Monday, July 19, 2010

தந்தையர் நாட்டிலிருந்து தாய் நாட்டுக்கு

"அடுத்தவாரம் எனக்கு அங்கே போகணும். நீயும்கூட வரயா?"

'ம்ம்ம்ம்ம்ம்..... போனா நல்லாத்தான் இருக்கும். போனமுறை போனப்ப உடம்பு சரியில்லாமப்போய் சரியாச் சுத்திப்பார்க்க முடியலை. இங்கே சூளைக்குள்ளே உக்காந்துருக்கேன். போயிட்டுத்தான் வருவோமு'ன்னு இழுத்தேன்..........

"அப்படியே கம்போடியா போயிட்டு வந்துறலாம். நீயும் 'போறதுக்குள்ளே' அங்கோர்வாட் போகணுமுன்னு ரொம்பநாளாச் சொல்லிக்கிட்டு இருக்கே. "

"அட! இதோ.....பொட்டியைக் கட்டியாச்சு."

பாவம். இவர். நான் 'போறதுக்குள்ளே' பார்க்கணுமுன்னு சொன்ன லிஸ்ட்டைக் கவனமா நினைவு வச்சுருக்கார். 'ஒன் டௌன். ஃப்யூ டு கோ' சட்டுன்னு எல்லாத்தையும் முடிச்சுக் கொடுத்துட்டா...... 'விடுதலை'ன்னு நினைப்பு. . ஆனா அவ்ளொ பாக்கியம் செய்யலை இவர். பட்டியல்( இனியும்) வளரும் என்று இன்னும் தெரிஞ்சுக்காத அப்'பாவி'

போய்வந்து பயணம் பற்றி எழுதலாமா வேணாமான்னு ஒரு எண்ணம். காரணம் நம்ம கானா பிரபா. எதையாவது விட்டு வச்சாத்தானே?

அதுக்காக?

அவரவர் பார்வையில் ஆயிரம் ஆயிரம் அர்த்தங்கள். எதாவது அகப்படாதா?

ஆப்டுச்சு. பதிவுலக நண்பர் ஒருவர் பேச்சுவாக்கில் பாங்காக் பதிவரைப்பற்றிச் சொன்னார். ஐயோ..... அவுங்க பதிவைப் படிச்சுருந்தாலும் ஊரைப்பத்தித் தெரிஞ்சுக்கலை பாருங்க. இதுக்குத்தான் அப்பப்ப ப்ரொஃபைலைப் பார்த்து வச்சுக்கணும்.


ரெண்டு வருசமுன்னேயும் ஒரு தாய்லாந்துத் தொடர் போட்டுருக்கேன். இனி என்ன இருக்கு எழுத?


ஞாயிறு பகல் கிளம்பி டெல்லியில் இரவு தங்கி, மறுநாள் ஃப்ளைட் புடிக்கணும். . சரியா ஒரு மணிக்குக் கிளம்புனோம். பருவ மழை ஆரம்பிக்குது. ஒரு அரைமணிப் பயணதூரத்துலே இன்னொருத்தரையும் கூட்டுச் சேர்த்துக்கிட்டுப் போகணும். அடிச்சுப் பெய்யும் மழையைப் பார்த்துக்கிட்டே உக்கார்ந்துருக்கேன். மழையின் ஈரம் ஜில்லிப்பு எல்லாம் அப்படியே உடம்பின் இடது புறம் (மட்டும்) ஒட்டுவதுபோல இருக்கு. மெதுவா இடது தோளைத் தொட்டால் ...... காருக்குள் மழை. மேலே இருந்து சொட்டும் தண்ணீர் என்னை ஈரமுள்ளவளா மாத்தி இருக்கு. அட..ராமா!!!!

ட்ரைவர்கிட்டே என்ன வண்டிக்குள் ஒழுகுதேன்னால்.... மேலே போட்டுருக்கும் ஃப்ரேம் இணைஞ்சுருக்கும் இடத்தில் இருந்து ஒழுகுதாம். கையைச் சின்னக்கூரை மாதிரி காமிச்சு விளக்கம் வேற சொல்றார்,. அப்போ...? ஏற்கெனவே தெரிஞ்சுருக்கு இப்படி இருக்குன்னு:(

நாலைஞ்சு நாளைக்கு முன்பே நல்ல வண்டியா ஒன்னு வேணுமுன்னு சொல்லி வச்சுருக்கு. அஞ்சரைமணி நேரப்பயணம் இருக்கே ஹைவேயில்.

மெள்ள வாயைக் (கிளறி) கொடுத்துத் தெரிஞ்சுக்கிட்டது ..... இந்த வண்டி நேத்து டெல்லியில் இருந்து சவாரி கொண்டு வந்துருக்கு. நமக்கு மறுநாள் போகணும் என்பதால் ட்ராவல்ஸ்க்காரர், இதை நிறுத்தி வச்சுருக்கார். திரும்பிக் காலியாப் போகும் வண்டிக்கு போகவரன்னு ரெண்டு சார்ஜும் செஞ்சுக்கலாமே! ஒரே கல்லில் ஏழெட்டு மாங்கா!

குடை இருந்தாப் பிடிச்சுக்கிட்டுப் போயிருக்கலாமோ? அல்பனுக்கு வாழ்வு வந்த மாதிரி காருக்குள் குடை & குடைக்குள் மழை.

ட்ராவல்ஸ் ஆஃபீஸுக்குப் போன் போட்டுக் கொஞ்சம் 'விடுவிடு'ன்னு விட்டதில் இன்னொரு வண்டி ஒரு பத்து நிமிசத்துலே அனுப்பறேன்னு சொன்னார் ஓனர். அதுவரை நாங்க நம்ம கம்பெனி கெஸ்ட் ஹவுஸில் காத்திருப்பதா ஒரு ஏற்பாடு. மழையோ விடமாட்டேங்குது. இதமா பதமா ஒரு ஏலக்காய் டீ போட்டுக் கொடுத்தார் கெஸ்ட் ஹவுஸ் சமையல்காரர். முதல் பத்து நிமிசம் பறந்துபோய், அஞ்சுமுறை........... பத்து நிமிசமாச்சு. இதோ அதோன்னு ஒரு மணிநேரம் ஆனதும் இன்னொரு இன்னோவா வந்து சேர்ந்துச்சு.

கிளம்பிப்போகும் வழியில், பிக்கப் பண்ணவேண்டிய நபரையும் கூட்டிக்கிட்டு டெல்லி போகும் ஹைவேயைத் தொட்டப்பயே மூணரை மணி. மழையா இருப்பதால் கொஞ்சம் மெதுவாகவே ஓட்டச்சொன்னோம். வழியெங்கும் இருபுறமும் நாத்து நட்டு முடிச்ச நெல்வயல்கள். மழைக்கு முன்னால் இந்த வேலை முடிஞ்சுட்டால் மழை வந்ததும் பயிருக்குத் தண்ணீர் குறையிருக்காது. எல்லாம் பாசுமதியாத்தான் இருக்கணும்.இல்லே?


கும்மாச்சி கும்மாச்சியா அங்கங்கே வைக்கப்போர்களின் கூட்டம் .

அம்பாலா போகுமுன்னே டோல் பூத் வந்துருது. டெல்லி போய்ச்சேரும்போது மூணு இடத்துலே பணம் கட்டி இருப்போம். கர்னாலில் D9T9 என்ற ஷாப்பிங் செண்டரில் ஒரு டீ குடிச்சுட்டு பத்து நிமிஷம் ஓய்வு (ட்ரைவருக்குத்தான்) முடிஞ்சு டெல்லி ஹைவேயில் போய்க்கிட்டே இருக்கோம். பிதாம்புரா (டெல்லி புறநகர்) மெயின் ரோடு பக்கம் சண்டே மார்கெட்டால் ஜேஜேன்னு இருக்கு. 'சட்'னு பார்த்தால் லண்டன் போர்ட்டபெல்லா ரோடு, சனிக்கிழமை மார்கெட்டேதான். நாம் போக வேண்டிய இடம் குர்கா(வ்)ன். அங்கிருந்து ஏர்ப்போர்ட் பக்கம். கோபாலின் டெல்லி ஆஃபீஸ், அவர் வழக்கமாத் தங்கும் ஹொட்டேல் எல்லாம் அங்கேதான்.
ஏகப்பட்ட ஃப்ளைஓவர்களில் நுழைஞ்சு ட்ராஃபிக் ஜாம் கூடுதலா இருக்கும் ரோடில் கரெக்ட்டாப் போய்ச் சேர்ந்துக்கிட்டார் ட்ரைவர். 'இந்தப்பக்கம் வந்தே இருக்க வேணாம். வலது பக்கம் திரும்பி இருக்கலாம். என்னைவிட தெருவிவரங்கள் எல்லாம் உனக்குத் தெரியுமுன்னு நான் இருந்துட்டேன்'னு கூட வருபவர் சொல்றார். அவர் சண்டிகர் வருமுன் டெல்லியில் பலவருசங்கள் வேலை பார்த்தவராம்.

கோபாலுக்குப் பரம சந்தோஷம் நான் கப்சுப்ன்னு இருப்பதைப் பார்த்து:-) இதுமட்டும் சென்னையா இருந்துருந்தா..... அந்த ட்ரைவரை 'இந்தப்பக்கம் போகணும்,. அந்தத் தெரு வேணாம், எதுக்காக இப்படி இதுவரைக்கும் வரணுமு'ன்னு பிடுங்கி எடுத்திருப்பேனாம்! சண்டிகர் வந்த நாள் முதல் வாயைக் கட்டிக்கிட்டுத்தான் இருக்கேன். இங்கே மேப் கையில் இருந்தாலும் எல்லாம் வலதுபக்கமிருந்து இடதுபக்கமா இருக்கு. இசுலாமிய பாதிப்போ என்னவோ! ரெண்டரை மாசமாச்சு இன்னும் திக்கு திசை புரியலை:( கோபாலுக்கும்தான் இப்படி என்றதால் எனக்கு உள்ளூர 'நான் தனி இல்லை' ன்னு ஒரு அல்ப சந்தோஷம்.

கூட வந்தவர் பொறுப்பெடுத்து வழிகாட்ட ஒரு வழியா குர்கா(வ்)ன் போய்ச்சேர்ந்தோம். எங்கே பார்த்தாலும் புதுக்கட்டிடங்கள் முளைச்சுக்கிட்டு இருக்கு. பவர் கட் போல. தெருவெல்லாம் கும்மிருட்டு. இருட்டுக்குள்ளேத் தப்புத்தப்பா வழி சொல்றார் கோபால். (இத்தனைக்கும் அவர் வழக்கமாப்போற இடம்தான்) தாங்காதுன்னு...... கூடவந்தவர் எங்களை முதலில் ஹொட்டேல் வாசலில் விட்டுட்டுக் கடைசியில் தான் போய் இறங்கிக்கறேன்னார். மணி ஒன்பது. அவரை இறக்கி விட்டுட்டு டிரைவர் இங்கே வந்து பார்க் பண்ணிட்டுத் தங்கிக்கணும். காலையில் எட்டுமணிக்கு அவரைப்போய் பிக்கப் செஞ்சுக்கிட்டு இங்கே வந்து எங்களை ஏத்திக்கிட்டு ஏர்போர்ட் கொண்டு விட்டுட்டு திரும்ப சண்டிகர் ரிட்டர்ன் ஆகணும் என்பது கண்டிஷன்.

சாப்பிட்டுப் படுக்கவே மணி பதினொன்னு ஆகிருச்சு. காலை 9 மணிக்கு ஏர்ப்போர்ட்டிலே இருக்கணுமாம். மூணுமணி நேரம் தேவுடு காக்கணும் அங்கே:(

பொழுதுவிடிஞ்சு ஜன்னல் திரைச்சீலையைத் தள்ளினால் எம்ஜிஆர் படப்பாடல்தான் நினைவுக்கு வந்துச்சு.

"அண்ணாந்து பார்க்கிற மாளிகை கட்டி, அதன் அருகினில் ஓலைக் குடிசை கட்டி, பொன்னான உலகென்று பெயரும்வைத்தால், இந்த பூமி சிரிக்கும், அந்த சாமி சிரிக்கும்!''

இங்கே வானுயர எழும்பும் கட்டிடங்களைக் கட்டித்தரும் தொழிலாளிகளின் (தாற்காலிக? ) குடியிருப்பு.
இன்னிக்கு 'பாரத் பந்த்'தாம். கொஞ்சம் சீக்கிரமாக் கிளம்பினால் நல்லதுன்னு பரவலான ஒரு எண்ணம் இருந்ததால்......
ஒன்பதே காலுக்கு விமானநிலையம் போய்ச்சேர்ந்து செக்கின் ஆச்சு. புது டெர்மினல் ஒன்னு திறந்துருக்காங்கன்னு சேதியை தினசரியில் பார்த்ததோடு சரி. கண்ணுலே அதைக் காமிக்காமலேயே அதுக்கான சர்வீஸ் சார்ஜ் என்ற பெயரில் ஆளுக்கு ரூபாய் 515 கூடுதலாக் கொள்ளையடிச்சாங்க. (அதான் வெளிநாடு போறெல்லெ? கொடுத்தா என்ன கேடு? ) இன்னும் பயணிகளுக்காகத் திறந்து வச்சுப் பயன்படுத்த ஆரம்பிக்கலை. அதுக்குள்ளே பயணிகளைப் படுத்த ஆரம்பிச்சுட்டாங்க. நல்ல்ல்ல்ல்ல்ல்ல்லா இருங்கய்யா.

முதல்முறையாத் தாய் ஏர்வேஸ்லே போறேன். சுமார். நேரம் போக்க நமக்கு முன்னால் ஒன்னுமே இல்லை முன்னாலே இருக்கும் இருக்கையின் பின்பக்கம் தவிர. வழித்துணைக்காகக் கொண்டுவந்த வாடி வாசலும், துளசிதளமும் வச்சுருந்த கேபின் பேக், கோபாலின் கடைசி நிமிச ஐடியாவின்படி செக்கின் லக்கேஜா மாறிப் போயிருந்துச்சு. விமானநிலைய புத்தகக் கடையில் எதாவது வாங்கிக்கலாமுன்னா....கடைகள் எல்லாம் காலியாக்கி புது டெர்மினலுக்குப் போகுதாம். அப்போ இந்த பழைய டெர்மினலை இடிச்சுடப் போறாங்களா என்ன?


ஜாஸ்மின் அரிசி?

இறக்கையின் பர்ப்பிள் நுனியையும், கீழே மானாவரியா இருந்த கடலையும் , திடீர்னு கண்ணுலே பட்ட நெல்வயல்களையும் (ஜாஸ்மின் அரிசியோ?) பார்த்து முடிச்சதும் ஸ்வர்ணபூமி வந்துருச்சு. வெறும் நாலரை மணி நேரப்பயணம்தான்.

சரியாக் கால்நூற்றாண்டுக்குப்பிறகு பாங்காக் நகரத்துக்குள் புகுந்தேன். வழியெங்கும் ராசாராணி விதவிதமான போஸ்களில் நம்மை வரவேற்கறாங்க. ராசா நல்லா இருக்கணும். ஹொட்டேல் போய்ச்சேர்ந்ததும் ஏற்கெனவே வாங்கிவச்ச எண்ணுக்குத் தொலைபேசி, வந்துசேர்ந்த விவரம் சொன்ன அடுத்த ஒரு மணி நேரத்தில் நடந்தது ஒரு பதிவர் சந்திப்பு

முக்கனி?


தொடரும்.......................:-)

25 comments:

said...

தாய் சுவர்ணபூமி விமானநிலையமே பிரமாண்டமாக இருந்திருக்குமே, அதைப் பற்றி ஒரு சில வரிகள் பின்னால வருமோ ?
:)

said...

hello mike testing

said...

அதென்ன முக்கனியில் நடுவில் டொரியன் பழம் இருக்கு.

சரிதானே?

இதைப்பற்றி மலேசியா சிங்கப்பூர் மக்கள் கண்டபடி சொல்லி உஷ்ணத்தை கிளப்புறத பத்தி கண்ணன் ஏதாவது சொல்ல வேண்டும்.

உண்மையா?

said...

வாங்க கோவியாரே.

தனிப்பதிவு போடணும். அவ்வளோ விஷயம் இருக்கு அங்கே!

அன்னிக்குக் கூடவந்தவரைக் கவனிச்சு அவருக்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்ய கோபால் ஓடறார். கூடவே நானும் நின்னு பார்க்காம ஓடவேண்டியதாப் போச்சு:(

said...

வாங்க ஜோதிஜி.

வலை ஆசிரியர் இங்கெ வர நேரம் இருக்கோ?

அந்தப் பழம் ரம்புத்தான்.

டூரியன் பார்க்கப் பலாப்பழம் போல் இருக்கும். பலாவைவிட சைஸ் சின்னது.ஆனால் முள் பெருசு.

said...

//நேரம் போக்க நமக்கு முன்னால் ஒன்னுமே இல்லை முன்னாலே இருக்கும் இருக்கையின் பின்பக்கம் தவிர. //

அவ்வளவு மோசமா ? :((

said...

இன்னோவாக்குள்ள மழையா.என்னப்பா!!
விமானக் கண்ணாடி ஜன்னல் வழியா இவ்வளவு துல்லியமாப் படம் எடுக்க முடிஞ்சதா. லிஸ்ட் நல்லா வளரட்டும்,. அவ்வப்போ நாங்களும் சேர்ந்துக்கறோம்:))

said...

வாங்க கார்த்திக்.

தாய் ஏர்வேஸ் இந்த வருசம் பொன்விழா கொண்டாடுது. அதான் அறுதப் பழசான ஏர்கிராஃப்ட் போட்டுவச்சுருக்காங்க இந்த ரூட்டுக்கு.

இந்தியாவுக்குத்தானே? இருந்துட்டு போகட்டும் என்ற 'கவனிப்பு':(

said...

வாங்க வல்லி.

//இன்னோவாக்குள்ள மழையா...//

அது என்னவா இருக்குமுன்னே முதல்லே புரியலைப்பா....
சொட்டு சொட்டு சொட்டுது பாரு இங்கே..... பாடலாமுன்னா அந்த டிரைவர் ஹிந்திக்காரர்:(

விமானக் கண்ணாடி ஜன்னலில் வெளிப்புறம் ஒரே ஃபோக். அதான் படம் க்ளியரா இல்லை.

said...

வாங்க டீச்சர்..டூரெல்லாம் எப்படி இருந்தது? ஸ்டூடன்ஸ்க்கு என்னவெல்லாம் வாங்கி வந்தீங்க..காத்துட்டு இருக்கோம்.

said...

அவரு வேறென்ன வாங்கி வந்துருக்கப் போறாரு? பத்து பதிவு முழுக்க அற்புதமான புகைப்படமா போட்டு தாக்கி பொறாமைப்பட வச்சுடுவாரு.

இது போதாதா?

said...

வாங்க சிந்து.

பதிலை நம்ம ஜோதிஜி சொல்லிட்டார் பாருங்க. அதே அதே.

said...

ஜோதிஜி,

இந்தப் பயணத்துலே ரொம்ப ஒன்னும் எடுக்கலை.

நான் 3193 என் கெமெராவிலே.

கோபால் 891 அவருடைய கேமெராவிலே.
அம்புட்டுதான்.

said...

ஆண்டவாவாவாவாவாவாவ

891 ஆஆஆஆஆஆஆஆஆ

இடுகை தாங்குமா

said...

அதென்ன ஜோதிஜி, பின்னூட்டத்தைப் பாதிதான் பார்க்கறீங்க?

அது கோபால் கணக்கு.


என் கணக்கை (யும்) ஒருமுறை பார்த்துட்டு......

said...

அந்த முக்கனியில் ஒரு கனி பார்க்க வித்தியாசமாகவும் அழகாகவும் உள்ளது டீச்சர்.

said...

//மேலே இருந்து சொட்டும் தண்ணீர் என்னை ஈரமுள்ளவளா மாத்தி இருக்கு. அட..ராமா!!!!//

கிருஷ்ணா ... கிருஷ்ணா ...

said...

வயல்,வைக்கற்போர் எல்லாம் அழகு.

இங்கும் ரம்புட்டான் சீசன் :)

said...

எப்படி இருக்கிங்க துளசி டீச்சர். நீண்ட நாட்களுக்கு இங்கு பின் விசிட்.
எல்லா படங்களும் நல்ல கேமரா பிடிப்பு. ஊர் திரும்பியாச்சா?

நேரம் கிடைக்கும் போது அப்படியே நம்ம இனையத்திலேயேயும் வந்து உங்க பொன்னான பாத்தை எடுத்து வையுங்க அன்போடு காத்திருக்கும் விஜிஸ் வெஜ் கிச்சன் & விஜிஸ் க்ரியேஷன்ஸ். நன்றி மீண்டும் வருகிறேன்.

said...

வாங்க சுமதி.

அந்தப்பழம் ரம்புத்தான். உரிச்சால் உள்ளே லைச்சி/லிச்சீ மாதிரி இருக்கும்.

said...

வாங்க தருமி.

'திசைகளெட்டும்' வெற்றிக்கொடி நாட்டியதற்கு என் இனிய வாழ்த்து(க்)களை இங்கேயும் ஒருமுறை சொல்லிக்கறேன்.

கிருஷ்ணா ராமான்னு இல்லாம இப்படி ஊர்சுத்தக் கிளம்பியதுதான் மழைக்குப் பொறுக்கலை:-)))))

said...

வாங்க மாதேவி.

இப்போ சீஸனா? வீட்டில் மரம் இருக்கா? சண்டிகரில் லைச்சீ மரங்கள் இருக்கு. ரம்புத்தான் இருக்கான்னு தேடணும்.

said...

வாங்க விஜி.

ஊர் திரும்பி சரியா ஒரு வாரம் ஆச்சு.

இன்னும்(உங்க) கிச்சனுக்குள் நுழையலை:(
எப்படியும் வந்துருவேன். பூவா இல்லாமல் வாழ முடியுதா என்ன? :-))))

said...

என்னங்க இது. ஊரில இல்லாத நேரமா பாத்து நம்ம பேட்டைக்கு வந்திட்டு போயிருக்கீங்க?!

http://ulaathal.blogspot.com/2010/01/blog-post.html

said...

வாங்க மாயவரத்தான்.

அட! நீங்க அங்கேயா இருக்கீங்க? தெரியாமப் போச்சே:(

அடுத்தமுறை வரும்போது சந்திக்கலாம்

இன்னும் கால்நூற்றாண்டு கழிச்சான்னு கேக்கப்பிடாது ஆமாம்:-))))