Thursday, July 22, 2010

கிடந்தாரே................ கிடந்தார். (தாய்லாந்து பயணம் பகுதி 4)

சைனா டவுனைக் கடந்து போனோம். எல்லாமே பழையகாலக் கட்டிடங்கள். கீழே கடைகளும் மாடியில் வீடுகளுமாய். மற்ற பகுதிகளில் இருப்பதைப்போல கடைநேரம் என்று ஒன்னு வச்சுக்கலை. அவுங்கவுங்க வசதிக்கேத்த நேரத்துலே கீழே வந்து வியாபாரம் செஞ்சுட்டுப்போறாங்களாம். ஆனா..... இவுங்களுக்குன்னே நிரந்தர வாடிக்கையாளர்கள் இருப்பதால் எல்லாம் ஓரளவு நல்லாவே போகுதுன்னாங்க நான்ஸி. பாதித்தெருவை அடைச்சமாதிரி கைவண்டி வியாபாரம், அங்கங்கே அழுக்குன்னு சைனாடவுனுக்கான லக்ஷணங்கள் குறையாமல் இருக்குது.

Wat PO ' வாட் போ' வாசலுக்குப்போய்ச் சேர்ந்தோம். நாம் கோவில் என்பதைத்தான் இவுங்க வாட் ன்னு சொல்றாங்க. நுழைவுக் கட்டணம் 50 பத். ரொம்பக் கலர்ஃபுல்லான இடம் இது. ச்சடின்னு(chedi.) இந்தச் ' ச' வை ஒரு மாதிரி இழுத்து ச்சஅஅ டி'னு உச்சரிக்கணும்) சின்னதும் பெருசுமா கூம்புவச்சக் கும்மாச்சி கோபுரங்களுடன் ஏராளமா அங்கங்கே நிக்குது. சில முக்கிய அரசர்களின் அஸ்திகள் இதற்கடியில் புதைக்கப்பட்டு இருக்காம். அரசர்கள் முதலாம்ராமா & மூன்றாம் ராமா வின் அஸ்திகள் இருப்பவை ரொம்பப்பெரிய ச்செடியாக இருக்கு. (இப்போது இருக்கும் அரசர் (நயன்)ராமா . King Rama IX)


ரெண்டு மூணு பிரகாரங்களா சுவர் எழுப்பி அதற்கான வாசல்களில் நுழைஞ்சு போகும்விதமா அமைஞ்சுருக்கு. செடிகளோடு செடிகளாக போன்ஸாய் மரங்கள் அழகான தொட்டிகளில். எல்லா இடங்களும் படு சுத்தம். இதுவே ரெட்டை மகிழ்ச்சி .

பதிவர் மார்கோபோலோ

ஒரு வாசலில் ரெண்டுபக்கமும் நிற்கும் சிலை மார்கோ போலோ வாம். இன்னொரு வாசலில் இதேபோல் நிற்பவர் யுவான் சுவாங். ஆஹா.... நமக்கு ரொம்ப வேண்டப்பட்டவங்க! இவுங்க ரெண்டு பேரும்தான் பயணக்கதைகளின் முன்னோடிகள்!!!
பதிவர் யுவாங் சுவாங்குடன் ஒரு (வலை) பதிவர்

நம்ம மருதீஸ்வரர் கோவிலைப்போல இது இவுங்களுக்கான மருதீஸ்வரர். ஒரிஜனல் தாய் மஸாஜ் இங்கே இருந்துதான் ஆரம்பிச்சதாம். மூலிகை எண்ணெய்களைக்கொண்டு மஸாஜ் செய்து விடுவாங்களாம். இந்தக்கலையைப் படிக்கும் பள்ளி இந்த வளாகத்துக்குள்ளே இருக்கு, மஸாஜ் பண்ணிக்கிறீங்களான்னு நான்ஸி கேட்டாங்க.. ஆளை விடுங்கன்னேன். தாய் மருந்து வகைகள், யோகாவின் பலநிலைகளைக் காட்டும் சிற்பங்கள், இவற்றை வடிக்கும் பயிற்சிப்பள்ளிகள் இப்படி பலதும் இந்த இடத்தில் இருக்கு. இவையெல்லாம் இந்தக் கோவில் வர்றதுக்கு முன்பே வந்துருச்சாம்.

கோவில் கட்டப்பட்டது 1778. அதுக்குப்பிறகு அரசர் மூன்றாம் ராமா காலத்தில் ( 1821 - 1851) ஒரு முறையும், 1982 இல் ஒருமுறையும் பழுதுபார்த்துச் சரி செய்யப்பட்டுருக்கு. முதல் முறை பழுதுபார்த்தக் காலக்கட்டங்களில்தான் (மூன்றாம் ராமா அரசில்) மருத்துவ விவரங்கள் அடங்கிய கல்வெட்டுக்கள் பலதும் கண்டுபிடிக்கப்பட்டதாம். மருத்துவப் பயிற்சிப்பள்ளிகள் இப்போ சமீபத்தில் 1962 தொடங்கப்பட்டவைகளாம்.

தாய் மருந்து வகுப்பு நடக்குது

புத்தபிக்ஷுக்கள் இப்பவும் இந்தப் பள்ளிகளை நடத்திக்கிட்டு இருக்காங்க. படிக்கும் மாணவர்களும் ஏராளம். மேலும் கட்டிடக்கலை, கட்டிடங்களை வெளிப்புறம் அலங்கரிக்கும் கலையைச் சொல்லிக்கொடுக்கும் கல்லூரிகளும் இங்கே இருக்கு.
வண்ணமயமான கோபுரங்களுக்குக் கிட்டே போய்ப் பார்த்தால் மின்னும் ஃபோர்ஸலீன் ஓட்டுத் துண்டுகளால் அலங்கரிச்சு இருக்காங்க. கண்ணைப்பறிச்சுக்கிட்டுப் போகுது ஒவ்வொன்னும். எவ்வளவு பொறுமை வேணும் இதுக்கெல்லாம்? மலைப்புதான். சிலர் இதுமேலே எல்லாம் ஏறி நின்னு படம் எடுத்துக்கிட்டாங்க:( ( அது ஒரு இந்திய ஜோடின்னு சொல்லவும் வேணுமோ!)
இன்னொரு இடத்தில் தாய் மருத்துவம் படிக்கும் மாணவர்கள் ஆசிரியர் சொல்வதைக் கவனத்துடன் கேட்டபடி இருக்க, ஒரு பள்ளிக்கூடப் பிள்ளைகள் கூட்டம் 'வாட்' பார்க்க வந்துச்சு. சுற்றி வந்தப்ப எருமை வாகனத்துலே எமன் உக்கார்ந்து பாசக்கயிறைக் கையில் வீசி வர்றான். இது யாருன்னு தெரியுமான்னு நான்சியைக் கேட்டால் ...ஊஹூம். ஏதோ ஒரு சிலை(யாம்) ஆஹா..... யமா உன்னை எப்படி உலகம் மறக்கும்?
பக்கத்துலே இன்னொரு மேடையில் சிவன் லிங்கரூபமாய்!! உசரம் கூடுதல். அவரைச்சுற்றிச் சின்னச்சின்ன சிலாரூபங்கள். லிங்கத்தில் ஒரு விரிசல்போல கோடு. இதுக்கு ஒரு கதையை நானே சொன்னேன். மார்கண்டேயனைக் கொல்ல யமன் வந்தப்ப அவன் சிவலிங்கத்தைக் கட்டிப்பிடிச்சுக்கிட்டான். ஆனாலும் யமன் பயப்படாமத் தன் தொழிலைப் பார்க்க, வீசுன பாசக்கயிறு மார்கண்டேயன் மேலும் சிவன்மேலும் விழுந்துச்சு. அந்த அடையாளம்தான் இது. (பொருத்தமா இருக்குல்லே?)
வளாகம் முழுசுவதும் அழகழகான ரெண்டு பக்கமும் திருகின காதுகளா இருக்கும் அலங்காரத்தோடு தங்கக்கதவு, தங்க நிலைவாசலோடு கோவில்கள். நிறைய சந்நிதிகள் மூடியே கிடக்கு. திறந்திருந்த ஒன்னில் நுழைஞ்சால் புத்தர் ஆதிசேஷன் மேல் சம்மணம்போட்டு உக்கார்ந்துருக்கார்.
இந்த சேஷனுக்கு ஏழு தலை. நாலு சுத்துச் சுத்தி மேலே வந்து குடைபிடிக்குது. தனித்தனியா ஏழு தலை. சின்னதா 'ஓ' ன்னு வாய்பிளந்து நாக்கைக் காமிக்குதுகள் எல்லாம். புத்தருக்கு ரெண்டு சிறகுகள் வேற! சுவர் ஓரமா ஒரு பக்கம் இருந்த கப்போர்டு மேலே ஏழுவித நிலைகளில் புத்தர் கிடந்தும் நின்னும் இருந்துமா இருக்கார். ஒவ்வொருத்தர் முன்னாலும் ஒரு பாத்திரம். பவதி பிக்ஷாம் தேஹி?
வாரத்தின் ஒவ்வொரு கிழமைக்கும் ஒரு புத்தரை வணங்கணுமாம். சண்டே புத்தா, மண்டே புத்தான்னு .... அட!! எனக்குப் புதுத் தகவலா இருந்துச்சு. அந்தப் பாத்திரத்தில் பக்தர்கள் காணிக்கை போட்டுட்டுப் போறாங்க. தினம் வரமுடியலைன்னா? ஏழுபேருக்கும் கொஞ்சம் கொஞ்சம் போடுவாங்களா இருக்கும். ஆனா உண்மையில் இந்த ஏழு நிலைகள் புத்தர் கோவில் நகரின் வெவ்வேறு இடங்களில் தனிக்கோவில்களா இருக்கு.

பிரகாரத்தைச் சுற்றி அடுத்த வாசலில் நுழைஞ்சோம். இங்கே காலணிகளை வைக்க ஸ்டேண்டு எல்லாம் வச்சுருக்காங்க. குறிப்பறிந்தேன். பெரிய ஹாலின் வலது இடது பக்கங்களில் வாசல்கள். வலது வாசலில் நுழைஞ்சால்....... கிடக்கிறார். நெடுநீளமா கால் நீட்டி, ரெண்டு பாதங்களையும் ஒருசேரவச்சு, வலதுகையைத் தலைக்கு அண்டைக்கொடுத்து, இடது கைநீட்டி இடது தொடைமேல் வச்சு, லேசாக் கண்ணைத்திறந்து ஒரு கீழ்ப்பார்வை பார்த்துக்கொண்டு ..... ஒரு உசர்ந்த மேடைமேல்.......அடடடா......... அள்ளிமுடிஞ்ச கொண்டையில் சுருள்சுருளா முடிகள். பனிக்குல்லா போட்டதுபோல்...... அள்ளிக்கிட்டுப்போகுது!!!!! அட்டகாடமான வேலைப்பாடுகள் உள்ளத் தங்கத்தலையணை வேற!!!!!

இவர்மட்டும்தான் கால்நூற்றாண்டு அப்படியே இருக்கார். போனமுறையும் கிடப்பு இதேதான்! Reclining Buddha
பளபளன்னு தங்க நிறம். நீளமோ 46 மீட்டர்! பாதங்கள் ரெண்டும் அஞ்சு மீட்டர் அகலம்! மூணு மீட்டர் உயரம்! பாதத்தின் அடியில் ஜாதகக்குறிப்பு போல ஒரு டிஸைன். உலகத்தோட ஜாதகமாம்! பாதங்களின் விரல்கள் எல்லாமே ஒரே நீளம். விரல்களின் கணுக்களும் பின்புறம் ரேகைக் குறிகளும் மும்மூணு. (நமக்கெல்லாம் கை விரல்களில் மூணும் கால்விரல்களில் ரெண்டே பகுதியாவும் அவைகளில் மேல் பகுதியில் மட்டுமே ஒரே ஒரு ரேகைக்குறி இருக்கு) இங்கேயும் படம் எடுத்த ஒரு தடையும் இல்லை.

பாதங்களின் அடிப்புறம் உள்ள டிசைன்கள் 'மதர் ஆஃப் பேர்ள்' என்ற சிப்பிவகையைக் கொண்டு செய்யப்பட்டதாம்.


கிடந்தவரை 'இடம்' வந்தால்...... சின்னச்சின்ன பாத்திரங்களாக ஒரு நீண்ட வரிசை சுவத்தோரம் நிக்குது, இன்னொரு பக்கம் அலங்கார வேலைப்பாடுகள் உள்ள சின்னச்சின்ன அலுமினியக் கிண்ணிகளில் சில்லறைக்காசுபோல நிறைச்சு வச்சுருக்காங்க. காணிக்கையாக கரன்ஸிகளை உண்டியலில் போட்டுட்டு ஒரு கிண்ணத்தைக் கையில் ஏந்தி, வரிசையா நிற்கும் 108 பாத்திரங்களில் ஒவ்வொரு காசா போட்டுக்கிட்டே வந்து கடைசியில் இருக்கும் மேசை மீது வெறுங்கிண்ணியை வச்சுட்டுப்போறாங்க.
இவர் செவ்வாய்க்கிழமை புத்தர். ஆஹா...அடிச்சேன் ப்ரைஸ். இன்னிக்கு செவ்வாய்க்கிழமைதான்!!!!!! அமைஞ்சுபோச்சு பாருங்களேன்! புண்ணியம் உங்களுக்குப் பிரிச்சுக்கொடுத்தாச்சு!
வெளியே வரும் வாசலில் சின்னதா ஒரு ஹாலும் முன் பக்கமண்டபமுமா இருக்குமிடத்தில் வார புத்தர்கள் அனைவரது உருவச்சிலைகளும் வச்சு அங்கே பொதுமக்கள் பூ, பழங்கள் வச்சு ஊதுபத்தி ஏத்தி வழிபாடு நடத்திக்கிறாங்க. நோய்க்காக மருந்து எடுத்துக்கறவங்க, இங்கே அந்த மருந்து மாத்திரைகளைக் கொண்டுவந்து சாமி முன்வச்சுக் கும்பிட்டு எடுத்துக்கிட்டு போறாங்க. மருந்தீச்வரர்ன்னு நான் நினைச்சது சரியாத்தான் போச்சு.

விட்டுருந்த மழை மறுபடி ஆரம்பிச்சது. நாங்களும் ஓடிப்போய் வண்டியில் ஏறினோம்.

தொடரும்........................................:-)

31 comments:

said...

//முதலாம்ராமா & மூன்றாம் ராமா //

அட ராமா.. இலங்கைக்கு குறுக்குவழியா தாய்லாந்துவழியா போயிருப்பாரோ :-)))

said...

ப்ரஸண்ட் டீச்சர்.

said...

செடிகளோடு செடிகளாக போன்ஸாய் மரங்கள் அழகான தொட்டிகளில். எல்லா இடங்களும் படு சுத்தம். இதுவே ரெட்டை மகிழ்ச்சி .
சித்தார்த்தர் படம் அருமை தெளிவான படம் நலம்

said...

பயண முன்னோடிகளோட நம்ம டீச்சர்...போட்டோவை பார்க்கும் பொழுது இப்பவே தாய்லாந்துக்கு போகணும் போல இருக்கு...

said...

படுத்திருக்கும் புத்தர் நம் ஊர் பெருமாளை நினைவூட்டுகிறார் டீச்சர். அனைத்து சிலைகளும் பெரும்பாலும் நம் புராணக்கதைகளை ஒத்திருக்கின்றன அனைத்தும் பார்க்க அழகாக உள்ளன டீச்சர்.

said...

பதிவர் யுவாங் சுவாங்குடன் ஒரு (வலை) பதிவர்

கொஞ்சம் கிட்ட எடுத்துருக்கலாம்ல?

said...

காலடிகளில் இருக்கும் வேலைப்பாடுகள் மிகவும் நுட்பமாக இருந்தது. புத்தரின் வெவ்வேறு நிலைகளுக்கும் கிருஷ்ணனின் நிலைகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது போல் தெரிகிறது.
சயன புத்தர், ரங்கநாதன் எல்லாம் ஒரே போஸ் தானே

said...

தாய்லாந்தில மழை தொத்திக் கிட்டதா!! என்ன அழகுப்பா ஒவ்வொரு இடமும். பதம்நாபனை மறக்காம அங்க சயன புத்தரைப் பார்த்தாச்சு. 47 மீட்டர் நீளாமாஆஆஆஆஆஆஆ.இவ்வளவு தங்கம் அங்கே எப்படிப்பா வந்தது. கோல்ட் மைன்ஸ் இருக்கா.ஒவ்வொரு படமும் க்ளாஸ்ஸீக் டச்.
யுவான்சுவான் இருக்கட்டும். இப்போ எங்களுக்குப் புரிகிறமாதிரி நீங்க எழுதற சரித்திரம் பெஸ்ட்.டீச்சருக்கு வணக்கம்பா.

said...

படங்கள் அனைத்தும் சூப்பர். இங்கையும் மழை தான் டீச்சர் ;)

said...

படங்கள் அனைத்தும் அருமை. படம் 13001ல் போர்ஸலீன் அலங்காரத்தை அழகாக எடுத்திருக்கிறீர்கள்.

ஆதிசேஷன் இருப்பதைப் பார்த்தால் நம்ம ரங்கநாதர்தான் புத்தராகிவிட்டாரோ என்று நினைக்கத் தோன்றுகிறது.
அந்தப் பழைய பதிவர்கள் 2 பேரும் எங்களுக்கு இப்படி ஓசியில் படம் காட்டாமலேயே போய்விட்டார்களே!

said...

யுவான்சுவாங்கோடு உங்களை க்ளோஸப்பில்..வலைமுகப்பில் போட்டுவச்சா இன்னும் சூப்பர்.. கட் அவுட் கட்டும் போதும் பயன் படும்..

said...

// புண்ணியம் உங்களுக்குப் பிரிச்சுக்கொடுத்தாச்சு!//
அட! நீங்க என்ன பிரிச்சுக் கொடுக்கிறது? நீங்க போகுமிடமெல்லாம் சேரும் புண்ணியங்களில் எங்க பங்கு தன்னாலே எங்களை வந்து சேருமே!
காரணம்...நாங்கெல்லாம் தொண்டரடிப் பொடியார்கள் அல்லவோ?

said...

May be we should name is as "Golden Trip". We are seeing gold everywhere.

said...

வாங்க அமைதிச்சாரல்.


இருக்கலாமோ???? 'அட ராமா' ன்னு சத்தமா வெளியில் சொன்னால் அரசருக்கு அவமரியாதை ஆயிருமோன்னு இருந்துச்சு!

said...

வாங்க புதுகைத் தென்றல்.

பதிவு செஞ்சுட்டேன் ஆஜர் பட்டியலில்.

said...

வாங்க ஹரி.

முதல் வருகையா இருக்கு போல?

நலமா?

உங்க பெயரில் ஒரு கதை (குறு நாவல்னு சொல்லிக்க ஆசை. ஆனா நினைப்புதான் பொழப்பைக் கெடுக்குதாமே) எழுதி இருந்தேன் சில ஆண்டுகள் முன்பு.

அதான் பெயரைப் பார்த்ததும் 'நம்ம ஹரியோ'ன்னு இருக்கு.

said...

வாங்க சிந்து.

இந்த வருசம் தாய் ஏர்வேஸ் ஆரம்பிச்சு 50 ஆண்டு ஆனதால் தங்கவிழா.

டிக்கெட் கொஞ்சம் மலிவாக் கொடுக்கறாங்க.

said...

வாங்க சுமதி.

நான் நினைச்சேன். நீங்க சொல்லிட்டீங்க:-)))))

said...

வாங்க ஜோதிஜி.

'நான்' இருக்கும் படங்களை எடுத்தது நம்ம நான்ஸி.

படத்தைக் கிளிக்கினால் மீடியம் சைஸிலும், அதை இன்னொருக்கா க்ளிக்கினால் இன்னும் பெருசாவும் தெரியுதே.

said...

வாங்க கோவியாரே.

கால்விரல்கள் ஒரே நீளமாக இருப்பதுதான்................ போகட்டும். வேலைப்பாட்டை (மட்டும்) கவனிக்கலாமுன்னு இருந்துட்டேன்.

'இருக்கும் நிலை' மட்டும் சற்றே மாறுபடுகிறது.

சயனம்.... நீங்க சொன்னது சரி. விஷ்ணுவின் பத்துவித சயனங்களில் இதுவும் ஒன்று.

said...

வாங்க வல்லி.

ஒரு 'ஆ'வைக் குறைச்சுக்கலாம்ப்பா. கொசுறா நீளத்தை ஒரு மீட்டர் கூட்டினதுக்கு நன்றி:-)))))

தங்க நிறத்துக்கு மேல் அப்படி ஒரு வெறி போல. சொக்கத்தங்கம் இல்லாட்டி, அங்கே தங்க ரேக். அதுவும் இல்லைன்னா தங்க வண்ணம்:-))))

said...

வாங்க கோபி.

நாந்தான் அனுப்பி வைத்தேன்:-)))))

said...

வாங்க பிரகாசம்.

சேமிப்பு வேறயா? ஆஹா......

கொஞ்சம் முன்னாலே பிறந்தது அவுங்க செஞ்ச தவறு:-))))

said...

வாங்க கயலு.

ஃபோட்டோஷாப் எல்லாம் பின்னே எதுக்கு இருக்கு? ஜமாய்ச்சுப்புடலாம் அப்ப:-))))

said...

வாங்க நானானி.

ரொம்பச்சரி.

அடியார்களுக்குப்போக மிஞ்சுனாத்தான் இந்த 'அடியாளு'க்கு:-))))

said...

வாங்க சந்தியா.

இந்தத் தலைப்பு வேற ஒரு சமாச்சாரத்துக்கு எடுத்து வச்சுக்கவா?

said...

அந்த ஊரு திருவரங்க நாதர் ... அதாங்க படுத்திருக்கிற கடவுள் அருமைங்க ... :)

said...

//ஒருவன் வண்ணம் தெளிக்கின்றான்,
இன்னுமொருவன் அதை பற்றிக்கொள்கின்றான்,
இப்படியாகத்தான் சுழற்சியில் வாழ்வு..! // உண்மை நண்பரே.

சில நேரங்களில் தெளிக்கிறேன் சில நேரங்களில் பற்றிக்கொள்கின்றான்

said...

வாங்க கார்த்திக்.

திருவரங்கம் மட்டுமா? அங்கே சிம்ஹாச்சலமும், திருப்பதியும்கூட இருக்கு!!!!!

ரெண்டாவதா வந்த பின்னூட்டம் விலாசம் தவறி இங்கே வந்துருக்கு போல!

said...

கும்மாச்சி கோபுரங்கள், வண்ணக் கோபுரங்களின் கலை நுணுக்கம் மனத்தைக் கொள்ளை கொள்கிறது.

said...

வாங்க மாதேவி.

நன்றிப்பா.