணியால்லே இருக்கேன்:-)))))

said...

சண்டிகர் வாசம். வாழ்த்துகள்.

said...

வாங்க மாதேவி.

நன்றிப்பா.

துளசி கருகாமல் இருக்கணும்:(

said...

//தெருவோரங்களை கக்கூஸாக மாற்றி வரும் ஆண்கள் (ஒரே சமத்துவம்தான். கோட்டு சூட் போட்டுக்கிட்டவங்களுக்கும் போற போக்கில் அடக்கமுடியாம அசுத்தம் செஞ்சுட்டுப் போறாய்ங்க) //

அடிப்படை சுகாதார கவனமில்லாமல் இலவசங்களையே சொல்லி ஓட்டு வாங்கும்,போடும் மக்களுக்கு சிவிக் சென்ஸ் இல்லைன்னு இங்க இருந்து கூவினா நல்லாயிருக்காது.நான் அப்பீட்டாயிக்கிறேன் டீச்சர்.

said...

வாங்க ராஜநடராஜன்.

சிவிக் சென்ஸ்?????

நோ ஃபீலிங்ஸ்.

இதெல்லாம் தமிழர்பண்பாடுகளில் இடம் பிடிச்சாச்சு.

எங்கே தோணுதோ அங்கே.......